18/02/2019

ஆகாச முத்திரை...


ஆகாச முத்திரை என்பது நடு விரலின் நுனியை கட்டை விரலின் நுனியுடன் தொட்டுக் கொண்டிருப்பது.

பலன்கள்...

இதுவும் வாதம் மூலத்துடன் தொடர்புடையது. இம்முத்திரை ஆகாயத்தை அதாவது வெளியை நம் உடலில் உண்டாக்கும்.

இது எழும்புகள் பலமாக உதவும் முத்திரை. எழும்பு தொடர்பான நோய்களுக்கு இது சிறந்தது.

மூட்டுவலி, பற்கள் பலமில்லாமல் இருப்பவர்கள், தாடை பலமில்லாமல் உள்ளவர்கள் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இசிடிராய்டு  (steroid) போன்றவற்றால் உண்டாகும் பின் விளைவுகளை குறைக்க உதவும்.

நடக்கும் போது  இம்முத்திரையை செய்யாமல் இருத்தல் நலம்...

சிந்தித்துக்கொள் தமிழினமே...


காஷ்மீர் மக்களிடம் இந்தியா ஜனநாயகமாக நடந்து கொண்ட விதம் இது தான்...


சனவரி 1989 - மார்ச் 2016...

கொல்லப்படவர்கள் - 94,332 +

கட்டுப்பாட்டில் வைத்து கொல்லப்பட்டவர்கள் - 7,043 +

கைது செய்யப்பட்ட குடிமக்கள் - 1,33,387+

கைப்பெண்கள் ஆக்கப்பட்டோர் - 22,810 +

ஆனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் - 1,07,556 +

கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளான பெண்கள்/ ஆண்_பெண் சிறார்கள் - 10,178 +

நிரந்தர ஊனமாக்கப்பட்டவர்கள் - 1,06,068 +

திட்டமிட்டு வலிந்து கடத்தப்பட்டு காணாலாக்கப்பட்டோர் - 10,000 +

இதையெல்லாம் செய்தது இவர்கள் சொல்லும் தீவிரவாதிகள் அல்ல பாதுகாப்பதாக சொல்லும் இந்திய இராணுவம் தான்...

2016 ஆம் ஆண்டு ஆசியா கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்தும் ஐநா சபையில் அம்மக்களின் குமுறலில் இருந்தும் எடுத்தவை...

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளி உலகத்திற்கு தெரியாமல் நடந்து கொடூரங்கள் கொடுமைகள் இன்னும் அதிகம்...

பெல்லட் தாக்குதல்கள் + கைதுகள் + மருத்துவ சாவடிகள் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் + தடை செய்யப்பட்ட இரசாயண தாக்குதல்கள் ...

இணையத்தடை விதிப்பு என கொடுமைகளை வெளியே சொல்ல முடியாத அளவிலான அராஜகங்கள்...

இதைப் பற்றியும் கவலைக் கொள்வோம் மானிடத்தாரே...

பதிவு - கதிர் மாயவேல்

பாஜக - அதிமுக ன் ஸ்டெர்லைட் சதிகள்...


தமிழரின் மறந்த இசைக் கருவி...


தமிழர் வாசித்த முதல் இசைச் கருவி...

இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது.

இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே, யாழின் தோற்றம், வடிவம் - வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.

வடிவம் வகை: யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ, ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.

பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்) 'பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி, வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்' என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும், மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7 நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது 'இசையும் யாழும்' என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.

யாழின் பரிணாமம்: வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே 'பாணர்' என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர், இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.

தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு..... என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது.

இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது. யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்: யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.

அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்துள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை 'ஏழிசை யாழ், வீனை முரலக்கண்டேன்' 'பண்ணோடி யா‘ வீணை பயின்றாய் போற்றி' என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் 'வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)' என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது.

மேலும், 'வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)' என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.

எனவே, யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.

ஆரியர்கள் தங்களுக்கான மொழியை, நூல்களை, தெய்வங்களை, பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம், கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம், ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே.

தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர். வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர்.

ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன.

இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று...

தமிழ்நாட்டில் வேற்றுமொழி வாக்காளர்கள்... புதிய தலைமுறை இதழில்..


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி...

தமிழ்நாட்டில் வேற்று மொழி வாக்காளர்கள் அதிகரித்திருப்பது குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் “புதிய தலைமுறை” வார ஏட்டுக்கு செவ்வி அளித்துள்ளார்.

21.02.2019 நாளிட்ட “புதிய தலைமுறை” இதழில் அவர் அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளதாவது :

“இப்போது வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 2018க்குப் பிறகு புதிதாக சற்றொப்ப 8 இலட்சத்து 34 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர். 5 இலட்சத்து 63 ஆயிரம் இரட்டைப் பதிவுகளை நீக்கியதற்குப் பிறகும் இந்த உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் குறித்த 2018 சூன் மாதம் வெளியான “மொழிவழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 2011” பட்டியலையும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தால், வெளி மாநிலத்தவர்களால் இந்த வாக்காளர் எண்ணிக்கை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் இந்திப் பேசுவோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 93 ஆயிரம் என்றும், குசராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரம் என்றும் - மொத்தம் பிறமொழி பேசுவோர் 88 இலட்சம் பேர் என்றும் இன்னொரு புள்ளிவிவரம் கூறியது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000-லிருந்து 25,000 வரையிலும் வெளி மாநிலத்து வாக்காளர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

இந்த வெளி வாக்காளர் குறுக்கீடு நாடாளுமன்றத் தேர்தலில் மிகக்கூர்மையாக வெளிப்படும்! ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனநிலை தேர்தல் முடிவுகளில் வெளிப்படாமல், சீர்குலைக்கும் குறுக்கீடாக இந்த “வெளியார் வாக்காளர்கள்” அமைவார்கள். தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட தீய விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்....

பாஜக மோடி டிஜிட்டல் இந்தியாவை காப்பாற்றிய லட்சணம்...


தெலுங்கர் திமுக கட்சியே... தமிழர்களுக்கு காவிரி நீர் பிரச்சனை யை உண்டாக்கியது...


வரலாற்றின் அடிப்படையில் கி.பி.1146 – 1163 ஆண்டுகளில் மைசூரை ஆண்ட போசள மன்னன் மைசூரில் அணை கட்டி காவிரியை தடுத்தான். காவிரியை தடுக்காமல் ஓடவிடுமாறு ஓலை அனுப்பினான் இரண்டாம் ராஜராஜன். தண்ணீர் தர மறுத்த போது படையெடுத்துப்போய் போய் அணையை உடைத்தான்.

பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே அணை எழுப்பி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார். அப்போது இராணிமங்கம்மாள் மைசூர் அணையை உடைக்கப் படையோடு போனார். படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தானகாவே வர தாழ் நிலமான தமிழகம் செழித்தது.

சுதந்திரத்திற்கு முன்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் 1892 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. "சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.” ‘கர்நடாகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.

1911 செப்டம்பரில் மைசூர் அரசு கவிரியில் ஒரு அணை கட்ட தொடங்கியது. இதனால் இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணையும் (44.827 டி.எம்.சி.) தமிழகத்தில் மேட்டூர் அணையும் (93.50 டி.எம்.சி.) கட்டப்பட்டது.

1974 - இல் 1924 ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டு காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.

1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடகம்.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது. தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் 1971ல் வந்தது.  அச்சமயத்தில் தி.மு.க.-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி ஏற்பட்டவுடன், தன் மீது சர்க்காரியா கமிஷன் கொடுத்த பரிந்துரையை வைத்து இந்திரா காந்தி வழக்குத் தொடுத்து விடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றார் கருணாநிதி.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி பிளவு பட்ட போது, காமராஜர் அணியில் இருந்த நிஜலிங்கப்பாவை வீழ்த்தி, தனது ஆதரவாளர் தேவராஜ் அர்ஸை முதல்வராக்கத் திட்டமிட்ட இந்திரா காந்தி, தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து காவிரிச் சிக்கலை கர்நாடகத்திலும் அரசியலாக்கி விட்டார். இதற்கு உறுதுணையாக இருந்தவர் திமுக தெலுங்கர் கருணாநிதி...

பதிவு - உன்னை போல் ஒருவன்

பாஜக அடிமை ஊழல் அதிமுக வும் மக்கள் வரிப் பணம் வீணும்...


குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக..?


சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் சிறீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள்
உண்டாகும்.

திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது...

Kulfi Recipe / வீட்டிலேயே குல்பி செய்வது எப்படி.?


https://youtu.be/egr5Xe0iJK8

Subscribe the channel for more news...

பல் மருத்துவ குறிப்புகள்...


இன்றைய பல் மருத்துவ குறிப்புகள்...

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு. பழங்கள்,குளிர் பாணங்கள்,வைன் (Wine),அமில தன்மை கொண்ட உணவு வகைகள் சாப்பிட்டவுடன் பல் துலக்கினால் பல் பாதிப்பு அடையும்.

உணவு பொருள்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் (Enamels) பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும் அந்த நேரத்தில் பல் தேய்ப்பேன் (brush) கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் காத்திருந்தால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் அந்த அமிலத்தை சமன் செய்து விடும், அதன் பிறகு நீங்கள் பல் துலக்கினால் பல்லின் எனாமலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்குவது நன்று. அதே போல் சூடாக தேநீர் அருந்தியவுடன் குளிர்பானம் குடித்தாலும் பல்லின் எனாமலில் விரிசல் ஏற்படும் அதன் மூலம் பல் கூச்சம் உண்டாகும்.

காலை மாலை இருவேளையும் பல் துலக்குங்கள்...

கண்ணகி செட்டியார்னு நீங்க சொல்லித்தான்டா தெரியுது...


அதென்ன அது செட்டியார் சாம்ராஜ்யம்.. எங்க இருந்துச்சு...

அடேய் தெளிவா சொல்லுங்கடா.. நீங்க  தெலுங்கு செட்டி தானே... எனக்கு டவுட்டாவே இருக்கு...

நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்...


நீங்கள் அன்புணர்வின் கதிர்களை வெளிப் படுத்திக் கொண்டிருந்தால் மொத்தப் பிரபஞ்சமுமே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வது போலவும், அனைத்து மகிழ்க்கியான விஷயங்களையும் உங்களை நோக்கிச் செலுத்துவது போலவும், எல்லா நல்லவர் களையும் உங்களை நோக்கி நகர்த்துவது போலவும் தோன்றலாம். உண்மையும் அதுதான்.

உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.

நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும் போது, அன்பைத் தேடுகிறீர்கள். அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள்.

உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருக்கும் மேலும் அதிகமான சிறப்புகளையும் ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டிவிடும். 

உங்களுடைய சக்தியை சரியான முறையில் இடம்பெயரச் செய்து நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்கு சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும்.

நீங்கள் வேண்டும் என்று விரும்பிய வற்றிற்கு, முன்னதாகவே நன்றி தெரிவிக்கும் செயல், உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்ஞையை அனுப்பும்.

உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவது தான் அக்காட்சியின் படைப்பாகும். அகக் காட்சிப் படைப்பில் ஈடுபடும்போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள். நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ? அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்.

ஒரு நாளின் இறுதியில், தூங்கப் போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக் கண்ணால் பாருங்கள். ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ, நீங்கள் விரும்பியபடி அமைய வில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி நிக வேண்டும் என்று விரும்பியிருந்தீர்களோ அப்படி நடை பெற்றதைப் போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள்.

அடுத்தநாள் நீங்கள் விரும்பியபடி எல்லாம் மாறிவிடும்...

மதம் எனும் பகல் வேசம்...


தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்...


தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விசமாக உள்ளது.

இதை விளக்க உதாரணங்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்த இரண்டுமே ஒரே நபரிடத்தில் எப்படி விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைக் காண வேண்டுமென்றால் கி(ஹி)ட்லரின் வாழ்க்கையைப் பார்த்தால் போதும்.

அசாதாரணமான அறிவும், தன்னம்பிக்கையும் கொண்ட கிட்லர் நாட்டின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளும் முன் யெ(ஜெ)ர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது.

ஆனால் தன்னால் நாட்டை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை திடமாக அவரிடம் இருந்தது. 1933ல் கிட்லர் தன் நாட்டு மக்களிடம் கூறினார். "எனக்கு நான்கே நான்கு வருடங்களைக் கொடுங்கள்." சொன்னபடி நாட்டின் தலைவிதியை மாற்றிக் காட்டினார்.

எழுபது லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த நாட்டில் தொழிற்சாலைகளையும், வாணிப அபிவிருத்தியையும் ஏற்படுத்தி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கினார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மிக நல்ல உயர்த்தினார். எல்லாம் அவரது தன்னம்பிக்கை செய்து காட்டியது.

ஆனால் அதே தன்னம்பிக்கை கர்வமாக மாற ஆரம்பித்தவுடன் அழிவும் ஆரம்பித்தது. தன்னை மிஞ்ச ஆளில்லை என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவரது நாட்டை மட்டுமல்லாமல் உலகத்திலேயே பேரழிவுகளை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை இன்னமும் கூட சரியாக கணிக்க முடியவில்லை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

தன்னம்பிக்கை ஏற்படுத்திய வளர்ச்சியையும், கர்வம் ஏற்படுத்திய பேரழிவையும் ஒரே மனிதனின் வாழ்க்கையில் ஆதாரபூர்வமாக சரித்திரம் சொல்கிறது.கிட்லரின் வாழ்வில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் இந்த இரண்டுமே இதே விளைவுகளையே ஏற்படுத்தக் கூடியவை. அதுவே இயற்கையின் நியதி.

எனவே தன்னம்பிக்கையுடன் இருங்கள். அது தான் உங்களை உயர்த்தக் கூடியது. உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கப் போவதும் அந்த தன்னம்பிக்கை தான். ஆனால் அது கர்வம் என்ற விசமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தன்னை உயர்வாக நினைக்கும் அதே சமயம் மற்றவர்களைத் தாழ்வாக நினைக்கவும் ஆரம்பித்தால் கர்வம் நுழைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். தன் சாதனைகளைப் பெருமைப்படுத்தியும், மற்றவர் சாதனைகளை சிறுமைப்படுத்தியும் நினைப்பதும் கர்வமே.

தன் தவறுகளை தவறுகளே அல்ல என்று சாதிப்பதும் கர்வத்தின் ஒரு குணமே. மற்றவர்களுடைய சிறு தவறுகளையும் சுட்டிக் காட்டி மகிழ்வதும் கர்வத்தின் தன்மையே. தனக்கு எதிரான எதையும் சகிக்க முடியாததும், மற்றவர் சாதனையை ரசிக்க முடியாததும் கர்வத்தின் செயல்களே.

அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது போல, மேலே சொன்ன கர்வத்தின் அடையாள குணங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது. அடைந்த உயர்வில் இருந்து சறுக்கி விழாமல் இருக்கவும் மேலும் உயரவும் அது தான் ஒரே வழி...

இலுமினாட்டி என்றால் என்ன.? - 1...


https://youtu.be/7rJjqVgEggI

Subscribe the channel for more news...

பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக...


சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும்...

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.

அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்...

விசும்பு என்றால் ஆகாயம்;
வலவன் என்றால் சாரதி;
ஏவாத என்றால் இயக்காத;
வானவூர்தி என்றால் விமானம்.

விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தான்...

தமிழர்கள் அனைவரும் ஆய்வறிஞர் குணா அவர்களின் புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்...


ஆய்வறிஞர் குணாவின் புத்தகங்களான திராவிடத்தால் வீழ்ந்தோம், வள்ளுவத்தின் வீழ்ச்சி, மண்ணுரிமை, வள்ளுவப் பார்ப்பாரியம், முன்தோன்றி மூத்தகுடி, தொல்காப்பியத்தின் காலம், நாற்றாங்கால், போன்றவற்றை ஒவ்வொரு தமிழரும் படித்துத் தெளிய வேண்டும்.

பாவாணருக்குப் பின் தமிழின விடுதலைக் கருத்துக்களை தெளிவாக விளக்கியவர் குணா மட்டுமே..

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை..

மிகப்பெரும் ஆய்வாளரான ஆய்வறிஞர் குணா ஒரு சாதாரன எழுத்தாளராகக்கூட..

பலருக்கும் அறிமுகம் ஆகாதவராக இருப்பது நமக்கு அவமானம்..

பாவாணரை இழந்து வாடுவது போதும். இவரையும் நாம் இழந்து விட வேண்டாம்.

தமிழினம் விழித்தெழ வேண்டும்.

தமிழறிஞர்களை நாம் கொண்டாட வேண்டும்..

அவரின் கருத்துக்களை பின்பற்றி தமிழர் தேசியம் அமைய களம்காண வேண்டும்...

இது தான் பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ன செய்கிறது என்று கேட்கிறீர்களா..?

ஏழை விவசாயி வாங்கிய 5000 ரூபா கடனை அம்பாணி அடி ஆட்களை வைத்து மிரட்டி பிடுங்குகிறது...

குறிப்பு : அம்பாணி க்கு பல லட்சம் கோடி கடன் கொடுத்து.. அதில் பாதி வராக்கடன் என்று தள்ளுபடி செய்கிறது...

தமிழ்நாடு விடுதலையை முன் வைத்த போது தான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார் மாவீரன் வீரப்பன்...


இந்திய ரா பயங்கரவாதிகளின் விடுதலைப் போராட்டங்களை அடக்கும் பயங்கரவாதம்...

வீரப்பன்...

யானைத்தந்தம் கடத்திய போது கொல்லப்படவில்லை.
சந்தணக்கட்டை கடத்திய போது கொல்லப்படவில்லை.

தமிழ்நாடு விடுதலையை முன்வைத்த பின்பே நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்..

இந்திய உளவுப்படையானது இந்தியாவுக்குள் மட்டுமல்ல இந்தியாவுக்கு வெளியிலும் கொலைகள் செய்கிறது.. 

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் எனவே உளவுப்படைகளும் சட்டப்படியே செயற்படும் என்றும் பலர் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அது அமெரிக்க சி.ஜ.ஏ மற்றும் ரஸ்சிய கே.ஜி.பி இஸ்ரவேலின் மொசாட் போன்று மிகவும் மோசமான பயங்கரமான உளவுப்படையாகும்..

இந்த உளவுப்படைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் எவ்வளவு? அவர்களின் செயற்பாடு என்ன? போன்ற குறித்து பாராளுமன்றத்தில் கூட கேட்க முடியாது. அந்தளவிற்கு அவர்களின் அனைத்து செயற்பாடுகளும் இரகசியமாக வைக்கப்படுகிறது. அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அவர்களும் நீதி, நியாயம், சட்டம் எது குறித்தும் அக்கறையின்றி மிகக்கொடிய கிரிமினல்களாக வலம் வருகின்றனர்..

வங்கதேச விடுதலையின் போது முக்திபாணி என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு பயிற்சி ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்தது.

பின்னர் வங்கதேசம் விடுதலையடைந்ததும் இந்திய அரசு செய்த முதல் வேலை தான் பயிற்சி கொடுத்த அத்தனை போராளிகளையும் இரகசியமாக கொன்றது தான்.

இதனையே புளட் அமைப்பினர் “வங்க தந்த பாடம்” என்று பிரசுரம் அடித்து வெளியிட்டனர்.

ஆனால் பின்னர் இது இந்திய அரசுக்கு தெரிந்து விட்டது என்றதும் அத்தனை பிரதிகளும் தீயிட்டு அழித்தார்கள். இந்த “வங்க தந்த பாடம்” பிரசுர வெளியீட்டுக்கு உழைத்த சந்தியார் பின்னர் இந்திய உளவுப்படையின் ஆசியுடன் புளட் தலைமைப் பீடத்தினால் சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டார்...

புலவர் கலியபெருமாள் தன் இறுதிக் காலங்களில் தனது தலைவராக சந்தன வீரப்பன் அவர்களைக் குறிப்பிட்டார்..

தமிழ்நாட்டு சேகுவாரா என்று அழைக்கபட்ட கலியபெருமாள் வீரப்பனை தன் தலைவர் என்று குறிப்பிட்டமைக்கு காரணம் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன் வைத்தமையே...

அதே போல் வீரப்பன் யானைத் தந்தம் கடத்திய போது கொல்லப்படவில்லை. சந்தணக் கட்டைகளை கடத்தியபோது கொல்லப்படவில்லை. மாறாக தமிழ்நாடு விடுதலையை முன் வைத்த போது தான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்...

இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியது என்னவெனில் தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் முயற்சி செய்தாலும் அவர்களை இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் கொன்று அழிப்பதற்கு தயங்காது என்பதே..

இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு நிறைய உதவி செய்ததாகவும் ராஜீவ் கொலைக்கு பின்னரே அது உதவிகளை நிறுத்தியதாகவும் இன்றும் கூட சில இந்திய விசுவாசிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது தவறு.

ஆரம்பம் முதலே இந்திய அரசும் அதன் உளவுப் படைகளும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியே வந்திருக்கின்றது. அதுதான் உண்மை வரலாறு ஆகும்..

இன்றும் அதன் தொடர்ச்சி தான் அணுஉலை, மீத்தேன், கெயில், நூட்ரீனோ, சாகார்மாலா எல்லாம்...

நமக்காக இறுதி காலத்தில் போராடுவது நாமாக மட்டுமே இருப்போம்...


உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?


The World’s only living civilization...

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன.

மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்சு, ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது.

அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.

நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை “The World’s only living civilization” என்று டிசுகவரி தொலைக்காட்சியின் “The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்சு.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூசித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும்; இதற்கான காரணம் தெரியாது, அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு.

இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

குறிப்பு...

அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரயைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக கொண்டு செயல்பட்டது மேலும் கீழ் திசையில் நெல்லை வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது...

அழிவின் விளிம்பில் நீலகிரி வரையாடுகள்: கவனிக்குமா அரசு?


தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக வன உயிர் கூட்டமைப்பின் இந்திய பிரிவு (WWF-Inida) தெரிவித்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் தமிழக - கேரள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் இப்போது 2500 வரையாடுகள் மட்டுமே இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழக மற்றும் கேரள வனத்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அதில் 3122 வரையாடுகள் வரை இருப்பதாக தெரியவந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வேகமாக அவை தொடர்ந்து அழிவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளத்தில் மட்டும், அம்மாநில அரசு மேற்கொண்ட கணக்கெடுப்பில் சுமார் 1,420 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. அவற்றில் சுமார் 664 வரையாடுகள், எரவிக்குளம் தேசியப் பூங்காவில் மட்டுமே தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி வரையாடு அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. இந்த நீலகிரி வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் வேறெங்கும் காணப்படுவதில்லை.

மேலும், தமிழின் சங்க இலக்கியப் பாடல்களில் வரையாடு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. வரையாடுகள் கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயரம் உள்ள மலையில் புற்கள் அடர்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் வசிப்பவை.

பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் இவை உணவாக்கி கொள்ளும். முதிர்ந்த ஆண் வரையாடு சராசரியாக 100 கிலோ எடையும் 110 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாடு சராசரியாக 50 கிலோ எடையும் 80 செ.மீ. உயரமும் இருக்கும்.

பெண் வரையாட்டின் கொம்பு ஆண் வரையாட்டின் கொம்பைவிடக் குட்டையாகவும் பின்னோக்கிச் சரிவாகவும் அமைந்திருக்கும்.
ஆண் வரையாடு அடர் பழுப்பும் மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருக்கும். பெண், சாம்பல் நிறத்தில் காணப்படும். ஆண் வரையாடுகள் தனியாகவும், பெண் வரையாடுகள் கூட்டமாகவும் வசிக்கும். ஆண் வரையாடுகளில் யார் தலைவன் என்ற போட்டி அதற்குள் சண்டை சாகும்வரை நடைபெறும். வரையாடுகள் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையாகும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியைச் சுமக்கும் இவற்றின் ஆயுள்காலம் 5 முதல் 6 ஆண்டுகள்.

இவைகளை எங்கெல்லாம் பார்க்கலாம்?
களக்காடு அருகே முத்துக்குளி வயல், மேகமலை ஹைவேவிஸ், ஆனைமலை, நீலகிரி மலை, வால்பாறை, கேரளத்திலுள்ள அமைதி பள்ளத்தாக்கு, பரம்பிக்குளம், ரண்ணி வனப்பபகுதிகளில் வரையாடுகள் நடமாட்டத்தை பார்க்கலாம்.

அச்சுறுத்தல்கள் என்ன ?

வரையாடுகளுக்கு இயற்கையான எதிரி சிறுத்தை, புலிகள் மற்றும் மனிதனே ஆவான். வரையாடுகளுக்கு புல்வெளிகள் நிறைய வேண்டும். அதுவும் உயரமான மலைகளில் இருக்க வேண்டும்.

மேலும் காடுகளின் பரப்பளவுகள் சுருங்கிக் கொண்டு வருவதால் வரையாடுகளுக்கு தேவையான உணவு கிடைக்காததால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருகிறது.

இவை காலையும், மாலையும் மட்டுமே மேய்ச்சலுக்கு செல்லும். பகல் பொழுதில் ஓய்வெடுத்துக் கொள்ளும். இரவில் வரையாடுகளுக்கு பார்வை தெரியாது. அதிகமான மழைப்பொழிவு, செழிப்பான பிரதேசங்களில் மட்டுமே இவை வசிக்கின்றன...

திருடு போன செல்போன் மற்றும் வாகனங்களை டிஜிகாப் ஆப் மூலம் கண்டுபிடிப்பது எப்படி ?


காவல்துறை வெளியிட்டுள்ள செய்முறை விளக்க வீடியோ...

https://youtu.be/-1d3_bT0ueE

Subscribe the channel for more newsm..

ஒரு வாக்கியத்திலுள்ள சொற்களை மாற்றினாலும் பொருள் மாறா சிறப்பு நம் தாய் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு...


தமிழ்  மொழியில் நேர் வாக்கியத்தில் உள்ள எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன்அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டானத்  தனிச் சிறப்பு...

வேறு எந்த மொழியில் இவ்வாறு சொற்களை மாற்றினால் அதன் பொருள் மாறும்..?

தமிழகத்தில் இன்று வரை நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள்...


மன்னிக்க மறக்காதீர்கள்...


மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது...

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும் போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும் என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச் சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

ஒரு மனிதன் தேவ நிலையை அடைய வேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும் என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை அல் கபிர் என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்து கொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர் களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும் போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்து விடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்...

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்...