14/01/2018

போலியான பதிவு எண் ஒட்டி கொண்டு வந்த தனியார் பேருந்து பறிமுதல்...


கடலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் வேலுமணி அவர்கள் வடலூரில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது சுற்றுலா வந்த தனியார் பேருந்தை மடக்கி சோதனை செய்த போது  பேருந்தின் உரிமத்தில் TN-67F-4172 என்ற எண் உள்ளது.

ஆனால் TN.58-P-0321 என்ற போலியான பதிவு எண் எழுதி பேருந்தில் ஒட்டி வந்திருப்பது தெரியவந்தது.

உடனே தனியார் பேருந்தை பறிமுதல் செய்து வடலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்...

கோல்கட் எனும் கார்ப்பரேட் நிறுவனமும் ஏமாற்று வியாபாரமும்...


மின்னல் எப்படி உருவாகிறது...


விண்வெளியில் நாம் ஆச்சரியபட கூடிய விடயங்கள் இன்னும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

அவற்றில் ஒன்று தான் மின்னல்...

மழை காலங்களில் மின்சக்தியின் தீப்பொறி வடிவத்தை தான் மின்னல்
என்போம்.

ஒரு நெருப்பு பொறி உருவாக.. மின்சக்தி குறிப்பிட்ட ஒரு மின்னழுத்த எல்லையை மீற வேண்டும்.

மின்னல் காற்றின் மூலமாக இரு மேகங்களுக்கிடையிலோ பூமிக்கோ கடத்தப்படுகின்றது. ஆனால், காற்று ஓர் அரிதிற்கடத்தி. சூரியனில் இருந்து வரும் கொஸ்மிக் கதிர்கள் காற்றுடன் மோதும் போது. காற்றினை அயனாக்கம் செய்து மின்னேற்றங்களை தூண்டும்.

சக்தி பகுப்பினால் ஏற்படுத்தபடுகின்ற
மின்விளைவு மிக அதிகம், அதாவது அதிகளவு சக்தி காலப்படும். சில நேரங்களில் 100,000 வோல்டினை விட
கூடியளவு அழுத்தத்தினை உருவாக்க கூடிய சக்தி காலப்படும்.

கடல் மற்றும் ஏனைய நீர்தேக்கங்களிலிருந்து நீரானது சூரியனின் வெப்பத்தினால் நீராவி நிலைக்கு மாற்றபட்டு மேலெழுந்து மேகங்களை அடைகின்றது. இந்த நீராவி மேலே செல்லும் போது வளிமண்டல அமுக்கம் குறைவதனால் நீராவி விரிவடையும், இதனால் நீராவி குளிரடையும்.

மழை மேகத்தில் காணப்படும் அணுக்கள் உராய்வு, சூரியனிலிருந்து வரும் கொஸ்மிக்கதிர் போன்ற காரணிகளால் ஏற்றம் பெரும். முகில் கூட்டங்களில் மேல் பகுதி ஒரு வகை ஏற்றமும் கீழ் பகுதிக்கு எதிரான ஏற்றமும் பெரும். இவ்வாறு, பெரும் மின்னேற்றம் அதிகமாகும் போது எதரி எதிர் ஏற்றங்கள் கொண்ட முகில் கூட்டம் அருகருகே வரும் போது மின்னேற்றம் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் பாயும். இவ்வாறு பாயும் போது தீப்பொறி உருவாகும்.

மின்னலானது பூமியை நோக்கி
பயணித்து மனிதர்கள், விலங்குகளையும் தாக்கும். மின்னல் பூமியினை நோக்கி எறியும் காரணமாக கவர்ந்திழுக்கப்படும். மின்னலினால் ஏற்படும் பாதிப்பு மழைகாலங்களில் அதிகம்.

மின்னல் உருவாகும் போது, மரங்கள்
மற்றும் குடிசைகளுக்கு கீழேயோ,
அருகிலோ அல்லது சிந்த வண்ணமோ இருக்க கூடாது. இவை ஈரளிப்பாக இருக்கும் போது மரத்தின் உச்சியிலிருந்து அடியை நோக்கி மின்னோட்டம் பாயும், இந்த வேலையில் நாம் அருகிலோ மரத்தை தொட்ட வண்ணமோ இருந்தால் எம்மூடாக மின்னோட்டம் பாய்ந்து புவியை அடையும்.

மின்னலின் போது நிலத்தில் கிடையாக படுக்கவோ, மின்சாதன பொருட்கள், தொலைபேசி என்பனவற்றை பயன்படுத்தவோ கூடாது. நாம் காணும் அநேகமான மின்னல்கள் புவியை தொடுவதில்லை ஆனால் அவை மேகம் காற்று என தொடர்ந்து தடத்தினை அமைத்து பயணிக்கும்.

நடக்கும் போது அல்லது படுத்திருக்கும்
போது அல்லது கால்களை அகற்றி
வைத்திருக்கும் போது கிட்டத்தட்ட 1
மீட்டர் இடைவெளி காணப்படும் போது அழுத்த வித்தியாசம் காரணமாக மின் எம்மூடாக பாயக்கூடும்.

இதனால் தான் கால்நடைகள் அதிகளவு மின்னல் தாக்கத்தால் பலியாகின்றன.

இடிமின்னலிருந்து பாதுகாப்பு பெற
இடி தாங்கி பயன்படும்.

மாடி கட்டடங்களில் அதிகமாக இடி தாங்கி பொருத்தபட்டிருக்கும், இடி முழக்கத்திலிருந்து மின்சாதன பொருட்களை பாதுகாப்பதற்காக
பொருத்தப்படுகின்றது.

இங்கு மின்சாதனத்தை நோக்கி வரும்
மின்னை பூமியிற்கு திசை திருப்புவதே இதன் தொழில்.

இதற்காக பூமியை நோக்கி செப்பு கம்பினை பயன்படுத்தி கொண்டு செல்லப்படும். இறுதில் தடிப்பு கூடிய செப்பு கீற்று பயன்படுத்தப்படும்.

இங்கு தடையை குறைக்க தடிப்பமான செப்பு பிரயோகப்படுத்துவார்கள். உச்சியில் கூர்மையான உலோக அமைப்பு பயன்படும். ஏனெனில்
கூர்மையான அமைப்பு ஏற்றங்களை அதிகளவு கொண்டிருக்கும். இலகுவாக எதிர் ஏற்றத்தை கவரும்...

பாஜக மோடி - அதிமுக ஓபிஎஸ்.. இரண்டு கூட்டு களவாணிக்கும் தகுதியே இல்லையே...


யார் வெற்றியை யார் கொண்டாடுவது.. இது தானா கிடைத்து அல்ல உயிரை கொடுத்து போராடி பெற்றது...

மனிதகுல விரோதிகளான பாஜக மோடி-அமித்ஷா வின் பினாமி தீபக் மிஸ்ரா வின் அடாவடித்தனங்களை தட்டி கேட்டதில் நான்கில் மூன்று பேர் ஹிந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்தவர்கள்...


செலமேஸ்வர்-ஆந்திரா (சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர்).

குரியன் ஜோசப்- கேரளாவை சேர்ந்தவர்.

ரஞ்சன் கோகாய்- வட கிழக்கு அஸ்ஸாமை சேர்ந்தவர்...

லோக்கூர்- டெல்லியில் வசிப்பவர்....

ஹிந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்த மூன்று மாநிலத்திலும் மதவெறியை- எதிர்க்கும் கலாச்சாரம் பண்பாட்டிலேயே உள்ளது...

தமிழ் நாட்டில் கூட காண முடியாத கொண்டாட்டம் சிங்கப்பூரில்...


திருட்டு திராவிடர்ஸ்...


கன்னட யுகாதி பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் கர்நாடக மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம்தான் திராவிடன் கன்னடர்கள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

மலையாள ஓணம் பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் கேரள மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம் தான் திராவிடன் மலையாளிகள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

தெலுங்கு யுகாதி பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் ஆந்திர மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம் தான் திராவிடன் தெலுங்கள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

ஆனால் தமிழன் திராவிட மாயை அடிமை என்பதால் தமிழ்நாட்டில் வந்ததிராவிடன் போனதிராவிடன் எல்லாம் முதலமைச்சர் ஆகலாம், கோடிக்கணக்கான தமிழர் நீர்நிலவளங்களை கொள்ளை அடிக்கலாம், லட்சக்கணக்கான் தமிழர்களை இனப்படுகொலை செய்யலாம் எவனும் தடுக்க முடியாது..

அதனால் தான் இது கன்னட ராமசாமி நாயக்கர் ஆக்கிரமித்த மண், இங்கு திராவிடம் மட்டும் தான் என்று தமிழர் அல்லாத வந்தேறிகள் ஏமாற்றி பிழைக்கின்றனர்...

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை - கர்நாடகா...


இந்த இந்தியன் திராவிடன் சொல்லிட்டு திருட்டு பயனுங்க சுத்திட்டு இருக்கானுங்க பாரு.. அவனை எல்லாம் இப்போ சட்டை புடிச்சு கேளுங்க...

நோயை எதிர்த்து வாழ...


1 பசித்த பின் சாப்பிட வேண்டும்.
2 ஜீரணமாகாத வேளையில் அதிகம் சாப்பிட கூடாது.
3 பகலில் அதிகம் தூங்கக் கூடாது.
4 அதிகாலையில் துயில் எழ வேண்டும்.
5 அழுக்கு ஆடைகளை அணியக் கூடாது.
6 காற்றோட்டம் இல்லாத இடத்தில் வசிக்கக் கூடாது.
7 அதிக நேரம் கண் விழித்து இருக்க கூடாது.
8 எப்போதும் ஏதாவது ஒன்றைப்பற்றி அளவு கடந்த சிந்திக்கக் கூடாது. இவற்றின் காரணமாக பல நோய்கள் தோன்றக் கூடும்.
9 படுக்கையை விட்டு எழுந்ததும் சிறிது இஞ்சியை சாப்பிட வேண்டும்.
10 மதிய உணவு முடிந்ததும் சிறிது சுக்கு சாப்பிட வேண்டும்.
11 இரவில் படுக்கச் செல்லும் முன்பு கடுக்காய் சாப்பிட வேண்டும்.
12 அதிகாலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். ஓடுதல், நீந்துதல் ஆகியவையும் நல்ல உடற்பயிற்சியே.

இவற்றை ஒழுங்காக கடைபிடித்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்...

ஆட்சியாளர்கள் அணிந்து அனைவரும் சமம் என நிருபிக்க தயாரா.. ஏற்கனவே போட முடியாது இதுல முத்திரை வேற..


அண்ணாச்சி பழத்தின் அற்புத குணங்கள்...


உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாச்சி பழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.

முதலில் நன்கு பழுத்த அன்னாச்சி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காய வைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாச்சி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.

தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும். இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும்.

பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும் பொதுவாகவே அன்னாச்சிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும்.

குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாச்சி பழத்திற்கு உள்ளது...

பாஜக தமிழிசை எனும் மானங்கெட்ட பொய்யிசை...


தமிழர் திருநாள் தைப்பொங்கல் - ஓர் சிறப்பு வரலாறு...


ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும்.

ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.

பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்.

தமிழர் தேசிய விழா...

பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கள் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.

உழவர் திருநாள்...

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்க வைக்கும் முறை...

தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.

நான்கு நாள் திருவிழா...

போகி பண்டிகை : போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். ஆயர்கள் இந்திர விழாவை முடித்து சூரிய வழிபாடை தொடர்ந்தனர்.

அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

தைப்பொங்கல் : தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்: உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

காணும் பொங்கல் : இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.

பொங்கலை ஒத்த பிற விழாக்கள் : வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.

தமிழக அரசுகள் செய்த மாற்றங்கள்...

2006-2011 வரையிருந்த தமிழக அரசு, தை 1 தமிழாண்டின் முதல் நாளானபடியால், அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என சனவரி 29, 2008 அன்று அறிவித்தது. சூரியன் அன்று மகர ராசியில் நகர்கிறது என்றும் ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு என்றும் கூறப்பட்டது. அன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழமையாதலால், அந்நாளை புதுநாள் எனவும் கூறுவர். அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவைச் சேர்ந்த மக்களும் தையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடினர்.

2006-2011 வரையிருந்த தமிழக அரசின் இந்த அறிவிப்பு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழகப் பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆகத்து 23, 2011ல் தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது..

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்...

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை...

தமிழினத்தை அழிக்கவே அனைத்து திட்டம் என்பதை புரிந்துக் கொள் தமிழினமே...


உணர்வு அலைவரிசை...


1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.

2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம்போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.

3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.

4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் , அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.

5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.

6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.

8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால் கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்துவிடலாம்.

10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...

தமிழர்களை அடிமைப்படுத்த கூத்தாடிகளை நம்பி நிற்கிறது பாஜக எனும் காவிக் கூட்டம்...


சுயசார்பு தமிழர் இனம்.. தமிழனையே தலைமையேற்கும்...

காப்பு கட்டுதல் பிண்ணனி நீங்கள் அறியாத தகவல்கள்...


என்னை பொறுத்தவரை ஆண்டாள் ஒரு தெய்வப்பிறவி - டிடிவி. தினகரன்...


சிறுபான்மையை திருப்தி படுத்துவதற்காக  பெரும்பான்மையான இந்து மதத்தை கேவலப்படுத்துவது நியாயமற்ற போக்கு.

கனிமொழி வைரமுத்து  போன்றவர்கள் ஆண்டாள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் தமிழுக்கு செய்ததை விடவா செய்து விட்டார்கள்.

இத்தகைய அரசியலை வன்மையாக  கண்டிக்கிறேன்- டிடிவி தினகரன்...

விவசாயம் காப்போம்...


ரசாயன உரம், தொழிற்சாலை கழிவுகளால் நஞ்சாக மாறிய நிலத்தை சரி செய்ய, அந்த நிலத்தில் வெட்டிவேர் பயிரிட்டால் போதும். நிலத்தில் படிந்துள்ள காட்மியம், பாதரசம் போன்ற கடின உலோக பாதிப்புகளை கூட வெட்டி வேர் உறிஞ்சி எடுத்து மண்ணை வளமாக்கி விடும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் பெட்ரோல் திருட்டை பாருங்கள்...


Increase in petrol price for ur kind notice...

01/December/2017-Rs.67.71
02/December/2017-Rs.67.78
03/December/2017-Rs.68.02
04/December/2017-Rs.68.34
05/December/2017-Rs.68.64
06/December /2017-Rs.68.88
07/December/2017-Rs.69.03
08/December/2017-Rs.69.13
09/December/2017-Rs.69.20
10/December/2017-Rs.69.35
11/December/2017-Rs.69.68
12/December/2017-Rs.69.92
13/December/2017-Rs.70.19
14/December/2017-Rs.70.40
15 /December/2017-Rs.70.53
16/December/2017-Rs.70.59
17/December/2017-Rs.70.70
18/December/2017-Rs.70.76
19/December/2017-Rs.70.83
20/December/2017-Rs.70.85
21/December/2017-Rs.71.01
22/December/2017-Rs.71.15
23/December/2017-Rs.71.22
24/December/2017-Rs.71.37
25/December/2017-Rs.71.51
26/December/2017-Rs.71.52
27/December/2017-Rs.71.56
28 /December/2017-Rs.71.60
29/December/2017-Rs.71.62
30/December/2017-Rs.71.62
31/December/2017-Rs.71.66
01/January/2018-Rs.71.78
02/January/2018-Rs.71.95
03/January/2018-Rs.72.20
04/January/2018-Rs.72.34
05/January/2018-Rs.72.44
06/January/2018-Rs.72.58
07/January/2018-Rs.72.73
08/January/2018-Rs.73.01

Good technique to increase petrol price.No one is knowing tat petrol prices are increasing...

இதை தட்டி கேட்க கூட ஆள் இல்லை.. என்ன ஒரு கேவலம்..

தேவரடியாரும் தேவதாசிகளும் சில கல்வெட்டுச் சான்றுகள் - ம.செந்தமிழன்...



இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.

தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர்(வடுகர்) என வகைப்பிரிப்பது தவறு.

எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல.

தேவரடியாரும் தேவதாசிகளும்...

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர்(வடுகர்) ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’.

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).

 
தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’.

(கர். கல் VAK 105).

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).

இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.

இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்..

’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22).

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.

பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?

லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.

’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே.

இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்...

யார் இவர் ஏன் எதிர்க்கிறார்கள்.? நீதிபதி கர்ணனை சிறையில் அடைக்க தீர்ப்பு வழங்கியதும் இவர் தான்...


அன்பு சக்தியும் நீங்களும்...


1. அனைத்திற்கும் ஓர் அதிர்வு அலைவரிசை உள்ளது. நீங்கள் எந்த உணர்வைக் கொண்டிருக்கிறீர்களோ , அந்த உணர்வு தான் இருக்கும் இதே அதிர்வு அலைவரிசையில் உள்ள அனைத்தையும் உங்கள் வாழ்விற்குள் கொண்டு வருகிறது.

2. வாழ்க்கை உங்களுக்குத் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கிறது. அடையாளங்கள் , எண்ணங்கள் , நபர்கள், பொருட்கள் என்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு சூழலும் , ஒவ்வொரு நிகழ்வும் உங்களுடைய அலைவரிசையில் உள்ளன.

3. நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும்பொது, மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான நிகழ்வுகளால் மட்டுமே உங்கள் வாழ்விற்குள் நுழைய முடியும்.

4. வாழ்வைப் பொறுத்தவரை எந்தவொரு விபத்தும் தற்செயலாக நிகழ்வும் ஏற்படுவது கிடையாது. அனைத்தும் இணக்கமானவை உள்ளது. இது வாழ்வின் எளிமையான இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாடு ஆகும்.

5. நீங்கள் நேசிக்கும் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். ஆடை உங்கள் அன்பின் ஆற்றலின் அடையாளாச் சின்னமாக வைத்துக் கொள்ளுங்கள் .நீங்கள் உங்கள் அடையாளாச் சின்னத்தைப் பார்க்கும் போது அல்லது கேட்கும் போதோ, அன்பின் ஆற்றல் உங்களுடன் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

6. ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன் , அன்பின் ஆற்றலை உங்களுக்கு முன்னதாக அங்கு அனுப்புங்கள். உங்களுடைய நாளில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக நடப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குள் அன்பை உணருங்கள்.

7. ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது , ஒரு கேள்வியைக் கொடுக்கிறீர்கள். அதற்கான விடையை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

8. உங்கள் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு உதவுவதற்கு அன்பின் ஆற்றலை உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் , பணத்தை நிர்வாகிக்கும் மேலாளராகவும் , தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்குப் பயிற்சியளிப்பவராகவும் , உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும் ஆலோசனையாளாராகவும் இருக்கும்.

9. உங்கள் மனம் ஏகப்பட்ட விபரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், அந்தச் சிறிய விபரங்கள் உங்கள் வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள் . சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அது என்ன பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது.

10. அன்பின் ஆற்றலுக்கு நேரெதிரானது என்று எதுவும் கிடையாது. அன்பைத் தவிர வாழ்வில் வேறு எந்த சக்தியும் இல்லை. உலகில் நீங்கள் காணும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் அன்பின் பற்றாக்குறையினால் உருவானவையே.
உற்சாகம் உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்...

பூமி தட்டை என செய்தி பரப்பும் நண்பர்களுக்கு இதோ எம் தமிழன் அன்றே உருண்டை என்று சொன்ன ஆதாரம்...


மூன்றே மாதங்களில் மக்கிவிடும்; நீரில் கரையும்.. கோவையில் அறிமுகமான கேரிபேக்குகள்...


தமிழகத்திலேயே முதன்முறையாக 3 மாதங்களில் மக்கிவிடும் கேரிபேக்குகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

மண்வளத்தைக் கெடுப்பதுடன் மழை நீர் வடிகால்களை அடைத்துக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் பைகள் இன்றைய நகர்ப்புறங்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண உலக நாடுகள் பலவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. பிளாஸ்டிக் பைகளின் தீமைகள்குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவது, துணிகளாலான பைகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பது மற்றும் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துவருகின்றன.

அந்த வகையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மக்கும் பைகளை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தவகை பைகள் அறிமுகப்படுத்தப்படுவது தமிழகத்தில் இதுவே முதன்முறை.

அதேபோல், தென்னிந்தியாவில் பெங்களூக்குப் பிறகு இந்தவகைப் பைகளை அறிமுகப்படுத்தும் முதல் நகரம் என்ற பெருமையை கோவை பெறுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த ரீஜனோ வென்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அந்த நிறுவன அதிபர் சிபி செல்வன், ‘மக்கும் தன்மையிலான இந்தப் பைகள் 3 மாதத்தில் மக்கிவிடும். எளிதாகத் தண்ணீரில் கரைந்துவிடும் தன்மை கொண்டவை. அந்தத் தண்ணீரை நாம் தவறுதலாக அருந்தினாலும், அதனால் உடல்நலன் பாதிக்கப்படாது. தீப்பற்றி எரியும்போது பிளாஸ்டிக் பைகள் உருகுவது போலல்லாமல், இந்தப் பைகள் சாம்பலாகிவிடும். அந்தப் பைகளை விலங்குகள் உண்டாலும் அவற்றுக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது என்றார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இந்தப் பைகள் சொல்லப்பட்டாலும், இந்த மக்கும் பைகளின் விலை சற்று அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கோவையில் இன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பு அதிகாரி விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜயகார்த்திகேயன், ‘மக்களிடம் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் மாநகராட்சியின் இந்தத் திட்டம் வெற்றியடையும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல மார்க்கெட்டில் இதேபோன்ற போலி பைகள் விற்கப்படலாம் என்றும், அவற்றைக் கண்டறிய கோவை ஸ்மார்ட் சிட்டி லோகோவுடன் கூடிய பைகளை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாவரங்களிலிருந்து பெறப்படும் மூலப்பொருள்களைக் கொண்டு இரண்டு வகையாக இந்த பைகள் தயாரிக்கப்படுகின்றன...