01/03/2018

அமைச்சரின் அலட்சியத்தால் உயிரிழந்த கார் டிரைவர்.. மனிதாபிமானம் இல்லாத மணியனை உறவினர்கள் விரட்டியடிப்பு....


அமைச்சர் ஒ.எஸ். மணியனின் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தவர் சவுந்திரராஜன். இவர்  சூளைமேடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் அமைச்சருக்கு கார் ஓட்டுவதற்காக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.எஸ். மணியன் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

வழக்கம் போல் இன்றும் அமைச்சரை அழைக்க கார் ஓட்டுநர் சென்றுள்ளார். அப்போது, அமைச்சரை அழைத்து செல்வதற்காக காரை சுத்தப்படுத்தி விட்டு அமைச்சரை காரில் ஏறும்படி அழைத்திருக்கிறார் ஓட்டுநர்.

அப்போது திடீரென சவுந்திரராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் நெஞ்சுவலியால் துடித்த ஓட்டுநர் சவுந்திரராஜனுக்கு அமைச்சர் முதலுதவிக்கு கூட ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஓட்டுநருக்கு உதவாமால் அமைச்சர் வீட்டுக்குள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், மற்றொரு ஊழியரிடம் சவுந்திரராஜனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து ஊழியர் இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் சவுந்திரராஜனை பின்னால் அமர வைத்து சிறிது தூரம் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது வலிதாங்காமல் சவுந்திராஜன் கீழே விழுந்து மண்டை உடைந்தது. அதில் ஓட்டுநர் சவுந்திரராஜன் நடுவழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் இந்த இரக்கமற்ற செயலால் ஓட்டுநர் உயிரிழந்தார் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஓட்டுநர் சவுந்திரராஜன் வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  உறவினர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்.

உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததால் ஓட்டுநர் சவுந்திரராஜன் மரணமடைந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முடிந்தால் தம் மீது போலீசில் புகார் தருமாறு ஓட்டுநர் உறவினர்களிடம் ஓ.எஸ்.மணியன் சவால் விடுத்ததாக கூறப்படுகிறது...

சாகர்மாலா திட்டத்திற்காக ராணுவ தொழிற்பேட்டை.. தமிழா விழித்துக்கொள்...


தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ரேசன் பொருட்கள் வழங்க கெடுபிடி விதிகள்?


இந்திய ஒன்றியத்துலயே
தமிழ்நாட்டுல தான் 99% ரேசன் பொருட்கள் உரியவருக்கு போய்ச் சேருதுனு வறுமை ஒழிப்பு தொடர்பா நடந்த ஒரு ஆய்வு சொல்லுது.

மத்த மாநிலத்துல எத்தன சதவீதம்னு கேக்குறீங்களா?

மத்த எந்த மாநிலத்துலயும் இப்படி ஒரு திட்டமே இல்ல.

பல மாநிலங்கள்ல வறுமைக்கோட்டுக்கு கீழ (B.P.L) இருக்குறவங்களுக்கு மட்டும்தான் ரேசன் கொடுக்குறானுக.

ஆனா அந்த பிபிஎல் கார்டு வச்சிருக்குற அத்தன பேரும் பணக்காரனாத்தான் இருப்பான்.

'அவன் பிபிஎல் கார்டு வச்சிருக்குற பெரிய ஆளு'னு மக்கள் நெனைக்குற அளவுக்கு வடயிந்தியாவுல ஆளும் வர்க்கத்தோட அடையாளமா அது ஆகிப்போச்சு.

ஆளும் வர்க்கமே அது மூலமா வர்றத பங்கு போட்டுக்குவாங்க.

பொருள் வந்து அப்பறம் அத பதுக்கி அடுத்து கொஞ்சகொஞ்சமா திருட்டுத்தனமா பிளாக்ல விக்கிறதெல்லாம் கெடயாது.

அரசாங்க குடோன்ல இருந்து நேரா தனியார் குடோனுக்கு போயிரும்.

சில நேரம் தனியார் சப்ளை லைனுக்கே போய்ச்சேரும்.வெளிப்படயா நடக்குது.

தமிழ்நாட்டுல எதோ புண்ணியவான்கள் கொஞ்சம் மிச்சமிருக்கறதால பீத்த அரிசியா இருந்தாலும் மக்களுக்கு போய்ச்சேருது.

ஓரளவு ஒழுங்கா போய்க்கிட்டிருக்க திட்டத்த கெடுத்து கொழப்பி அத வடயிந்தியப் பாணில அப்பிடியே லம்ப்பா ஆட்டய போட வழி பாக்குறானுக.

எந்த ஏழையாவது தங்களோட ரேசன் நடுத்தர வர்க்கத்துக்கு போகுறதால பற்றாக்குறைனு போராட்டம் பண்ணாங்களா?

இல்லையே...

ஒரு நாட்ட எப்படி ஆளக்கூடாது ஒரு புத்தகம் எழுதறவன் இங்க வந்து நடக்குறத அப்படியே எழுதினா போதும்.

எதையும் கொடுக்கத்தான் துப்பில்ல.
கெடைக்குற கொஞ்சநஞ்சத்தயாவது விடுங்கடா...

இப்போ புதுசா சமார்ட் கார்டு இருந்தால் தான் ரேஷனாம்...

கொள்ளைக்கார பாவிகளா...

தமிழக விபச்சார ஊடகங்களுக்கு நன்றி...


சமஸ்கிருத பாடலா, சாகர் மாலாவா?


ஐ.ஐ.டி யில் சமசுகிருத பாடல் பாடியதாக, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடவில்லை என சர்ச்சையை கிளப்பிவிட்டு, ஓசைப்படாமல் 500 ஏக்கரில் நீர்வழி, கடலோர துறைமுக ஆராய்ச்சி மையத்தை துவக்கி இருக்கிறது ப்ராமண பனியா இந்தியம்.

தமிழ்நாட்டில் எந்த மீத்தேன் திட்டமும் இல்லை என சொல்லி தமிழர்களை அமைதி படுத்தி, அதே நேரம் சாகர் மாலா திட்டத்திற்கு இரண்டரை லட்சம் கோடியை தமிழ்நாட்டில் இறக்கியுள்ளது இந்தியம்.

இதன் அடிப்படையில்..

துறைமுக கட்டமைப்பு, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, கடலோர சிறப்பு தொழில் மண்டலம் உருவாக்கப்படும். சென்னை-சேலம் 10 ஆயிரம் கோடியில் 8 வழி சாலை. திருச்சி-கோவை, தஞ்சை - மதுரை, மதுரை - தனுஷ்கோடி (இதில் தனுஷ் கோடி மனிதர் வாழ தகுதியற்ற இடம் என அறிவித்து மக்களை வெளியேற்றியும் விட்டார்கள்) எக்ஸ்பிரஸ் சாலைகள் 50 ஆயிரம் கோடி செலவிலாம்.

தமிழர்களின் எல்லா கோரிக்கையையும் குப்பைத்தொட்டியில் வீசியுள்ள ப்ராமண பனியா இந்தியா ஏன் கேட்காமலே இரண்டரை லட்சம் கோடியை தமிழ்நாட்டில் கொட்டுகிறது? எனில் அதிலிருந்து 25 லட்சம் கோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து என்ன எடுக்க போகிறார்கள்?

தமிழ்நாட்டின் 2000 கிணறுகளில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதும், அது முடிந்தபின் அங்கிருந்து அதைவிட அதிக மதிப்பு வாய்ந்த நிலக்கரி எடுப்பதுமே அன்றி வேறென்ன..

மக்கள் இல்லாத பாலைவனங்களில் செய்யும் திட்டங்களை,

வயலும், நீரும் விவசாயமும் செழிக்கும்
இடங்களில் கொண்டுவந்து,

8 கோடி தமிழர்களின் தாய்நாடான தமிழ்நாட்டை சோமாலியா ஆக்கும் சாகர் மாலா திட்டத்தை பேசாமல் சமசுகிருத பாடலை பேசவைத்து திருப்பியிருக்கிறது பிராமண பனியா இந்தியம்...

பாஜக மோடியின் அடுத்த ஆப்புக்கு மக்கள் தயாராக இருக்கவும்...


சிரியா போரை நடத்துவது அமெரிக்கா மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளும் ரசியா மற்றும் ரசிய நட்பு நாடுகளும்...


இதே போன்று புலிகளின் வலிமையை உணர்ந்த சீனம் புலிகளிடம் கூட்டணி கோரிய போது, அதை மறுத்து விட்டு சிங்களம் தன் எதிரியானாலும் தன் தாய் நாட்டை வேறு ஒருவன் கொலைக் களம் ஆக்க அனுமதிக்காமல் உறுதியாக இருந்தார் பிரபாகரன். சிங்கள அரசோடு புரிந்துணர்வு அமைதி ஒப்பந்தத்தை போட்டிருந்தனர் புலிகள்.

அதே சமயம் தன்னை தலைமை ஏற்று இருக்கும் தமிழர் இன மக்களின் லட்சிய ஈழ நாடு கோரிக்கைக்காக இறுதி வரை ஒட்டுமொத்த வல்லாதிக்க நாடுகளை சமரசமில்லாமல் எதிர்த்தார்...

ஏன் இஸ்லாம் மார்கத்தை எதிர்கிறார்கள் இலுமினாட்டிகள்..?


சிரியா நாட்டை அழிப்பது அமெரிக்கா தான்...


அமெரிக்காவின் ஆதிக்க வெறியை காட்டுகிறது, குழந்தைகள் எனும் பாராமல் சாகயடிக்கிறானுங்க...

பூனை களும் சகுணம் உண்மைகளும்...


மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாகச் சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் குதிரையைப் பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குதிரையில் மெதுவாகச் செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகச் செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களைக் காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது...

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்(82) மூச்சுத்திணறலால் காலமானார்...


காஞ்சி மடத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

இந்தியாவிற்காக பாடுபட்ட கவர்ச்சி நடிகை ஸ்ரீதேவிக்கு.. இந்திய தேசிய கொடி மரியாதை.. இவ்வளவு தான் இந்திய மானம்...


ONGCன் அட்டூழியம்...


கசிந்த எண்ணெய் யை  மணல் போட்டு மூடுவது (அ) தீ வைத்து எரிப்பது.

இதுதான் Ongc தொழில்நுட்பம்.

இதை தான் கதிராமங்கலத்திலும், எருக்காட்டூரிலும் செய்தது.

இன்று எருக்காட்டூரில் வயிலில் பாய்ந்த கச்சா எண்ணெய்யை அகற்ற அந்த வயலையே தீ வைத்து எரித்தது ஓஎன்ஜிசி நிர்வாகம்.

நாளை ஊரில் எண்ணெய் கசிந்தால் ஊரை கொளுத்தி தான் சுத்தம் செய்வீரோ?

ஓஎன்ஜிசி மூடர் கூடமே ஓடிபோ.. காவிரி மண்ணில் கால் வைத்தால்.. சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்...

நாடு சுடுகாடக மாற மகுடி ஊதிய பாஜக மோடி...


1.இந்திய வர்த்தகத்திற்கு எப்போதுமே கதவை திறந்தே வைத்து இருக்கும்.

2.ஒரே நாளில் தொழிற்சாலை துவங்க      அனுமதி கொடுத்து விடுவோம்.

3.கார்ப்பரேட் துறையில் இந்தியாவில் தான் வரியும் குறைவு.

4.உங்களுடைய உயர்மட்ட குழு ஒப்புதலுடன் ஏதாவது ஒரு முறை வந்து நிறுவனத்தை பார்வையிடுவோம்.

ஆக மொத்தம் நமது மாண்பு மிகு பிரதமர் சர்வதேசிய முதலாளிகளின் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் என்று  28.2.18 தின தந்தி யில்  மோடி மாகுடி ஊதியதை வைத்து தெளிவு படுத்துகிறது...

வற்றிப்போன கடல்...


1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள்.  அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்?

உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ?

தொடர்ந்து வாசியுங்கள்...

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர்.  (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு ) 1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.

சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர்.  ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர்.  நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.

1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது.  மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.

ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன.  அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.

1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.

ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.

பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்...

தவறான செய்தி பதிவிட்ட பாஜக எச்ச. ராஜா சர்மாவிற்கு.. திமுக பிரசன்னா டிவிட்டரில் பதிலடி...


டெல்லியில் நடந்த புகைப்படத்தை வெளியிட்டு சென்னை ஐஐடியில் நடந்ததாக ஹெச் ராஜா பதிவிட்டுள்ளார்.

இது சுட்டிக்காட்டப்பட்டும் எச் ராஜா இதை நீக்காமல் இருப்பது குறிப்பிடதக்கது...

ஆர்டிக் கடற்பகுதியில் மறைந்துள்ள இரகசியம்...


ஆர்டிக் பெருங்கடல் பகுதி பனிபாறைகளால் சூழப்பட்டது. பருவ காலங்களுக்கு தகுந்த படி அதிகமாவதோ அல்லது குறைவதோ நிகழும். ஆயின் கடந்த காலங்களின் அதாவது 35 வருடங்களை கணக்கில் எடுத்து கொண்டால் அவற்றின் பரப்பளவானது 14 சதவீதம் குறைந்து விட்டதாக ஒரு (டேட்டா ) குறிப்பேடு தெரிவிக்கிறது.

ஆர்டிக் பகுதியில் தொடர்ந்த கண்காணிப்புகளும், ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.  மேலா பார்வையில் இவை மீன்வள ஆய்வாகவே தெரியப்படுத்தப் படுகின்றன.

சொல்லப்போனால்  கடற்படுகையின் வளங்களை பற்றின ஆய்வாகவே அவை கருதப்படுகின்றன.

இந்த வருடம் கனடா புதிதாக இரண்டு பெரிய ஆய்வு கப்பல்களை (Vessels) ஆர்டிக் கடற்படுகைகளை ஆய்வு செய்வதற்காக அமர்த்தி இருக்கிறது.  இம்மாதிரியான நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பு ரீதியாகவும், வணிக ரீதியாகவுமே உற்று நோக்கப் படுகின்றன. மேற்படி ஆர்டிக் கடற்படுகை பிரதேசங்களில் மறைந்து இருக்கக்கூடிய பெருமளவு எண்ணெய் வளங்களும், வாயுக்களையும் கைக்கொள்வது எப்படி என்பதான பிரதேச போட்டி இது என்று சொல்லலாம்.

2007 ல் ரஷ்யர்கள் குட்டி நீர்மூழ்கிகளை எடுத்துக்கொண்டு ஆர்டிக் பகுதிக்கு  போய் வடகோளம் எமது.. என்பதாக அவர்கள் நாட்டு கொடியியை அங்கு நட்டு வைத்ததார்கள்.

அப்போதிருந்தே ஆர்டிக் கடற்படுகை பிரதேசத்தில் “லொமோனோஸோவ் ரிட்ஜ்”(Lomonosov Ridge) என்ற பகுதி முக்கியமான அவதானிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. (படத்தில் இப்பகுதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது )  இப்பகுதி முழுக்க தம் சொந்தப்பகுதி என சொந்தம் கொண்டாடியது ரஷ்யா.  ஆனால் அப்படி கருதமுடியாது என்று கீரின்லாந்தை தன் ஆளுமையில் வைத்திருக்கும் டென்மார்க் குரல் எழுப்பியது.  இத்தோடு கனடாவும் சேர்ந்து கொண்டது. தத்தம் நாட்டு புவியியல் பரப்பளவின் எல்லைகளின் படி ஒரே நாடு அப்பகுதியை சொந்தம் கொண்டாட முடியாது என்ற கோரிக்கையும் முன் வைக்கப் பட்டது. அது பற்றிய பஞ்சாயத்து ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் இப்பகுதி பிஸியான பகுதியாக மாறிப்போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக தெரிந்தாலும் அதன் பின்னனியில் ஆக்கிரமிப்புகளினால் ஏற்படப்போகும் நிலவியல் மாற்றங்களும் சுற்று சூழல் பாதிப்புகளும் தாம் எமக்கு பூதாகரமாக தெரிகின்றன...

சிரியா சில தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...


R2A2 சூத்திரம்...


நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இந்த சூத்திரத்தை மனதில் கொண்டால் போதும்..

உங்கள் இலக்குகளை அடைவதற்குப் பயன்படும் விதமாக நீங்கள் பார்க்கும் , கேக்கும், படிக்கும் அனுபவங்களிலிருந்து கோட்பாடுகளை , உத்திகளை , முறைகளை கண்டுணர்ந்து தொடர்பு கொண்டு , உள்வாங்கி பிரயோகியுங்கள்..

இதுவே R2A2 சூத்திரம் எனப்படுகிறது..

R2 எனப்படுவது கண்டுணர்ந்து தொடர்பு படுத்திப் பார்ப்பது. (Recognize and Relate ).

A2 எனப்படுவது உள்வாங்கி பிரயோகிப்பதை குறிக்கிறது. (Assimilate and Apply ).

உங்கள் பயனுள்ள இலக்குகளை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு , உங்கள் எண்ணங்களை வழிப்படுத்தி , உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , உங்கள் தலைவிதியை தீர்மானியுங்கள்..

இலக்குகளை மற்றும் அதனை அடையும் வழிகளை முதலில் கண்டுணருங்கள் அவற்றை உங்கள் கனவுடன் தொடர்புபடுத்தி பாருங்கள்..

அவற்றை முழுதாக உள்வாங்குங்கள் அதனை பிரயோகித்து இலக்கினை அடையுங்கள்...

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானை பற்றி ஒரே பொய்யை கூறிக்கொண்டு இருக்கிறார்கள்..


இவர்கள் தான் ஈராக்...

லிபியா போன்ற நாடுகளை ஒரே பொய்யை வெவ்வேறு கோணங்களில் கூறி அழித்தார்கள்..

இப்போது சிரியாவையும் அதே பொய்யை கூறி அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்..

ஏமனையும் இதே பொய்யை வைத்து அழிக்க ஆரம்பிப்பார்கள்...

விலங்குகள் அறியும் பூகம்பம்--நம்ப மறுக்கும் விஞ்ஞானம்...


பூகம்பம் வந்து உலுக்கிய பிறகு ‘அது எவ்வளவு தீவிரமானது’ என்பதை ரிக்டர் அளவில் அளக்கலாம். மனித முயற்சி இதை மட்டுமே சாத்தியமாக்கி இருக்கிறது. ‘இந்த நேரத்தில், இந்த இடத்தில், இப்படி ஒரு பூகம்பம் வரலாம்’ என கணித்துச் சொல்லும் தொழில்நுட்பம் இன்னமும் கை கூடவில்லை.

ஆனால், ‘பூகம்பம் வருவதை விலங்குகளும்,பறவைகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்கின்றன’ என்று உலகம் முழுவது நம்பிக்கை இருக்கிறது.

உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா என்றால், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. விஞ்ஞானம் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

ஆனால், சீனா,ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நில நடுக்கம் உள்ள அதிகம் நிகழக் கூடிய நாடுகள், ‘விலங்குகளுக்கு இந்த ஆற்றல் உண்டு’ என்று வாதிடுகின்றன. இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்திருந்தால், மனிதனும் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிய முடியும் என்கிறார்கள்.

விலங்குகள் உண்பது, உறங்குவது எல்லாமே பொதுவாக தரையில்தான். தரை மீதுதான் பெரும்பாலான நேரங்களில் காதை வைத்துத் தூங்கும். தரைக்கும் விலங்குகளுக்கும் தொடர்பு உண்டு. அதனாலேயே தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக் கூட அவற்றால் உணர்ந்துதான் கொள்ள முடிகிறது.

ரயில் தண்டவாளத்தில் காதை வைத்தால் தூரத்தில் வரும் ரயிலின் சத்தம் கேட்பதைப் போல, தரையின் மீதே காதை வைத்திருப்பதால் தூரத்தில் ஏற்படும் நில நடுக்கத்தின் சத்தத்தைக் கேட்க முடிகிறது என்கிறார்கள். விலங்குகளைப் போலவே கற்கால மனிதனும் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்டான். அதற்கேற்ப இடத்தை மாற்றினான்.

நவீன கால மனிதர்கள் வாகனங்களுக்குப் பழகியதால், அதிர்வுகளைத் தாங்கித் தாங்கி உடல் பழக்கப்பட்டுவிட்டது. இதனால் பூகம்பத்தின் மெல்லிய அதிர்வுகளை உணர முடிவதில்லை. இயற்கையை விட்டு செயற்கைக்கு மாறியதால்தான், இதெல்லாம் தெரிவதில்லை என்கின்றனர் ஜப்பானியர்கள்.

நில நடுக்கத்திற்கு முன்பு நிலத்தின் மீது கந்தக வாசனை வீசும் என்றும், இதனை விலங்குகள் முன் கூட்டியே புரிந்து கொள்ளும் என்றும், பூகம்பத்திற்கு முன்பு கடல் நீர் கலங்கி, இயற்கையான கடல் நிறத்தில் இருந்து வேறுபட்டுத் தெரியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. பறவைகள் இதை உணர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிடுகிறது.

இதையெல்லாம் விஞ்ஞானம் இன்னும் உறுதிப்படுத்தாததால் உண்மை எதுவென்று நம்ப முடியாத நிலையாக உள்ளது என்பதே உண்மை...

நன்றி - WikiLeaks...


அமெரிக்கா-இசுரேல்-ISIS இவை அனைத்திற்கும் தொடர்பு இல்லாத மாதிரியே இங்கு ஊடகங்களால் காண்பிக்கப்படும்...

இவை அனைத்திற்கும் தொடர்பு இருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் ஏகப்பட்டது உள்ளன...

3ஆம் உலக யுத்தம் நாஸ்ட்ரடாமஸ் புகைப்பட குறிப்புக்கள்...


இந்த படத்தை பாருங்கள். ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது.

இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக… நாஸ்ட்ரடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது.

இது தொடர்பான அவரது குறிப்பிலும்… ஒரு புதிய நகரத்தை… விண்னிலிருந்து வரும் இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்.. எனும் பொருள் பட எழுதியுள்ளாராம்.

அந்த புதிய நகரம் எனும் வார்த்தை நியுஜோர்க் கை குறிப்பதாக கருதப்படுகிறது. இயந்திர பறவைகள் என்பது… விமானம். (நாஸ்ட்ரடாமஸ் காலம் 1600).

ஆனால்… இன்னொரு குறிப்பில்..  விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கல் புதிய நகரை நிலை குழைய செய்யும்… எனும் பொருள் பட கூறியுள்ளார்.

அதுவும் இதே சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம். அல்லது… 3ம் உலக யுத்தத்தின் போது நடக்க இருக்கும் அணுகுண்டு தாக்குதல்களை குறிப்பதாகவும் இருக்கலாம்.

அடுத்த படத்தை பாருங்கள்… பாம்பு இரத்தம் அல்லது விசம் கக்குவது போல்… வரையப்பட்டுள்ளது..

இது 3ம் உலக யுத்தத்தை குறிக்கும் படம் என கருதப்படுகிறது. இங்கு இந்த 3 இரத்த துளிகளும், 3 தனிப்பட்ட மனிதர்களை குறிக்கும் என… ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..

முதல் துளி… ஜூலி கிறிஸ்.. இரண்டாம் துளி… ஹிட்லர்..  மூன்றாம் துளியாக… பெரும்பாலும்… பில்லேடன் , கடாஃபி, முல்லா உமர், முகமட் அஹ்மதிநெஜாட்… இருக்கலாம் என்று ஒரு நீண்ட பட்டியலை ஆய்வாளர்கள் கூறினார்கள் / கூறிவருகிறார்கள்..

ஆனால், இதில் பில்லேடன் , கடாஃபி ஏற்கனவே இறந்து விட்டார்கள்… முல்லா உமர் தலைமறைவாகவுள்ளார்.

அதை அடுத்து அஹ்மதிநெஜாட் மற்றும் வடகொரிய அதிபர்கள் இந்த 3 ஆம் துளிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறார்கள்.

( நாஸ்ட்ரடாமஸின் குறிப்புகளில் ஒரே ஒரு குறிப்பில் மட்டும் தான் தெளிவாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது லூஜி பாஸ்டர் உடையது )..

இந்த படத்தில்… 3 துளிகள் காட்டப்பட்டு உள்ள போதும். அவரின் குறிப்புகளின் படி… 7 உலக யுத்தம் நடை பெறும் என்பது திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளதாம்.

அதனால்… இப்படத்துக்கு வேற அரத்தமும் இருக்கலாம் என கருதப்படுகிறது..

எனது கருத்தின் படி… முதல் 3 ம் மட்டும் தான் தனிப்பட்ட மனிதர்களின் முக்கிய பங்களிப்பால் ஏற்பட்ட, ஏற்படபோகும்… யுத்தம் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

இன்னொரு முக்கிய மான விடையம்…
3ம் உலக யுத்தம் அடுத்தடுத்த நாடுகளின் மூலமே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது…

இந்தியா - சீனா… வடகொரியா - தென் கொரியா… இலங்கை – ஈழம்...

இலங்கை மற்றும் ஈழத்தை நான் குறிப்பிட்டிருப்பதற்கு வலுவான ஒரு காரணம் இருக்கிறது..

அது என்ன என்பதை பின்னர் ஆராயலாம். தமிழரை குறிப்பிட்டாரா அல்லது பிரித்தானியர்களை குறிப்பிட்டாரா என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று..

காலம் ஒழுங்காக கூறமுடியவில்லை… 2012 தொடக்கம் 2023 வரைக்கும் இடையில் நடைபெறும் என கருதப்படுகிறது..

மூன்றால் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளின் நிலை என்னவாகும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்…

முக்கியமாக இந்தியா என்னவாகும் என்பதை பார்க்கலாம்...

உலக அரசியல் புரிதல் உள்ளவர்களுக்கு...


தமிழ்நாடு நாட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஒன்றாகும்...


கரகம், காவடியைப் போல வழிபாட்டுக் கலையாக அல்லாமல் பொதுமக்கள் கண்டுகளிக்கும் பொருட்டு ஏற்பட்ட ஆட்டமாகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் விளங்குகிறது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில், முன்பு துர்க்கை ஆடிய மரக்காலாடல் ஒன்றாகும்.

மாயவ ளாடிய மரக்கா லாடலும் (கடலாடு காதை, அடி 59) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

வஞ்சத்தால், பாம்பு, தேள் முதலிய விடப் பூச்சிகளாக உருவெடுத்துத் தனக்கு இன்னலை விளைத்துத் தன்னைக் கொல்லக் கருதிய அணர்களின் செயலை உணர்ந்து துர்க்கை தன் கால்களில் கட்டையைக் கட்டிக் கொண்டு, அவர்கள் மிதிபட்டு மடியுமாறு ஆடிய ஆட்டமே மரக்கால் ஆடல் ஆகும். மரக்கால் கொண்டு ஆடுதலின் மரக்காலாடல் ஆயிற்று. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடும் மரக்காலாடல் இன்று பொய்க்கால் குதிரை ஆட்டமாக மாறிவந்தது.

இவ்வாறு காலில் கட்டை கட்டி ஆடுதல் தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஆந்திரம், மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றது.

பொய்க்கால் குதிரை...

கால்களில் கட்டையைக் கட்டிக் கொண்டு, உண்மையான கால்களில் நின்று ஆடாமல், பொய்யான கால்களில் நின்று கொண்டு, குதிரை போன்ற உருவத்தைச் சுமந்து கொண்டு ஆடுதல் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். மேலும் இந்த ஆட்டம் புரவியாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மதுரைப் பகுதியில் காலில் கட்டையைக் கட்டிக் கொள்ளாமல் வெறுங்காலில் சலங்கை கட்டிக் கொண்டு பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ஆடும் மரபு உள்ளது. இதனால் இந்த ஆட்டம் “பொய்க் குதிரையாட்டம்” என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இப்பொய்க்கால் குதிரையாட்டம் முற்றிலும் பொழுதுபோக்கின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாகவே வழங்கி வந்துள்ளது. தமிழ்நாட்டில் பன்னெடுங் காலமாக மரக்காலாடல் வழக்கில் இருந்து வருகிறது. ஆனால் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ஓடியதற்கான சான்றுகள் தொல்காப்பியத்தில் உள்ளன. தொல்காப்பியத்தில் அகத்திணை இயலில் பெருந்திணைக்கு இலக்கணம் கூறும் நூற்பாவில் தலைமகன் தான் விரும்பிய பெண்ணை மணக்கப் பெண்ணின் பெற்றோர் தடை விதித்த போது, பனை ஓலையில் குதிரை போல் உருவம் செய்து அதனை உடலில் தாங்கிக் கொண்டு ஊர்த் தெருக்களில் வந்து தான் விரும்பும் பெண்ணைத் தனக்குக் கட்டி வைக்கக் கோரிய செயல் “மடலேறுதல்” என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. இது தொல்காப்பியத்தில் “ஏறிய மடல் திறம்” என்று பேசப்படுகிறது. ஆனால் காலில் கட்டை கட்டிப் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து ஆடலாக ஆடப்பட்டதற்கான சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இப்பொய்க்கால் குதிரையாட்டம் ஆடப்பட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

1¼ அடி உயரமுள்ள கட்டைகளைக் கால்களில் கட்டிக் கொண்டு, செய்தித்தாள், சாக்கு, காடாத் துணி, புளியங் கொட்டைப் பசை, பிரம்பு, இரும்புத் தகடுகள் ஆகியவற்றாலான பொய்க் குதிரைக் கூட்டை நாடாக் கயிற்றால் இணைத்து ஆடுபவரின் இடுப்பு உயரத்தில் தொங்கும்படி தோளில் தொங்க விட்டுக் கொண்டு கோந்தளம் அல்லது நையாண்டி மேள இசைக்கேற்ப ஆடுவர்.

தற்காலத்தில் தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றில் வாழ்ந்த இராமகிருட்டினன் முதன் முதலில் பொய்க்கால் குதிரையாட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தார்.

அடவுகள்...

பொய்க்கால் குதிரையாட்டத்தில் அரசனும் அரசியும் உலா வருவது போன்ற நிலையில், ஆடுகளத்தைச் சுற்றி அரசனும் அரசியும் கம்பீரமாக மூன்று முறை நடந்து வருவர். ஆண், பெண் இருவரும் தனியாகவும் சேர்ந்தும் அடவுகளை ஆடுவர். காலில் கட்டையைக் கட்டிக் கொண்டு 30 கிலோவிற்கும் மேலுள்ள எடையைத் தோளில் சுமந்து கொண்டு நிற்கும் போது ஒரே நிலையாக நிற்க முடியாது. அங்கும், இங்கும் தாளத்திற்கு ஏற்ப அசைந்து கொண்டே ஆடுவர். இதனால் நிற்கும் பொழுதும் ஏதேனும் தூண் அல்லது ஆளைப்பிடித்துத் தான் நிற்க முடியும். பொய்க்கால் குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல், முன் புறம் செல்லுதல், பின் புறம் செல்லுதல், பக்கவாட்டுக்களில் செல்லுதல், கீழே உட்கார்ந்து எழுதல் அனைத்தும் கீழே விழாமல் சமன் செய்து ஆடுவர். மேலும் குதிரையை அடக்குவது போலவும் செய்வர். இருவரும் நேருக்கு நேர் அடவுகள் செய்தும், வட்டமாகவும் அடவுகளைச் செய்வர். பெண் ஆட்டக் கலைஞர் பல நளினமான கால் அடவுகளைச் செய்வர். மேலும் காலில் அடவுகளைச் செய்து கொண்டு, குதிரைக் கடிவாளத்தைப் பிடித்து முன்னும் பின்னும் அசைந்து ஆடுவர்.

இசைக்கருவிகள்...

பொய்க்கால் குதிரையாட்டத்திற்குக் கோந்தளம் எனப்படும் இரட்டை முகத்தோல் கருவி பக்க இசையாகப் பயன்படுகிறது. மேலும் இரு தவில்கள், இரு நாகசுரங்கள், பம்பை, கிடுகிட்டி போன்ற இசைக் கருவிகள் இவ்வாட்டத்திற்குப் பக்க இசையாகப் பயன்படுகின்றன.

தமிழகத்தில் அன்றி இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் இவ்வாட்டம் ஆடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இந்த ஆட்டம் “கீலுகுர்ரலு” என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரிசாவில் “கையுதா” எனவும் இராசசுதான் பகுதியில் “கச்சிகோடி” எனவும் வழங்கப்படுகிறது.

பொய்க்கால் குதிரையாட்டம் தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களிலும், திருமண ஊர்வலங்களிலும், அரசியல் ஊர்வலங்களிலும் இடம் பெற்று ஆடப்பட்டு வருகிறது...

தமிழர்கள் பழங்காலத்திலேயே நுண்ணிய கால அளவுகளை வகுத்துள்ளனர்...


திராவிடத் திருடர்களே தமிழ் பேசத் தெரிந்த தெலுங்கு கன்னட மலையாளிகள் தமிழர்கள் என்றால்...


ஆங்கிலம் பேசத் தெரிந்த தெலுங்கு கன்னட மலையாளிகள் யார் ?

ஆங்கிலம் இந்தி இருமொழி மட்டும் பேசத் தெரிந்த  தெலுங்கு கன்னட மலையாளிகள் யார் ?

தமிழர்களே ஒவ்வொரு திருட்டு திராவிடனிடமும் கேள்வி கேளுங்கள்...

திராவிடன் முகம் கிழிவதை காணுங்கள்...

தமிழா வரலாறை முதலில் தெரிந்துக் கொள்...


நாயக்க மன்னர்கள் தமிழர் நாட்டை வன்கவர்பு செய்தபோது மீனவப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்து அழித்தார்கள் என்று வரலாறு சொல்லுகிறது..

மும்பையிலிருந்து மராத்திய வெறியர்களால் தமிழர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். அவர்தம் குடியிருப்புகளெல்லாம் தரைமட்டமாயின.

பர்மாவில் சயாம் ரயில்பாதை போட்டபோது ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் தமிழர்களைச் சப்பானியப் படைகள் கொன்று குவித்திருந்தன.

கர்நாடகத்தில் 1991ல் காவிரிக் கலவரம் என்ற பேரில் கொலைகள், கற்பழிப்புக்கள், சொத்தழிப்புக்கள் என்று தமிழர் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. அன்றைக்கு ஆறு லட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இடப்பெயர்வு செய்தார்கள்.

தமிழகக் கடற்கரைகளில் 900க்கும் மேலான எம் மீனவர்கள் படு பயங்கரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டிருக்கின்றனர்.

தமிழகக் காடுகளில் வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பேரில் கர்நாடகக் காவல்துறையினரால் கொல்லப்பட்டோரும், சிதைக்கப்பட்டோரும், கற்பிழந்து தவித்தோரும் எண்ணிக்கையிலடங்கார்.

மலேசியாவில், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் உரிமைகளற்றக் குடிகளாக குறுக்கப்படுவது காலாகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள்.

இன்றைக்கு தமிழர்கள் நாடிழந்து ஏதிலிகளாய் சொந்த மண்ணிலும் உலகின் எல்லா நாடுகளிலும் உழன்று வருகின்றனர்.

அரணாய் நின்று காக்க வேண்டியத் தாய்த் தமிழகம் இந்தியக் கொத்தடிமைக் கூடாரத்தின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறது.

இல்லாத திராவிடம் என்ற கொடுஞ்சிறையில் அது நலிவுற்றுக் கிடக்கிறது.

இந்த நிலை மாறினாலேயே உலகத் தமிழரின் வாழ்வில் விடியல் பிறக்கும்.

ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது..

கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டும் வம்படி வீரர்கள்.

ஈராயிரம் ஆண்டுகாலப் பகை இது!

இதை நாம் உணராமல் இலங்கையையும் சிங்களனையும் தமிழ்நாட்டு மேடைகளில் கொத்திக் காய வைப்பது என்பது நோகாமல், நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தாமல், துளியேனும் குருதி சிந்தாமல் விடுதலையை விருட்டென்று பறித்துவிடலாம் என்று நாம் காணுகிற கற்பனைக் கனவு..

தமிழர் தேசியம் மலர வேண்டுமென்றால் நாம் அயராது பாடுபட வேண்டும்.

அப்படிப் பாடுபடுவது என்பது மாதமொருமுறை நடத்தும் கருத்தரங்குகளில் கேட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க, கேட்டவர்களே மீண்டும் மீண்டும் கூடுவது அல்ல.

அல்லது உண்ணா நோன்பு போன்ற போராட்டங்கள் வழியில் நம்மை நாமே வருத்திக் கொள்ளவதுமில்லை.

நமது கருத்துக்களை நமது குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உறவினர்கள் என்ற அளவிலே முதலில் பரப்பிட வேண்டும். பின்னர் அதுவே பரந்துபட்டத் தளங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

நமது இளைய தலைமுறைக்கு நமது நண்பர் யார்? எதிரி யார்? என்ற அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல் என்ற வள்ளுவனின் கோட்பாட்டையே மாவோ பின்னாளில், நண்பன் யார்? எதிரி யார்? என்று வகுத்துக் கொண்ட பின் களமிறங்கு என்றான்.

தமிழ்நாட்டில் இது போராடும் காலம்.
விடுதலையை விழிகளில் தாங்கி விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி நடை போட வேண்டிய நேரமிது.

நம்மில் இருக்கும் சிறு சிறு பூசல்களைக் கொளுத்திப் போட்டுவிட்டு தமிழர் தேசியம் காண கரம் கோர்ப்போம்...

தமிழின விரோதி.. பதவி, பணத்தின் அடிமை பாஜக பொன். ராதாகிருஷ்ணன் எனும் பொய். ராதா கிருஷ்ணன்...


சேது சமுத்திர திட்டத்தை தடுக்க ராமர் பெயரை சொல்லி ஒப்பாரி வைச்சவனுங்க தான்...


இப்ப ஹைட்ரோ கார்பனுக்கு மட்டும் தியாகம் பண்ண சொல்லி பாடம் எடுக்குறானுங்க... மானங்கெட்ட பயலுங்க...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் எவ்வளவு தான்டா கொள்ளை அடிச்சிருக்கான்..?


தமிழன் பார்ப்பன் வேறு... ஆரிய பிராமணன் வேறு...


மாரியாத்தா கோவில்ல கூழ் ஊத்தனும்..
முனீசுவரர் கோவில்ல  காது குத்தனும்..
ஐயனார் கோவில்ல மொட்டை அடிக்கனும்..
மதுரை பாண்டி கோவில்ல கெடா வேட்டனும்..
கருப்பசாமி கோயில்ல சேவல் அறுக்கனும்..
சுடலை மாடனுக்கு பன்றி  படையல் வைக்கனும்...

இதுபோன்ற நமது பாரம்பரிய
தமிழன் வழிபாட்டுக்கு,  சும்மா ஒரு பேச்சுக்கு இந்த மோடி பயலையோ, இல்லை மோடிக்கு காவடித் தூக்கும் பிராமணப் பயல்களையோ  கூப்பிட்டு பாருங்களேன் வரமாட்டான்., தெறிச்சு ஒடுவான். 

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழன் வேறு தான், வட இந்திய  வரவான ஆரிய பிராமண இனம் வேறுதான். அதேபோல  தமிழனின் தனித்த வழிபாடும் என்றுமே வேறுதான்.

இன்றைக்கு காட்டை அழித்து  சிவனை வழிபடுவதை எதிர்க்கும் நம்மை. தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டும் இதே எச்ச.ராசா  பிராமண கும்பல் தான்..

அன்று சிவனடியார் ஆறுமுக நயினாரை  சிதம்பரம் கோவிலினுள் தேவாரம் பாட விடாமல், அடித்து விரட்டியது..

மேலும் இன்று வரையிலும், தமிழக கோவில்களில் தமிழ்மொழியைத் தீட்டு மொழி என்றுக்கூறி அனுமதிக்க மறுக்கிறது.

செத்த மொழியான சமசுகிருதத்தை  போற்றுகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மறுக்கிறது.

இவ்வாறு தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழையும், தமிழர்களையும் தீண்டத்தகாதவராக கருதி இன்று வரையிலும் நம்மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆரிய பிராமண இனத்தின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகிவிடாதீர்கள் தமிழர்களே..

ஏமாந்திராதீங்க தமிழர்களே...

தேரையர் சித்தர் அறிவுரைகள்...


நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்..

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம்.

18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார்...

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும் போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விரும்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும் போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும் போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் ).

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்).

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்..

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்
அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்...

பலாப்பழம் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்...


முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பலாப்பழம், தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்தே பழமாகவும், பல வகைப் பண்டங்களாகவும் செய்து பயன் படுத்தப்பட்டு வருகிறது.

பல வழிகளில் மருத்துவக் குணங்களும் இப்பழத்திற்கு உண்டு. குற்றாலக் குறவஞ்சி மற்றும் தமிழ் இலக்கியங்களிலும் பலா பற்றிய குறிப்புகள் ஏராளம் உள்ளன.

தாயகம்: பலாவின் தாயகம் இந்தியா ஆகும். இலங்கை, இந்தியா, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பரப்பளவில் பலா பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா, அசாம், பீகார், மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலா கணிசமான பரப்பளவில் பயிராகிறது.

பலாவின் தாவரவியல் பெயர்: "ஆர்ட் டோ கார்பஸ்ஹைட்டிரோஃபில்லஸ்" (Artocarpus heterophyllus). அர்ட்டிக்-கேசிய தாவர குடும்பத்தைச் சார்ந்தது.

தமிழில் வேறு பெயர்கள்: பலாவிற்கு தமிழில், ஏகாரவல்லி, சக்கை, பலவு, பலாசம், வருக்கை, பனசம் முதலிய வேறு பெயர்களும் உள்ளன.

பல்மொழிப் பெயர்கள்:

ஆங்கிலத்தில் "ஜாக் ஃபுரூட்" (Jack fruit) என்று பெயர். இந்தியில் பனஸ், மலையாளத்தில் சக்கே, தெலுங்கில் பனஸபண்டு, கன்னடத்தில் பேரளே, குஜராத்தியில் பனஸ’, காஷ்மீரியில் பனஸ்சு என்று பெயர்.

சத்துப் பொருட்கள்:

நாம் சாப்பிடும் நூறு கிராம் பலாச்சுளையில் உள்ள சத்துப் பொருட்களின் அளவு கீழ்கண்டவாறு உள்ளன.

புரதம் 2.1 கிராம், கொழுப்பு 0.2 கிராம், மாவுப்பொருள் 19.8 கிராம், நார்ப்பொருள் 1.4 கிராம், சுண்ணாம்பு சத்து 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 41 மில்லிகிராம், இரும்புச் சத்து 0.7 மில்லிகிராம், தயாமின் 0.04 மி.கிராம், ரைபோஃபிளோவின் 0.15 மி.கிராம், நியாசின் 0.4 மி.கிராம் வைட்டமின் "சி" 7.1மி. கிராம், மெக்னீசியம் 27 மில்லிகிராம், பொட்டாசியம் 19.1 மில்லிகிராம், சோடியம் 41.0 மில்லிகிராம், தாமிரம் 0.23 மில்லிகிராம், குளோரின் 9.1 மில்லிகிராம், கந்தகம் 69.2 மில்லிகிராம், கரோட்டின் 306 மைக்ரோகிராம்.

இத்தனை சத்துப் பொருட்கள் உள்ள பலாச்சுளையை, "சத்துப்பேழை" என்று சிறப்பாகச் சொல்லலாம்.

எப்படிச் சாப்பிடலாம்:

கொட்டையை நீக்கிவிட்டு, பலாச்சுளைகளை அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம். பலாக்கூழ், பலாப்பழ கீர், பலாப்பழ ஜாம், பலாப்பழ ஜெல்லி முதலியன செய்தும் சாப்பிடலாம்.

பலாப்பழத்தை பயன்படுத்தி பலவகை இனிப்புப் பண்டங்கள் தயார் செய்து உண்ணலாம்.

முக்கிய குறிப்பு:

பலாப் பழச்சுளையை அப்படியே தின்னும் போது, முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியதைத் தெரிந்து கொள்வோம்.

பலாப் பழத்திலுள்ள சில கேடு பயக்கும் தன்மையை நீக்கி, பழத்தின் முழு சத்துப் பொருட்களும் கிடைக்க, பலாச்சுளையுடன் சிறிது வெல்லம், கருப்பட்டி, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து சாப்பிடுவது மிக நல்லது. இது எளிய வழிமுறைதான்.

மருத்துவப் பயன்கள்:

பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

சருமத்தை பளபளப்பாக வைக்கும் சிறப்புக் குணம் பலாப்பழத்திற்கு உண்டு.

பல் உறுதி பெற, ஈறு கெட்டியாக இருக்க, பலாப்பழம் žராகச் சாப்பிட வேண்டும்.

உடம்பில் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்தில் இருக்கிறது.

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை பலாப்பழத்திற்கு உள்ளது என ஜெர்மனி, அமெரிக்காவில் மேற்கொண்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து இதுபற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது.

பலாப்பழ பானகம் உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையது.

உடலில் உள்ள தசைகளை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு.

தோல் வறட்சி அடையாது பாதுகாக்கும் சத்துப் பொருள் பலாப்பழத்தில் உரிய அளவு இருக்கிறது.

பலாப்பழ கீர் இரவில் அருந்தினால் நன்கு தூக்கம் வரும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோர்க்கு நல்ல எளிய மருந்து.

பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி, களைப்பு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.

பலாப்பழத்துடன் சிறிது கசகசாவை மென்று தின்றால், குடல் அழற்சி நீங்கும்.

பலாப்பழத்துடன், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் அத்தனையும் வெளியேறி, நலன் பயக்கும்.

எச்சரிக்கை:

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது.

வெறும் பலாப்பழத்தை அதிகம் தின்றால் அஜிரணம் ஏற்படும்.

ஆஸ்துமா நோயை அதிகரிக்கும்..

சர்க்கரை நோய் உங்களை விட்டு விலக முயற்சி செய்து பாருங்கள்...


ஒருத்தனை கொல்லணும் நினைச்சாலே அங்கு மனிதம் இல்லாமல் போய் விடுகிறது..


இதில் பிஞ்சு குழந்தைகள் மற்றும் பெண்களை கொல்லும் போது மனிதம் என்ற வார்த்தையை அங்கு இல்லை, இதில் எங்கு இருந்து வருகிறது நீங்கள் கூறும் மதம்..?

நீங்கள் அவர்களுக்காக கண்ணீர் விட வேண்டாம், ஆனால் அவர்கள் இறப்பில் கூட மதத்தை திணிக்காதீர்கள்..

ஒருவன் இறப்பை நீங்கள் மதமாக பார்ப்பீர்கள் என்றால், நாளை உங்கள் இறப்பை உங்களை போன்ற ஒருவன் மதமாக பார்ப்பான்...

கர்மவினையும் இறைபயனும்...


வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் எல்லாம் முற்பிறவியில் நாம் செய்த வினையின் விளைவே என்று தொன்று தொட்டு ஒரு நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருந்து வருகிறது.

மறு பிறவியை நம்ப மறுப்பவர்களும் உண்டு. மறுபிறவி குறித்த சில உண்மைச் சம்பவங்கள் மேலை நாட்டில் கூட நடந்ததுண்டு.

இவையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.

உலகில் எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. முன் வினைப் பயனால் விளைந்த கஷ்டங்களுக்குத் தீர்வு உண்டா? உண்டு என்று பல மகான்கள் கூறியிருக்கிறார்கள்.

ஸ்ரீ அன்னையும் முன் வினை பற்றி நிறைய பேசியிருக்கிறார். நாம் எல்லாருமே கர்மச் சங்கிலியில் கட்டுண்டவர்கள் என்று அவர் கூறுகிறார். ஆனால் நமது முயற்சியால் அதை மாற்ற முடியும் என்றும் சொல்லு கிறார். அவர் சொல்வதைப் பார்ப்போம்..

இந்தியாவில் இதைக் கர்மா என்று சொல்லுகிறார்கள். நம்மை நெறிப்பது போல் அழுத்தும் இந்த இன்னல் ஒழித்துத் தள்ளப்பட வேண்டிய விஷயம்.

ஒரே ஒரு தரம் வேண்டுகோள் விடுத்தால் போதும், ஒரே ஒரு தரம் தெய்வ அருளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் போதும், பிறகு ஒரே வீச்சில் அனைத்தையும் துடைத்து எறிந்து விடலாம். அதற்கு ஒரு பெரும் துணிவும் அளவற்ற பொறுமையும் தேவைப்படுகிறது.

ஆமாம், தெய்வ அருள், கர்மாவை முற்றிலும் எதிர்த்துச் செயல் புரியும். அது வெய்யிலில் வைத்த வெண்ணெய் உருகுவது போல் கர்மாவை அழித்து விடுகிறது.

கரவில்லாத, நேர்மையான ஆர்வம் இருக்குமாயின், தீவிரமான பிரார்த்தனை இருக்குமாயின் அனைத்தையும் மாற்றவல்ல ஓர் அரும்பொருளை உனக்குள் கொண்டு வரமுடியும். உண்மையாகவே அது அனைத்தையும் மாற்றி விடும். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், நீ புரிந்து கொள்வதற்கு அது உதவும்..

ஒரு கூரை மேலிருந்து ஒரு கல் அல்லது ஓர் ஓடு விழுகிறது. யாரோ ஒருவன் இடையில் வருகிறான். அவன் உடனே கையை நீட்டி அது விழுவதைத் தடுக்கிறான். ஆக, அவன் அந்தக் கல்லின் போக்கை மாற்றிவிட்டான். ஒரு நியதி கல்லை விழச் செய்தது. மற்றொரு நியதி அந்தக் கல் ஒருவனின் தலையில் விழாமல் கையில் விழச் செய்தது. கல் விழுந்தது, ஓர் உணர்வற்ற நிகழ்வு. கை தடுத்ததோ ஓர் உணர்வுள்ள செயல். இப்படித்தான் பிரபஞ்ச நியதியில் தெய்வ அருள் இடை புகுந்து தடுத்தாட் கொள்ளுகிறது.

ஒருவன் தான் செய்த பிழையையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருப் பானானால் அதை நேர் செய்யவே முடியாது.

ஏனென்றால் அவன் அதற்கு மீண்டும் மீண்டும் புத்துயிரளித்துக் கொண்டே இருக்கிறான்.

ஒருவன் ஒரு தவறு செய்தால், பெரியதாயினும் சிறியதாயினும் அதனுடைய பின் விளைவுகள் அவன் வாழ்க்கையைப் பாதிக்கும். கர்மா என்பது இதுதான். இது களையப்பட வேண்டியது. தெய்வீக அருளை நோக்கி அவனுடைய மனம் திரும்பு மானால் அந்த அருள் எல்லாப் பின் விளைவு களையும், கர்ம பந்தங்களையும் அறுத்தெறிந்து விடும். ஆனால் அவன் திரும்பவும் அந்தத் தவறைச் செய்யக்கூடாது. இனி ஸ்ரீ அரவிந்தர் சொல்வதைப் பார்ப்போம்..

வினா: விதி என்பதற்கு என்ன விளக்கம் அளிப்பீர்கள்?

இந்தியக் கருத்தின்படி விதி என்பது கர்மா. அதாவது, வினைப் பயன். நமது செயல்களின் மூலம் நாமே விதியை உருவாக்குகிறோம். நம்மால் உருவாக்கப் பட்ட விதி நம்மையே கட்டிப் போடுகிறது. நாம் விதைத்த வினையின் பயனை இந்தப் பிறவியிலோ அல்லது மறு பிறவியிலோ அனுபவித்தே ஆக வேண்டும்.

வினா: நமது கடந்த காலச் செயல்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இப்போது நாம் நமது வருங்கால விதியை நிர்ணயிக்கச் சங்கல்பம் செய்யலாமல்லவா?

நிச்சயமாக, நாம் தான் நமது வருங்கால விதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த கால வினைப் பயனை அனுபவித் தவாறே எதிர்கால விதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமது சங்கல்பத்திற்கும் செயலுக்கும் அது தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கிறது.

வினா: நமது கடந்த காலக் கர்மா பலனுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டுமா?

நமது நிகழ்காலச் சங்கல்பத்தினாலும் செயலாலும் கடந்த காலக் கர்மாவை மாற்ற முடியாது என்பதில்லை. எனினும் சில கர்மாக்கள் உண்டு. உத்கட கர்மா எனப்படும் கொடிய வினைப் பயனை மாற்றுவது கடினம். இத்தகைய விதியை - ஆன்மீக உயர்நிலையை அடைந்தவர்களால் மாற்ற முடியும். ஆன்மீக நிலையை அடையும்போது பிரபஞ்சமளாவிய தெய்வ சங்கல்பத்துடன் ஒன்றிவிடும் திறன் வருகிறது. தான் படைத்தவற்றை மாற்றும் ஆற்றல், அந்தச் சங்கல்பத்திற்கு உண்டு. கர்மத்தின் குறுகிய, இறுகிய தன்மையைத் தளர்த்தி, விரிவான சுதந்திரத்தை அதனால் ஏற்படுத்த முடியும்.

எனவே கர்மாவோ சோதிடமோ மாற்ற முடியாத விஷயங்கள் அல்ல.. ஆக, மனிதன் தன்னுடைய நலனைக் கருதியேனும் பிறருக்குத் தீங்கிழைக்காமலும் கொடுஞ்செயல்கள் செய்யாமலும் இருக்க வேண்டியது அவசியமாகிறது...

இலுமினாட்டி நாடான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை சாதாரண வியாபாரிகள் நாடு என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம்...


உலகை ஏதோ ஒரு நோக்கத்திற்காக நகர்த்தி கொண்டு செல்ல எத்தனிக்கும் வல்லாதிக்க சக்திகள்...

நன்றியுணர்வும்.. எண்ணங்களின் சக்தியும்...


ஒரு செயலை தொடர்ந்து 21 முறைக்கும் மேல் செய்தோம் என்றால் அந்த செயல் நம்முடைய பழக்கவழக்கமாக மாறி விடுகிறது.

நம்முடைய பழக்க வழக்கங்கள் இடம், பொருள் மற்றும் ஏவல் என்று எதையும் பார்க்காமல் அது தானாகவே செயல்பட ஆரம்பித்து விடும்.

நம் ஆழ்மனதில் ஒரு அற்புதமான செயலை நமது பழக்கவழக்கங்களில் (HABIT) ஒன்றாக மாற்றிவிடுகிறது. அது தான் நன்றியுணர்வு.

நன்றியுணர்வு எனும் உணர்வு நம்முள் சென்றுவிட்டால் அது நமக்கு தரும் பலன்கள் அளவிட முடியாதது.

நமது எண்ணங்கள் யாவும் நிறைவேற
வேண்டுமெனில் நம்மில் நன்றியுணர்வு அதிகமாக இருந்தாலே போதும்.

அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் பல அதில் சிலவற்றை மட்டும்  கொடுத்துள்ளேன்..

நீங்கள் இன்று எத்தனை பேருக்கு நன்றி( THANK_U )சொல்லியுள்ளீர்கள். அல்லது எத்தனை பேர் உங்களுக்கு இன்று நன்றி சொல்லியுள்ளார்கள் என்பதை பொறுத்தே.. நமது எண்ணங்கள் செயலாக மாற வாய்ப்புள்ளது.

நன்றியுணர்வு அதிகம் உள்ளவர்கள் பலர் மிக பிரம்மாண்டமான சாதனைகளை செய்துள்ளார்கள்.

நாம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல ஒரு சிறிய முயற்சியினை ஆரம்பிப்போம்…

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

தினமும் நமக்கு 86,400 நொடிகள் பரிசாக கிடைத்துள்ளது, இதில் ஒரு நொடியை எதற்காவது நன்றி (thank you) சொல்ல செலவிடலாமே…

நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தமிழனின் சிற்றுண்டி: நீராகாரம்...


நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம் (நீராகாரம்). காலையில் ஒரு முட்டி நீராகாரத்தை , வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டு தான் வயலுக்குப் போவார்கள்.

அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப்  பழஞ்சோறு தான் கொடுத்தது. அப்படி என்ன தான் அந்த உணவில் இருக்கிறது.

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான்  பி6 , பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும்  ஒரு மருத்துவர்.

உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ்
ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்')  பெருகி நம் உணவுப் பாதையையே  ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்..

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது..

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில...

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால்,  உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4.அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான்  சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு  அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8.அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால்,  எந்த நோயும் அருகில் கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்.

பழைய சாதத்தை எப்படி செய்வது...

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும்
கைக்குத்தல் அரிசி தான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து,  சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது)...

நடிகை ஸ்ரீதேவியை இழந்து தவிக்கும் விபச்சார ஊடகங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...


சிரியா மக்களுக்கு குரல் கொடுக்க விரும்பினால் இதை அனைவருக்கும் பகிருங்கள் மனிதா மனித நேயம் எங்கே...


மக்கள் முட்டாள் தனமானவர்கள்...


நாம் அவர்களின் மீது பணம் என்னும் காகிதத்தைத் திணிக்கும் முன்னமே அவர்களிடமே கருத்தியல் பிரிவினைகள் பலவற்றை உருவாக்கி இருக்கிறோம்.

சில பிரிவினைகள் அவர்களே உருவாக்கிக் கொண்டது.

எது எப்படி இருப்பினும் அந்தப் பிரிவினையில் நமக்குக் கிடைப்பது இலாபமாக மட்டுமே நாம் பார்க்க வேண்டுமே தவிர அந்த இழப்புகள் நம்மை சேர கூடாது.

இங்கே அரசியல் சுதந்திரம் என்பது வெறும் ஒரு போலிதான்.

இதைச் சரியான நேரங்களின் பயன்படுத்தி மக்களை நம் பக்கம் ஈர்க்கவோ செய்யலாம்.

நடுநிலையாக நின்று சிந்திக்காமல் தனது சிந்தாந்தமே உண்மை என இருக்கும் சில ஆட்சியாளர்களின் ஆட்சி மக்களிடயே வெகு விரைவில் விரிசலில் விழும்.

ஒரு வழிகாட்டி இல்லாமல் மக்களால் தாக்கு பிடிக்க முடியாது என்னும் நிலமை உருவாகும் போது மக்களாலேயே வழிகாட்டி தூக்கி எறிய படுவான் அங்கே நாம் நுழையலாம்.

மேலும், சுதந்திரத்தை எப்படி நடுநிலையாக பயன்படுத்துவது என்பதை அறியாத மக்களால் பலகாலம் தாக்குபிடிக்க முடியாது.

அவரவர் கொள்கை மாறுபட்டு இருக்கும் போது சில நாள் அவர்களையே ஆள விட்டால் அவர்களால் சில காலங்களில் சிதறடிக்கப்பட்டு தனித்தனியாக பிரிந்து போவார்கள்.

முதலில் கருத்து வேறுபாடு தோன்றி பின்னர் மதம் இன ரீதியான சண்டைகள் நடக்கும்.

ஒரு உண்மையான அரசையே இதன் மூலம் கவிழ்க்கலாம்.

இதனால் ஒரு சண்டையால் ஒரு நாட்டின் மக்கள் கூட்டம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளலாம் இல்லை பிற நாடுகள் இவர்களை ஆக்கிரமிப்பு செய்யலாம்.

எது நடந்தாலும் இலாபம் நமக்கு தான்.

அந்த நாடே எழுந்து நிற்க முடியாமல் இருக்கும் வேளையில் வல்லாதிக்கமான நாம் வட்டிக்கு பணம் கொடுத்து உதவுவோம்.

அது அங்கே இருக்கும் வளங்கள் அனைத்தையும் உறிந்துவிடும்.

நாம் கொடுக்கும் கடனை பெற வில்லையெனில் அவர்கள் நாடே அழியும் அதனால் பெற்றே தீருவர்.

இதனால் நம் ஆட்சியைச் செய்யலாம்..

இது யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை என்று சீமான் கூறிய அந்த சியோனிச அரசியல் நூலில் இருக்கும் ஒரு பகுதி.

சிரியா போருக்கு முக்கிய காரணம் அங்கே இருக்கும் ஷியா - சன்னி இசுலாமிய கொள்கை.

அதுதான் இந்தியாவில் மத நம்பிக்கை - கொள்கை - வழிபாட்டு முறை என பலவாராக பிரிந்து கிடக்கிறதும். இந்தப் பிரிவினைகள் செயற்கையாக அமைக்கப்பட்டதே.

இன்றைய அரசியல் தாகத்திற்கு அன்றே கிணறுகளை வெட்டி மக்களைப் பிரித்த பெருமை நம் ஆட்சியாளர்களையே சாரும்...

Save_Syria
SAVETAMILNADU
AgainstCorporate
AmericaDown
WeSupportAssad