19/02/2021
திருட்டு திமுக திருச்சி சிவா பித்தலாட்டம்...
அட நாற பயலுகளா இது தான் நீங்க இந்தியை எதிர்க்குற லட்சணமா...
திருட்டு திராவிடம்...
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...
ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை...
ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்...
தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும்...
தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர்.
அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிற சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க.
இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.
தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டு விட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்...
ஒரு உண்மையை சொல்கிறேன் கேள் தமிழா...
Royal Court of Justice இலண்டனில் இருக்கும் காமன்வெல்த் கூட்டமைப்புக்கான நாடுகள் ஏற்று கொண்ட கோர்ட் இது.....
இந்திய குடியுரிமை பெற்ற தமிழர்கள் யார் வேண்டுமானாலும்..... சென்று எம் இனம் வஞ்சிக்கப்படுவதாகவும்.. சுப்ரீம் கோர்ட்டின் காவேரி தீர்ப்பையும், முல்லை பெரியாறு தீர்ப்பையும், தற்போது திணிக்கப்படும் சாகர்மாலா வரையும்.. இந்த இந்திய குடியரசின் திணிப்பு போக்கை கண்டித்தும் ஒரு மனு போட்டு.. தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில்...
இந்திய அரசு எப்படி அலறி அடிச்சிட்டு வந்து தமிழனிடம் நிற்கும் என்று அழகாக பார்க்க முடியும்...
உதாரணமாக - மலேசிய போராட்ட வெற்றி...
ஆனால் நம் தமிழக அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள்...
தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...
1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி.. மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது...
புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும்-பஞ்சமரும் ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள், தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.
ஹும்.. இந்த பாஷை சரிப்படாது..
நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்...
தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும், தெலுங்கர்கள் என்றும்...
தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்...
- பாரதி தமிழ்: பக்.403...
மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்...
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம்பூவின் பயன்கள்...
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்...
உணர்வுகளின் சக்தி...
1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம் தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.
4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.
5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.
6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.
7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.
8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.
9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.
10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.
11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியான விசயங்களைப் பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும், முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும். உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...
அய்யனார் பற்றிய உண்மைகள்...
அய்யனார் என்பது சாத்துவணிகனின் காவல் தெய்வம் என சொன்ன போது. இல்லை இல்லை இது தமிழர்களின் வழிபாடு தான் என பலர் முட்டு கொடுத்தார்கள்....
அதே போல் இந்த புத்தர் என்பதே ஒரு போலியான உருவகம் தான்...
வணிகர்களின் சாதியில் துறவறம் போவது என்பது இயல்பான ஒன்று...
அந்த துறவறம் என்பது ஏதோ எல்லாவற்றையும் துறந்து விட்டு போவது என அர்த்தம் இல்லை....
பூமியின் இரகசியங்களை தேடி.... தனது அடுத்த தலைமுறையை உலகத்தை ஆள செய்ய தேடித்திரியும் ஒருவித வாழ்க்கை முறை தான்...
இந்த வாழ்க்கை முறையை இந்த வணிகக்கூட்டத்திற்கு பழக்கப்படுத்தியது.... அரச குடும்பம்....
அந்த வணிகக்கூட்டத்தில் இருந்து துறவறம் போனவனை வைத்து உருவாக்கப்பட்டது தான் பெளத்தம்...
உடனே பெளத்ததில் இல்லாத நல்ல கருத்துகளா என கேட்ப்பார்கள்....
புத்தர் யார் என்பதற்கே ஆதாரங்கள் கிடையாது.... இந்த கருத்துகள் புத்தர் தான் சொன்னாரா என ஆராய எந்த மூகாந்திரமும் இல்லாத போது.... எந்த அடிப்படையில் இது புத்தர் சொன்னது என சொல்கிறார்கள்....
நல்ல கருத்துகளின் குவியலை சேகரித்து அனைத்தும் இவர் சொன்னது தான் என சொன்னால் உடனே அவரை கடவுளாக பார்ப்பது தான் முட்டாள் தனம்.....
அந்த புத்தன் எனும் சாத்து வணிகனுக்கு காவல் காத்த பூதம்.... அப்படியே ஐப்பானிலும்.... தமிழ்நாட்டிலும் மட்டும் 100% ஒத்து போகிறது எனில் அந்த வணிகக்கூட்ட தலைமை யார் என நீங்களே பார்க்க வேண்டும்.....
இப்போது இருக்கும் நகரத்தார் வணிகர்கள் போலிகள்....
உண்மையான அந்த தலைமை அரச குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மறுக்க முடியாத பிணைப்பு ஒன்று உள்ளது. அதன் ஆழத்தை தேடி செல்லும் போது நமக்கே அதிர்ச்சிகள் தான் மிஞ்சும்....
கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் வெளியிடலாம்......
அய்யனாரை குலதெய்வ என சொல்லுபவர்கள் வருத்தப்பட வேண்டும்....
அதே கோவிலில் யாருக்கு பலி கொடுக்கிறீர்களோ அது தான் குலதெய்வம்.....
அய்யணாருக்கு பலி கிடையாது ஒருவேலை இருந்தாலும் முன்னோர்களிடம் நன்கு கேளுங்கள்...
அருகில் இருக்கும் வேறு ஒன்றுக்கு தான் பலி என சொல்லுவார்கள்...
உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்...
உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்.
நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மன உளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்.
உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.
உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....
மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.
நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...
நன்றி ஆரோக்கியமே..
நன்றி உடலே..
என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி..
என்னை குணமாக்கியதற்கு நன்றி..
என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.
இதன் மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு.. உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.
1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் "ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது" என்பதை மனதிற்குள் சொல்லி கொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...
2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..
3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்.
4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்... எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ.. அவ்வளவு மனபாரம் குறையும்...
5. காலை வேலையில் நியூஸ் பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....
6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்.
7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.. இதன் மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்.
தினமும் இதை செய்து பாருங்கள்.. தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...
உணர்வு அலைவரிசை...
1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.
2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம்போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.
3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.
4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் , அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.
5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.
6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.
7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.
8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால் கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்துவிடலாம்.
10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...
விவசாயம் காப்போம்...
ரசாயன உரம், தொழிற்சாலை கழிவுகளால் நஞ்சாக மாறிய நிலத்தை சரி செய்ய, அந்த நிலத்தில் வெட்டிவேர் பயிரிட்டால் போதும். நிலத்தில் படிந்துள்ள காட்மியம், பாதரசம் போன்ற கடின உலோக பாதிப்புகளை கூட வெட்டி வேர் உறிஞ்சி எடுத்து மண்ணை வளமாக்கி விடும்...
அண்ணாச்சி பழத்தின் அற்புத குணங்கள்...
உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாச்சி பழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.
முதலில் நன்கு பழுத்த அன்னாச்சி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காய வைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாச்சி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.
தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும். இவ்வாறாக இரண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும்.
பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும் பொதுவாகவே அன்னாச்சிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும்.
குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாச்சி பழத்திற்கு உள்ளது...
உளுந்தங்கஞ்சி...
விளையாட்டு வீரர்கள். ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.
பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
உளுந்தங்கஞ்சி தேவையான பொருட்கள்...
1.உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது).
2.பச்சரிசி அரை டம்ளர்.
3.வெந்தயம் ஒரு தேக்கரண்டி.
4.பூண்டு 20 பல்லு.
5.வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்.
6.தேங்காய் ஒரு மூடி.
செய்முறை...
உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.
(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து தான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்).
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.
(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்து விடலாம்,. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)...