27/04/2018

தமிழினம் மறக்க முடியாத திமுக வின் துரோக வரலாற்று நாள்...


தமிழனிடம் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும்...


வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...

தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...

அவன் மண்ணை பார்த்து சிந்தித்த போதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்....

இந்த கல்கடிகாரத்தை பற்றி சில...

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் ,மார்கபந்தீசுவரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது.

அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்...

கேவலமான பிறவிகள் எல்லா சாதி, மத, இனத்திலும் உண்டு...


சிறுமியின் தோழியை விட்டு அழைத்து வரச்சொல்லி திட்டமிட்டு கடத்தல் நடந்திருக்கிறது. 17 வயது மாணவன் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளான்...

மக்கள் என்றைக்கும் இந்த அடிமை கட்டமைப்பை தாண்டி சிந்திக்கக்கூடாது என்பதில் அதிகார வர்க்கம் தெளிவாக இருக்கிறது...


காமராசரை தோற்கடித்த திமுக என்று யாரும் கூறுவதில்லை,

காமரசாரையே தோற்கடித்த மக்கள் தமிழ் மக்கள் என்றுதான் கூறுகின்றனர்..

அப்படியென்றால் அன்றைக்கு திராவிடம் என்ற கருத்தியல் எவ்வளவு ஆழமானதாக திணிக்கப்பட்ட இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்..

நம் சிந்தனைகளை நாம் பேச ஆரம்பித்துவிட்டோம் என்றால் அது நம்மை ஆட்டி படைக்கும் அதிகார வர்க்கத்திற்கு ஆபத்தாக முடியும்..

தமிழ் தேசிய அரசியல் இந்த மண்ணுக்கானது, ஆனால் நாம் இன்றைக்கு எப்படி திராவிடத்தை வெறுக்கின்றோமோ அதுபோல் அடுத்த தலைமுறையினரில் தமிழ் தேசியத்தை யாரும் வெறுக்க கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்..

புரிதலோடு அரசியலை ஏற்றுக் கொள்ளுங்கள்...

மனதை கட்டுபடுத்த முடியுமா?


உடல் அங்கங்களின் அதிர்வுகள் பல வகையில் மாறி மாறி அதிரும்வரை மூளையும் பல்வேறு எண்ணங்களின் தொடர்பிலேயே இருக்கும்.

உடல் உறுப்புகளின் அதிர்வுகளினால் ஏற்படும் மின்சக்தி மாறுபாடு மூளையை வெவ்வேறு அலைவரிசைகளில் டியூன் செய்கிறது.

உடல் உறுப்புகள் உருவாக்கும் இந்த சிக்னல்கள் மூளையை அடைவதை தடுக்க வேண்டும், இல்லை நிறுத்த வேண்டும்.

உடல் உருவாக்கும் சிக்னல்களை தடுக்க முடியாது. ஆனால் அதை ஒரே மாதிரி மாற்ற முடியும்.

உடல் அணுக்களின் அதிர்வை முடிவு செய்வது கோட்சாரம். அதாவது கிரகங்களின் இடமாற்றம்.

உடல் கிரக கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்பட்டாலும், நம் மனோவலிமையால் அதில் இருந்து தப்பலாம்.

உடல்தான் மறைமுகமாக எண்ணங்களை தொடர்பு கொள்ள உந்துகிறது.

உடல் அணுக்களை ஒரே லயத்திற்கு கொண்டுவர தொடர் மந்திர உச்சரிப்புகள் அவசியம்.

உடலை சார்ந்தே எண்ணங்கள் இருந்தாலும் அதே எண்ணங்களால் இந்த உடலின் அதிர்வை மாற்ற முடியும்.

உடல் உணர்ச்சிகள் எண்ணங்களையும், எண்ணங்கள் உடல் உணர்ச்சிகளையும் மாற்றவல்லது.

உடல் உணர்வுகளை தொடர் சுயகருத்தேற்றத்தின் மூலம் நம் கட்டுபாட்டிற்கு கொண்டுவர முடியும்.

உடலை யோகாவால் தளர்த்தி, அடிக்கடி "என் மனம் என் கட்டுபாட்டில் உள்ளது" என மனதால் நினைத்துவர மனம் அடங்கியே தீரும்.

உடலும் மனமும் தங்கள் கட்டுபாட்டிற்கு வந்துவிட்டால், பிறகு என்ன இந்த வானமே எல்லை...

ஒன்று சேருவோமா தமிழா.. மதுபான கடைகளையும், ஊடகங்களையும் புறக்கணிப்‌போம்...


​​கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க பாஜக மோடி செயல்படுகிறார் - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு...


மீத்தேன், ஐட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காகதான் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்து விடாமல் இருக்க பிரதமர் மோடி மறைமுகமாக செயல்பட்டு வருகிறார் என்று தஞ்சாவூரில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று காலை தொடங்கியது.

இந்த ஊர்வலம் முக்கிய ஊர்கள் வழியாக நேற்று மாலை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அங்கு மக்கள் மத்தியில் பி.ஆர்.பாண்டியன் பேசினார்.

​அவர் பேசியது:​ "தமிழகத்தின் காவிரி உரிமையை பிரதமர் மோடி மீட்டு தர வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். விளைநிலங்களில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காகதான் தண்ணீர் கேட்கிறோம். எங்கள் உணர்வுக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும்.

காவிரி தண்ணீருக்கான போராட்டத்தை நசுக்கி விடாதீர்கள். ஒன்றிணைந்து போராடினால்தான் காவிரி உரிமையை மீட்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்று அவர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "காவிரி டெல்டாவை அழித்துவிட்டு அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி மீத்தேன், ஐட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காகதான் காவிரி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துவிடாமல் இருக்க பிரதமர் மோடி மறைமுகமாக செயல்பட்டு வருகிறார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராடுவோம்.

வேதாரண்யத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் இன்று (நேற்று) இரவு கல்லணையில் முடிவடைகிறது. திருச்சியில் தங்கும் நாங்கள் நாளை (அதாவது இன்று) புறப்பட்டு 22 மாவட்டங்களில் 2500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வருகிற 29-ஆம் தேதி திருவாரூரில் பயணத்தை முடிக்கிறோம்.

மேட்டூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணியும், வேலூரில் ஜி.கே.வாசனும், சென்னையில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்" என்று அவர் கூறினார்...

மராட்டியன் ரஜினி யின் ஆன்மீக அரசியல்...


நவம்பர் 18 1978 அமெரிக்கா வில்...


அமெரிக்காவின் தென்கோடியில் உள்ள கயானாவை சேர்ந்த ஜோன்ஸ் டவுன் என்கிற பகுதியில் சுமார் ஆயிரம் பக்தர்கள் கூடியிருக்கிறார்கள் உயரமான மேடை.. ஒலிப்பெருக்கியில் பக்திமயமான இசை.. திடீரென்று பக்தர்கள் பரவசமாக கூக்குரல் எழுப்ப ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்.

இசை பணிவோடு நிறுத்தப்படுகிறது.
காற்றைக் கிழித்துக்கொண்டு எதிரொலிக்கும் கம்பீரமான குரலில் ஜேம்ஸ்..

என் அருமை குழந்தைகளே இந்த உலகை பொருத்தவரையில் இதுவே நமது கடைசி சந்திப்பு நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம் வேறுவழி இல்லை நாம் உயிர் தியாகம் செய்யாவிட்டால், விளைவுகள் விபரீதமாகப் போய்விடும்.

வெளியிலிருந்து நெருங்கி கொண்டிருக்கும் தீய சக்திகள் நம்மை அழிக்க முடிவெடுத்துவிட்டன அவற்றிடம் சிக்கப் போகிறோமா அல்லது இறைவனிடம் சரணடைய போகிறோமா?

நான் உங்கள் மீது வைத்திருக்கும் அதே அன்பு என்னிடமும் உங்களுக்கு இருப்பது உண்மையானால் என்னோடு உயிர் துறக்க தயாராகுங்கள் கவலை வேண்டாம் இது இறைவனின் கட்டளை.

நாளை நாம் அனைவரும் உயிர்த்தெழுவோம் சொர்க்க லோகமான ஒரு புதிய உலகத்தில் நாம் மீண்டும் சந்திப்போம் நாளை நமது பக்தர்களே என்னோடு வருவீர்களா உருக்கமாக ஆவேசமாக ஜிமஜோன்ஸ் கேள்வி எழுப்ப வருவோம் வருவோம் என்று கூட்டம் இடியோசை போல முழங்குகிறது.

அதை தொடர்ந்து..

சயனைடு விஷம் கலக்கப்பட்ட மினரல் தண்ணிர் அடங்கிய பெரிய ட்ரம்களை சிஷ்யர்கள் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.

அதில் லெமன் ஜுஸ் கலக்கப்னட்டது.

இந்த பானத்தை குடித்த சில நிமிடங்களில் நீங்கள் இறந்து விடுவீர்கள் ஆகவே கட்டுப்பாட்டுடன் குடும்பம் குடும்பமாக க்யூ வரிசையில் வந்து பானத்தை பெற்றுக் கொள்ளுங்கள் முதலில் குழந்தைகள் ஒலிப்பெருக்கியில் ஜிம்ஜோன்ஸ் ஆணையிடுகிறார்.

முதலில் குழந்தைகளுக்கு பெற்றோர் விஷக் குடிநீரைப் புகட்டிவிடுகிறார்கள் கைக்குழந்தைகளின் வாயை பிரித்து சிரிஞ்ச் மூலம் நர்ஸ்கள் சயனைடு விஷத்தை பீய்ச்சுகிறார்கள் சில சிறுவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.

சிஷ்ய கோடிகள் பலவந்தமாக அவர்களை பிடித்துக்கொன்டு விஷத்தை குடிக்க வைக்கிறார்கள் மரண பயம் காரணமாக தப்பிக்க பார்க்கும் சிலர் துப்பாக்கி முனையில் குடிக்க வைக்கப்படுகிறார்கள்.

ஒரு வழியாக ஜிம்ஜோனஸின் திருநாமத்தை குரல் நடுங்க உச்சரித்தவாறு அமைதியாகவே அத்தனை பேரும் விஷம் குடிக்க ட்ரம்கள் அகற்றப்படுகின்றன.

சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தள்ளாட ஆரம்பிக்க சிஷ்யர்கள் அவர்களைக் கைதாங்கலாக அழைத்துச் சென்று புல் தரையில் வரிசையாகப் படுக்க வைக்கிறார்கள்.

சிஷ்யர்கள் குவளையில் விஷம் எடுத்து சாவதானமாக குடிக்கிறார்கள். படுத்திருந்த அத்தனை பேரின் உடல்களும் துடிக்கின்றன.

எல்லோருடைய மூக்கு வாய் வழியாக ரத்தம் எட்டி பார்க்கிறது பிறகு மரண அமைதி.

முயற்சி செய்தேன் முடிந்த வரை முயற்சி செய்தேன் என்று உரக்க குரலெழுப்பிய ஜிம்ஜோன்ஸ் வானத்தை அண்ணாந்து பார்த்து அம்மா அம்மா என்று அலறுகிறார்.

மறுவிநாடி டுமீல் என்ற சத்தம் தன் நெற்றிப்பொட்டில் ஜோன்ஸ் வைத்திருந்த கைத்துப்பாக்கி இயங்குகிறது மூளை சிதற சரிந்து விழுந்த ஜோன்ஸ்ன் உயிர் பிரிகிறது.

கவர்ச்சி மிகுந்த ஒருபோலி சாமியார் பக்தகோடிகளை உச்சக்கட்டமாக எந்த அளவுக்கு அடிமைகளாக இயக்க முடியும் என்பதற்கு ஜிம்ஜோன்ஸ் ஓர் உதாரணம்...

ஸ்டெர்லைட் - பாஜக அதிமுக சதிகள் ஆரம்பம்...


தமிழர்கள் திராவிடர்களால் வஞ்சிக்கப்பட்ட வரலாறு - 2...


ஆந்திரா..

ஆந்திரா பிரிக்கப்படும் போது வடக்கே பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர்,சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையி ல் இருந்தனர் .ஆனால் நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்களாகவே இருந்தனர். ஆனால் நடுவண் அரசு அப்போது அமைத்த படாஸ்கர் குழு, நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல வாழும் மக்களின் மொழி தான் முக்கிய கூறு என்று கூறி , தமிழர் பகுதிகள் அனைத்தையும் ஆந்திராவுடன் இணைக்க உத்திரவிட்டனர். அன்று ஆளுமையிலும் அதிகாரத்திலும் நடுவண் அரசில் வீற்றிருந்த திராவிட தலைவர்கள் இதற்கு உடந்தையாக இருந்து செயல் பட்டனர்.அப்பொழுது கூட நீதிக் கட்சியில் இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. இங்குள்ள தமிழர்களின் தலைவர்களாக இருந்த திராவிட தலைவர்களும் அமைதியாக இருந்து விட்டனர்.

ஆந்திரா வின் ராயல் சீமா மாவட்டமே தமிழர்களின் நிலப்பகுதிதான். மொழிவாரி மாநிலம் பிரிவினையின் போது அது ஆந்திராவிற்கு போனது. சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டத்திற்குள் உள்ளடங்கிய , திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வட பெண்ணை ஆறு, பொன்வானி ஆறு, இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆதிராவோடு போயின. நந்தி மலை இருந்திருதால் பாலாற்று சிக்கல் தமிழர் நாட்டிற்கு வந்திருக்காது .

வடபகுதியில் மங்கலக்கிழார் , மா போ சிவஞானம் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாக போராடினர் .ராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார் .அதனால் திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு போன்ற சில பகுதிகள் மட்டுமே தமிழர்கள் போராட்டத்தால் திரும்ப கிடைத்தன.நீதிக் கட்சியில் தமிழர்களின் தலைவர்களாக இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை .

1--4-1960 வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி 32,000 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது .சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 525 கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது . இன்று தமிழர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் தெலுங்கர்கள் அன்று தமிழர்களுக்காக போராடவில்லை. தெலுங்கு தலைவர்கள் தமிழர் என்ற போர்வையில் கூட இருந்தே குழி பறித்தனர் .

கர்நாடகா...

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால் குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந் தமிழில் குடக்கு என்றால் மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. விடுதலை அடையும் முன்பு வரை கூர்க் மக்களும், கன்னடர்களும் பரம எதிரிகளா கவே இருந்தனர் . மொழி வாரி மாநிலம் பிரிக்கப்படும் போது பண்பாடு, கலாசாரம் அடிப்படையில் கலந்து இருக்கும், தமிழர் நாட்டோடு இணைய விரும்புகிறோம் என்று கூறி ஆய்தம் ஏந்தி கூட போராடினர்.

அப்பொழுது இங்குள்ள தமிழக அரசியல வாதிகள் சிறிது தலை அசைதிருந்தாலும் குடகு நம்மோடு இணைத்திருக்கும். அப்படி இணைத்திருந்தால் காவேரி தமிழர் நாட்டிலேயே உருவாகி, தமிழர் நாட்டிலேயே கடலில் கலந்திருக்கும் நமக்கு காவேரி சிக்கலே வந்திருக்காது .

கன்னடர்கள் திட்டமிட்டு போராடியதால் பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்க வயல் பகுதிகள் பறி போயின. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டுமானால் மொழி தொடர்பும் நிலத் தொடர்பும் இருக்கவேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 விழுக்காடும் ,கன்னடம் பேசுவோர் 35 விழுக்காடும் இருந்தனர்.ஓசூர் வறண்ட பூமி என்பதால் ஆந்திரா தங்களுக்கு வேண்டாம் என்று கூறியது ,அதனால் ஓசூர் கர்நாடகா வோடு இணைந்திருக்க வேண்டும் .ஆனால் கர்நாடகா திட்டமிட்டு அதை தனக்கு வேண்டாம் என்று கூறி தமிழர் நாட்டோடு இணைத்து விட்டது.

பெங்களூரு யாருடன் இணைவது என்ற சிக்கல் வரும் போது, அங்கு தமிழர்களே அதிக அளவில் இருந்தனர் . ஓசூரில் கன்னடர்கள் அதிகம் இருந்தாலும் அதை நாங்களே தமிழர் நாட்டோடு இணைத்து விட்டோம். அதனால் பெங்களூருவில் தமிழ் பேசக்கொடிய மக்கள் அதிகம் இருந்தாலும், பெங்களூருவை கர்நாடகத்தோடு இணைத்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்தது .

அன்று இங்கிருந்த அரசியல் தலைவர்கள் திராவிடராக இருந்ததாலும், திராவிட ஆதரவு மக்களிடையே வேரூன்றி இருந்ததாலும், தமிழர் தலைவர்களிடையே மண் சார்ந்த உணர்வு இல்லாத வாய் சவடால் அரசியல் வாதிகளாக இருந்ததாலும் , அவர்களுக்கு இருந்த இந்திய உணர்வும் ,திராவிட உணர்வும் எந்த வித எதிர்ப்பு தெரிவிக்காததற்கு முக்கிய காரணமாக இருந்தன .

இன்றைய தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள்.தமிழகம் அண்டை மாநிலங்களுடன் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70 ,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.அவையும் நம்மோடு இருந்திருந்தால், தமிழகம் கர்நாடகாவை விட இன்னும் பெரிய மாநிலமாகவும், ஆந்திராவை விட சற்று சிறிய மாநிலமாகவும் இருந்திருக்கும் .ஆனால் நீர் ஆதாரத்தில் தென் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக இருந்திருக்கும் . தமிழகம் இழந்த நிலப்பரப்பு இப்போதுள்ள நிலப்பரப்பில் முக்கால் பங்கு ஆகும் .

திராவிடம் திராவிடம் என்று கூறும் தமிழர்களே திராவிட மக்களே...

தமிழகத்தில் வாழும் திராவிட மக்களே, அன்று தமிழர் நாட்டில் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்வு சிறிதளவு இருந்திருந்தால் கூட எங்களது நிலம், எங்களது மண் சார்ந்த பூர்வீக நிலம் எங்களோடு இணைந்திருக்க நீங்கள் போராடி இருக்க வேண்டும்.

எங்களிடம் திராவிடம் என்று கூறி, திராவிட மாயையில், திராவிட போதையில் தமிழர்களை சிக்க வைத்து, எங்கள் மண்ணை அபகரித்தது போதாது என்று, இன்று ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி, தமிழர் நாட்டு தமிழர்களை பிசைகாரர்களாக்கி, அடிமையாகியக்கியது மட்டுமல்லாமல் எங்கள் தமிழீழ நாட்டையும், மக்களையும் அழித்து சுடுகாடாக்கி விட்டீர்கள் .

நாங்களும் தமிழர்கள் தான் என்று கூறி, நாள்தோறும் இங்கு வந்து கொண்டிருக்கும் திராவிடர்களால், எஞ்சி இருக்கும் தமிழர் நாட்டு நிலமும் ஆக்கிரமிக்கப்படுகிறது . இது போதாதென்று இந்தியர்கள் என்று கூறி கொண்டு வட இந்தியர்களால் தமிழர் நிலம் பறி போகிறது .

தமிழர்களே இனியும் நீ விழித்து கொள்ளது போனால், உன் உரிமைக்காக போராடாது போனால், நாளை இந்தியாவில் உள்ள அணைத்து இனத்தவர்க்கும் தனியே அவர்கள் இனத்திற்கென்று நாடு இருக்கும். ஆனால் தமிழனுக்கு மட்டும் நாடு இருக்காது .

இப்போதுள்ள தமிழர் நாடு ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு, இங்கு வாழும் மலையாளி, கன்னடன், தெலுங்கன் ,வட இந்தியன் என்று ஐந்து துண்டுகளாக துண்டாட பட்டு . அதில் ஒரு துண்டே தமிழ் நாடாக இருக்கும். உலகம் முழுவதும் பரந்து வாழும் தேசிய இனமான உனக்கு உள்ளங்கை அளவு கூட நாடு இல்லாமல் ஏதிலியாக இப் பூமி பந்தில் இருப்பாய் என்பதை மறவாதே .

இன் நிலை வராமல் இருக்க "தமிழர் நாடு தமிழருக்கே " தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்ற முழக்கம் தமிழர்கள் இடத்தில எழுப்புவதோடு மட்டுமல்லாமல் , திராவிட கட்சிகளிடம் உள்ள ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தமிழர் நாட்டை தமிழரே ஆள் வேண்டும்...

இந்திய சட்டம் ஏழைகளுக்கும் ஏமாளிக்கு மட்டுமே...


உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்...


தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் ‘ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்’ என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.

உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.

மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.

தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில் ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். “இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்”.

அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார். ”அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்.” சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.

ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும். கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.

இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.

பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.

பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது...

ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்...


நம்மை போல் இந்த நாட்டின் அரசாங்கமும் அதிகார வர்க்கத்திற்கு அடிமையே...


அரசாங்கம் முதல்தர அடிமைகளை கொண்டது,
பிரதமர்,
அமைச்சர்கள்,
குடியரசுத்தலைவர்,
முதல் மந்திரிகள்
என...

அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தெளிவாக தெரியும், அரசாங்கம் அதிகார வர்க்கத்தின் அடிமை என்று..

ஒவ்வொரு முடிவிலும் அதிகார வர்க்கமே அதிக லாபம் பெறும்...

தமிழர்கள் திராவிடர்களால் வஞ்சிக்கப்பட்ட வரலாறு - 1...


(பண்டைய வரலாறு அல்ல 40 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு) (மீள் பதிவு ) கட்டுரை பெரிதாக இருப்பதால் பொறுமையாக படியுங்கள் தமிழர்களே...

நாளை நிலத்தின் அடிப்படையில் தமிழர் நாட்டை பிரித்தால் தமிழர்களுக்கு கையளவு மண் கூட மிஞ்சாது .தமிழர் நிலம் திராவிடர்களால் இந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது .

தமிழின வரலாற்றில் மிக கொடுமையான காலம் என்று கணித்தால், அது ஆங்கிலேயனிடம் நாம் விடுதலை பெற்ற நாளாகத் தான் இருக்கும். ஒவ்வொரு இனத்தவரும் பெற்ற விடுதலையை தங்கள் மண், இனம், மொழி காக்க பயன் படுத்தி கொண்டனர்.

தமிழர் நாட்டின் பிரிவினையின் போது மட்டும் தமிழர்களின் தலைவர்களாக தங்களை காட்டி கொண்ட திராவிடர்கள், சதி செய்து அவரவர்கள் மாநிலத்திற்கு தேவையான தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து கொண்டனர். அதற்கு முதன்மையான காரணம் அவர்கள் தமிழர்களிடையே விதைத்த திராவிட உணர்வு,

தமிழர்கள் மட்டுமே, தாங்கள் தொன்று தொட்டு வாழ்ந்த பூர்வீக நிலப் பகுதியை, திராவிடர்களுக்காக விட்டு கொடுத்தனர். அவ்வாறு அவர்கள் கொடுத்த நிலப்பகுதி 70,0000 சதுர கிலோ மீட்டர் ஆகும். இப்போதுள்ள தமிழர் நாட்டின் நிலப்பரப்பில் முக்கால் பங்கு அளவு நிலத்தை நாம் விட்டு கொடுத்திருக்கிறோம். காரணம் நம்மிடையே ஊறி திளைத்த திராவிட உணர்வு,திராவிடத் தலைவர்கள்.

இந்தியா விடுதலை பெற்றவுடன் மகராஷ்டிரா முதலிலும், அடுத்து குஜராத், வலுவாக (தெலுங்கானா) ஆந்திரா, கர்நாடகா, கேரளா என நமது அண்டை மாநிலங்கள அனைத்தும், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்க வேண்டும் என்று போராடின .

ஆனால் தமிழர் நாட்டில் மட்டும் அது போன்ற போராட்டங்கள் நடை பெற வில்லை . காரணம் தமிழர்களின் தலைவர்களாக திராவிடர்கள் இருந்தனர். இவர்கள் தமிழன் என்ற உணர்வை மழுக்கடித்து, திராவிடர் என்ற உணர்வை ஊட்டியிருந்ததாலும், திராவிட நாடு கோரிக்கை யாலும் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

தமிழர்கள் என்ற போர்வையில் திராவிட மக்கள் வளமையான ஆதிக்க சக்தியாக இருந்ததாலும், தங்கள் வளமையான வாழ்வை காப்பாற்றி கொள்ள, நாம் திராவிடர்கள், இந்தியர்கள் என்று கூறி தமிழர்களை போராட விடாமல் தடுத்தனர்.

தென் இந்தியாவில் காலம் காலமாக தமிழர் நிலப்பகுதியில் வாழ்ந்து வந்த மலையாளிகள்,கன்னடர்கள், தெலுங்கர்கள், அந்த நிலப்பகுதியை தங்கள் மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என்று போராடினர்.ஆனால் தமிழர்கள் எந்த வித போராட்டமும் இல்லாமல் அமைதியாய் இருந்தனர். இந்தியாவே போராடியது ஆனால் தமிழகம் அமைதியாக இருந்தது .

கேரளா...

மொழி வாரி மாநில பிரிவினையில் தமிழர் பூர்வீக நிலப்பகுதியை அபகரித்து முதலில் வெற்றி பெற்றது மலையாளிகள். அகத்தீஸ்வரம், தோவானை , நொய்யாற்று பகுதி, நெடுமங்காடு , இடுக்கி மாவட்டத்தின் பெரும் பகுதி ,வண்டிப் பெரியாறு , தேவிகுளம், பீர்மேடு குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்ற பகுதிகள் எல்லாம், இனம், மொழி, வரலாற்று இலக்கிய ரீதியாக தமிழர் நாட்டோடு இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அது நடக்கவில்லை மலையாளிகளின் திட்ட மிட்ட சூழ்ச்சியால் கேரளாவுடன் இணைந்தது. இது போதாதென்று, கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதி, நீலகிரி , கூடலூர், ஊட்டி பகுதிகளையும் மலையாளிகள் கேட்டனர். அப்போது மொழி வாரி மாநிலத்தை பிரிக்க நடுவண் அரசால் அமைக்கப்பட்ட பசல் அலி குழுவின் தலைவர் மலையாளியான பணிக்கர் என்பவர் மலையாளிகளுக்கு ஆதரவாக செயல் பட்டார் .

அதை வெளிப்படையாக தெரிய்ம்படியும் மா. போ. சி இடம் நடந்து கொண்டார். அவரிடம் கடுமையாக வாதிட்ட மா போ சி , மற்றும் அவருக்கு துணையாக ஜீவா,நேசமணி போன்ற ஒரு சில தமிழ் தலைவர்களின் போராட்டத்தால் மட்டுமே மேற்கண்ட பகுதிகள் தப்பின.

காமராசரிடம் தேவிகுளம் பீர்மேடு பற்றி கேட்ட போது ,குளமாவது மேடாவது என்று கூறினார். அதற்கு காரணம் தமிழர் என்பதைவிட அவருக்கு இருந்த இந்திய உணர்வும், இங்கிருந்த திராவிடத் தலைவர்களும் மட்டுமே காரணம். திருவனந்த புரத்தில் தமிழர் பகுதிகளை கேரளாவிற்கு அளிக்கும் உடன்படிக்கையின் கூட்டம் நடை பெற்றது. அதில் தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த மலையாளியான வர்கீஸ் அவர்கள் எந்த வித வினாவும் எழுப்பாமல் தமிழர்களுக்கு எதிரான உடன்படிக்கையில் கையொப்பமிட்டார் .

தமிழ்க அரசின் செயலாளராக இருந்து நீங்கள் கையொப்பமிட்டது ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, விட்டு கொடுக்க வில்லை என்றால் மலையாள மக்கள் வருத்தப் படுவார்கள் என்று கூறினார் . ஆனால் அவர் கையோப்பமிட்டதற்கு காரணம், தான் ஒரு மலையாளி என்ற இனப்பற்றுதான் என்பது வெட்ட வெளிச்சமாக அன்றே தெரிந்தது .

அன்று 1500 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப் பகுதியை விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் முல்லை பெரியாறு, பவானி , சிறுவாணி , கண்ணகி கோயில் உட்பட அணைத்து நீராதாரங்கள் நிலப்பரப்பும் தமிழர் நாட்டிற்கு உரியதாக இருக்கும்.

வஞ்சகம்...

மொழி வாரி மாநிலமாக கேரளா பிரிக்கப்படும் போது ,சிக்கலுக்கு உரிய நிலப் பகுதியில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியமல்ல. நிலம் யாருக்கு அதிகம் உரிமையாக (சொந்தமாக) உள்ளது என்பதை பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்ற முடிவை நடுவண் அரசு எடுத்தது . அன்று நடுவண் அரசில் ஆளுமை சக்தியாக இருந்தது இன்று போல அன்றும் மலையாளிகளே. அதன்படியே கேரள எல்லையை ஒட்டியுள்ள நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன..

- தொடரும்...

சாகர்மாலா அபாயம்...


இப்போ புரியுதா பாஜக ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று...


ஓட்டு பிச்சை எடுக்க தமிழக விவசாயிகள்.. தமிழகம் உங்களுக்கு பகடகாய் அப்படிதானா?

இதுக்கு பேர் என்னா தெரியுமா ?

அதிமுக ஜெயக்குமார் vs கமல் கலாட்டா...


இந்த தோல்வியாளன் கேட்கும் கேள்வி.. ஒரு கேள்விக்கு கூட இந்த சமூகத்தில் யாராலும் பதிலளிக்க முடியாது...



ஏனெனில் அவன் படித்துவிட்டு கேள்வியை கேட்கவில்லை..

இந்த சமூகம் அவனை எப்போதும் ஒரங்கட்டுகிறது.

அந்த வலிகளையும், கோபத்தையும் வைத்தே அவன் கேள்விகளை கேட்கிறான்..

ஒருவேளை அவன் நாளை தீவிரவாதியாகவோ, தேசவிரோதியாகவோ சமூகத்தால் அழைக்கப்படலாம்..

குற்றம் செய்தவனே விட அதற்கு உதவியாக இருந்தவனுக்கே தண்டனை அதிகம்..

அந்த தண்டனை ஒருநாள் இந்த சமூகத்திற்கு அவனால் தரப்படலாம்..

அவனின் கோபம் ஒருநாள் இந்த சமூகத்தை சீர்திருத்தவதற்காக கூட மாறலாம்..

அன்றும் இந்த சமூகம் அவனை முட்டாள் என்றே அழைக்கும்..

ஏனெனில் இந்த சமூகம் தனக்கானவனை ஒருபோதும் தங்கள் அருகில் சேர்த்துக்கொள்ள விரும்பாது, இது சுயநலமிகுந்த சமூகம்...

சித்தர் ஆவது எப்படி ? - 14...


மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை...

ஆதியும் அந்தமும் இல்லா ஆண்டவன் இறைவன், அடிமுடி காணமுடியாத இறைவன், உலகளந்த உத்தமன் என்றெல்லாம் வர்ணிக்காத, போற்றி புகழாத மத நூல்களே இல்லை..

ஆனால் அப்படியான தோற்றத்திற்கு புலப்படாத, புலப்படமுடியாத இறைவனை, ஒரு தோற்றத்திற்கு கொண்டு வந்து, தொழுவதும் பிரார்த்தனை செய்வதும், ஒரு முறையற்ற செயல் என்பதும் அதுவே ஒரு மிகப் பெரிய ஒழுங்கற்ற செயல் என்பதும் இன்றைய கால கட்டத்தில் மனிதன் உணரவே முடிவதில்லை..

எல்லா மதங்களும், கடவுளை மறுக்கும் புத்த மதம் உள்பட ஏதோ ஒரு தோற்றத்தை மையப் படுத்திதான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன..

அப்படி இயங்காத ஒரு கோட்பாட்டை உடைய ஒரு மதத்தை உலகில் ஒருவரேனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..

இந்த சூழ்நிலையில் அறியாதவர்களுக்கு முதலில் இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் கடவுளை பற்றிய மிக பெரிய ஒழுங்கின்மையை மையப் படுத்தி உருவநிலைகளில் ஆரம்ப நிலையிலே வேர் ஊன்றியவர்கள் மிக பெரிய பிரமாண்டமான கோவில்களையும் சர்ச்களையும் மசூதிகளையும் கட்டி அதை நிர்வாகிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கி விட்டனர்..

அதனால் பிழைத்து கொண்டு இருப்பவர்கள், தங்கள் பிழைப்பு எங்கே கெட்டு விடுமோ என்ற அச்சத்தில், தங்கள் ஒழுங்கின்மையை, எந்த வகையிலாவது நியாயப் படுத்தவே முயற்சி செய்வார்கள்..

இந்த சூழ்நிலையில் இறைவனின் உண்மை நிலையாகிய தோன்றா நிலை பற்றிய கருத்து முற்றிலுமாக மறந்து விட்ட ஒன்று மட்டும் அல்ல, முற்றிலுமாக மறுக்கப் பட்ட ஒன்றாய் போய் விட்டது..

இன்றைய கால கட்டத்தில் தோன்றா நிலையின் முக்கியம், சற்று பண்பட்டவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவோ, அறிந்ததை ஏற்றுக்கொள்ளவோ, குறைந்த பட்சம் அப்படி அறிந்ததற்கு எதிராக பேசாமல் இருக்க, முடியாத சூழ் நிலையே இன்று எங்கும் உள்ளது..

அப்படியே வாசியோகத்திலும்
தோன்றா நிலையை உணர வைக்க முற்பட்ட சித்தர்களின் முயற்சிகளை எல்லாம் நாசப் படுத்தி, அங்கும், ஆறு அல்லது ஐந்து சக்கரங்கள் என்ற தோன்றும் ஒரு மாயை ஒன்றை உருவாக்கி, தோன்றா நிலையை உணர்விலே தோற்று விக்காமலே செய்து விட்டனர்...

சித்தர்களை ஒரு வகையில் பித்தர்களாக்கி விட்டனர்..

அந்த தோன்றா நிலையிலே உணரப் படும் இறை ஆற்றலுக்கு இணையான ஒன்று இந்த பிரபஞ்சத்திலே எதுவும் இல்லை..

ஆற்றல் இன்றி ஒரு துரும்பும் அசையாது என்பதை உணர்ந்த பின் அதுவும் அந்த தோன்றா நிலையில் மட்டுமே கிடைக்கும் என்பது ஒரு நிலையான சத்தியம்..

தோன்றா நிலையில் மட்டுமே எல்லை கடந்த நிலையில் இருக்கும் அந்த இறைவனை அதே எல்லை கடந்த நிலையில் நாம் இருக்கும் போது உணர முடிந்து, அவனிடமிருந்து பேராற்றலை நாம் பெற முடியும்..

அவன் என்றால் தோற்றத்திற்கு வராத பிரபஞ்ச பேரண்டமே..

வேறு எந்த வகையிலும் அந்த ஆற்றலை பெற வேண்டிய அளவிற்கு பெற முடியாது..

அந்த தோன்றா நிலை ஒரு புரியாத நிலை தான்.. அது சதா உருவங்களிலே பழகி விட்ட மனதிற்கு மட்டுமே என்றும் புரியாத நிலை..

ஆனால் உணர்வாகிய புத்திக்கு அது உணர்வின் வழியாக புரியக் கூடிய ஒன்று..

ஆகவே புத்தி சொல்லுவதை மனம் ஏற்றுக் கொள்ளும் போது மனம் அந்த தோன்றா நிலையை, புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்றுக் கொள்கிறது..

மனம், புரியாததை புரியாததாகவே ஏற்றுக்கொள்ளும் போது, தன்னை கடந்து செல்ல அனுமதிக்கின்றது..

அப்படி புத்தியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளாத மனம் புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளாமல், மனிதனை மனம் தாண்டிய புத்தி நிலைக்கு அனுமதிக்காது..

ஆகவே தான் தோன்றா நிலையில் பிரபஞ்ச ஆற்றலை உணர்வாக அதாவது கனலாக பெற வேண்டிய அவசியம் ஆகிறது..அந்த அனுபவத்திற்கு பிறகே மனம், ஒருவனை தன்னை கடந்து, புத்தி என்ற பூத நிலைக்கு செல்ல அனுமதிக்கும்..

மனம் தன் தோற்றப் பிடிப்பினை தளர்த்தி, புத்திக்கு வழி விடும்.. தோன்றா நிலையில் மட்டுமே புத்தியும் அறிவும் திறம் பட இயங்கத் தொடங்கும்...

ஆகவே நினைப்பு என்ற தோற்ற நிலையிலிருந்து, உணர்வு என்ற தோன்றாநிலைக்கு வரவேண்டியது மிக பெரிய இரகசியமாக கொள்ள வேண்டும்...

சித்தர்கள் உருவ வழிபாடுகளை கடந்து சென்றவர்கள்.. கடந்தவர்கள் என்றால் உருவ வழிபாட்டில் இருந்து அனுபவப் பட்டு பின் மேற் கொண்டு மேல் அனுபவ பெற தோன்றா நிலைக்கு செல்ல உருவ வழிபாட்டை விட்டவர்கள்..

வள்ளலார் போன்றவர்களே நம் சித்தர்கள்..

உருவ வழிபாட்டை தாண்டி செல்பவர்கள் ஒரு போதும் தோன்றா நிலைக்கு செல்ல முடியாது என்பது மற்றொரு இரகசியம்...

தோன்றா நிலை சூரிய கலை என்றால் தோன்றும் நிலையாகிய உருவ வழிபாடு சந்திர கலை..

ஒரு கலை இல்லையென்றால் மற்றொரு கலையும் இல்லாமல் போய் விடும் என்பதை மறக்கக் கூடாது...

தோன்றும் நிலையில் சிக்குண்டு இருப்பது மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை...

பொனக்காடு பேய் பங்களா...


கன்னட பெரியாரும் திருட்டு திராவிடமும்...


சுயமரியாதை தன்மானம் என்று எவற்றை வரையறுத்தார் பெரியார். இதனால் தமிழர்களும் தமிழகமும் பெற்ற கல்வி அறிவூட்டல் என்ன..? பொருளாதார நன்மை என்ன..?

தமிழ் தேசிய உணர்வை இது எந்த வகையில் வளர்த்தது..?

ஏன் திராவிடத்தை தமிழகம் முதன்மைப் படுத்துகிறது..?

இதற்குள் தான் தமிழன் என்பவனின் இனத்துவ சுயமரியாதையும் தன்மானமும் அடங்கி இருக்கிறதா..? அப்படி என்றால் எந்த வகையில்..?

இந்த சுயமரியாதையும் தன்மானமும் 21ம் நூற்றாண்டில் தமிழர்களை தயார்படுத்தி 22ம் நூற்றாண்டில் எப்படி செயற்பட வைக்கப் போகிறது உலக அரங்கில்...? இதற்கு தமிழகத்தின் பங்கு என்ன..?

ஈழத்தில் தமிழ் தேசிய உணர்வோடு.. ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து நிற்க ஏன் தமிழகம் தயங்க வேண்டும்..?

இதற்கும் சுயமரியாதைக்கும் தன்மானத்துக்கும் ஏதாவது தொடர்பை காண்பித்திருக்கிறதா தமிழகம்..?

தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழர்கள் தானா..?

ஓரிரண்டு குரல்களைத் தவிர ஏனைய தமிழ்மக்களின் குரல் ஏன் நசுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தமிழீழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறது..?

இன்னும் இந்திய தேசியத்துக்கு அடிபணிந்து தானே உள்ளது தமிழகம். அப்படி இருக்க..

இந்த சுயமரியாதையும் தன்மானமும் எதைக் குறித்து எழுந்து நிற்கிறது. தமிழர்களின் திராவிட அடையாளம் குறித்தும் பார்பர்ன பிராமண இந்து சமய எதிர்ப்பு குறித்து மட்டும் தானா..?

ஏன் தமிழகத்தில் மதமாற்றம் செய்யும் இதர மதங்களை நோக்கி மக்களை அன்போடு வழி அனுப்பி வைக்கும் போது எங்கே போகின்றது இந்தச் சுயமரியாதையும் தன்மானமும் பகுத்தறிவும்.?

அது ஏன் இந்து சமயத்தை மட்டும் கண்டவுடன் இவை விழித்துக் கொள்கின்றன. மற்றைய மதங்களை ஏன் மென்போக்கோடு அணுகுகிறது.?

பகுத்தறிவுவாதிகள் எவராவது இறந்த மனிதன் ஏசு உயிர்த்ததற்கு சான்று கேட்டிருக்கின்றனரா..? அல்லா எங்கிருக்கிறார்.. அவருக்கு என்ன உருவம் என்பதற்கு சான்று கேட்டுள்ளனரா..?

அது ஏன் பகுத்தறிவு இந்து சமயத்தை மட்டும் குறி வைத்து நிற்கிறது. மூடநம்பிக்கைகள் சமயம் மட்டும் சார்ந்து தானா எழுந்துள்ளது. வேறு வகைகளில் இல்லையா.?

ஏன் அறிவியல் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளில் மூடநம்பிக்கைகள் இல்லையா..? மத நம்பிக்கைகள் இல்லையா..? அவர்கள் ஏன் அறிவியலை ஊட்டுகிறார்கள்.. பகுத்தறிவு என்பதையும் சுயமரியாதை என்பதையும் தன்மானம் என்பதையும் உச்சரிச்சுக் கொண்டு மத எதிர்ப்பை சமூக எதிர்ப்பைச் செய்யவில்லை..?

அது ஏன் ஊருக்கு சொல்லும் சுயமரியாதை பகுத்தறிவை நீங்களும் உங்கள் குடும்பங்கள் மட்டும் கடைப் பிடிப்பதில்லை.. அனைத்தும் தொண்டனுக்கும் தமிழனுக்கும் மட்டும் தானா?

இப்படி பல தொடரான வினாக்களுக்கு நீங்கள் விடை கூறத் தயாரா..?

ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்...


84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே குட்டி நாடு ... உங்களுக்கு தெரியுமா?


எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு...

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ?

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள்...

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்.

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது.

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்.


கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம்..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்.

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு.

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று..

அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்...

உயிரை திருப்பி தர முடியுமா...