01/02/2019

பத்து நிமிட தாமதத்தால், முத்தலாக் கூறி விவாகரத்து...


உத்தரப்பிரதேசத்தில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவி, வீட்டுக்கு வர 10 நிமிடம் தாமதமானதால் கணவன் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் இட்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறியுள்ளார். கணவரும் அனுமதிக்கவே, அவர் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் கணவன், சொன்ன நேரத்திற்குள் மனைவியால் வீடு திரும்ப முடியவில்லை. 10 நிமிடம் தாமதமாக வீட்டுக்கு வந்த தன்னுடைய மனைவிக்கு செல்போனில் மூன்று முறை தலாக் சொல்லியுள்ளார்.

கணவரின் இந்த முத்தலாக்கை ஏற்க மறுத்த அந்தப் பெண், இந்த விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும் எனவும், இல்லையென்றால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்...

தமிழகத்திலேயே அதிகம் வாக்காளர்கள் கொண்ட தொகுதியானது சோழிங்கநல்லூர்...


தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடியாக உயர்ந்துள்ளது என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

வாக்காளர் இறுதி பட்டியலை, சத்ய பிரதா சாஹு இன்று வெளியிட்டார். அப்போது சில சுவாரசிய தகவல்கள் வெளியாகின. தமிழகத்தை பொறுத்தவரை 2 கோடியே 92 லட்சம் ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 2 கோடியே 98 லட்சம் பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 472 பேர் உள்ளனர் தமிழகத்தில் 18 வயது முதல் 19 வயது வரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 759 வாக்காளர்கள் உள்ளனர் 80 வயதுக்கு மேல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர் தமிழகத்திலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதி காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூர். இங்கு மொத்தம் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் உள்ளது. 1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர்...

பிரபல உணவகத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்...


சென்னை வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரு முறை பயன்படுத்திதூக்கி வீசப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்ததடையை தீவிரமாக செயல் படுத்தும் விதமாக சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நேற்று வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில்தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பெட்டிகள், கப்புகள், குவளைகள், தட்டுகள் என மொத்தம் 1 டன் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்துறை சார்பில் இதுவரை சுமார் 6.7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன...

சென்னை போலீஸாரால் வாலிபர் தற்கொலை....


 https://youtu.be/gGz8S1qPK8A

Subscribe the channel for more news...

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இப்படிச் ’செக்’ செய்யுங்கள்...


உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தேர்தல் நேரம் நெருங்கும் போது உறுதி செய்துகொள்வது அவசியம்.
   
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்தியக் குடிமகனாக உங்களது வாக்குரிமையைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பது குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால்தான் வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயார் செய்யப்படும். இப்பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களின் பெயர் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக, வரப்போகும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.

உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பின், நிச்சயமாக அவர்களது பெயர் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். ஆனால், சில நேரங்களில் வாக்கு சாவடிக்குச் சென்ற பின்னர்தான் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலிலேயே பெயர் இல்லாததை வாக்களர்கள் அறிந்துகொள்வார்கள். இதனால்தான், உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தேர்தல் நேரம் நெருங்கும் போது உறுதி செய்துகொள்வது அவசியம்.

’செக்’ செய்வது எப்படி?

இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று ஜனவரி 31-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வாக்காளர் பெயர்ப் பட்டியலை வெளியிடும். அதனால், இந்தியக் குடிமக்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.

1. National Voters’ Service Portal என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும்.

2. இடப்புறம் உள்ள search ஆப்ஷன் மூலம் உங்களது பெயரை டைப் செய்து பெயர் இடம்பெற்றுள்ளதா எனப் பாருங்கள். இதில் search ஆப்ஷனைக் கிளிக் செய்தவுடன் தோன்றும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாக நிரப்பவும்.

3. இதன் மூலம் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை இடம்பெறச் செய்வது எப்படி?

1. National Voters’ Service Portal தளத்தில் அதற்கான சிறப்பு விண்ணப்பங்கள் இடம்பெற்றிருக்கும்.

2. தளத்தின் மெயின் பக்கத்திலேயே இதற்கான விண்ணபங்கள் இடம்பெற்றிருக்கும்.

3. புதிய வாக்காளர்கள் form எண் 6 மூலம் புதிதாகப் பதியலாம். இதற்கு ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயதுச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் அவசியம்.

4. உங்களது பெயர், வயதில் ஏதும் திருத்தம் இருந்தால் form 8-ஐ நிரப்ப வேண்டும்.

5. முகவரியில் திருத்தம் செய்ய form 8A பயன்படுத்த வேண்டும்.

6. தொகுதி மாறிய வாக்காளர்கள் form 6 உடன் form7-யும் பூர்த்தி செய்ய வேண்டும்...

தெலுங்கு திமுக ஸ்டாலின் கலாட்டா...


தமிழ் மொழியை இழிவு படுத்தும் சங்கரமடக் கும்பலுக்கு எதிராக தமிழ் மொழியை நெஞ்சிலேந்திய வள்ளலாரை நினைவு கூறுவோம்...


ஆரிய எதிர்ப்பு என்பது தமிழர்களின் வரலாற்றில் ஆதிகாலந்தொட்டே இருந்து வந்துள்ளது. திருவள்ளுவர் இதனை தொடங்கி வைத்தார். பிறகு ஆன்மீகத் தளத்தில் நின்று சித்தர்கள் போர் தொடுத்தனர். இருப்பினும் ஆரியம் தமிழோடு கலந்து தன்னை புதுப்பித்துக் கொண்டது. இதனை எதிர்த்து தமிழை கருவியாக்கி போராடிய மாபெரும் புரட்சியாளர் தான் இராமலிங்க அடிகளார்.

அவர் எப்போதும்  தமிழை இயற்கையுண்மைச் சிறப்பியல் மொழி என்றும், எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்றும் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி என்றும் போற்றிப் புகழ்ந்திடுவார்.

இவர் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் இராமகிருட்டிண பரமகம்சர், தயானந்த சரசுவதி, இராசராம் மோகன் ராய், விவேகானந்தர் ஆகியோர் வடமொழியை ஏற்று வைதீக மதத்தை போற்றி வந்தனர். இவரோ தமிழை ஏற்காத வைதீக மதத்தையும் வடமொழியையும் புறக்கணிக்கத் துணிந்தார். ஆரிய மொழிகளில் மனம் ஒட்டாத படியால் சாகாக் கல்வியை தரும் ஆற்றல் மொழியான தென்மொழியில் பற்று கொண்டதாக பின்வருமாறு கூறுகிறார்:

"இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் பொழுது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில்  எனக்கு ஆசை செல்ல ஒட்டாது பயிலுதற்கு மணிதற்கும் மிகவுமிலேசுடையதாய்ச் சாகாக் கல்வியை இலேசிலறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி யொன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்"

மேலும், வள்ளலார் 'சமரச சுத்த சன்மார்க்கம்' எனும் பெயரில் புதிய சங்கத்தை தோற்றுவித்து, கடவுள் ஒருவரே! அவர் ஒளிவடிவமானவர்! எல்லா உயிர்களிடத்திலும் அன்பும் இரக்கமும் கொள்வீராக! என்று மக்களிடம் முழங்கினார்.

 "இருட்சாதித் தத்துவச்
 சாத்திரக் குப்பை
 இருவாய்ப் புன்செயில்
 எருவாக்கிப்போட்டு
 மருட்சாதி சமயங்கள்
 மதங்களாச் சிரம
 வழக்கெல்லாம் குழிக்கொட்டி
 மண்மூடி போட்டு"
 மேற்கண்ட பாடலில், சாத்திரக் குப்பைகள் தான் இருட்சாதி தத்துவத்தையும் ஆச்சிரம வழக்கத்தையும் சமய மதத்தையும் தோற்றுவித்தன. ஆகவே அவற்றைக் குழியில் கொட்டி மண்போட்டு மூடுங்கள் என சாதிப் பித்துப் பிடித்து அலைவோர்க்கு அறிவுரை புகட்டினார்.

வள்ளலார் பார்ப்பனீய பண்டாரங்களின் ஆடம்பர காவி உடைக்கு எதிராக வெள்ளுடை தரித்தார். ஒருமுறை அவர் காலத்தில் வாழ்ந்திருந்த சங்கராச்சாரியார் வடமொழி நூலொன்றில் ஐயம் தோன்ற, அதனை விளக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, 'சமசுகிருதமே மாத்ரு பாஷை' (இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி) என்று சங்கராச்சாரியர் கூறிடவே, சட்டென்று நொடிப்பொழுதில் வள்ளலார், "சமசுகிருதம் மாத்ரு பாஷை என்பது உண்மையெனில், அதற்கு  'எமது தமிழே பித்ரு பாஷை'  (இந்திய மொழிகளிக்கெல்லாம் தந்தை மொழி) என்று பதிலடி தந்தார். சமசுகிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் நரேந்திர மோடியின் வாரிசுகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

சங்கர மடத்து குரு பீடங்கள் பெண்களை 'உவர்நிலங்கள்' என்று வர்ணித்த போது ஆணும், பெண்ணும் சமமாக இறைவனால் படைக்கப்பட்டவர்கள். ஆதலால் பெண்களை பாவப் பிறவி இழிபிறவி என்று ஒதுக்கி வைக்காமல் கல்வி புகட்டுங்கள்! என்று பரப்புரை செய்தார்.

தமிழ் மொழியிலிருந்து பிரிந்து வடமொழியோடு கலந்து போன ஏனைய திராவிட மொழிகளையும் அவர் விட்டு வைக்க வில்லை. அந்த மொழிகளில் இல்லாத தமிழ்மொழிக்குரிய இலக்கண சிறப்புகளை பின்வருமாறு கூறுகிறார்.

"ஆரியம், மகாராட்டிரம், ஆந்திரம் என்று பற்பல பாஷைகளைப் போலாகாமல்- பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாகவும், ஒலியிலே சாயும் கூட்டென்னும் சக்தி அதி சுலபமாயும் எழுதவும் கவி செய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்காரமின்றி எப்பாஷையின் சந்தங்களையும் தன் பாஷையுள்ளடக்கி ஆளுகையால் ஆண் தன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ் ற் ன் என்னும் முடி நடு அடி சிறப்பியலக் கரங்களில்  முடிநிலை இன பாநுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கையுண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பிய யொலியாம்."

 கடினமான இந்த சாரத்தைப் பிழிந்து "தமிழ்ப் பாஷையே அதிக சுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம்" என்னும் வாசகமாக வடித்துத் தருகிறார் வள்ளலார்.

அடிகளார் காலத்தில் கால்டுவெல் அவர்களின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் வெளிவரவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இருந்தும், 'தமிழ் தனித்தியங்கும் மொழி' என்பதை ஆராய்ச்சிச் சான்றுகளுடன் மெய்ப்பித்த தமிழர் இவரே.

 வள்ளலாரை மானசீகமாக நேசித்த தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் அவர்கள் "தாய்மொழிப் பற்றும் துறக்க முடியாதது, துறக்கவும் கூடாது என்பதனை உலகினர்க்கு உணர்த்தியவர் வள்ளலார் ஒருவரே" என்பார். தாய்மொழிப் பற்றை துறந்து வாழும் தமிழர்கள் இனியாவது வள்ளலாரின் நூல்களைப் படித்து தமிழ்மொழி உணர்ச்சிப் பெறுதல் வேண்டும். அது ஒன்றே தமிழினத்தை உய்விக்கும் வழியாகும்.

நூல் உதவி: ம.பொ.சிவஞானம் எழுதிய, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு...

ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு...


கைதாகிறார் நடிகை பானுப்பிரியா.. தீவிரமடைகிறது சிறுமி துன்புறுத்தல் வழக்கு...


நடிகை பானுபிரியாவின் பெயர் கடந்த சில நாட்களாக பிரச்சனையில் அடிபடுகிறது. அதாவது அவர் வீட்டில் பணிபுரியும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது.

இதுவரை அந்த சிறுமிக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும் பானுபிரியாவின் அண்ணனால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார் என்றும் அந்த சிறுமியின் தாயார் ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை நடத்திவரும் வேலையில் நடிகை பானுபிரியா மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அந்திர டிஜிபிக்கு ஆந்திர குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு கடிதம் கொடுத்துள்ளனர்.

பிரச்சனை தீவிரமடையவே நடிகை கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது...

இயற்கை மீட்சி பெறவும் காடுகள் உருவாகவும் நம் எண்ண அலைகளைக் குவிப்போம்...


தமிழ்நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறி கம்ம நாயுடுக்களின் வரலாறு...


ஆந்திராவில் 600 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது சந்திரிகிரி (வரைபடத்தில் 1) பகுதியில் இருந்து தமிழகத்தில் குடியேறிய கம்மவார் பற்றிய வரலாற்று தொகுப்பே இது.

(இதற்கு முன்பே டெல்லி சுல்தானிய படையெடுப்பின் போது தெலுங்கர்கள் மிகச்சிறிய அளவில் தமிழகத்திற்குள் குடியேறியுள்ளனர்).

கம்மவார் சாதி தோன்றிய வரலாறு என பல ஆன்மீக கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன மகாலட்சுமியின் கம்மலில் இருந்து தோன்றினர் என்றவாறு, எனவே அதை விட்டுவிடுவோம்.

இவர்கள் கரிசல்காட்டில் விவசாயம் செய்யும் குடிகள் ஆவர்.

இவர்கள் தமிழகத்தில் குடியேறும்போது நடந்ததாக ஒரு கதை உள்ளது. இவர்கள் ஆந்திராவில் பஞ்சம் ஏற்பட்டபோது தமது குலதெய்வமான ரேணுகாதேவியை வணங்கினார்களாம். உடனே அந்த தெய்வம் கொங்குநாட்டின் சென்னிமலை ஆண்டவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி செழிப்பான பகுதியான கொங்கு பகுதியில் குடியேற அருள் வழங்கியதாம்.

உடனே அவர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கொண்டம நாயுடு என்பவர் தலைமையில் கொங்கு பகுதிக்கு வந்தனராம்.

அப்போது சென்னிமலை முதல் உப்பாறு வரை அறுபது மைல் பரப்புள்ள நிலத்திற்கு உரிமையாளர் காணியாள கந்தசாமிக் கவுண்டர் எனும் பெரும் நிலக்கிழார்.

அவர் 12 கிராமங்களுக்கு அதிகாரி.

ஒரு பண்டாரம் போல மாறுவேடத்தில் சென்னிமலை நாதன் கம்மவார்களை சந்தித்து அழைத்து வந்து கந்தசாமிக் கவுண்டரிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்துவிட்டாராம்.

வந்தது சென்னிமலை ஆண்டவன் என்று பரவசமடைந்த கந்தசாமி கவுண்டர் உப்பாற்றங்கரையில் மூன்று காத தூரம்வரை இருந்த பகுதியை பட்டயம் எழுதிக் கொடுத்தாராம்.

இலவசமாக வாங்காமல் கம்மவார்கள் தம்மால் முடிந்த சிறுதொகையாக நூறு வராகன் கொடுத்தனராம்.

கம்மவார்கள் அங்கே கூடாரம் அமைத்து குடியேறினர்.

இது கம்மவார் பட்டி என்று பெயர் பெற்றது.

தற்போது கம்பிளியம்பட்டி (2) என்றழைக்கப்படுகிறது.

அதன்பிறகு சூலூர் (3), கரடிவாவி (4) போன்ற இடங்களில் குடியேற்றங்களை அமைத்தனர்.

பிறகு தெலுங்கர் படையெடுப்பு தமிழகத்தின் மீது நடக்கிறது.

நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் பரவுகிறது.

கம்மா உட்பட தமிழகத் தெலுங்கர் வாழ்வில் வசந்தம் வீசத் தொடங்குகிறது.

கம்பண உடையார் காலத்தில் மதுரை, திருச்சி ஜில்லாக்களில் பாளையங்கள் ஏற்படுத்தி தெலுங்கர் ஆளத்தொடங்கினர்.

நாயக்கர் ஆட்சி ஏற்கனவே இருந்த ஆட்சிமுறையை ஒழித்து நிலத்தை பாளையங்களாகப் பிரித்து ஆண்டது.

கொங்கு முழுவதும் காகவாடி, காடையூர், மஞ்சாபுரம், சமத்தூர், ஊத்துக்குளி, நிமந்தம்பட்டி, தாரமங்கலம், புரவிபாளையம், தொப்பம்பட்டி, மரக்கூர், செவ்வூர், பழைய கோட்டை, அவ்வம்பட்டி, சமச்சுவாடி, சொதம்பட்டி, துங்காவி ஆகிய பாளையங்கள் தோன்றின.

இவற்றில் பெரும்பான்மை தெலுங்கர் வசம் இருந்த பாளையங்கள்.

தமிழகத்தின் நாயக்கர் ஆட்சி ஆந்திராவில் நிலவிய ஆட்சியை விட தெலுங்கு மக்களுக்கு அதிக வாய்ப்பும் வளங்களும் அள்ளித்தந்ததால் தெலுங்கர் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் குடியேறினர்.

கி.பி.1510 ல் கம்மவார் தமக்கென ஒரு நகரத்தை கட்டிக்கொண்டனர்.

தமது இனத்தின் மன்னனான கிருஷ்ணதேவராயர் நினைவாக கிருஷ்ணதேவராயபுரம் அல்லது ராயகிருஷ்ணபுரம் (5) என்று பெயரிட்டனர்.

(கிருஷ்ணதேவராயர் காலம் கம்மவார் வரலாற்றில் பொற்காலமாகும்).

இது 1660 வாக்கில் பெருமழையால் ஏற்பட்ட மண்சரிவு வந்து கொட்டிய மணலால் நிறைந்து அழிந்துவிட்டது.

இந்த நகரத்தில் இருந்தோர் இடம்பெயர்ந்து பாப்பநாயக்கன் பாளையம்(6) பீளமேடு அல்லது பூளமேடு (7) சற்று தொலைவில் வேலூர் மாவட்டத்தில் ஆவாரம்பாளையம் (8) எனும் ஊர்களை அமைத்து குடியேறிக்கொண்டனர்.

1529ல் மதுரை நாயக்கராக பொறுப்பேற்ற விசுவநாத நாயக்கர் காலத்தில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருநெல்வேலி,மதுரை, ராமநாதபுரம், திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது.

இவரது காலத்தில் குறிப்பிடும்படியான குடியேற்றம் நடந்துள்ளது.

கம்மவார் மட்டுமல்லாது கவரா, கம்பளத்தார், சோணியர், ஒட்டர், சக்கிலியர், தொம்பர், ஆகிய தெலுங்கு சாதிகளும் தமிழகத்தில் குடிபுகுந்தனர்.

முக்கியமாக தெலுங்கு பிராமணர்கள் கணிசமான அளவு இந்த காலகட்டத்தில் குடிவந்தனர்.

விசுவநாத நாயக்கர் காலத்தில் கோவிந்த நாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம், மொண்டி பாளையம், சித்தநாயக்கன் பாளையம் என்று தமது ஊர்த்தலைவர்கள் பெயரில் தெலுங்கர்கள் குடியேற்றங்களை அமைத்தனர்.

இதற்கடுத்த கம்மவர்களின் குறிப்பிடும்படியான குடியேற்றம் 1700களில் சந்திரகிரியிலிருந்தும் 400 கி.மீ வடக்கே குண்டூர் ஜில்லாவில் உள்ள ராசகொண்டலு (9) பகுதியில் இருந்து பாப்பநாயக்கன் பாளையத்திற்கு கம்மவார் பெருமளவு குடியேறியது ஆகும்.

மைசூர் படையெடுப்பு நாயக்கர் ஆட்சி மீது நடந்தது.

இதனால் கம்மா மக்கள் பலர் தென் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

(மைசூர் படை மதுரைக்கு அருகே வரை வந்துவிட்டது.

திருமலை நாயக்கர் 71 வயதில் படுத்த படுக்கையாக இருந்தார்.

ஆனாலும் சேதுநாட்டை அப்போது ஆண்ட ரகுநாத சேதுபதியிடம் அவர் உதவிகேட்டு மறவர் படையை பெற்று போரை நடத்தினார்.

மைசூர் படையை தொடங்கிய இடத்திற்கே பின்வாங்கச் செய்தார்.

தெலுங்கருக்கும் கன்னடருக்கும் நடந்த இப்போரில் இருதரப்பினரும் தோற்றவர் மூக்கை மேல் உதடுவரை அறுத்து கொடூரமாக சண்டை போட்டனர்.

பிறகு திருமலை நாயக்கர் கொங்கு பகுதியில் தெலுங்கரை மீண்டும் குடியமர்த்தி பொட்டதிக்கா பாளையம், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் கோவிலும் கட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் தெற்கே விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் குடியேறிய கம்மவார் தமது உண்மையான பட்டமான நாயுடு என்பதுடன் சில இடங்களில் நாயக்கர் என்றும் பட்டத்தையும் பயன்படுத்துகின்றனர்.

மற்றபடி நாயுடு என்றாலே கம்மா சாதியினரைத்தான் குறிக்கும்)

நாயக்கர் ஆட்சியில் மேலும் நாகமநாயக்கன் பட்டி, பாப்பநாயக்கன் பட்டி, அல்லமநாயக்கன் பட்டி, ரெட்டியப்பட்டி, இடையர் தர்மம், சேடப்பட்டி, அய்யம்பாளையம் போன்ற பல தெலுங்கு குடியேற்றங்கள் தமிழகம் முழுவதும் தோன்றின.

முதலில் அகதியாக பிறகு நிரந்தர குடிகளாக பிறகு பாளையக்காரர்களாக பிறகு நிலவுடைமைச் சமூகமாக பிறகு ஆதிக்க வர்க்கமாக என தமிழகத் தெலுங்கரின் வளர்ச்சி பிரம்மாண்டமானது.

தமிழகத் தெலுங்கரில் கம்மவார் சாதியினர் பாதிக்கும் மேல் ஆவர்.

தமிழக மக்கட்தொகையில் 6% வரை வாழும் கம்மாக்கள் ஒவ்வொரு ஆட்சியிலும் திராவிட கட்சிகள் மூலம் குறைந்தது 10 எம்.எல்.ஏ-வாவது இருக்கிறார்கள்.

இப்படியாக கம்மா சாதியினர் தமிழகம் முழுவதும் (குறிப்பாக கொங்கு பகுதியில்) கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை என்று நடத்தி மாபெரும் ஆதிக்க சக்தியாக திகழ்கிறார்கள்...

தமிழினம் மறந்த கஜா புயல்...


அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்....


"அரைஞாண்" நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், பார்வை படக்கூடாது என்றுதான் கட்டிவிடுறோம் என்று சொல்லுவார்கள்.....

உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?? நிச்சயமாக இல்லை ....

அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது.

முதலாவது பலன்...

அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி..கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராச(ஜ) தந்திரி அது.. விடம் கொண்ட பூச்சிகள், பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை. எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விடத்தின் கடிவாய்க்கும்

இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.

கையினால், விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.

மருத்துவ பலன்.

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக் கொடியாக மாறியது.

இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்.

இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது பார்வைக்காக என்று புறம்பு கூறுவதும் தவறு....

நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்ல மறந்ததை போல அல்லாமல் இனி நாமாவது நம் பிள்ளைகளுக்கு இது போன்ற நம் பாரம்பரியத்தை விட்டுகொடுக்காது சிறுசிறு விடயங்களையும் அவர்களுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்....

முத்தம் பசியின்மையை போக்கும்...


முத்தத்தால் பசியின்மையை சரிசெய்ய முடியும் என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அன்பை பரிமாறிக் கொள்ள முத்தம் கொடுக்கப்படுகிறது, இதுமட்டுமல்லாது பல்வேறு நன்மைகளும் விளைகின்றன என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது முத்தம் பசியின்மையை போக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.

இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஊக்கிகள் (Hormones) சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும்.

அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது, கோபம் மறைகிறது, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்றும் வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...

வந்தேறிகள்... திராவிடம், திராவிடன் என்று சொன்னால் செருப்பால் அடி...


நல்ல நீரூற்று என அறிவது எப்படி.....?


மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டு சென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று... கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

அவ்வளவு தூரம் நரிவேலை பார்க்கலைனா, 50 வருடமா, திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆள முடியுமா?


பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க...


கிராமப் பகுதியில் மாலை நேர விளையாட்டுகளில் இந்த பச்சைக்குதிரை விளையாட்டு நிச்சயம் இருக்கும், அதுவும் நிலா வெளிச்சத்தில் தான் அதிகம் விளையாடுவோம். பக்கத்து வீட்டு பசங்க, அவர்கள் உறம்பறை பசங்க என எல்லாரும் கூட்டமாக சேர்ந்து சின்ன பையனில் இருந்து பெரியவர் வரை வரிசையாக நின்று கொண்டு, அதில் ஒருவனை தேர்ந்தெடுத்து குனிய வைத்து வரிசையாக தாண்டுவதும், தாண்ட முடியாமல் கீழே விழுபவர்களைக் குனிய வைத்து விடுவோம்.

குனிந்து இருப்பவர் படிப்படியாக உயரம் அதிகரித்து குனிந்து நிற்பார், அப்போது தூரத்தில் இருந்து ஒடியாந்து குதித்து தாண்டும்போது சுற்றி இருப்பவர்களின் கரவோசம் மிக சந்தோசமாக இருக்கும், இதில் வெற்றி பெறுபவர்கள் 10 நாளைக்கு இந்த கதையவே சொல்லி சொல்லி மகிழ்வார்கள்...

இன்றைய குழந்தைகளிடம் பச்சைக்குதிரை விளையாடலாம் வாங்க என்று சொல்லிப்பார்த்தால் பேந்த பேந்த விழிக்கின்றனர் இதைப்போன்ற பல விளையாட்டுக்களை அவர்கள் அறியாமலே இருக்கின்றனர் என்பது தான் மிக வருத்தமான செய்தி. குழந்தைக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தாலும் பெற்றோர்கள் இது போன்ற பழைய விளையாட்டுக்களை சொல்லித்தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை..

நிச்சயம் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் நம் சிறார் வயதில் இந்த விளையாட்டை ரசித்து அனுபவத்து விளையாடி இருப்போம்.. நம் அனுபவத்தை அசைபோடுவோம்...

Remove Ur Acne & Pimples / முகத்திலுள்ள தழும்பு மற்றும் முகப்பருவை நீக்கலாம் வாங்க...


https://youtu.be/nFF3oaU4KVs

Subscribe the channel for more tips...

Kfc, McDonald's, Burger King, Marry brown. போன்ற வெளிநாட்டு உணவகங்களும்...


தலப்பாக்கட்டி, ஹைதராபாத், ஆம்பூர் பிரியாணி கடை, பார்பிக் நேஷன் போன்ற உள்ளூர் உணவகங்கள் உட்பட அனைத்துமே வணிகனின் பணத்தாசைக்காக ஒவ்வொரு விதமான ருசியால் உன்னை அவன் கடையை நோக்கி அழைக்கிறான் உன்னுடைய உடல்நலம் அவனுக்கு தேவையில்லை..

நம் உடல்நலம் நம் கையில் தான்...

சிந்தித்து செயல்படுவோம்...

பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் சத்து நிறைந்தவை...


புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?


நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.

உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக் கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.

இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை.

நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது...

பாஜக என்பது கார்பரேட் (இலுமினாட்டி) களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு கட்சி...


இந்த கார்பரேட் பாஜக தன் முதலாளிகளுக்காக வேலை செய்வார்களா.? அல்லது மக்களுக்காக வேலை செய்வார்களா..?

விழித்துக்கொள் தமிழா...


காண கிடைக்காத அபூர்வ புகைப்படம்...


இன்னைக்கு பல ஷோக்களில் வாவ், ஓ, சூப்பர்னு பாராட்டுற தீர செயல்களை எல்லாம்  தமிழன்  அப்பவே செய்து காட்டி விட்டான்  என்பதற்கு சான்று...

திருட்டு வந்தேறி திராவிடத்தை செருப்பால் அடித்து விரட்டுவோம்...


ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?


நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் நாம் படுத்தபின்  உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.

அப்போது நாம் எதைப் பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.

தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில்  பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.

உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்...

நாம் எளிதாக நினைக்கும் விஷயமெல்லாம் அதன் பின்புலத்தில் எப்பொழுதும் மிகப்பெரும் கார்பரேட் சதி உள்ளது...


BJP / Modi / Aims / பாஜக மோடி சொல்வதெல்லாம் பொய்...


https://youtu.be/Noqvuphqams

Subscribe the chanbel for more news...

மண்ணுக்கும் உழவருக்கும் நண்பன் மண்ணுளிப் புழு - ஒரு அதிர்ச்சித் தகவல்...


பாம்பென்றால் படையே நடுங்கும் என்பர். பாம்பை மனிதர்கள் இன்றுவரை ஒரு காலனாய் தான் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழர்களாகிய நமது முன்னோர்கள் நாகர்கள் என்றும் அரவர்கள் என்றும் அழைக்கப்பட்டது நாகங்களை கையாளும் வித்தையை நன்கு உணர்ந்ததால் என்பதே வரலாறு நமக்கு உரைக்கும் செய்தி. சரி ஏன் இந்த விளக்கங்கள். நேரடியாக செய்திக்கு செல்வோம்.

பாம்புகள் என்றால் ஏன் படையே நடுங்கும் என்றால் பாம்பு கடித்து நஞ்சு பரவத்துவங்கிவிட்டால் அதன் பிறகு அதில் இருந்து உயிரை மீட்பது என்பது சிரமமான காரியமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பல வகையான பாம்புகள் பூமியில் உள்ளன. அவற்றில் பல கொடிய நஞ்சுடையது. பல நஞ்சற்றது. இப்போது நாம் பார்க்க இருப்பது மண்ணுளி பாம்பு, இல்லை இல்லை மண்ணுளி புழு.

ஆம். மண்ணுளி என்பது பாம்பின் இனமே கிடையாது. அது புழுவின் இனம். சற்று பெரிய அளவில் வளரக்கூடிய புழு இனம். பிறகு ஏன் துவக்கத்தில் பாம்பை பற்றி இவ்ளோ பெரிய கதை அளந்தீர்கள் என்று நீங்க கேட்பது தெரிகிறது.

இதோ விடை... சில வருடங்களுக்கு முன்னர் மண்ணுளி பாம்பை கடத்துகிறார்கள். மண்ணுளி பாம்பு ஏதோ கேன்சர் நோய்க்கு மருந்தாக பயன்படுகிரதாம் என்றவாறு பல செய்திகளை நாம் பதித்தும் கேட்டும் இருப்போம். அதுவும் உண்மை இல்லை. அது நம்மை ஏமாற்ற செய்த சூழ்ச்சியே.

என்ன சூழ்ச்சி?

மண்ணுளி புழு என்பது வேளாண்மையின் நண்பன். மண் புழு எப்படி மண்ணில் புரத சத்து உற்பத்தியாக வழி செய்கிறதோ அதை விட பல மடங்கு வீரியமான இயற்கையான உரத்தை மண்ணிற்கும் வழங்கும். இந்த புழு அதிக கூச்ச சுபாவம் கொண்டது.

மேலும் இந்த புழுக்கள் மணற்பரப்பு உள்ள இதங்களில் தான் அதிகம் வசிக்கும். இவைகள் மூச்சு விடுவதன் மூலம் மண்ணில் காற்று கடத்தப்படும் திறனும், ஆக்சிஜனும், நைட்ராஜெனும் அதிகமாகிறது. ஆகவே வேளாண்மையில் அதிகமான விளைச்சலை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இப்படியான நன்மைகளைக் கொண்டிருக்கும் காரணிகளாலே தான் இந்த புழுவை உலக சந்தை குறிவைத்தது. இப்படியான உயிரனங்கள் இருப்பதால் தான் உழவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்யமுடிகிறது. அதனால் அவர்கள் நமது செயற்கை உரத்தையும், பூச்சிமருந்தையும் வாங்காமால் இருகிறார்கள் என்று உணர்ந்த நிறுவனங்கள் தான் இந்த புழுவை பாம்பென்றார்கள், இந்த பாம்பை மருந்தேன்றார்கள், அதற்கு லட்சக்கணக்கில் விலை வைத்தார்கள், நம்மையே அதை கடத்தவும் வைத்தார்கள், இன்று அப்படியான ஒரு புழு இனத்தையே இல்லாமல் செய்து விட்டார்கள்.

சிந்தித்து பாருங்கள் ஒரு புழுவிற்கு லட்சக்கணக்கில் விலை வைக்கிறார்கள் என்றால் அதன் திறன் என்னவாக இருக்கும். அவைகளின் நமது வேளாண்மைக்கு எந்த அளவில் பயன்பட்டிருக்கும் என்று. தொடர்ந்து இந்த வியாபார அரசியலால் நாம் முட்டாளாக்கப்பட்டு வருகிறோம்...

ICICI வங்கி வீடியோகான் நிறுவனத்துடன் சேர்ந்து பண மோசடி இதனை விசாரித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்த CBI அதிகாரி அறிக்கையை தாக்கல் செய்த மறுநாளே இட மாற்றம் மத்திய அமைச்சர் அருன்ஜெட்லியின் கைங்கரியம்...


ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?


நாம் கற்பனை செய்யும் அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.

சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.

வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.

ஆம் நாம், பூமி,  இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும்.

பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...