உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தேர்தல் நேரம் நெருங்கும் போது உறுதி செய்துகொள்வது அவசியம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்தியக் குடிமகனாக உங்களது வாக்குரிமையைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பது குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால்தான் வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயார் செய்யப்படும். இப்பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்களின் பெயர் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக, வரப்போகும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.
உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பின், நிச்சயமாக அவர்களது பெயர் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். ஆனால், சில நேரங்களில் வாக்கு சாவடிக்குச் சென்ற பின்னர்தான் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலிலேயே பெயர் இல்லாததை வாக்களர்கள் அறிந்துகொள்வார்கள். இதனால்தான், உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை வாக்காளர்கள் தேர்தல் நேரம் நெருங்கும் போது உறுதி செய்துகொள்வது அவசியம்.
’செக்’ செய்வது எப்படி?
இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று ஜனவரி 31-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வாக்காளர் பெயர்ப் பட்டியலை வெளியிடும். அதனால், இந்தியக் குடிமக்கள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
1. National Voters’ Service Portal என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும்.
2. இடப்புறம் உள்ள search ஆப்ஷன் மூலம் உங்களது பெயரை டைப் செய்து பெயர் இடம்பெற்றுள்ளதா எனப் பாருங்கள். இதில் search ஆப்ஷனைக் கிளிக் செய்தவுடன் தோன்றும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாக நிரப்பவும்.
3. இதன் மூலம் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை இடம்பெறச் செய்வது எப்படி?
1. National Voters’ Service Portal தளத்தில் அதற்கான சிறப்பு விண்ணப்பங்கள் இடம்பெற்றிருக்கும்.
2. தளத்தின் மெயின் பக்கத்திலேயே இதற்கான விண்ணபங்கள் இடம்பெற்றிருக்கும்.
3. புதிய வாக்காளர்கள் form எண் 6 மூலம் புதிதாகப் பதியலாம். இதற்கு ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வயதுச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் அவசியம்.
4. உங்களது பெயர், வயதில் ஏதும் திருத்தம் இருந்தால் form 8-ஐ நிரப்ப வேண்டும்.
5. முகவரியில் திருத்தம் செய்ய form 8A பயன்படுத்த வேண்டும்.
6. தொகுதி மாறிய வாக்காளர்கள் form 6 உடன் form7-யும் பூர்த்தி செய்ய வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.