23/10/2017

நடிகர் சங்க தலைவர் விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்...


சென்னை வடபழனியில் விஷாலுக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

அந்த அலுவலகத்தில் மத்திய கலால் வரித்துறை கீழ் உள்ள ஜிஎஸ்டி கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் வந்தனர்.

சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அங்கு சோதனை நடைபெற்றது.
இந்த திடீர் சோதனையின் போது விஷாலும், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரும் அங்கு இல்லை.  இருந்த போதும், நிறுவனத்தில் இருந்தவர்கள் அதிகாரிகள் கேட்ட அனைத்து தகவல்கள், ஆவணங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக மற்றும் மத்திய அரசை விஷால் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக நடிகர் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மெர்சல் விவகாரத்தில் பாஜக தலைவர் மீது விஷால் வைத்த விமர்சனங்களால் இந்த சோதனை நடைபெறுவதாக பரபரப்பாக பேசப்படுகிறது...

வயிற்று போக்கு உடனே நிறுத்த சித்தர் மருத்துவம்...


பாஜக வும் அரசுத் துறைகளும்...


நேற்று - மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தாக கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பாஜக ராஜா பேசுவது கண்டனத்துக்கு உரியது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- தெலுங்கன் விஷால் ரெட்டி...

இன்று - ஜிஎஸ்டி அதிகாரிகள் தெலுங்கன் விஷால் ரெட்டி இல்லம் மற்றும் அலுவலகத்தில் சோதனை...

யாருக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது...


நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் பரபரப்பு..

கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் தீக்குளித்து தற்கொலை முயற்சி!கரிகட்டைகளாக நால்வரும் கவலைகிடம்.

பெற்றோரே பிள்ளைகளை கொளுத்தும் அளவிற்கு கொடுமை செய்துள்ளார்கள்.

இந்த படத்தை பார்த்தது முதல் கை நடுங்கிக் கொண்டு இருக்கிறது.

1.35 லட்சம் கடனுக்கு 2.5 லட்சம் கந்துவட்டி கொடுத்துள்ளார்கள்.

காரணம் போலிசார் லஞ்சம் வாங்கி கொண்டு கந்துவட்டிகாரனுடன் சேர்ந்து அந்த குடும்பத்திற்கு அவ்வளவு தொல்லை கொடுத்து வந்து உள்ளனர்.


இதில் கூட இந்த எச்ச விபச்சார ஊடகத்தின் செயலைப் பாருங்கள்....

சாம்சங் நிறுவனமும்.. வடகொரியா - தென் கொரியா வும்...


டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. இன்றுடன் போராட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு திரும்ப இருப்பதாக தகவல்...


இன்றைய போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் கழுத்தை அறுத்து தற்கொலை செய்யும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்...

தமிழக அதிமுக இபிஎஸ் - ஓபிஎஸ் அரசு மீண்டும் காவல்துறை யை ஏவி விட்டு அராஜகம...


உலக வரலாற்றில் உருளைக்கிழங்கு ஏற்ப்படுத்திய தாக்கம்...


உருளைக்கிழங்கு ஒரு காலத்தில் மதிக்கப்படாத உணவு...

பன்றிக்கு தரும் முக்கிய உணவாக இது இருந்தது அதுவும் நோஞ்சான பன்றிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவாக இது இருந்துள்ளது..

உருளைக்கிழங்கை சாப்பிடுவது கேவலமான செயலாக இருந்த காலமும் உண்டு..

போர் காலகட்டத்தில் அடிமைகளுக்கு வழங்கப்படும் உணவாகவும் இருந்தது..

அவித்த உருளைக்கிழங்கு ஒரு துண்டு  பல கருப்பு இன ஏழைகளுக்கு அன்றாட உணவாகவும் இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது..

இதற்கு காரணம் இத்தாலி போன்ற  மேலைநாட்டு பணக்காரர்கள் செய்த செயல் தான்..

பொதுவாக உருளைக்கிழங்கு என்பது மற்ற காய்கறிகள் போன்று அல்ல, உருளை கிழங்கு ஒரு வகையான பசியாற்றும் உணவு..

சோறுக்கு பதில் உருளைகிழங்கை மட்டுமே உண்டு வாழ்ந்த மக்களுக்கும் இருந்துள்ளனர்..

இந்த உருளைக்கிழங்கு வரலாற்றில் பயங்கர தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

ஆப்பிரிக்க பகுதியில் அடிக்கடி போர் நடப்பதால் அப்பகுதி மக்கள் பதுங்குகுழி களை அமைத்து அங்கே சிறிது சிறிதாக உருளைக்கிழங்கை தான் சேமித்து வைத்து இருந்துள்ளார்கள்..

காரணம் போர் முடிய மாதக்கணக்கில் கூட ஆகலாம் அதுவரை பதுங்குகுழி க்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்..

அந்த நேரத்தில் உருளைக்கிழங்கு தான் முழு நேர உணவாக உண்டு வந்துள்ளனர்..

மன்னர் காலத்தில் பஞ்சத்தை போக்க உருளை கிழங்கை பயிருடுவதையும் அதை ஊக்கப்படுத்தும் வகையில் பல மன்னர்கள் தங்களது தோட்டதில் உருளைகிழங்கை பயிருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் என்பதும் வரலாறு தான்..

Maria Antonia ப்ரான்ஸ் நாட்டின் இரானி என்றழைக்கப்படும் இந்த அரசி கூட உருளை கிழங்கின் பெருமதியை உணர்ந்து உருளைச் செடியின் பூவை மகுடமாக தலையில் வைத்து இருந்தால் என்றும் வரலாறு உள்ளது..

இந்த வரலாற்றை ஏன் கூறினேன் தெரியுமா?

சில பணக்காரர்கள்  சமீபத்திய பணக்கார உணவாகவுள்ள  (ப்ரெஞ் ஃபிரை) உருளைக்கிழங்கு பொறியல்  வாங்கி உதடு படாமல் சாப்பிடும் போது இந்த வரலாற்றை சொல்ல தூண்டியது..

ஃபிங்கர் சிப்ஸ் எனவும் ஃபரெஞ் ஃபிரை எனவும் விற்பனை செய்யும் பெரிய பெரிய சாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ள குளிர்சாதன அரங்கத்தில் உள்ள ப்ரெஞ் ஃபிரை புகைப்படங்கள் நம்மை அழைக்கிறது..

அவைகளுக்கு இந்த வரலாறு தெரியுமா?

இவைகள் பணக்காரன் சாப்பிடும் உணவு போன்றே ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது..

பெரு நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் ஒரு நாள் உணவாக ஒரு அவித்த உருளை கிழங்கும் ஒரு கோப்பை ஆட்டுப்பாலும் தான் பெரும்பாலான உணவாக இருந்துள்ளது என்ற தகவலும் உண்டு..

உங்கள் வீட்டில் இனி உருளைக்கிழங்கு கொண்டு வந்து வைத்தால் பல ஆயிரம் ஆண்டுகளுகளாக பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உணவாக இது இருந்துள்ளது என்ற மனதுடன் உண்ணுங்கள்..

ஆனால் ஒரு விஷயம் பாருங்கள் இப்படி உணவாக காலம் முழுவதும் உருளை கிழங்கு உண்ட மக்களுக்கு வாய்வு பிரச்சினை இருந்து இருக்க வேண்டுமே அதனால் இந்த உணவின் வீரியம் குறைந்திருக்க வேண்டுமே இதைப்பற்றி வரலாற்றில் எங்குமே குறிப்பு இல்லை...

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது நம்மிடம் எப்படி தொற்றிக் கொண்டது...

சிந்தியுங்கள் புலப்படும்...

பாஜக தமிழிசை இப்போது தான் ஒரு உண்மையை பேசி இருக்கு...


கால் ஆணி மற்றும் பரு குணமாக...


மயில் துத்தம் 10 கிராம்
ஊமத்தை இலைச்சாறு 50 மில்லி
தேங்காய் எண்ணெய் 100 மில்லி
எடுத்து பக்குவமாக மணல் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

பயன்கள் :

கால் ஆணி உள்ளவர்களுக்கு கால் ஆணி உள்ள இடத்தில் புது பிளேடுனால் மேலாக அறுத்து இந்த தைலத்தை பஞ்சில் மூன்று சொட்டு விட்டுஅந்த இடத்தில் வைத்து பஞ்சு நகராமல் டேப்பினால் இரவில் ஒட்டி பகலில் எடுத்துவிட வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால் போதும். கால் ஆணி குணமாகும்.

ஒரு சிலருக்கு கழுத்து, மார்பு, முகம் முதலிய இடங்களில் மரு தோன்றி அசிங்கமாக இருக்கும். அதற்கு அந்த இடத்தில் இரவில் ஒரு சொட்டு வைத்தால் போதும். ஒருசில நாட்களில் வலி இல்லாமல் உதிர்ந்து விடும்.

ஆறாத புண்களுக்கு :
       
சர்க்கரை வியாதி புண்ணுக்கு புங்க மரத்துப் பட்டையினால் கசாயம் வைத்து புண்ணை கழுவி நன்கு துடைத்துவிட்டு இந்த தைலத்தை பஞ்சில் போட்டு காற்றோட்டமாக பேண்டேஜ் துணியினால் கட்டி வர விரைவில் புண் ஆறும். புண் பக்கத்தில் ஈ வராது...

தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டது - அம்பேத்கர்...


நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம்...

திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்பதாகும்.

தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்தபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது.

பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது.

திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை.

நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை.

மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம்.

நூல்: தீண்டப்படாதவர்கள் யார்? - டாக்டர். அம்பேத்கர்.. தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94...

இலுமினாட்டி அமெரிக்கா வின் உண்மைகள்...


மணல் கொள்ளையர்கள் அட்டூழியத்தால், ஒரு கிராமமே தண்ணீரில் மூழ்கும் அபாயம்...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாலாற்றங் கறையில் அமைந்துள்ளது பட்டு கிராமம், இங்கு சுமார் 300, குடும்பங்களை சேர்ந்த 2000, பொது மக்கள்  வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தினரின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் விவசாய கூலி ஆகும், இந்த கிராமத்தில் பாலாற்று மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளதாகவும் இதன் காரணமாக சில நாட்களுக்கு முன் ஏற்ப்பட்ட ஆற்று வெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது எனவும், இப்பகுதியில் அதிக அளவில் மணல் கொள்ளையடிப்பதால் மீண்டும் வெள்ளம் ஏற்ப்பட்டால் கிராமமே ஆற்று வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.

தொடர் மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள்  பாலாற்றில் இருந்து சென்னை மற்றும் கர்நாடக மாநிலத்திற்க்கு கடத்த சுமார் 12, க்கும் மேற்பட்ட இடங்களில் 250, க்கும் மேற்பட்ட மணல் குவியல்களை கண்டு அதிர்ச்சியடைந்து பேர்ணாம்பட் தாசில்தார் அவர்களுக்கு தகவல் கொடுத்தனர் அதன் அடிப்படையில் அங்கு வந்த தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் குழுவினர் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மணல் குவியல்களை பரிமுதல் செய்தனர். மேலும் பரிமுதல் செய்யப்பட்ட மணல் குவியல்கள் அனைத்தும் அரசு கட்டிட கட்டுமாண பணிகளுக்  மட்டுமே பயன்படுத்தப்படும் என வேலூர் மாவட்ட கோட்டாட்சியர் கூறினார்.

செய்தியாளர்: ஞானவேல், குடியாத்தம்...

யோகா முத்திரைகள்...


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.

ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை.

இந்த பஞ்ச மஹாபூதங்கள் ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் ஈதர் என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.

நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன..

1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை..

1. பத்மாசனம் போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன..

முக்கியமான சில..

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.

பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும்.

அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.

பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும்.

முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.

பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.

பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.

பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.

பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.

பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும்.

இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.

பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும்.

அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

எச்சரிக்கை..

1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.

பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.

12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.

பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்...

அடப்பாவிகளா.. இவ்ளோ நாளா நோயாளிகளுக்கு பாம்பு தண்ணீர் தான் கொடுத்தீர்களா?


விவசாயம் காப்போம் என்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் ஒன்றை உயிர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது...


சென்னையிலிருந்து புறப்படுவதற்கான துவக்க விழா இன்று (22-10-17) காலை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

இதில் மே 17 இயக்க ஒருங்கினைப்பாளர்  திருமுருகன் காந்தி கலந்து கொண்டார். தொடர்ந்து தோழர் திருமுருகன் காந்தி, இயக்குனர் அமீர், பேராசிரியர் ஹாஜாகனி ஆகியோர் விழிப்புணர்வு பயணத்தை கொடியசைத்து துவங்கிவைத்தனர்.

இப்பயணம் சென்னை துவங்கி தமிழகமெங்கும் பயணித்து விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கிறது...

உண்மையான மெர்சல் மருத்துவர்கள்...


கன்னியாஸ்திரி உடையணிந்து ஷாப்பிங் வந்த வேற்று கிரகவாசிகள்.. பால் ஹெல்யர் ஷாக்...



வேற்று கிரகவாசிகள் பூமிக்கு ஏற்கனவே வந்துவிட்டதாக கனடாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பால் ஹெல்யர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பால் ஹெல்யர், பல ஆயிரம் ஆண்டுகளாக நான்கு வகைக்கும் மேலான வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

வேற்று கிரகவாசிகள் குறித்து கடந்த பல வருடங்களாக கருத்தரங்குகளில் பேசி வருகிறேன். ஒருமுறை எனது மனைவி மற்றும் நண்பர்களுடன் வேற்று கிரகவாசிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து வேற்றுகிரகவாசிகள் குறித்து நம்புகிறேன்.

இதுவரை நான்கிலிருந்து 8 வகைக்கும் மேலான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கான வழியை கண்டு பிடித்துள்ளனர்.

அதில் 4 வகையான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் அணுகுண்டை பார்த்து தான் வேற்று கிரகவாசிகள் மிகவும் வருந்துகிறார்கள்.

அணுகுண்டுகளில் பயன்பாட்டால் அண்டசராசரத்தில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் அதனை அவர்கள் வெறுக்கிறார்கள்.

வேற்றுகிரகவாசிகளிடம் பூமியை பசுமையாக்கும் பல யோசனைகள் உள்ளன. அவர்கள் நினைத்தால் பருவநிலை மாற்றங்களுக்கு நிரந்திர தீர்வு காண முடியும் என கூறியுள்ளார்.

இவ்வாறு பல அதிர்ச்சிகரமான செய்திகளை தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த அவர், சில வகையான வேற்று கிரகவாசிகள் மனிதர்களைப் போல தோற்றம் அளிப்பதாகவும், சில வேற்று கிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல உடையணிந்து ஷாப்பிங்கும் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வாதங்களுக்கு தேவையான ஆதாரங்கள் தன்னிடமில்லை என்று கூறும் பால் ஹெல்யர், அவற்றை நான் நேரில் பார்த்துள்ளது மட்டும் தான் என் ஆதாரம். நான் தான் ஆதாரம் என்றும் கூறியுள்ளார்.

பால் ஹெல்யரின் வார்த்தைகளை சிலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்பதோடு, பறக்கும் தட்டுகள் குறித்து பல ஆராய்ச்சிகளை நடத்திய விமானப் பொறியாளர் என்பதால் பால்ஹெல்யர் கூறுவதை வேதவாக்காக நம்பி வருகின்றனர்...

தமிழக விஞ்ஞானி அரசின் ஜப்பான் தொழில்நுட்பம்...


ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் தடுக்கப்பட வேண்டும்...

இதெல்லாம், வக்கிர புத்தியின் உச்சகட்டம்...



திருச்சி பாலக்கரை சர்வைட் என்ற கிருஸ்துவ பள்ளி்..

தீபாவளி முடிந்து பள்ளி சென்ற ஹிந்து மாணவர்களுக்கு அதிர்ச்சி..

பட்டாசு வெடித்ததாக சொன்னவர்கள் மற்றும் கையில் மருதாணி இட்டிருந்த மாணவிகள் ஆகியோருக்கு தண்டனை தரப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்..

அதாவது சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்திற்காக மாணவ, மாணவியருக்கு பிரம்படி தரப்பட்டு, பிரார்த்தனை செய்து கிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்கும்படி பள்ளி நிர்வாகம் செய்தது என்பதுதான் புகாரின் முக்கியமான உள்ளடக்கம்..

விஷயம் பிள்ளைகள் மூலம் பெற்றோருக்கு தெரியவர, இப்போது காவல்துறைக்கு புகார் போயிருக்கிறது...

மற்றவர்களின் மத நம்பிக்கையை, வாழ்வியலை அசைத்து பார்க்க முற்படுவது கடைந்தெடுக்க அயோக்கி யத்தனமான செயல்.. பிள்ளைகளை நம்பி அனுப்பும் பெற்றோருக்கு செய்யப்படும் நம்பிக்கை துரோகத்தில், உயர்மட்ட லெவல் இது...

கல்வியை போதிக்கும் நிறுவனங்களே களவாணிகளாக மாறுவதை அனுமதிக்கவே முடியாது..

விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வந்து, தவறிழைத்தவர்களை தண்டிக்க செய்வது காவல்துறையின் கடமை...

பாஜக வை வச்சி செய்றானுங்க...


அழுமூஞ்சிப் பேய்...


பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகப் கருதப்படுகின்ற ஜப்பானிய சாமுராய் அயோமா.

ஆள் கொஞ்சம் சபலிஸ்ட்.. தன் வீட்டில் வேலை பார்த்த அழகு வேலைக்காரி ஒகிகு மேல் அவருக்கு ஆசை. ஜாடைமாடையாகச் சொல்லி பார்த்தார். அவள் கண்டு கொள்ளவில்லை. நேரடியாகவும் கேட்டு பார்த்தார். பயந்து மறுத்தாள்.

எனக்கு இணங்கினால் நீ என் ஆசை நாயகியாக காலமெல்லாம் சுகமாக வாழலாம் டார்லிங் என்று ஆசை காட்டியும் பார்த்தார். ஒகிகு மசியவில்லை.

ஒகிகு வீட்டில் இல்லாத சமயத்தில் சமையலறைக்குள் சென்றார் அயோமா. அங்கே விலையுயர்ந்த டச்சு தட்டுகள் பத்து இருந்தன. அவற்றை எடுத்து கொண்டு சென்று கிணற்றில் போட்டு விட்டார். ஒகிகு இரவில் அயோமாவுக்கு உணவு பரிமாறினாள். டச்சு தட்டு எங்கே அதில் உணவைக் கொண்டு வா என்றார். சமையலறைக்கு சென்ற ஒகிகு அதிர்ந்து நின்றால் படபடப்புடன் தட்டுகளைத் தேடினாள். கண்ணிருடன் அயோமா முன்வந்து நின்றாள். என் விருப்பத்துக்கு சம்மதம் சொன்னால் உன்னை மன்னிக்கிறேன் என்று ஒகிகுவே மிரட்ட ஆரம்பித்தார். அவள் உறுதியாக நின்றால். அயோமா அவளைக் கட்டி வைத்து துன்புறுத்திக் கொன்றார். அதே கிணற்றில் அவளது உடலையும் தூக்கி போட்டார்.

சில நாள்கள் கடந்திருக்கும். இரவில் அந்த கிணற்றில் இருந்து அகோரமான ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. ஒன்று இரண்டு மூன்று என்று தட்டுகளை எண்ணும் ஒகிகுவின் குரல் அயோமாவின் காதுகளில் விழந்தன. ஒன்பது வரை எண்ணிய அந்தக் குரல் அதன்பின் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. தினமும் நள்ளிரவில் ஒகிகுவின் இந்தக் குரலைக் கேட்டுக் கேட்டே பைத்தியமாகிப் போனார் அயோமா.

வேண்டுமானால் டோக்கிய நகரத்துக்கு செல்லுங்கள். அங்கே அயோமா டோரி என்ற பெயரில் ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது. அதில் பயணம் செய்து கொண்டே போனால் அகாசகா என்ற பகுதியை அடையலாம். அங்கே தான் ஜப்பானுக்கான கனடாவின் தூதரகம் இருக்கிறது. அதனுள் சென்றால், அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாதவாறு ஒரு பழங்கிணறு இருக்கும். ஒகிகு வாழும் கிணறு தான். முடிந்தால் நள்ளிரவு வரை காத்திருங்கள் ஒகிகு அழுதுகொண்டே ஒன்று இரண்டு.... எண்ணுவதற்காக வெளியே வரலாம்...

சளி முற்றிலும் நீங்க சித்தர் மருத்துவம்...


சித்தராவது எப்படி - 20...



முடியாததை உணர உணர முடியாததை எளிதில் முடிக்கலாம்...

இயல்பான சுவாச ஒழுங்கில் இருக்கும் பொழுது, அது அவ்வளவு எளிதல்ல என்பதும் உலகத்தையே வென்றாலும் கூட சுவாச ஒழுங்கில் நீடிப்பது என்பது மிக கடினமான நிலைப்பாடு என்பது புரிய வரும்..

காரணம் பிரபஞ்ச சக்தியையே உள் வாங்கி பிரபஞ்சத்தையே ஆளுமை செய்யும் அளவிற்கு பேரறிவு பெறும் ஆற்றலை தரக் கூடியது இந்த சுவாச ஒழுங்கு..

உலகத்தையே வென்றவன் அந்த பிரபஞ்ச ஆற்றல் இன்றி மரணத்தை தழுவி உலகத்தின் மண்ணுக்குள் புதைப் படுபவன் அறிவு அற்றவன்..

இந்த ஒரு உண்மையை அறிந்தாலே ஞான கதவு திறக்கப் படும்..

ஞானி எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நாடி பயணப் படுபவன்...

உலகத்தையே வென்றாலும் ஜீவ ஆற்றலான பிரபஞ்ச ஆற்றலை இழப்பதை காட்டிலும் முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ ?

ஆனாலும் அதை தானே மனித குலம் செய்து கொண்டு இருக்கிறது...

இன்னும் அதை தானே மனித குலம் செய்யப் போகிறது..

உலகத்தையும் உலக உடமைகளை வெல்வதற்கு, உலகத்திற்கு சொல்லமுடியாத துன்பத்தை கொடுத்து விட்டு, தன் உயிர் ஆற்றலான பிரபஞ்ச ஆற்றலை பூரணமாக தேகத்தில் இழந்து, பெற்றதையும் அனுபவிக்க முடியாமல், மண்ணுக்குள் புதையும் மனிதனை அறியாமையின் மொத்த உருவம் என்று தானே சொல்ல வேண்டும்...

மிக மிக எளிய சுவாச ஒழுங்கில் இருக்க முடியவில்லை என்று கவலைப் பட தேவை இல்லை..

பேரண்ட பேரறிவு நமக்காக பல கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது..

மூடிய கதவிலே முட்டி முட்டி மண்டையை உடைக்கும் அவல நிலையிலிருந்து விடுபடவும் பேரறிவு ஒரு கதவையும் திறந்து வைத்து இருக்கிறது..

இன்னும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு தரக் கூடிய கதவுகள் திறந்தே வைத்து இருக்கிறது..

சுவாச ஒழுங்கில் நீடிக்க அந்த பிரபஞ்சம் திறந்து வைத்து இருக்கும் மற்ற கதவுகளை அடையாளம் காண வேண்டும் என்றால் அதை நோக்கி பயணப் படும் போது மட்டுமே அடையாளம் காண சாத்தியம் ஆகும்..

சரி இப்போது மற்ற ஒரு கதவினை காணலாம்..

அதாவது சுவாச ஒழுங்கிலே தோல்வி என்ற ஒரு மூடிய கதவை தவிர வெற்றியை தரக்கூடிய வேறு ஒரு கதவினை காணலாம்..

அதுதான் தோல்வியை உணர்த்தும் இன்னொரு கதவு...

சுவாச ஒழுங்கிலே மனதின் நிலையற்ற தன்மையாலே, உறுதியற்ற தன்மையாலே, சுவாச ஒழுங்கிலே ஏற்படுகின்ற ஒழுங்கின்மை என்ற தோல்விகளை உணர்த்தும் கதவு..

ஒழுங்கின்மை ஒரு தோல்வி என்றால் ஒழுங்கின்மையை உணராத அறிவின்மை அதை விட மிகப் பெரிய தோல்வி..

தோல்வி அடைந்ததை உணராத போது தோல்விகள் நீடிக்கும் என்பது ஒரு சத்தியமான உண்மை.. அதை உணர வைப்பது உணர்வின் அதிபதியான புத்தி..

சுவாச ஒழுங்கின்மையில் இருந்து மீள முடியாமல், அந்த ஒழுங்கின்மையில் இருக்கும் சமயம் தான் ஒழுங்கின்மையில் இருக்கிறோம் என்பதை உணர தொடங்கும் போது, புத்தி விழித்து எழ தொடங்குகிறது...

இப்படி விழித்து விழித்து எழுந்த புத்தி பலம் அடைகின்ற போது மட்டுமே அது மனதின் மேல் ஆளுமை தன்மை பெற முடிகிறது..

ஆளுமை தன்மை பெற்றவுடன் மனதை திருத்தி மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு மனதை வர வைக்கிறது..

இப்படியான தோல்விகளிலும் பொன்னை எடுக்கும் வழி முறையை அந்த இன்னொரு கதவு நமக்கு தருகிறது..

பொன் என்பது பலன், வெற்றி. என்பதாகும்..

ஆரம்ப நிலையிலே தோல்விகளை சந்திக்கும் போது அதை சரி செய்ய முடியவில்லை யென்றால் அச்சமயம் அந்த தோல்வியை உணர்ந்தாலே போதும்..

உணரும் அச்சமயம் புத்தி விழித்துக் கொள்ளும் ஒரு பெரும் புனித செயல் நடக்கின்றது..

எந்த ஒரு காரியம், வேலை, நேரங்களில் அந்த சுவாச ஒழுங்கில் இருப்பது சற்று கடினமே..

அந்த அந்த சமயங்களில் தன்னில் ஓடும் சுவாச ஒழுங்கின்மையை கவனித்து உணர்ந்தாலே போதும்...

மிக விரைவில் புத்தி விழித்து எழுந்து மனதை ஆட்கொண்டு அந்த அந்த வேலையில் சுவாச ஒழுங்கினை ஏற்படுத்தி, அந்த அந்த வேலையை திறம் பட செய்ய பிரபஞ்ச ஆற்றலை செயல்பட வைத்து விடுகிறது..

இதனை சற்று உணர்ந்து, கவனித்துப் படித்து, சுவாச ஒழுங்கின்மை சமயம், அந்த ஒழுங்கின்மையை கவனித்து உணர்ந்து இருக்கும் நிலையில் பெரும் ஆன்ம இலாபம் கிடைக்கின்றதை மறக்காமல் இருந்து அந்த உணர்வின் பயனாய் சித்தர் நிலை நோக்கி விரைவான முன்னேற்றம் அடைவோமாக....

உண்மையான மெர்சல் நாயகன்...



அமெரிக்காவில் விமானம் ஓட்டவே வேட்டி கட்டிதான் வருவேன். என் பாரம்பரிய உடையை அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என சண்டைபோட்டு
அனுமதி வாங்கி வேட்டி கட்டி வானூர்தி (விமானம் ) ஓட்டும் ஒரே தமிழன் ரவிகரன் யோகேசுவரி ரணேந்திரன்...

எலும்பு தேய்மானம் தடுக்கும் சூரிய ஒளி...


எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு  பாதுகாப்பாக அமைந்து உடலை தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள். மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும்  எலும்புகளே. இதில் ரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய ரத்த உறுப்புகள் உற்பத்தி  செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன.

மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.பொதுவாக எலும்புகள் பலவகையான  வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அது போல் மிகவும் உறுதியான  எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு  அமைந்துள்ளன. எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந்துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை  ஒத்துக்காணப்படும் முப்பரிமாண உள்ளமைப்புகளை கொண்டு எலும்புகளுக்கு விறைப்பு தன்மையை கொடுப்பது எலும்புத்  திசுக்கள்தான்.

மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண் புழை, நரம்பு,ரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும். எலும்புகள்  உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் அமைந்துள்ளது.மூளை, கண், இதயம், நுரையீரல்  போன்ற மென்மையான உறுப்புகளுக்கு  பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50  சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.

எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல்  நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த கால்சியம்  சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும். எலும்பு தேய்மானம்மனிதன் முதுமை அடையும்போது உடல்  உறுப்புகளில்  ஏற்படும் செயல் மாற்றங்களினால் எலும்புகளும் சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதனை நாம் நமக்கு ஏற்படும்  பக்க விளைவுகளில் இருந்து உணர முடியும்.

வயது செல்லச் செல்ல தேய்வுகள் அதிகமாகி நோயின் தீவிரம் மனிதனை முடக்கும்.எலும்புகள் உறுதியானதாக அமைய  முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகிறது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள்  எடுத்துக் கொள்ளுகின்றன.  நாம் முதுமையை நெருங்க நெருங்க இத்தன்மை மெதுவாக குறைந்து விடுவதால் எலும்புகளில்  கால்சிய குறைபாடு காரணமாக தேய்மானம் ஏற்படுகிறது.

எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானால் எலும்பு முறிவு ஏற்படும். இதுவே  எலும்பு தேய்மானம் ஆகும். காரணங்கள்ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ்  காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது.

பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் எலும்பு தேய்மான நோய்  இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும்.உடலில் கால்சியம் சத்து  குறைவதும், வைட்டமின் “D”  குறைபாடும் ஏற்படும்.

ஆண்களை பொறுத்தவரை புகைப்பழக்கம், குடிப்பழக்கம், உடற்பயிற்சி இன்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை  ஆகியவை எலும்பு தேய்மான நோய்க்கு முக்கிய காரணமாகும். மெனோபாஸ் பருவம்பெண்களுக்கு மாதவிடாய் காலம் முடிந்த  பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது.

முக்கியமாக பெண்களில்  “மெனோபாஸ்” எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன்  மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து விடுவதால் இந்த குறைபாடு  ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் எலும்பு தேய்மானம் ஏற்பட காரணமாகிறது.  வைட்டமின் “D”  குறைபாடுகிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவுப்பழக்க வழக்கம்  இருந்து வருகிறது.

மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் எலும்பு தேய்மானத்துக்கு காரணமாகும். வைட்டமின் ‘டி’  குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலை இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது  மற்றும் மரபுக் காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது.

குளிர்பானம் குடித்தல்: குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில் மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட  குளிர்பானங்களில் பொஸ்பேட் சத்து அதிகமாக உள்ளது. பொஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்கு செல்லும் கால்சியம்  சத்து குறையும். எனவே சிறு வயதில் இருந்தே குளிப்பானங்களை குடிக்கக்கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதன்  மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும்.

பக்க விளைவுகள்...

எலும்பு முறிவு, மூட்டு வலி, மூட்டு வாதம், கழுத்து எலும்பு தேய்மானம், முதுகு எலும்பு தேய்மானம், முதுகு வலி,  உடல்  சோர்வு, அசதி, முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல், நடையில் தளர்வு... தீர்வு என்ன?

முதியவர்கள் குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.

தினமும் 15 நிமிடமாவது சூரிய ஒளியில் உடல் படுவது அவசியம். இதன் மூலம் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின்  ‘டி’ தோல் மூலம் உறிஞ்சப்படும்.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம்.  இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். சோயாவையும்  உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது. இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

மீன்களை தினம்தோறும் சேர்த்து கொள்வது நல்லது.

புகை பிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

கால்சியம் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. இதை மருத்துவரின் ஆலோசனைப்பெற்று சாப்பிடலாம்...

மருத்துவ பொருட்களுக்கு GST இல்லை என்று சொல்லிக் கொண்டு தெரிகிற பாஜக மாட்டுமூளை காவி டவுசர்களின் பார்வைக்கு....


மருந்து ஏற்ற பயன்படும் Syringeஇன் விலை  GSTக்கு முன்னர்/பின்னர்...

தமிழக பாஜக வின் மெர்சல் கலாட்டா...



பாஜக பொய்யிசை எனும் தமிழிசை சொன்ன சிறந்த மருத்துவம் இது தான்...


அதுவும் பாஜக காவி சாமியார் ஆளும் மாநிலத்தின் நிலை...

எலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை...


சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடுகிறீர்களா?

அப்படியெனில், நீங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்த படியாக கறிவேப்பிலையில் தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.

கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து - கொட்டைப்பாக்கு அளவாவது - சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் பலவீனம் ஏற்படுவது குறையும். கண், பல் தொடர்பான நோய்கள் குணமாவதோடு, வயதான காலத்திலும் பார்வைத்திறன் மங்காமல் பிரகாசமாகத் தெரியும்.

துவையல் செய்ய நேரமில்லை என்பவர்கள், வெறுமனே கறிவேப்பிலையை மென்றே சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ் செய்தும் அருந்தலாம்.

கறிவேப்பிலையுடன் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு கலந்தால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி!

உடல் சூடு, அஜீரணம், வாய்வுக்கோளாறு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால், கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து, அதில் நான்கில் ஒரு பங்கு சீரகம் சேர்த்து மையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவில் வாயில் போட்டு விழுங்கி வெந்நீரைக் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

பன்றிக்காய்ச்சல், டெங்கு எனப் பல வடிவங்களில் காய்ச்சல் வந்து பயமுறுத்தும் இந்த நேரத்தில் சாதாரணக் காய்ச்சலோ, விஷக்காய்ச்சலோ - எது வந்தாலும் கறிவேப்பிலைச் சாறு நிவாரணம் தரும். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், அதில் பாதி மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் வெந்நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். அதை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்து அரை டேபிள்ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். மீதியுள்ள மருந்தை இதேபோல மாலையில் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெந்நீர் குடிக்கலாம். இதை மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் முழுமையாகக் குணமாகும்.

மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கு மையாக அரைத்த கறிவேப்பிலையுடன் பாதியளவு எலுமிச்சைப்பழத்தைச் சாறு பிழிந்து கலந்து, சாதத்துடன் சேர்த்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். இதைப் பகல், இரவு எனச் சாப்பிட வேண்டியது அவசியம்.

கோடைக் காலத்தில் சிலருக்கு கண் இமைகளின்மேல் கட்டிகள் வரும். அப்போது, கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து வெண்சங்கைச் சேர்த்து உரைத்து பற்றுப் போட்டு வந்தால், கட்டிகள் பழுத்து உடையும். கட்டிகள் உடைந்தபிறகும் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் புண்களும் ஆறிவிடும்...

தமிழர் vs திராவிடர் : உரையாடல் 2...


தமிழர்:  ஈழத்தில் தான் 60 ஆண்டுகால போராட்டம், ராஜபக்ஷே போன்ற சிங்கள நல்ல உள்ளங்களால் அடக்கப்பட்டு விட்டது. மேலும், அங்கு ஜனநாயகமும் திரும்பி வந்து விட்டது. தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த விக்னேஸ்வரன் அவர்கள் மாகாண முதல்வராகவும் ஆகி விட்டார். இத்தனை நடந்த பிறகும், அங்கு அமைதி திரும்பிய பிறகும் இங்கே தமிழ் நாட்டில், ஈழத்தை பற்றி குரல் கொடுக்கும் அமைப்புகள், குறிப்பாக திராவிட அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் ஏன் மீண்டும் மீண்டும் 'தமிழ் ஈழம் தான் தீர்வு' என்றும், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர் வாழ இயலாது என்றும் சொல்கிறீர்கள்? இது மோசடி அல்லவா...? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

திராவிடவாதி: புலிகள், தமிழர்கள் தோற்று விட்டார்கள் என்பதற்காக, 60 ஆண்டுகால போராட்டத்தை தூக்கி எறிந்துவிட சொல்கிறீர்களா..?

தமிழர்: தடங்கலுக்கு மன்னிக்கவும். இலங்கையை பொருத்தவரை தமிழ் மன்னர்களே பெரும்பாலான சிங்கள மன்னர்களை அடக்கி ஆண்டு உள்ளனர். மேலும், முதல் மூன்று ஈழப்போர்களிலும் புலிகளே வெற்றி பெற்று உள்ளனர். எனவே வரலாற்றில் பலமுறை தோல்வியை சந்தித்துள்ள சிங்களன், இந்த முறை தமிழனை வீழ்த்தி உள்ளான். இது தவறு என்றால், தமிழ் மன்னர்கள் செய்தது மட்டும் சரியா...? எதற்கு தேவை இல்லாமல் 60 ஆண்டு கால வரலாறு பேச வேண்டும்?

திராவிட வாதி: 'அதுக்கு இது சரியாகி விட்டது' என்று இதை அப்படியே விட்டுவிட முடியுமா...? அப்படி என்றால் 'வெற்றி பெற்ற சிங்களனுக்கு, தமிழர்கள் இனி அடிமையாகத் தான் வாழ வேண்டும்' என்று சொல்கிறீர்களா..?

தமிழர்: அடிமையாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லையே. அது தான் அங்கு ஜனநாயகம் திரும்பி விட்டதே? நீங்கள் சொல்லும் ஈழ பகுதியில் பிள்ளையானும், கருணாவும், டக்லஸ் தேவானதாவும், இன்று விக்னேஸ்வரனும் தானே ஆள்கிறார்கள். ஆக, தமிழர் பிரதேசத்தை ஜனநாயக முறையில் தமிழர்கள் தானே ஆள்கிறார்கள். அப்புறமும் ஏன் இங்கு நீங்கள் 'ஈழமே இறுதி தீர்வு' என்று பிரிவினை வாதம் பேசி குழப்பம் விளைவிக்கிறார்கள்?

திராவிடவாதி: சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை கொன்று விட்டு, வடக்கில் விக்னேஸ்வரனை தேர்ந்தெடுத்தது என்பது உலகத்தை ஏமாற்ற சிங்களன் நடத்தும் நாடகம். இதனால் தமிழர்களுக்கு விடிவு ஏதும் வரப்போவது இல்லை. மேலும் நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள், சிங்களனுக்கு சோரம் போனவர்கள். அவர்களை தலைவர்களாக கருத இயலாது.

தமிழர்: அப்படி என்றால், 60 ஆண்டுகால வரலாறை மறக்க முடியாது என்று சொல்கிறீர்கள். ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கிறீர்கள். ஜனநாயகம் என்ற பெயரில் அங்கு தமிழர்கள் ஆள்வது என்று சிங்களன் சொல்வது நாடகம் என்று சொல்கிறீர்கள். சரி தானே?

திராவிடவாதி: ஆமாம்.

தமிழர்: நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டுமே. அதனால் தமிழர்களுக்கு ஏதும் தீமையா என்ன? இது நாள் வரை புலிகளுக்கும், சிங்களனுக்கும் மத்தியில் நடந்த போரில் தமிழ் மக்கள் நிலையற்ற வாழ்வை வாழ்ந்தார்கள். அதனால் என்ன? இப்போது தான் புலிகள் வீழ்த்தப்பட்டு, போலி ஜனநாயகம் என்ற ஒன்றாவது வந்து விட்டதே? தமிழ் மக்கள் இனி உயிர் பயம் இன்றி நிம்மதியாக வாழ்வார்கள் தானே? அப்படியே தொடரட்டுமே? ஏன் 'ஈழமே இறுதி இலக்கு' என்று நீங்கள் இங்கே கூச்சல் போட வேண்டும்?

திராவிடவாதி: சிங்களனின் அதிகாரத்தில் இருக்கும் இன்றைய பொம்மை ஈழ தமிழர் அரசு தொடர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தமிழர்: தெரியாது சொல்லுங்கள்.

திராவிடவாதி:

1. தமிழர் பெண்களை சூறையாடியது போல, தமிழர் நிலங்களை சிங்களன் சூறை ஆடுவான். அதற்க்கு தான் விக்னேஸ்வரனுக்கு 'காணி அதிகாரம்' தரப்படவில்லை.

2. தமிழர் பகுதியில் போர் முடிந்தும் நிறுத்தப்பட்ட சிங்கள இராணுவம், அவர்களுக்கு உதவிய சிங்கள கைக்கூலி தமிழர்களின் துணையுடன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவான். இதன் மூலம் எந்த காலத்திலும் தமிழர்கள் எழுச்சி பெறக்கூடாது என்பதுடன், ஊர் உலகை ஏமாற்ற தங்களின் கைக்கூலி தமிழர்களுக்கு ஆட்சியையும், அதிகாரத்தையும் கொடுத்து,தன்னால் வீழ்த்தப்பட்ட தமிழர்களை ஆள செய்வான். தமிழர் ஆட்சி தான் அங்கு நடக்கிறது என்பது போல சித்தரிப்பான்.

3. தமிழ் பண்பாடும், கலாச்சாரம், அடையாளம் என அனைத்தையும் சீரழிப்பான். கோவில்களை இடிப்பான். கோவில் சொத்தை கொள்ளை இடுவான். அதற்க்கு 'ஏற்றுக்கொள்ளும்படி' பல காரணங்களை சொல்வான்.

4. தமிழர்களை பிச்சைகாரர்கலாக ஆக்குவான். தங்களுக்கு பயன்படும் வெறும் ஓட்டு எந்திரங்களாக மட்டுமே அவர்களை பயன்படுத்துவான்.

தமிழர்: மிக்க நன்றி. நீங்கள் சொன்னவற்றுடன் சேர்த்து நாங்களும் கொஞ்சம் என்ன நடக்கும் என்று ஊகித்து உள்ளோம். கொஞ்சம் சரி பார்த்து சொல்லுங்களேன்.

திராவிடவாதி: சொல்லுங்களேன்.

தமிழர்:

1. அவனே கல்வி, தொழில், பொருளாதாரம் என்று கொடி கட்டி பறப்பான். தமிழ் நிலத்தில் சிங்களன் கட்டும் கல்வி மையங்களில் தான் நாளை தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டி இருக்கும்.

2. தான் வீழ்த்திய தமிழர்களை தன்னால் 'தாழ்த்தப்பட்டோர்' என்று பொருள் படும்படி, 'தாழ்த்தப்பட்டோர்' என்று குறிப்பிடுவான்.

3. தனக்கு தோதான சிங்கள, தமிழ் அமைப்புகளை, நபர்களை தனது அருகில் வைத்து கொண்டு, அவர்களை வைத்தே அரசியல் செய்வான்.

4. தமிழர் என்று சொல்லையே அருவருப்பான சொல்லாக மாற்றுவான்.

5. தன்னால் வீழ்த்தப்பட்ட தமிழர்களுக்கும், தனக்கு தோதான தமிழர்களுக்கும் இடையே என்றைக்குமே பகை இருக்கும்படி செய்வான். அதன் மூலம் தன்னை யோக்கியனாக காட்டிக் கொள்வதோடு, தமிழர்கள் தன்னை பற்றியே நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன், தனது அரசியலை தடையின்றி செய்வான்.

6. நிலம், நீர், காற்று என தமிழர் பிரதேசத்தின் வளங்களை ஜனநாயக அடிப்படையில் கொள்ளை அடிப்பான். அதற்க்கு தோதாக சாரை சாரையாக தங்களது குடியேற்றங்களை தமிழர் பிரதேசங்களில் அமைத்து கொள்வான்.

7. சுமார் 500 வருடங்கள் கழித்து, தமிழர்களுக்கு தானே தலைவர் என்று சொல்வான். 'தமிழர்களை வீழ்த்திய, இன்றும் அவனை அடக்கி ஆண்டு கொண்டு இருக்கும் நீ எப்படி தமிழனுக்கு தலைவர் ஆக முடியும்' என்று யாரவது விளக்கமாக கேட்டால், 'யார் தமிழர்? அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது' என்று சிங்களர்களை வைத்தே பதில் சொல்ல வைப்பான்.

திராவிடவாதி: இதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா?

தமிழர்: அதை தொடர்ந்து படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். இதுவரை நீங்கள் கொடுத்த பதில்களின் அடிப்படையில் நாங்கள் சில கேள்விகளை முன்வைக்கிறோம். நீங்கள் பதில் சொல்கிறீர்களா?

திராவிடவாதி: கேளுங்கள்.

தமிழர்:

ஈழத்தில் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக 60 ஆண்டுகால போராட்டத்தை, அதன் வரலாற்றை பற்றி மறந்துவிட வேண்டுமா என்று நீங்கள் எங்களை பார்த்து கேட்டீர்கள். மேலும், தமிழ் மன்னர்களுக்கும், சிங்கள மன்னர்களுக்கும் நடந்த போர்களை வைத்து, இன்று ஈழத்தில் ராஜபக்ஷேவின் 'இன அழிப்பை' நியாயப்படுத்த கூடாது என்றும் சொல்ல முற்பட்டீர்கள். அப்படி என்றால்,

கேள்வி 1: தமிழகத்தில் தமிழர்கள், வடுகர்கலான விஜயநகர நாயக்கர்களிடம் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக 500 வருட வரலாற்றை மறந்துவிட வேண்டும் என்று நீங்கள் சொல்வது நியாயமா?

கேள்வி 2: மூவேந்தருக்கும், வடுக நாயக்கருக்கும் நடந்த போரை வைத்து, கடந்த 500 வருடங்களாக தமிழகத்தில் நடக்கும், நடந்து கொண்டு இருக்கும் 'தமிழின அழைப்பை' நியாயப்படுத்த கூடாது என்று நாங்கள் சொல்வது உங்களுக்கு ஏன் முரணாக படுகிறது?

கேள்வி 3: வெற்றி பெற்றுவிட்டான் என்பதற்காக தமிழர்கள் போலி ஜனநாயகம் என்ற பெயரில் சிங்களனுக்கு அடிமையாக இருக்க கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் இதையே தமிழகத்தில் வடுக திராவிட அரசு தமிழர்களை வீழ்த்தி வெற்றி பெற்று விட்டான் என்பதற்காக, திராவிடம் என்ற பெயரில் எங்களை அவர்கள் அடிமையாக நடத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். திராவிடமே தமிழர்களுக்கு முதல் எதிரி என்று சொல்கிறோம். இதில் மாற்றுக்கருத்து உண்டா?

கேள்வி 4: தமிழர்களாகவே இருந்தாலும் சிங்கள பேரினவாதத்துடன் சோரம் போன தமிழர்களை நீங்கள் 'தமிழரே அல்ல' என்று சொல்லும் போது, தமிழர்களை வீழ்த்திய வடுக திராவிட வாரிசான வைகோ போன்றவர்களை, தமிழகத்தில் தலைவராக ஏற்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்? ஈழத்தை தமிழர்கள் ஆள வேண்டும் என்று சொல்லும் நீங்கள், தமிழகத்தில் ஒரு வடுக தெலுங்கரை தலைவராக முன்னிறுத்த நினைப்பது ஏன்?

கேள்வி 5: ஈழத்தில் நடப்பது ஆட்சியே அல்ல, அது போலி ஜனநாயகம் என்று சொல்லும் நீங்கள் இதே நாங்கள் இங்கு தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல, திராவிடம் என்ற போர்வையில் போலி ஜனநாயகமும், இன அழிப்பும் என்று சொன்னால் மட்டும் ஏன் கோவம் வருகிறது உங்களுக்கு?

கேள்வி 6: ஒரு லட்சம் தமிழர்களை கொன்ற சிங்களத்துடன் தமிழர்கள் அனைத்தையும் மறந்து, அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதை கடுமையாக மறுக்கும் நீங்கள், இதே போல தமிழர்களை 'கயத்தாறில்' சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கொன்று ஒழித்த திராவிடத்துடன், அனைத்தையும் மறந்து, அவர்களின் தலைமையை தமிழகத்தில் மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

கேள்வி7: இதே போலி ஜனநாயகம் ஈழத்தில் தொடர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று நீங்கள் சொன்னதோடு, நாங்கள் சொன்னதும் தான் இன்றும் தமிழகத்தில் திராவிடர்களின் ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறீர்களா?அத்துடன் மூவேந்தரின் ஆட்சி முடிவுக்கு வந்து இன்று வரை வடுக நாயக்கரின் ஆட்சியே தமிழகத்தில் நடக்கிறது என்று சொன்னால், அந்த உண்மையை மூடி மறைக்க, இங்கே ஆள்பவர்களையும் நீங்கள் தமிழர்களாக சித்தரிக்க முயல்வது ஏன்?

கேள்வி8: சில நூறு வருடங்கள் கழித்து, தமிழர் என்று சொன்னாலே அது பிற்போக்கு சிந்தனை என்றும், அப்படி பேச ஆரம்பித்தால் தன்னுடைய குட்டு எல்லாம் வெளிப்பட்டு விடும் என்று சிங்களன் எப்படி அச்சப்படுவானோ, அதே போலவே இங்கு தமிழகத்திலும் திராவிடம் பேசி, அரசியல் செய்பவர்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். இதற்க்கு மாற்றுக்கருத்து உண்டா?

திராவிடர்கள் பதில் சொல்லலாம்...

தமிழர்களுக்கு ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்தானதா?


அந்நியன் படத்துல ஒரு வசனம் வரும்.

தப்பு என்ன பனியன் சைஸா? மீடியம், லார்ஜ், எக்சல், டபுள் எக்சல்ன்ன்னு... அது போலத்தான் இந்த கேள்வியும் இருக்கு.

ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்துன்னு சொல்றதோ, தலித்தியத்தை விட ஆரியம் ஆபத்துன்னு சொல்றதோ, சரியான ஒப்பீடு கிடையாது.

ஆரியமும், திராவிடமும் சம விகிதத்தில் தமிழனுக்கு ஆபத்தானவை தான்.

ஆரியம், தமிழனின் தேசியத்தை வீழ்த்துகிறது.

தலித்தியம், தமிழனின் தெய்வீகத்தை வீழ்த்துகிறது.

ஆனால், ஆரியம் - திராவிடம் என்ற இந்த இரண்டிற்கும் இடையில் திராவிடத்தின் சூழ்ச்சியும் இருக்கின்றது என்பதை தமிழன் புரிந்து கொண்டு..

ஆரியம் - திராவிடம் - தலித்தியம் இந்த மூன்றையும் புறந்தள்ளும் காலம் வந்த பிறகு, தமிழன் உலகையே ஆள்வான்...

இந்துத்துவாவின் இரண்டு தூண்கள் தான் திராவிடம் & தலித்தியம்...


கேள்வி: தலித்தியமும், திராவிடமும் ஒடுக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அதில் ஏதேனும் விமர்சனம் உண்டா?

பதில்: இது கொஞ்சம் பெரிய விடயம். அதை எளிய வடிவில் கதை போல் விசயத்துக்குள் செல்வோம்.

திருட்டு கூட்டாளிகள் :

தமிழரசனுக்கு ஒரு தங்கநிற சட்டையும், வீடும், அஞ்சு ஏக்கர் நிலமும், அந்த நிலத்தின் நடுவில் குலதெய்வ கோவிலும் உள்ளது.

ஆரியன் என்பவன் தமிழரசனை வீழ்த்த நினைத்து அதை தந்திரமாக செய்கிறான். எப்படி?

தமிழரசனுக்கு சொந்தமான அத்தனையும் தன்னுடையது என்கிறான்.

திராவிடன் என்பவன் 'கவலைப்படாதே தமிழரசா, நான் இருக்கிறேன் உனக்கு' என்று ஆறுதல் சொல்வது போல களம் இறங்குகிறான்.

பின்பு திராவிடன் 'உண்மை தான் தமிழரசா, ஆரியன் சொல்வது தான் உண்மை. இதெல்லாம் உன்னுடையது அல்ல, அவனுடையது' என்கிறான்.

அதாவது தமிழரசனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று திராவிடன் ஆரியனுக்கு தான் துணை நிற்கிறான்.


தலித்தியன் என்ற இன்னொரு நாட்டாண்மை வருகிறான்..

'கவலைப்படாதே தமிழரசா. நான் இருக்கிறேன் உனக்கு' என்று களம் இறங்குகிறான்.

இறுதியில் அந்த தலித்தியன் போட்டானே ஒரு போடு....

அடேய் தமிழரசா... நீ தமிழரசனே கிடையாதப்பா...... உனக்கும் இந்த உடமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதப்பா.. எல்லாமே ஆரியனுடையது தான் என்கிறான்.

திராவிடனாவது தமிழரசனின் உடமைகளை ஆரியனுடையது என்று கூறினான்.

ஆனால் தலித்தியன் ஒரு படி மேலே போய், தமிழரசனுக்கும் அவனது உடமைக்கும் 'எந்த சம்பந்தமுமே இல்லை' என்று கூறிவிட்டான்.

கொடுத்த காரியத்தை கண கச்சிதமாக முடித்து விட்டீர்கள் என்று ஆரியனுடன், திராவிடனும், தலித்தியமும் இருட்டறைக்குள் கை குலுக்கிக் கொண்டு செல்கிறார்கள்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 38...


உடலின் ஏழு சக்ராக்கள்...

நம் முன்னோர்கள் மனித உடலில் ஏழு சக்தி மையங்கள் இருப்பதாகக் கருதினார்கள். அந்த சக்தி மையங்களை “சக்ரா” என்றழைத்தார்கள். அந்த சக்தி மையங்கள் இருப்பதாக சீனா, திபெத் போன்ற நாட்டு முன்னோர்களும் நம்பி வந்தனர். இந்த “சக்ரா”க்களின் தன்மையைப் பொறுத்தே மனிதர்களின் தன்மையும், ஆற்றலும், அறிவும் அமைகிறதாக அவர்கள் நம்பினார்கள்.

ஒவ்வொரு சக்ராவும் புறக்கண்ணால் காண முடியாததாக இருந்தாலும் சூட்சும சரீரத்தில் இருக்கும் சக்தி மையங்களாக அவர்கள் அவற்றைக் கண்டதோடு அந்த சக்ராக்களுக்குத் தனித்தனியாக சின்னங்களும், நிறங்களும், மந்திர சப்தங்களும் ஒதுக்கி இருந்தார்கள். ஒவ்வொரு சக்ராவும் தனித்தன்மை கொண்டதாகவும், சில குறிப்பிட்ட சக்திகளை மையமாகக் கொண்டதாகவும், அந்த சக்திகளை உருவாக்கவும், கட்டுப்படுத்தவும் முடிந்ததாகவும் கருதப்பட்டது. குண்டலினி சக்தியும் இந்த சக்ராக்களின் வழியாகத் தான் மேலே எழுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல மேலை நாட்டு அறிஞர்களும் இந்த சக்ராக்களில் காட்டிய ஈடுபாடும், ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சக்ராக்களைப் பயன்படுத்தியதும், தியான முறைகளில் பயன்படுத்தியதும் உலகளவில் இந்த சக்ரா முறைகளைப் பிரபலப்படுத்தின.

இனி ஏழு சக்ராக்களையும் அறிந்து கொள்வோம்..

1) மூலாதார சக்ரா – இது மனித உடலில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே உடல் வலிமைக்கு ஆணிவேராக இந்த சக்ரா விளங்குகிறது. அமைப்பில் நான்கு இதழ் தாமரையுடன் உள்ள இதன் நிறம் சிவப்பு. இது ”லா” என்ற சத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது லாம், லாங் என்ற இரு உச்சரிப்புகளுக்கு இடையே உச்சரிக்கப்படுகிறது. அதாவது லா என்கிற ஒலி பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. உடல் ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு முக்கியம்.

2) ஸ்வாதிஷ்டானா சக்ரா - இது மனித உடலில் ஆண்/பெண் குறி பாகத்தில், இன விருத்தி உறுப்புகளை ஒட்டி அமைந்துள்ளது. இது ஆறு இதழ் தாமரை அமைப்பில் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. இது வா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது வாம்/வாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது வா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இனவிருத்தி, அடிப்படை உணர்ச்சிகள், அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கு இந்த சக்ராவின் செயல்பாடு சரியாக இருப்பது முக்கியம்.

3) மணிபுரா சக்ரா - இது மனித உடலில் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. இது ரா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ராம்/ராங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ரா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. ஜீரணம், செயலாற்றத் தேவையான சக்தி, எண்ணங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

4) அனாஹதா சக்ரா - இது மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் உருவகப்படுத்தப்படுகிறது. இது யா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது யாம்/யாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது யா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்ரா சக்தி பெறுகிறது. இதயமும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளும் இந்த சக்ராவின் கட்டுப்பாட்டில் வருகின்றன.

5) விசுத்தா அல்லது விசுத்தி சக்ரா - இது மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது இது பதினாறு தாமரை இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. இது ஹா என்ற எழுத்தின் ஒலியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மந்திரமாக உச்சரிக்கும் போது இது ஹாம்/ஹாங் இவற்றின் இடைப்பட்ட உச்சரிப்பாக இருக்கிறது. அதாவது ஹா பிரதானமாக உச்சரிக்கப்பட்டு அது முடிகிற போது ம்/ங் ஒலிகளின் மெலிதான சேர்க்கையோடு முடிகிறது. இந்த மந்திர ஒலியால் இந்த சக்தி பெறுகிறது. தைராய்டு சுரப்பியும், பேச்சுத் திறனும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியும் இந்த சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகின்றன.

6) ஆக்ஞை அல்லது ஆக்ஞா சக்ரா - இது இரு புருவங்களுக்கிடையில் பொட்டு வைக்கும் நெற்றிப் பகுதியில் அமைந்துள்ளது. இதை நெற்றிக் கண் சக்ரா என்றும் அழைக்கிறார்கள். இது கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்துள்ளது. இது ஓம் என்ற மந்திர சப்தத்தில் சக்தி பெறுகிறது. ஆங்கிலத்தில் aum என்று உச்சரிப்பிற்கிணையாக இந்த ஓம் இருக்கிறது. கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவை இந்தச் சக்ராவின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது.

7) சஹஸ்ரரா சக்ரா - இது தலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் இந்த சக்ரா அமைந்துள்ளது. இது ஆ என்ற எழுத்தில் ஆரம்பித்து ஓம் (aum) என்று முடியும் படியான மந்திர உச்சரிப்பில் பலம் பெறுகிறது. ஆத்ம ஞானம், தெய்வீக சக்திகள் போன்றவை கைகூடுவது இந்த சக்ராவின் குறையற்ற செயல்பாட்டாலேயே.

இந்த ஏழு சக்ராவின் சின்னங்களையும், மந்திர சப்தங்களையும் கூடுமான வரை மனதில் இருத்துங்கள். சக்ரா தியான முறையை அடுத்து பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்....

வேர்சொல்லாய்வு தமிழின் ஆயுதம்..


தமிழ்நாட்டில் அகழ்வு செய்து கண்டு பிடிக்கப்படும் தொல்லியல் பொருட்கள் அனைத்தும் மைசூரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது அனைவரும் அறிந்ததே.

அங்கே கேட்பாரற்றுக் கிடக்கும் நிலையில் பல ஓலைச் சுவடிகளும், கல்வெட்டுக்களும் உள்ளன..

நடுவண் அல்லது தமிழ் மாநில அரசுக்கு கொஞ்சம் அக்கறை இருந்தால் இவை இவ்வாறு அங்கே இருக்காது என்று அங்கலாய் போரும் உண்டு.

ஐயகோ தமிழ்ப் பராம்பரியம் பறிபோகிறதே என்று புலம்புவோரும் உண்டு.

இந்திய நடுவண் அரசின் சதி புரியாதவர்கள் தான் இவ்வாறு புலம்புவார்கள்.

தமிழ் மொழி தான் பழமையானது என்பதை நாம் அனைவரும் அறிகிறோம்.

தமிழ் மொழியோடு சமணத்தின் பிராக்ரிதமும், பௌத்தத்தின் பாழியும், வைதீகத்தின் சமற்கிருதமும் கலந்து உருவான மொழிகள் தான் கன்னடம், தெலுங்கு,துளு மற்றும் மலையாளம்.

ஆனால் கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகள் தமிழை விட மூத்தவை என்று நிரூபிக்க இந்தியப் பிராமனீயம் செய்யும் சதிகளுள் ஒன்றுதான் போலி ஆவணம் உருவாக்குவது.

மண்ணில் தோண்டி எடுக்கப்படும் ஆதாரத்தை மட்டும் நம்பு; மரபறிவை நம்பாதே; கிராம நம்பிக்கைகள்,கதைகள் அனைத்தும் மூட நம்பிக்கையே என்று ஆங்கிலேயனும் அவன் அடிவருடிகள் விதைத்த நச்சுக் கருத்தியல் தான் நமக்கு மிகப் பெரிய ஆப்புவைத்துள்ளது.

தமிழ்மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படும் தொல்லியல் பொருட்களை  இந்திய அதிகாரிகள், யாருக்கும் தெரியாமல் கன்னட மண்ணில்  புதைத்து விடுவார்கள்.

ஒரு பத்து, இருபது வருடங்கள் கழித்து, அங்கே சென்று தோண்டுவார்கள்.

கன்னட மொழியின் தொன்மைக்கு மிகப் பெரிய சான்று கிடைதுவிட்டதென அறிவிப்பார்கள்.

தமிழி எழுத்துக்களுக்கு முன்னோடியாக இவை இருந்தன என்றும் கதைகட்டப்படலாம்.

இந்திய அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்லியல் துறையை இம்மண்ணில் தொடங்கியவர்கள் ஆங்கிலேயர்களே. மண்ணைத் தோண்டி அதன் மூலம் வரலாறைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொடுத்தவனே வெள்ளையன் தான்.

அதற்கு முன்புவரை  ஊர்ப் பெரியார்கள்  வாயால் கதை கேட்டுத் தான் நம் பிள்ளைகள் வரலாறு தெரிந்து கொண்டார்கள்.

ஒரு மொழியின் வேர்ச்சொல்லாய்வே அம்மொழியின் தொன்மையை அறியவைக்கும்.

அவ்வாறு சொல்லாய்வு செய்துபார்த்தால் கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு ஆகிய மொழிகளின் தாய் தமிழ் மொழிதான்.

செப்புப் பட்டயங்களும், கல்வெட்டுக்களும் நம் முடிவை உறுதிப்படுத்தி கொள்ள மட்டும் பயன்பட்டாலே போதுமானது.

தமிழின எதிரி சற்றும் எதிர்பார்க்காத ஒரு ஆயுதம் தான் சொல்லாய்வு.

இதை இத்தலைமுறைக்கு கொடுத்துச் சென்ற பாவாணருக்கே எல்லாப் புகழும் சேரும்...

குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு...


திரு.பிரணாய் ராய் பரபரப்பு பேட்டி தந்தி போன்ற ஊடகத்தின் பதில் என்ன..?


இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளரும், என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவருமான திரு.பிரணாய் ராய் இன்று அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தன் கண்ணசைவில் இயக்கி வரும் மோடி மற்றும் அமித்ஷா குழுவினர், பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் நடிகர் ரஜினியை அரசியலில் இறக்கி விட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றுள்ளதாகவும், அதற்கு தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர் ஒருவர் பேருதவி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாஜக வை ப்ரமோஷன் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பேட்டியின் முடிவில் அந்த தமிழ்நாட்டு ஊடகம், தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கும் 'தந்தி டிவி' என்றும் அதன் முதன்மை செய்தி் ஆசிரியர் திரு.ரங்கராஜ் பாண்டே வை இதற்கென்றே கோடிகளில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் விவரிக்கிறார்.

பாஜக, ரஜினி, அதிமுக ஒன்றிணைந்த அணியை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சென்று சேர்ப்பதிலும், அவர்களுக்கு ஆதரவான செய்திகளை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பலம் பெறச் செய்வதுமே இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை. இது கூட ஒரு விதத்தில் பாஜக செய்யும் ஊழல் தான் என்று சொல்கிறார்.
                                                                                                                                                            மேலும், இந்த பதிவில் ரஜினி பெயர் இருக்கும் இடத்தில் கமல் பெயரையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்...

பாஜக பிஹாரி எச்ச. ராஜா சர்மா நீ மூடிட்டு போடா வந்தேறி...


சளி, இருமலைத் துரத்தும் மிளகு...


பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது.

சளி பிரச்னையில் வதைபடும் போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல் தீரும்.

வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும் வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி கிடைக்கும்.

தேள், பூரான் மற்றும் விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம் தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும்.

மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்...

மெர்சல் படக் குழுவிற்கு ஓர் வேண்டுக்கோள்...


மக்கள் குரல் கருத்து கணிப்பு முடிவுகள்...


மெர்சல் திரைப்படத்தில் GST  தொடர்பான காட்சிகள் நீக்கப்படலாமா? வேண்டாமா? என்று நமது வாசகர்களிடம் நேற்று கேட்டிருந்தோம்.  

ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஆர்வமுடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதில், 93% வாசகர்கள் GST தொடர்பான காட்சிகள் நீக்கப்பட கூடாது என்றும், 5% பேர் நீக்க வேண்டும் என்றும், 2% பேர் இதர கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

மக்களின் ஏகோபித்த ஆதரவு மெர்சல் திரைப்படத்திற்கு உள்ளது என்று நமது கருத்து கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனினும், இவ்விவகாரத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் காட்சிகளை நீக்குமா?  நீக்காதா? என்பது அவர்களின் முடிவே...

செய்தி - k7tamilnews

டெல்லியில் பட்ட பகலில் நடு ரோட்டில் நடந்த கற்பழிப்பு முயற்சி.. குற்றவாளி தப்பி ஓட்டம்.. CCTV-யில் பதிவு செய்யபட்டது...


தான் கொள்ளையடித்து வைத்துள்ள சொத்துக்களை பாதுகாக்க.. தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கும் அதிமுக ஓபிஎஸ் - இபிஸ்...


விவசாயம் மத்திய அரசின் பட்டியலுக்கு போகிறது...

விவசாயம் மத்திய அரசின் பட்டியலுக்கு போனால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போமா?

1. விவசாயத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.

2. விவசாயத்திற்குத் தண்ணீரை பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும்.

3. விவசாயி தான் உற்பத்தி செய்த பொருள்களை தனியாருக்கே     விற்க வேண்டும்.

4. விதை பொருள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கையில் மட்டும்தான் வைத்திருக்க முடியும்.

5. விவசாய கடனுக்கு அனுமதி இல்லை.

6. கூட்டுறவு தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மூடப்படும்.

7. விவசாயிகள்அடிமை கூலியாக உருவாக்கப்படுவார்கள்.

8.ரேஷன் கடைகள் மூடப்படும்.

9.ஒரு கிலோ அரிசி 200 ரூபாய் வரை விற்கப்படும்.

10.பிறகு உணவுப் பொருள்களுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் நிர்ணயம் செய்யும் அதிக விலைக்கு நாம் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இதற்காக விவசாயநிலங்களை விவசாயிகள் விற்பனை செய்துவிட்டு வேறு தொழிலுக்கு போவார்கள். விற்ற நிலம் கார்ப்பரேட் கையில் போகும். பிறகு ஒட்டுமொத்த இந்திய விவசாயமும் கார்ப்பரேட் நிர்ணயம் மட்டுமே.

ஏற்கனவே அம்பானியிடம் பெட்ரோலிய எண்ணெய் பொருட்களை தாங்களாகவே விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்ததுப் போல, நாம் உண்ணும் உணவுப் பொருள்களுக்கும் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்து நம்மை நசுக்கி பிழிவார்கள்.

உதாரணமாக,

ஒரு ஆப்பிள் உற்பத்திக்கு ஆகும் செலவு 2 ரூபாய் அல்லது 3 ரூபாய். ஆனால் ஆப்பிள் விற்பனை செய்பவர்கள் 4 கார்ப்பரேட் நிறுவனம் மட்டுமே. ஒரு ஆப்பிள் விலை கிட்டத்தட்ட 20 ரூபாய் .

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு கோக்கோ கோலா நிறுவனம் இந்திய விவசாயத் துறையில் 11 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டது நினைவுள்ளதா மக்களே?

விவசாயம் மத்திய பட்டியலுக்கு போகிறது...