23/10/2017

தான் கொள்ளையடித்து வைத்துள்ள சொத்துக்களை பாதுகாக்க.. தமிழகத்தை அழித்துக் கொண்டிருக்கும் அதிமுக ஓபிஎஸ் - இபிஸ்...


விவசாயம் மத்திய அரசின் பட்டியலுக்கு போகிறது...

விவசாயம் மத்திய அரசின் பட்டியலுக்கு போனால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போமா?

1. விவசாயத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.

2. விவசாயத்திற்குத் தண்ணீரை பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும்.

3. விவசாயி தான் உற்பத்தி செய்த பொருள்களை தனியாருக்கே     விற்க வேண்டும்.

4. விதை பொருள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கையில் மட்டும்தான் வைத்திருக்க முடியும்.

5. விவசாய கடனுக்கு அனுமதி இல்லை.

6. கூட்டுறவு தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மூடப்படும்.

7. விவசாயிகள்அடிமை கூலியாக உருவாக்கப்படுவார்கள்.

8.ரேஷன் கடைகள் மூடப்படும்.

9.ஒரு கிலோ அரிசி 200 ரூபாய் வரை விற்கப்படும்.

10.பிறகு உணவுப் பொருள்களுக்கு கார்ப்பரேட் முதலாளிகள் நிர்ணயம் செய்யும் அதிக விலைக்கு நாம் உணவுப் பொருள்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இதற்காக விவசாயநிலங்களை விவசாயிகள் விற்பனை செய்துவிட்டு வேறு தொழிலுக்கு போவார்கள். விற்ற நிலம் கார்ப்பரேட் கையில் போகும். பிறகு ஒட்டுமொத்த இந்திய விவசாயமும் கார்ப்பரேட் நிர்ணயம் மட்டுமே.

ஏற்கனவே அம்பானியிடம் பெட்ரோலிய எண்ணெய் பொருட்களை தாங்களாகவே விலையை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்ததுப் போல, நாம் உண்ணும் உணவுப் பொருள்களுக்கும் விலையை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்து நம்மை நசுக்கி பிழிவார்கள்.

உதாரணமாக,

ஒரு ஆப்பிள் உற்பத்திக்கு ஆகும் செலவு 2 ரூபாய் அல்லது 3 ரூபாய். ஆனால் ஆப்பிள் விற்பனை செய்பவர்கள் 4 கார்ப்பரேட் நிறுவனம் மட்டுமே. ஒரு ஆப்பிள் விலை கிட்டத்தட்ட 20 ரூபாய் .

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு கோக்கோ கோலா நிறுவனம் இந்திய விவசாயத் துறையில் 11 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவிப்பு வெளியிட்டது நினைவுள்ளதா மக்களே?

விவசாயம் மத்திய பட்டியலுக்கு போகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.