திருச்சி பாலக்கரை சர்வைட் என்ற கிருஸ்துவ பள்ளி்..
தீபாவளி முடிந்து பள்ளி சென்ற ஹிந்து மாணவர்களுக்கு அதிர்ச்சி..
பட்டாசு வெடித்ததாக சொன்னவர்கள் மற்றும் கையில் மருதாணி இட்டிருந்த மாணவிகள் ஆகியோருக்கு தண்டனை தரப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்..
அதாவது சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்திற்காக மாணவ, மாணவியருக்கு பிரம்படி தரப்பட்டு, பிரார்த்தனை செய்து கிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்கும்படி பள்ளி நிர்வாகம் செய்தது என்பதுதான் புகாரின் முக்கியமான உள்ளடக்கம்..
விஷயம் பிள்ளைகள் மூலம் பெற்றோருக்கு தெரியவர, இப்போது காவல்துறைக்கு புகார் போயிருக்கிறது...
மற்றவர்களின் மத நம்பிக்கையை, வாழ்வியலை அசைத்து பார்க்க முற்படுவது கடைந்தெடுக்க அயோக்கி யத்தனமான செயல்.. பிள்ளைகளை நம்பி அனுப்பும் பெற்றோருக்கு செய்யப்படும் நம்பிக்கை துரோகத்தில், உயர்மட்ட லெவல் இது...
கல்வியை போதிக்கும் நிறுவனங்களே களவாணிகளாக மாறுவதை அனுமதிக்கவே முடியாது..
விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வந்து, தவறிழைத்தவர்களை தண்டிக்க செய்வது காவல்துறையின் கடமை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.