மயில் துத்தம் 10 கிராம்
ஊமத்தை இலைச்சாறு 50 மில்லி
தேங்காய் எண்ணெய் 100 மில்லி
எடுத்து பக்குவமாக மணல் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
பயன்கள் :
கால் ஆணி உள்ளவர்களுக்கு கால் ஆணி உள்ள இடத்தில் புது பிளேடுனால் மேலாக அறுத்து இந்த தைலத்தை பஞ்சில் மூன்று சொட்டு விட்டுஅந்த இடத்தில் வைத்து பஞ்சு நகராமல் டேப்பினால் இரவில் ஒட்டி பகலில் எடுத்துவிட வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்தால் போதும். கால் ஆணி குணமாகும்.
ஒரு சிலருக்கு கழுத்து, மார்பு, முகம் முதலிய இடங்களில் மரு தோன்றி அசிங்கமாக இருக்கும். அதற்கு அந்த இடத்தில் இரவில் ஒரு சொட்டு வைத்தால் போதும். ஒருசில நாட்களில் வலி இல்லாமல் உதிர்ந்து விடும்.
ஆறாத புண்களுக்கு :
சர்க்கரை வியாதி புண்ணுக்கு புங்க மரத்துப் பட்டையினால் கசாயம் வைத்து புண்ணை கழுவி நன்கு துடைத்துவிட்டு இந்த தைலத்தை பஞ்சில் போட்டு காற்றோட்டமாக பேண்டேஜ் துணியினால் கட்டி வர விரைவில் புண் ஆறும். புண் பக்கத்தில் ஈ வராது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.