வட இந்தியாவில் பாதாஞ்சலி போலிச் சாமியார் பாபா ராம்தேவ் எவ்வாறு தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொண்டு கோடி கோடியாய் சம்பாரித்தானோ அதே போல தமிழ் நாட்டிலும் சிலர் கிளம்பியுள்ளார்கள்.
இவர்களை போலிகள் என்று எவ்வாறு கண்டு பிடிப்பது?
மிக எளிது, சிவ வழிபாடு/சித்தர் மார்க்கம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அவர்களிடம் போய், ஐயா சிவலிங்கம் என்றால் என்ன? என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்.
முதலில் தயங்குவார்கள். நீங்கள் விடாப்பிடியாக பதில் வேண்டும் என்று நின்றால் அவர்கள் ஒரு நீண்ட நெடிய விளக்கத்தைக் கொடுக்கத் தொடங்குவார்கள்.
அதாவது அண்ட சராசரம், பிரபஞ்சம், அண்டவெளி, யோகி, சித்தன், குண்டலினி, விண்வெளி என்றெலாம் சுத்தி வளைத்து கடைசியில் லிங்கம் என்றால் சிவனின் மொத்த உருவம் என்று கொண்டு வந்து முடிப்பார்கள்.
கடைசிவரை சிவன்/சிவம் என்றால் என்னவென்றே சொல்லமாட்டார்கள்.
பாபா ராம்தேவ், ஆசாரம் பாபு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் என அனைவரும் இந்த ரகம் தான்.
சங்கராச்சாரி முதல் நித்யானந்தா வரை இதே கதை தான்.
சிவன்/சிவம் என்றாலே என்னவென்று விளங்கிக் கொள்ள முடியாத முண்டங்கள் சிவலிங்கம் என்றால் என்ன என்று எப்படி விளக்குவார்கள்?
இவர்களைப் பொறுத்தவரை தமிழ் மெய்யியல் என்றால் தமிழ் மந்திரங்கள் மூலம் ஒரு கல்லைக் கும்பிடுவது. அவ்வளவே.
ஏண்டா.. மெய் என்றால் உடல் என்று தானே பொருள். அப்போ மெய்யியல் என்றால் உடலியல் என்று தானே பொருள்படும்?
உடலின் இயக்கத்தை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப வாழ்வியலை நெரிப்படுத்திக் கொள்வது தானே மெய்யியலைக் கடைபிடிப்பது என்று பொருள்?
அதை விடுத்து வேறு ஏதோ விளக்கம் கொடுக்கிறீர்களே, நீங்கள் எல்லாம் யார்? தெரிந்து தான் பேசுகிறீர்களா? இல்லை தெரியாமல் உளருகிறீர்களா?
தெரியாமல் உளறினால் மன்னிக்கலாம். ஆனால் தெரிந்தே மறைத்தால் நீங்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்கு அடிபணித்து தானே செயல்படுகிறீர்கள் என்று பொருள்?
இந்த லட்சணத்தில் புத்தகம் வேறு வெளியிட்டு காசு பார்க்கிறார்கள் பரதேசிகள்.
நானும் பலபேரிடம் சென்று சிவலிங்கம் என்றால் அது மேல்தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறி தான் என்று ஆதாரத்தோடு நிரூபித்தேன்.
ஆனால் என் இளம் வயதைக் காரணம் காட்டி “சித்தர் மரபைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது தம்பி” என்று தட்டிக்கழித்தால் என்ன அர்த்தம்?
நீங்கள் ஏதோ செயல்பாட்டோடுதான் இயங்குகிறீர்கள் என்றுதானே அர்த்தம்?
தமிழ்ச் சமயத்தை அழித்தொழிக்க எதிரிகள் முதலில் எடுத்த ஆயுதம் சிலை வழிபாட்டை ஆதரித்த பௌத்த மதம் ஆகும்.. அடுத்து ஜைனம்.. குத்துயிரும் குலையுயிருமாக இருந்த தமிழ்ச் சமயத்தை அடுத்து வந்த சைவமும் வைணவமும் தமிழில் பாட்டுபாடியே கொன்றன. அதற்குப் பெயர் பக்தி இயக்கமாம்.. கொலைகாரப் பாவிகளே..
ஆனால் எதிரிகள் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம், பண்டைய தமிழ்ச் சமயமானது இன்று குல தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய சேவல்/கிடாய் வெட்டு மட்டும் முடி இறக்குதல் ஆகியவை மூலம் இன்று நம் குடும்பங்களில் உயிர்த்தெழுந்தது.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள் இந்து மதம் என்று ஒன்றை செயற்கையாய் உருவாக்கி, ராமன், கிருஷ்ணன், நேற்று முளைத்த சாய் பாபா போன்ற சிலைகளை நம் வீட்டுக்குள் இன்று வலியத் திணித்து வருகிறார்கள்.
அதிமுக அம்மையாரின் கடந்த ஆட்சியில் சேவல்/கிடாய் வெட்டுக்கு போடப்பட தடையை நினைவு கூறவும்.
சரி, இதற்கும் சிவ லிங்கத்துக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?
தொடர்பு இருக்கு, அதாவது “சிவம்” என்றால் நாம் வைக்கும் படையல் என்று தான் பொருள்.. முதன் முதலில் சேவல்/கிடாயை வெட்டி படையல் வைத்தனர். அப்படையலில் இரத்தமும், சதையும் சிவப்பாகத்தனே இருக்கும். அதனால் தான் அப்படையலுக்கு சிவம் என்று பெயர்.
இந்த உண்மையை மறைக்கத்தான் நாயன்மார்கள் பாடிப் பாடியே சைவம் என்ற ஒன்றை வளர்த்தார்கள்.
சிவலிங்கம் என்றால் மேல் தோல் நீக்கப் பட்ட ஆண்குறி என்று தான் பொருள்.
சிவ + ஆள் + அங்கம் = சிவாளங்கம் => சிவாலிங்கம் => சிவலிங்கம்.
அதாவது சேவல்/கிடாய் வெட்டுக்கு ஒரு படி மேலே போய், பாலை நில ஆண்கள் தங்கள் ஆண்குறிகளின் மேல்தோலையே அறுத்துக் கொண்டு அதைப் படையலாக (சிவமாக) கொற்றவைக்கு வைத்தனர்.
இவ்வாறு மேல் தோல் நீக்கப்பட்ட (சுன்னத் செய்யப்பட்ட) ஆண்குறிக்குப் பெயர் தான் சிவலிங்கம்.
பலி கொடுத்து அதைப் படையல் வைப்பதற்குப் பெயர் தான் சிவவழிபாடு.
இதை நாம் அடுத்த தலைமுறைக்கு ஒரு புத்தகத்தில் எழுதிவைத்துக் கடத்தவில்லை. ஆனால் ஒரு கல்லில் சிவலிங்கத்தைச் செதுக்கி வைத்து அடுத்த தலைமுறை ஆண்களுக்கு கொற்றவை வழிபாட்டின் நுட்பத்தைக் கடத்தி வந்தோம்.
இது மட்டும் அல்ல, நுட்பத்தைக் கடத்த சூலத்தையும் நாம் குல தெய்வக் கோவில்களில் நட்டு வைத்தோம்.
இவை எல்லாம் எதற்கு என்றால் ஆண்கள் சிவவழிபாட்டை விட்டுவிடக் கூடாது என்பதால் அதை நினைவுப் படுத்திக் கொண்டே இருப்பதற்காகத் தானே தவிர கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்வதற்கு அல்ல.
இன்று சிவவழிபாட்டை விடாமல் செய்பவர்கள் உலகத்தில் இருவர் மட்டுமே.
ஒருவன் தமிழன், மற்றொருவன் இசுலாமியன்.
இந்த உண்மையைச் சொன்னால் சில லேகிய வியாபாரிகள் நம்மை இசுலாமியக் கைக்கூலி என்கின்றனர்.
இசுரேலிய யூதர்களும் சுன்னத் செய்கிறார்களே? அப்போ அவர்கள் சிவவழிபாடு செய்யவில்லையா? என்றால் இல்லை என்று தான் நான் சொல்வேன்.
இதைப் பற்றியும் சூலம் பற்றியும் விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
இந்த சிவலிங்க நுட்பத்தை எவன் எவன் எல்லாம் பூசி முழுகி மறைக்கப் பார்க்கிறானோ, அவர்கள் அனைவரும் வியாபார நோக்கம் கொண்டவர்கள்.
சாமியார் வேடம் போட்டு ஏமாற்றும் லேகிய வியாபாரிகள். அவ்வளவே..
- சிவகுமார் அவர்களின் பதிவிலிருந்து..
கீழே சில பழமையான சிவலிங்க உருவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள்:
1 - Sri Parasurameswara Temple, Gudimallam, Andhra Pradesh. Second Century B.C.
2 - Vishnupad Temple, Gaya, Bihar.
3 - Ek Mukha Lingam, Aghapura, Bharatpur, Rajasthan. First Century A.D.
4 - Aradhanarishwara Temple, Indabettu, Dakshina Kannada, Karnataka. Second Century B.C...