19/02/2019

ஆழ்மனம் அதிசயம்...


உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்.

விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்பட போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்.

அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.

நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.

உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...

உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.

உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.

பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்

நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள்.

உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...

உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்...

காஷ்மீர் குண்டு வெடிப்பு பற்றி இறந்த இராணுவ வீரன் மனைவி கேள்வி.?


தன்மானமுள்ள தமிழர்களே...


நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள்..

தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள்..

இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள்..

திராவிடச் சூது உங்களை
இருளில் மாய்த்து விடச் செய்யும் ..

தனித் தமிழர் தேசியத்தை அறிந்து கொள்ளுங்கள்..
இன பற்றுகொள்ளுங்கள்..
மொழிப் பற்றுகொள்ளுங்கள்..

எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை.. கன்னடர்களோ , தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை..

தமிழ் பேசத் தெரியாத , தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்..

ஏவல் நாய்களா நீங்கள் ?

இன பற்றையும் மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்..

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே..

இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம்..

தமிழர் நாடு தமிழர்களுக்கே...

ஊடகங்களில் காட்டப்படும் எவனும் உனக்கானவன் இல்லை..


தான் கட்டமைத்த ஒரு ஆகச்சிறந்த கட்டமைப்பை தகர்க்க, அவனே எப்படி அவனுடைய ஊடகங்கள் வழியே வளர்த்து விடுவான்...

புல்வாமாவில் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாதிகளுடனான சண்டையில் மேஜர் உட்பட 4 வீரர்கள் வீரமரணம்...


உயிரிழப்புகளா ஏதுமே இல்லாமல் தொடங்கிய இந்த வருடம் இந்த ஒரு வாரத்தில் மட்டும் காஷ்மீரில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் ,6 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்...

நீட் தேர்விற்கு மாணவர்களை சோதனை செய்த அரசு, வெடி மருந்துடன் வந்த காரை சோதன செய்யவில்லை - சீமான்...


தியானம்...


மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...

மனதின் அதிர்வெண்கள்...

14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta

அதிர்வெண்களை EEG(Electro Encephologram) மூலம் அறியலாம்.

நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை.

ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. தியானம் செயதால் இது கிடைக்கும்.

தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை ஆழமான அமைதி.

டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.

ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இறைநிலையுடன் தொடர்பு கொள்ளும்
இதுதான் சமாதி...

அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....

யோகத்தின் வகைகள்...

யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகள் கொண்டதே யோகம் . இதில் தியானம் என்பது ஒரு படி....

சக்கரங்கள்...

கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் 7...

மூலாதாரம்,
ஸ்வாதிஸ்டானம் ,
மணிப்பூரகம் ,
அனாகதம்,
விசுத்தி ,
ஆக்ஞை ,
மற்றும் சஹஸ்ராரம் ( ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை )...

நாசா & ரஷ்யா விற்கு எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ள வேற்றுக்கிரக வாசிகள்...


https://youtu.be/dmxMrzUk6sU

Subscribe the channel for more news...

உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி....


அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.

சூரியன் பெருமளவு ஐதரசன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும், சிறிதளவு, இரும்பு, சிலிக்கன் நிக்கில், கந்தகம், பிராணவாயு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds),ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது.

சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது...

அதிகாரவர்க்கத்திற்கு தெரியாமல் எந்த ஒரு சம்பவமும் நடக்க வாய்ப்பே இல்லை...


பெரும்பான்மை காஷ்மீர் மக்கள் விரும்புவது சுதந்திர காஷ்மீர் தான்...


இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம். அவர்களை விட்டுவிடுங்கள். இதுவே நிறந்திரத் தீர்வு...

ஐ.நா மன்றத்தில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தி மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா கூறி இருந்தது...

ஏன் இந்த நொடிவரை அதைச் செய்யாமல் இராணுவத்தை வைத்து காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்துகிறது..?

ஏனெனில் காஷ்மீரை வைத்து தான் மத அரசியல் செய்ய முடியும்...

தவறு யாருடையது..?

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?


விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்.

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்...

முதுமையை தடுக்கும் தண்ணீர்...


தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது...

உலகிலேயே மிகவும் சிறப்பான ஒரு அழகு பொருள் என்று சொன்னால், அது தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.

இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். ஒரு தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவான சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும்.

ஏனெனில் தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், நச்சுக்களால் உடல் மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கிறது. சரி, இப்போது அந்த தண்ணீரினால் கிடைக்கும் சில அழகு நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!!!

நல்ல மாய்ஸ்சுரைசர்...

தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி, மென்மையாக இருக்கும்.

சரும சுருக்கத்தை தடுக்கும்...

தடுக்கும் தண்ணீர் குடித்தால், இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம்.

பொலிவான கண்கள்...

நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.

நல்ல க்ளின்சிங்...

முகத்தை தண்ணீரால் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

பருக்களைக் குறைக்கும்...

வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பிம்பிள் வருவதைத் தடுக்கும். குறிப்பாக இதனை தினமும் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

பொலிவான சருமம்...

தண்ணீர் பிணி நீக்கல் (therapy) எடுக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்துளைகளை திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த சருமத்துளைகளை மூடவும் உதிவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் சருமத் துளைகளில் தங்குவதை தவிர்த்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

முதுமையை தடுக்கும்...

இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

அழகான உதடுகள்...

உதடுகளின் அழகைக் கெடுப்பதே வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினால், போதிய நீர்ச்சத்து கிடைத்து, உதடுகள் எப்போதும் அழகாக வெடிப்புக்களின்றி இருக்கும்.

மென்மையான சருமம்...

சரும வறட்சி ஏற்பட்டால், சருமம் கடினமாகி மென்மையிழந்து காணப்படும். எனவே தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

எடை குறைய...

தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.

சரும தொற்றுகள்...

ச(ஷ)வரில் குளிக்கும் போது, சருமத்தில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றுகள் நீக்கப்படுவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு, உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.

உடல் முழுவதற்கும் நல்லது...

உடல் ஆரோக்கியத்தை சருமத்தை வைத்து சொல்லலாம். இத்தகைய சருமம் அழகாக இருக்க வேண்டுமெனில், தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்...

தண்ணீரை தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராக பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

உடல் துர்நாற்றத்தைப் போக்கும்...

குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறுவதால், அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம்...

விஜயகாந்த் மகன் விமர்சனத்திற்கு சீமான் பதில்...


https://youtu.be/b3w6tekhVN0

Subscribe the channel for more news...

தொப்பை குறைய எளிய பயிற்சி...


தொப்பை குறைய நிறைய பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட பயிற்சி உடனே பலன் தரக்கூடியவை. அவற்றில் இதுவும் மிக முக்கியமானது. இந்த பயிற்சி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுக்கவும்.

கைகளை மேல் நோக்கி வளைக்காமல் நேராக துக்கவும். பின்னர் மெதுவாக முன்னால் எழுந்து உட்காரவும். கைகள் முன்னோக்கி படத்தில் காட்டிய படி நீட்டியே இருக்க வேண்டும். கால்களை மடக்க கூடாது. இவ்வாறு இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 25 முறை செய்யவும்.

பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முதல் 40 முறை செய்யலாம். எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க அதிகரிக்க பலன் விரைவில் கிடைப்பதை காணலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்த 3 மாதம் செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்...

யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...


ஆழ்மனம்.. வெளிமனம்...


மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்னதான் செய்யும்?

அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியானநிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது. எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல்தான்.

திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக்கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக்கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு, அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.

இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும். நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வது தான்.

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள், நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா? சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்...

ஸ்டெர்லைட் போராளி தோழர் முகிலன் எங்கே? யாரால் கடத்தப்பட்டார்.?


சிறுநீரகக் கற்கள் ஏற்பட முக்கிய காரணம்...


இன்றைய கால கட்டத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது எனலாம்.

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி ஏற்படும். நாளடைவில் சிறுநீர் பாதையில் தடையை உண்டாக்குகிறது. சில உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம். இதற்குமுக்கிய காரணம் தண்ணீர் அதிகளவு எடுத்துக் கொள்ளாததே.

பால், தயிர். மோர் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியத்தின் தேவை காரணமாக, குடல் அதிக அளவில் ஆக்ச(ஸ)லேட்டை ஈர்த்துக் கொள்ளும். இவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆக்சலேட் ரத்தத்தில் கலந்து சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்திவிடும்.

வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அதிகரிப்பதினால் கற்கள் ஏற்படுத்துகின்றது.

அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூமிரியா போன்ற நைதரசன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூமிரியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.

அதிக அளவு வெப்பத்தால் உடலில் அதிகம் வியர்க்கிறது. வெளியேறும் வியர்வைக்கு ஏற்ற அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடுகின்றன. நம் உட்கொள்ளும் உணவு முறைகளில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. புரச்சத்து, நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகளைத் தேவையான அளவு உட்கொள்வதில்லை. இவை சீறுநீரகக் கற்கள் உருவாகக் முக்கிய காரணம்...

இதை இவர்கள் ராஜஸ்தானில் தானே நடத்த வேண்டும்.. எதுக்கு தமிழ் நாடு... சிந்தியுங்கள் தமிழர்களே...


திராவிடக் கட்சிகளாலோ அல்லது தேசியக் கட்சிகளாலோ தமிழர்களுக்கான எந்த பிர்ச்சினைக்கும் தீர்வு கிடைக்காது...


தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கட்சிகளின் தலைமை தமிழரல்லாதவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன..

ஒன்று தமிழர்கள் இந்தக் கட்சிகளின் தலைமையை கைப்பற்ற வேண்டும்.

அல்லது தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும்...

தெலுங்கர்களாலும், மலையாளிகளாலும், கன்னடர்களாலும், வழிநடத்தப்படும் அரசியல் தலைமைகளை மாற்றாமல் தமிழர்களின் எந்தப் பிரச்சினையும் தீராது என்பது உறுதி...

இதைச் செய்யுமா பாஜக மோடி அரசு...


கன்னட ஈ.வே. ராமசாயின் அக்காமாலா (குடி அரசு) மற்றும் கப்சி (விடுதலை)...


திராவிடன் : எங்க பெரியார் மட்டும் தான் நல்ல தமிழில் பெயர் வைத்து பத்திரிக்கை நடத்தினார்...

தமிழன் : நடத்தி...

தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராய வேண்டும்,

வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள் அப்டினு தமிழுக்கு எதிராகத் தானே எழுதுனாரு?

தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.

இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.

எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்.

அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்...

கடைசிவர அவனுக்கு விசுவாசமாத் தானே இருந்தீங்க?

உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்து விட்டால் போதுமா?

இந்திய இராணுவ வீரர்களுக்காக கொதிக்கும் சிம்பு...


https://youtu.be/SLUKho-DhJs

Subscribe the channel for more mews...

மீன்வளம் முற்றிலும் அழிக்கப்படும் - சாகர் மாலா திட்டம்குறித்து எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்...


துறைமுக மேம்பாட்டுக்காக மத்திய அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு சாகர் மாலா திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்துக்கு 70,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் நாடு பொருளாதார முன்னேற்றம் காணும் எனினும், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்துவரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் அரசின் பயன்பாட்டுக்காக அவர்களின் இருப்பிடங்களும் அரசால் கையகப்படுத்தப்படும் எனவும் பல்வேறு தரப்பினர் இந்தத் திட்டத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மேலும் இந்தத்திட்டம் குறித்து, மதுரா கல்லூரியின் ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர் மற்றும் சமூக ஆர்வலர் முரளி கூறுகையில், `இந்தியாவின் இயற்கை வளங்கள் முழுவதையும் அழிக்க மத்திய அரசு கொண்டு வந்த திட்டம்தான் சாகர் மாலா திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்போது இந்தத் தேசத்திலிருந்து 25 கோடி மீனவர்கள், தங்கள் வாழ்ந்து வந்த கடலோரப் பகுதியிலிருந்து முழுவதுமாக அப்புறப்படுத்தப்படுவார்கள். மீன்வளம் முற்றிலும் அழிக்கப்படும். 350 கி.மீ மீன் பிடித்தல் பகுதி 10 கி.மீ என்கிற அளவில் சுருங்கிவிடும். குறிப்பாகக் கடல் பொக்கிஷம் அனைத்தும் அயல் தேசத்து கார்ப்பரேட் முதலாளிகளால் இங்கேயிருந்து எடுத்துச் செல்லப்படும். 12 பெரிய துறைமுகங்கள் உட்பட 200 சிறிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கையில் ஒப்படைக்கப்படும். 1,200 தீவுகள் வெளிநாட்டு முதலாளிகள் வசம் ஒப்படைக்கப்படும்.

தமிழ் நாட்டிலிருந்து குறிப்பாக, கருங்கல் மலைகள் உடைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தமிழ் நாடு முழுவதும் ராணுவ மயமாக்கப்படும். மீத்தேன் வாயு, நியூட்ரீனோ, ஹைட்ரோகார்பன் என அனைத்து ஆபத்தான திட்டங்களுக்கும் இந்தத்திட்டம் வித்திடும். ஆகமொத்தம், உலகநீதி மூலத்துக்கு இந்தியா பலியாகும்.

இந்தத் திட்டத்தின் பாதிப்பு குறித்து முறையான விவரம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களைச் சிறப்பிப்பதற்கு மட்டுமே மக்களால் நியமிக்கப்பட்டதைப் போல் நடந்து கொள்கின்றனர். தமிழக அரசால் முறையான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு இந்தத்திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்...

தமிழன் திராவிடனா.? பகுதி - 1...


https://youtu.be/qBFPDoSqvLs

Subscribe the channel for more news...

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு...


For Every action, there is an equal and opposite reaction...

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.

பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும் ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது.

பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில் நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள்.

தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன் ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.

( Every action, there is an equal and opposite reaction ).

பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பி வருகிறது"  ( Reciprocation )
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம், சொல், செயல்களும் அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action) ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்து கொண்டிருக்கும்.

இந்த அதிர்வுகள் தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ, தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான இடத்துக்கு வருகின்றன.

இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும்.

பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமை யாக்கி தண்டிக்கிறது.

அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது கர்மா வலிய வந்து உதவுகிறது.

நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், பெறும் தன்மை அடைகிறது. தனது எண்ணம், சொல், செயல் நன்மையை நோக்கும் போது நன்மை ஏற்படும்.

பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது.

செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது.

செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற பலனைத் தரும்.

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.

நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்...