06/05/2018
குளங்களில் காசு போடுவது ஏன்..?
பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம்.
இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.
உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது.
இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம். பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம். செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு.
செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது...
புருஸ் லீயின் மரணம் - விடை காண முடியாத மர்மங்கள்...
1973. ஜூலை 20 அன்று புரூஸ் லீ, 67, பீகான் ஹில் ரோடு, கௌலூன் டோங், ஹாங்காங் என்னும் முகவரியில் உள்ள குடியிருப்பில் இறந்து விட்டதாக நாளிதழ்களில் வெளியான செய்தி அவரது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
புரூஸ் லீயின் மரணம் அவர் புகழின் உச்சியில் இருக்கும் போது நடந்தது.
மரணத்தின் போது அவரின் வயது 32
மட்டுமே. உடற் தகுதியில் அவரை மிஞ்ச எவரும் கிடையாது.
எனவே தான் அவரது மரணம் நடந்த அடுத்த நிமிடமே பல வதந்திகள் உலவத் தொடங்கின.
உண்மையில் புரூஸ் லீ மரணம் அடைந்த அன்று நடந்தது என்ன?
புரூஸ் லீயின் மனைவி லிண்டாவின்
அறிக்கையின்படி, புரூஸ் லீ சம்பவம் நடந்த அன்று மதியம் 2 மணிக்கு கோல்டன் ஹார்வெஸ்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரேமண்ட் சௌ என்பவரை சந்தித்தார்.
அவர்கள் இருவரும் Game of Death என்ற சினிமா தயாரிப்பது பற்றி ஆலோசித்தனர். இந்த ஆலோசனை மதியம் 4 மணிவரை நடந்தது. பின் இருவரும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த தைவான் நடிகை பெட்டி டிங்பே (Betty Tingpei) வீட்டிற்கு சென்றனர்.
அங்கு மூவரும் அத்திரைப்படத்தின் கதை பற்றி ஆலோசனை செய்தனர்.
மூவரும் அன்றிரவு ஒரு விருந்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் George Lazenby - யை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.
அவரை தனது படத்தில் நடிக்க வைக்க லீ திட்டமிட்டிருந்தார். பின் ரேமண்ட் சௌ மாலையில் நடைபெற இருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார்.
அதன் பின் சிறிது நேரம் கழித்து தனக்கு தலை வலிப்பதாக புரூஸ் லீ கூறினார்.
டின்க்பே வழக்கமாக தான் பயன்படுத்தும் ஈகுவாஜெசிக் (Equagesic) என்ற மாத்திரையை லீக்கு கொடுத்தார்.
அம்மாத்திரை அதிக சக்தி உடைய அஸ்பிரின் மருந்தாகும்.
அதன்பின் அவர் இரண்டு சாதாரண பானங்களைத் (soft drinks) தவிர எதையும் உண்ணவில்லை.
இரவு 7:30 மணிக்கு லீ, டிங்பேயின் படுக்கையில் தூங்க சென்றார். அன்றிரவு ரேமண்ட் சௌ, டின்க்பேக்கு போன் செய்து, ஏன் நீங்கள் இருவரும் இன்னும் திட்டமிட்டபடி இரவு விருந்துக்கு வரவில்லை என்று கேட்டார்.
தூங்கி கொண்டிருக்கும் லீயை தன்னால் எழுப்ப முடியவில்லை என்ற டின்க்பே கூறினார்.
உடனே சௌவும் டிங்பேயின் வீட்டிற்கு வந்து லீயை எழுப்ப முயற்சித்தார். அதன் பின் அவர்கள் ஆம்புலன்சை அழைத்தனர்..
உடனடியாக குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு லீ கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போஸ்ட்மார்டம் அறிக்கையின்படி அவர் ஒருவகை அலர்ஜியினால் வருகின்ற cerebral edema என்னும் மூளை வீக்கத்தினால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் தலைவலிக்காக சாப்பிட்ட ஈகுவா ஜெசிக் (Equagesic) என்ற மாத்திரையினால் இந்த அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறினர்.
மேலும் லீயின் வயிற்றில் மரிஜூவானா என்னும் போதை பொருள் உண்டதற்கான தடயம் இருந்தது.
எனவே இந்த போதை பொருள் வேதி வினை மூலம் மூளை வீக்க அலர்ஜியை உண்டாக்கியிருக்கலாம் என சில மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் லீ உட்கொண்டிருந்த போதை பொருளின் அளவு மிக குறைவாக இருந்தது எனவும், அது லீ சம்பவம் நடந்த அன்று காபி அருந்தினார் என்ற விஷயத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ அதை விட முக்கியத்துவம் குறைந்தது என்று ஒரு மருத்துவர் கூறியதாக கொரோனோர் விசாரணை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
R.D. டியர் (R.D. Teare) லண்டன் யுனிவர்சிட்டியில் தடவியல் மருத்துவ துறையில் பேராசிரியராக பணிபுரிபவர். 90,000 – க்கும் மேலான போஸ்ட்மார்டம் செய்த அனுபவம் உள்ளவர்.
லீயின் மூளை வீக்க அலர்ஜிக்கு மரிஜுவனா காரணமாக இருக்கும் என்ற வாதத்தை அவர் நிராகரித்தார்.
அவருடைய கருத்துப்படி cerebral edema என்னும் மூளை வீக்கத்திற்கான காரணம் ஈகுவாஜெசிக் (Equagesic) மாத்திரையில் உள்ள வேதிப் போருட்களான மெப்ரோபமட் (meprobamate) அல்லது அஸ்பிரின் (aspirin) அல்லது இரண்டுமே காரணமாக
இருக்கலாம் என்பதாகும்.
விசாரணை அதிகாரிகளால் மேற்கண்ட
அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனாலும் எந்த விசாரணை அறிக்கைகளும், டாக்டர்களும், லீயின் மரணத்திற்கான காரணங்களை உறுதியிட்டு கூறமுடியவில்லை என்பதே உண்மை.
குயின் எலிசபெத் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர். R.R லைசெட் (Dr. R.R.
Lycette), லீ உண்ட ஈகுவாஜெசிக் (Euagesic) என்ற மாத்திரையில் உள்ள ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதிப்பொருட்கள் மூளை வீக்க அலர்ஜியை உண்டாக்கியிருக்கலாம் என்றும், அவர் தலையில் எந்த காயமும் இல்லாதபோதும் அவருடைய மூளையின் எடை 1,400 கிராமிலி ருந்து, 1,575 கிராமாக வீங்கியிருந்தது என்றும், இரத்த குழாய்களில் எந்த வித அடைப்போ அல்லது வெடிப்போ காணப்படவில்லை என்பதால் இரத்த கசிவினால் மரணம் என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது என்றும்
தெரிவித்தார்.
லீயின் மரணத்தில் மர்மம மறைந்திருக்கிறது என்ற செய்தி பரவுவதற்கு லீ இறந்தவுடன் ரேமண்ட் சௌ அளித்த பேட்டிதான் முக்கிய காரணமாக இருந்தது.
ரேமண்ட் சௌ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அன்று நடந்த
சம்பவங்களை ஒவ்வொன்றாக விவரித்தார். அப்பொழுது லீயின் சொந்த வீட்டில் லீ இறந்ததாக சௌ தெரிவித்தார்.
ஆனால் புலனாய்வு பத்திரிகைகள் லீ, தைவான் நடிகை பெட்டி டின்க்பே வீட்டில்
இறந்ததை ஆதாரத்துடன் நிரூபித்தன.
சௌ எதை மறைக்க பொய் சொன்னார் என்பது மிகப் பெரிய மர்மமாக இருந்தது.
எனவே ரசிகர்கள் மத்தியில் புது, புது வதந்திகள் ஒவ்வொரு நாளும் வலம்வரத் தொடங்கின.
லீ ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க மறுத்ததால் அவரை ஹாலிவுட் மாபியாக்கள் கொன்றுவிட்டதாக ஒரு சாரார் நம்புகின்றனர்.
லீ ஹாங்காங் தாதாக்களுக்கு பாதுகாப்பு தொகை (protection money ) என்னும் மாமூல் கொடுக்க மறுத்ததால் அவர்
தாதாக்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம என்று சிலர் கருதினர்.
அக்காலத்தில் சீன நடிகர்கள் அவ்வாறு தாதாக்களுக்கு பணம் கொடுப்பது ஒரு வழக்கமாக இருந்தது. சிலர் லீ தீய சக்தியால் சபிக்கப்பட்டவர் என்றனர். அவர் ஹாங்காங்கில் வாங்கிய வீடு தீய
சக்தியால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும்
அவர்கள் கூறினர்.
சிலர் அவர் நடிகை பெட்டி டின்க்பேயுடன்
உடலுறவு கொண்டபோது இறந்து விட்டதாக கூறினர்.
மேலும் சிலர் லீ தற்காப்பு கலையை வெளிநாட்டவர்களுக்கு கற்று கொடுத்ததால் கோபமுற்ற சீன தற்காப்பு ஆசிரியர்கள் அவரை போட்டி சண்டைக்கு அழைத்து கொன்றுவிட்டதாக கூறினர்.
பெரும்பாலான சீனர்கள் லீயின் அதிகப்படியான் உடற்பயிற்சியே அவரை
கொன்ற்விட்டதாக நம்புகின்றனர்.
சிலர் லீயின் மரணம் அவர் பிறக்கும் போதே எழுதப்பட்ட விதி என்கின்றனர்.
இன்னும் சிலரோ லீயின் மரணம் ஜோடிக்கப்பட்ட நாடகம் என்றும், சரியான தருணத்தில் மீண்டும் வருவதற்காக அவர் காத்து கொண்டிருக்கிறார் என்றும் கருதுகின்றனர்.
சிகாகோவை சேர்ந்த Dr.பில்கின்ஸ் (Dr
Filkins) லீ மரணத்தின் அதிகாரபூர்வமான விளக்கங்களை ஏற்க மறுக்கிறார்.
அவர் 2006 – ஆம் ஆண்டு சீட்டில் நகரத்தில் நடந்த அமெரிக்கன் அகாடமி ஆப் சயின்சஸ் அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது மருந்தின் எதிர்விளைவுகளால் லீக்கு மரணம் ஏற்பட்டிருந்தால் லீயின் கழுத்தும் வீங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வீங்கவில்லை. எனவே லீ sudden unexpected death in epilepsy (SUDEP) என்ற திடீர் பாதிப்பினால் இறந்திருக்கக் கூடும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
SUDEP என்ற மருத்துவ கொள்கை...
1995 – ஆம் ஆண்டில்தான் மருத்துவ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
SUDEP என்பது இதயத்தின் அல்லது நுரையீரலின் செயல்பாட்டை நிறுத்தக்கூடிய திடீரென்று மூளையில் தோன்றும் ஒருவகை வலிப்பு என மருத்துவர்களால் வரையறுக்கப்படுகிறது.
மூளையில் திடீரென அளவுக்கதிகமாக நடைபெறும் மின் செயல்பாடுகளால் இவ்வகை வலிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதன் பாதிப்பால் ஆண்டுதோறும்
இங்கிலாந்தில் 500 பேர் இறக்கின்றனர்.
SUDEP பாதிப்பினால் உலகம் முழுவதும் 50 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவற்றில் 90% மக்கள் வளரும் நாடுகளில் வசிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 20 முதல் 40 வயதுவரை உள்ள ஆண்களிடம் அதிகமாக காணப்படும். இவ்வகை பாதிப்பு தூக்கம் இல்லாததாலும், அதிக மன அழுத்தத்தாலும் உருவாகிறது.
லீ அத்தருணத்தில் மிகுந்த உடல் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படிருந்ததாக டாக்டர் பில்கின்ஸ் தெரிவிக்கிறார்.
எவ்வாறாயினும் லீ மரணம் இயற்கையானது என்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்கவில்லை. அதற்கேற்ப அவருடைய மகன் பிரான்டன் லீயின் மரணமும் மர்மமான முறையில் இருந்தது.
பிரண்டன் லீ அமெரிக்க திரைப்படங்களில் நடித்து வந்தார். அவரும் தற்காப்பு கலைகளில் சிறந்தவராக விளங்கினார். மார்ச், 31, 1993 அன்று 20th Century Fox நிறுவனத்தின் தயாரிப்பான The Crow திரைப்பட ஷூட்டிங்கில் அவர் நடித்துக் கொண்டிருந்த போது துரதிருஷ்டவசமாக துப்பாக்கி குண்டடிபட்டு இறந்து போனார்.
ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் டம்மி குண்டுகளுக்கு பதிலாக உண்மையான குண்டுகள் லோட் செய்யப்பட்டிருந்தது. ஷூட்டிங்கில்
அந்த துப்பாக்கி பயன்படுத்தப்பட்டபோது, உண்மையாகவே பிராண்டன் லீ பலியானார். அப்போது அவருடைய வயது 28. பிரான்டன் லீயின் மரணத்தின் பின்னாலும் சில வதந்திகள் உண்டு.
அதிலொன்று பிரான்டன் லீ தனது தந்தையின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டு பிடித்து விட்டதாகவும், அதனை அறிந்த மாபியாக்கள் அவரை கொன்றுவிட்டனர்
என்பதாகும்.
புருஸ் லீயின் மரணம் இயற்கையானது என்பதை தெளிவுபடுத்த மருத்துவர்கள் பல விளக்கங்களை கூறினாலும், அவர்களால் அதற்கான அசைக்க முடியாத ஆதாரங்களை அளிக்க
முடியவில்லை.
அதுவே லீயின் மரணம் பற்றிய மர்மங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.
அவருடைய மரணத்திற்கான உண்மையான காரணம் அவருடன் அன்று இருந்த நபர்களுக்கு மட்டுமே தெரிந்த பரம ரகசியமாகும்...
கம்யூனிசம் என்றால் என்ன.?
இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்..
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.
லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...
ஒரு பல்லியால் முடியும் போது ஏன் நாம் செய்ய கூடாது ?
இது உண்மை நிகழ்வு...
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்துட்டு இருந்தார்.
ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் ரெண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார்.
அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்தப் பல்லியை சுற்றி பார்த்தார்.
அவர் அப்போது தான் கவனித்தார். வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும் போது அந்த ஆணி பல்லியின்
காலில் இறங்கி இருக்கிறதுன்னு.
அவருக்கு ஆச்சரியமா இருந்தது. 'அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்தப் பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது.
இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் னு மேற்கொண்டு வேலை செய்யாம அந்தப் பல்லியவே கண்காணிச்சுட்டு உட்கார்ந்து இருந்தாரு.
கொஞ்ச நேரம் கழித்த இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டாரு.
அந்தப் பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப் போட்டது.
அதாவது 3 ஆண்டுகளா இந்தப் பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்திருக்கு.
ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித
எதிர்ப்பார்ப்பும் இல்லாம 3 ஆண்டுகள்
உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும் போது உங்களால் முடியாதா ?
எல்லா பிரச்சனைக்கும் ஒரே போராட்டம்...
நமது எல்லாபிரச்சனைக்கும் காரணம் பாசிச மத்திய அரசு மட்டுமல்ல...
மாநில அரசின் தற்குறித்தனமும் பொறுப்பின்மையும் நிர்வாக திறன் இன்மையும் ஆளத்தெரியாத அறியாமையுமே காரணம் ஆகும்.
எதிர்கட்சியும் இந்த ஆட்சிமீது ஏற்படும் மக்கள் வெறுப்பு அடுத்தமுறை தன்னை ஆட்சியில் அமர்த்தும் என நாக்கை சப்புக்கொட்டி விருந்துக்கு பின் எச்சில் இலை தொட்டிக்கு தானே வந்து விழும் எனக் காத்து கொண்டுள்ளது!
அதன் தோழமைகட்சிகளும் அதில் இரண்டு நமக்கு ஏதாவது மிச்சம் மீதி கிடைக்காதா என அத்தோடு சேர்ந்து காத்துக் கொண்டுள்ளது.
இந்த சந்தர்பத்தை கொடூரவெறி கொண்ட மத்திய அரசு மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறது
இந்த கையாலாக ஆட்சியை அகற்ற குமரிமுதல் கும்மிடிபூண்டிவரை ஆண்டகட்சிகள் அவற்றின் தோழமை கட்சிகள் தவிர்த்து ஒரு மக்கள் திரள் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
கட்சி மற்றும் தலைமைகளை முற்றிலும் தவிர்த்து சூழ்நிலைக்கேற்ற மக்கள் கூட்டுதலைமை உண்டாக வேண்டும்.
ஏற்கனவே ஜல்லிகட்டு போராட்டம் நமக்கு தீர்வுக்கான போராட்ட வழிமுறையை கற்று தந்துள்ளது.
இந்த கட்சிக்கு பதில் அந்த கட்சி என்று மாறிமாறி வாக்களிப்பதால் கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
எட்டரைக் கோடி தமிழனும் மொத்தமாய் ஒருங்கிணைப்பு செய்வோம்.
வாழ்வதெனின் எட்டரைகோடி தமிழனும் வாழ்வோம்.
சாவதெனினும் எட்டரைக் கோடி தமிழனும் சாவோம்.
ஆனால் அதற்கு முன் இந்தபேடிகளை ஒரு கை பார்த்துவிட்டு சாவோம்.
கட்டளை வரும் என்று காத்துக் கொண்டிருக்காமல் தகவல் பறிமாற்றம் மட்டுமே செய்து இப்போராட்டம் தொடர் மக்கள் எழுட்சி போராட்டமாக அமையவேண்டும்.
இந்த ஒரு போராட்டம் வெற்றியடைந்து விட்டால் நீட் ஸ்டெர்லைட் காவிரி ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ சாகர்மாலா பாரத்மாலா என அத்தனை அழிவுதிட்டங்களுக்கு எதிரான தீர்வு தானாக கிடைக்கும்.
இனி இந்த மக்களை ஏமாற்ற முடியாது என்ற பயம் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் வரவேண்டும்.
அப்போது தான் இதன்பிறகு வரும் ஆட்சியாளனுக்கு அவன் எந்த கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் மீது பயம் வரும்.
அந்த மக்கள் மீதான பயமே. மக்களின் பலம். அதுவே மக்களாட்சி தத்துவம்.
234 MLA +50 MP மொத்தம் 284 பேர் ஒரு 284 பேரிடம் பெட்டையாகி கிடப்பதா மொத்த தமிழினம்?
உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா.
கொடுவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே.
- தமிழகமீட்புகுழு
அரும்பார்த்தபுரத்தில் நீட் தேர்வு பயத்தில் பிளஸ்-2 மாணவி தற்கொலை...
நீட் தேர்வு பயத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரும்பார்த்தபுரத்தில் நீட் தேர்வு பயத்தில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது42). இவருடைய மனைவி சுசிலா இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சிவசங்கரன் வில்லியனூர் கோட்டைமேடு பகுதியில் டீ. மற்றும் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவியும் கடையில் கணவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
இவர்களுடைய மூத்த மகள் சிவசங்கிரி (வயது17). பிளஸ்- தேர்வு எழுதி முடித்து விட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்தார். மாணவி சிவசங்கரி டாக்டர் ஆக வேண்டும் என்று எல்லோரிடமும் கூறி வந்த நிலையில் மாணவிக்கு திடீர் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சிவசங்கிரி தனது தங்கையுடன் நீட் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார். திடீரென சிவசங்கரி நான் அறையில் சென்று படிக்கிறேன் என்று தங்கையிடம் கூறிவிட்டு அறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். வெகு நேரமாக கதவை தட்டியும் சிவசங்கரி கதவை திறக்காமல் இருப்பதை அறிந்த தங்கை தந்தை சிவசங்கரனுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே வீட்டுக்கு வந்த சிவசங்கரன் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிவசங்கரி பேன் கொக்கியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிவசங்கரன் மகள் சிவசங்கரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவசங்கரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்வுக்கு பயந்து மாணவி சிவசங்கரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
கைக்குத்தல் அரிசியின் பயன்...
அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் செரிமானம் செய்யச் (digest) செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என்கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு. தவிடு நீங்காத அரிசை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமாக உடலுக்கு சேர்கிறது.
இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு மாதிரி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.
இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவுப் பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.
இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பளபளப்பாக்குதல் (Polishing) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும் வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.
சம்பா எனப்படும் அந்த அரிசி கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பை பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.
உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி, உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல் மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி. கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்
எளிதில் சீரணமடையும்
மலச்சிக்கலைப் போக்கும்
சிறுநீரை நன்கு பிரிக்கும்
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்
பித்த அதிகரிப்பை குறைக்கும்
நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது
உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும் சருமத்தைப் பாதுகாக்கும் வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும் கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பளபளப்பாக்குதல் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டை வரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பளபளப்பாக்குதல் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது என்பது குறிப்பிடத்தக்கது...
திராவிடக் கொள்கை ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, கர்நாடகத்திலோ எடுபடவில்லை...
கட்சியையும் சாதியையிம் மறந்து தெலுங்கரெல்லாம் ஆந்திர மகாசன சபாவின் கீழும், மலையாளிகள் கேரள சமாசத்தின் கீழும் ஒன்று திரண்டனர்.
கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் தமிழரை மட்டுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனப் பிளவுபடுத்தினர்..
இதனால் மற்றவர்கள் இன வழியல் ஒன்றுபட, தமிழர்கள் மட்டுமே சாதியால் மென்மேலும் கூறுபட்டனர்.
உள்ளபடியே தமிழ்ப்பார்ப்பனரை எல்லாம் அரசுப் பதவியிலிருந்து இறக்கி விட்டு பார்ப்பனரல்லா கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளிகளும் அந்த இடங்களில் போய் தாங்கள் அமர்வதற்கான ஒரு நொண்டிச் சாக்காகவே அவர்களின் பார்ப்பனர் எதிர்ப்பு இருந்தது.
தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...
ஆந்திரர்களோ , கன்னடர்களோ, மலையாளிகளோ என்றுமே தங்களை திராவிடர்கள் என அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்றுகொண்டதும் இல்லை. ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்..
தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட நலிந்த தெலுங்கு, மலையாளி, கன்னடச் சாதியினர் முறையே ஆதி ஆந்திரர் என்றும் ஆதி கேரளர் என்றும் ஆதி கர்நாடகர் என்றும் ஏற்கனவே இவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும்..
தமிழினத்தின் மூத்த குடிமக்களாகிய, தாழ்த்தப்பட்டோர் எனப்பட்ட தமிழகத்தின் நலிந்த சாதியினர் மட்டும் ஆதிதமிழர் என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என இழிவுபடுத்தப்பட்டனர்..
அந்த ஆதிதமிழரை ஆதி திராவிடர் என்றும், பிறரை சாதி இந்துக்கள் என்றும் முதன்முதலில் பிரித்து எழுதியும், பேசியும், சாதி இந்துக்கள் என்ற சொல்லை ஆக்கியும் அறிமுகப்படுத்தியும், தமிழர்களை சாதியாய் பிரித்து இழிவுபடுத்தியது அன்றைய நீதிக்கட்சியின் ஏடான திராவிடன் ஏடுதான் என்பதை நினைவில் கொள்க...
இத்திராவிடக் கருத்தியலின் விளைவாகத் தமிழர்கள் ஒரு தனி இனமெனும் அடையாளத்தையே இழந்து வருகின்றனர்.
தமிழர்கள் திராவிட மயமாக்கப்பட்டு விட்டதால் இனப் பற்றும், இன மானமும், இன நலனும் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்...
மூவாயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாறு.. கொடைக்கானல் மலையில் குள்ள மனிதர்களா?
கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் குள்ளமனிதர்கள் வாழ்வதாக அப்பகுதி மக்கள், இந்த நவீன காலத்திலும் நம்புகிறார்கள்.
பெருமாள்மலையிலிருந்து பழனி செல்லும் மலைச்சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில், முதன்மை சாலையிலிருந்து விலகிச் செல்கிறது பேத்துப்பாறை என்கிற ஊர்.
இங்கிருந்து மேலும் கீழே 6 கி.மீ. பயணம் செய்தால் கணேசபுரம். இதனை அவ்வூர் மக்கள் அஞ்சுவீடு என்றும் அழைக்கிறார்கள்.
அஞ்சுவீட்டிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் மலையேறிச் சென்றால், யானைகள் வலசை செல்லும் பகுதியில் அமைந்திருக்கிறது பத்து ஏக்கர் எனும் குள்ளர் குகைப் பகுதி.
மலையின் விளிம்பில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் 30 மீட்டர் சுற்றளவில் ஆறு குகைகளைக் கொண்ட தொகுப்பும், அதற்கு அருகில் முந்நூறு மீட்டர் தொலைவில். மேற்கண்ட அதே சுற்றளவில் ஐந்து குகைகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பும், இதற்கு அண்மையில், அதே போன்று ஐந்து, நான்கு மற்றும் இரண்டு குகைகள் கொண்டு தொகுப்பும் காணப்படுகின்றன.
ஒவ்வொரு குகையும் நான்கு பக்கமும் பட்டையான பெரும் கற்களைக் கொண்டு மூடி ஒரு பக்கம் திறந்து விடப்பட்டிருக்கிறது. அதற்குள் நுழைந்தால் மூன்று பேர் உள்ளே அமர்ந்து கொள்ள முடியும்.
வரலாற்றுக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள், இறந்தவர் நினைவாக அமைத்துள்ள கற்குகைகள் (டால்மென்) என்பதை அறியமுடிந்தது.
அவ்வூரைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் கூறுகையில், 'இங்கு குள்ள மனிதர்கள் வாழ்ந்ததாகவும், அவ்வப்போது அவர்கள் வந்து செல்வதாகவும் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். ஒரு சாரார், இது பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது அமைத்த குகை என்ற அடிப்படையில் பாண்டவர் குகை என்றும் அழைக்கின்றனர்' என்கிறார்.
ஒவ்வொரு வட்டமும் மிகக் கடினமான பாறைகளைக் கொண்ட அடித்தளத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. குகை ஒவ்வொன்றும் 2 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளன. பெரும்பாலான குகைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
கற்கள் அனைத்தும் சரிந்து கிடக்கின்றன. சில குகைகளுக்குள் பாம்புகள் அதிகம் தென்படுகின்றன.
இதுகுறித்து தொல்லியல் அறிஞர் முனைவர் வெ.வேதாசலம் கூறியபோது, 'இது போன்ற கற்குகைகள் அனைத்தும் நீத்தாரை நினைவுபடுத்தும் பண்டைய மரபின் தொடக்கம் என்று கொள்ளலாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மரபு என்பதால், இது போன்ற கற்திட்டைகள், குற்குகைகள், கல்வட்டங்கள் உலகம் தழுவிய அளவில் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றன.
கொடைக்கானலைப் பொறுத்தவரை பரவலாக அதன் அனைத்து மலைப்பகுதிகளிலும், குறிப்பாக தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கூடலூர் பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன.
இதனை அந்தப் பகுதி மக்கள் குள்ளமனிதர்கள் வாழும் குகை, வாலியர் குகை, பாண்டவர் குகை என்று அழைத்துக் கொள்கின்றனர்.
ஆனால் தங்களோடு வாழ்ந்து இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்டு வணங்கப்பட்ட பண்டைய வழக்கம் காரணமாக அமைக்கட்டவையே இந்தக் கற்குகைகள். இதனை 'டால்மென் சைட்' என்று அழைக்கிறோம்' என்றார்.
இத்தனை பெரிய கற்களை தூக்கிக் கொண்டு வந்து, மலை விளிம்புகளில் மிக நேர்த்தியாக அமைத்து முன்னோர்களை வழிபட்ட நம் முன்னோர்களை நினைத்தால் பெருமையாகத்தான் உள்ளது...
கொரியா நாட்டின் தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது ஒரு உதாரணம்...
கொரிய நாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி. அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.
இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள் நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.
அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி. அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பிவிட்டார்கள்.
பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போது அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம், அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.
இதற்கேற்றார்போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.
இதை கொரியர்களும் ஏற்றுக் கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.
செம்பவளம், படகு மூலமாகச் செல்லும் போது படகை Balance செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.
தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை....தொடர்ந்து தேடுவோம்...
சித்தராவது எப்படி ? - 23...
ஆனாய் ஆனால் அடைந்தாயா ? என்ற கேள்வி...
பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் வெகு விரைவாக பிரபலமாகி விடுவார்கள்..
பிரபலமாக ஒன்றும் செய்ய தேவை இல்லை... ஏதோ ஒரு தெய்வத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.. பிடித்து பிடித்து அதுவாய் ஆக வேண்டும்.. அதில் தன் நிலையை கரைத்து, அதில் தன் மன நிலையை பலவீனப் படுத்தி செயல் அற்ற ஒரு முடமான நிலைக்கு போக வேண்டும்.. அந்த தெய்வ சிந்தனையில், தனக்கு இறைவனால் அளிக்கப் பட்ட கடமைகளை உதறி தள்ளி விட்டு, அவன் சிந்தனையிலேயே தன் ஜீவ சக்தி முழுமையாக இழந்து எந்த உலக குறிக்கோளையையும் பற்றி நிற்க முடியாத அளவிற்கு பலம் இழந்து, அதனால் உலகப் பற்றுகளை பற்ற முடியாமல் எந்த பற்றும் பற்றாத ஞானி என்ற போலியான பட்டம் பெற்று, தன் முடிவு காலத்தில் தேள் கொட்டிய திருடன் போல், உயிர் துயரத்தை சொல்ல முடியாமல் பெரும் வேதனையை அனுபவித்து, தன் துன் மரணத்தை ஜீவ சமாதியாக தன்னை போற்றியவர்களால் கொண்டாடி கொள்ள வேண்டியது தான்..
நிகழ் கால மகா சக்தியாகிய சிவகலப்பு என்ற உன்னத நிலையை அறவே இழந்து, சவகலப்பு நோக்கிய பயணமே அது..
சிவனை சதா காலம் தன் மனதால் நினைத்து நினைத்து சிவனை பற்றிய விசயங்களாகவே ஆகி விடுவார்களே தவிர சிவன் பெற்ற சக்தியை ஒரு சிறு துளியேனும் பெற்றார்கள் என்றால் கேள்வி குறிதான்...
மனதால் ஆனார்கள் ஆனால் சக்தியை அடைந்தார்களா என்றால் துளியும் இருக்காது.. நிகழ் காலத்தில் இருக்க துளிசக்திகூட இல்லாத அளவிற்கு தெய்வ சிந்தனையால் மோன நிலை என்ற நிகழ் கால தொடர்பை அறுந்த சவ நிலைக்கு ஒத்த மயக்க நிலையை மக்கள் அதிகமாக மதிப்பது ஒரு அறியாமையே...
சிவநிலை என்ற உயர்ந்த தத்துவம் நாம் இழந்து பல காலம் ஆகிவிட்டது.. அதை மீண்டும் நிலை நிறுத்துவது என்பது முடியாதது போல் தோன்றினாலும் நிறைநிலை மனிதன் தோற்றத்திற்கான இரகசியங்கள் வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதால் அது முடியும் என்பதே உறுதியாக தெரிகிறது..
சில உறுதி செய்யப் படாத விதிவிலக்குகள் பக்தியோகத்தில் இருந்தாலும், அவைகள் தனது இரகசியங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில் பழைமையாக உள்ளது...
காளி பக்தரான மிக பிரபலமடைந்த இராமகிருஷ்னர் மோன நிலையிலேயே மயங்கி மயங்கி தன் தேகத்தை காப்பாற்றும் வல்லமையை இழந்து புற்று நோயால் மரண அடைந்தார்..
உலகிற்கு, உலக உய்ய என்ன உளவுகளை வைத்து சென்றார் என்றால் கேள்விக் குறிதான்..
ஆனால் உளவுகளை பக்தி யோகம் தாண்டிய நிலையில் சில தகுந்த உளவுகளை வைத்து விட்டுப் போன 3000 ஆண்டுகள் வாழ்ந்த, திருமூலருக்கு எந்த மடங்களும் அமைப்புகளும் இல்லை..
காரணம் மயக்கத்தை நீக்கி தெய்வீக விழிப்பு நிலையாகிய சிவகலப்பை தந்ததால், மயக்கத்தை விரும்பும், மாயையில் சிக்கிய மக்கள், அதனை விரும்பவில்லை..
மயக்கம் தரும் போதை பொருள்களிலும், மயக்கம் தரும் கருத்து போதைகளிலும் மயங்கி கிடக்கவே மனிதனின் சோம்பல் மனம் விரும்புகிறது..
ஆகவேதான் விழிப்பு நிலையில் உள்ள புத்தியும், அறிவும், செயல் படவேண்டிய அவசியம் ஆகிறது.. அவை செயல் பட தொடங்கி விட்டால் எந்த மயக்கமும், தன்னை மறந்த மோன நிலையும், தூக்கமும், முடிவில் மரணமும் இல்லை என்பதாகிறது..
இந்த உயர்ந்த உன்னத நிலை, வெறும் சாதாரண சுவாச ஒழுங்கில் உள்ளது என்றால் மனம் ஏற்றுக் கொள்வது இல்லை.. விழிப்பு நிலையை வெறுப்பதே மனதின் இயல்பு..
இந்த உலகம் ஒரு நிறைநிலை மனிதன் வரவுக்காக ஏங்கி கொண்டு இருக்கிறது.. அந்த ஏக்கத்தை போக்க நிறைநிலை மனிதனாக முனைவோமாக....
திராவிட மலையாளிகள் தமிழினத்திற்கு செய்த கொடுமைகள்...
தென் கேரளாவில் தமிழர் பகுதிகள் (வரைபடம்)...
ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்ட பகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.
நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக் கொடுத்தார்.
இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.
முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.
திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.
30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.
1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்க வேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது...
அமானுஷ்யம் - சூட்சும உலகங்கள்...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.
தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.
சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),
கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),
வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),
தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),
மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)
ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது.
இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.
இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.
உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?
குகை மர்மங்கள்...
நாம் பொதுவாக அமானுஷ்ய இடங்களையும், நிகழ்வுகளையும் தேடி அலைவதிலும் தெரிந்து கொள்ள முயல்வதிலும் வியப்பில்லை. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள அண்ட வெளியில் ஆராய்கிறோம், பல கிலோ மீட்டர் அடியில் உள்ள கடலுக்கடியில் ஆராய்கிறோம்.
ஆனால் நம் அருகிலேயே நிலத்தில், மலையடிவாரத்தில், மலையில், பாறைகளில் உள்ள குகைகளை விட்டு விடுகிறோம், ஆராய்கிறோம் எனினும் முழுவதுமாக ஆராயபடவில்லை என்பதே உண்மை.
எந்த ஒரு இடத்தை பார்த்ததும் நம் உள் மனதில் ஒரு தயக்கம் கலந்த மர்மமான பயம் வருகிறதோ அது தான் அமானுஷ்ய பகுதி. அந்த வகையில் குகைகளை குறைத்து மதிப்பிட இயலாது. கற்பனைக்கு எட்டாத, எண்ணிலடங்காத மர்மங்கள் அதில் காணப்படுகிறது. நம் ஊர் குகைகளில் உள்ள அதிசயஙகள் நம்மை ஆச்சரியபடுத்தும் அளவு உள்ளது.
பொதுவாக குகைகள் போர் காலங்களிலோ அல்லது அவசர ஆபத்து, விபத்து காலங்களில் சுரங்கங்களின் வழியாக தப்பி செல்ல உதவும் பாதையாக கையாளப்படுவது நமக்கு தெரியும்.
ஆனால் அதை விட வேறு முக்கியமான ஒரு விடயம் அதில் உள்ளது. நமது சித்தர்கள் ஏன் பெரும்பாலும் குகைகளில் வசிக்கிறார்கள் அல்லது குகைகளில் தவம் செய்கிறார்கள் என்று யோசித்ததுண்டா?
குகைகளில் உள்ள கல் சுவர் குளிர்ச்சியை (மன அமைதி மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்) தரும், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, தனிமை என பல காரணங்கள் இருப்பினும் இன்றியமையாத காரணம் உள்ளது.
யாதெனில் சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் அவர்கள் வேற்று உலகை தொடர்பு கொள்ளவும் அங்கிருந்து பூமிக்கு வரும் பாதையாக குகைகளை பயன்படுத்துகின்றனர்.
அது ஏன் நிலத்தின் மேற்பகுதியை பயன்படுத்த வில்லை எனில். நிலத்தின் அடியில் அல்லது குகைகளில் தான் பிரபஞ்ச இணைப்பு (wormhole) அதாவது வெவ்வேறு பிரபஞ்சங்களுக்கு இதன் வழியாக ஒரு நொடியில் செல்லலாம்.
அந்த wormhole கள் நிலத்திற்கு கீழே திறப்பனவாக இருக்கலாம். இதை தான் அவர்கள் கண்டறிந்து பயன்படுத்தி வேற்றுலக தொடர்பை கொண்டுள்ளனர்.
ஆனால் நாம் அந்த பிரபஞ்ச இணைப்பை அறிவதில் சிக்கல் உள்ளது.
குகைகளின் உள்ளே உள்ளவை மிகப்பெரும் சுரங்க வழிகளும், மர கிளை போன்ற அமைப்புடன் அதிக எண்ணிக்கையிலும் குகைகள் காணப்படும். இதில் நாம் பிரபஞ்ச இணைப்பை கண்டறியும் போது தான் மிகப் பெரிய மர்மங்களுக்கு விடை கிடைக்கும்.
இதை பற்றி முழுவதுமாக ஆயாய்ந்து தெரிய முற்படும் போதே விடை கிடைக்கும்.
அது மட்டும் அல்லாது இன்றும் பல பகுதிகளில் பார்த்ததாகக் கருதப்படும் சித்திர குள்ளர்களும் பூமிக்கு அடியில் தான் வசிக்கிறார்கள்.
அவர்களும் அவ்வப்போது குகைகளின் வழியாகவே வெளிப்படுகிறார்கள்.
பூமிக்கு அடியில் இன்னொரு பூமி போன்றே மலை, காற்று, நீர் உயிரினங்கள் இருக்கின்றன என்பது தனிக்கதை { Hollow earth }. இது போதாது என்று வேற்றுகிரக வாசிகளும் குகைகளில்....
Subscribe to:
Posts (Atom)