25/04/2017
காமத்தை வெல்வது எப்படி?
இன்றைய கால கட்டத்தில் கடவுளை நெருங்க விடாமல்.. நம்மை உலக இச்சையின் பக்கம் இழுத்துக் கொண்டு போகும் மிகப்பெரிய அஸ்திரம்..
யுத்தத்தில் லக்ஷ்மணனை மூர்ச்சை இழக்க செய்த நாக அஸ்திரம் இதுதான்..
விகாரங்களில் மிகப்பெரிய அஸ்திரம் காமம்..
இதனால்தான் தெய்வங்களில் அவர்களின் தலைக்கு பின்னாலோ, காலுக்கு அருகிலோ காமம் என்ற பாம்பை வென்றதன் அடையாளமாக மிகப் பெரிய விஷப்பாம்பை காண்பித்து உள்ளனர்..
இந்தகாமம் என்பது மனதில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, விதைத்துள்ள இச்சையின் விதை..
இதை ஆரம்பத்தில் நாம் நீக்காவிட்டால் இது நம்மை மூர்ச்சை இழக்க செய்துவிடும்.. மூர்ச்சை என்றால் நாம் என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என்பதே தெரியாத நிலை..
இதனால்தான் காமம் மகா சத்ரு என்று கீதை சொல்கின்றது..
கடவுளின் அருகில் செல்ல வேண்டுமானால் ஒருவர் முதலில் காமத்தை விடவேண்டும் என்று சொல்லப்படுகின்றது, உண்மையில் காமத்தை வெல்வது எளிது..
ஆனால், எப்பொழுதும் நம்முடைய மனதை பிஸியாக வைத்துக் கொள்பவருக்கே இது சாத்தியம்.. ஏதாவது ஒரு ஆன்மீக பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவேண்டும்.
எங்கே காமம் உற்பத்தி ஆகின்றதோ முதலிலேயே எச்சரிக்கையாகி மனதை அதிலிருந்து விலக்க வேண்டும்..
காமத்தை பஸ்பம் ஆக்கும் பரமாத்மா சிவன் மீது மனதை செலுத்த வேண்டும்.. மன்மதனின் காமபாணம் சிவபெருமானிடம் செல்லுபடி ஆகவில்லை..
எனவே, மனம் இறைவன் மீது ஈடுபட.. நம்முடைய மனம் சுத்தமடைய வேண்டும்..
முதலில் நம்முடைய கண்கள் எதிலாவது மூழ்கும் பொழுது அங்கேதான் காமம் உற்பத்தி ஆகின்றது..
கண்கள் பார்த்து மனதிற்கு கொண்டு செல்லும்பொழுது அங்கே இச்சை உற்பத்தி ஆகின்றது.
அந்த இச்சையின் சிறிய விதை பெரிய காமத்தின் விஷ விருட்ஷமாக வளர்ந்து விடும்.. அதில் உட்காரும் ஆசை என்னும் குரங்கு.. ஒவ்வொரு கிளையாக தாவி விளையாட ஆரம்பிக்கும், கண்டிப்பாக ஒரே கிளையில் அமராது.. ஒன்றை பார்க்க இன்னொரு கிளை அதற்கு அழகாக தோன்றும்..
காமம் ஒருவருக்குள் வந்துவிட்டால்.. அவர் காலப்போக்கில் எல்லோர் மீதும் அதை செலுத்த ஆரம்பித்து விடுவார்.. அதற்காக அவர் பல காரணங்களை சொல்வார்..
எங்கே காரணம் இல்லையோ, அங்கே தான் நிவாரணம்..
ஒருவரின் தேகத்தின் மீது பார்வை செல்லும் ஒருவருக்கு காமம் உற்பத்தி ஆகும்..
உங்கள் கண்கள் எதிலும் மூழ்க கூடாது.எதில் உங்கள் கண்கள் நிலைபெருகின்றதோ அதனுடைய காட்சி உங்களை அறியாமல் உங்களிடம் நாள் முழுவதும் தென்பட்டுக்கொண்டே இருக்கும்..
எனவே, இறைவனின் கட்டளை உன்னை உடல் என்று உணராமல், நெற்றியின் மத்தியில் ஆன்மா என்றே உணர்ந்து கொள்.. பிறரையும் அப்படியே பார்க்க பழகு..
பிறகு தேகத்தின் கவர்ச்சி ஒன்றும் செய்யாது..
ஒருவனின் காமம், கோபம், அகங்காரம், பற்று, பேராசை என்னும் ஆயுதங்களில் முதல் ஆயுதம் காமம்..
இதை வெல்லவேண்டும் என்பதற்காக ரிஷிகள், முனிகள் வீட்டை விட்டு காட்டுக்கு சென்றார்கள்.
ஆனால் இறைவன் சிவபெருமானின் வாக்கு இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர்போல பற்றற்று அன்புடன் ஆத்ம அபிமானத்துடன் இருந்து மனதை ஜோதியான என்னிடம் செலுத்து என்பதே ஆகும்..
பெரிய..பெரிய.. மன்னர்கள் கூட தன்னுடைய ராஜ்ஜியத்தை காமத்தினால் இழந்தனர்.
ஒரு காமம் வாழ்க்கையில் சத்திய நாசம் செய்துவிடும்.. காமம் உள்ளுக்குள் வந்துவிட்டால் அவன் பலவிதங்களில் பொய் பேச ஆரம்பித்து விடுவான், அவன் காமத்தை நல்லது என்று அதன் பக்கம் பேசுவான்..
இன்று இந்த உலகம் பொய்யாக மாறியதற்கு முக்கிய காரணம் காமம்..இந்த உடலும் பொய்..இந்த உலகமும் பொய்..
ஆபாசத்தை பார்ப்பவர் ஒன்றோடு நிறுத்துவது இல்லை மேலும், மேலும், பார்த்துக்கொண்டே இருப்பார் இதை பார்க்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குள் ஒழுக்கமான கணவன் மனைவியாக கண்டிப்பாக வாழ முடியாது.. இவ்வளவு விவாகரத்து வழக்குகளுக்கும் காமமே கதாநாயகன்.. காமத்தினால் நிரந்தர சந்தோசப்பட்டவன் ஒருவனுமில்லை..
ரிஷிகள் கூட காக்கையின் மலத்திற்கு சமமான சுகம் என்றே சொல்கின்றனர்..
எனவே, மனதை சுத்த எண்ணங்களில் நிரப்பி வையுங்கள்...
முன்னாடி அமிர்தா இப்ப கொக்கக்கோல...
சரிந்த விற்பனையை சரி செய்ய குட்டிக்கர்ணம் அடிக்கும் கொக்கக்கோலா...
நீ விஞ்ஞானிக்கே காசு கொடுத்து கூட்டிட்டு வந்து சொன்னாலும் நாங்க வாங்க மாட்டோம் என்கின்றனர் இளைஞர்கள்...
சித்தராவது எப்படி - 36...
குண்டலினி சக்தி பயணம்--- பாகம் பணிரெண்டு...
விழிப்பும் உணர்வும் - எண்ணமும் மறைப்பும்...
எங்கெல்லாம் விழிப்பு நிலை உள்ளதோ, அங்கெல்லாம் உணர்வு இருக்கும்.. விழிப்பிலேயேயும் உணர்விலேயேயும் நம் இருப்பு தன்மை உள்ளது.. அந்த இரண்டில் நாம் நாமாக உள்ளோம்.
எண்ணத்தில் நாம் பிறராய் உள்ளோம் அல்லது மற்றவர்களாய் உள்ளோம்.. அதில் இருப்பு தன்மைக்கு மறைப்பு ஏற்பட்டு தன்னில் தானாய் இருக்கும் நிலை மறைக்கப் பட்டு நாம் எதை எண்ணுகிறோமோ அதுவாய் மாறி விடுகிறோம்..
கோபம் காமம் பொறாமை வெகுளி போன்ற குணங்களில் நம்மை இழந்து விட்டு நாம் எண்ணுகின்ற வடிவங்களாய் நமது ஆற்றல் அனைத்தும், அந்த வடிவங்களாய் மாறத் துடிக்கிறது..
அந்த வடிவத்தை பற்றிய எண்ணங்கள் தூண்டக்கூடிய சூழ்நிலை உருவாகும் போது எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பித்து, அந்த வடிவமாய் மாற துடிகின்றது..
அப்படி மாற நினைகின்ற போது அந்த வடிவத்தின் பஞ்ச பூதங்களில் இணைய முடியாமல், மனம் என்ற ஒரு பூதம் மட்டும் இணைய துடித்து அதுவும் தோற்று போய் விடுகிறது..
மனம் தன் மற்ற நான்கு பூதங்களை விட்டு விலகி நிற்பதால், இங்கா அங்கா என்ற குழப்பத்தில் முடிவில் தோல்வியில் இங்கு என சொல்லப் படும் தன்னிலையில் மீண்டும் சேரவேண்டிய நிலைக்கு வருகிறது..
மீண்டும் எண்ணத்தால் வெளியே செல்ல துடித்து மீண்டும் மீண்டும் தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது..
மனம் வெளியே செல்லும் போது மற்ற நான்கு பூதங்களும் மனதை தேடி செல்லுவதால் அவைகளும் செயல் இழந்து போகின்றன..
அதனால் தான் கோபக்காரனுக்கு புத்தி மட்டு அறிவு மட்டு என்கின்றனர்.. மட்டு என்றால் செயல் இழந்த தன்மையை குறிக்கிறது....
எண்ணத்தின் தன்மை இப்படி இருக்க உணர்வு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
மிகவும் அரிய வகை மாம்பழம்
ஒன்றை சுவைக்கத் தொடங்கும் போது, அதனை இரு வகையில் சுவைக்கின்றோம்..
ஒன்று எண்ணத்தால் மற்றது உணர்வால்.. எண்ணத்தோடு சுவைக்கும் பொழுது, அந்த மாம்பழம் எந்த வகையை சார்ந்தது?.
இது போன்ற சுவையோடு கூடியது மாற்று வகை மாம்பழம் வேறு எதாவது உண்டா?
இனிமேல் இது எங்கு கிடைக்கும்? எப்பொழுதெல்லாம் கிடைக்கும்.?. கிடைக்காத பட்சத்தில் நாம் என்ன செய்வது ? இதன் விலை என்னவோ ? இது கிடைக்கும் பருவ காலம் என்ன ? நம் இடத்தில் அந்த மரம் வைத்தால் அது வளருமா?
அதை மற்றவர்களுக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், நமக்கென்று தனிபட்ட முறையில் கிடைக்க என்ன வழி இருக்கிறது?
இது போன்ற ஆயிரம் கேள்விகளுக்கு நடுவே நாம் அதனை சுவைக்கும் போது, நம் மனம் சதா மாம்பழ சுவையை விட்டு விலகி விலகி, ஏனைய நான்கு பூதங்களும் அந்த மாம்பழ சுவையோடு இணைய விடாமலும் செய்து விடுகிறது..
இந்த நிலையில் மாம்பழ சுவையின் அனுபவம் நூற்றில் ஒரு பங்கு கூட நாம் அனுபவிப்பதில்லை..
மீண்டும் அதனை அனுபவிக்க துடிகின்ற போது அது கிடைக்காத பட்சத்தில் அது நிறை வேறாத ஆசைகளாய் சித்தத்தில் பதிந்து விடுகிறது..
அதுவே எண்ண ஆதிக்கமாய் நம்மில் நிறைந்து, மனதை சதாகாலமும் வெளியே ஈர்க்கப் படுகிறது..
மற்ற பூதங்களும் மனதை தேடும் பணியிலே இருந்து தனக்குரிய வேலைகள் செய்ய முடியாமல் போய் விடுகிறது.. இப்படி தான் வாழ்வு வீணாகிறது..
மிக பெரிய சத்தியம், உண்மை என்ன வென்றால் பஞ்சபூதங்களும் ஒருங்கிணைந்த நிலையே, இருப்பு தன்மை..
அதாவது மனம் தன் இச்சைக்கு எதுவும் செய்யாமல் மற்ற பூதங்களோடு இணைந்து இருக்கும் போது, மனம் எண்ண ஆதிக்கமற்ற நிலையில் இருக்கிறது...
மனதின் வெளி தேடுதல் நிற்கிறது.. எப்பொழுது எல்லாம் மன தேடல் இல்லையோ அப்பொழுதெல்லாம் இருப்பு தன்மை உள்ளே வெளிபடுகிறது..
இருப்பு தன்மையில் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறியும் விழிப்பு நிலை உருவாகுகிறது..
சரி இப்போது உணர்வால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்..
உணர்வோடு இருக்கும் போது பஞ்ச பூதங்களும் அனைத்தும் செயல் படுகின்றன.. அந்த பஞ்சபூத கூட்டில் மனம் வெளியே செல்லாமல் மற்ற பூதங்கங்களோடு இணைந்து இருப்பதால் தன்னில் தானாய் இருக்கும் இருப்பு தன்மையில் விழிப்பு நிலை பெருக்கம் அடைகிறது..
அதே மாம்பழத்தின் சுவையின் உணர்வில் மனம் லயித்து இருக்கும் போது மனம் எழுப்பும் கேள்விகள் காணாமல் போய் விடுகிறது..
புத்தி அதன் சுவையை பூரணமாக எடுத்துக் கொள்ள அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.. ஆகாய அறிவு அதை நீங்காத அனுபவமாக வைத்துக் கொள்ளமுடியும்..
சித்தமும் சுவையை பூரணமாக நினைவில் வைத்துக்கொள்வதால், மீண்டும் அதே அனுபவத்திற்காக நிறைவேறாத ஏக்கங்களாக வைத்துக் கொள்ள அவசியம் இல்லை...
இதனால் தேகத்தில் தேக முழுமைக்கும் சீரான சுவையின் ஊடுறுவல் நிகழ்கிறது.. ஆக அந்த பஞ்ச பூத கூட்டில் விழிப்பு நிலை பெருக்கம் அடைவதால் எல்லாமே உள்ளது உள்ளவாறு விளங்குகிறது...
இப்பொழுது மிக முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம்.. சுவாச ஒழுங்கை மனதால் பண்ணலாம் அல்லது உணர்வால் செய்யலாம்..
சுவாசமே விழிப்பு நிலையால் நடந்தாலும் மனம் அதை ஒழுங்கின்மை ஆக்கி கொண்டே இருப்பதால் பலர் சுவாச ஒழுங்கு பயிற்சியினை மனதாலே செய்து செய்து மிக குறைந்த பலனையே பெறுகின்றனர்..
உணர்வாலே பயின்று விழிப்பு நிலை பெருக்குவதில்லை... சிலருக்கு மனதாலே செய்து வருவதால் சில உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள்..
உணர்வால் எப்படி செய்வது ? சுவாச ஒழுங்கின் சமயம், காற்றின் ஓட்டத்தை நாசிகளிலும் தொண்டை குழாயிலும். மார்பு விரிவடைதலிலும் உள்ள உணர்வோடு இணைந்து சுவாசிக்க வேண்டும்..
4 வினாடி கால அளவில் உணர்வோடு செய்யும் போது ஏற்படும் விழிப்பு நிலை, அந்த கால அளவை தானே சரியாக கவனித்துக் கொள்ளும்..
மிக முக்கியமானது உணர்வோடு செய்வதில் அக்கரை அதிகம் எடுத்துக் கொண்டால் மற்றவை நல்லவைகளாக பின் தொடரும்..
இதனை உணர்வோடு பயிலும் போது ஏற்படும் மிக பெரிய வித்தியாசத்தை காணலாம்..
மேலே சொன்னது போல் உணர்வோடு சுவாச ஒழுங்கு பயிலுங்கள்.. ஏற்படும் மிகுந்த வித்தியாச அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
பாஜக இரண்டு டிரஸ் யோகி ஆதித்யநாத் சொத்து பட்டியல்...
Deposits in Banks, Financial Institutions and Non-Banking Financial Companies
SBI Parliament House Delhi, A/c NO. 31406328952
2,21,064
SBI Parliament House Delhi, A/c NO. 31232489829
1,34,071
SBI Parliament House Delhi, A/c NO. 31232489869
1,34,071
PNB Industrial Area Gorakhpur, Customar Id 3008135-300813550
4,84,112
PNB Industrial Area Gorakhpur, Customar Id 0666000100209800
71,931
SBI Sansad Bhavan. A/C No. 1002381531
12,81,190
= Rs 23,26,439
NSS, Postal Savings etc Post Office, A/C NO. 269216
9,09,235 9
Post Office
87,000
Tata Safari, NO. UP53AD0009
3,00,000
Innova, Model 2013, NO. DL2FGG9999
12,00,000
New Fortuner Model 2014, NO.UP53BM0001
21,00,000
= Rs 36,00,000
Jewellery (give details weight value)
20 Gram Gold Jewellry
15,000
10 Gram Gold Jewellery
30,000
Mobile Glaxy Grand
18,000
Watch
2,000
= Rs 65,000
Other assets, such as values of claims / interests
Revolver
1,00,000
RIFILE
80,000
= Rs 1,80,000
Gross Total Value (as per Affidavit) = 72,17,674
என்னா நடிப்பு...
சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை...
சிவன் ஒரு மின்சக்தியாலான உருவம் என்று எடுத்துக் கொண்டால் அந்த சித்திரத்தில் வேறு அணிகலன்கள் ஏன் உள்ளது? சிவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறார் அல்லவா?
அதை வெறும் ருத்ராட்சமாக பாராமல் அதில் ஒரு ஆகர்சன சக்தி உள்ளதென எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புவியில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. நிறை அதிகமான பொருள் நிறை குறைந்த பொருளை ஈர்க்கும். இரண்டு பொருள்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயினால் இந்த ஈர்ப்பின் வலிமை குறையும். இதனை சர் ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஆகவே ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆகர்சன சக்தி (Inertial Force) இருப்பது தெளிவாகிறது.
சிவன் கழுத்தில் இருக்கும் ருத்ராட்ச மாலையை விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தால் அப்போது அவைகளின் சக்தி ஒன்றுக்கொன்று இழுத்துக் கொண்டிருக்கிறது என்றும், ஒரு ருதிராட்ச காய்க்கும் இன்னொரு ருத்திராட்ச காய்க்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் ஆகர்சன சக்தியை சிவன் அதிகம் பெற்றிருக்கிறார்.
சிவனது நெற்றியில் மூன்று விபூதிப் பட்டைகள் இருக்கின்றன. புருவ மத்தியில் ஒரு போட்டும் வைக்கப்பட்டுள்ளது. விபூதிப் பட்டைகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் , விஞ்ஞானக் கண்களுக்கு அது மூன்று கோடுகளாகத் தெரிய வேண்டும். புருவ மத்தியில் உள்ள போட்டு புள்ளியாகத் தெரிய வேண்டும்.
உலகில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று இழுக்கின்றன. அந்த ஆகர்ஷன சக்தியின் திசை இடைப்பட்ட இரண்டு பொருள்களுக்கும் செங்குத்தாக இருக்கும். அப்படி பார்த்தால் பூமி என்ற அதிக நிறையுடைய ஒரு பொருள் , அதன் மேற்ப்பரப்பில் உள்ள ஒரு குறைந்த எடையுடைய பொருளை ஈர்க்கின்றது. அந்த பொருளின் பல பாகங்களில் இருந்தும், பூமியின் மையம் நோக்கி இழுக்கும் கோடுகள் எல்லாம், சமாந்திரக் கோடுகளாக (Equal perpendicular lines) இருக்கும். காரணம் என்ன என்றால் பூமியின் ஆரம் மட்டுமே கிட்டத்தட்ட 6200 கிலோ மீட்டர் ஆகும். பூமியின் ஒட்டுமொத்த ஆகர்ஷன ஈர்ப்பு மேற்ப்பரப்பில் உள்ள பொருளில் ஒரு குறிப்பிட்ட புள்ளி வழியாக செங்குத்தாக செயல்படுகிறது. அதுவே அந்த பொருளின் குருத்துவ கேந்திரம் (Centre of gravity) என்று அழைக்கப்படும்.
சிவன் படத்தில் விபூதி என்று உணர்த்திய அந்த மூன்று கோடுகளும் மூன்று சக்தி நிலைகள்..
1) விழா நிலை
2) விழும் நிலை
3) இடைச்சமநிலை
புருவமத்தியில் உள்ள பொட்டு - குருத்துவ கேந்திர புள்ளி.
சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி – மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன.
இத்தகைய மஹா சக்தியை, சிவன் என்று மனித ரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர்.
சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைத்தார்கள் என விளங்கும். உடலில் எப்படி மின்சாரத்தைச் சேர்த்து வைக்க முடியும்? என்ற கேள்விக்கும் விடை காணலாம்.
மின்சாரம் கண்டு பிடிப்பு – வரலாறு..
முதன் முதலாய் 1799-ல் மின்சாரத்தை வோல்டா என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீர்த்த கந்தக அமிலம் நிரப்பி அதனுள் ஒரு துத்தநாக தகட்டையும், ஒரு செப்பு தகட்டையும் ஒன்றன்மேல் ஒன்று படாமல் வைக்க வேண்டும். இந்த இரண்டு தகடுகளின் மேல்பகுதியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நுனிகளை ஒரு செப்புக் கம்பியினால் சேர்த்தால் கம்பியின் வழியாக மின்சார ஓட்டம் உண்டாகிறது.
சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைக்கக் காரணம், சிவன் சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன், அது செம்பு. நாகப்பாம்பை அணிந்திருக்கிறார். அது துத்தநாகம். இத்தகு அணிகலன்களை அணிந்திருக்கும் சிவனது உடம்பை பாத்திரமாக வைத்துக் கொண்டால் மின்சாரம் எங்ஙனம் உருவாகும் என புரியும்.
தலைமுடியில் செம்பு..
சிவனை ஓர் உயிருள்ள மனிதராக எண்ணினால், அந்த மனித உடலில் அமிலமும், நீரும் இருப்பது தெரியும். அந்தத் தண்ணீரில் சூரிய ஒளியாகிய எரிபொருள் புகுந்து மனிதன் வாழ்வதற்கான சக்தியை அளிக்கிறது. ரோமத்தில் செம்பு உள்ளது என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. சோதனை செய்து பார்த்தால் களிம்பு இல்லாத சுத்த செம்பு முடியில் இருப்பது தெரியும் என போகர் கூறியுள்ளார். இரும்பை சுத்த செம்பாக்கும் வல்லமையுடையது ரோமம்.
சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஹீலியம் என்ற வாயுவை சுத்தப்படுத்தி சரீரத்துக்குள் அனுப்புவதற்கு தலை முடி உதவி செய்கிறது.பூமியின் ஈர்ப்பு சக்தியில்லாமல் எப்படி ஒருவர் நிற்க முடியும். மனிதர்கள் ஏதோ ஒரு சக்தியின் உதவியால் தான் பூமியில் நிற்க முடியும். ஆனால் தாவரங்கள் தன வேர்கள் பூமியில் பிடித்திருந்ததால் தன்னிச்சையாக நிற்க முடிகிறது. தாவரங்களில் வேரிலுள்ள சக்தி, மனிதனின் தலை முடியிலுள்ள சக்தியை ஒக்கும்.
ஓவியத்தினால் உருவத்தைக் காட்ட இயலும். ஆனால் அவ்வுருவத்தில் உள்ள பொருட்கள் எதனால் ஆக்கப்பட்டவை என்று விளக்க முடியாது. எனினும் ஒரு சில உலோகங்களை நிறம் கொண்டு அடையாளம் காண முடியும்.
சித்த ஓவியர்கள் சிவனுக்கு நாகம் (Zinc- துத்தநாகம்) என்ற உலோகத்தை அணிவிக்க வேண்டியிருந்தது.அதை எப்படி உலகமக்கள் எல்லாரும் உணர்ந்து கொள்வது என யோசித்துப் பார்த்ததும், நாகம்(zinc) என்று தெரிந்து கொள்வதற்காக, உயிருள்ள நாகத்தை (Cobra) உலோக நாகமாக சித்தரித்தார்கள் ஓவிய சித்தர்கள்.
சிவனுக்கு செம்பினால்(Copper) ஆன ஒரு ஆபரணத்தை அணிவிக்க விரும்பிய சித்தர்கள் ஓவியத்தின் வழி இவ்வுலோகம் தான் இது என மக்களுக்கு உணர்த்த சிந்தித்தார்கள். தமிழ் அகராதியில் செம்புக்கு மதி (Moon) என்ற சொல் இருப்பதைக் கண்டனர். செம்பில் களிம்பு என்னும் விஷமான களங்கம் சேர்ந்த்திருக்கிறது. அதுபோலவே சந்திரனிலும் (Moon) களங்கம் இருப்பதை யாவரும் அறிவர். ஆகவே தான் செம்பு என்ற பொருள் கொண்ட பிறைச் சந்திரனை ஆபரணமாக அணிவித்தனர்.
சிவனது சடா முடியில் கங்கையை சித்தரிப்பது ஏன்? சிவன் அதீத சக்தி உடையவர். சக்தி (Energy) என்பதற்கு பெண் என்று ஓர் பொருள் உள்ளது. ஆகவே அந்தப் பெண்ணை, சக்தியின் அம்சமாக சித்திரத்தில் வரைந்தார்கள். சிவனின் சடா முடியில் உள்ள கங்கை என்றழைக்கப்படும் பெண்ணில் இருந்து வருவது சக்தி ஓட்டம் (Flow of energy) ஆகும்.
நம் நாட்டில் அவதரித்த சித்தர்கள் தங்களது சீவனையே சிவனாகக் கண்டார்கள். அந்தச் சீவனாகிய சிவனில் மின் சக்தியைச் சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒருவரைத் தொட்டால் மின்சக்தி அவரது உடலில் பாயும் என்பதையும் தெரிந்து இருந்தார்கள்.அதனால் தான் இந்தச் சித்தர்கள், தங்கள் சக்திகள் கால் வழியாக புவிக்கு சென்றுவிடாமல் தடுக்க மரத்தினால் ஆன பாதரட்சை அல்லது பாதக்குறடு அணிந்திருந்தார்கள்.
சித்தர்கள், மகான்கள் எல்லாம், தங்களது பாதத்தை தொட்டு வணங்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் பாதங்களின் விரல்கள் வழியாகவும் மின்சக்தி வெளியேறும் தன்மை கொண்டது. அதேபோல் கைவிரல்கள் வழியாகவும் மின்சக்திகள் வெளியே பாயும் அபாயம் உள்ளது. முக்கிய சீடர்களைத்தான் கையால் தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பார்கள்...
கூடுவிட்டு கூடுபாயும் சித்துகளை பெற்றவருக்கு மரணம் இல்லை...
முன்னோர்கள் நம் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.
1) பரு உடல் 2) நுண்ணுடல் (astral body ) 3) காந்த உடல் ( causal body ).
1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது . பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.
2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும்
நுண்அனுவாகும். அதுவே உயிர் என்றும்
உயிராற்றல் என்றும் , உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது. உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம். உயிரிலிருந்து
வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.
3). காந்த உடல் என்பது நுண்ணிய
இறைதுகளால் ஆனது. ஒவ்வொரு
இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது. எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது . அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும் . சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும் அழைக்கிறோம். உயிரிலிருந்து. வெளியாகும் ஜீவ காந்த
ஆற்றலே இத்தனை வேலைகளையும்
நடத்துகிறது.
கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?.
சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில்
மனதை வைத்து தவம் செய்யும்போது
கூடுவிட்டு கூடு பாயலாம்.
இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன்
இரகசியத்தை அறிவது கடினம். உயிரை
உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே
போய்விட்டது.
யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு
கூடு பாயும் செயல் தான். கூடுவிட்டு
கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால்
உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.
பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள்
ஒன்றாக கருதபடுகிறது.
விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம். இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை. உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில்
வலி உண்டாகிறது.
எல்லாம் நன்மைக்கே...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 36...
விபாசனா தியானம்...
புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித்தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது.
புத்த மத நூல்களில் பாலி மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான முறை காணப்படுகிறது. இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.
எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர்.
இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். “அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்” என்று அவர் நண்பர் சொன்னார்.
ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று கோயன்கா சொன்னார்.
கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது என்று சொல்லி விட்டார்.
திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று ஊ பா கின் கூறினார்.
விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின்.
சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம்.. ஆனால் அடிமனதைத் தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்.
(ஆன்மீகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது).
அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார்.
விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.
1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன்.
தியானப் பயிற்சிமுகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.
6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.
மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது.
எனவே அந்த தியானமுகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.
இனி விபாசனா தியானத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மேலும் பயணிப்போம்.....
ஆகாயத்தில் ஒரு ஒளி - 36...
ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தீர்க்க தரிசனம் 36-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். பொதுவாக தீர்க்க தரிசனங்கள் துவங்கும் நேரமும், அது முடிவடையும் நேரமும் ஒருவருக்கு தெரியக்கூடாது என்பது கடவுளின் கோட்பாடாகும். ஆனால் தீர்க்க தரிசனத்தால் மக்கள் தங்கள் வாழும் சூழ்நிலையில் நிகழும் இடர்பாடுகளை கண்டு விழிப்படைந்து, அதனால் எச்சரிக்கையுடனும், சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயல வேண்டும் என்பதும் கடவுளின் கோட்பாடாகும்.
இன்று 36-வது தீர்க்க தரிசனத்தில் பின்வரும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதாவது உலகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒரு மாபெரும் அழிவுச் சம்பவம் இந்த உலகின் வரைபடத்தில் தென்துருவப்பகுதியில் தற்போது நிகழக்கூடும் என்றும், அங்கு ஏற்படும் பனிப்புயலால் பாதி தேசமே காணாமல் போகும் என்றும் 36-வது தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது. மலையேறும் ஒரு குழு இந்த பனிப்புயலில் சிக்கி மரணத்தை சந்திப்பார்கள் என்றும், அந்த புயல் ஓய்ந்தபின் அவர்களை தேடும் முயற்சியில் ஒரு குழு ஈடுபடும் என்றும், அவர்கள் முதலில் உலகத்திலேயே அதிசயமான ஒரு மனித இனத்தை அங்கு கண்டறிவார்கள் என்று 36-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
மத்திய வடகிழக்கு ஆசியாவில் மாபெரும் அழிவுச்சம்பவம் ஒன்று இந்த 36-ம் தீர்க்க தரிசனம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 40 நாட்களுக்குள் நடந்து முடியும் என்றும், இந்த அழிவுச்சம்பவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்பு அடையும் என்று 36-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
இந்திய தேசத்தின் துணைக்கண்டத்தில் ஒரு மாபெரும் பூமி சம்பந்தப்பட்ட அரிய நிகழ்வு நடக்க போவதாகவும், அங்கு அகழ்வராய்ச்சி மேற்க்கொள்ளும் அளவிற்கு பல அரிய சம்பவங்கள் நிகழும் என்று 36-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.
மக்களின் பொருளாதார மேம்பாடு என்பது அவர்கள் செய்யும் தொழிலிலும், அவர்கள் ஈட்டும் வருமானத்திலும் உள்ளது என்றும், அவ்வாறு இந்திய மக்கள் ஈட்டும் வருமானத்திலிருந்து அரசு பெறும் வரி சதவீதத்தை மத்திய அரசு கணிசமான அளவு தளர்த்தும் என்றும், இதனால் சாதாரண குடிமகனும் சேமிப்பு பழக்கத்தை இனி மேற்க்கொள்ளும் படியான திட்டத்தை இந்திய அரசு மேற்கொள்ளும் என்றும், இதனால் நாட்டில் பணப்புழக்கம், பண்டமாற்று முறையும் புழக்கத்தில் வரும் என்று 36-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.
கலியுகக் கடவுளான கிருஷ்ண பரமாத்மா தனது பிரவேசத்தை இப்பூமியில் நிலைநிறுத்தும் காலமாக இந்த 36-ம் தீர்க்க தரிசனம் நடைபெறும் நாட்களே தீர்மானிக்கும் என்றும், அந்த சிறப்பான தினத்தை பல ஆன்மீக அமைப்புகள் முன்நிறுத்தி வெளியிடுவார்கள் என 36-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.
மத்திய ஆசிய நாடுகளில் ஒரு இனம் புரியாத கலவரம் திடீரென்று வெடிக்கும் என்றும், இது தீவிரவாத செயலாக அமையும்படி ஒரு நாடு தனது முயற்சிகளில் இறங்கும் என்றும், அதனை உலகநாடுகள் சபை கண்டறிந்து அந்த நாட்டை எச்சரிக்கை செய்யும் என்றும், இதனால் உலகப்போர் ஒன்று உருவாதற்கான முகாந்திரம் உருவாகிட சூழ்நிலைகள் ஏற்படும் என்றும், இதனை உலக நாடுகளில் சில தலையிட்டு ஒரு அமைதியான சூழ்நிலைக்கு திரும்ப கொண்டு வரும் என்று 36-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.
இந்திய தேசத்தின் மகா ஞானிகளின் அற்புதக் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இதுவே நமக்கான நல்லநேரம் என்று இந்திய தேசத்து மக்களே நினைக்கும்படியாக பல அற்புதங்கள் நிகழக்கூடிய இறை அற்புதங்களின் துவக்கம் என்று 36-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.
மண்ணை ஆண்ட ராஜாக்களில் பேரும் புகழும் பெற்ற வீரசிவாஜி வழிபட்ட காளியின் சந்நதியில் மாபெரும் இறை அதிசயம் ஒன்று விரைவில் நிகழும் என்றும், வீர சிவாஜிக்கு தமிழகத்தில் மக்கள் கோவில் எழுப்பும் ஒரு நிகழ்வும் நடக்க உள்ளதாக இறை தீர்க்க தரிசனத்தின் 36-ம் பகுதி ஒரு குறிப்பை தருகின்றது.
சொல்வதும், அதனை செயல்படுத்துவதும் இறைவனே என்ற பொன்வாக்கு நிகழும் காலமாக இக்காலம் திகழும் என்றும், இதுவே அன்றைய நாளில் ஆகாயத்தில் ஒரு ஒளியாக பிரகாசிக்கும் என்று 36-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது...
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...
பிராண சிகிச்சை...
இச்சிகிச்சையளிக்கும் முன், சிகிச்சை பெறுபவருக்கு இச்சிகிச்சை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை முதல் சிகிச்சையின் போது தெரிவித்தல் வேண்டும். இதன் பின்னரே அவரின் முழுச் சம்மதத்துடன் இதனைச் செய்தல் வேண்டும்.
சாதாரண வைத்திய முறையில் சில சிகிச்சைகள் அவர்கள் உறவினர் அல்லது அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் ஆரம்பிக்கபடுகின்றன. இதற்கு, அத்தனிப்பட்ட மனிதரின் தெளிவான மனச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலே நல்ல முடிவை, நல்ல நிவாரணத்தைப் பெற முடியும். அல்லாது போனால் விழலுக்கு இறைத்த நீர் போல பிரயோசனமற்றதாகும்.
முதலில் இறை சக்தி அல்லது இயற்கை சக்தியில் சிகிச்சை அளிப்பவருக்கு நம்பிக்கை வேண்டும். இதனைச் செய்பவர், இது தன் செயல் அல்ல, தான் ஒரு ஊடகம் அல்லது கருவி என்பதை தாமே உணர்ந்து அதனை சிகிச்சை செய்பவருக்கும் தெரியப்படுத்துதல் வேண்டும்.
அரியசக்தி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்து எம்மை இயக்கும் பிராண சக்தியாக எம்மில் புகுந்து, எம்மூலம் சிகிச்சை பெறுபவரின் உடற்கூறுகளை வெவ்வேறு உடற் கவசங்களினூடாக அடைந்து, ஒரு சீரிய மாற்றத்தை உண்டாக்கி சிகிச்சை பெறுபவரின் உடற் சக்கரங்களில் ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் சீரான ஒரு மாற்றத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி, உடலில் ஓர் சீரான பிராண ஓட்டத்தை உண்டாக்கி பிராணா குறைந்த இடத்திற்குத் தேவையான பிராணாவை அளிப்பதன் மூலமும், பிராணா கூடிய பகுதிக்கு தேவையற்ற பிராணாவை நீக்குவதன் மூலமும், ஒரு சம நிலையை உருவாக்கி, நோய்களை அந்தப் பகுதிகளில் குணப்படுத்துகின்றது.
இச்சிகிச்சை, அதனைப் பெறுபவரின் முழுச் சம்மதத்துடன் ஆரம்பித்தாலும் இதனைப் பெறுபவரின் மனம் இச்சிகிச்சையின் போது, இந்த அரிய சக்தியிலோ அல்லது இதனைச் செய்பவரின் மேலோ சந்தேகம் கொண்டால் இதனால் பயன் ஏற்படாது.
மேலும் மனதை ஒரு நிலையில் வைத்து அமைதியாக இச்சிகிச்சையின் தாக்கத்தை உணர்ந்து, அனுபவித்து, அந்த அனுபவத்தை இதனைச் செய்பவரிடம் தேவையெனில் தெரியப்படுத்துவதோடு நில்லாமல், மனத்தை சுற்றுப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அல்லது முற்றிலும் புறம்பான எண்ணங்களை மனதில் அலைய விட்டு, பிறவிடயங்களில் முக்கிய கண்ணாக இருந்து கொண்டால் இச்சிகிச்சையினால் பயன் கிட்டாது.
இதனைச் செய்பவருக்கும் அதிருப்தியையும் சோர்வையுமே உண்டாக்கும்.
சிலர் இச்சிகிச்சையின் தூய உயர் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இதனை ஒரு மனோ வசியம் அல்லது மாந்த்ரீகம் (மந்திரம்) சம்பந்தமானது என்று தாமும் ஐயம் கொண்டு, பலரையும் தடுமாற வைக்கிறார்கள்.
இது அவர்கள் இது பற்றி சரியான அறிவை, அல்லது தகவல்களைப் பெறாததாலும், அல்லது இச்சிகிச்சையினால் பலன் கிட்டாத சிலரின் கதைப் பரப்பலாலும் (gossip) ஏற்பட்ட விளைவேயன்றி இச்சிகிச்சையில் எந்தவித கெட்ட தன்மையும் இல்லை.
ஒரு வைத்தியரிடம் (medical doctor) எவ்வாறு முழுமையாக அவரை நம்பி சிகிச்சை பெறுகிறோமோ, அதே போல் இச்சிகி்ச்சையில், எம்மை ஆளும் ஒரு இயற்கைச் சக்தியிடமோ அல்லது அத்தகைய ஒரு பரம் பொருளிடமோ மனத்தளவிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.
அடுத்து இச்சிகிச்சையைச் செய்பவரிடமும், முழுமையான நம்பிக்கையை, அவர் அச்சக்தியை வழிப்படுத்தி நம்மில் நன்மையை, தன்னலமற்ற முறையில் இந்த அரிய சக்தியை தம்மூடே கடத்தி அதனைத் தகுந்தவாறு சிகிச்சை செய்பவருக்காக உபயோகப்படுத்துகிறார், என்பதையும் புரிந்து கொண்டு, மனப் பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.
இறைவன் ஒருவன் இருப்பதை நம்பாமல் இறை வழிபாடு அல்லது கோயில் வழிபாடு செய்வது போல், அல்லது வைத்தியரிடம் நம்பிக்கை வைக்காது அவரிடம் சிகிச்சை பெறுவது போல், அல்லது குருவின் அறிவை ஆற்றலை உணராது, மதிக்காது அவரிடம் பாடமோ, பயிற்சியோ பெறுவது போல் இப்பிராண சிகிச்சையின் போது, நம்பிக்கை வைக்காது சிந்தனையை அலைய விட்டால் பயன் கிடைக்குமா..?
தமிழக திருட்டு கம்யூனிட்கள் காதில் இவை விழாவது பாருங்கள்...
மூணாறு தமிழ்ப்பெண் தோட்டத்தொழிலாளர்களை வேசிகள் என பொதுக்கூட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளஅமைச்சர் MM.மணியை கண்டித்து தெருவில் இறங்கி போராடும் நம் தமிழ் பெண்கள்...
ஏற்கெனவே தமிழர்களை அரசியல் கொலை செய்ததற்காக கடந்த ஆட்சியில் சிறை சென்ற இந்த கொடிய மிருகம் M.M மணி, தமிழ் பெண்களை இழிவுபடுத்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்...
கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்...
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.
இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
வயிற்றில் வித்தியாசம் - உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.
குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு - வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.. ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.
பெண்டுலம் ட்ரிக் - உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.
எடை ஜாஸ்தியா இருக்கா - சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.. குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.
புளிப்பா? இனிப்பா - உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.. அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.
அதிக வாந்தியா - கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம்.
ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.. குறைவாக இருந்தால் பெண் குழந்தை என அர்த்தம்...
தமிழினமே விழித்தெழு...
அமெரிக்காவில் 75%க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். ரஷ்சியாவில் அப்படி. ஜேர்மனியில் அப்படி. இத்தாலியில் அப்படி. அவர்கள் மத எதிர்ப்பு.. மதப் பிரிவினை என்று எதையாவது முழங்கி தங்கள் சமூகங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனரா இல்லை.
ஏற்றுக் கொண்ட மதக் கொள்கைகளை மனிதனை சமூக வாழ்வியலுக்குள் நிலை நிறுத்த பயன்படுத்திக் கொண்டு அறிவியலை வளர்த்து பொருளாதார சமூக முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் ..
நீ பகுத்தறிவுவாதி நான் பகுத்தறிவற்றவாதி என்று மாறி மாறி சிலைகளுக்கு கல்லால் அடிக்கும் பகுத்தறிவற்ற மனிதருக்கு 1%த்துக்கும் உதவாத செயலைச் செய்ய தூண்டிவிட்டு பகைமையை தந்திரமாக உருவாக்கி திராவிடர்கள் நம்மை ஆட்சி செய்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள்...
தமிழக கிராமிய மக்களுக்கு அறிவியலை ஊட்டுங்கள்...
கோவில்கள் அனைத்திலும் இலவசப் பள்ளிகள் அமையுங்கள் பகுதி நேரமாக என்றாலும்.
செய்ய விடுவார்களா இந்தப் பகுத்தறிவுவாதிகள். இல்லவே இல்லை.
மாறாக.. கோவில் சிலைகளுக்கு கல்லால் அடிக்கவும் பிராமணர்களை ஒழிக்கவும் கோசம் போட்டு சமூகப் பிரிவினைகளை வளர்க்கவும்..
தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழலைப் பேணி சாதி அரசியல் நடத்தவுமே இவர்கள் இந்தக் கோசத்தைப் பாவிக்கப் போகின்றனர்.
அதுதான் கடந்த 70- 80 வருடங்களாக நடந்தும் வருகிறது..
இது தான் பெரியாரிசம் என்கிற திராவிட கம்பனியின் வேளை...
ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி வாய்ப்பே இல்லை.. நிதியமைச்சர் பதவி வேண்டுமானால் தரலாம்...
அதிமுகவில் சசிகலாவின் ஆதிக்கத்துக்கு பின்னர் அந்த கட்சி இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது. அதன் தொடர்ச்சியாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுகவின் இருண்டு அணிகளும் தேர்தலை சந்தித்ததால் தோல்வி தான் மிச்சமாக கிடைக்கும் என இரண்டு அணிகளுக்கும் தெரியும்.
இதனையடுத்து இரண்டு அணிகளும் இணைவது குறித்தான பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ஆனால் ஓபிஎஸ் அணி சில நிபந்தனைகள் வைப்பதால் பேச்சுவார்த்தை நடைபெறாமல் தடையாக உள்ளது.
முதலமைச்சர் பதவி, பொதுச்செயலாளர் பதவி இந்த இரண்டும் தான் ஓபிஎஸ் அணியால் வைக்கப்படும் பிரதான கோரிக்கை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எடப்பாடி தரப்பு முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவதற்கு தயாராக இல்லை எனவே தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் இதனை பிரதபலிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சேத்துப்பட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். ஓபிஎஸ்-க்காக எனது நிதியமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக கூறினார். அப்படியென்றால் ஓபிஎஸ்-க்கு முதல்வர் பதவி தர முடியாது என மறைமுகமாக கூறுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்...
உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்...
முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள்.
அதைப்போல ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள்.
நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.
அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி. குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற
கருத்தும் உண்டு.
குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.
பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.
குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை
கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர்.
பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு.
அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும்.
நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.
இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.
மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்
கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.
மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்தி தான் சித்தி எனப்படும்.
மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினி குண்டலினி என்பர்.
அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள்.
அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள்.
முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.
மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று
நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது.
அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.
யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.
அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால்,
காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான்.
இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை
அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள்
என்று சொல்லப்பட்டுள்ளது.
அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.
முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல.
அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும்...
இலுமினாட்டி களால் மலேசிய தமிழர்களுக்கு வரப்போகும் பேராபத்து...
ஈழத்தில் நடந்த தமிழர் இனப்படுகொலை ஒரு அடிப்படைத் தொடக்கம் தான். உலக அரசியலை தனது கைகளுள் வைத்திருக்கும் சியோனிச யூதர்கள், தமிழ் இனத்தை அவர்களது எதிரி இனமாக பார்க்கிறார்கள், அதற்கு காரணம் நாம் ஒரு மூத்த இனம் என்பதாலும், தமிழர்களின் மரபியல் சிந்தனை என்பது ஆதிக்க, அடிமை அரசியலுக்கு எதிராக உள்ளது என்பதையும் இந்த யூதர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் . இவர்களை இல்லுமினாடிகள் என்று நாம் அறிவோம்..
இவர்களின் அடுத்த மிகப்பெரிய செயல் திட்டம், மலேசியாவை ஒரு மாபெரும் போதை, பேதை வர்த்தக நகரமாக , ஒரு கேளிக்கை நகரமாக மாற்ற வேண்டும் என்பது தான்.
ஆனால் அதற்கு பெரும் தடையாக உள்ளது அந்த நாட்டின் இஸ்லாமிய சிந்தனை கொண்ட அரசும் , அதன் மக்கள் கூட்டமும் தான்.
மலாய் இன மக்கள் தமிழர்களுடன் நீண்ட நெடிய காலமாக தொடர்பு உடையவர்கள், ஆனால் இப்போது மலேசியாவில் உள்ள தமிழர்கள் அனைவரும், பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழகத்தில், மற்றும் ஈழத்தில் இருந்து வேலைக்காக கொண்டு செல்லப் பட்டவர்கள் தான்.
தமிழர்கள் அந்த மண்ணில் வாழும் மக்கள் ஆனால் அவர்களுக்கு அந்த மண்ணை ஆளும் உரிமை இல்லை . அந்த மண்ணை ஆளும் உரிமை என்பது மலாய் இனத்தவர்களுக்கு மட்டுமே உண்டு. 1000 வருடங்கள் ஆனாலும் இந்த நிலை மாறக் கூடாது, தமிழர்கள் அந்த மண்ணில் பிழைக்க வந்தவர்கள் இதை எந்தத் தமிழனும் அங்கே மறக்கக் கூடாது..
ஆனால் சமீபமாக மலேசியாவில் 1mdb நிறுவன ஊழல் தொடர்பாக நடந்து வரும் சிக்கல் தமிழர்களுக்கும், மலாய் மக்களுக்கும் ஒரு பெரிய இனப் பிரச்சனையின் தொடக்கம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ?
தற்போதைய பிரதமராக உள்ள முகமது நஜிப் பின் துன் அப்துல் ரசாக், அம்னோ (UMNO) எனும் மலாய் இனவாத கட்சியை சார்ந்தவர், இந்த கட்சியை எப்படியாவது மலேசியாவில் இருந்து தூக்கி விட்டு ஜனநாயக செயல் கட்சியை (DAP) கொண்டு வருவார்கள், இவர்கள் மலேசிய மக்களுக்கே மலேசியா என்ற கொள்கை உடையவர்கள் தான் ஆனால் இவர்களின் ஆட்சியில் தான் தமிழர்கள் தாக்கப் படுவார்கள்.
இதில் ஆம்னோ இல்லுமினாடிகளுக்கு கொஞ்சம் எதிரானவர்கள். காரணம் இவர்கள் மலேசியாவை இஸ்லாம் நாடாக மாற்றும் நோக்கம் கொண்டவர்கள். அம்னோ (UMNO) கட்சியின் அங்கமும் முன்னால் மலேசிய பிரதமருமான மஹாதீர் பின் முகம்மது இல்லுமினட்டிகளுக்கு எதிராகவே பேசியுள்ளார். மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தை பெரிதும் விமர்சிப்பவர். இவர் இருக்கும் வரை தமிழர்களுக்கு சிக்கல் இல்லை. இவர் தான் தற்போது உள்ள பிரதமரை பரிந்துரை செய்தவர் என்றாலும் இல்லுமினாட்டிகளின் திட்டம் உணர்ந்து இப்போதைய பிரதமரை இவரே பதவி விலகவும் சொல்லி இருக்கிறார். காரணம் UMNO கட்சியை காக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே. இல்லுமினாடிகள் எப்படியாவது UMNO கட்சியை இல்லாமல் செய்ய இட்ட திட்டம்தான் இந்த 1MDB ஊழல்.
மலேசியாவை திட்டமிட்டு தாக்கி வரும் இல்லுமினாடிகள் தான் மலேசிய விமானங்கள் காணமல், தாக்கப்பட்டதற்கு அடிப்படை காரணம் ஆகும்.
சரி தமிழர்களுக்கு என்ன இதனால் பாதிப்பு என்கிறீர்களா ?
மலேசியாவில் அரசாங்கத்திற்கு எதிராக செயல் படும் கொள்ளையர்கள் (gangster) 60% தமிழர்கள். இவர்கள் மலேசியாவில் கொலை , கொள்ளை , கடத்தல், போதைப் பொருள் கடத்தல் என்ற எண்ணற்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இவர்களுக்குப் பின் இருப்பதும் இல்லுமினாடிகள் தான். இது ஒன்றைக் காட்டியே இனப்பிரச்சனையை தூண்ட முடியும்.
மற்றும் இப்போது நடந்து வரும் ஆளும் கட்சிக்கு (UMNO) எதிரான போராட்டங்களிலும் அதிகம் கலந்து கொள்வது, சீனர்கள் மற்றும் தமிழர்கள் தான். இதில் கொடுமை என்னவென்றால் சீனர்களுக்கு தலைமை தாங்குவதும் ஒரு தமிழ் பெண் தானாம்.
தமிழர்கள் தான் மலாய் மக்களுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுகிறார்கள் போன்ற எண்ணம் இவைகளால் நிச்சயம் மலாய் மக்களிடம் பரப்பப்படும் .
ஆளும் கட்சியான UMNO இதை மலாய் மற்றும் வந்தேறிகளுக்கான பிரச்சனையாக சித்தரிக்கிரார்கள். இந்த கட்சிக்கு அடுத்து வரும் கட்சியான DAP இதை பயன்படுத்தி தமிழர்களுக்கான உரிமைகளை பறிப்பது மட்டும் அல்லாமல் அவர்களை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றும் நடவிடிக்கையிலும் ஈடுபடும். இந்த காலக்கட்டத்தில் தான் மலேசியாவில் உள்ள வர்த்தக கட்டடங்கள் (twin towers ) இலுமினாடிகளால் இடிக்கப்படும்.
அந்த பழியை தமிழர்கள் சார்ந்த 36 எனும் கள்ளக்கடத்தல் கும்பல் அல்லது , விடுதலைப்போராட்ட விடுதலைப்புலிகள் மீது போடும் இது மீண்டும் ஒரு மாபெரும் கலவரத்தை மலேசிய மண்ணில் நிகழ்த்தும், இதில் சீனர்களும் பாதிக்கப்படுவார்கள், தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்.
சீனர்களை காப்பாற்ற ஒரு நாடு உண்டு , தமிழர்களை யார் காப்பது ?
தமிழர்களே 18.8.2018 மலேசிய இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட உள்ளன..
தமிழர்களுக்கு அதற்கு முன்பே ஒரு பேர் ஆபத்து காத்து உள்ளது.
இந்த சிக்கல்கள் முடிந்தவுடன் இல்லுமினாடிகளின் நேரடி கையால் கட்சியான மக்கள் நீதி கட்சி (PKR) ஆட்சி அமைக்கும். இந்த கட்சியன் கோடியே ஒற்றைக் கண் அடையாளம் தான்.
மலேசிய ஊடகங்களை நம்பாதீர்கள் அவைகள் சொல்வதை கேட்டு தமிழர்கள் போராட்டங்களில் கலந்துக்கொண்டு பூர்வீக மக்களை எதிர்க்காதீர்கள் . மலேசியா அவர்கள் நாடு . மலேசிய மண் நமது மண் அல்ல. அங்கு நீங்கள் பிழைக்க சென்ற இடம். அங்கே உங்களுக்கு அடிப்படை உரிமைகள் உண்டு , அவர்கள் இனத்தை பகைக்காதீர்கள். தமிழர்கள் அங்கே சுலபமாக தவறாக சித்தரிக்கப்படுவார்கள்.
மற்றும் மலேசியத் தமிழர்களே , உங்களுடன் கலந்து மறைந்து இருக்கும் வடுகர்களை கண்டறியுங்கள், அவர்களை எதிலும் தலைமை தாங்க அனுமதிக்காதீர்கள் அவர்கள் உங்களை நிச்சயம் முதுகில் குத்துவார்கள் . அவர்கள் உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து . தமிழர் யார் தமிழர் அல்லாதோர் யார் என்று அறிந்து திருமணம் செய்யுங்கள், தமிழர் அல்லாதவர்களுடன் நிறைய மலேசிய தமிழர்கள் மணவுறவு கொண்டுள்ளது வேதனை.
இல்லுமினாடிகள் எதை செய்தாலும் சொல்லிக் கொண்டு தான் செய்வார்கள் , கபாலி எனும் படத்தில் நம்மை அழிக்கப் போகும் செய்தியை அவர்கள் சொல்லி விட்டார்கள். மலாய் மக்கள் நமது நண்பர்கள், அவர்களிடம் நல்லிணக்கம் கொள்க ..
ஊடகங்களை நம்பாதீர்கள்... இப்போதைய பிரதமர் கொள்ளை அடித்தால் உங்களுக்கு என்ன ? நல்லது செய்தால் உங்களுக்கு என்ன ? நீங்கள் அங்கே வாழ சென்றவர்கள் , அந்த நாட்டின் சுரண்டலுக்கு எதிராக குறள் கொடுக்கும் முதல் உரிமை அந்த நாட்டின் பூர்வீக குடிகளான மலாய் மக்களுக்கே உண்டு. சீனர்களோடு சேர்ந்து வீணாய் போகாதீர்கள்.
உங்களை காக்கும் இடத்தில் தமிழகம் இல்லை, கவனமாக செயல் படுங்கள்...
நன்றி - பாரி சாலன்..
சித்தராவது எப்படி - 35...
குண்டலினி சக்தி பயணம் - பாகம் பதினொன்று...
குண்டலினி சக்தி என்ன செய்கிறது ?
மூலதாரத்தில் ஒடுங்கி சுருண்டு கிடக்கின்ற அந்த சக்திதான், குண்டலினி சக்தி என ஏற்கனவே பார்த்தோம்.. அந்த குண்டலினி சக்தி விழித்து எழவும், ஓங்கி எழவும், செய்ய என்ன சூழ்நிலை இருந்தால் நடக்கும் என்பதை பல யோக ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளாமையால் அந்த குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப, படாத பாடு பட்டு இருக்கின்ற தேக சக்தியையும் விரையம் ஆகி, முடிவில் சோர்வும் தளர்வும் அடைகிறார்கள்..
ஏதோ மன கற்பனையில் சில நிழல் அனுபவங்களை பெற்று அற்ப சந்தோசம் அடைகிறார்கள்.. அந்த அனுபவங்கள் இம்மி அளவும் பயன் படவில்லை என்பது மிகுந்த காலம் கடந்தே உணர வேண்டி இருக்கிறது.. அதற்குள் தேகம் தளர்ந்து சீர் குழைந்து விடுகிறது..
குண்டலினி சக்தி எழுவதற்கும் ஓங்குவதற்கும் தடையாய் இருப்பது ஆதிக்க எண்ணங்களின் அழுத்தமே..
அந்த அழுத்தத்தில் குண்டலினி சக்தி ஒடுக்கத்திற்கே போகிறது..
சற்று விழிப்பு நிலையில் கோபம் பேராசை போன்ற எண்ண ஆதிக்கங்கள் தலை தூக்கும் போது சுவாசத்தின் மூச்சின் அழுத்தத்தை அடி வயிற்றில் உணரலாம்..
பொதுவாக பெரும் பான்மை நேரங்களில் நாம் அப்படியான அழுத்தத்தில் சதா காலமும் இருப்பதால் நாம் அடையாளம் தெரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும்..
சுவாச ஒழுங்கின் சமயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறும் போது, பழைய அனுபவத்திலேயே இருந்த மனம் அந்த வித்தியாசத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது..
அதனால் சுவாச ஒழுங்கிலே கிடைக்கின்ற ஒரு இலகு தன்மையை கலைக்க மனம் சதா காலமும் விரும்புகிறது..
மனதை அடக்கிய விழிப்பு நிலையால் மேலும் மேலும் சுவாச ஒழுங்கு செய்யும் போது குண்டலினி சக்தி எழ தொடங்கி பிரபஞ்ச சக்தியை பெற தொடங்குகிறது..
இப்படி பெறப் படும் சக்திதான் அன்பு என அழைக்கப் படுகிறது..
இதில் அ என்பது அண்ட சக்தி என்றும், பு என்பது புடம் வைக்கப் பட்ட அதாவது பக்குவமாய் பதுங்கிய, புவி சக்தி என்றும், 'ன்' என்பது முடிவான இணைப்பு என்றும் குறிக்கும்...
அன்பு கொள் என தத்துவம் பேசுவதில் ஒரு பயனும் இல்லை.. அன்பு என்ற சக்தி இல்லாமல் அன்பு கொள்ள முடியாது..
எத்தனை சாஸ்திரங்களும் போதனைகளும் நெறிகளும் போதித்தாலும் அதனை செயல் படுத்த குண்டலினி எழுச்சியும், அந்த எழுச்சியால் கிரகிக்கப் படும் பிரபஞ்ச ஆற்றலும் சேர்ந்த அன்பு என்ற அற்புத சக்தி இல்லையேல் ஒன்றும் பயன் பெறாது...
சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் மனமற்ற நிலையான தோன்றா நிலையில் எண்ண ஆதிக்கங்களால் ஏற்படும் அழுத்தம் அகற்றப் படும் போது, குண்டலினி எழதொடங்குகிறது.. எழுந்த குண்டலினி ஒன்றே பிரபஞ்ச சக்தியை வாங்க தகுதி உடையது..
அண்ட சக்தியும் குண்டலினி சக்தியும் ஆண் சக்தி பெண் சக்தி போலவும், positive negative energy போலவும் செயல் படுகின்றன.. இதனால் அன்பு என்ற செயல் பாடு உருவாகிறது..
சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் வினாடிக்கு வினாடி உருவாகும் தோன்றா நிலையின் காரணமாக, குண்டலினி சக்தியின் எழுச்சியால், பெறப்படும் அண்ட ஆற்றலே நிகழ் நிலை சக்தி எனப்படுகிறது..
இந்த நிகழ்நிலை சக்திதான் சிவநிலை சக்தி எனப் படும்.. அதில் மட்டுமே அன்பு என்ற செயல் பாட்டிற்கான ஆற்றல் தோன்றும்..
அதனால் அன்பே சிவம் என்ற மிக பெரிய உன்னத பிரம்ம இரகசியம் தோன்றியது.. பிரம்மம் என்றால் படைத்தல்.. படைக்கப் பட்ட அனைத்தும், அதன் செயல்பாடுகளும் அன்பால் விளைவதும் நடை பெறுவதுமாகும்..
இப்படி குண்டலினி மேல் எண்ண ஆதிக்கத்தால் ஏற்படும் அழுத்தத்தை நீக்க கூடிய தோன்றா நிலையை தராத எந்த சுவாச பயிற்சியும் வீணே...
ஆனால் தோன்ற நிலையை பற்றி பேசும் யோகிகளே இல்லை போல் தெரிகிறது..
அதனால் தான் குண்டலினி மேல் அழுத்தம் நீங்காத பயிற்சியை செய்து பலன் இல்லாமல் போய் விடுகிறார்கள்...
இந்த சுவாச ஒழுங்கிலே சூரிய கலையில் முற்றிலும் தோன்ற நிலை உருவாகும் பயிற்சியை நாம் நேரடி பயிற்சியில் கண்டோம்..
அதில் அளவற்ற பிரபஞ்ச ஆற்றல் கிடைக்கப் பெற்ற நிலையில் நாம் சந்திர கலையை இழக்காமல் மதி நிலையிலே நின்றால் மட்டுமே பெற்ற ஆற்றலை பயன் படுத்த முடியும்..
ஆகவே தான் சூரிய கலை எப்படி முக்கியமோ, அவ்வாறே அதனை பயன் படுத்தும் சந்திர கலையும் மிக மிக முக்கியம்..
தன்னை இழந்த மோன நிலையில் சந்திரகலை காணாமல் போய்விட்டால் தோன்றா நிலையில் பெற்ற ஆற்றலால் ஒரு பயனும் இல்லை.. சந்திர கலையும் சூரிய கலையும் இணைந்து செயல் பட்டு இருந்தால் மட்டுமே அன்பு என்ற மகா சக்தி உருவாகும் என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது...
மத வெறித்தனமும், மதத்தில் மிக இறுக்கமான பிடிப்பும், குண்டலினி சக்தியை எழ விடாமல் பண்ணுவதால், அன்பு குறைந்து படைப்பும் குறைந்து அழிவுக்கும், அராஜகத்திற்கும் வழி வகுக்கிறது..
அப்படி பட்டவர்கள் அன்பு செலுத்துவது போல் இருப்பது, நடிப்பின் நிமித்தமாக இருக்கலாம் அல்லது ஒரு காரியத்தை நிறைவேற்ற வியாபார நோக்கத்தோடு இருக்கலாம்.. உள் அன்போடு நிச்சயமாக இருக்காது..
தோன்றா நிலையில் உருவாகும் குண்டலினி எழுச்சியின் விளைவாய் உண்டான அன்பே உலகில் அமைதியை உருவாக்கும்.. அப்படியான மத அமைப்பே நமக்கு தேவை...
இதன் மூலம் கவர்ச்சியற்ற சுவாச ஒழுங்கின் மேன்மை நமக்கு புரியும் என நம்புகிறேன்...
பசு , எருமை மாடுகளுக்கு, 12 இலக்க எண் கொண்ட அடையாள பட்டை அணிவிக்கப்படும், 148 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு...
பசுமாடு கடத்தல், தடுப்பு ஊசி போடுதல், ஆதார் எண் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு இது பயன்படுத்தப்படும் எனத் தகவல்.
இந்த பட்டைகள் 8 கிராம் எடை கொண்டதாகவும் மஞ்சல் நிறமுடையதாகவும் எளிதில் அகற்ற முடியாத வண்ணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பசுக்களின் காதுகளில் இந்த பட்டை பொறுத்தப்படவுள்ளது.
நாட்டில் 4 கோடி 70 லட்சம் பசுமாடுகளும், 4 கோடி எருமை மாடுகளும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது...
மருதாணி பூசுவது ஏன்...
கை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளைக் கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன. உடல் சூட்டை குறைத்து விடுகின்றன. மேலும் மனக்குழப்பத்தைத் தவிர்கின்றன..
மேலும் விவரங்கள்...
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.
மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில் வைக்கிறார்கள் என்று கருதினால் அது தவறாகும். மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.
இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான்.
ஒரு 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.
மருதாணியின் பயன்கள்...
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.
மருதாணி இட்டுக் கொண்டால் சளி போய் விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை தெரிந்துக் கொள்க.
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.
மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர கருந்தேமல் மறையும்.
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.
பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.
மேகநோய் - பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.
தோல் நோய் - மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள் - ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.
முடிவளர - இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
தூக்கமின்மை - தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.
பேய் பூதம் - மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும்.
கரப்பான் புரகண் - பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.
கால் ஆணி - உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சேர்த்து வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.
படைகள் - கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
இளநரையை போக்கும் மருதாணி...
இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்...
Subscribe to:
Posts (Atom)