31/05/2021
கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?
கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது.
கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.
குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.
குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.
பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும். இந்த வெட்டுதல் - வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்...
எந்த விதத்திலும் நீட் தேர்வு கூடாது - தமிழக அரசு...
தமிழக அரசு நீட் தேர்வு நடத்தும் என்பது தவறான தகவல்.. 12 வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என மத்திய அரசிடம் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது- தமிழக அரசு விளக்கம்...
எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்...
எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.
இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பட்டை - 2 அங்குலம்
இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)
கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 2 துண்டுகள்
புதினா - 5-6 இலைகள்
தேன் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...
பல பெயர்கள் எனக்குண்டு...
இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி...
அதிகாரத்தை எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்...
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்...
தமிழ்த்தேசியம் பேசுவதால் சமூக விரோதி..
இந்தியத்தை எதிர்ப்பதால் நக்சுலைட்..
ஈழத்தை நேசிப்பதால் புலி...
மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்...
சுவசுதிக் கிணறு....
எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட சுவசுதிக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது..
இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கிணற்றை மற்பிடுகு பெருன்கிணறு என்றும் கூறுகின்றனர்...
ஹிப்னாடிசம் எனும் மனோவசியம் கலை...
நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடு தான் பிறப்பெடுத்துள்ளோம்.
எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.
கடவுளின் மறுவடிவம் தான் நாம். அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.
நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.
ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்.
உதாரணமாக திக்குவாய், தேவையற்ற பயம் பதட்டம், பல்பம் கல் மண் சாப்பிடுதல், மருத்துவத்தால் கண்டறிய முடியாத வலிகள், கெட்ட கனவுகள், முன்சென்ம தொடர்புகள், கல்வியில் மந்தம், கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப விரிசல், கணவன் மனைவி மனக்கசப்புகள் போன்ற பல விடயங்களை இதன் மூலம் சரி செய்யலாம்...
தமிழா விழுத்துக்கொள்...
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்...
(Note the point பிறந்த, not உணர்ந்த)
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த இனத்தை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
தமிழ்தேசிய மைய கருத்தியலை இந்த அளவிற்கு தெளிவாகவும் சுருக்கமாகவும் யார் ஒருவராலும் சொல்ல இயலாது.
அதனால்தான் வள்ளுவன் ❤️
வள்ளுவக்குடி தந்த பெரும் அடையாளம்...
தமிழனை அழிக்க தோன்றியதே திராவிடம்...
இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்..
இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று திராவிடரிடம் செல்வது வடிகட்டிய முட்டாள்தனம்...
ஏனெனில் தமிழனை வீழ்த்தி, அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் தெலுங்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்...
பாஜக மோடி கூட்டத்தை மம்தா பேனர்ஜி புறக்கணித்தது தவறு என்போரே...
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்தவர் தான் மோடி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...