25/06/2017
பிஜித் தீவு தமிழர்கள்...
பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள்...
பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள்.
1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது.
பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை.
தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள்.
தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை.
அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.
பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள்.
பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது. ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை.
பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன. இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது. தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது.
பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.
தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது. இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது.
பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்...
திமுக வும் டூபாக்கூர் வேலையும்.. மலரும் நினைவுகள்...
Rocheston group of companies அப்படி கூகிளில்வலை போட்டு தேடி பாத்துட்டேன். அப்படி ஒரு கம்பெனியே இல்லன்னு காரி துப்பியது கூகிள்.
வங்கக்கடல்ல நண்டு வறுத்து தின்னுட்டு இருந்தவனை கூட்டிட்டு வந்து அமெரிக்கான்னு சொல்லி தலைவர் தலையில வழக்கம் போல மொளகா அறச்சிட்டு போயிருக்கானுக..
அவனுங்க கொடுத்த சர்ட்டிபிகேட் பாருங்க. மூனாந்தர லெட்டர் பேட்ல எழுதி, சீல் ரெடி பண்ணி சுட சுட ஏதோ ஒரு நெட் சென்டர்ல பிரிண்ட் பண்ணிருக்கானுக..
ஏற்கனவே ஸ்டாம்ப் மேட்டர்ல மண்ணைகவ்வுன தலிவருக்கு இதல்லாம் சகஜம் தான்...
பல்லியைக் கொல்லக் கூடாது ஏன்?.. வியப்பூட்டும் காரணங்கள்…
எந்த ஓர் உயிரினம் இவ்வுலகில் வாழ வேண்டும் என்றாலும், அதற்கு மற்றொரு ஜீவராசியின் துணை கட்டாயமாக்கப் பட்டுள்ளது..
இதில் பல்லிகளும் ஒன்றாகும், இதுக் கொல்லப்படக் கூடாத விலங்காக நம் இந்திய கலாச்சாரத்தில் வரையறுக்கப் பட்டுள்ளது.
கடவுள் மனிதர்களோடு உரையாட பல வழிகளை கொண்டுள்ளார் என்று நமது புராணங்களில் கூறப்பட்டுள்ளது.. அதில் பல்லியும் ஒன்றென கூறப்படுகிறது.
நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தை பல்லியின் உருவில் தான் வருகை தருகிறார்கள் எனவும், பூஜை அறைகளில் இருந்து முக்கியமான தருணங்களில் நமக்கு நல்லது, கெட்டது வரும் போது எச்சரிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது..
கடவுளின் செய்தியாளன்:
நமது இதிகாசங்களில் பல்லி கடவுளின் தூதர் அல்லது செய்தியாளன் என்று கூறப்பட்டுள்ளது..
இது கடவுளிடம் இருந்து நல்லது மற்றும் கெட்டது நடக்கவிருக்கும் செயல்கள் குறித்த செய்திகளை மனிதர்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கருதப்படுகிறது.
கடவுள் மற்றும் மனிதர்களிடையே இது தகவல் தொடர்பு ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை முன்னாளில் இருந்துள்ளது.
வரதராஜன் சுவாமி கோவில்:
காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகரகத்தில் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
இதை தொட்டு வணங்குவது சிறப்பிற்கு உரியதாக கருதப்படுகிறது.
இந்த பல்லிகள் இரண்டும் காந்தர்வர்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் இறைவனிடம் வரம் பெற்று இக்கோயிலை கட்ட உதவினார்கள் என்ற கூற்றுகளும் நிலவி வருகின்றன.
அடையாளச் செய்தி:
நமது சாஸ்திரங்களில் ஒன்றாக கூறப்படுவது தான் பல்லி அல்லது கௌளி சாஸ்திரம்..
நமது உடல் பாகங்களில் பல்லி விழும் இடத்தை வைத்து நமது நேரத்தை பற்றியும், நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது பற்றியும் தெரிந்துக் கொள்ள முடியும்..
இது ஒருவகையான அடையாளச் செய்தியாக அறியப்படுகிறது.
இதனாலும் கூட பல்லியை கொல்லக் கூடாது என்று கூறுவது உண்டு..
கோவில்களில் வணங்கப்படும் பல்லிகள்:
ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலில் பல்லி வணங்கப்படுகிறது. கடவுளை தரிசித்த பிறகு சுவற்றில் இருக்கும் பல்லி உருவத்தை வணங்குவதால் மங்களகரமான செயல் (அ) நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது...
பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...
சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..
இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.
அது எங்கே?
இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?
17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இதைத் தவறவிட்டது யார்?
பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சி ஒரு ஊடகம் கூடவா இல்லை?
தலித் அரசியல்வாதி என்று காட்டிக் கொள்பவர்கள் கூட இதனை பயன்படுத்திக்கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?
ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது...
ஆதாரம் இதோ......
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது.
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள் - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
ஆதாரம் கேட்கும் நண்பர்களுக்காக இந்த ஆதாரத்தைக் காட்டியுள்ளேன்...
எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்...
எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.
இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்...
பட்டை - 2 அங்குலம்
இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)
கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 2 துண்டுகள்
புதினா - 5-6 இலைகள்
தேன் - தேவையான அளவு
செய்முறை...
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...
தமிழகத்தில் BC பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் தமிழரல்லாதவர்கள் ( ஓட்டுண்ணி)...
தெலுங்கு சாதி...
1. 24 மழை தெலுங்குச் செட்டி
2. ஆஸ்தாந்திர கொல்லா
3. ஆயிர வைசியர்
4. ஈடிகா
5. உக்கிரக்குலச் சத்திரிய நாயக்கர்
6. உப்பரர்
7. உரிக்கார நாயக்கர்
8. எருகுலா
9. ஒட்டர்
10. கருகவாரு
11. கண்ட்லா
12. கமல்லா
13. கம்சலா
14. கல்லொட்டர்
15. கவரா / கவரை
16. கவரை வடுகர்
17. காதிக்காரர்
18. காலிங்கி
19. கொப்பள வேளமார்
20. கொல்லா
21. சக்கரவார் (காவதி)
22. சவளக்காரர்
23. சாக்களர்
24. சாதுச்செட்டி
25. சாலிவாகனர்
26. சூரமாரி ஒட்டர்
27. செட்டு / செட்டி
28. சேடர்
29. சௌதிரி
30. டொம்மர்
31. தெலிகுலா
32. தெலுங்குச் செட்டி
33. தெலுங்குப் பட்டிச் செட்டி
34. தேவாங்கர்
35. தொகட்ட வீரச் சத்திரியர்
36. தொங்கதாசரி
37. தொழுவ நாயக்கர்
38. நாயக்கர்
39. நெல்லூர்ப் பேட்டை ஒட்டர்
40. பத்மசாலியர்
41. பாத்திரச் செட்டி
42. பாமுலு
43. பூசல ( வாடு)
44. பெரிக்கே
45. பெத்தபோயர்
46. பெரிக்கே பலிஜா
47. போயர்
48. முத்திரியர்
49. முத்துராசா
50. முத்துராஜா
51. வடுக ஆயர்
52. வடுக இடையர்
53. வளையல் செட்டி
54. வால்மீகி
55. விசுவகர்மா
56. விசுவகர்மளா
57. விசுவ பிராமணர்
58. வெற்றிலைக்கார நாயக்கர்
59.யாதவர்
60. ஜெட்டி
62. ஜோகி
63. சாயர்
கன்னட சாதிகள்...
1. அனுப்ப கௌடர்
2. உப்பாரர்
3. அனுப்ப வேளாளக் கவுண்டர்
4. ஒக்கலியர்
5. ஒக்கலிய கவுடர்
6. கணிகா
7. கப்பேரா
8. கல்லாளி
9. கன்னட சைனிகர்
10. கன்னடிய நாயுடு
11. கன்னடியர்
12. காப்பிலிய ஒக்கலிக கவுடர்
13. காப்பிலியர்
14. குஞ்சிடிகர்
15. குறும்பக் கவுண்டர்
16. கௌடா
17. சாகரா
18. தாசப் பலிஞ்சிகா
19. தூடேகுலா
20. தொரயர்
21. தொரையர்
22. படுகர்
23. லிங்காயத்து
24. ஜங்கமா
25. ஹெக்கடே
மலையாள சாதிகள்...
1. அரையர்
2. இலத்தீன் கத்தோலிக்கர்
3. அரையவதி
4. ஈழவதி
5. ஈழவர்
6. எழுத்தச்சர்
7. கணி
8. கணிசு
9. களரி குருப்பு
10. களரி பணிக்கர்
11. காவுதியர்
12. கிருஷ்ண வகைக்காரர்
13. செக்காளர்
14. தோல் கொல்லர்
15. நுளையர்
16. பணிக்கர்
17. புள்ளுவர்
18. பெருங் கொல்லர்
19. மலையர்
20. மாப்பிள்ளா
21. வெளுத்தெடுத்து நாயர்
வடஇந்திய சாதிகள்...
1. அன்சார்
2. ஒடியர்
3. கத்ரி
4. கார்வி
5. குடும்பி
6. செயது
7. டொம்பர்
8. தெக்கணி
9. முசுலிம்
10. நாமதேவ் மராத்தியர்
11. பட்டவாயர்
12. பட்டாணியர்
13. பட்டுநூல் காரர்
14. பிராமணரல்லாத மராத்தியர்
15. பொந்திலி
16. ரெட்டி
17. யவனர்
18. லம்பாடி
19. ஷேக்
இப்படி 128 சாதிகள் தமிழரல்லாதவர்கள்
பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகையை சாப்பிட்டு கொழுத்து திரிகிறார்கள்...
இதற்கு எப்போது தான் விடிவு காலம் வருமோ...
கலியுகம் பற்றி ஆசான் கோரக்கர்...
யோகி பரமானந்த
கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமத
பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள்
பெண்பால் விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள்
குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும்
முறைமை கெட்ட
மூதரிய தாயினையே
சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது
பயில்வார் பங்கில்
பூவலகிற் கலியுனுட
பான்மை கேளே
– ஆசான் கோரக்கர்
உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.
கேளே நன்மனுக்கள்
நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல்
அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும்
வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும்
உயரங்கட்டை
வாளே முன் பின்
வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு
மிடத்தைத் தென்பா
சூளே மெய்ச் சும்பலப் பட்டன்
வைணவ தத்தன்
கொல்லை புண்னை மரத்தின்கீழ்க்
கலி செனிப்பே
– ஆசான் கோரக்கர்
இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள். மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.
கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.
கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார்.
கலியான ஆண்டு
ஐயா யிரம்பின்
கருத்துடனே
சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐ
யாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட
மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந்
திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின்
கொட்டம் போகும்
வலியுடனே சத்தியத்தான்
நிலையே யோங்கி
வழுவாது மனுக்கள்
ஞானி யாமே.
— ஆசான் கோரக்கர்
கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.
தான தரும தத்துவ
யோகம் அதிகம் ஆகும்
தாரணியில் மாந்தர்
பல வருண மாவர்
ஈனமின்றி யோக ச
க்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென்
பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு
வசிப்பார் நாடு
முகமினிய நவரத் தின
விளைவுண் டாகும்
போனகமாய்க் குளிகையிட்டுப்
பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று
வாழ்கு வாரே.
— ஆசான் கோரக்கர்
இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும். இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர். ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும். நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள். உண்டாகும்.குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.
அந்தநாள் அக்காலம்
நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள்
அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல்
சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந்
தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம்
ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம்
வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு
மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால்
மாள்வார் கதிரே.
— ஆசான் கோரக்கர்
கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.
கதிரவணுங் கடும்பனியுங்
காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு
ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட
மண்டை போல
மகாரூப ரூப வெளி
மதி மேற் காணும்
துதியாக நாழி இரு
இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான்
மூன்று மட்டும்
சதியாக வடதேசம்
தன்னி லோர்பால்
கடல்போங்கி நெருப்பு ரத்த
மழையுடண் டங்கே.
— ஆசான் கோரக்கர்
கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.
எங்கெங்கும் சாதுக்கள்
ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய்
எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை
பாத கன்றான்
பக்தர்களை சிறை
கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே
பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல்
மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர்
சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென்
றறைந்து போனார்.
-ஆசான் கோரக்கர்
எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.
சந்திரரேகை 200 என்ற நூலில் ஆசான் போகரின் சீடரான ஆசான் கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்...
கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்?
‘கமல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் விளம்பரத்தைப் பார்த்த பிறகு அப்படிச் சிரிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு அதில் இல்லுமினாட்டி கூறுகள் மநிறைந்து கிடக்கின்றன.
‘இல்லுமினாட்டி’ பற்றி உங்களில் பலரும் ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். “உண்மையில் இந்த உலகை ஆள்வது அந்தந்த நாட்டு அரசுகள் அல்ல. 13 அரசக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் பின்னணியில் இருந்து மொத்த உலகையும் ஆட்டுவிக்கிறார்கள். அந்த 13 குடும்பங்களின் கமுக்கக் (இரகசிய) குழுவுக்குப் பெயர்தான் இல்லுமினாட்டி (Illuminati). அரசியல், அறிவியல், கலை, இறையியல் (ஆன்மிகம்) எனப் பல துறைகளிலும் உள்ள பெரும்புள்ளிகள் இந்த இயக்கத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பிரீமேசன் (freemason) எனப்படும் இந்த உறுப்பினர்கள் மூலம்தான் உலகெங்கும் கிளை பரப்பி இல்லுமினாட்டிகள் ஆண்டு வருகிறார்கள். உலகின் முதன்மையான அரசியல் முடிவுகள் அனைத்தும் இவர்கள் சொல்படிதான் நடக்கின்றன” எனவெல்லாம் என்னென்னவோ சொல்கிறார்கள்.
இங்குள்ள சிலர், ரூபாய்த்தாள்கள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது முதல் தங்கள் வீட்டுக்குப் பால் வராதது வரை எதற்கெடுத்தாலும் இல்லுமினாட்டி மீதே பழி சொல்லித் திரிவதால் இது ஏதோ வேலையற்றவர்களின் கட்டுக்கதை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இல்லுமினாட்டிகள் பற்றி வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்ற பலர் இல்லுமினாட்டிகள் இருப்பதாக நம்புகிறார்கள். இணையத்தின் அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இல்லுமினாட்டி பற்றிக் கட்டுரைகள் உள்ளன.
இவற்றையெல்லாம் நம்புவதும் புறக்கணிப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், இல்லுமினாட்டிகள் மீதான குற்றச்சாட்டுகள் அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையாளர்கள் உணராத வகையில் சில குறியீடுகளை மறைமுகமாகக் காட்டி பொதுமக்களின் ஆழ்மனதில் சில தவறான எண்ணங்களைப் பதிய வைப்பதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்கு அடுக்கடுக்கான விழிய (video), ஒளிப்படச் சான்றுகள் உள்ளன. இது மாயக்கலையில் (Magic) பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைதான் என்பதால் நம்பத்தகாததும் இல்லை! இப்படி ஒரு குற்றச்சாட்டில் ஏற்கெனவே சிக்கிய டிஸ்னி நிறுவனம் அதற்காக விளக்கம் தர வேண்டிய அளவுக்குப் போனது சிக்கல்.
எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், இல்லுமினாட்டி தொடர்பான குற்றச்சாட்டுகளை வெறும் புரளி என அவ்வளவு எளிதில் நாம் ஒதுக்கி விட முடியாது என்கிற கருத்தை முன்வைக்கத்தான். இப்பொழுது பிக் பாஸ் (Bigg Boss) தொடர்பான விதயத்துக்குச் செல்வோம்.
கமல் காட்டும் முத்திரை..
சர்ச்சில் முதலான அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் (பெரும்பாலானோர்), மைக்கேல் ஜாக்சன் போன்ற மேலை நாட்டுக் கலைஞர்கள் என வெளிநாட்டினர் மீது மட்டுமே இருந்து வந்த இல்லுமினாட்டி குற்றச்சாட்டு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் மீதும் சுமத்தப்பட்டு வருகிறது. ரஜினி, தனுஷ், அநிருத், ஏமி ஜாக்சன் என அந்தப் பட்டியல் நீள்கிறது. எந்த அடிப்படையில் இவர்களை இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள் எனப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு ஒளிப்படத்தில் (photo) ஏதேனும் ஒரு இல்லுமினாட்டி முத்திரையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதால்தான். அதே போன்ற ஒரு முத்திரையை பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.
விளம்பரத்தில் கமல் அவர்கள் ஆள்காட்டி விரலைக் கட்டை விரலோடு சேர்த்து வட்ட வடிவமாகப் பிடித்துத் தன் கண் மீது வைத்துக் காட்டுவார் (பார்க்க: மேலே உள்ள படம்). இல்லுமினாட்டிகளின் முத்திரைகளிலேயே உச்சக்கட்டப் புகழ் வாய்ந்தது இதுதான்! இது தவிர இன்னும் சில இல்லுமினாட்டி முத்திரைகளையும் காட்டியுள்ளார். இப்படி முத்திரை காட்டியதால்தான் மேற்சொன்ன கலைஞர்கள், அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் முதலான அனைவர் மீதும் இல்லுமினாட்டி என்கிற முத்திரை விழுந்தது. அதையேதான் இந்த விளம்பரத்தில் கமலும் செய்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சின்னம்..
பிக் பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்தில் ஒரு கண்ணின் படம் காட்டப்படும். இது இல்லுமினாட்டிகளின் சின்னம் என்பது உலகறிந்த கதை. “அமெரிக்காதான் இல்லுமினாட்டிகளின் தலைநகரம். அமெரிக்காவுக்கு நாணயத்தை அச்சிட்டுக் கொடுப்பதே அவர்கள்தாம். அதனால்தான் இல்லுமினாட்டிகளின் சின்னமான ஒற்றைக் கண் படம் அமெரிக்க டாலரின் பின்னால் இடம் பெற்றுள்ளது” என்கிறார்கள் இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்பதை நம்புபவர்கள். உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க, ஏன் இந்த ஒற்றைக் கண் படத்தை இந்த நிகழ்ச்சியின் சின்னமாகத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது அடுத்த கேள்வி.
உடனே சிலர், “நிகழ்ச்சியின் முழக்கமே ‘நான் உங்களைக் கண்காணிக்கிறேன்’ (I will be watching you) என்பதுதானே? அதற்குக் கண் படத்தை வைக்காமல் வேறு எதை வைப்பார்கள்?” என்று கேட்கலாம். அடுத்த செய்தியே அதுதான். அதாவது, இந்த நிகழ்ச்சியின் விளம்பரச் சொலவம் (caption).
பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளம்பர வாசகம்..
“14 பிரபலங்கள்! 30 காமிராக்கள்! 100 நாட்கள்! ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது” என்று நிகழ்ச்சி பற்றி விளக்கும் கமல், கடைசியாக “ஐ வில் பீ வாட்ச்சிங் யூ” என்கிறார்.
அமெரிக்க டாலரின் பின்னால் இருக்கும் அந்த ஒற்றைக் கண் படத்துக்குக் “கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்பது பொதுவாகச் சொல்லப்படும் பொருள். ஆனால், “அது கடவுளின் கண் இல்லை. சாத்தானின் கண். சாத்தானை வழிபடுபவர்களான இல்லுமினாட்டிகள் நம் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள்” என்பது இல்லுமினாட்டி கோட்பாட்டை நம்புபவர்களின் கூற்று.
விளம்பரத்தில் இதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறார் கமல். கமலகாசன் இல்லுமினாட்டி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்கிற கோணத்தில் பார்த்தால், அவர் சொல்வதன் பொருள் என்ன?... “இல்லுமினாட்டிகளாகிய நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்பதுதானே? ஆக, இந்த நிகழ்ச்சியின் விளம்பரச் சொலவம் கூட அப்படிக்கு அப்படியே இல்லுமினாட்டிகளுடைய சின்னத்தின் எழுத்து வடிவம்தான்!
நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் கூடவா?
வரும் 25.06.2017 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நாளின் எண்களைத் தனித் தனியே பிரித்துக் கூட்டிப் பார்த்தால் [2+5+0+6+2+0+1+7] கூட்டுத்தொகை 23 என வருகிறது. இல்லுமினாட்டிகளால் பயன்படுத்தப்படும் சாத்தானின் எண்கள் எனக் குறிப்பிடப்படுபவையான 666, 13, 6 ஆகியவற்றின் வரிசையில் இன்னொரு முதன்மையான எண் 23.
எனக்குத் தெரிந்த வரை சொன்னேன். இன்னும் இதுபோல் எத்தனை இல்லுமினாட்டி கூறுகள் இந்நிகழ்ச்சியின் விளம்பரத்திலும் இது தொடர்பான இன்ன பிறவற்றிலும் மறைந்திருக்கின்றனவோ தெரியவில்லை.
கமல்ஹாசன் நடத்தும் இந்த பிக் பாஸ் நிகழ்சியில் மட்டுமில்லை, இதற்கு முன்பு நடத்தப்பட்ட இந்தி பிக் பாஸ், கன்னட பிக் பாஸ் ஆகியவற்றிலும் மேற்படி குறியீடுகள் அனைத்தும் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளிலும் ஒற்றைக் கண் படம்தான் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களும் கண் மீது விரல் வைத்து முத்திரை பிடிக்கிறார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நிகழ்ச்சிகளும் தமிழ் பிக் பாஸ் போலவே இல்லுமினாட்டிகளோடு தொடர்புடைய எண்கள் வரும் நாளில்தான் தொடங்கப்பட்டிருக்கின்றன. (இந்தி பிக் பாஸ் தொடங்கிய நாள் 3.11.2006. கூட்டுத்தொகை 13. அதாவது 13 அரசக் குடும்பங்களை நினைவூட்டும் எண். அல்லது, சாத்தானின் எண். கன்னட பிக் பாஸ் தொடங்கப்பட்ட நாள் 24.3.2013. கூட்டுத்தொகை 15; 1+5 = 6. சாத்தான் எண்).
ஆக, இந்த நிகழ்ச்சி முதன் முதலில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பொழுது என்ன மாதிரியான குறியீடுகள் பயன்படுத்தப்பட்டனவோ அவையே அந்த நிகழ்ச்சியின் பிறமொழி ஒளிபரப்புகளிலும் தொடர்கின்றன என்பதாக மிக எளிதான ஒரு விளக்கத்தை இதற்கு நாம் கற்பித்துக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு மொழியிலும் நிகழ்ச்சி தொடங்கும் நாள் கூடக் குறிப்பிட்ட எண்களில் மட்டுமே அமையுமாறு பார்த்துக் கொள்வது அவ்வளவு தற்செயலானதா என்ன?
ஆனால் அதே நேரம், இவற்றையெல்லாம் நான் எழுதுவதற்குக் காரணம் கமல் அவர்கள் மீதோ, விஜய் தொலைக்காட்சி மீதோ குற்றம் சாட்டுவதற்காக இல்லை. இப்பொழுது பிரச்சினை கமலஹாசன் பிரீமேசனா இல்லையா, இந்த நிகழ்ச்சி இல்லுமினாட்டிகளால் நடத்தப்படுவதா இல்லையா என்பவை அல்ல. இருக்கிறதா இல்லையா எனத் தெரியாத, ஆனால் உலகெங்கும் மிகுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிற ஓர் இயக்கத்தோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் குறியீடுகளை இந்த அளவுக்கு வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சியில் காட்டுவது சரியா என்பதுதான்.
இப்படி ஓர் இயக்கம் இல்லை என்பதாக வைத்துக் கொண்டால், இல்லாத ஓர் இயக்கத்தை நினைவூட்டும் விதமான இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதும் நிகழ்ச்சி ஒளிபரப்பு நாள் கூடக் குறிப்பிட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாக இருக்கும்படி அமைத்துக் கொள்வதும் அந்த உலகளாவிய பெரும்புரளிக்கு வலுச் சேர்ப்பதாக அமைகிறது. அந்த வகையில் இது மிகவும் தவறு.
ஒருவேளை, இல்லுமினாட்டி இருப்பது உண்மைதான் என்றால், நடந்து முடிந்த பல்வேறு பேரழிவுகளுக்கும் நடந்து கொண்டிருக்கும் அரசியல் சீர்கேடுகளுக்கும் காரணமானவர்களாகக் குற்றம் சாட்டப்படும் அவ்வளவு கொடுமையான ஓர் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரப்பும் விதமாக அவர்கள் குறியீடுகளை இந்நிகழ்ச்சியில் காட்டியிருப்பது பொறுத்துக் கொள்ள முடியாத குற்றம். அந்த வகையிலும் இது மிகத் தவறானது!
ஆக, இல்லுமினாட்டி என்கிற இயக்கம் இருக்கிறதோ இல்லையோ, அதை நினைவூட்டும் விதமான குறியீடுகளை இந்நிகழ்ச்சியில் பயன்படுத்தியிருப்பது கண்டிப்பாகத் தவறானது. கமல்ஹாசன் போன்ற பொறுப்புள்ள கலைஞர் ஒருவர் இப்படிப்பட்ட முயற்சிகளுக்குத் துணை போவது நல்லதில்லை. இது வருங்காலத் தலைமுறையினருக்கு – குறிப்பாக, கலைஞர்களுக்கு - தவறான வழிகாட்டலாக அமையும்.
எனவே, விஜய் தொலைக்காட்சி உடனடியாக இந்நிகழ்ச்சியிலுள்ள இல்லுமினாட்டியை நினைவூட்டும் கூறுகளை நீக்க வேண்டும். கமல்ஹாசன் அவர்கள் இதை வலியுறுத்த வேண்டும்...
இந்திய நாட்டில் இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்திற்காக அடித்தே கொல்லப்பட்ட 16 வயது இளைஞனின் இறுதி ஊர்வலம்...
ரம்ஜான் பெருநாளிற்காக உடைகள் வாங்கச் சென்று ரயிலில் திரும்பிய 4 இளைஞர்கள் மீது மாட்டுகறி உண்பவர்கள் எனக்கூறி சமூக விரோதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு இளைஞர் உயிர் இழந்தார்.
அவன் நோன்பிருந்த நிலையில் மாட்டுக்கறி உண்டான் எனக்கூறி தாக்குதல் நடத்திய கயவர்களுக்கு முன்பின் தெரியாத ஒருவர் மீது கொலை செய்யும் அளவுக்கு வெறி எங்கிருந்து வந்தது...?
இந்த மதவெறியை தீணிபோட்டு இந்த நாட்டில் வளர்ப்பவர்கள் யார்..?
இந்திய இளைஞர்களை மூலை சலவை செய்து வகுப்பு வெறியை ஊட்டி மதவெறியனாக எந்த படுபாதக செயலையும் செய்யகூடிய தீவிரவாதிகளாக உருவாக்குபவர்கள் யார்..?
இந்த கேள்விக்கு விடை இந்திய மக்கள் அணைவருக்கும் தெரியும் ஆனால் அதனை எதிர்த்து கேள்வி எழுப்பமாட்டார்கள்..
குற்றம் செய்பவனைவிட குற்றம் செய்ய தூண்டுபவனைவிட மிகப்பெரிய குற்றவாளி ஒரு குற்றம் நடைபெறும் போது அதனை தடுக்காமல் அதனை வேடிக்கை பார்க்கும் அரக்ககுணம் படைத்த ஈனப்பிறவிகள் தான்...
இந்த வழக்கை திசைதிருப்ப மதத்தையும் ஜாதியையும் புனைந்து மீடியா வழங்கியது ஏன்?
சிபிஐ லேப்டாப்பில் சுவாதியின் ராணுவ தகவல் பரிமாற்றத்தை பற்றி விசாரிக்க வேண்டும் எனக் கூறிய வழக்கு..
http://www.newindianexpress.com/cities/chennai/2016/aug/19/Swathi-murder-case-Mother-of-accused-seeks-CBI-probe-1510958--1.html
இன்போஸிஸ் US ராணுவத்திற்கு பணியாற்றுகிறது..
http://www.infosysinternational.com/government.aspx
எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்...
சென்னை எண்ணூரில் உள்ள காமராசர் துறைமுகத்தை முற்றிலுமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து லாபத்தில் இயங்கும் கார்ப்பரேட் துறைமுகமான காமராசர் துறைமுகத்தை மேன்படுத்துவதை விடுத்து தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான அரசு செயலாளர்கள் குழு காமராசர் துறைமுகம், ஹெச்.எல்.எல் லைப் கேர், இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவத் தயாரிப்புகள் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் மருத்துவப் பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றின் 100% பங்குகளை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. இதற்கு நிதி ஆயோக் அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு அனுமதி கிடைத்த பிறகு இவற்றை விற்பனை செய்யும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை எண்ணூர் காமராசர் துறைமுகம் லாபத்தில் இயங்கிவரும் துறைமுகம் ஆகும். சென்னை துறைமுகம் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட காமராசர் துறைமுகம் கடந்த 2008&ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக லாபத்தில் இயங்கி வருகிறது. ஈவுத்தொகை, சேவை வரி, வருமானவரி, பணி ஒப்பந்த வரி ஆகியவற்றின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1000 கோடிக்கும் மேல் செலுத்தியுள்ளது. காமராசர் துறைமுகத்தில் மத்திய அரசு ரூ.200 கோடியும், சென்னைத் துறைமுகம் ரூ.100 கோடியும் மட்டும் முதலீடு செலுத்திய நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.328 கோடியும், சென்னைத் துறைமுகத்திற்கு ரூ.164 கோடியும் ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இது மத்திய அரசும், சென்னைத் துறைமுகமும் செய்த முதலீட்டை விட அதிகமாகும்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில் மட்டும் காமராசர் துறைமுகம் ரூ.2016.78 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. துறைமுகத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்தத் துறைமுகத்தை தனியாருக்கு விற்க வேண்டிய தேவை என்ன? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே. வாசன் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது எண்ணூர் காமராசர் துறைமுகத்தின் குறிப்பிட்ட விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து துறைமுகத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது. அதன்பின் 6 ஆண்டுகளில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருப்பது ஏன்? எனத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்தின் மூலம் தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தத் துறைமுகம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டால், நிலக்கரி இறக்குமதிக்காக தனியார் நிறுவனங்களை தமிழகம் சார்ந்திருக்க நேரிடும். அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்காது. அத்துடன் கிழக்குக் கடற்கரையில் காரைக்கால், காட்டுப்பள்ளி, கிருஷ்ணாபுரம் ஆகிய துறைமுகங்கள் தனியார் வசம் உள்ளன. எண்ணூர் காமராசர் துறைமுகமும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டால் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் மட்டுமே அரசு துறைமுகங்களாக இருக்கும். இது கிழக்குக் கடற்கரையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாதுகாப்புக்கும் இது ஆபத்தாக மாறக்கூடும்.
ஒரு காலத்தில் லாபத்தில் இயங்கி வந்த சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி கையாள தடை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு போக்குவரத்து நெரிசல் தடையாக இருக்கும் நிலையில், எண்ணூர் துறைமுகம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, அங்கிருந்து மகிழுந்து உள்ளிட்ட மற்ற பொருட்களின் ஏற்றுமதியும் அனுமதிக்கப்பட்டால் சென்னை துறைமுகம் அதன் வருவாயை முற்றிலுமாக இழந்து மூட வேண்டிய நிலை உருவாகும்.
மாறாக, எண்ணூர் துறைமுகத்தையும், சென்னை துறைமுகத்தையும் கடலோரப் பாலம் மூலம் இணைத்தால் இரு துறைமுகங்களுக்கும் வணிகம் அதிகரிக்கும். எனவே, எண்ணூர் காமராசர் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவைக் கைவிட்டு, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைப்பதன் மூலம் இரு துறைமுகங்களையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்...
Subscribe to:
Posts (Atom)