13/10/2021

சித்தர் ஆவது எப்படி - 18...

 


பிறவி தாண்டிய அனுபவத்திற்கு சுவாச ஒழுங்கு மட்டுமே...

பிறவி தாண்டிய நிலை என்பது என்ன ?

மனிதன் பிறக்கும் சமயத்தில் பிரபஞ்சத்தின் பூரண ஆசியோடு குழந்தையாக இருக்கும் சமயம் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்ற விதியில் அவன் தெய்வ நிலைக்கு நிகராக இருக்கிறான்..

பின் உலகியல் பல்வேறு தொடர்பால் ஒழுங்கின்மை என்ற நோய் கவ்வி, தெய்வ நிலையிலிருந்து தேய்ந்து தேய்ந்து ஒய்ந்து போய் பின் செயல் இழந்த நிலையான மரணத்தை தழுவுகின்றான்...

மரணம் என்பது எந்த செயலும் அற்ற ஒரு அமைதி நிலை.. அமைதி என்பது ஒரு ஒழுங்கு நிலை..

அந்த ஒழுங்கு நிலையில் ஒழுங்கு தன்மை வாய்ந்த பிரபஞ்ச ஆற்றல் இசைந்து கொள்கிறது..

இப்படி இசைந்து கொள்வதை தான் Law of attraction என்ற தலைப்பில் மேலை நாட்டில் பல கோணங்களில் கருத்துக்கள் எழுந்து உள்ளன..

ஒரு மனிதன் அமைதி என்ற ஒழுங்கு தன்மைக்கு செல்லும் போது அதற்கு ஒத்த ஒன்று அதோடு இணையும் செய்கையை இசைதல் எனப்படுகிறது..

மரணத்திற்கு பின் மட்டுமே இந்த பிரபஞ்ச ஆற்றலின் இசைதல் செயல்பாடு நடக்கிறது...

ஆனால் அந்த இசைதலில் அனுபவ பட தேகமும் மனமும் இல்லையாதலால் அந்த இசைதல் என்ற செயல் பாட்டின் அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவ பட முடியாமேலே போய் விடுகிறது..

ஆகவே மிக முக்கியமான அந்த அனுபவம் பஞ்ச பூதங்கள் அனுபவப் பட தேகத்தில் உயிர் உள்ள போதே அந்த பேரமைதி என்ற எந்த செயலும் அற்ற அந்த தோன்றா நிலையை நாம் அனுபவப் படுகின்ற போது, அந்த பிரபஞ்ச ஆற்றல் நம்மோடு இசைய தொடங்கி அதன் ஆற்றலின் வரவு வர தொடங்குகிறது.... அதனால் அளவற்ற ஆற்றலை பெற தொடங்குகிறோம்....

இந்த இசைதல் என்ற Law of attraction மூலம் பிர பஞ்ச சக்தியை பெற மரணத்தை ஒத்த அந்த தோன்றா நிலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...

அந்த தோன்றா நிலை என்பது ஒரு அனுபவம்.. அதுவே பிறவி தாண்டிய அனுபவ நிலை..

பிறவி தாண்டிய நிலை என்பது மரணத்தை மட்டுமே குறிக்கும்.. பிறவி தாண்டிய அனுபவ நிலை என்பது தோன்றா நிலை அனுபவத்தைக் குறிப்பது...

இதன் மூலம் பிறவி தாண்டிய நிலையான மரணத்திற்கும், பிறவி தாண்டிய அனுபவ நிலையான தோன்றா நிலை அனுபவத்திற்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம் நமக்கு தெரிய வேண்டும்...

பல் வேறு ஒழுங்கின்மை காரணத்தால் பிறவி தாண்டிய நிலையான மரணத்தையே தழுவி தழுவி எண்ணிக்கை இல்லா பிறவிகளை அடைகின்றோம்...

ஆனால் பிறவி தாண்டிய அனுபவ நிலையை அடைகின்ற போது அங்கே பிரபஞ்ச ஆற்றல் தொடர்பால் நாம் மரணத்தை வெல்லுகின்றோம்...

இதை நாம் உற்று கவனித்து நன்கு புரிந்து கொள்ள வேண்டும்..

வலுவான பஞ்ச பூதங்களோடு நாம் பிறவி தாண்டிய அனுபவ நிலையான தோன்றா நிலைக்கு செல்லும் போது, பிரபஞ்ச ஆற்றலின் பெரும் வரவால் பஞ்ச பூதங்கள் மேலும் மேலும் வலுவடைந்து, மரணம் என்பது தொலைந்து போய் விடுகிறது..

பஞ்சபூதங்களில் ஒன்றான அறிவும் பலப் படுவதால், மரணத்தை வெல்லும் உபாயத்தையும் அறிவு, அறிந்து கொள்கிறது..

அமைதியின் மறு பக்கம் ஒழுங்கு.. பிரபஞ்சம் என்பது பேர் ஒழுங்கு.. ஒழுங்கோடு ஒழுங்கு இணைவதையே இசைதல் என்பதாகும்..

பஞ்ச பூதங்களிலே அமைதியற்ற மனம் அமைதியுடன் இருக்கும் போது, மனம் சுத்த மனம் என்ற ஒழுங்கு தன்மை அடையும் போது, சுத்த மனத்தால், இசைவதால் இணைகின்ற பிரபஞ்ச ஆற்றலால், பஞ்ச பூதங்களும் வலு பெற தொடங்குகின்றன...

இந்த ஒழுங்கு என்ற நிலையை வேறு எந்த வழிகளிலும் உபாயங்கள் மூலமாக நாம் கற்று அடைவதைக் காட்டிலும் ஜீவ சக்தியால் இயல்பாக நடக்கின்ற சுவாசத்தில் நாம் அந்த ஒழுங்கு முறையை மிக மிக விரைவாக கற்று அதுவாகவே ஆகி அமைதி நிலைக்கு விரைவாக செல்ல முடிவதால், அதன் மூலம் பிரபஞ்ச பேராற்றலை பெற முடிவதால், சுவாச ஒழுங்கு என்ற நிலை பாட்டிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது..

ஆனாலும் ஜென்ம ஜென்மமாக ஒழுங்கின்மையில் வாழ்ந்த மனித குலம் தான் வாழும் காலத்தில் தன் ஜீவ ஆற்றலாக விளங்கும் சுவாசத்தில் ஒழுங்கு தன்மையோடு இருக்க மிகவும் சிரமப் படுகிறது...

எல்லா சவால்களையும் சந்திக்கும் மனம் இந்த சுவாச ஒழுங்கிற்கான சவால்களை சந்திக்க முடியாமல் இருப்பதற்கு காரணம், இந்த சுவாச ஒழுங்கு என்பது பயிற்சி அல்ல என்பதாலும் அது ஜீவ ஆற்றலின் ஒழுங்கு நிலை எனபதாலும் அதற்கு மனம் எந்த வகையிலும் உதவி செய்ய முடியாது.. அது உதவி செய்வதாக இருந்தால் இடைஞ்சலாகத் தான் இருக்கும்...

ஆகவே மனம் சுத்த மனம் ஆகும் வரை ஒழுங்கற்ற சாதாரண மனம் சுவாச ஒழுங்கிற்கு ஒத்து வராது..

இந்த நிலையில் ஒழுங்கின்மையை அடையாளம் காட்டி மனதை ஆதிக்க செலுத்தி மீண்டும் ஒழுங்கிற்கு வரும் போது, மனதை வெல்லும் புத்தி செயல் பட தொடங்குகிறது..

இந்த சுவாச ஒழுங்கின் எளிமையான நிலைப் பாட்டில் மிக பெரிய ஆன்மா இலாபம் என்னவென்றால் புத்தி பலப் படுவதற்கான ஒரு சீரான வலுவான அளவற்ற சந்தர்ப்பங்கள் கிடைகின்றன..

வேறு எந்த பயிற்சியிலே இது போன்ற மேன்மையான புத்தியை பலப் படுத்துவதற்கான வழி முறைகள் இல்லை.. இல்லவே இல்லை என்று உறுதியாக சொல்லலாம்...

ஆகவே சேரும் நிலை அறிந்து சேர்ந்து சித்தராக முனைவோமாக...

கொளுத்துங்கடா 😁

 


நண்பன் என்ற பேருல கூட இருந்தே குழி தோண்டுவானுங்க...

 


பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்...

 


படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை மருத்துவ திறவுகோல் என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்...

பனைஓலை பாய் பலசரக்கு வெல்ல மண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.

மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர், மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்...

பிராடு பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


தூக்கு மாட்டிட்டு செத்து தொல டா...

செருப்படி என்பது யாதெனில் 🤣

 


இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்...

 


விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடை பிடிக்கிறார்கள்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்...

காதலி மற்றும் தாய்... இரண்டும் ஒரே பெண்... 😏

 


பையன காதலிச்சிட்டே... அவன் அப்பனுக்கும் நூல் விட்டுட்டு இருந்திருக்கா... 

என்னடா இது புரோக்கர் அண்ணாமலை தலைமைக்கு வந்த சோதனை 🤣

 


கவனத்தைக் கவர விரும்பாதே...

 


உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.

நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.

உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.

நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.

ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போதுதான் உன்னால் அடைய முடியும்.

இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.

நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?

ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?

நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.

அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள்தான்.

நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

கவன ஈர்ப்பில்தான் அகந்தை வாழ்கிறது.

அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.

நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.

இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.

ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.

அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.

நீ யாரையும் ஏமாற்றவில்லை.ஆனால், உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்.

Rcb சோலி முடிஞ்சு 😂🤣😅

 


இந்திய தரகர் மோடி கலாட்டா...

 


பாஜக & திமுக காரனுங்க பெயர் தான் முழுவதும் இருக்கும் 😁

 


சித்தராவது எப்படி - 17...

 


அந்த மாவீரன் ஒரு மகா கோழையே...

இந்த பிறவியில் இருக்கும் துயரங்களை போக்குவதற்கு துயரங்களின் துன்பங்களின் தொடர்புகளை வகுத்து வகுத்து வைத்து இன்னும் அடைய கூடிய எதிர் கால துன்பங்களையும் பட்டியல் இட்டு ஒரு மனிதனை பயமுறுத்தி, குழப்பத்தினை உருவாக்கும் உலகத்தின் போக்கால் மனித குலம் அடையும் துயரங்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது..

எல்லாம் கடந்து போகும் என்ற நிலையான சத்தியத்தை முன் வைத்து தகுந்த விளக்கம் கொடுக்கும் மேதாவிகள் யாரும் இல்லை..

நோயை உருவாக்கி பிழைப்பை நடத்தும் பொய்யான மருத்துவனை போல் இன்று துயரம் என்ற பொய்யான மாயையான நோயை உருவாக்கி அதை தீர்ப்பது போல் பாவனை செய்பவர்களே பலர் இருக்கிறார்கள்..

ஒழுங்கின்மையே நோய் என்றும் அதை தீர்க்க ஒழுங்கு என்ற மாமருந்து ஒன்றே ஒன்று தான் உண்டு என்பதை அறிந்து இருந்தும் மறைத்து விட்டார்கள்.. அல்லது மறந்து விட்டார்கள்...

நோய்களை உருவாக்கும் சுவாச ஒழுங்கின்மையை சுவாச ஒழுங்கு என்ற மாமருந்து சீர் படுத்தும், என்ற அடிப்படையான மிக எளிமையான உண்மையை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக்கொண்டபின் அதை நடைமுறை படுத்துபவர்கள் எவரேனும் உண்டா என்றால் கேள்வி குறியாக உள்ளது...

ஒழுங்கின்மையிலே பழகி பழகி போய் விட்ட நிலையில் கிணற்று நீரின் அடியில் ஒரு மணி நேரம் மூச்சை அடக்கி பயிலும் ஒரு யோகி என்று சொல்லக் கூடியவரை தனது இயல்பாக ஓடும் சுவாசத்தில் சுவாச ஒழுங்கோடு இருக்கச் சொன்னால் அவரால் 2 நிமிடம் கூட இருக்க முடியாமல் இருப்பது மிகவும் வியப்பான விசயமாகும்..

இந்த கோணத்தில் பார்க்கையில் எல்லா சாதனைகளும் ஒழுகின்மையின் அடிபடையில் அமைக்கப் பட்டதால் அவற்றில் எந்த விசேசமும் இல்லை..

பிரபலமான நடிகர்கள் தங்களின் இயல்பான நிலையை விட்டு ஏதோ கற்பனை பாத்திரத்தின் ஒழுங்கின்மை என்ற நடிப்பில் பேரும் புகழும் அடைவது என்பது சமுதாயத்தின் ஒழுங்கின்மைக்கு ஏற்றால் போல் இருப்பதாலே இது சாத்தியமாகிறது..

அப்படியே உலக சாதனைகளை படைத்த அனைத்து பிரபலங்களும் ஒழுங்கின்மையின் உச்சத்திற்கு சென்றவர்கள்..

உதாரணமாக மாவீரன் என்று போன்றப்படும் அலெக்சாண்டர் பல ஆயிரம் உயிர்களை கொன்ற ஒரு உச்சக் கட்ட ஒழுங்கின்மையின் பூரண அடையாளம்..

அவன் பல நாடுகளை வென்றாலும், அவனால் இரண்டு நிமிடம் கூட சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாது..

காரணம் தன்னை வெல்ல முடியாத மகா கோழை அவன்...

தன்னை வெல்ல முடியாத மகா கோழைகளுக்கே பேரும் புகழும் வந்து சேருகின்றன.. இதுதான் விசித்திரமான மாயையின் தோற்றம்..

தன்னை வெல்ல முடியாதவன் உலகை வெல்வதால் எந்த சிறப்பும் இல்லை..

தன்னை வெல்ல முடியாத பிரபல நடிகர்கள் அரசியல்வாதிகளிடம் இருக்கும் தனிப் பட்ட கெட்ட பழக்க வழக்கங்கள் அவர்களின் கோழைதனத்தின் மறைமுக எடுத்துக் காட்டு...

தன்னை அறிந்து தன் இயல்பு நிலை அறிந்து, தன் பிரபஞ்ச தொடர்பு நிலை அறிந்து, அதோடு பொருந்தி, பொருந்தி, சிறப்பான சத்திய, ஒழுங்கு, தயவு வாழ்வு, வாழ முடியாதவர்கள் உண்மையில் கோழைகளே....

ஏன் இந்த சுவாச ஒழுங்கோடு இருப்பது அவ்வளவு சிரமம் ?

மரணத்திற்கு பின் ஒருவரின் சூட்சம தேகம் பிரபஞ்ச பேராற்றலால் பேரறிவால் பக்குவப் படுத்தப் பட்டு பண்படுத்தப் படுகிறது..

தோன்றா நிலையில் இருக்கும் அந்த பிரபஞ்ச பேராற்றல் ஒழுங்கின் வடிவம்..

அதை அடைந்த எதுவும் தன் ஒழுங்கின்மையை கை விட்டு விட்டு அந்த பேரற்றலின் ஒழுங்கோடு இணைந்து ஒழுங்கின் வடிவமாக மாறியே ஆக வேண்டும்.. அதுவாகவே ஆக வேண்டும்..

அப்படி ஆன அந்த சூட்சம தேகம் பிறவி எடுத்த உடன் முதலில் பிரபஞ்ச ஓழுங்கோடு தான் இருகிறது..

தூல தேகத்தில் மட்டுமே அந்த தூய பிரபஞ்சத்தின் தன்மையை அனுபவப் படமுடியுமே தவிர சூட்சம தேகத்தால் முடியாது..

அப்படி உடல் எடுத்த சூட்சம தேகம் உலக சார்புகளை சார்ந்து ஒழுங்கின்மை ஆகி விடுகிறது...

பிரபஞ்சத்தின் தூய்மையை மறந்து போய் விடுகிறது..

ஒழுங்கின்மை காரணமாக அழிந்து போன தேகத்திற்கு மீண்டும் அதே கதைதான்..

அந்த கதை மீண்டும் மீண்டும் தொடராமல் இருக்கவே சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்சத்தின் தூய்மையை மீண்டும் பெற வேண்டி இருக்கிறது..

ஒழுங்கின்மையின் அழுத்தம் அதிகமாக இருக்க இருக்க சுவாச ஒழுங்கு என்ற இயல்பான நிலை மிகவும் கடினமாகிறது..

ஆக சுவாச ஒழுங்கு என்பது, பிரபஞ்ச ஆற்றலால் இயக்கப்படும் சுவாசத்தில், நிலை நிறுத்தப் படும் ஒழுங்கு என்பது பிரபஞ்ச ஆற்றலோடு, இணைந்து இருப்பதற்கு சமம்..

மரணத்திற்கு பின் ஆன்மா ஆகிய உயிர் நிலை, பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து, பக்குவப் படுதலுக்கு ஒத்த நிலை..

அந்த சுவாச ஒழுங்கில் மனம் தன் தன்மையான ஒழுங்கின்மையை இழக்க நேரிடுவதால், மனம் தன்னையே இழந்தது போல ஆவதால், மனம் தான் கொண்டுள்ள எண்ண ஆதிக்கங்களால், சுவாச ஒழுங்கை எப்படியாவது கெடுக்கவே செய்யும்..

அதனால் தான் சுவாச ஒழுங்கு அவ்வளவு சிரமமாக உள்ளது.. இந்த சுவாச ஒழுங்கின்மையை புத்தி கண்டு அறிந்து ஒவ்வொரு தடவையும் சுவாச ஒழுங்கின்மையை சரி செய்யும் பொழுது, புத்தியானது தனது ஆதிக்கத்தை மனதின் மேல் செலுத்துகிறது..

இப்படியாக சுவாச ஒழுங்கிற்கு ஏற்படும் ஒவ்வொரு தவறிலும், அதை ஒழுங்கிற்கு கொண்டு வர முயலும் புத்தி சிறுக சிறுக மனதின் மேல் ஆதிக்கத்தை வளர்த்துக் கொண்டு முடிவில், பூரணமாக புத்தி ஆனது மனதை தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்கிறது..

அந்த நிலையில் மனமானது புனித சக்தியாகிய புத்தியின் கனலால் நிரப்பப் பட்டு சுத்த மனம் ஆகிறது..

அந்த நிலையில் மட்டுமே மனதின் ஆதிக்கத்தில் உள்ள சித்தமும் தேகமும் முழுமையாக பிரபஞ்ச ஆற்றலை பெறும் தகுதி பெற்று, பேரண்ட பேர் ஆற்றலையும் பெறுகிறது..

இவை அத்தனையும் சுவாச ஒழுங்கில் சாத்தியமாகிறது...

இந்த சுவாச ஒழுங்கின் மூலம் பிரபஞ்ச பேராற்றலையும் பேரறிவையும் பெறலாம் என்பதும், சித்தராகலாம் என்பதும், வலுவான சத்தியமான உண்மை...

இந்தியா விற்பனைக்கு அனுகவும் தரகர் பாஜக மோடி...

 


அடேய் பிராடு ஆண்டவா...

 


கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுவிட்டு ஒரு நல்ல ஃபிரண்ட் வேணும் என்று வேண்டி கேட்டேன்..

அவர் உங்களை காண்பித்தார்..

பின்பு சொன்னார்..

இந்த காசுக்கு இந்த லூசு தான் கிடைக்கும் என்று.. 🤣🤣

அட வியாபாரி கடவுளே...