20/06/2018

விமரிசனங்கள் பல வகையானவை. அவற்றை எப்படி எதிர்கொள்வது?

 
காகித அம்பு...

சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி, மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும். இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.

கால்பந்து...

சில விமரிசனங்கள், விளையாட்டாக, உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.

கண்ணாடி...

சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும். உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

கத்தி...

சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும். நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பது போல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள். விலகி விடுங்கள்...

கிருஷ்ணகிரியில் உழவனின் உரிமைப்போர்...


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாரத்தில் பவர்கிர்ட் நிறுவனம் விளைநிலங்களை அழித்து , உழவர்களை மிரட்டி மின்கோபுரம் அமைக்கும் பணியை அடாவடியாக செய்துவருகிறது.

மத்திய அரசின் பவர்கிர்ட் நிறுவனம் சத்திஸ்கர் மாநிலம் இராய்ப்பூரில் இருந்து திருப்பூர் மாவட்டம், இச்சிப்பட்டி புகழூருக்கு 800KV மின்கோபுர பணியை மேற்கொண்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் , போச்சபள்ளி வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள், இந்நிலையில் வருவாய் துறையினரும் , காவல்துறையினரும் உழவர்களின் குரல்வளையை நெருக்கிவருகிறார்கள்.

காவல்துறையினர் 400 மேற்பட்டோர் , துணை இராணுவம் , வஜ்ரம் வாகனம் , கண்ணீர் புகை குண்டு எரியும் வாகனம் , தீயணைப்பு வாகனம் என்று கிரமத்துக்குள் நிறுத்தி அணிவகுத்து உழவர்களை அச்சுருத்து அராஜக வழியில் செயல்படுவது ஏன் ?.

தனது விளைநிலத்திற்காக போராடும் உழவர்களை தற்கொலைக்கு தூண்டியும் , காவலர்கள்  உழவர்களை துரத்தி கிணற்றில் தள்ளியும் , ஊரைவிட்டு விரட்டியும் மத்திய மோடி அரசு இரும்புக்கரம் கொண்டு  ஏழை அப்பாவி உழவர்களை அழித்திக் கொண்டிருக்கிறது.

பெருநிறுவனத்திற்கு மக்களை தாரைவார்க்க துடிக்கிறது மோடி அரசு , வளர்ச்சி யாருக்கு ஏழை, எளிய மக்களுக்கா இல்லை கார்ப்ரேட் முதலாலிக்க.

தற்போது மக்கள் தங்கள் விளைநிலங்களில் குடியேறி உள்ளனர். நமது பாட்டன் , பூட்டன் சம்பாதித்து பாதுகாத்த நிலத்தை அபகரிக்கும் செயலை அரசே செய்வதுதான் சனநாயகம்மா ? இதுக்குத்தான் ஓட்டுபோட்டார்களா ?
 
மக்களே ஆதரவு தாருங்கள் கிருஷ்ணகிரி உழவனுக்கு வாழ்வு தாருங்கள்..

பெரும்பாலான ஊடகங்களால் மறைக்கப்பட்ட செயௌதி...

வங்கியே தீமையின் ஊற்றாகும்...







பசுமையை அழிக்கும் பசுமைவழிச் தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி...


2018 சூன் 9 - அதிகாலை 4 மணி...

சேலம் மாவட்டம் - குப்பனூருக்கு பரபரப்பாக வந்த காவல்துறை ஊர்திகள், நாராயணன் என்பவரையும், வீராணத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரையும், இராஜா, கந்தசாமி, பழனியப்பன், இரவிச்சந்திரன் ஆகியோரையும் “பயங்கரவாதிகளை” பிடிப்பது போல் வீடு வீடாகச் சென்று சுற்றிவளைத்து கைது செய்து, அம்மாப் பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதற்கு முன்பாகவே, சீலநாயக்கன் பட்டி - சூரிய கவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி  வீரபாண்டித் தொகுதி இளைஞர் பாசறை இணைச் செயலாளர் மாரிமுத்து, பூலாவரி உழவர் இரவி ஆகியோரை சேலம் அன்னதானப்பட்டி காவல் துறை யினர் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இப்படி பயங்கரவாதிகளைப் போல் சேலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?

தங்களுடைய ஒரே வாழ்வாதாரமான வேளாண் விளை நிலங்கள் உட்பட சற்றொப்ப 7,500 ஏக்கர் விளை நிலங்கள் மீதும், 500 ஏக்கர் வனப்பகுதி -  ஏழு ஆறுகள் - எட்டு மலைகளைச் சிதைத்து - சேலத்திலிருந்து சென்னைக்கு சற்றொப்ப 10,000 கோடி முதலீட்டில் போடப்படவுள்ள புதிய “பசுமை வழிச் சாலை” திட்டத்தால், தங்களுக்கு பாதிப்பு என ஊடகங்களிடம் பேட்டி அளித்ததுதான், இவர்கள் செய்த ஒரே குற்றம்.

இதற்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். “சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை”யால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்ததே இவர்கள் செய்த “குற்றம்”!

ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதும், மனு கொடுப்பதும் கூட “குற்ற” நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு, போராட்டத்துக்கு மக்களை “தூண்டி விட்டவர்கள்” என்று இவர்களைக் கைது செய்து - சிறையில் அடைத்துள்ளது தமிழகக் காவல்துறை! ஏன் தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை அடுத்த சில நாட்களிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவுப்படுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 11.06.2018 அன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டங்களின் தொழில்துறை வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு சேலம் - சென்னை பசுமைவழி விரைவுச்சாலை அவசியம்! எனவேதான், இந்திய அரசிடம் போராடி இத்திட்டத் தைப் பெற்றிருக்கிறோம். எனவே, அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்!” என்று தெரிவித்தார்.

இந்திய அரசிடம் “போராடி” தமிழ்நாட்டுக்கு “நீட்” விலக்கு வாங்க முடியவில்லை! இந்திய அரசிடம் “போராடி” காவிரி நீரைப் பெற முடியவில்லை! இப்படி இந்திய அரசிடம் தமிழ்நாட்டின் நலன்களுக்காகப் போராடி எதையும் பெற முடியாத எடப்பாடி அரசு, இந்த சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைப் “போராடி” பெற்றிருக்கிறதாம்! சரி, இத்திட்டத்தால் யாருக்கு என்ன பாதிப்பு? யாருக்கு என்ன இலாபம்? விரிவாகக் காண்போம்.

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு இப் பொழுதே 3 சாலை வழிகளும் 2 தொடர்வண்டிப் பாதைகளும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜா பேட்டை, வேலூர், ஆம்பூர், கிருட்டிணகிரி, தருமபுரி வழியாக சற்றொப்ப 360 கி.மீ. பயணத்தில் சேலம் வரலாம். அதேபோல், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர் வழியாக சற்றொப்ப 350 கி.மீ. பயணித்தும் சேலம் செல்லலாம். இதுதவிர, சென்னையிலிருந்து பூந்தமல்லி, வேலூர், வாலாஜா, திருப்பத்தூர், அரூர் வழியாகவும் சேலம் சென்றடையலாம்! இவையெல்லாம், இப்பொழுதே மக்கள் பயன்பாட்டில் இருக்கும் சாலைகள்! இவை அல்லாமல், இரண்டு தொடர்வண்டிப் பாதைகளும் உள்ளன.

ஆனால், இப்போது புதிதாக “மக்கள் பயன்பாட்டுக்கு” என்ற பெயரில், “சென்னை - சேலம் - எட்டுவழிச் சாலை”த் திட்டம், “பசுமைவழிச் சாலை” என்ற பெயரில் இந்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 25.02.2018 அன்று, இந்திய அரசின் “பாரத்மாலா” திட்டத்தின் கீழ் சற்றொப்ப 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இச்சாலைத் திட்டத்தின் அறிவிப்பை இந்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். 

இந்த புதிய சாலைத் திட்டம், தற்போது சேலம் - சென்னைக்கு இடையிலுள்ள சற்றொப்ப 350 கி.மீ. பயண தூரத்தை 277.3 கி.மீ. ஆக குறைக்கும் என்றும், இதன் காரணமாக சென்னை - சேலம் பயண நேரத்தில் ஒரு மணி நேரம் மிச்சமாகும் என்றும் இதற்கு சமாதானம் கூறுகிறார்கள். ஒரு மணி நேரம் மிச்சப்படுவதைப் பற்றிப் பேசுபவர்கள், இதன் காரணமாக பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்த வனப்பகுதிகளும், வேளாண் விளை நிலங்களும் அழிக்கப்பட்டு - அடுத்தத் தலை முறையும், ஆயிரக்கணக்கான காட்டுயிர்களும் பாதிக்கப் படுவது குறித்து சிறிதும் சிந்திக்க மறுக்கின்றனர்.

இந்த “பசுமை வழிச் சாலை” என்பது உண்மையில், “பசுமை அழிப்புச் சாலை”யாகும்! காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீ., திருவண்ணாமலையில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கி.மீ., தருமபுரியில் தீர்த்தமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி என 53 கி.மீ., சேலத்தில் வாழப் பாடியிலிருந்து சேலம் நகரம் வரை 38 கி.மீ. வரை இச் சாலை அமைக்கப்பட உள்ளது. ஆக மொத்தமுள்ள 274 கிலோ மீட்டரில், சற்றொப்ப 250 கி.மீ. நீளம் வேளாண் விளை நிலங்கள் - குடியிருப்புகள் - வனப்பகுதி மலை களில் அமைகிறது இச்சாலை.

இச்சாலைத் திட்டத்திற்கு சற்றொப்ப 5,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பனை மரங்கள், 2 இலட்சம் தென்னை மரங்கள், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வனப்பகுதிகள் அழியவுள்ளன.

சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலை, சேத்துப்பட்டு மலை, ஜருகு மலைக் காடுகள், நீப்பத்துத்துறை தீர்த்தமலைக் காடுகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுவாஞ்சூர் பாதுகாக்கப் பட்ட வனப்பகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நம்பேடு, சாத்தனூர் - பிஞ்சூர், திருவண்ணா மலை சொரகுளத்தூர், போளூர் - அலியாலமங்கலம், செங்கம் - முன்னூர்மங்கலம், ஆனந்தவாடி மற்றும் இராவந்தவாடி, தருமபுரி மாவட்டத்தில் அரூர் முதல் பூவாப்பட்டி மற்றும் விரிவுபடுத்தப்பட்ட பூவாம்பட்டி காடுகள், தீர்த்தமலை நோநாங்கனூர் மற்றும் பள்ளிப்பட்டி விரிவுபடுத்தப்பட்ட காடுகள், சேலம் மாவட்டம் மஞ்சவாடி கணவாய் மற்றும் ஜருகுமலை வனப்பகுதி போன்ற பல இயற்கை வளங்கள், தனது பசுமையை இழக்கவுள்ளன. சேலத்தையொட்டி உள்ள பூலாவரி, நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய கிராமங்களில் பெரும் பாலான வேளாண் நிலங்கள் இத்திட்டத்தால் அழிக்கப் படவுள்ளன.

“சேலம்” என்றாலே சிலருக்கு மாம்பழங்கள் நினைவுக்கு வரும்! இச்சாலைத் திட்டம் செயல்படுத்தப் பட்டால், இனி சேலம் என்றால் புழுதிப் பறக்கும் கண்டெய்னர் லாரிகள் சீறிச் செல்லும் எண்ணூரும், வட சென்னையும்தான் நினைவுக்கு வரும். இது மிகைக் கூற்று அல்ல.

இச்சாலை அமையவுள்ள ஜருகுமலை, வெத்த மலைக்கு இடையில் சேலத்தின் தொன்மையான மாம் பழம் விளையும் பகுதியான வரகம்பாடி உள்ளது. தொன்மையான மாம்பழப் பகுதிகளான ஸ்கந்தாசரம், வாழடி மாந்தோப்பு, போத்துக்குட்டை, எருமம் பாளையம், பனங்காடு, தேன்மலை, உடையபட்டி, வரகம்பாடி, வெள்ளாளகுண்டம், விலாம்பட்டி, கே. பள்ளப்பட்டி, குப்பனூர், ஆச்சாங்கு குட்டப்பட்டி ஆகிய ஊர்களும், மாந்தோப்பு அதிகமுள்ள இதர கிராமங்களிலும் இச்சாலை விரிகிறது.

இந்த மலைகளாலும், காடுகளாலும்தான் தமிழ் நாட்டின் கோடைக் காலங்களின்போது, வெப்ப சலனத்தால் மழை பொழியும் மேகங்கள் உருவாகின்றன. தருமபுரி, வேலூர், கிருட்டிணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சி, கடலூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்கள் இதனால் மழை பெறுகின்றன. இனி, அது நடக்காது! ஏற்கெனவே, மழைப் பொய்த்ததால் வேளாண்மை அழிந்துபோன வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் இனி உருதெரியாமல் சிதைந்து போக வழி ஏற்படுத்தப்படும்.

ஏற்கெனவே, சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 570 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராடி வருகின்றனர். தனது நிலத்தை கையகப்படுத்த வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த ஓமலூர் - பொட்டியபுரம் உழவர் கந்தசாமி என்பவர் அதிர்ச்சியில் மரணமடைந் தார். இந்நிலையில், பசுமை அழிப்புச் சாலைத் திட்டம் சேலம் மாவட்ட உழவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலையில் 53 இலட்சம் டன் பாக்சைட் தாது உள்ளது. சேலம் கஞ்ச மலையில் 7.5 கோடி டன் இரும்பு தாது உள்ளது. அரூர் மலைப் பகுதியில் மாலிப்டினம் தாது கிடைக்கிறது.

திருவண்ணாமலையில் இரும்பு தாது, ஹெமடைட் மற்றும் மேக்னடைட் தாதுக்கள் உள்ளன. இவையெல் லாம், இதுவரை அப்பகுதியில் கண்டறியப்பட்ட இயற்கை வளங்கள்.

இவற்றையெல்லாம் எப்படிக் கொள்ளையடிக்கலாம் என ஜிண்டால், வேதாந்தா, அதானி போன்ற பெரும் பகாசுர நிறுவன முதலைகள் ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன. எனவே, இப்பொழுதுள்ள பா.ச.க. பினாமி அரசான எடப்பாடி அரசின்கீழ் இதற்கானத் திட்டம் தீட்டப்படுகிறது என்பதே நமது உறுதியான ஐயம்! சேலம் கஞ்சமலையின் அடிவாரத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி என்ற கிராமத்தின் வழியாகச் செல்லும் வகையில் தீட்டப்பட்டுள்ள இப்பசுமைவழிச் சாலைத் திட்டம் - சென்னை எண்ணூர்  துறைமுகம் வரை நீள்வது, நம் ஐயத்தை உறுதிப்படுத்துகிறது.

இன்னொரு புறத்தில், “சாகர் மாலா” திட்டத்தின்படி தமிழ்நாட்டின் துறைமுகங்கள் வழியாக சேலத்திலுள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி அளிக்கவும், ஜிண்டால் உருக்காலைக்கு பொருட்கள் ஏற்றுமதி - இறக்குமதி செய்யவும் திட்டங்கள் உள்ளன. அதற்கு, இச்சாலைத் திட்டம் பெரிதும் பயன்படவுள்ளது!

இவ்வாறான பன்னாட்டு முதலாளிகளின் வணிக நலன்களுக்கு மட்டுமின்றி, இந்தச் சாலைத் திட்டப் பணிகளின் ஒப்பந்தங்களின் வழியே எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் தனிப்பட்ட முறையிலேயே “இலாபங்கள்” இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்களில் சற்றொப்ப 5,000 கோடி ரூபாய்க்கு ஊழல்  நடை பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு, தி.மு.க.வினர் இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில், தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் வருமாறு...

ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசிப்பாளையம் - நான்கு வழிச் சாலை (SH37) அமைக்க ரூபாய் 713.34 கோடிக்கு பதில் ரூபாய் 1,515  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சாலைப் பணிக்கான தொகையை அதிகமாக்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகனின் மைத்துனர் சந்திரகாந்த் இராமலிங்கம் என்பவர் இயக்குநராக உள்ள “இராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன்” என்ற தனியார் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

நெல்லை - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலைக்கு (SH 39) ரூ. 407.6 கோடிக்கு பதிலாக  ரூ. 720 கோடி என மதிப்பு உயர்த்தப்பட்டு, நெல்லை - செங் கோட்டை சாலைக்கு முதல்வர் எடப்பாடியின் சம்பந்தி பி. சுப்பிரமணியம் நிறுவனமான வெங்கடா சலபதி நிறுவனம் மட்டுமே ஒப்பந்தம் கோரி பெற்றுள்ளது.

இராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு சற்றொப்ப ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதுவும் எடப் பாடியின் சம்பந்தி நிறுவனத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

சற்றொப்ப 200 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுரை மாவட்டம் வட்டச் சாலைப் பணியை பாலாஜி டோல் வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில், பி. சுப்பிரமணியம், ஓ.பி.எஸ். புகழ் சேகர் ரெட்டி ஆகியோரும் எடப்பாடிக்கு நெருக்கமான நாகராசன் ஆகியோரும் கூட்டாளிகள் - அதாவது “இயக்குநர்கள்”.

சென்னை - வண்டலூர் - வாலாசாபாத் சாலைப் பணி ஒப்பந்தமும் முதல்வர் சம்மந்தி பி. சுப்பிரமணியம் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் வழியாக, எடப்பாடி குடும்பத் தினருக்கு சற்றொப்ப 5,000 கோடி ரூபாய்க்கு பலன் கிடைத்துள்ளது என தி.மு.க.வின் புகார் மனு கூறுகிறது. “பாம்பின் கால் பாம்பு அறியும்” என்பது பழமொழி! எனவே, ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க. இவற்றையெல்லாம் வெளிப் படுத்தி யுள்ளது.

இதுதவிர, சாலை போடுவதற்கு முகாமையான பொருளான தாரிலும் ஊழல் நடந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டுதான், தாரின் விலை டன்னுக்கு ரூபாய் 41,360 என்ற உச்ச நிலையை அடைந்தது. அதன்பிறகு, 2015 மார்ச் மாதத்தில் ஒரு டன் தாரின் விலை ரூபாய் 30,260 ஆகவும், 2016இல் அது ரூபாய் 23,146 ஆகவும் குறைந்து விட்டது. ஆனால், இப்போதுவரை 2014ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. இதன் வழியாகவும், எடப்பாடி குடும்பத்தினருக்கு சில ஆயிரம் கோடி இலாபம்! இதுகுறித்து, நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணை நடத்தக் கோரும் பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீண்ட நாட் களாக உறங்கிக் கிடக்கிறது.

இப்படி “திறமை”யாக ஊழல் செய்வதால்தான், 2011ஆம் ஆண்டிலிருந்து நெடுஞ்சாலைத் துறை எடப் பாடி பழனிச்சாமியிடமே இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

ஒட்டன்சத்திரம் சாலைப் பணி ஒப்படைக்கப்பட்ட “இராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன்” நிறுவனத்தின்  உரிமை யாளரும், எடப்பாடியின் உறவினருமான சந்திரகாந்த இராமலிங்கம், கடந்த 2016 திசம்பரில், 5.5 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் மாற்றிய வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, ஒரு ஆண்டுக்கும் மேலாக பெங்களூரு பரப்பன அக்கிரகார சிறையில் அடைக்கப்பட்டதும் ஒரு சோக வரலாறு..

இப்படி, பல சாலைத் திட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிய எடப்பாடி குடும்பத் தினருக்கு, “சேலம் - சென்னை சாலை”த் திட்டம் ஒரு “வரப்பிரசாதம்” இல்லையா? இன்னொருபுறத்தில், எடப்பாடி குடும்பத்தினரின் இந்த “ஊழல்”களை யெல்லாம் அனுமதித்து, அவரை மிரட்டிப் பணிய வைக்கவும் இதை பா.ச.க. பயன்படுத்திக் கொள்ளும்.

இத்திட்டத்தால் பெருமளவு பாதிக்கப்படும் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு எதிர்கட்சித் தலை வரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களுடன் நின்று போராடியிருக்க வேண்டும். ஆனால், அவரோ நாட்டின் வளர்ச்சிக்கு இது போன்ற திட்டங்கள் தேவை என்பதால் இதனை தி.மு.க. முழுமனதோடு வரவேற்கிறது என்றும், மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டு அதன்படி முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அதாவது, மக்களிடம் கருத்து கேட்டு செயல்படுத்த வேண்டும் என்கிறார். எனவே, தமிழ்நாடு அரசு பல இடங் களில் கண் துடைப்புக் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. கருத்துக் கேட்புக் கூட்டங்களை கமுக்கமாக நடத்தி, அதில் அ.தி.மு.க.வினரை பங்கேற்க வைத்து “வேலையை” முடிக்கிறது.

ஆக, “நாட்டின் வளர்ச்சி” என்ற பெயரில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்கள் வாழ்வாதாரங்கள் பறிபோவது குறித்து கவலை கொள்ளாது! உண்மையான அக்கறை யாளர்கள்தான் கவலை கொள்ள வேண்டும்! 

தற்போது இத்திட்டத்திற்காக, சேலம் எருமப் பாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப் பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி யில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நில அளவீட்டுப் பணிகள் காவல்துறையினர் பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.

இப்படி மக்களை அச்சுறுத்தி, அவர்தம் வாழ்வாதாரங்களை அழித்து உருவாக்கப்படும் இந்தச் சாலையில் மக்கள் எளிதாகப் பயணம் செய்ய முடியுமா? முடியாது! இந்த “பசுமைவழிச் சாலையின்” ஒவ்வொரு 33.75 கி.மீ. தொலைவுக்கும் தனியார் நிறுவனங்களின் அடியாட் களால் நடத்தப்படும் சுங்க வளாகம் இருக்கும். அதாவது ஒவ்வொரு 33.75 கி.மீ. தூரத்திற்கும் பணம் செலுத்தித் தான் பயணம் செய்ய முடியும்! ஒருமுறை சேலத்திலிருந்து சென்னை செல்ல சற்றொப்ப 600 ரூபாயை சுங்கத் தொகையாகக் கொண்டுதான் பயணிக்க முடியும்!

உண்மையில், மக்கள் போக்குவரத்துக்காக இச் சாலைத் திட்டம் அமைக்கப்படவில்லை. ஏனெனில், ஏற்கெனவே மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்தாலே, மக்களுக்கு அது போதுமானது! ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் சரக்குப் போக்கு வரத்திற்காகவும், மண்ணையும் வாழ்வாதாரத்தையும் அழித்தொழித்து இயற்கை வளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுமே இத்திட்டத்தை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் கொண்டு வருகிறது.

“வளர்ச்சி” என்ற பெயரில், மலைகளையும், வேளாண் நிலங்களையும் அழித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் கூலிகளாகவும், அதன் குப்பைகளைப் பொறுக்கும் அகதிகளாகவும் நாம் மாற்றப்படப் போகிறோமா? கண்ணை விற்று சித்திரம் வாங்குவதா?

சென்னை மக்களே விழித்துக் கொள்ளுங்கள்...


ஹிந்தி பெயர்ப்பலகை நீக்கம்...


ஈரோடு பெருந்துறை சிப்காட் பகுதியில் செல்லும் பேருந்தில் உள்ள பெயர்ப்பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து ஹிந்தி பெயர்ப்பலகை நீக்கப்பட்டது...

பசுமை வழி சாலை உண்மைகள்...


அறப்போர் இயக்கம் சுற்றுசூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைதை வன்மையாக கண்டிக்கிறது...


பியூஷ் மனுஷ் சமீப காலத்தில் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எட்டு வழி சாலை உருவாக்கம் திட்டங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடி வருகிறார்.

தமிழக அரசாங்கம் இது போன்ற சுற்றுசூழல் பிரச்சனைகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளாமல் அதற்காக போராடும் ஆர்வலர்களை சிறையில் அடைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசாங்கம் மற்றும் காவல் துறை சுற்று சூழல் பிரச்சனைகளை பொது அமைதி பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்யாமல் பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி நேர்மையாகவும் உண்மையாகவும் வேலை செய்ய வேண்டும்.

மேலும் ஆர்வலர்களை கடத்தி கொண்டு போய் கைது செய்யாமல் டி.கே.பாசு பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம். பியூஷ் சட்டத்தின் படி நடக்ககூடிய சமூக அக்கறை கொண்டவர். அவரை விசாரணைக்கு அழைத்திருந்தால் வருவதற்கு தயாராக இருப்பவர்.

அப்படி இருக்கும் பொழுது இம்முறையில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

அறப்போர் இயக்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது. நீதிமன்றங்கள் தமிழக அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களை வன்மையாக கண்டித்து, பியூஷை விடுவித்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்க உதவ வேண்டும்...

வணிகனுக்கு ஒன்றானால் குழந்தையும் தேசவிரோதியாகும்... அரசாங்கத்தை நம்பாதே...


சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய்...


சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நான் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.

இதைப் பற்றி நான் இங்கே பதியக் காரணம் இந்த விஷயம் மீடியாக்களால் பேசப் படவில்லை என்பதும், நமது பாடப் புத்தகங்களிலும் பெரிதாக எந்த விவரங்களும் தரப்படவில்லை என்ற ஆதங்கம் தான்.

இதை அரசாங்கம் குப்பைகளாலும் இடி பொருட்களாலும் நிரப்பி மறைத்து விட முயல்வது ஒரு தேச அவமானம். தொலை நோக்குப் பார்வை (அப்படின்னா) இல்லாத நமது தமிழக அரசாங்கங்கள் ஆங்கிலேயர் விட்டுப் போன ஒரே புதையலையும் மண்ணாக்கி விட்ட அநியாயம் இது.

1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து 420 km நீளத்தில் விஜயவாடாவையும் விழுப்புரம் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த அதிசயம் உருவானது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்ல இது பெரிதாக உபயோகபடுத்தபட்டு இருக்கிறது.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப் பட்ட இந்தக் கால்வாய், சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. மற்ற பகுதிகளில் இன்னும் பெரிதும் பாதிக்கப் படாத இந்தக் கால்வாய் 80 சதவீதம் இன்னும் உபயோக நிலையிலேயே உள்ளது. சென்னை நகரின் குறுக்கே ஓடும் 30 km நீளமான பகுதி மட்டுமே கடும் நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி விட்டிருக்கிறது.

MRTS என்ற பறக்கும் ரயில் திட்டம் இந்தக் கால்வாயை ஒட்டியே திட்டமிடப் பட்டது. இந்தக் கால்வாயே ஒரு MRTS என்பது யாருக்குமே புரியவில்லை என்பது பரிதாபம் தான். இந்த ரயில் பாதை கட்டுமானம் பெரும்பாலான இடங்களில் இந்தக் கால்வாயை சிதைத்து விட்டிருக்கிறது. சில ரயில் நிலையங்கள் பக்கிங்ஹாம் கால்வாயை நிரப்பிக் கட்டப் பட்டிருப்பது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகத்தின் எந்த மூலையிலும் காணக் கிடைக்காத ஒன்று.
2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தமிழக மற்றும் ஆந்திர அரசுகளிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக ஒரு முயற்சியும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

பல கோடி செலவில் சாலைகள் அமைத்து நம்மிடம் சுங்கம் வசூலிக்கும் அரசு, இது போன்ற எளிய இயற்கையான போக்குவரத்து வழிகளை ஏன் மறந்து விட்டிருக்கிறது? இன்றைய தேதிக்கு இது போன்ற திட்டத்தை அமைக்க எத்தனை ஆயிரம் கோடிகள் தேவைப்படும் என்று யாராவது யோசித்தால் தேவலை (200% மந்திரி வரிகள் தனி).

ஒவ்வொரு முறை விமானத்தில் பறக்கும் போதும் பல இடங்களில் ஸ்கேல் வைத்துப் போட்டது போல நேராகத் தெரியும் இந்த பக்கிங்ஹாம் கால்வாய் நாம் எவ்வளவு அறிவில்லாமல், பொறுப்பில்லாமல் வாழ்கிறோம் என்பதை ஒரு அளவுகோல் போல நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது...

ஸ்டெரேலைட் ஆலையும் ஏமாற்று வேலையும்...


மருத்துவ குறிப்புகளைத் தாங்கி வந்த தமிழர் பழமொழிகள்...


தமிழர்களால் வழி வழியாகச் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும்  மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன.

இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள் அடங்கிய பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்…

1. இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு.

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

2. ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்.

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது.

வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

3. வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

4. மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்.

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

5. ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் துரோகி.

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாக்கும்.

6. அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்.

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.

7. இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்.

உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை என்னும் நோய் ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும். போக இச்சையை விரும்புபவர்கள் பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள். இதனால் நரம்புக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும்.  இதனைக் குறிக்க, போறவன் பொன்னைத் தின்பான் என்றார்கள்.

8. ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

9. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்.

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ கூறக்கேட்ட ஒருத்தி, கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரமும், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

10. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது வேப்ப மரத்தின் குச்சியையும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும்.

ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

11. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

12. விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.

13. ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ.

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர்,   கோப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.

இதுபோன்று ஏராளமான பழமொழிகள் மருத்துவக் குறிப்புகளை உணர்த்தும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளன.

உலகில் வேறெந்த இனத்தாரும் இப்படிச் சொன்னதில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான விடயம்...

தமிழகத்தில் முடியாதவைகள்...


காடுகளை அழித்து சாலை போடும் இந்த நேரத்தில்...


தன்னுடைய திருமண விழாவிற்கு வந்த அனைவருக்கும் பரிசாக மர கன்றுகள் வழங்கி வரும் புதிய இளைய தலைமுறை ....

இயற்கையின் அருமை பற்றிய விழிப்புணரச்சி இன்றைய தலைமுறையிடம்....

வாழ்த்துக்கள் .....

நம் தமிழ் மொழியின் அருமை...


என் பெயர் சாரைப் பாம்பு...


எனக்கு கொஞ்சமும் விஷம் கிடையாது. பார்க்கத்தான் பத்தடி நீளம் இருப்பேன்... பரபரப்பா ஓடுவேன். அது எல்லாம் உங்களை தொந்தரவு செய்ய இல்லை.

உங்களின் வயல்வெளிகளில் நெல் போன்ற தானியங்களை கொள்ளை அடிக்கும் எலிகளை பிடிக்கத்தான்.

அதனால் விவரம் தெரிந்தவர்கள் என்னை விவசாயிகளின் நண்பன் என்றும் சொல்வார்கள்.

அதே போல எனக்கும் நல்லபாம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...

அன்புள்ளங்களே அடுத்து வரும் மழைக்காலங்களில் என் சகோதரர்கள் யாராவது உங்கள் இருப்பிடங்களில் தவறி வந்து விட்டால் மதுரையின் வனத்துறையை அணுகுங்கள்.

உங்களுக்கு உதவி செய்யவே மதுரை மாவட்டம் முழுவதும் பலருக்கு எங்களை கையாளும் கலையை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்...

அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

என் நண்பர்கள் மதுரையின் வனத்துறை +(91)-452-2536279, 2535022, திருமங்கலம் பகுதியில் எந்த உதவி தேவைப் பட்டாலும் இரவீந்திரன் - 98431 36786, கிருஷ்ணமூர்த்தி- 8608512338, திருப்பரங்குன்றம், பசுமலை, நாகமலை,திருநகர், நிலையூர் பகுதிகளில் பாம்புகள் மீட்பு குளுவிஸ்வா 9940832133, சகா 9865024456 இவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவசியம் உங்களுக்கு உதவுவார்கள்.

நம்புங்கள் நாங்கள் நல்லவர்கள்...

இலுமினாட்டி யும் இளவரசி டயானா மரணமும்...


சாகர்மாலா திட்டமும், 8 வழி பசுமை சாலையும்...


பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை. காதினிலே பாயும் தேன் போன்ற செய்தி. சுற்றி வளைக்காமல் சொல்ல வேண்டுமானால் இது மக்களுக்கான சாலை அல்ல. கார்ப்ரேட் பெருநிறுவனங்களுக்கான சாலை.

இந்த சாலையை அமைக்க நாம் என்னென்ன இழக்கவேண்டி வரும்.

8 மலைகள்

சேலம் மாவட்டத்தில் (ஜருகுமலை, அருநூற்று மலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை)
தருமபுரி மாவட்டத்தில் (சித்தேரி மலை)
திருவண்ணாமலை மாவட்டத்தில் (கவுத்தி மலை, வேதி மலை)

20-ற்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள்

100-றிற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள், குட்டைகள்

10 ஆயிரம் கிணறுகள்

500 ஏக்கர் வனப்பகுதி

10,000 ஏக்கர் விளைநிலம்

சரி இதோடு முடிந்துவிடுமா? இத்தனையையும் அழித்து 8 வழி பசுமை? சாலை அமைத்தபிறகு பிரச்சனை முடிந்துவிடுமா? என்றால் அதற்கு பிறகுதான் விசயமே உள்ளது.

அதற்கு முன் நாம் புவியியல் (Geology) மற்றும் கனிம மற்றும் மூலப்பொருள் வளத்துறையை (Mines & Minerals) பற்றி அறிந்துகொள்ளவேண்டும். இந்த துறையானது இந்திய அரசுக்கு மிக வளம் கொழிக்கும் துறை. பூமியில் புதைந்துள்ள கனிம வளங்களை பற்றி ஆய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். சாதாரணமாக ஆழ்துளை கிணறு [மத்திய நிலத்தடி நீர் வாரியம் (Central Ground Water Board)] அமைப்பதில் தொடங்கி, செயற்கைக்கோள் வரை துணை கொண்டு வளங்களை கண்டறிவது இத்துறையின் பணி. ஆழ்துளை அமைக்கும்போது மண் மற்றும் பாறை துகள்களை சேகரிப்பார்கள். பின்பு அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி, எந்தெந்த பகுதிகளில் எந்த வகையான கனிம வளங்கள் இருக்கிறது என கண்டறிவார்கள். மற்றோரு முறையான செயற்கைகோள் துணைகொண்டு பூமியை படம் பிடித்து எங்கெங்கே கனிம வளங்கள் படிந்துள்ளது என்பதை அறிவார்கள். இதற்கெனவே பிரத்தேகமாக வானில் ஏவப்படும் செயற்கைகோள்கள் ஏராளம்.

சரி பத்தாயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்படவுள்ள சேலம்-சென்னை சாலை விரிவாக்கத்திற்கு பின் உள்ள நோக்கம் என்ன.

1) சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலை 4,05,000 சதுர மீட்டர் தளம் கொண்டது. இந்த மலைத்தொடரில் 6 மலை உச்சி இடங்களில், ஒவ்வொரு இடத்திலும் 22,000 சதுர மீட்டர் அளவிலிருந்து 1,55,000 சதுர மீட்டர் வரை ""பாக்சைட் (Bauxite - அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை)"" இருப்பை கொண்டுள்ளது. அந்த பாக்சைட் மண்டலத்தின் தடிமன் 5 மீட்டரிலிருந்து 15 மீட்டர் வரை இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. அதன் மொத்த கொள்ளளவு 5.3 மில்லியன் டன் (53 இலட்சம் டன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

2) திருவண்ணாமலைக்கு 12 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை மற்றும் தெற்கு போனக்காடு பகுதியில் ஹெமடேட்டுடன் கூடிய மேக்னடைட்-குவார்ட்சைட் (Magnetite-Quartzite with Hematite Band) [[Magnetite - இரும்புக் கனிமம், Quartzite - பளிங்குக்கல் பாறை, Hematite - சிவந்த அல்லது ஒருவாறு கறுத்த இரும்பு உயிரகைக் கனிப்பொருள்]] இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூன்று பகுதிகளாக, திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் 65" - 80" அமைந்துள்ள இப்படுகை, ஒரு புள்ளியில் சாய்வுதளத்தில் கூடுகிறது. மூன்று படுக்கைகளும், 2.5 கி.மீ. லிருந்து 4.5 கி.மீ. நீளத்திற்கு மாறுபடுகிறது.

இம்மூன்று மலைகளிலுள்ள கனிமங்களின் இருப்பின் அளவு

வேடியப்பன் மலை - 60 மில்லியன் டன் (6 கோடி இலட்சம் டன்)
கவுத்திமலை - 56 மில்லியன் டன் (5.6 கோடி இலட்சம் டன்)
உச்சிமலை - 20 மில்லியன் டன் (2 கோடி இலட்சம் டன்)

3) சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சமலை, கொடுமலையில் மேக்னடைட்-குவார்ட்சைட் (Magnetite-Quartzite) [[Magnetite - இரும்புக் கனிமம், Quartzite - பளிங்குக்கல் பாறை]] இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கஞ்சமலையில் மூன்று தடத்தில் உள்ளது.

கீழ் தளம் (Lower most Band)

18.3 மீட்டர் தடிமண்ணில் 17.7 கி.மீ. தூரத்திற்கு - 35.6 மில்லியன் டன்

மைய தளம் (Middle Band)

7.6 மீட்டர் தடிமண்ணில் 9.6 கி.மீ. தூரத்திற்கு - 8.1 மில்லியன் டன்

மேல் தளம் (Upper Band)

7.6 மீட்டர் தடிமண்ணில் 9.6 கி.மீ. தூரத்திற்கு - 8.1 மில்லியன் டன்

Subsidiary Band - 22.9 மீட்டர் தடிமண்ணில் 1.6 கி.மீ. தூரத்திற்கு - 7.1 மில்லியன் டன்

கஞ்சமலையில் 22.9 மீட்டர் ஆழத்தில் 55.52 மில்லியன்( 5.5 கோடி இலட்சம் டன்) இரும்பு மூலப்பொருள் இருப்பை கொண்டுள்ளது.

மேலும் 120 மீட்டல் ஆழத்தில், இரண்டு மேல் தளத்தில் தலா 100 மில்லியன் டன்னும், 75 மில்லியன் டன்னும் இருப்பை கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

4) நாமக்கல் மாவட்டத்தில் பிளாட்டினம்: புவியியல் துறை ஆய்வில் உறுதி

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே, 'அனார்த்தசைட் கேப்ரோ, எக்லோகைட்' போன்ற பிளம்பி பாறைகள் உள்ளன. இவை, திருச்செங்கோடு அருகே, பட்லூரில் இருந்து நாமக்கல் அருகில் உள்ள சூரியாப்பட்டி வரை, 32 கி.மீ., தூரத்திற்கு அமைந்துள்ளது.சித்தம்பூண்டியில், நல்லமுறையில் பாறைகள் தெரிவதால், இதை, 'சித்தம்பூண்டி அனார்த்தசைட் காம்ளெக்ஸ்' என, புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அனார்த்தசைட் பாறையில், 'குரோமைட்' மற்றும் 'கொரண்டம்' போன்ற கனிமங்கள் உள்ளன.இரண்டாம் உலக போரின்போது, இங்கிருந்து, கொரண்டம் தாதுவை வெட்டி எடுத்து, அதில் இருந்து அலுமினியம் தயாரித்து, துப்பாக்கிக்கு வேண்டிய அலுமினிய ரவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.தாது எடுக்க தோண்டியப் பள்ளங்கள், இன்னும் சித்தம்பூண்டியில் உள்ளது. பாறையின் வயது, 2,500 மில்லியன் ஆண்டு. அதில், பிளாட்டினம், தோரியம், யுரேனியம், டைட்டேனியம் போன்ற அரிதான கனிமங்கள், மிகக்குறைந்த அளவில் இருப்பதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:ப.வேலூர் அடுத்த சித்தம்பூண்டியில், மத்திய அரசின் புவியியல் ஆய்வு துறை மூலம் பிளாட்டினம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, 'டிரில்லிங்' சர்வே செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, கருங்கல்பட்டியில் துவங்கி வாணக்காரன் பாளையம், சமத்துவபுரம், பாமா கவுண்டம்பாளையம், சித்தம்பூண்டி, குன்னமலை, கோலாரம், சோழசிராமணி வரை, 25 கி.மீ., தூரத்துக்கு மேற்கொள்ளப்பட்டது.இங்கு, அதிகபட்சமாக, 300 அடி ஆழம் வரை, பூமியில் டிரில்லிங் மூலம் துளைபோட்டு பாறைகள் ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது, இரண்டாம் கட்டமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வுகள், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும். ஆய்வு முடிவில், இத்திட்டத்தை தனியார் வசம் ஒப்படைத்து, பிளாட்டினம் வெட்டி எடுக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால், அரசிடம் அவ்வளவு பணம் இல்லை

http://www.dinamalar.com/news_detail.asp?id=1031975

Platinum (Sithampoondi - Namakkal)

Namakkal village may be rich in platinum

https://www.deccanchronicle.com/…/namakkal-village-may-be-r…

Evidence of huge deposits of platinum in State

http://www.thehindu.com/…/Evidence-of-h…/article15503846.ece

இந்த தரவுகள் 8 வழி சென்னை-சேலம் பசுமை சாலை தொடர்புடைய மாவட்டங்கள்

பிற மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள கனிம வளங்களை பார்ப்போம்

இந்தியாவின் வளங்களின் தேவையை (Vermiculite, Molybdenum, Dunite, Rutile, Garnet and Ilemenite) பூர்த்தி செய்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. 79% Vermiculite, 65% Dunite, 52% Molybdenum, 48% Garnet, 30% Titanium mineral, 25% each Sillimanite & Magnesite, 16% Fire Clay resources விழுக்காடு தமிழ்நாடு நிறைவு செய்கிறது.

Bauxite - Dindigul, Namakkal, Nilgris & Salem Dist.

Dunite/Pyroxenite - Salem Dist.

Felspar - Coimbatore, Dindigul, Erode, Kanchipuram, Karur, Namakkal, Salem and Trichy Dist.

Fireclay - Cuddalore, Kanchipuram, Perambalur, Pudukottai, Sivagangai, Thiruvallur, Trichy, Vellore and Vilupuram Dist.

Garnet - Ramnad, Trichy, Tiruvarur, Kanyakumari, Thanjavur and Tirunelveli Dist.

Granite - Dharmapuri, Erode, Kanchi, Madurai, Salem, Thiruvannamalai, Trichy, Tirunelveli, Vellore and Vilupuram Dist.

Graphite - Madurai, Ramnad, Sivagangai and Vellore Dist.

Gypsum - Kovai, Perambalur, Ramnad, Trichy, Nellai, Thoothukudi, Virudhunagar Dist.

Lignite - Cuddalore, Ariyalur, Thanjavur, Thiruvarur, Nagai, Ramnad and Sivagangai Dist.

Limestone - Kovai, Cuddalore, Dindigul, Kanchi, Karur, Madurai, Nagai, Namakkal, Perambalur, Ramnad, Salem, Thiruvallur, Trichy, Nellai, Vellore, Vilupuram and Virudhunagar Dist.

Magnesite - Kovai, Dharmapuri, Karur, Namakkal, Nilgiri, Salem, Trichy, Nellai and Vellore Dist.

Quartz/Silica - Chennai, Kovai, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kanchi, Karur, Madurai, Namakkal, Perambalur, Salem, Thiruvallur, Thiruvarur, Nagai, Trichy, Villupuram, Virudhunagar and Vellore Dist.

Tale/Steatite/Soapstone - Kovai, Salem, Trichy and Vellore Dist.

Titanium Minerals - Kanyakumari, Nagapattinam, Ramnad, Thiruvallur, Nellai and Thoothukudi Dist.

Vermiculite - Dharmapuri, Trichy and Vellore Dist.

Apatite - Dharmapuri and Vellore Dist.

Barytes - Erode, Madurai, Perambalur, Nellai and Vellore Dist.

Bentonite - Chengalpat Dist.

Calcite - Salem Dist.

China Clay - Cuddalore, Dharmapuri, Kanchi, Nilgris, Sivagangai, Thiruvallur, Thirvannamalai, Trichy and Villupuram Dist.

Chromite - Kovai and Salem Dist.

Copper, Lead-Zinc, Silver - Vilupuram Dist.

Corundum, Gold - Dharmapuri Dist.

Dolomite - Salem and Nellai Dist.

Emerald - Kovai Dist.

Magnetite (Iron Ore) - Dharmapuri, Erode, Nilgiris, Salem, Thiruvannamalai, Trichy and Vilupuram Dist.

Kyanite - Kanyakumari and Nellai Dist.

Molybdenum - Dharmapuri, Dindigul and Vellore Dist.

Pyrite - Vellore Dist.

Sillimanite - Kanyakumari, Karur and Nellai Dist.

Tungsten - Madurai and Dindigul Dist.

Wollastonite - Dharmapuri and Nellai Dist.

Petroleum & Natural Gas - Cauvery Delta & Mannar Basin

Platinum - Namakkal & Surrounding Dist.

Mineral Resources of Tamil Nadu

http://www.tnenvis.nic.in/…/MineralResourcesofTamilNadu_120…

Mineral Map of Tamil Nadu

http://www.tnmine.tn.nic.in/Mineral%20Map%20of%20Tamilnadu.…

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கனிம வளங்களை, மூலப்பொருட்களை புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆய்ந்து பட்டியலிட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் பெருநிறுவனங்கள், இவ்வளங்களை கொள்ளையடிக்கும். அதற்கு அரசும், அதிகார வர்க்கமும் துணை நிற்கும்.

மலைகள் அழிக்கப்படும்போது மரங்கள் அழிக்கப்படும்.

மரங்கள் அழிக்கப்படும்போது மழை வளம் அழிக்கப்படும்.

கடைசி படம்

வெயில் காலங்களில் வெப்பசலனத்தால் பொழியும் மழையானது கிழக்கு மலைத்தொடராக உள்ள ஜவ்வாது, கல்வராயன் மழைகளினாலேயே மேகக்கூட்டங்கள் உருவாகிறது. தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சி, கடலூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர்,, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் இதனால் மழை பெறுகிறது. இந்த மலைகளை அழித்தால் ஏற்படப்போகும் சூழலியல் சீர்கேடு நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று.

இத்துணை இயற்கை வளங்கள் சிதைக்கப்படுவதற்கு அரசும், அதிகாரவர்க்கமும், பெருநிறுவனங்களும் மட்டும் காரணமல்ல. பேராசை பிடித்த, சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கும் மக்களாகிய நாமும் ஒரு காரணம்.

நாம் வாழ்வதற்கு ஆதாரமே இந்த இயற்கைதான். வளர்ச்சி என்ற பெயரில், இந்த இயற்கையை சிதைத்துவிட்டு, அழித்துவிட்டு தண்ணீரும், உணவும் வேற்று கிரகத்திலிருந்தா கொண்டு வரப்போகிறோம்? சிந்தியுகள்...

படத்தின் பின்னிருப்பது 1990களில் sonograph கருவிமூலம் பூம்காரின் கடலில் 5 கடல்மைல் அளவில் கண்டு பிடிக்கப்பட்ட படிமங்கள் ஆகும்...


திராவிடலு பகுதி - 5...


ஆம், வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இந்து-இசுலாமிய பிரித்தாளும் கொள்கை வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் நன்றாகவே வேலை செய்தது.

இன்றும் அது மக்களின் மனதில் நன்கு வேறூன்றியுள்ளது.

இதை நீதியரசர் மார்க்கன்டேய கட்ச்சு கூட சமீபத்தில் இடித்துரைத்துள்ளார்.

ஆனால் தெற்கில் அது எடுபடவில்லை.
ஆங்கிலேயர் இதற்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனர்.

மிண்டோ-மார்லி மற்றும் மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்திற்குப் பிறகு அரசுவேலை பெறும் இந்தியர்களை உற்றுநோக்கத் தொடங்கினர்.

மற்ற எந்தப்பகுதியிலும் இல்லாத அளவு பிராமணர் அதுவும் தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமுள்ளதையும், அதை வேற்றுமொழியினர் பொறாமையுடன் பார்ப்பதையும், மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் அப்பதவிகளை அபகரிக்கத்துடிப்பதையும் அவதானித்தனர்.

போதாதா?  தயாரானது திட்டம் ஒருபக்கம் ஆரியர் வரலாறையும், அவர்கள் திராவிடர் (Dravid) என்று அழைத்தாக தமிழர் வரலாறையும் தேவைக்கு தகுந்தபடி திருத்தி ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளியிட்டு 'திராவிடர்' என்கிற சொற்பதத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

இதை அவர்கள் 1800களிலிருந்தே செய்து வந்திருந்தனர் (அங்கேதான் நிற்கிறான் வெள்ளைக்காரன்).

ஆனால் பிராமண ஆதிக்கம் தலைதூக்கிய பின் திராவிடப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி அவர்கள் சூழ்ச்சி வேலைசெய்ய ஆரம்பித்தது.

எப்படி தெற்கைத் தவிர மற்ற இடங்களில் இப்பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தவே 'இந்து' என்கிற எப்போதும் இல்லாத வார்த்தையை உருவாக்கினார்களோ அது போலத்தான்.

ஆம்; 'இந்து' என்கிற வார்த்தை எந்த வேதத்திலும் கிடையாது.இந்து என்கிற வார்த்தையே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

கேட்டால் இசுலாமிய நாடுகளில் இந்தியத் துணைக்கண்டத்தை அல்-ஹிந்த் (எண்களின் நாடு) என்று அழைக்கின்றனர் என்பர் அல்லது 'சிந்து' ஆற்றின் பெயரிலிருந்து வந்தது என்பர் அல்லது 'பாகியான்' (Fagian) குறிப்புகளில் 'இந்து சமுத்திரம்' எனும் சொல் கையாளப்பட்டது என்பர்.

எது எப்படியோ. ஆனால்,  இதுவரை உலகில் அமைந்த ஆட்சிகளை எல்லாம்விட மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட ஆங்கிலேயர் அதைக் கட்டமைக்க கடைப்பிடித்த தாரகமந்திரம் 'பிரித்தாளுதல்'..

எந்த நாட்டில் காலடிவைத்தாலும் அங்குள்ள மக்களை இனத்தால், மதத்தால், நிறத்தால், சாதியால் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரிவினையைப் பரப்பி..

அவர்களை அவர்களாலேயே அழித்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் கைதேர்ந்தவர்கள்.

அவர்கள் செய்த வினையின் விளைவுகள் பல நாடுகளில் இன்றும் மோதல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றன.

'இந்து' பிறந்த கதைக்கும் 'திராவிடம்' பிறந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் மக்களை பிரிக்க, ஒன்று ஏற்கனவே உள்ள பிரச்சனையை பெரிதாக்குவார்கள் அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.

'இந்து-இசுலாம்' முதல் வகை.
'திராவிடம்'  இரண்டாம் வகை.

ஏட்டளவில் 'திராவிடம்' எப்படி உருவாக்கப்பட்டது?

ஏட்டளவில் உருவாக்கப்பட்ட 'திராவிடம்' நடைமுறையில்  எப்படிப் பிறந்தது?

தமிழர் தமது வரலாற்றில் கூறியும் கேட்டுமிராத திராவிடம் எப்படி தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது?

- தொடரும்...

முடிந்தவரை Selfie எனும் மாய உலகில் இருந்து வெளியே வர முயற்சி செய்யுங்கள்....


அது உங்களை நீங்களே அறிமுகப்படுத்தி கொள்ளும் ஆபத்தான வழிகளில் ஒன்று...

இயற்கையின் சமநிலையை பார்த்து இருக்கிறீர்களா..?


தயாராக இருங்கள்..

ஒவ்வொரு முறையும் நம்மைச்சுற்றி நம்முடைய இயற்கையை யாரோ சிலர் தங்களின் சுயலாபத்திற்காக அழிக்கும் போது..

நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் அல்லவா..

இயற்கை தனக்கென சமநிலையை தேடிச்சென்றால்..

நமக்கான அழிவு ஆரம்பம் ஆகிறது என்று அர்த்தம்...

God என்பதின் உண்மையான அர்த்தம்...


நாசா மர்மங்கள்- - நிலவின் ரகசியம்...


1969,ஜூலை 20ஆம் நாள்
அமெரிக்காவின் அப்போல்லோ 11 என்ற
விண்கலம் நீல் ஆம்ஸ்ட்ராங்(Nei l
Amstrong),பஸ் ஆல்ட்ரின்(Buzz
aldrin) மற்றும் மைக்கல் கொலின்ஸ்
(Michea l Collins)என்ற மூன்று
மனிதர்களை தாங்கி நிலவில்
இறங்கியது.

பின் நீள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கி அமெரிக்க தேசிய கோடியை நிலவில் நட்டு விட்டு வெற்றிகரமாக பூமியை
வந்தடைந்தனர்.

இது பள்ளியிலேயே படித்த விஷயம்
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

இந்த வரலாறே தவறு என்று சொன்னால் நமபுவீர்களா. நம்புவது கொஞ்சம் கடினம்தான்.

1969 ஜூலை 20 வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெற போவதால் அமெரிக்காவே பெரும் எதிபார்ப்போடு இருந்தது, நாசாவிலிருந்து ரேடியோ வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் நிலவில் இறங்கும் நிகழ்வு நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

எலோரும் ஆர்வமாக கவனித்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒலிபரப்பு இரண்டு நிமிடம் தடைப்பட்டது.

பின்னர் மீண்டும் ஒலிபரப்பு கிடைக்க நிலவில் விண்கலம் இறங்கியதாக அறிவிக்கப்பட எல்லோரும் உற்சாகமடைந்தனர்.

ஆனால் ஒலிபரப்பு தடைபட காரணம்
இரண்டு தொலைக்காட்சி கேமராக்கள்
சூடு அதிகமாகி ஒளிபரப்பை நிறுத்தியதாக நாசா தெரிவித்தது.

திமோதி குட் 1988இல் எழுதிய எபவ்டாப் சீக்ரெட் (ABOVE TOP SECRET) எனும் நூலில் உண்மையில் நாசாவில் நடந்தது என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார்.

தடைபட்ட அந்த இரண்டு நிமிடங்கள்
அப்போல்லோ 11 வின்கலதுக்கும்
நாசாவுக்கும் நடந்த ரேடியோ
உரையாடல் தமிழாக்கத்தில்...

[விண்வெளி கட்டுபாட்டு மையம்:
விண்வெளி கட்டுப்பாட்டு
மையத்திலிருந்து அழைக்கிறோம்
அப்போல்லோ 11 அங்கு என்ன
நடக்கிறது.....

அப்போல்லோ 11: இவை மிகவும்
பெரிதாக உள்ளன. ஓ ... ஆச்சரியம்
.... கடவுளே. சார் .... இதை நீங்கள் நம்ப
மாட்டீர்கள் இங்கே நமக்கு அருகில்
வேறு சில பெரிய விண்கலங்கள்
உள்ளன. அவை எங்களை
கண்காணிப்பதை போல் உள்ளது. ]

அந்த சமயத்தில் அவர்களது
விண்கலத்தை இரண்டு பெரும் UFO-
க்கள் பின் தொடர்ந்ததாக சில நாசா
விஞ்ஞானிகள் தெரிவித்ததாக
செய்திகள் உலா வந்தன.

ஆம்ஸ்ட்ராங்கும் , ஆல்ட்ரினும் நிலவில் நடந்த போது, தங்களுக்கு மேலே சில ஒளி வட்டங்களைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமமல்லாமல் அவற்றைப்
படங்களும் எடுத்திருக்கிறார்கள்.

நிலவில் இருந்து கொண்டு பூமியுடன்
அவர்கள் பேசியபோது, தங்களை யாரோ
கண்காணிக்கிறார்கள் என்று
சொல்லியும் இருக்கிறார்கள்.

ஏலியன்களின் விண்கலங்களையும் ,
அவர்கள் நிலவில் அமைத்திருந்த
அமைப்புகளையும் கூட, ஆம்ஸ்ட்ராங்
படங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் ஒரு வதந்தி என்னும்
நிலையில் உலகம் நம்பாமல் இருந்த போது, துணிச்சலாக ஆல்ட்ரின்
இதைத் தொலைக்காட்சிகளுக்கும்,
பத்திரிககைகளுக் கும்
வெளிப்படையாகச் சொன்னார்.

ஆல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் பலரை
அதிர வைத்தது..

உலகின் பாதுகாப்பான இடமாகக்
கருதப்படும் நாஸாவில் அதற்கு
அப்புறம் ஒரு சம்பவம் நடந்தது.

அப்போலோ 11இல் சென்றவர்கள்,
நாஸாவுடன் உரையாடிய ஒலி,
ஒளிநாடா திடீரெனக காணாமல்
போனது.

குறிப்பிட்ட நிமிடங்கள் உள்ள
அனைத்துப் பதிவுகளும்
அவற்றிலிருந்து அழிக்கப்பட்டன.

இவை ஏன் நடந்தது என்பது இதுவரை
தெரியாத மர்மமாகவே இருக்கிறது.

நிலவில் கால் பதித்த ஆறாவது நபரும்,
அப்போலோ 14விண்கலத்தின் மூலம்
சந்திரனுக்குச் சென்றவருமான 'எட்கார்
மிட்ஜெல்' (Dr.Edgar Mitchell) என்பவர்..  ஏலியன் இருப்பதாகச் சொல்வதை முழுமையாக ஆதரிக்கிறார்.

தங்களுக்கு நடந்த சம்பவங்களையும்,
நாஸாவில் தான் பணிபுரிந்த போது
அறிந்து கொண்டவைகளையும் வைத்து, பூமிக்கு ஏலியன்கள் பல தடவை வந்து போனது நாஸாவுக்குத் தெரியும் என்றும்.

அதை 60வருட காலங்களாக நாஸா மறைத்து வைத்திருக்கிறது என்றும் பேட்டியில் அவர் சொல்லியுள்ளார்.

இவர் கூறியுள்ள தகவல்கள் ஏலியன்
விசயத்தில் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

ஏலியன்கள் மனிதர்களின் உருவத்தைப்
போலவே இருந்தாலும், சிறிய உருவமாக இருந்ததாகவும், அவற்றின் கண்கள் பெரிதாக இருந்ததாகவும் அவர்
சொல்லியிருக்கிறார்.

மர்மங்கள் தொடரும்....

இலுமினாட்டி அமெரிக்காவே உலக பயங்கிரவாதி நாடு...


பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்துங்கள்...


அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரென்று கேட்டால் உடனேயே கொலம்பசு(ஸ்) என்று பெயரைச் பேரைச் சொல்லிடுவீர்களே..

அதுவே, மிளகாயை அறிமுகப்படுத்தினது யார்? என்று கேட்டால் பெரிதாக யோசியாதீர்கள். அதுவும் கொலம்பசு தான்..

செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பசு என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி..

குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டு விட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம்.

1,493-ம் ஆண்டில் கொலம்பசு மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்சு(ஸ்) சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டு பிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர்.

அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விசயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர்.

போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது.

இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது.

இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை.

மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமே தான்.

காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன.

மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை தமிழ் பெண்களையேச் சேரும்...

இலுமினாட்டி - இளவரசி எலிசபெத்தின் சாத்தான் வழிபாடு...


இதைப்பற்றி அடுத்த வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்...


ஆனால் முடிந்தளவு உங்கள் தகவல்களை தேவையற்ற இடங்களில் கொடுப்பதை தவிர்த்தாலே போதுமானது...

முக்கியமாக பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு அதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..

ஏனெனில் இங்கு பெண்களை மையமாக வைத்துதான் அனைத்து இணையதள குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன..

எதையும் வேடிக்கையாக பார்ப்பதுதான் நாம் செய்கின்ற ஆகச்சிறந்த தவறு...

தமிழா விழித்துக்கொள்...


முருகப் பெருமானை அகண்டபாரத தேசத்தில் பழங்காலத்தில் வணங்கினர்...


காந்தாரம் என்பது இன்றைய ஆப்கானிஸ்தான் நாடாகும், மஹாபாரத காந்தாரியின் பிறப்பிடமாக காந்தாரம் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியே..

ஒரு கையில் வேலும் மறு கையில் சேவலும் கொண்ட இந்த முருகனின் சிலை ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டதாகும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


பனையை காக்க களம் இறங்கிய அணவயல் இளைஞர்கள் ஏரிக்கரையில் மற்றும் குளம் பனை விதைகள் விதைப்பு...


பேராவூரணி அடுத்த அணவயல் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கிராமத்தினர் தரிசுநிலத்தை பனை விதைகளை விதைக்கும்  பணியில் ஈடுபட்டனர்.  இக்கால சந்ததியினர் பனை மரங்களின் பலனை அறிய முடியாத நிலை உள்ளது. அரிய பறவை இனங்களுக்கு வாழ்வாதாரமாகவும் பனை மரங்கள் உள்ளன.

தூக்கணாங்குருவி உள்ளிட்ட உயரமான இடங்களில் வசிக்கும் சில பறவை இனங்கள் பனை மரத்தில் கூடு கட்டி வசிப்பவை. பனை மரங்கள் அழியும்போது, இந்தப் பறவை இனங்களும் அழிவுக்கு தள்ளப்படும். ஒரு பறவை அழிந்தால் 10 மரங்களின் வளர்ச்சி பாதிக்கும் என்று கூறுகிறார்கள்.

எனவே, பனை மரம் வளர்ப்பில் வருங்கால சந்ததிகளுக்கு உள்ள பொறுப்பை உணர்த்தும் வகையில் பள்ளிக்கு வரும்போது கிடைக்கும் பனை மர விதைகளை மாணவ, மாணவிகள் கொண்டு வர கேட்டிருந்தோம். இதன்படி சில மாதங்களாக பனை மர விதைகளைச் சேகரித்தோம். எங்கள் உள்ள ஏரி மற்றும்  குளம் பகுதியில் பனை விதைகளை விதைக்கப்பட்டது...

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம்...


முடிவெடுங்கள்...


அணு சக்தியைவிட ஆற்றல் வாய்ந்தது, முடிவெடுக்கும் திறமை! சரியான நேரத்தில், மிகச் சரியாக எடுக்கப்படும் முடிவுகள்தான் வெற்றியாளர்களின் இரகசியம் எனச் சொல்லலாம். ஒரு மாணவன் தான் எந்தத் துறையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறானோ அந்தத் துறையில் கால் பதித்தால் அவனால் முத்திரை பதிக்க முடியும்.

அந்நிய தேசத்தில் பிறந்தாலும், சிறு வயதில் தான் எடுத்த முடிவு ஏழைகளுக்கு உதவுவது, இறைவனுக்கு உதவி செய்வது என்ற இரண்டு தீர்க்கமான முடிவுகளை சற்றும் கூட மாற்றிக் கொள்ளாமல் பாதை வகுத்துக் கொண்டதால்தான் இந்தியராகவே வாழ்ந்து புனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அன்னை தெரசா.

கடவுள் என்கின்ற கலாச்சாரத்தை மனிதம், மனித நேயம் என்ற வெளி நாட்டினரின் கருத்தை மாற்றி சாதனை தேசம் இந்தியா என்று பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்த ஒரு நரேந்திரன்தான் சுவாமி விவேகானந்தர் என்ற தீர்க்க தரிசனத்தை பெற முடிந்தது.

மிகக் கடுமையான வறுமை நிலையிலும்கூட, பொதுவுடைமைக் கொள்கையிலிருந்து விடுபடுவதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவுதான் ‘மூலதனம்’ என்கின்ற அற்புதத்தை படைக்க முடிந்தது. தன்னுடைய உழைப்புதான் மூலதனம் என்று தெரிந்ததாலோ என்னவோ காரல் மார்க்ஸ் இன்னும் கூட நற்செய்திகளை நமக்குத் தந்து கொண்டிருக்கிறார். “உழைப்புதான், எல்லாச் செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலம்” – காரல் மார்க்ஸின் இந்த வரிகள் பல சிந்தனைகளின் முடிவு வாக்கியம் என்றும் கூடச் சொல்லலாம்.

உலகிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டவர்கள், கற்றுக் கொள்கின்றவர்கள் சராசரி மனிதர்கள். எந்த மனிதரிடமிருந்து உலகம் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றதோ அவர் சாதனை மனிதர். நம்முடைய எதிர்பார்ப்புகள் வேண்டுமானால் நமக்கு ஏமாற்றங்களைத் தரலாம். ஆனால் காத்திருப்புகள் எந்தக் காலத்திலும் கவலை தருவதில்லை. “காத்திருக்கப் போகிறேன்” என்ற முடிவும்கூட சரி என்று தான் சொல்ல வேண்டும். சரியான சமயத்திற்காகக் காத்திருந்த நாராயணமூர்த்திதான் இன்று கணினித் துறையில் புரட்சி செய்த இன்போஸிஸ் நாராயணமூர்த்தி.

நம்மிடம் இருக்கின்ற சில வேண்டாதவற்றை விட்டுவிட்டால் போதும், வெற்றி நம்மைத் தேடி வரும். நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்கிற இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், தான் என்கின்ற ஆணவம் சேர்ந்த சுப்பீரியாரிடி காம்ப்ளக்ஸ் விட்டு விட்டாலே போதும். அசையா சொத்தாக ஒரு மல்ட்டி டிரேடிங் காம்ப்ளக்ஸ் கட்டிவிடலாம். பலருக்கு பிரச்னையே “நம்ம பாவம்” என்கின்ற ஒரு எண்ணம். நம் மீது நாம் கொள்கின்ற சுயபச்சாதாபம் விட்டொழிக்கின்ற நாளே நமக்குத் திருநாளாகும்.

தான் (சேர்ந்த) சார்ந்த தொழிலில் திறமையுடையவனாக இருப்பது என்பது வெற்றிக்கான அடிப்படைத் தகுதி ஆகும். எந்தச் செயலில் நம் திறமை வெளிப்படுகிறதோ அந்தச் செயல்தான் நமக்குத் தொழிலாக மாறிவிடுகிறது.

ஒரு கோட்டைக்குத் தலைவனாக இருப்பதைக் காட்டிலும் சிறந்தது, செயல், தொழில் இரண்டிலும் திறமையாக இருப்பது. நம் உழைப்பும் நேர்மையும் வெற்றியைத் தருகின்றது என்று சொன்னால், அந்த வெற்றி நிலைத்திருப்பது நம்முடைய தீர்க்கமான முடிவுகள் எனலாம்.

21வது குழந்தையாக பிறந்தவர் வில்மா குடால்ப். 4 வயதில் போலியோ பாதிப்பு. கட்டை வைத்து நடந்த குழந்தை எடுத்த முடிவுதான் ஓட்டப் பந்தய வீராங்கனையாக மாறுவது என்று தாங்கு கட்டையை தூர எறிந்துவிட்டு ஓடப் பழகினாள். கால்கள் வேகங்கொண்ட பறவையாக மாறியது. தொடர்ந்து ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றாள். வென்றது அவளின் மனம்தான். சரியாக செல்கின்ற வாழ்வு, வெல்கின்ற வாழ்வாக மாற வேண்டும் என்றால், மிகுந்த உழைப்பு, மிகுந்த நேர்மை, சரியாக முடிவெடுக்கும் திறன் இந்த மூன்றும் 33.5% x 3 என்று இருக்குமேயானால், வெற்றியின் சதம் 100.5% ஆக இருக்கும்.

வெற்றி என்பது நமது வாடிக்கைகளாக இருந்தால் முயற்சிகளும் பயிற்சிகளும் நமக்கு வேடிக்கைகளாகவும், பழக்கங்களாகவும் மாறிவிடும்.

100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள்...

இது தான் பாஜக பினாமி தமிழக அதிமுக அரசு...


நாம் உண்ணும் உணவு சரியானது தானா - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி...


அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம்..

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்க வேண்டும்.

விளையாடும் போதும் ஓடும் போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாத போதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே.

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டு பண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டு பண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை.

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்...