12/10/2017

கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?


1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26 தமிழர்கள் இருந்தனர்..

கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்றுதிரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்பட வேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.

கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.

வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.

கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த  எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கைவிட்டனர், கலந்து கொண்டர்..

எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.

ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.

கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டு சென்றது.

இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.

இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.

தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.

அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.

பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.

திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.

தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.

ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப் போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.

அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.

(வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை).

அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.

இங்கே தமிழகத்தில் என்ன நிலை?

அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,

வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்...

மதுரையில் வரும் 22ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி...


பாஜக கலாட்டா...


ஒரு கிருத்துவ வெறியர் வந்து நீங்கள் மக்களை பலிகொடுத்தலுக்கு மீண்டும் கொண்டு போவது தவறு என்றார்...



நான் : பாவிகளை இரட்சிக்க இயேசு தன்னை தானே பலியாக கொடுத்தார் என பைபிளிலும் வீதி வீதியாக பணம்கொடுத்து பிரச்சாரம் செய்கிறீர்களே நீங்கள் இந்த கேள்வியை கேட்கலாமா?

அவர் : எனக்கு புரியவில்லை.

நான் : நீங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் என ஏன் சொல்லுகிறீர்கள் ?

இயேசு தன்னை தானே பலி Self sacrifice கொடுத்தார் என்பது ஒரு பலிகொடுக்கும் நிகழ்வு தானே.?

ஏன் எல்லாம் வல்ல இறைவன் ஒரு சுத்தமான சிறுவயதில் இருந்து தாடியை கூட எடுக்காத (நசரேயன்) (ஏன் எனில் அப்போது கூட சவரக்கத்திகூட மேலப்பட்டு உடல் ஒச்சமாக கூடாது என்பதற்காக).

ஒரு இளைஞனை பலியாக கேட்க வேண்டும்... அவருடைய இரத்ததை கீழே எதற்காக சிந்தவிட்டே ஆகவேண்டும் என பைபிள் சொல்கிறது.

ஏன் நரபலி கொடுத்த நீங்க சொல்லுரீங்களா ஆடு சேவல் பலி கொடுக்ககூடாது என்று.

அவர் : நான் பாதிரியார்களிடம் விளக்கம் கேட்டு சொல்கிறேன்...

உலகப் பந்தில் சோழப் பேரரசு...


சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கடலையும் சேர்த்தால் சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கும்..

உலகில் தோன்றிய எந்த ஒரு பேரரசுக்கும் சளைத்ததன்று...

சர்க்கரை நோயும் வியாபாரமும்...


சோழப் பேரரசு...


சோழப் பேரரசு இவ்வளவு பெரியதாக இருந்திருக்கலாம்..

இராசேந்திர சோழனுக்குப் பிறகு முதலில் இலங்கை, பிறகு இந்தோனேசியா, பிறகு மலேசியாவின் வடக்குப் பகுதியும் பர்மாவும், அதன் பிறகு வடயிந்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் என சோழர்கள் கையை விட்டுப் போய்விட்டன..

சோழ அரசு தஞ்சாவூரை மட்டும் கொண்டதாக சுருங்கி பிறகு மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் முடிவுற்றது...

மரியாதை புத்தகத்தின் வாக்கியங்களில் மட்டுமே...


கடல் கடந்த பேரரசு...


முதன்முதலாக கடல்கடந்த பேரரசை நிறுவியவர்கள் ஸ்பானியர்கள் (spanish empire) என்கிறது மேற்கத்திய வரலாறு...

ஆனால், முதன் முதலாகக் கடல் கடந்து தொலைதூரம் வரை தமது ஆதிக்கத்தை நிறுவியவர்கள் சோழர்களே ஆவர்..

இராசேந்திர சோழன் ஆட்சிக்குள் பல மன்னர்கள் இருந்தார்கள்..

ஆனால் அவன் வெளியிட்ட தங்க நாணயத்தில் மூவேந்தர் சின்னங்களான மீன், வில், புலி ஆகிய மூன்று மட்டுமே உள்ளன..

தமிழ் நாட்டாண்மை (தமிழ்த் தேசியம்) என்றைக்கோ தோன்றிவிட்டது..

நமக்குத்தான் அது புரிவதில்லை...

டாஸ்மாக் மதுபானங்கள் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு...


பீருக்கு 10 ரூபாயும், குவாட்டருக்கு 12 ரூபாயும் விலை உயர்த்தப்படுகிறது...

புனர் ஜென்மம் என்பது உண்மையா?


இதோ உங்களிடம் வெளிப்படும் அறிகுறிகள்..

ஒருபக்கம் புனர் ஜென்மம் என்பது உண்மை, பொய் என பல விவாதங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஆனால், நமது நிஜ வாழ்க்கையில், முதன் முறையாக சிலரை பார்க்கும் போது, எங்கோ, எப்போதோ, நீண்ட நாட்கள் பழகியது போன்ற உணர்வு வரும். இது போன்ற உணர்வு தோன்றுவதன் காரணம் என்ன?

அப்போது நிஜமாகவே புனர் ஜென்மம் என்பது இருக்கிறதா?

நாம் இறந்து பிறகு உடல் தானே அழுகி போகிறது உயிரும், எண்ணங்களும் என்ன ஆகிறது?

என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில்கள் ஏதும் இல்லை.

ஒரு நபரிடம் பேசும் போது, உங்களிடம் தோன்றும் இந்த நான்கு அறிகுறிகளை வைத்து அவர் புனர் ஜென்மத்தில் உங்களோடு பழகிய நபர் என்பதை அறியலாம் என கருதப்படுகிறது.

தொலையுணர்வு! முதன்முறை கண்டாலும் கூட, உங்கள் இருவரின் மனதின் எண்ணங்கள் படிக்கும் திறன் பெற்றிருப்பீர்கள். அவர்கள் கூற வருவதை, நினைப்பதை நீங்கள் கூறுவீர்கள். உங்கள் இருவரின் கணிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.

ஃப்ளாஷ்பேக்! ஒருவரை முதல் முறை காணும் போது, என்றோ எப்போதோ பழகியது போன்று ஃப்ளாஷ்பேக் நினைவுகள் வருகிறது எனில், அவர் உங்களோடு புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம்.

மேலும், இது போன்ற மாயையான ஃப்ளாஷ்பேக் நிகழ்வுகள் தோன்றும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும், உங்களது உணர்ச்சிப்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

கண்கள்! அவர்களது கண்களை பார்த்தவுடன் இருவர் மத்தியிலும் ஒரே மாதிரியான எண்ணம் தோன்றுவது, ஒரே மாதிரி பேசுவது, அனைத்தையும் தாண்டி எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் பழகுவது, அவர் உங்களுடன் புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

உணர்ச்சி, அவரை பார்த்த முதல் நொடியே உங்களுக்குள் ஓர் உணர்ச்சி பிழம்பு வெளிப்படும். அந்த உணர்ச்சி மிகவும் இறுக்கமானதாக, உறுதியானதாக இருக்கும். அது உங்கள் இருவரியில் மன ரீதியாக பிரியவிடாமல் தடுக்கும்.

அந்த வேளையில் உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால், புனர் ஜென்மத்தில் நீங்கள் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், நேர்மறை எண்ணங்கள் தோன்றினால் நண்பர், குடும்ப நபர், துணை போன்றும் எடுத்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இதுப்போன்று, ஒருவரை முதல் முறை காணும் போது ஏற்படும் உறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்...

அரை வேக்காடு (Half Boil) முட்டையில் இம்புட்டு ரகசியம் இருக்குதா?


அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது.

பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.

அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை.

பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.

அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும் மற்றும் 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.

அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது.

வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும்.

நாம் பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்...

ஈகோ என்பது என்ன?


தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும்..

மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது..

கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர்.

நமது பலவீனத்தை, தவறையாராவது சுட்டிக்காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது..

ஈகோ மனிதர்களின் அடையாளம்...

நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர், நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர்.

அதிகம் பேச மாட்டார்.

தம் இனத்துடன் மட்டும் பழகுவர்.

தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர்.

தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர்.

தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர்.

ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும்.

மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர்.

தான் எதை செய்தாலும் பிறர்க்கு தெரியும் படி சுய விளம்பரம் செய்ய விரும்புவர்.

தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர்.

தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவர்.

தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, அந்தஸ்து உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.

தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும்.

பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்ற நினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.

எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும்.

தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது.

தெரியாதததைக் கேட்டு தெரிந்து கொள்ள தயங்குவர்.

அதிக  முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர்.

ஈகோ பிரச்சினையால் பல விஷயங்களில் முரண்டு பிடிப்பது.

முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்...

ஈகோ அற்றவர்களின் இயல்புகள்..

ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப்போகிறது என்று.

பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.

அந்தஸ்து வந்தாலும், உடன் பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்துவிட மாட்டார்கள்.

நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.

ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள்.

வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல.

நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும்.

நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.

மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது.

அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது...

இம்பூட்டு தாங்க திருட்டு திராவிட வரலாறு...


புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை...


தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்...

பாஜக வை ஊழலில் மிஞ்ச யாராலும் முடியாது...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா.. ஊழல் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை...


வெங்காயம் : பெயரோ சிறியது பலனோ பெரியது...


தினமும் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத் தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.  உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

உடல் சூட்டைக்  குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம்.  உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  ரத்த ஓட்டத்தை சீராக்கும். கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம். வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.  வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மை போல அரைத்துக் கொள்ளவும். இதை, நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி.   இப்படி செய்யும் போது  ஷாம்பு மாதிரி பொங்கி வரும்.  அதை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில்  குளிக்க வேண்டும்.முட்டை வாடை  நீங்க, சிகைக்காய் பவுடரை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.வாரத்தில் ஒருநாள் வீதம், இரண்டு மாதத்துக்கு  இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அம்மை நோய் வராமல் தடுக்கவும்  வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 29...


ஆல்ஃபா அலைகளும் எளிய பயிற்சியும்..

எல்லா அற்புதங்களையும் நிகழ்த்தக்கூடிய ஆழ்மனதின் சக்திகள் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலை வரிசைகளில் நாம் இருக்கையில் சாத்தியமாகின்றன என்பதைப் பார்த்தோம்.

அவற்றில் நம்மையறியாமல் நாம் பல முறை சஞ்சரித்துக் கொண்டு இருந்திருக்கலாம் என்றாலும் அவற்றை நாம் உணர்ந்திருப்பதில்லை.

அவற்றை நாமாக ஏற்படுத்திக் கொள்ளாமல் தானாக அந்த அலைவரிசைகளில் இருந்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதுமில்லை.

முதலில் ஆல்ஃபா அலைகள் பற்றியும் அந்த அலைவரிசைக்கு நம் மனதைக் கொண்டு செல்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1924 ஆம் ஆண்டு ஜெர்மானிய மனோதத்துவ அறிஞர் ஹேன்ஸ் பெர்கர் அதீத மனோசக்திகளை ஆராய்ச்சி செய்யும் போது, குறிப்பாக டெலிபதி என்னும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்தி அனுப்பவோ, பெறவோ முடிந்த சக்தியை ஆராய்ச்சி செய்த போது அந்த நேரங்களில் அந்த மனிதர்கள் ஆல்ஃபா அலைவரிசையில் இருப்பதைப் பதிவு செய்தார்.

முதல் முதலில் அந்த அலைகளுக்கு ஆல்ஃபா அலைகள் என்று பெயரிட்டவரும் அவர் தான் என்று சிலர் சொல்கிறார்கள். அந்த சக்தி கிட்டத்தட்ட 100 மைக்ரோவால்ட்ஸ் ஆக இருக்கிறது என்றும் அவர் அளவிட்டார். அவர் காலத்தில் இந்த அலைவரிசைகள் பெரும் அளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படா விட்டாலும் பிற்காலத்தில் பெருமளவில் ஆராயப்பட்டது.

புதிய புதிய கண்டு பிடிப்புகளைச் செய்த பெரிய விஞ்ஞானிகளும், தங்கள் கற்பனையால் காலத்தால் அழியாத புதுமைகளைப் படைத்த பிரபல கலைஞர்களும், யோகிகளும் அதிகமாக ஆல்ஃபா அலைவரிசைகளிலேயே அதிக நேரங்களில் இருந்தார்கள் என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பரபரப்பு மிகுந்த, அதிக சக்தி செலவழித்து முயலும், மனநிலையில் தான் பெரிய வேலைகள் ஆகின்றன, அதிக வேலைகள் சாத்தியமாகின்றன என்று நாம் பலரும் இன்றும் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல என்று EEG போன்ற கருவிகளைக் கொண்டு செய்த ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சென்ற நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்கள் கூட தன் ஆராய்ச்சி நேரங்களில் பெரும்பாலும் ஆல்ஃபா அலைவரிசையில் தான் இருந்திருக்கிறார் என்பதை EEG கருவியால் அளந்திருக்கிறார்கள்.

அதிலும் மிகவும் சிக்கலான கணிதங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் கூட அதிலேயே அவர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மிக மிகக் கடினமான கட்டத்திற்கு வந்த ஓரிரு சமயங்களில் மட்டுமே ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பீட்டா அலைவரிசைக்கு அவர் வந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட அரைத்தூக்க நிலை, அல்லது லேசான கனவு நிலை போன்றது இந்த ஆல்ஃபா அலைவரிசையில் உள்ள நிலை என்பதை நாம் கண்டோம். அப்படியானால் அதிக நேரங்களில் இந்த அலைவரிசையில் உள்ளவர்கள் எல்லாம் பெரிய மேதைகளா, ஞானிகளா, படைப்பாளிகளா என்று கேட்டால் அல்ல என்பது தான் உண்மையான பதில்.

பல மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும், போதை மருந்துகளை உட்கொண்டவர்களும் கூட அதிக நேரம் இந்த அலைவரிசைகளில் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பார்பரா ப்ரவுன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால் இது போன்ற ஆட்கள் ஆல்ஃபா அலைவரிசைகளில் அதிகம் இருந்தாலும் உள்ள சக்திகளையும் இழந்து அழிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதில் இன்னொரு கருத்து இருக்க முடியாது.

அப்படியானால் முன்பு சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையே முரண்பாடு உள்ளதே என்று பலரும் நினைக்கலாம். கூர்ந்து யோசித்தால் முரண்பாடு இல்லை.

ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளும், பெரிய மேதைகளும் ஆல்ஃபா அலைவரிசைக்கு விழிப்புணர்வோடு முயற்சி செய்து செல்பவர்களாக இருந்திருக்கிறார்கள்.

மந்த புத்திக்காரர்களும், மகா சோம்பேறிகளும் கிட்டத்தட்ட ஜடநிலையில் அந்த அலைவரிசையில் இருக்க, குடி மற்றும் போதையால் அந்த அலைவரிசையில் இருப்பவர்கள் செயற்கையாக அங்கு இழுத்து செல்லப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

எனவே முன்னவர்கள் அந்த அலைவரிசையில் செயல்பட முடியும் போது, பின்னவர்கள் அந்த அலைவரிசையில் முடங்கியே போகிறார்கள். இதை நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

சரி ஆல்ஃபா அலைவரிசைக்கு செல்வதெப்படி என்பதைக் காண்போம்.

ஆல்ஃபா அலைவரிசையை ஒரே வார்த்தையில் விளக்க வேண்டும் என்றால் மிகப் பொருத்தமான வார்த்தை “ரிலாக்ஸ்” (Relax). பதட்டமில்லாத, அவசரமில்லாத அமைதியான மனநிலை இது.

இக்காலத்தில் இந்த அமைதியான மனநிலையை நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம். நமக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. முந்த வேண்டிய ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய கவலைகள் ஏராளம் இருக்கின்றன. பிரச்னைகள், நேரக்குறைவு போன்றவை வேறு இருக்கின்றன. இப்படி இருக்கையில் அமைதியான மனநிலை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஆனால் எந்தக் காரணங்களுக்காக அமைதியான, ரிலாக்ஸான மனநிலை சாத்தியமில்லை என்று நினைக்கிறோமோ அந்தக் காரணங்களை முறையாகக் கையாள பீட்டா அலைவரிசையை விட ஆல்ஃபா அலைவரிசை தான் சிறந்தது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பீட்டா அலைவரிசையில் இருக்கும் போது நம் சக்திகள் மிக அதிக அளவு விரயமாகின்றன. அப்படி விரயம் செய்து நாம் சாதிப்பதோ மிகக் குறைவாகவாகத் தான் இருக்கும். ஏனென்றால் பார்வைக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிவேகமாகவும் செயல்கள் நடைபெறுவது போல் தோன்றினாலும் பீட்டா அலைவரிசையில் தேவை இல்லாத பரபரப்பில் தான் நம் சக்திகள் அதிகம் வீணாகின்றன. ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளே சிரமமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் ஆல்ஃபா அலைவரிசையில் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் நம்மைப் போன்றவர்கள் அதைப் பின்பற்றுவதல்லவா புத்திசாலித்தனம்.

முதலில் தினந்தோறும் அதிகாலை அரை மணி நேரமும், இரவு அரை மணி நேரமுமாவது அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

அமைதியான ஒரு இடத்தில் அமருங்கள். இயற்கையழகு நிறைந்த இடமாகவோ, ஜனசந்தடி அதிகம் இல்லாத இடமாகவோ இருந்தால் மிக நல்லது. இல்லாவிட்டால் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். இசைப்பிரியராக இருந்தால் வார்த்தைகள் இல்லாத இசையைக் கூட நீங்கள் இருக்கும் இடத்தில் தவழ விடலாம். வார்த்தைகள் கலந்த இசையானால் அந்த வார்த்தைகளின் பொருள், அதன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று மனம் தீவிரமாக செயல்பட்டு பீட்டா அலைகளுக்குப் போய் விட வாய்ப்பு அதிகம். சிறிது நேரம் உங்கள் மூச்சில் கவனம் வையுங்கள். உள்ளிழுக்கும் காற்று, வெளியே விடும் காற்று இரண்டிலும் கவனம் வையுங்கள். நீங்களாக எந்த மாற்றத்தையும் மூச்சில் கூடக் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். குறிப்பாக எதைப் பற்றியும் சீரியஸாக நினைக்காதீர்கள். மூச்சு ஒரே சீராக மாற ஆரம்பிக்கும். இயற்கையழகு நிறைந்த சூழ்நிலையில் இருந்தால் அந்த அழகை ரசிக்க ஆரம்பியுங்கள். நீங்கள் இருப்பது உங்கள் அறையில் தான் என்றால் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மிகவும் ரசிக்கும் இயற்கை சூழ்நிலையை உங்கள் கற்பனையில் வரவழைத்துக் கொள்ளுங்கள். மலைச்சாரல், நதிக்கரை அல்லது கடற்கரை போன்ற ஏதாவது இடத்தில் நீங்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு ரசியுங்கள்.

மூச்சு சீராகி, மனமும் அமைதியடையும் போது ஆல்ஃபா அலைகளில் இருக்க ஆரம்பிக்கிறோம். ஆழ்மன சக்திகள் அடைவது உட்பட எந்த தீவிரமான சிந்தனையும் இந்த நேரத்தில் வேண்டாம். இப்போதைய ஒரே குறிக்கோள் ஆல்ஃபா அலைகளில் பயணிப்பது தான். அந்த அலைவரிசைக்கு நம் விருப்பப்படி தினமும் போய் வருவது தான். சிலருக்கு ஆரம்பத்தில் உறக்கமே வரலாம். பரவாயில்லை. இயற்கைச் சூழலுக்குப் போக முடியவில்லை, எனக்கு கற்பனையும் வராது என்றாலும் பராயில்லை. அப்படிப்பட்டவர்கள் மூச்சின் சீரான போக்கில் மட்டும் கவனம் வையுங்கள். ஆல்ஃபா அலைவரிசையில் இருந்து பாருங்கள்.

இந்த எளிய பயிற்சியை அடுத்த வாரம் வரை தினமும் செய்து பாருங்கள்.

மேலும் பயணிப்போம்.....

இன்று வரை நாம் நாளிதழ்களில் காணும் சிலை திருட்டு செய்திகள் எல்லாம் 10% கூட கிடையாது... வெறும் கண் துடைக்கும் வேலையாகத்தான் நடக்கிறது...


நமது மக்களும் இதை கண்டு கொள்வது இல்லை...

பாஜக வின் மறைக்கப்பட்ட மாதவ்புரா வங்கி ஊழல்...


மாதவ்புரா கூட்டுறவு வங்கி குஜராத்தின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக இருந்தது. 2000ஆம் ஆண்டில் அதில் சுமார் 50 ஆயிரம் முதலீட்டாளர்கள் இருந்தனர். வங்கியிடம் சுமார் 1300 கோடி ரூபாய் இருந்தது.

கேதன் பரேக், மும்பையின் ஸ்டாக் புரோக்கர்.

மாதவ்புரா வங்கி, கேதன் பரேக்குக்கு 1030 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இன்னும் சில புரோக்கரேஜ் நிறுவனங்களுக்கும் கடன் வழங்குகிறது.
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, பங்குச் சந்தை தரகர்களுக்கு வங்கிகள் 15 கோடிக்கு மேல் கொடுக்கக்கூடாது.

மாதவ்புரா வங்கியின் பணத்தைக் கொண்டு கேதன் பரேக் உள்ளிட்டவர்கள் 2001 ஆரம்பத்தில் பங்குச்சந்தை உச்சத்தைத் தொட்டபோது செமையாக காசு பார்த்தார்கள்.

ஆனால் பங்குச்சந்தை ஊழல் வெடித்தது. சரிவு ஏற்பட்டது.

மாதவ்புரா வங்கி கேதன் பரேக்குக்கு பெரும்தொகை கடன் கொடுத்த விவகாரம் 2001 மார்ச்சில் வெளியாகிறது.

வங்கியில் பணம் போட்டவர்கள் திருப்பி எடுக்க வருகிறார்கள். ஆனால் பணம் இல்லை.

ரிசர்வ் வங்கி ஆய்வு செய்கிறது. வங்கியின் நிர்வாகிகள், தமது இஷ்டத்துக்கு தமக்குத் தெரிந்தவர்களின் பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. வங்கியிடமிருந்த 1300 கோடி ரூபாய் மதிப்பில் 1200 கோடி ரூபாய் ஸ்வாகா என்று தெரிகிறது. மார்ச் 14ஆம் தேதி நிர்வாகக் குழு கலைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் சார்பில் நிர்வாகி நியமிக்கப்படுகிறார். ஆகஸ்ட் மாதம், பத்தாண்டுகளில் வங்கியை சீரமைக்க ஒரு திட்டம் வகுக்கப்படுகிறது.

வங்கியின் சேர்மன் ரமேஷ் சந்திர பரேக் என்பவரின் மகன் வினீத் சந்திர பரேக் என்பவர் பங்குச் சந்தையில் 50 கோடி ரூபாய் இழந்தார். அவருக்கு வங்கிப் பணம் தரப்பட்ட விவகாரம் பின்னர் தெரிய வந்தது. (11 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த (!) வினீத் சந்திர பரேக் கைது செய்யப்பட்டார் என்று 2016 ஜனவரி 8ஆம் தேதி செய்திகள் தெரிவிக்கின்றன.)

முக்கிய மோசடி செய்தவர் கேதன் பரேக். 1030 கோடி ரூபாய். வழக்கு தொடரப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 380 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று அவர் சொல்கிறார். நீதிமன்றமும் அனுமதித்து பெயிலில் விடுகிறது.

அவர் சொன்னபடி பணம் தரவில்லை என்பதால் அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் 2003இல் மாதவ்புரா வங்கி உச்சநீதிமன்றத்தில் ஒரு எஸ்எல்பி மனு போடுகிறது.

அட பரவாயில்லையே என்கிறீர்கள் இல்லையா...? இனிதான் இருக்கிறது திருப்பம்.

ஊழல் விவகாரம் வெடித்து, நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாக்க் குழு அமைக்கப்படுகிறது அல்லவா? அதில் ஒரு டைரக்டராக இருந்தவர் அமித் ஷா. ஆமாம், இன்றைய பாஜக தலைவர் அமித் ஷாவேதான்.

இப்போதைக்கு இந்த விஷயத்தை இங்கே நிறுத்தி விட்டு இன்னொரு விஷயத்துக்கு வருவோம்.

2005 ஆகஸ்ட் 1..

குஜராத் மாநில அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், சிஐடி, குல்தீப் ஷர்மா மூன்று பக்க அறிக்கை ஒன்றைத் தயாரிக்கிறார், அதை குஜராத் மாநில தலைமைச் செயலர் சுதீர் மன்கட் என்பவருக்கு அனுப்புகிறார். ஊழல் ஒன்று நடந்திருப்பதற்கான ஆரம்ப ஆதாரங்கள் இருப்பதை நிறுவி, அது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.

அரசு அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஷர்மா உடனே சிஐடி டிபார்ட்மென்ட்டிலிருந்து தூக்கியடிக்கப்படுகிறார். குஜராத் ஆடு மற்றும் கம்பளி மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்!

ஊழல் குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா? அமித் ஷா மீது.

ஆமாம், இன்றைய பாஜக தலைவர் அமித் ஷா மீதுதான்.

அன்று குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அவரது வலது கரமாக – உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மீதுதான் அந்தக் குற்றச்சாட்டு.

“நா காவூங்கா, நா கானே தூங்கா” (நான் ஊழல் செய்ய மாட்டேன், செய்ய விடவும் மாட்டேன்) என்று இன்று முழங்குகிற மோடி, தனது அரசின் காவல் துறை அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை டிஜிபியை தூக்கியடித்தார் என்பது வரலாறு.

ஐந்தாண்டுகள் அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அமித் ஷா மீதான குற்றச்சாட்டு என்ன தெரியுமா? மாதவ்புரா வங்கியை நாசம் செய்த முக்கியக் குற்றவாளி கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட லஞ்சம் வாங்கினார் என்பதுதான். அதற்கான ஆதாரங்களை தெளிவாக அறிக்கையில் வைத்திருந்தார் சிஐடி டிஜிபி.

1030 கோடி ரூபாய் மோசடி செய்த கேதன் பரேக் 380 கோடி ரூபாய் தருகிறேன் என்று சொல்லி திருப்பித்தர ஆரம்பித்திருந்தார். ஆனால் மூன்றாண்டு காலத்தில் அந்தப்பணம்  வராததால், அவருடைய பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று மாதவ்புரா வங்கி உச்சநீதிமன்றத்தில் எஸ்எல்பி (SLP (criminal) No. 1701/2003) போட்டது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அமித் ஷா இங்கே எங்கே வருகிறார் என்பதை சிஐடி டிஜிபி வைத்த அறிக்கையிலிருந்து விவரமாகப் பார்ப்போம்.

மாதவ்புரா வங்கியின் டைரக்டராகவும் இருந்த அமித் ஷா, 2004 ஆகஸ்ட் 31ஆம் தேதி, வங்கி அதிகாரிகள், காவல் துறை டிஜிபி உள்ளிட்டோரை அழைத்து ஒரு கூட்டம் நடத்துகிறார். “கேதன் பரேக் மூன்றாண்டுகளுக்குள் 380 கோடி செலுத்தவில்லை. எனவே அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்கிறார்.

ஆனால் அக்டோபர் முதல் வாரத்தில் கிரீஷ் தானி என்கிற அரசியல் தரகர் ஒருவர் அமித் ஷா - கேதன் பரேக் இடையே ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார். அதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட எஸ்எல்பி-யை மாதவ்புரா வங்கி திரும்பப் பெற்றுக் கொள்கிறது. உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்கிறது. ஜாமீன் போய்விடுமோ என்ற அச்சம் தேவையில்லாமல் சுதந்திர மனிதர் ஆகிறார் கேதன் பரேக்.

ஆக, ஆகஸ்ட் மாதம் கேதன் பரேக் பெயிலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய அமித் ஷா, அக்டோபர் மாதம் வழக்கை ரத்து செய்கிறார் என்றால், இடையில் நடந்தது என்ன?

2004 அக்டோபர் 1ஆம் தேதி கேதன் பரேக் அகமதாபாத் வருகிறார். கேதன் பரேக் – தானி – அமித் ஷா ஆகிய மூவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை முன்வைத்து, மூவரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கினார். அமித் ஷா, குஜராத் அரசில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். எனவே அவருடைய நடத்தை குறித்த எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. எனவே மாதவ்புரா வங்கி விவகாரத்தை ஏற்கெனவே விசாரித்து வரும் சிபிஐ இதையும் விசாரிக்க வேண்டும் என்கிறார்.

கேதன் பரேக்குக்கு ஆதரவாக செயல்பட அமித் ஷா லஞ்சம் வாங்கினார் என்பதற்கு என்ன ஆதாரம்?
கேதன் பரேக்கை விடுவிக்க, அமித் ஷா இரண்டரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று அகமதாபாதைச் சேர்ந்த ஹஸ்முக் ஷா என்பவர் எழுத்துவடிவிலான புகார் கொடுத்தார். அந்தப் புகாரைத் தொடர்ந்துதான் விசாரணை நடைபெற்று, ஆகஸ்டில் கேதன் பரேக்குக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு அக்டோபரில் அவருக்கு ஆதரவாக வழக்கு திரும்ப்ப் பெறப்பட்டது என்பதை சிஐடி அறிக்கை தெளிவாகக் காட்டியது.

ஆனால் பத்தாண்டுகள் அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் அமித் ஷாவைக் காப்பாற்றியவர் நரேந்திர மோடி.

கேதன் பரேக்குக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் – இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

சிறிதும் பெரிதுமான முதலீட்டாளர்களைக் கொண்டிருந்த மாதவ்புரா வங்கியின் லைசென்சை ரிசர்வ் வங்கி 2013இல் ரத்து செய்கிறது. கூட்டுறவு வங்கிகளின் ஊழல் என்று வரும்போது இப்போதும் ரிசர்வ் வங்கியால் உதாரணம் காட்டப்படுவது மாதவ்புரா வங்கிதான்.

கொசுறாக இன்னும் பல தகவல்களை சொல்லலாம்.

1030 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு 390 கோடி ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு இந்த வழக்கில் தண்டனையே இல்லாமல் தப்பி (வேறு வழக்கில் ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும் தண்டனை அனுபவித்து) சுதந்திரமாக உலவுகிறார் கேதன் பரேக்.

2001 மார்ச் 9ஆம் தேதி ஊழல் விவகாரம் வெடித்ததும் வங்கியின் தலைவர் ரமேஷ், மும்பை மேலாளர் ஜகதீஷ் பாண்டியா இருவரும் கைது செய்யப்படுகிறார்கள். இதன் முக்கிய சதிகாரராக இருந்த வங்கியின் சிஈஓ தேவேந்திர பாண்டியா ஏப்ரல் 26ஆம் தேதி கைது செய்யப்படுகிறார்.

ஒன்றரை மாதம் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த தேவேந்திர பாண்டியா, எப்படியாவது பெயில் வாங்கி விடலாம் என்ற எண்ணத்துடன் இந்தோரிலிருந்து அகமதாபாதுக்கு இரவில் வந்து சேர்ந்தவரை கைது செய்தோம் என்றார் அப்போதைய உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா. இந்த ஹரேன் பாண்டியா யார், என்ன ஆனார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

2001இல் குஜராத்தில் முதல்வராக இருந்தவர் கேஷுபாய் படேல். ஹரேன் பாண்டியா குஜராத்தில் விரைவாக வளர்ந்து வந்த இளம் பாஜக - ஆர்எஸ்எஸ் தலைவர். பாஜக அரசு ஊழலில் சிக்கி செல்வாக்கை இழந்து கொண்டிருந்த நேரத்தில்கூட தனது தொகுதியில் தொடர்ந்து அபார வெற்றி கண்டு வந்தவர். படேலின் வலது கரமாக இருந்தவர்.

2001 அக்டோபரில் நரேந்திர மோடி முதல்வர் ஆகிறார். முதல்வர் ஆகி விட்டதால் பாதுகாப்பான ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும். அவருக்குக் கண்ணில் படுகிறது ஹரேன் பாண்டியாவின் தொகுதி. ஹரேன் பாண்டியா மறுக்கிறார். அதைத் தொடர்ந்து ஹரேன் பாண்டியா ஓரம் கட்டப்படுகிறார்.
2002 குஜராத் கலவரம் நிகழ்கிறது. அரசுத் தரப்பில் என்ன செய்தார்கள் என்று ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயரின் தலைமையிலான தனிநபர் விசாரணைக் குழுவுக்கு ஹரேன் பாண்டியா ஒரு ரகசிய வாக்குமூலம் தருகிறார்.

மோடியின் முதன்மைச் செயலர் பாண்டியாவைக் கண்காணிக்க உத்தரவிடுகிறார். பாண்டியா வாக்குமூலம் கொடுத்த்து உண்மைதான் என்று தெரிய வருகிறது. தனிநபர் விசாரணைக் குழுவுக்கு வாக்குமூலம் என் கொடுத்தீர்கள் என்று கட்சித் தலைமை ஹரேன் பாண்டியாவைக் கேட்கிறது. ஹரேன் பாண்டியா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். ஆகஸ்டில் அவுட்லுக் பத்திரிகைக்கு பெயரில்லாத அமைச்சர் பெயரால் பேட்டி தருகிறார். தன் பெயர் வெளியே வந்தால் கொல்லப்படுவோம் என்றும் சொல்கிறார்.

2002 டிசம்பர் குஜராத் தேர்தலில் ஹரேன் பாண்டியாவுக்கு அவருடைய தொகுதியை தர முடியாது என்கிறார் மோடி. ஆர்எஸ்எஸ் பாஜக இரண்டின் தலைமைகளும் மோடியை நிர்ப்பந்தம் செய்கின்றன. ஆனால் தனக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்கிறார் மோடி. இரண்டு நாட்கள் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியில் கட்சி மோடிக்கு அடங்கிப் போகிறது. ஹரேன் பாண்டியாவுக்கு சீட் மறுக்கப்படுகிறது.

அரசியலிலிருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்த ஹரேன் பாண்டியா, 2003 மார்ச் 26ஆம் தேதி, வழக்கமாக நடைபயணம் போகும் இடத்தில் காரில் பிணமாக்க் கிடக்கிறார். வழக்கு ஊத்தி மூடப்பட்டது. அவரை யார் கொலை செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது. அந்தக் கொலை, சாட்சியங்கள், வழக்கு ஆகியவற்றைப் பற்றி கடைசியில் உள்ள இணைப்பில் படித்துப்பாருங்கள். நமது காவல்துறை / நீதித்துறை குறித்து அருமையான புரிதல் கிடைக்கும்.

இரவு உறக்கம் வராமல் எதையெதையோ தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும்போது இப்படியும் ஒரு செய்தி கண்ணில் பட்டது —
குஜராத் சிஐடி ஏடிஜிபி மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது ஒரு மெட்ரோபொலிடன் நீதிமன்றம். மாதவ்புரா வங்கியின் 1100 கோடி ஊழல் விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் கூறியது.

இந்தச் செய்தியின் தேதி - 2017 மே 7..

ஊழல் ஒழிந்து விட்டது தானே..

http://www.thehindu.com/todays-paper/tp-national/Gujarat-government-buried-CID-report-on-Amit-Shah/article16210785.ece

http://ahmedabadmirror.indiatimes.com/ahmedabad/others//articleshow/50487562.cms

http://www.business-standard.com/article/economy-policy/jaitley-s-advocacy-of-parekh-s-case-in-sc-sparks-controversy-105052601005_1.html

http://www.business-standard.com/article/markets/ketan-parekh-pays-dues-of-rs-396-cr-to-madhavpura-108082201071_1.html

http://indianexpress.com/article/business/banking-and-finance/madhavpura-bank-collapse-is-behind-us-says-rbi-executive-director/

https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/contempt-notice-to-cid-in-madhavpura-bank-scam/articleshow/58554888.cms

https://www.outlookindia.com/magazine/story/a-plot-from-the-devils-lair/215889

https://blogs.timesofindia.indiatimes.com/masala-noodles/who-killed-haren-pandya/

https://saafbaat.com/gujarat-genocide/haren-pandyas-murder

அரசு இயந்திரத்தில் பணம் பத்தும் செய்யும், செத்து போனவருக்கு மின் இணைப்பு, பலே தில்லாலங்கடி அதிகாரி...


திருப்பூர் மாநகரம் 18  வது வட்டம் நெருப்பெச்சல் வடக்கு பெரியபுதூர் திரு ஜெகதீசன் என்பவருக்கு செத்து போன அவரது தாத்தா பெயரில் பெருமாநல்லுர் தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர் பிரபாகரன் 3 பேஸ் மின் இணைப்பை வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.


பிரபாகரன் கேட்ட லஞ்சம் 20 ஆயிரம் , ஜெகதீசன் 16 ஆயிரம் மட்டுமே கொடுத்ததால் தில்லாலங்கடி வேலை செய்து செத்து போனவரின் பெயரில் 3 பேஸ் லைனிற்கு அனுமதி வழங்கப்பட்டு மீட்டர் வந்த போதிலும் பாக்கி 4 ஆயிரத்தை கொடுத்தால் தான் லைன கொடுப்பேன் என மின் வாரிய அதிகாரி பிரபாகரன்  கூறி வருவதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.


செத்து போனவருக்கு லைன் கொடுக்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதால் ஜெகதீசன் இதை வெளியே சொல்லி பிரச்சனை செய்து விடுவார் என அவரிடம் லைனை கேன்சல் செய்து கடிதம் எழுதிக் கொடுக்குமாறு அதிகாரிகள் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...

செய்தி - சரன் , திருப்புர்...

கரிசலாங்கண்ணி மூலிகை...


கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது.

பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

மஞ்சள் காமாலைக்கு:

கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப்பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.

மகோதர வியாதிக்கு:

கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச்சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும்.
உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

ஆஸ்துமா குணமாக:

கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.

சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:

கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்திற்கும் கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.

பெண்களின் பெரும்பாட்டு நோய்க்கு கரிசலாங் கண்ணிச்சாறு நல்ல பலன் அளிக்கும்.

குழந்தைகளின் சளி நீங்க:

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணித்தைலம்:

கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.

இரத்தசோகை நீங்கி நல்ல ரத்தம் உண்டாக:

இரத்தசோகை நோய்க்கு கரிசலாங்கண்ணி ஒரு பங்கும், வெல்லம் இரண்டு பங்கும், எள் ஒரு பங்கு வீதம் தேவைக்கு ஏற்ப சேகரித்து வைத்துக் கொண்டு, வெல்லத்தைப் பாகாக்கி மற்ற இரண்டு பொருள்களையும் பொடி செய்து சேர்த்துக் கிண்டி, கேக் வடிவில் தயாரித்து, பள்ளிக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்ல ரத்தம் உண்டாகும்; நினைவாற்றல் அதிகரிக்கும்.

கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.

தலைமுடி நன்கு வளர:

கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணி இலைச் சூரணமும், ஜாட்டை கரந்தை இலைச் சூரணமும் சமம் கலந்து தேவையான அளவிற்கு வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இரண்டு மாத உபயோகத்தில் இளநரை மாறி விடும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.

தலைப்பொடுகு நீங்க:

கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.

பல் உறுதிக்கு:

கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

பித்தத்தைலம் :

கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும். நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.

நரை நீக்கும் தைலம்:

புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் சென்றபின் வடிகட்டி வைத்துக் கொணடு தேவைக்கு தகுந்தாற்போல் வாசனை கொடுக்க ஜாஸ்மின் ஆயில் கலந்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலைக்குத் தடவி வந்தால், இளமையில் ஏற்பட்ட நரை மாறி நல்ல கருப்பு நிறமாக வந்து விடும்.

நாள்பட்ட புண் ஆற:

கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்...

தமிழன் பொருளாதாரத்தின் முன்னோடி...


இந்திய இளைஞர்கள் காவு கொடுக்கப்பட்டு கொண்டுள்ளார்கள்.?



சமீபத்தில் பிரிக்ஸ் மாநாடு என்று ஊடகங்கள் வாயிலாக நாம்  தெரிந்து கொண்டோம் அல்லவா ?

அந்த மாநாட்டில் முக்கியமாக பங்குபெற்ற நாடுகள் இந்தியா, சைனா, பிரேசில், சவுத் ஆப்பிரிக்கா..

இங்கு கூறப்பட்டுள்ள ஒரு தகவல் தான்...

இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்றும் படித்த மாணவர்கள் உள்ளனர் என்றும் பெருமிதமாக பேசியது..

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் இளைஞர் படை அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது..

கிட்டத்தட்ட  25 % இளைஞர்கள் இந்தியாவில் உள்ளவராகவும் தெரிவிக்கப்பட்டது..

இந்தியாவில் கிட்டத்தட்ட 30 கோடி இளைஞர்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது..

பலத்த கைத்தட்டலுடன் இந்தியன்டா என்று பெருமை பீற்றிக்கொண்டது இந்திய ஊடகமும்..

இது அப்படியே இருக்கட்டும்....

மருத்துவ நோய் கண்டறியும் காரணி துறையில் ஒன்றுதான் எப்பிடமாலஜி என்ற துறை..

இவங்க இந்தியாவுக்கு ஒரு ஆய்வறிக்கையை சமர்பிக்கிறார்கள்.

அது தான் தொற்றாத வாழ்வியல் நோய் [non communicable diseases]..

நீரழிவு நோய், இரத்த கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய், நுரையீரல் நோய், மற்றும் உளவியல் நோய், இவை தான் இதில் அடங்கும்..

இதை கட்டுப்படுத்த நடவடிக்கை உடனே இந்தியா எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது..

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று தான்..

இதில் அடுத்த வார்த்தை தான் மிகவும் முக்கியம்..

இது 25 வயது முதல் 40 வயது இளைஞர்களுக்கு தான் வேகமாக பரவுகிறது என்றும் கூறுகின்றது அந்த ஆய்வு..

அதெல்லாம் இல்லைங்க பரம்பரை நோய் அது..

அப்பாவுக்கு இருந்தால்  பிள்ளைக்கும் சக்கரை நோய் இருப்பது சகஜம் தானே என்று சிலர் ஆசுவாசப்படுத்தி கொண்டு இருக்கும் நிலையில் தான்..

ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகம் ஒரு ஆய்வை கடந்த ஆண்டு வெளியிட்டது..

அதில் கூறியுள்ள வாசகங்கள் என்ன தெரியுமா ?

காலையில் 8 மணிக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் கூலி தொழிலாளியின் மகனுக்கு கூட சக்கரை நோய் வருகிறது..

பாரம்பரிய நோய் என்பதை தாண்டி கடந்த 4 வருடத்தில் சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.. முக்கியமாக இதில் கிட்டத்தட்ட 75 % பேருக்கு பரம்பரையில் சக்கரை நோய் இல்லை
எல்லோருக்குமே புதிதாக சக்கரை நோய் வந்துள்ளது என்பது தான் அந்த ஆய்வு ...

என்ன நடக்கிறது ?

நாம் சிறு வயதாக இருந்த காலத்தில் தேன் மிட்டாய் கடலை மிட்டாய் ஜவ்வு மிட்டாய்.. ஏன் வாழையிலையில் கூட முதலில் இனிப்பை தானே
வைப்பார்கள்..

எல்லாவற்றையும் தானே உண்டு வந்தோம்..

இப்பொழுது குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கவே பயப்படுகிறோம் ஏன் ?

நீரழிவு நோய்க்கு இந்தியா தான் தலைமை பீடம் என்ற கட்டுரையை கடந்த ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது படித்தால் மயக்கம் வராத குறை தான்..

நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்..

https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/India-is-the-diabetes-capital-of-the-world/articleshow/50753461.cms

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3920109/

இப்பொழுது முதல் பகுதியில் கூறிய விடயமும் இறுதியான விடயமும் ஒத்து போகிறதா ?

ஏன் இளைஞர்கள் காவு கொடுக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ?

இன்றைய அரசியல் வாதிகளுக்கு தான் வெளிச்சம்...

சாட்டையை சுழற்றுவோம்...

15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளை மணந்து பாலியல் உறவு கொண்டால் குற்றம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...


கார்ப்பரேட் பொருள்களை தயவு செய்து உண்ணாதே...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வை உலக வங்கியும் உறுதி செய்தது...


2017ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் மந்தமான நிலைக்கு சென்றுவிட்ட தாகவும்; 2018-ஆம் ஆண்டிலும் இந்த பொருளாதார மந்தம் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக விளங்கிய இந்தியா, தற்போது அந்த தகுதியை சீனாவிடம் இழந்து நிற்பதாகவும்; இத்தகைய சூழ்நிலைக்கு இந்திய அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கமே முக்கியக் காரணம் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தெற்காசியப் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இவ்வாறு கூறியுள்ள உலக வங்கி, 2015-ஆம் ஆண்டில் 8.6 சதவிகிதமாக இருந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, 2017-இல் 7 சதவிகிதமாக சரிந்துவிட்டது என்று புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய வற்றின் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது; நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது; சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 6.7 சதவிகித வளர்ச்சியை மட்டுமே இந்தியா எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்றது- ஜிஎஸ்டி வரி விதித்தது- உள்ளிட்ட நட வடிக்கைகளுக்குப் பின்னர், இந்தியப் பொருளாதாரம் 2018-இல் அதிகபட்சம் 7.3 சதவிகிதம் வரையே வளர்ச்சி காணு வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளஉலக வங்கி, ஆனால், அது எளிதில் நடக்க வாய்ப்பு இல்லை என்றும், அதற்கேற்ற நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே 7.3 சதவிகித வளர்ச்சியும்கூட சாத்தியமாகும் என்று கூறியுள்ளது.“ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு, இந்தியாவில் உற்பத்தி குறைந்துள்ளது, எனினும் 2018 காலாண்டிற்குள் இந்த நிலைமை சரியாகும் என்று எதிர்பார்க்கலாம்; இந்தியா நீடித்த வளர்ச்சி பெற வறுமை ஒழிப்பு பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்; ஏனெனில் இந்தியாவின் வளர்ச்சி விகித மந்த நிலை, தெற்காசிய வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும்; தற்போதே இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகாரணமாக தெற்காசியா பிராந்தியமானது, கிழக்காசிய மற்றும் பசிபிக் நாடுகளை விட இரண்டு இடங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது;

இந்தியாவை பொறுத்தவரை 2016-இல் 7.1 சதவிகிதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.7 சதவிகிதத்திற்கு சரிந்துள்ளது; ஜிஎஸ்டி, 2018-ஆம் ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது” என்று உலக வங்கி தனது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி அமலாக்கமும் நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் துவக்கத் திலேயே கூறினர். பாதிப்பு ஏற்பட்ட பின்னரும் உண்மையை ஒப்புக் கொள்ள மோடி அரசு தயாராக இல்லை.

இந்நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை உலக வங்கி அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது...

நாட்டுச் சக்கரையை உபயோகிப்போம்...


ஆன்மாக்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் இறைவன் கைப்பற்றுகிறான்...


எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான்.

சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளது.. குர்ஆன் 39: 42..

இந்த வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மைகளை மனிதர்களுக்கு கூறிக் கொண்டுள்ளது.

பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். உயிர் என்பது என்ன? ஆன்மா என்பது என்ன?

இந்த குழப்பம் நீண்ட நாட்களாக எனக்கும் இருந்தது. மேலே உள்ள வசனத்தை வாசித்து உள் வாங்கிக் கொண்டவுடன் எனக்கு ஓரளவு உயிருக்கும் ஆன்மாவுக்குமுள்ள வித்தியாசம் புரிய ஆரம்பித்தது.

நாம் பழக்கத்தில் உபயோகிக்கும் உயிர் என்றால் என்ன?

சுவாசத்தை சீராக்குதல், உணவு செரிக்கப்படுதல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படுதல், இரத்தம் சுத்தமாக்கப்படுதல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படுதல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படுதல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படுதல் ஆகிய இந்த செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் ஊட்டிக் கொண்டு இருப்பதையே உயிர் என்கிறோம்..

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன.... உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிறுத்தப் பட்டு உடலும் அழியத் துவங்குகின்றது.

மனிதன் தூங்கும் போதும் மரணிக்கும் போதும் ஆன்மாக்களை கைப்பற்றுவதாக இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் கூறுகிறான்.

நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது உடலின் மற்ற அங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை இறைவன் கைப்பற்றினால் நாம் இறந்து விடுவோம்.

ஆனால் இங்கு இறைவன் தூக்கத்தில் கைப்பற்றி திரும்பவும் விட்டு விடுவதாக குறிப்பிடுகிறான்.

எனவே இறைவன் கைப்பற்றுவது நமது உயிரை அல்ல. நமது ஆன்மாவை என்ற முடிவுக்கு வருகிறோம். குழப்புகிறதா?

இதனை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளங்க முயற்சிப்போம்.

அன்றாடம் நாம் பயன் படுத்தும் வாகனத்தை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

உடல் = வாகனம்
ஓட்டுனர் = ஆன்மா
என்ஜின் = மனம்
பெட்ரோல் = உயிர்

வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போது எரிபொருள் (பெட்ரோல்) காலி ஆகிவிட்டால் வண்டி நின்றுவிடும். மனிதன் இறந்து விடுகிறான்.

எரி பொருள் தீர்ந்ததால் ஓட்டுனர் (ஆன்மா) வண்டியை விட்டு இறங்கி விடுகிறார். இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும் ஆன்மாவும் உடலை விட்டு வெளியேறி விடுகிறது..

ஆன்மா, மனம், உயிர் இதில் எது, அதிக சக்தி வாய்ந்தது? என்றால் ஆன்மா தான்.

ஆன்மாவிற்கு அழிவில்லை. இந்த ஆன்மாவைத்தான் இறைவன் உறங்கும் போது தன் கைவசம் எடுத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் நமது உடலுக்கு திரும்பவும் அனுப்புகிறான்.

இப்போது உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா?

இனி ஆதாரபூர்வமான நபி மொழி ஒன்றை பார்போம்.

நபியவர்கள் கூறினார்கள்...

ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்து விடுகின்றார். (முஸ்லிம்).

இந்த நபி மொழியின் படி குழந்தையின் 40 வது நாளில் ஒரு வானவர் இறை கட்டளைபடி ஊதுகிறார் அல்லவா? அதுதான் இறைவன் அனுப்பும் ரூஹ். அதாவது ஆன்மா.

அதற்கு முன்னால் விந்தணுவும் கரு முட்டையும் சேர்ந்து சதைக் கட்டியாக 40 நாள் வரை வளருகிறதே அதுதான் உயிர்.

ஒரு பொருளுக்கு உயிர் இல்லை என்றால் அது நாற்பது நாள் தாயின் வயிற்றில் வாழ முடியாது. வளர்சியும் இருக்காது.

ஆன்மாவுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசங்களை இப்போது நாம் புரிந்து கொண்டோம்.

இந்த ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே சிறப்புத் தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

நன்மை எது தீமை எது என்பதை பகுத்தறியும் பகுத்தறிவை இறைவன் மனிதனுக்கு மட்டுமே விஷேசமாக வழங்கியுள்ளான்...

பாஜக வின் ஊழல் லிஸ்ட்...


காங்கிரஸ் கட்சிலாம் பக்கத்தில் நிற்க முடியாது, அந்த அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறார்கள் பாஜக.

மோடி வந்த மூன்று ஆண்டுகளின் கார்ப்பரேட்  வளர்ச்சியை பாக்கும் போது தலை சுற்றுகிறது...

திராவிடத்தால் வீழ்ந்தோம்...


திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

தமிழருக்கென ஓர் அரசியல் அமைப்பு ஏற்ப்படுவதைப்  பெரியார் எவ்வாறு வஞ்சகமாய் தடுத்தார் என்பதை இங்கே காண்போம்.

சேலத்தில் 1944ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மாநாட்டில் 'நீதி கட்சி' எனப்பட்ட தென்னிந்தியா நலவுரிமைக் கழகத்தின் பெயரைத் 'திராவிடர் கழகம்' எனப் பெயர் மாற்றினார் பெரியார். ஆனால், கி.ஆ.பெ விசுவநாதன், அண்ணல் தங்கோ, மு.தங்கவேலு, சவுந்திர பாண்டியன் ஆகியோர் நீதி கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றுவதற்கு மாறாகத் 'தமிழர் கழகம்' என்று பெயரிட வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தனர். பெரியார் அடாவடித் தனமாக அதை ஏற்க மறுத்துவிட்டார்.

"திராவிடர் என்பதற்கு மாறாகத் 'தமிழர்கள்' என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள் தாம் என்று கூறி அதில் சேர்ந்து கொள்கிறார்கள். 'நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; அப்படி இருக்கும்போது எப்படி எங்களைத் தமிழர்கள் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்?' என்று கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் தமிழர் என்பது 'தமிழ்(திராவிட) பண்புள்ள' மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்க கூடுமானாலும், இன்று அது மொழிப் பெயராக மாரிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் 'ஆரியப் பண்புடைய' மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்ற உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிரார்கள்.அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த, அந்த சேர்க்கையைப் பயன்படுத்தி விடுகிறார்கள்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 556)

என்பதே பெரியாரின் கருத்தாக இருந்தது.

"திராவிடர் என்று நம்மைக் சொல்லிக்கொள்ளவே பெரும்பாடாக இருக்கும்போது, தமிழர் என்று எல்லாரையும் ஒர்மையாக்க முயற்சிஎடுப்பதால் இன்னல்கள் கூடும். இங்கேயே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாத்துரை தெலுங்கர். இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொருத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன். ஆனால், எல்லா கனடியர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள், தெலுங்கரும் அப்படியே. எனவே 'திராவிடக் குமுகத்தின்' உறுப்பினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு' என்று வரையறுத்து கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்" (பெரியார் ஈ.வே.ரா, சிந்தனைகள், முதல் தொகுதி, பக் 550)

இவ்வாறாக தமிழர்க்கென ஒரு வலுவான அரசியல் அமைப்பு உருவாவதை பெரியார் முறியடித்தார். பெரியாரின் 'திராவிட நாடு' கொள்கையை கன்னடர்களோ,தெலுங்கர்களோ,மலையாளிகளோ தொடக்கத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பெரியாருக்கு நன்கே தெரியும். இதனால், தமிழகத்தில் மட்டுமே அத்திராவிட கொள்கைக்கு கடை விரிப்பது என்னும் தெளிவு பெரியாருக்கு அப்போதே இருந்தது கண்கூடு.

தமிழர் பெரும்பாலாக உள்ள கூட்டங்களில் எல்லாம் 'தமிழராகிய நாம்' என்று பேசும் பெரியார், 'நான்' என்று சொல்லும் போதெல்லாம் 'கன்னடராகவே' இருந்தார். இதனை

'நமது மொழி தமிழ் என்றார்; எனது மொழி கன்னடம் என்றார்" (சு.அரசு திராவிட கயமை) என்ற பாடல் வரிகள் உணர்த்தும்.

இப்படி தமிழின உணர்வை அழித்து திராவிட மாயை தீணித்த தமிழினத்தின் எதிரியை வழிகாட்டி என்று சொல்லி ஏற்றுக் கொண்டவன் எல்லாம் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வான்...

சிந்தி முட்டாள் தமிழினமே...

மதுரை திருக்கோயில் நுழைவு போராட்டம் - ஒரு வரலாற்றுப் பதிவு..


1920களில் திருகோயில்களில் பட்டியல் இன சமூக மக்களை அனுமதிக்காததை எதிர்த்து எதிர்ப்புகுரல்கள் தோன்றத்துவங்கின.

 முதல் முதலாக 1927ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய நீதிகட்சியின் ஜே.என் ராமநாதன் தலைமையில் மக்கள் கூடினார்கள். ஆனால் அவர்கள் கோயில் வாசலில் தடுத்து நிறுத்தபட்டார்கள்.

அதே சமயம் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்த நீதிபதி கண்ணப்பர் தலைமையில் திருவண்னாமலை, திருச்சி மலைகோட்டை ஆகிய இடங்களில் 1927ல் ஆலயநுழைவு போராட்டங்கள் நிகழ்ந்தன. அவையும் தடுக்கபட்டன.

உடனே கண்ணப்பர் நீதிமன்றத்தில் திருவண்னாமலை கோயில் பூசாரிக்கெதிராக வழக்குப்பதிவு செய்தார்.

திருவண்னாமலை சப் மாஜிஸ்திரெட் கோர்ட்டும் "கண்ணப்பர் இந்து என்பதால் இந்துகோயிலில் நுழைய முழு உரிமை உண்டு" என தீர்ப்பளித்தது.

ஆனாலும் கோயிலுக்குள் நுழைய பொலிஸ் அனுமதிக்கவில்லை.

1920களுக்கு பின் காங்கிரஸ் கட்சி கோயில் நுழைவு போராட்டத்தை முன்னெடுத்ததும் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

காங்கிரஸ் இந்த போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்த தலைவர்கள் வைத்தியநாதய்யர், ராஜாஜி, பக்தவத்சலம், டி.எஸ்.எஸ் ராஜன் ஆகியோர். இவர்கள் அனைவருமே ஆதிக்கசாதி சமூகங்களில் இருந்து வந்தவர்கள்.

இவர்கள் தலைமையில் போராட்டம் நடந்தால் பெருவாரி மக்களின் எதிர்ப்பு குறையும் என காங்கிரச் கட்சி கருதியது

சென்னையில் காங்கிரச் அரசு அமைந்ததும் 1932ல் பி.சுப்பராயன் முதல்வராக இருந்த சமயம் அவர் பட்டியல்சாதி மக்களை ஆலயநுழைவுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். ராமலிங்கம் செட்டியார் அதை வழிமொழிந்தார்.

மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால் இதை கண்டித்து மதுரையில் "வருணாசிரம ஸ்வராஜ்ய சங்கம்" தோற்றுவிக்கபட்டது. அதன் தலைவர் நடேசய்யர்.

ஆனால் ப்ரிட்டிஷ் அரசாங்கம் இந்த பிரச்சனையில் எந்த முடிவும் எடுக்காமல் ஒத்திபோட்டு கொண்டே வந்தது.

இதனால் ஹரிஜன் சேவா சங்கம் எனும் அமைப்பை துவக்கிய வைத்தியநாதய்யர் தமிழகமெங்கும் கருத்துகணிப்பை நடத்தினார். காஞ்சிபுரம், மதுரை, கும்பகோணம், திருவரங்கம் என முக்கிய திருகோயில் நகரங்களில் பெருவாரியான மக்கள் ஆலய நுழைவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


வெறுமனே கருத்துகணிப்புடன் நில்லாது மதுரை மீனாட்சியம்மன் தேவஸ்தான கமிட்டி தேர்தலில் நின்ற ஹரிஜன் சேவா சங்க அமைப்பின் ஆறு வேட்பாளர்களும் வெற்றி பெற்று தேவ்ஸ்தான போர்டில் இடம் பிடித்தார்கள்.

இது "வருணாசிரம ஸ்வாராஜ்ய சங்கத்திற்கு" மிகப்பெரும் பின்னடைவாக கருதபட்டது.

1937ல் ராஜாஜி முதல்வரானார். அதன் பின் "மலபார் கோயில் நுழைவு சட்ட்டத்தை" கொன்டு வந்தார். சட்டம் நிறைவேறியது.

அதன்பின் ஆலய நுழைவுக்கு ஜூலை 8 1939 எனும் தேதி குறிக்கபட்டது.

கலவரம் நடக்கலாம் எனும் சூழலில் வைத்தியநாத ஐயருக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரல் கொடுத்தார்.

தேவர் ஆதரவு கிடைத்தது என்றவுடன் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தது. சொன்ன தேதியில் வைத்தியநாதய்யருடன் எல்.என்.கோபால்சாமி, கக்கன் (பின்னாளைய மந்திரி) மற்றும் ஆறு பட்டியல் சாதி இனமக்கள் நுழைந்து மீனாட்சியை தரிசினம் செய்தார்கள். அவர்களை தடுக்க ஆலயத்தில் ஒருவர் கூட இல்லை.

நடேசய்யர் விடவில்லை...உடனே வெள்ளைகார கவர்னருக்கு தந்திகளையும், கடிதங்களையும் அனுப்பினார். "தீட்டுபட்ட" மீனாட்சி ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடத்தவேண்டும் என்றெல்லாம் கோரினார்.வைசிராய், கவர்னர் வரை புகார்கள் போக, அன்ரைய சென்னை கவர்னர் எர்க்ஸைன், மற்றும் வைசிராய் ஜான் ஹோப் (இவர் பெயரால் கோவையில் ஓப் காலேஜ் எனும் பிரபல பஸ்நிலையம் உள்ளது) ஆகியோர் அவற்றை புறக்கணித்து ஆலயநுழைவு சட்டத்திற்கு முழு அனுமதி அளித்து அதை சட்டமாக்கினார்கள்.

ஆக ஆலயநுழைவு போராட்டம் என்பது அன்றைய நீதிகட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் அனைத்து சாதி மக்கள் ஆகியோரின் ஒருமித்த போராட்டத்தின் விளைவாக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சாத்தியமானது.

இதில் வியப்பான விஷயம் என்னவெனில் இவர்கள் எல்லாரும் அப்போது ஒருவருக்கொருவர் கடுமையான கருத்து முரன்பாடு கொன்டிருந்தார்கள் என்பதுதான்.

ஆனால் பொதுபிரச்சனை என வந்தபின் அதில் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றியை எட்டினார்கள்.

இந்த ஒற்றுமையை இன்னபிற மக்கள் கோரிக்கைகளுக்கும் இன்றைய கட்சிகள் காட்டினால் காவிரி உள்ளிட்ட பல பொது பிரச்சனைகளை தீர்க்கலாம்...