03/06/2018

சாகர்மாலா வெளிப்படும் உண்மைகள்.. அதிமுக எடப்பாடி பழனிசாமி முதல்வரானது ஏன்...


ஆதாரம் :  https://www.kuriyeedu.com/?p=48670


(எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட ஆவணம்)..


http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8210000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article9559426.ece





(பொன்ராதாகிருசுணன் கிழற்கு கடற்கரை சாலை விரிவாக்கம் பற்றி)..

துளசி...


துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.

துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு  பெண் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது...

திமுக தெலுங்கர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி...


1) மூலிகையின் பெயர் - இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் - காஸ்டஸ் பிக்டஸ் (Kastas piktas ).

3) தமிழ் பெயர் - கோசுட்(ஷ்)டம் (Kostam).

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லி.

4) PLANT FAMILY: Costaceae.

5) BOTANICAL NAME: Costus இக்நேஉசு(ஸ்).

6) பயன் தரும் பாகம் -: இலை.

7) வளரியல்பு..

இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோசுட்(ஸ்)டா ரிகா (Costa Rica) நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர்.

கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நாற்றங்கால்(nursery) உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம்.

இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும்.

ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

8) மருத்துவப் பயன்கள்...

சர்க்கரை நோயாளிகளுக்கு காசு(ஸ்)டசு(ஸ்) பிக்டசு(ஸ்) என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது.

காசுடசு பிக்டசு  என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.

இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை.

இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும்.

ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காசுடசு பிக்டசு அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study...

தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. ANTI Diabetic herb..

பல்லாண்டு பயிரான காசுடசு பிக்டசு தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்...

அரசாங்கம் ஏன்..? இப்படி செய்ய வேண்டும்...


ஏனெனில் இந்த அடிமை கட்டமைப்பை தாண்டி நீங்கள் ஒருபோதும் யோசிக்ககூடாது என்பதற்காக...

வீரப்பனாரும் தமிழர் விடுதலை உணர்வும்...


தமிழ் நாட்டுக் கொடியானது முதன்முதலாக 1968ல் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரி (தற்போது TNAU) மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு ஜனவரி 25ம் நாள் வ.உ.சி பூங்காவில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏற்றப்பட்டது...

வீரப்பனார் தமிழர் விடுதலைக் குழுக்களான..

தமிழர் நாடு விடுதலைப் படை (TNLA)..

தமிழர் நாடு மீட்புத் துருப்புகள் (TNRT)..

ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி உருவாக்கிய போது காட்டில் தமிழர் நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது...

இந்த உண்மையை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தான் நிதர்சனம்...


இந்த அரசாங்கம் உங்களை கொல்ல பார்க்கிறது என்று நான் கூறுவதை உங்களால் நம்ப முடியவில்லை என்றால்,

இதில் நான் கூறி இருப்பதை வைத்து நீங்கள் உங்கள் தேடுதலை தொடங்குங்கள்..

இதைப்பற்றி ஒவ்வொன்றாக அடுத்த வரும் பதிவுகள் வரும்...

விகடனில் வள்ளிநாயகம் சுட்கி...


தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 என்று சொல்லி, கணக்கை முடித்துக்கொள்ளப் பார்க்கிறது காவல்துறை. ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாக இருக்கும். அதை, போலீஸார் மறைக்கிறார்கள்” என்று பகீர் கிளப்புகிறார்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள்.

மூத்த வழக்கறிஞர்களின் உதவியுடன் கிராமம் தோறும் சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைச் சேகரித்து வருகிறார் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம். அவரைச் சந்தித்தோம்.

தூத்துக்குடியில் மக்களின் போராட்டம், வன்முறையாக மாறியது எப்படி?

அந்த வன்முறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. மாதா கோயில் முன்னிருந்து பேரணி தொடங்கியது. வரும் வழியில் எந்த இடத்திலும் வன்முறை இல்லை. சுமார் 8 கி.மீ தூரம் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நடந்தே வந்தனர். சிலரை மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் போலீஸ் அனுமதித்தது. அங்கு அவர்கள் நுழைந்தபோதே, உள்ளிருந்து கரும்புகை வந்துவிட்டது. ஏற்கெனவே அங்கிருந்த போலீஸார், வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். உள்ளே சென்ற மக்கள் வெளியே ஓடிவந்தபோது, போலீஸார் அவர்கள்மீது தடியடி நடத்தினர். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அந்தச் சூழலை எதிர்பார்த்திருந்த போலீஸார், முன்னெச்சரிக்கையின்றி மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டனர்.

வன்முறையில் மக்கள் ஈடுபட்டதால், துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாயிற்று என்கிறதே அரசு தரப்பு?

அதற்கான ஆதாரங்களைக் காட்டட்டும். பேரணி சென்ற வழியில் இருந்த சி.சி.டி.வி கேமராக்கள் வேலை செய்யவில்லை என போலீஸார் சொல்கிறார்கள். ஆட்சியர் அலுவலக கேமராக்களும் வேலை செய்யவில்லை என்றார்கள். இப்போது எடிட் செய்யப்பட்ட சில காட்சிகளை மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சென்ற சில போராட்டக்காரர்களும் உடனே வெளியே விரட்டி அடிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த வாகனங்கள் எப்படி எரிக்கப்பட்டன? எரித்தது யார்? போலீஸாரே எல்லாவற்றையும் செய்துவிட்டு மக்கள்மீது பழிபோடுகிறார்கள். போலீஸார் நிதானமாக, சிலரை மட்டுமே குறிபார்த்துச் சுட்டுள்ளனர். அது தெரிந்து விடாமல் இருக்க, அப்பாவிகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் எல்லோருக்குமே இடுப்புக்கு மேலே குண்டு பாய்ந்துள்ளது. இடுப்புக்குக் கீழே காயமடைந்தவர்கள் எல்லோருமே இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டுள்ளனர். அதாவது, அடித்துக் கொல்லப் பட்டுள்ளனர்.

தூத்துக்குடி ஏ.எஸ்.பி-யான செல்வ நாகரத்தினம், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுப் பேரணியின்போது, முன்வரிசையில் சென்ற சிறுவர்களைத் தாக்கினார். அதனால், கூட்டத்தினர் கல்வீசியதில் ஏ.எஸ்.பி தலைதெறிக்க ஓடினார். அந்த அவமானம் அவருக்குள் இருந்துள்ளது. அதனால்தான், திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போதிலும், அங்கு சென்று பணியை ஏற்காமல் இந்தப் போராட்டம் வரை அவர் காத்திருந் துள்ளார். செல்வ நாகரத்தினமும் கூட்டத்தினரை நோக்கிச் சரமாரியாகக் கைத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அத்துடன், கலவரம் நடந்த சில மணி நேரத்துக்குப் பின்னர், திட்டமிட்டே திரேஸ்புரம் சென்று ஜான்சி என்பவரை அருகிலிருந்து சுட்டிருக்கிறார். அத்துடன், அண்ணாநகரில் கந்தையா என்பவரைச் சுட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மக்கள் அணிந்திருந்த செயின், தாலி, மோதிரம் போன்றவற்றையும் செல்போன்களையும் போலீஸார் பிடுங்கியுள்ளனர். இதுபோல ஏராளமான அராஜங்களை போலீஸார் நிகழ்த்தியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு உட்பட போலீஸ் தாக்குதலில் பலியானவர்கள் எத்தனை பேர்?

13 பேர் மட்டுமே துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக போலீஸ் சொல்கிறது. அது, உண்மையல்ல. பல உடல்களை ரகசியமாக வாங்கிச்செல்லுமாறு உறவினர்கள் நிர்பந்திக்கப் படுகின்றனர். மே 22-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், மறுநாள் இரவு வரையிலும் 23 உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டன. மே 24-ம் தேதி மேலும் இரு உடல்களைக் கொண்டுவந்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஐந்து பேர் 25-ம் தேதி இறந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அத்துடன், நெல்லை அரசு மருத்துவ மனையிலும் சிலரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இறந்தவர்கள் பற்றிய தகவல்களை அரசுத் தரப்பில் தெரிவிக் காமல் மறைப்பதால், நாங்களே கிராமம்தோறும் சென்று கணக்கெடுப்பு நடத்திவருகிறோம். இதுவரை 20 பேருக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. போராட்டத்தின்போது பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நிறைய வந்திருப்பார்கள். அவர்கள் பற்றிய கணக்குகளைச் சேகரிப்பதில் சிக்கல் உள்ளது. இது குறித்த உண்மையான விவரங்களை அரசு வெளியிட வேண்டும். அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்...

இந்திய வங்கிகள் உங்களை எப்போதும் கடனாளியாகவே வைத்திருக்க விரும்புகின்றன...


ஏனெனில் அவர்களுக்கு வந்த கட்டளை அது...

இங்கு ஒவ்வொன்றுமே வணிகம்தான்...


வணிகம் அவசியம், அந்த வணிகம் மக்களுக்குள் நடக்க வேண்டுமே தவிர,

மக்களை வைத்து வணிகம் செய்யக்கூடாது..

இங்கு அதுதான் நடக்கிறது..

வணிகர்களின் பார்வையில்

மக்கள் - விலைபொருள்கள்...

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரிலுள்ள பிரம்மா கோவிலுக்குள் மூத்தக்குடிமகன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை, தலித் என்ற காரணத்தால் நுழைய அனுமதிக்கவில்லை...


பிஜேபி, இராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவராக்கிவிட்டோம் என மிக வஞ்சகமாக பெருமை கொண்டிருந்த பெருச்சாளிகள் எல்லாம் இந்த அவலத்தை எதிர்த்து மூச்சு கூட விடவில்லை...

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, காலை பிரேக்கில் சாப்பிட பிஸ்கட் கொடுத்தனுப்பும் பெற்றோரைப் பார்க்க முடிகிறது...


இதனால் மதிய உணவை முழுமையாகச் சாப்பிட முடியாமல் போகும். பிரேக்கில் பழங்களைச் சாப்பிடக் கொடுங்கள்.

இது பசியைத் தூண்டுவதுடன், கூடுதல் சத்துகளைக் கொடுக்கும்.

மாலை நேரத்தில் பிஸ்கட் சாப்பிடுவது, அவர்களை மந்தப்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது...

இயற்கை வாழ்வியல்முறை இருமல், மார்பு சளியை குணமாக்கும் சித்த மருத்துவ வைத்திய முறைகள்...


தலை சுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி  காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக: ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி  பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல்  குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து  சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

தலைபாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம்  குறையும்.

மார்புச்சளி நீங்க: ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.

மூக்கடைப்பு நீங்க: ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.

ஜலதோஷம் குணமாக: முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட  குணமாகும்.

வாந்தி நிற்க: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

குமட்டல்: கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது...

அனைவரும் இந்த வரதட்சணையை எதிர்ப்பது போல் இந்த சமூகத்தில் வாழ்கிறார்கள்...


அப்படி இருக்க ஏன்..? வரதட்சணை கொலைகளும், கொடுமைகளும் ஏன்..? அதிகமாகின்றன...

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்...


தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள்..

சோழர்களின் படைகளில் இவைகள் காவல், மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது….

தற்ப்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது…

நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்…

தற்ப்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ்த்தேசிய மக்கள் வளர்க்க வேண்டும்…

நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது.

உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெசுமாண்ட் மோரிசு எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப்படம் அலங்கு நாய்தான் என்பது உறுதியாகிறது.

கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.

தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு. வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை என்று நாய்கள் குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார். தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட் மோரிசுதான்.

இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது. வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், தமிழர்களின் நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின. அவற்றில் முக்கியமானது அலங்கு. அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்.

ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் வடுக வந்தேறிகளான நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள்.

தமிழரின் வரலாறு திட்டமிட்டு தமிழனிடமிருந்து மறைக்கப்பட்டு தமிழர்களை அழித்தனர்.

இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட் மோரிசு, இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமசுதான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது.

அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும். நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து நடக்கும்.

இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும். சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை. ராசபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்தே போனது. அதே போல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்தும் டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்.

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை. இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பதும் உண்டு. செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட் மோரிசு...

விழித்துக்கொள் தமிழினமே...


மனிதன் தன் சுயநலத்திற்காக முற்றிலும் அழித்த அதிசயப் பறவை இனம்...


பிரிட்டனில் ஏறத்தாழ முழுவதுமாக நிறைவுபெற்ற டூடூ பறவையின் எலும்புக் கூடு, 2016 நவம்பர் மாதம் ஏலத்திற்கு வந்தது.

ஒரு தனிப் பறவையின் எலும்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டூடூ எலும்புக்கூடு உலகிலேயே ஒன்றுதான் உள்ளது. அது மொரிஷியஸில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒரு நூற்றாண்டில் விற்பனைக்கு வரும் முதல் டூடூ எலும்புக்கூடு இதுவாகும்; பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட எலும்புகளை கொண்டு இந்த எலும்புக்கூடு மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமியில் வாழ்ந்த ஒரு அதிசயப் பறவை ‘டூடூ’(Dodo).

ஆனால், இன்றைக்கு அந்த அதிசயப் பறவை உயிரினங்களின் அழிவுக்கான குறியீடாக மாறிவிட்டது. ‘டூடூ போல் சாகாதே’ (‘as dead as a dodo’) என்னும் பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. மிக மிக சாதுவான பறவையாக டூடூ இருந்தது தான் அழிந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.

டூடூ மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடாத பறவையாக இருந்திருக்கிறது. பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவ அமைப்பைக் கொண்டிருந்தாலும் காண்பதற்கு நட்பான பறவையாகவும் அது இருந்து உள்ளது. இதனால் டூடூவை கேலிக்குரிய பறவையாகப் பார்த்திருக்கிறார்கள். பறக்க இயலாத சிறிய சிறகுடைய பறவை இது. இந்த இயல்பால் ஆபத்து வந்தால்கூட டூடூ மிக எளிதில் சிக்கிக்கொண்டிருக்கிறது, எதிர்த்துச் சண்டையும் இடுவதில்லை. டூடூவின் அழிவை, போர்க் குணம் இல்லாத எந்த இனமும் காலமாற்றத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போக நேரிடும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இந்தியப் பெருங்கடலில் மொரீஷியஸ் என்னும் அழகிய தீவைப் பூர்வீகமாகக் கொண்டது டூடூ. இந்தத் தீவில் பல ஆண்டுக் காலத்துக்கு மனிதர்களே இல்லை. மனிதர்கள் காலடி படாதவரை டூடூக்கள் இங்கு பெருமளவில் செழித்து வாழ்ந்திருக்கின்றன. முதன்முதலில் கடல் மூலம் இந்தத் தீவுக்கு வந்த அரபியர்கள் ஓய்வு எடுப்பதற்காக இறங்கியுள்ளனர்.

அடுத்து, 1507ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் இந்தத் தீவுக்கு வந்து தங்கியுள்ளார்கள். இவர்கள்தான் டூடூவை முதலில் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. டூடூ என்ற பெயரை அவர்கள்தான் இட்டிருக்க வேண்டும். அதற்குப் போர்த்துகீசிய மொழியில் முட்டாள் என அர்த்தம். டூடூக்கு முட்டாள் பறவை என்ற பெயரும் உண்டு.

ஆனால், 1598இல் மொரிஷியஸுக்கு வந்த டச்சுக்காரர்கள்தாம் டூடூவைக் கண்டுபிடித்ததாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. பெருமளவில் டூடூ வேட்டையாடப்பட்டது டச்சுக்காரர்களின் கால கட்டத்தில்தான். அவர்கள் மெய்பூ என்னும் நகரை உருவாக்கி, அதைத் தலைமையிடமாகக்கொண்டு மொரீஷியஸை ஆண்டு வந்தார்கள்.

மொரீஷியஸ் இப்படி நாடாக ஆன பின்புதான் டூடூவின் அழிவுகாலம் தொடங்கியது. டச்சுக்காரர்களுக்குப் பிறகு பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர். மனிதக் குடியேற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தன. அதனால் இந்தத் தீவில் நாய்கள், எலிகள், பூனைகள், பன்றிகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கையும் பெருகின.

டூடூ சண்டையிடும் இயல்பு இல்லாத பறவை. புற்களால் கூடுகள் அமைத்து, அது இட்ட முட்டைகள் இந்த விலங்குகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டன. டூடூவின் எண்ணிக்கை சட்டெனக் குறைந்தது. 1680ஆண்டுக்குள் அவை முற்றிலும் அழிந்துவிட்டன. மனிதர்கள் கண்ணில் பட்டு அதிகபட்சம் 100-150 ஆண்டுகளுக்குத்தான் அவற்றால் உயிர் பிழைத்திருக்க முடிந்திருக்கிறது.

டச்சு ஓவியர் ரோலண்ட் சாவ்ரே 1624இல் டூடூவை படமாகத் தீட்டியுள்ளார். இதுதான் டூடூவைத் தெரிந்துகொள்வதற்கான முதல் சாட்சியாக இருந்தது. அதன் பிறகு பலரும் ஓவியங்களில் டூடூவைப் பதிவுசெய்துள்ளனர். ஓவியங்களின் அடிப்படையில் அதன் உடல் சாம்பல் நிறத்திலும் கால்கள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன. டூடூ வாழ்ந்த காலத்தில் அது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அது தடமே இல்லாமல் எலும்புத் துண்டுகள்கூட மிஞ்சாமல் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

மொரீஷியஸ் பிரிட்டிஷின் காலனியாக இருந்தபோது, ரிச்சர்டு ஓவன் என்னும் பிரிட்டிஷ் உயிரியியலாளர், 1865இல் உதிரிஉதிரியாகக் கிடைத்த எலும்புகளை வைத்து டூடூவின் எலும்புக் கூட்டைத் திரும்ப அமைத்தார். அதை வைத்துதான் டூடூவின் உருவத்தை ஓரளவு யூகிக்க முடிகிறது. சுமார் 3 அடி முதல் 6 அடி உயரத்துடன் டூடூக்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எடை சுமார் 10இலிருந்து 20 கிலோ வரை.

டூடூவிற்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. மொரீஷியஸில் இருந்த கல்வாரியா என்னும் மரத்தின் பழங்கள்தான் டூடூவின் விருப்ப உணவு. டூடூ இப்பழத்தைச் சுவைத்த பிறகு, அதன் கழிவுடன் வெளியேறும் விதைதான் முளைக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். டூடூ அழிந்ததால் கல்வாரியா மரமும் அழிந்து போய்விட்டது. ஒரு உயிரினத்தின் அழிவு, சங்கிலித் தொடராக அது சார்ந்துள்ள மற்ற உயிரினங்களின் அழிவாகவும் மாறுவதை இதிலிருந்து உணரலாம்.

ஒரு காலத்தில் வேடிக்கைப் பொருளாக இருந்த டூடூ இந்த உலகில் இருந்து அற்றுப்போய் விட்டாலும், சுதந்திரம் அடைந்துவிட்ட இன்றைய மொரீஷியஸின் பெருமைக்குரிய அரசுச் சின்னமாக அது மாறியிருக்கிறது...

கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம்...


காவிரிக் கலவரம், தட்டிக்கேட்ட தமிழர் வீரப்பனார்...


1991 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி.

வீரப்பனார் தமது தம்பி அர்ச்சுணனிடம் காவிரியைக் கடக்க பரிசல் ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தார்.

இரண்டு நாட்களாகியும் அர்ச்சுணன் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை.
வீரப்பன் தமது தம்பியிடம் இது பற்றி விசாரித்தார். அர்ச்சுணன் தயங்கித் தயங்கிக் கூறினார்.

அண்ணே காவிரியை தமிழ்நாட்டுக்குத் தெறந்துவிட கர்நாடகா மறுத்துட்டதாம்.
கர்நாடகாவுல இருக்குற தமிழ்க் கிராமத்துலல்லாம் ஒரே கலவரமாம்.
நம்ம  மக்களோட சொத்துபத்த கொள்ள அடிச்சுட்டு விரட்டுதானுவ.
அதான் பரிசலுக்குத் தட்டுப்பாடு.

வீரப்பன் குதித்தெழுந்தார். மடையா இத ஏன் நீ மொதல்லயே சொல்லல? என்று கடிந்து கொண்டே விருட்டென்று தன் துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டார் அவருடன் இருந்த தளபதிகள் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டனர்.

அப்போது அர்ச்சுணன் அண்ணே அண்ணிக்கு பிரசவமாகுற நேரம்.
நீங்க இங்க இருக்குறது ரொம்ப முக்கியம். சேதி தெரிஞ்சா நீ புறப்புட்டுருவனு தான் சொல்லாம இருந்தேன் என்றார்.

அதற்கு வீரப்பன் சரி நீ இங்கயே இரு. மத்தவங்க என்னோட வாங்க என்று கூறிக்கொண்டே வேகமாக ஆற்றங்கரைக்கு ஓடினார். அவரது தளபதிகளும் பின்தொடர்ந்து ஓடினர்.

ஆற்றங்கரைக்கு வீரப்பன் வந்ததும் எதிரில் தமிழ் மக்கள் தமது வீடு நிலமெல்லாம் விட்டுவிட்டு கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டு பரிசலில் கண்ணீர் சிந்திய முகத்தோடு கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

அங்கு ஓடோடிச் சென்ற வீரப்பன் அவர்கள் என்ன இது? எப்படி ஆச்சு? என்று வினவினார்.

அந்த மக்கள் காவிரில தண்ணி தெறந்து விடனும் கேட்டதுக்கு. நம்ம பங்கு தண்ணீரையும் குடுக்காம இந்தக் கன்னடனுங்க, இங்க காலங்காலமா வாழுற எங்கள எல்லாத்தையும் புடுங்கிட்டு வெரட்டுறானுவ. தட்டிக் கேக்க யாருமில்ல என்றார் ஒருவர்.

இன்னொருவர் கன்னட வனத்துறையும் போலீசும் இதுக்கு உடந்தை.

பெங்களூர்ல கலவரம் நடந்து நம்ம மக்கள கொன்னுட்டானுவ.

மஞ்சள் கயிறு தாலிய வச்சு அடையாளம் கண்டுபிடிக்கிறானுக.

அடி, உதை, கொள்ளை தான்.

காலங்காலமா இதுதான் நடக்குது என்றார் இன்னொரு தமிழர்.

வீரப்பன் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார் .

யார் இத தூண்டிவிடுறது? என்று மீசையை முறுக்கியபடி கேட்டார்.

ஒரு கட்சியா ஒரு டிபார்ட்மென்டா எல்லாரும் சேந்துதான் செய்றானுவ.
மத்த மாநிலத்தோடயும் தண்ணி பிரச்சன இருக்கு. ஆனா, தமிழன்னா மட்டும் அடிக்கிறானுக. கேக்க நாதியில்ல பாரு.
இதுல மட்டும் ஒத்துமையா இருக்கானுக என்றார் ஒரு தமிழர்.

ஏன் இல்லை இந்த வீரப்பன் இருக்கான் என்று உறுமியபடி பரிசலில் ஏறி தமது தளபதிகளுடன் அக்கரைக்குப் போனார்.

அக்கரையில் தமிழரை விரட்டி அவர்கள் வெளியேறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கன்னடவர், ஆற்றங்கரையில் 20, 25 பேர் வீரப்பன் தலைமையில் கண்களில் கொலை வெறியுடன் பரிசலில் இருந்து துப்பாக்கிகளைப் பிடித்தபடி இறங்குவதைப் பார்தததுதான் தாமதம், காலியான அந்த தமிழ்ச் சிற்றூரில் வீடுகளுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.

மற்றவர் தலைதெறிக்க ஓடினர்.

தமிழர் வெளியேறக் கெடுவிதித்த கர்நாடக வனத்துறை காணாமல் போய்விட்டிருந்தது.

ஊருக்குள் நுழைந்த வீரப்பனார்,
எவன்டா தமிழன் மேல கைய வெச்சது.
ஆம்பளயா இருந்தா வெளிய வாங்கடா பாப்போம்.

தமிழனுக்கு யாருமில்லனு நெனச்சீங்களா?

இனிமே ஒரு தமிழனத் தொட்டீங்க தொலச்சிருவேன் என்று முழங்கியபடி தமது ஆட்களை வீதிகளில் தேடச் சொன்னார்.

அப்போது அங்கே சில கன்னடர் வர அவர்கள் வீரப்பனிடம் கொண்டு வரப்பட்டனர்.

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்டா? என்று வீரப்பன் மீசையை முறுக்க
வீரப்பனைப் பார்த்து நடுநடுங்கிய அவர்கள்.

ஐயா, நாங்க ஒண்ணும் பண்ணல தமிழர் எங்க கூடப்பிறந்தவங்க மாதிரி  என்று குழறியபடி சொன்னார்கள்.

ஊருக்கெல்லாம் சொல்லுங்க. இந்த வீரப்பன் இருக்குற வர எவனாவது
எங்க மக்களத் தொட்டீங்க தொலஞ்சீங்க என்று எச்சரித்து விட்டு அந்த சிற்றூரிலிருந்து பரிசல் ஏறி மறுகரைக்கு வந்தார்.

ஆற்றங்கரையில் நின்ற அர்ச்சுணன் அண்ணே உங்களுக்கு ரெண்டாவது பெண்கொழந்த பிறந்திருக்கு என்று கூறினார்.

அதன் பிறகு அவர் தம் மனைவியை பார்க்கக் காட்டுக்குள் சென்றார்.

இது சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான்  காவிரிப் பிரச்சனை  தீவிரமடைந்திருந்தது.
அப்போதே வீரப்பனாருக்குத் தெரிந்திருந்தால் கன்னடவருக்குத் தக்கப் பாடம் புகட்டியிருப்பார்.

ஆனால், தமிழர் அனைவரும் கிட்டத்தட்ட வெளியேறிய பிறகே வீரப்பனாருக்கு அது தெரியவந்தது.

தவிரவும் வீரப்பனார் அப்போது தமிழ்ப் போராளியாக மாறியிருக்கவும் இல்லை.

ஒரு கடத்தல்காரனாகத்தான் இருந்தார்.

ஆனாலும் தமது இனத்தின் மேலிருந்த பற்றினால் தமது மனைவி அடர்ந்த காட்டில் பிள்ளைபேறு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதும் தமது மக்களைக் காக்கப் பாய்ந்தோடினார்.

வீரப்பனார் தமிழருக்காக முதன்முதலில் வெளிப்படையாகக் குரல் கொடுத்த நிகழ்வு இதுவே ஆகும்...

இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்...


காவிரி ஆணையத்திற்கு தற்காலிகத் தலைவர் யு.பி. சிங்: தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜக மோடி அரசின் வஞ்சகம் தொடர்கிறது...


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்  பெ. மணியரசன் அறிக்கை...

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நடுவண் நீர்வளத்துறையின் செயலாளர் யு.பி. சிங்கை தற்காலிகத் தலைவராக நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அமர்த்தியிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. யு.பி. சிங் நான்கு மாநிலங்களுக்கும் உரிய பிரதிநிதிகளுடையப் பெயரைத் தருமாறு அந்தந்த மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பப்போவதாகக் கூறப்படுகிறது.  இந்த ஏற்பாடு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவர் நியமித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு வழங்கவில்லை. தனி அதிகாரத்துடன் கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று கூறியதுடன், அவருக்குரிய தகுதிகளையும் உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது.

இப்பொழுது யு.பி. சிங் நடுவண் நீர்வளத்துறையின் முழுநேர அதிகாரியாவார். ஒரு கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நியமனம், காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னதிகாரம் இல்லாத நடுவண் நீர்வளத் துறையின் ஒரு துணைக் குழுவாக (Sub committee) ஆக்குவதாகும்.

நடுவண் நீர்வளத்துறையின் கட்டளைகளை ஏற்கெனவே பல தடவை கர்நாடக அரசு செயல்படுத்த மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்த மறுக்கும் கர்நாடகம், நடுவண் நீர் வளத்துறைத் துணைக் குழுவின் ஆணையையா செயல்படுத்தும்?

அடுத்து, விரைவில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் என்று நீர்வளத்துறை சொல்கிறது. விரைவில் என்றால் எத்தனை நாளில்? சில நாட்களில் நிரந்தரத் தலைவர் அமர்த்தப்படுவார் எனில், அதற்குள் தற்காலிகத் தலைவர் ஏன் தேவைப்பட்டார்?

உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், ஆறு வார காலத்திற்குள் காவிரி செயல் திட்டத்தை உருவாக்கி அறிவிக்குமாறு நடுவண் அரசுக்குக் கட்டளையிட்டிருந்தது. அதைச் செயல்படுத்தாமல், திட்டமிட்டு காலங்கடத்தி, கடைசி நேரத்தில் 29.03.2018 அன்று அந்த செயல் திட்டம் பற்றியும், மற்ற விவரங்கள் பற்றியும் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப் போவதாகவும் அதற்குக் கால அவகாசம் 3 மாதங்கள் வேண்டுமென்றும் கோரியதுதான், நிதின் கட்கரி தலைமையிலுள்ள நடுவண் நீர்வளத்துறை! அதன்பிறகும், காலம் தள்ளித்தள்ளி மே 18 வரை இழுத்தடித்தவர் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்.

இவர் நடுநிலை தவறியவர் என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இவர் அணுகிய விதத்திலிருந்து தெரிய வந்தது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், அதையும் அதிகாரமில்லாமல் அமைத்து தமிழ்நாட்டிற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டும் அநீதியை மோடி அரசு தொடர்கிறது என்பதற்கான அடையாளம்தான், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பது.

சட்டக்கடமையை நிறைவேற்ற மறுத்து தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடு காட்டும் மோடி அரசின் வஞ்சகத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

தமிழ்நாடு அரசு இந்தத் தற்காலிக பணி அமர்த்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

மோடி அரசு யு.பி. சிங் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, தகுதியும் தன்னதிகாரமும் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அமர்த்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் தமிழர்களை வஞ்சிக்கும் தந்திரத்தில், மோடி அரசு இறங்கினால் நீதி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்...

தூத்துக்குடி துப்பாக்கச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா. மனித உரிமை வல்லுனர்கள் கடும் கண்டனம்...


கல்லணையில் தொழில்நுட்பமும் கடற்கரையின் கால்தடமும்...


கரிகாலன் கட்டிய கல்லணையில் தொழில்நுட்பம் புரியாமல் ஐரோப்பா அறிஞர்கள் தவித்தார்கள்.

ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் இந்த கல்லணையை பல வருடங்கள் ஆய்விட்டார். அதன் முழுமையை புரிய கொள்ள முடியவில்லை..

Baird Smith, என்ற ஆங்கிலேய பொறியாளர் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை..

எப்படி இது சாத்தியம் ?

பெருக்கெடுத்து ஓடும் நீரில் தடுப்பு அணைகளை எப்படி கட்டி இருக்க முடியும்?

இதற்கு விடை என்ன தெரியுமா ?

மிகவுமே சுலபம்..

நீங்கள் கடற்கரைக்கு சென்று இருப்பீர்கள் தானே.. அங்கே உங்கள் கால்களை கடல் நீரில் வைக்கும் பொழுது கடல் அலைகள் உங்கள் கால்களில் படும்..

அலைகள் மறுபடியும் கடலில் சேரும் பொழுது உங்கள் காலுக்கடியில் ஒரு பள்ளம் உருவாகும் கவனித்தீர்களா ?

இது தான் கல்லணையில் தொழில்நுட்பம்..

அதாவது கனமான ஒரு பொருள் இழுத்து செல்லும் நீரில் படும்பொழுது நீரோட்ட்டம் அந்த இடத்தில தடைபடுகிறது தடைபட்டவுடன் அந்த கனமான ஒரு பொருள் அந்த இடத்தில அழுத்தம் பெறுகிறது..

இந்த சின்ன விஷயத்தை தான் கல்லணை கட்டவும் பயன்படுத்தியுள்ளனர் நம்ம மூதாதையர்கள்..

கல்லணையில் ஓடும் நீரில் கனமான பாறைகளை கொண்டு வந்து போட்டவுடன் நீரின் அழுத்தத்தில் மண்ணில் புதைக்கிறது.

அருகே சிறிது இடைவெளிவிட்டு அடுத்த கனமான பாறைகளை போட்டு கரையாத களிமண்ணில் கட்டிய அணை தான் கல்லணை..

ஆங்கிலேயன் வியந்த இந்த தொழில்நுட்பம் மிகவும் இலகுவான கடற்கரை கால்தடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் எவ்வளவு பெரிய ஆச்சர்யம் அல்லவா ?

இது அமைத்து இருப்பது டெல்டா பகுதிக்கு அருகே தான்..

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை காவேரி டெல்டா பகுதி விவசாயத்தை முன்னுதாரணமாக கொண்ட பகுதி என்று விளங்கவில்லையா ?

இந்த பகுதியில் தான் இப்ப அதி மேதாவிகள் ஹைட்ரொ கார்பனும் மீத்தேன் திட்டமும் வெகு ஜரூராக நடக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள்..

தன் மண்ணை விரும்பும் ஆட்சியாளன்
வந்தால் ஒழிய இதற்கு விடிவு இல்லை...

பாஜக அடிமைகள்... இவர்களுக்கு தேவை பணம் பதவி மட்டுமே...


இந்தியப் படையோடு மோதிய தமிழர் வீரப்பனின் நாட்டுத்துப்பாக்கி...


1989ம் ஆண்டு, வீரப்பனாரின் வாழ்வில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது.

அப்போது வீரப்பனார் கிட்டத்தட்ட பதினாறு சிற்றூர்களையும் ஒரு மாவட்டம் அளவு வனப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இரு மாநில வனத்துறையினரும் காவல்துறையினரும் வீரப்பன் பகுதிக்குள் நுழைவதும் துப்பாக்கி சண்டை நடப்பதும் பிறகு பின்வாங்கி ஓடிவருவதுமாக இருந்தனர்.

வனத்துறை ஆர்.டி.ஓ. மோகன்ராஜ் ,  ஏ.எஸ்.பி சைலேந்திரபாபு போன்றோர் பெரும்படையுடன் அடிக்கடி வீரப்பனோடு மோதிக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு வனத்துறை அதிகாரி பத்ரசாமி என்பவர் தனிப்பட்ட முயற்சியால், பயிற்சிக்காக கோவை வந்திருந்த ஒரு இந்திய படைப்பிரிவு வீரப்பன் ஆதிக்கம் செலுத்தும் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது.

140 படைவீரர்கள், அதிநவீன துப்பாக்கிகள், இரவிலும் பார்க்கக்கூடிய முகக்கண்ணாடிகள் (night vision ), வெடிகுண்டுகள், தகவல் தொடர்புக் கருவிகள் என போருக்கு ஆயத்தமான படை போல பல வண்டிகளில் அவர்கள் வந்து இறங்கினர்.

இவர்களை வரவேற்ற வனத்துறையினர் வீரப்பனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிவித்தனர்.

பின்னர் வனத்துறை மற்றும் படையினர் இணைந்த பெரிய படை உருவாக்கப்பட்டது.

தாக்குதல் வகுப்புகள் நடத்தப்பட்டன.
வரை படங்கள் அலசப்பட்டன.
யுக்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
வியூகங்கள் வகுக்கப்பட்டன.

அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்த கூடாரங்களுக்கு சற்று தொலைவில் பெரிய மீசையும், தோளில் தேன்குடுவையும் சுமந்து கொண்டு நாட்டுப்புறப்பாடலைப் பாடியபடி ஒரு மலைவாசி வந்து கொண்டிருந்தார்.

அவரைத் தடுத்து நிறுத்திய ஒரு படைக்காவலர் யார் நீ இங்க எதுக்கு வந்த? என்று அதட்டினார்.

அந்தக் காவலர் கையில் இருந்த நவீன துப்பாக்கியையே அதிசயமாகப் பார்த்தபடி...

சாமி, மலைக்காட்டுத் தேன் கொண்டு வந்திருக்கேன்; கொறஞ்ச வெல தாரன்;
வாங்கிக்கிறீயளா? என்று கேட்டார் மலைவாசி வேடமிட்ட வீரப்பன்.

அதெல்லாம் வேண்டாம். போ என்று விரட்டினார் காவலர்.

எதிரிலிருந்த மரத்தடியில் போய் உட்கார்ந்தார் வீரப்பன்.

பின் அப்பகுதி மக்களின் மெய்நாயகனான 'மலையூர் மம்பட்டியான்' பற்றிய நாட்டுப் புறப்பாடலை பாடத்தொடங்கினார்.

அந்த பாட்டைக் கேட்டு மனம் குளிர்ந்த அந்த படைவீரன் சிரித்துக்கொண்டே வீரப்பனாரை நெருங்கி.. உனக்கு வீரப்பனைத் தெரியுமா? என்று கேட்டார்.

அவன் பயங்கரமான ஆளுங்க. உங்கள மாதிரியே ஆளுகளும் துப்பாக்கியும் நெறைய வச்சிருக்கானுங்க என்றார்.

அதான் நாங்க வந்துட்டோம்ல கூடிய சீக்கிரம் முடிவு கட்டிடுறோம் என்றார்.

பின் உள்ளே சென்று அனைவருக்கும் தரப்பட்ட வீரப்பனின் புகைப்படத்தை தானும் வாங்கும் போது தான் அந்தப் படை வீரனுக்கு வெளியே நிற்பது வீரப்பன் என்று புரிந்தது.

ஓடி வந்து வெளியே சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால், வீரப்பன் மாயமாக மறைந்து விட்டிருந்தார்.

காட்டிற்குத் திரும்பிய வீரப்பன் தமது வேடத்தைக் கலைத்தபடி தனது தளபதிகளிடம் நமக்காவத்தான் வந்திருக்கானுக, கல்குவாரிக்குப் போய் வெடிமருந்து வாங்கி வைங்க. இன்னைக்கு பொழுது சாஞ்சதும் நம்மள தாக்கவருவானுக போலத் தெரியுது  என்று கூறினார்.

மறுநாள் இந்தியப்படை வனத்துறையினருடன் இணைந்து வீரப்பன் பகுதிக்குள்  வண்டி வண்டியாக நுழைய வீரப்பனின் ஆட்கள் முதலில் அந்த வண்டிகளை நோக்கி சுட்டு மோதலை ஆரம்பித்தனர்.

இருதரப்பிலும் கடுமையான துப்பாக்கிச் சூடுகள்.

தொடர்ந்து ஆறுநாட்கள் ஒரு போரே நடந்தது.

ஆனாலும், வெறும் நாட்டுத் துப்பாக்கிகளும், பாறையை உடைக்கும் வெடிமருந்தையும் வைத்தே வீரப்பன் படை அந்த பெரிய படையை எதிர் கொண்டது.

வீரப்பனுக்கு இழப்பு அதிகம் என்றாலும் அந்தப் படையினரால் வீரப்பனின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

ஆறு நாட்களாக துப்பாக்கித் தோட்டாக்களைத் தீர்த்த இந்தியப் படையினர் கடைசியில் திரும்புவதாக முடிவு செய்தனர்.

அதன் பிறகு தான் வீரப்பனை இராணுவமே வந்தாலும் தோற்கடிக்க முடியாது என்பது அனைவருக்கும் புரிந்தது...

சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்களையும் சுட்டு தள்ள... பாஜக அடிமை அதிமுக இரகசியமாக வேலை செய்கிறது மக்களே உஷார்...


நம் நெருங்கிய உறவினர்களான நியான்டர்தால் மனிதன் மட்டும் ஏன் அழிந்து போனான்?


நியான்டர்தால் மனிதன் சுமார் 24,000 வருடங்களுக்கு முன் நம்முடன் வாழ்ந்திருந்தாலும் பின்பு ஏனோ அழிந்து போனான்.

அதேபோல 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹாப்பிட் என்ற மனித இனமும் வாழ்ந்திருந்தது. ஆனால், இன்று நம்மிடையே அவர்கள் இல்லை.

காரணம்...

அவர்களால் நோய்களை எதிர்கொள்ள முடியவில்லை எனவும், அவர்களுக்கு இல்லாத திறன்கள் நமக்கு அதிகப்படியாக இருந்ததாகவும இருவேறு சொல்லப்பட்டாலும் உண்மை எதுவென்று இன்னும் தெரியவில்லை...

நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பவர்களையும் சுட்டு தள்ள... பாஜக அடிமை அதிமுக இரகசியமாக வேலை செய்கிறது மக்களே உஷார்...


கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி...


மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.

கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.

இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்...

தரித்திரம் பாஜக மோடி எங்க போனாலும் செருப்படி தான் போல...


உறையவைத்து சவ அடக்கம் (Cryonics)...


இப்பொழுதும் வழக்கில் இருக்கும் இந்த வகையான சவ அடக்கத்தில், இறந்தவர்களின் உடல்களை உடனே திரவ நைட்ரஜன் என்னும் திரவத்தில் (-198 டிகிரி சென்டிக்ரேடு) இறந்தவரின் உடல் மீண்டும் உயிர்ப்பெரும் நிலையை முழுமையாக இழக்கும் வரை விட்டு விடுவார்கள்.

இதுவே ஆங்கிலத்தில் க்ரையோனிக்ஸ் எனக் கூறப்படுகிறது...