24/01/2019

R2A2 சூத்திரம்...


நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இந்த சூத்திரத்தை மனதில் கொண்டால் போதும்..

உங்கள் இலக்குகளை அடைவதற்குப் பயன்படும் விதமாக நீங்கள் பார்க்கும் , கேக்கும், படிக்கும் அனுபவங்களிலிருந்து கோட்பாடுகளை , உத்திகளை , முறைகளை கண்டுணர்ந்து தொடர்பு கொண்டு , உள்வாங்கி பிரயோகியுங்கள்.. இதுவே R2A2 சூத்திரம் எனப்படுகிறது.

R2 எனப்படுவது கண்டுணர்ந்து தொடர்பு படுத்திப் பார்ப்பது. (Recognize and Relate).

A2 எனப்படுவது உள்வாங்கி பிரயோகிப்பதை குறிக்கிறது (Assimilate and Apply).

உங்கள் பயனுள்ள இலக்குகளை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு , உங்கள் எண்ணங்களை வழிப்படுத்தி , உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , உங்கள் தலைவிதியை தீர்மானியுங்கள்..

இலக்குகளை மற்றும் அதனை அடையும் வழிகளை முதலில் கண்டுணருங்கள் அவற்றை உங்கள் கனவுடன் தொடர்புபடுத்தி பாருங்கள்..

அவற்றை முழுதாக உள்வாங்குங்கள் அதனை பிரயோகித்து இலக்கினை அடையுங்கள்...

லயோலா கல்லூரி வரைப்படம் - அரியலூர் சம்பவம் பற்றி அறியாதவர்களுக்காக...


https://www.thenewsminute.com/article/anatomy-forgotten-rape-year-nandhini-was-killed-justice-remains-elusive-80552?amp

https://m.hindustantimes.com/india-news/nandini-rape-and-murder-complicated-caste-religion-politics-plays-out-in-tamil-nadu/story-gcF019Ezsa2HHUGQseXIxK_amp.html

இமாச்சலில் நீடிக்கும் உறைபனியால் இயல்பு வாழ்க்கை முடக்கம்...


குளிர்காலம் தொடங்கிய நாள் முதலே, இமாச்சல பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பனியின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிம்லா, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுவதால் வீடுகள், சாலைகள், மரங்கள், மலைகள் என காணும் இடமெல்லாம் பனி போர்வை போர்த்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

சாலைகள் படர்ந்துள்ள பனிக்கட்டிகளால் போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சாலைகளில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது...

இன்னைக்கு வரைக்கும் தமிழகத்தோட வணிகமும் வேலைவாய்ப்பும் ஒரே ஒரு கூட்டத்துகிட்டதான் போய் முடியுது...


தீவிர அரசியல் ஆராய்வு தெரிஞ்சா அந்த கூட்டம் யாருன்னு உங்களுக்கே தெரியும்...

உங்கள்ள எத்தன பேரு படிச்ச படிப்புக்கான வேலை செய்யுறீங்க...?

அப்டியே செஞ்சாலும் அதுக்கான சரியான ஊதியம் உங்கள வந்து சேருதா...?

உள்ளூர்ல வேலைவாய்ப்பு இல்லாம எத்தன பேர் ஊரவிட்டு வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் போறீங்க...?

நீங்க எல்லாம் இங்க இருந்து போய்ட்டா உங்க வாழ்வாதாரத்த எப்போ பாதுகாக்க போறீங்க...?

மேளகர்த்தா ராகங்கள்...


ஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும்.

கர்னாடக சங்கீததில் முக்கியமானது கர்த்தா ராகங்கள் (தாய் ராகங்கள்) என்பது. அவைகள் மொத்தம் 72. ரி, க, ம, த, நி, என்கிற விக்ருதி ஸ்வரங்களின் மூன்றுவித ப்ரஸ்தாரங்களினால் 72 மேளகர்த்தாக்கள் ஏற்பட்டன.

இந்த 72 மேளகர்த்தாக்களில் முதல் 36 ராகங்களுக்கு “சுத்த மத்யம” ராகங்கள் என்றும், அடுத்த 36 ராகங்களுக்கு “ப்ரதி மத்யம” ராகங்கள் என்றும் பெயர்.

சுத்த மத்யம ராகங்கள்...

1.  கனகாங்கி
2.  ரத்னாங்கி
3.  கானமூர்த்தி
4.  வனஸ்பதி
5.  மானவதி
6.  தானரூபி
7.  சேனாவதி
8.  ஹனுமதோடி
9.  தேனுகா
10. நாடகப்ரியா
11. கோகிலப்ரிய
12. ரூபவதி
13. காயகப்ரியா
14. வகுளாபரணம்
15. மாயாமாளவகௌளை
16. சக்ரவாகம்
17. ஸீர்யகாந்தம்
18. ஹாடகாம்பரி
19. ஜங்காரத்வனி
20. நடபைரவி
21. கீரவாணி
22. கரஹரப்ரியா
23. கௌரீமனோஹரி
24. வருணப்ரியா
25. மாரரஞ்ஜனி
26. சாருகேசி
27. ஸரஸாங்கி
28. ஹரிகாம்போஜி
29. தீரசங்கராபரணம்
30. நாகாநந்தினி
31. யாகப்ரிய
32. ராகவர்த்தினி
33. காங்கேயபூஷிணி
34. வாகதீஸ்வரி
35. சூலினி
36. சலநாட்டை

ப்ரதி மத்யம ராகங்கள்...

37. ஸாலகம்
38. ஜலார்ணவம்
39. ஜாலவராளி
40. நவனீதம்
41. பாவனி
42. ரகுப்ரிய
43. கவாம்போதி
44. பவப்ரிய
45. சுபபந்துவராளி
46. ஷட்வித மார்கிணி
47. ஸீவர்ணாங்கி
48. திவ்யமணி
49. தவளாம்பரி
50. நாமநாராயணி
51. காமவர்த்தினி
52. ராமப்ரிய
53. கமனாச்ரம
54. விச்வம்பரி
55. ச்யாமளாங்கி
56. ஷண்முகப்ரிய
57. சிம்ஹேந்த்ரமத்யமம்
58. ஹேமவதி
59. தர்மவதி
60. நீதிமதி
61. காந்தாமணி
62. ரிஷபப்ரிய
63. லதாங்கி
64. வாசஸ்பதி
65. மேசகல்யாணி
66. சித்ராம்பரி
67. ஸுசரித்ரம்
68. ஜோதிஸ்வரூபிணி
69. தாதுவர்த்தனி
70. நாஸிகாபூஷணி
71. கோஸலம்
72. ரஸிகப்ரிய...

பாஜக மோடி டீ விற்றதே இல்லை - மோடி நண்பர் தொகடியா...


சமூக வலை தளத்தை பற்றி பாமக அன்புமணி இராமதாஸ் பேச்சு....



https://youtu.be/Mp1NB0ymGII

Subscribe The Channel....

10 சதவீத இட ஒதுக்கீடு பிப்ரவரி 1 முதல் அமுலுக்கு வருகிறது...


வருடத்திற்கு எட்டு லட்ச ரூபாய் குடும்ப வருமானம், 5 ஏக்கர் நிலம், ஆயிரம் சதுரஅடி வீடு - இவை எல்லாம் புதிய ஏழைமை வரையறை.

தனிநபர் வருமான வரி வரம்பு என்பதே 2.5 லட்சம் தான்.

வாங்க ஏழைகளா.. வாங்க...

குஜராத்தில் பாரதிய ஜனதாவும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி விட்டன.

திமுக-காங் கூட்டு. அதிமுக-பாஜ கூட்டு=திமுகவும் அதிமுகவும் கூட்டணி ?

இந்த நிலையை மாற்றி நமக்கு நன்மை கிடைக்க தமிழக அரசு யாகம் மூலம் முயற்சிக்கிறது... சுத்தம்...

நான் கூற வருவதை அனைவரும் புரிந்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்...


நம் உரிமைக்காக நம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடுகிறோம் அல்லவா, அதுதான் தமிழ் தேசிய அரசியலின் தொடக்கம்..

ஒரே நோக்கத்தில் தமிழ் தேசிய நாம் பேசும் வரை அவர்கள் நம்மை பலவிதமாக பிரித்துக் கொண்டே இருப்பார்கள்...

நாம் என்றைக்கு களத்தில் இறங்கினோமோ, அன்றைக்கு தமிழ் தேசிய அரசியலின் விதை விதைக்கப்பட்டு விட்டது..

ஏனெனில் நாம் போராடிய எந்த போராட்டத்திற்கும் திராவிடமும் வரவில்லை, மற்ற எந்த கட்சிகளும் வரவில்லை...

உடல் எடை கூட இதை சாப்பிடுங்கள்...


https://youtu.be/vzcuw7Cotxs

Subscribe the channel...

அதிமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்...


ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்...

சேதாரம் செய்யாத நேர்மையான யானை..


பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத சீ(ஜி)வ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...

எச்சரிக்கை தமிழ்நாடு அழிவை நோக்கி...


பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி...


எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது. அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு.

எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன.

எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.

விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க...

1.கேளுங்கள் (ASK).
2.நம்புங்கள் (BELIEVE).
3.பெறுங்கள் (RECEIVE).

1. கேளுங்கள் : உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடன் கேட்கும் போது, விருப்பம் குறித்த தெளிவை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

2. நம்புங்கள் : கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.
கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் ஒளிப்பரப்பும் போது அதை பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

3. பெறுங்கள் : வேண்டும் என்று விரும்புபவற்றிக்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்
வேண்டியதை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை மனத்தில் உருவாக்குவது தான் அக்க்காட்சிப் படைப்பாகும். . அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்கும்.
மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்...

வல்லரசு இந்தியா, வளர்ச்சி இந்தியாவின் மாற்றமே கானாத ஒரு துறை இதுதான்... எத்தனை ஆண்டுகள் ஆனாலும , மாறாதது...


தமிழனிடம் கேள்வி கேட்க்கும் முன்பு.....


பருப்பறிவு திராவிட வியாதிகள் திராவிட ஒட்டுண்ணி கழகம், கட்சி, இயக்கங்கள் தங்களுக்குள் தாங்கலே முதலில் கேட்க வேண்டிய கேள்விகள்...

1. திராவிடன்  (தெலுங்கு கன்னட மலையாளி) என்றால் யார் ?

2. இவன் திராவிடன் என்று எந்த இரத்த பரிசோதனையை கூடத்தில் கண்டு பிடிப்பது ?

3. திராவிடனை ஆரியன் ஆட்சி அதிகாரம் செய்ய கூடாது திராவிடனுக்கு ஏன் இந்த இனவாதம் ?

4. மனிதனை மனிதனாக பார்க்காமல் ஏன் பார்பான் சாதியை வைத்து திராவிடன் சாதி பார்க்கின்றனர் ?

5. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கூற்றுப்படி திராவிட (தெலுங்கு கன்னட மலையாளி) இலக்கியம் அசுத்தம், திராவிட மன்னர்கள் ஆரிய அடிமை, திராவிட மொழி காட்டுமிராண்டி மொழி.... அப்படி என்றால் அசுத்த ஆரிய அடிமை காட்டுமிராண்டி திராவிட இழிவு தேவையா ?

6. திராவிடம் ஆதிதிராவிடம் என்று ஏன் திராவிட ஆட்சி அதிகாரம் திராவிடத்தை பிரித்தது ?

7. ஆதிதிராவிடம் உயர்ந்ததா அல்லது திராவிடம் உயர்ந்ததா ?

8. ஆதிதிராவிட ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஆதிதிராவிட கீ.வீரமணி, ஆதிதிராவிட எம்.ஜி.ஆர், கருணாநிதி, வைகோ, கொளத்துர்மணி என்று அழைத்தால் ஏன் திராவிடர்கள் ஆதிதிராவிட தன்மான உணர்ச்சியை மறுக்கின்றனர் ?

9. திராவிடம் என்றால் ஏன் ஆதிதிராவிடம் உள்ளே நுழைய முடிவதில்லை ?

இந்துத்துவாவின் கொலைகள்...


இந்து மதத்தை லயாலோ கல்லூரி விமர்சிக்கவில்லை...

இந்து மதத்தை பயன்படுத்தி அந்த பெயரில் இந்துபெண்களையே கற்பழித்து கொன்ற இந்து முன்னனியினரயே விமர்சித்தது.

இந்துக்களின் பெயரால்  இந்துமதத்தை கேவலப்படுத்தி கொண்டு இருக்கும்.
பாஜக ஆர்எஸ்எஸ் ஸை கேள்வி எழுப்பாமல்  இவர்களை கேள்வி எழுப்பி என்ன பயன்…?

அவன் கொடுத்த குரல் இந்துக்களுக்குமானது தான்…

பெண்மை...


தீட்டு என்று கூறும் மனிதன்
அந்த மனிதனே பத்துமாதம் தீட்டால் வளர்ந்த ஓர் உயிர் தானே...

பெண்மை படைக்கும் கடவுள்
பெண்மை போற்றபட வேண்டியவள்
பெண்மை இல்லாமல் இந்த உயிர்கள் ஏதோ...

உழைத்தல் என்பது உயிர்வாழ மட்டுமே உணர்வில் வாழ கிடையாது...


பறவைகள் இறை தேட தினமும் செல்கிறது.. ஆனால் உணர்வில் இருக்கிறது.. அது தன் வாழ்வை வாழ்கிறது உணர்வில்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நீங்கள் பெரிய சைபீரியன் ஏரி பைக்கால் பற்றி கேள்விப்பட்டீர்களா? இது பல பறக்கும் தட்டுகள் பார்வைகளை அறிவித்திருக்கும் ஒரு மர்மமான இடம். இரவில் தனியாக பயணம் முடிக்க விரும்பாத இடங்களில் இது ஒன்றாகும். ஆழ்ந்த ஏரிகளில் ஒன்றாக அதன் புகழ், பறக்கும் தட்டுகள் மற்றும் அதன் ஆழ்ந்த கடல் கீழ் தளங்கள் உள்ளே வாழும் அன்னிய மனிதர்கள் என பல கதைகளில் வலுப்படுத்தியுள்ளது.

பைக்கால் ஏரி சைபீரியாவின் மலைப்பகுதியில் உள்ள உலகின் ஆழமான மற்றும் மிகவும் பழமையான ஒரு பிளவு ஏரியாகும். இதன் பொருள் இது டிக்டோனிக் இயக்கம் தவறுகளால் உருவாக்கப்பட்ட ஒரு ஆழமான பிளவுக்குள் உருவானது என்பதாகும். ஏரி 31,722 சதுர கிலோமீட்டர் பரப்பும், 1,642 மீட்டர் ஆழமும் கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, இந்த ஏரி குறைந்தது 25 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என குறிப்பிடுகின்றனர்.

அநேகரின் கருத்துப்படி, பைக்கால் ஏரி உண்மையில் ஒரு நீருக்கடியில் இயங்கும் மாநகரமாகும், இது மிகவும் இரகசிய வசதிகளை கொண்டுள்ளது. அமெரிக்காவின் டூல்ஸ் பேஸ் போன்று, பைக்கால் ஏரி அதன் சொந்த இரகசிய ஆராய்ச்சி வசதி கொண்டதாக நம்பப்படுகிறது. ஏரியின் அருகே அறிவிக்கப்பட்ட யுஎஃப்ஒ பார்வைகள், மேற்பரப்புக்கு கீழே உள்ள நூற்றுக்கணக்கான மீட்டர் தொலைவிலுள்ள மர்மமான தளங்களுக்கு நேரடியாக இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

உண்மை என்னவென்றால், பைக்கால் ஏரி ரஷ்யாவின் மிக முக்கியமான மையமாக விளங்குகிறது, இது உலகின் மிகுந்த பரபரப்பான ஒன்றாகும். ஏரி சுற்றியுள்ள இந்த விசித்திரக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆவணப்படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூட எடுத்துள்ளார். ஏரிகளில் பணியாற்றும் போது இராணுவம் பலவகை சந்திப்புகளை சந்தித்திருக்கிறது.

இராணுவ அதிகாரிகளும் பொதுமக்களும் பைகால் ஏரியின் ஆழத்திலிருந்து வெளிவரும் சிகார்-வடிவ பொருள்கள் மற்றும் பிற விசித்திரமான தோற்றங்களைக் கண்டிருக்கிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வானில் பல பறக்கும்தட்டுகளையும் அதில் சில உயரமான மனிதர்கள் ஏறிச் சென்று இறங்குகிறார்கள் என புகார் செய்துள்ளனர்.

மர்மமான மனிதர்களுடன் மிகவும் பிரபலமான சந்திப்புகளில் ஒன்று 1982 இல் பதிவாகியிருந்தது, ஏழு இராணுவத்தினர் 50 மடங்கு ஆழத்தில் மூன்று மர்மமான மனித உருவங்களை சந்தித்தனர். அவர்களின் அறிக்கைகள் படி, இந்த விசித்திரமான மனிதர்கள் இறுக்கமான வெள்ளி உடையிலும், எந்தவித நீர்மூழ்கி சாதனங்கள் இல்லாமலும், விசித்திரமான தலைக்கவசங்கள் மட்டுமே அணிந்திருந்ததாக கூறினர்.

சில வல்லுநர்கள் இந்த பூர்வீக நிலப்பகுதிகளைக் கொண்ட ஏரிகளில் காணப்படும் இந்த அறிக்கை ஒப்பீடுகளின் விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர், அங்கு வித்தியாசமான தோற்றமுடைய மனிதர்கள் ஒரே மாதிரியான ஹெல்மெட்டுகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவத் திசைகளால் கண்டெடுக்கப்பட்ட மர்மமான மனிதர்கள், நவீன விண்வெளி வீரர்களைப் போலவே மர்மமான உபகரணங்களுடன் இருந்தனர்.

மர்மமான பறக்கும் தட்டு சந்திப்போடு ஏரியில் கப்பல்கள் மறைந்துவிட்டதாக பல தகவல்கள் வந்துள்ளன. பொருள்களைப்  திசைகாட்டித்தல் ஆகியவற்றில் தோன்றும் மர்மமான பொருள்கள் நீர்நிலையில் விவரிக்கப்படாத நிகழ்வுகளின் பட்டியலை நீட்டிக்கிறது.

ரஷ்யாவில் பைக்கால் ஏரி உண்மையில் இந்த கிரகத்தின் மிகவும் மர்மமான இடங்களில் ஒன்றாகும். ஏரி மற்றும் பிற உலக சந்திப்புகளை சுற்றியுள்ள மர்மங்கள் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை ஊக்கப்படுத்தியுள்ளன. இந்த ஏரியின் பறக்கும் தட்டு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டாரா? என்று தெரியவில்லை. தெரிந்த நண்பர்கள் எனக்கு படத்தின் லிங்கை அனுப்புங்களேன்.

இன்னொரு பதிவிற்க்கு...

இந்த நாசவேலையை மறக்க முடியுமா..?


அபான முத்திரை விளக்கம்...


முத்திரை பயிற்சிகளின் மூலம் உடலில் பஞ்ச பூதங்களை சமன்படுத்தலாம் என்பது நம் முன்னோர்களின் அரிய கண்டு பிடிப்பு.

மனிதனின் இயல்பான செயல்பாடுகளே முத்திரைப் பழக்கம். காலப்போக்கில் இதன் முக்கியத்துவத்தை நாம் மறந்து விட்டோம்.

நம் சாஸ்திரங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று வெள்ளைக்காரர்கள் நம்மவர்களை நன்றாக மூளைச்சலவை செய்துவிட்டு போய் விட்டார்கள். நாமும் அவர்களை நம்பி நம் சாஸ்திரங்களை இழந்து நிற்கிறோம்.

மீண்டும் நம் சாஸ்திரங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும். இதன் பயன் அளப்பரியது.

நாம் தினமும் காலையில் எழுந்தவுடன்  காலைக் கடன்களை முடித்து உடலை சுத்தி செய்கிறோம்.

அதாவது உடலுக்கு அக சுத்தி, புற சுத்தி இரண்டையையும் செய்கிறோம்.

புற சுத்தியை தண்ணீரில் நீராடுவதன் மூலம் எளிதில் செய்து கொள்ளலாம்.

அக சுத்தி என்பது உடல் தனக்கு தானே செய்து கொள்வது. அது இயல்பாக நடக்க வேண்டியது.

அக சுத்தி இயல்பாக நடக்கவில்லை என்றால் உடலில் கழிவுகள் தங்கி நோய்களை உருவாக்கும்.

இவ்வாறு இயல்பாக கழிவு நீக்கம் நிகழாத போது கை விரல்களை குறிப்பிட்ட முறையில் அழுத்திப் பிடித்தால் உடல் உரிய வேலையை தானே செய்து கொள்ளும்.

படத்தில் காட்டியுள்ள விரல்களை காலை எழுந்தவுடன் குறைந்தது 10 நிமிடங்கள் அழுத்திப் பிடித்தால் உடல் கழிவுகளான மலம், மூத்திரம் போன்றவை எளிதில் வெளியாகும். படத்தில் காட்டப்பட்டுள்ளது அபான முத்திரையாகும்.

அபானன் என்றால் வெளித்தள்ளுபவன் என்று பொருளாகும். கை விரல்கள் ஐந்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவையாகும்.

அதில் பெரு விரல் நெருப்புத் தத்துவத்தையும்.. ஆள் காட்டி விரல் வாயு தத்துவத்தையும்.. நடு விரல் ஆகாய தத்துவத்தையும்.. மோதிர விரல் நில தத்துவத்தையும்.. சிறு விரல் நீர் தத்துவத்தையும் குறிக்கின்றன.

உடல் உள்ள முத்தோசங்கள் என்பவை வாதம் (வாயு), பித்தம் (நெருப்பு),  கபம் ( நீர்) என்பவை ஆகும்.

இதில் நீரானது நிலத்தை பற்றி நிற்கும்,  நெருப்பும், காற்றும் ஆகாயத்தை பற்றி நிற்கும்.

அதாவது நீரை நிலம் உறிஞ்சிக் கொள்ளும், நெருப்பையும், காற்றையும் ஆகாயம் உறிஞ்சிக் கொள்ளும்.

இதன் அடிப்படையில் உடல் கழிவுகளை வெளியேற்ற ஆகாயத்தைக் குறிக்கும் நடு விரலும், நிலத்தைக் குறிக்கும் மோதிர விரலும் அபான முத்திரையின் மூலம் அழுத்தப்படுகின்றன.

இதன் பயன் மலசிக்கல் நீங்கும், மூல வியாதி குணமாகும், சிறு நீர் நன்றாக வெளியேறும். உடல் கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறும்...

தமிழினமே விழித்துக்கொள்...


திருட்டு திராவிடம்...


கடவுள் இருக்கான் என்று சொல்பவனை கூட நம்பலாம்..

கடவுளே இல்லை என்று சொல்பவனை கூட நம்பலாம்..

நான் தான் கடவுள் என்று சொல்பவனை கூட ஓரளவு நம்பலாம்..

ஆனால் இந்த குறுப்பிட்ட கடவுள்கள் மட்டும் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவாளன்களை மட்டும் நம்பவே நம்பாதீங்க...