21/08/2017

அதிமுகவிற்கு பாஜக வின் RSS-ஏஜென்ட் குருமூர்த்திக்கும் என்னடா சம்மந்தம்...?


இந்த மூன்று மூதேவி அமைச்சர்கள் தான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவின் காலடியில் அடகு வைத்தவனுங்க என்பது குறிப்பிடத்தக்கது...

எப்படியோ ஆட்சி கலைச்சா சரி...


இதை இந்த உத்தமர் சொன்னது.. போன மாசம் இல்ல... இந்த மாசம் தான்...


தமிழக மக்கள் நிலை...


பாஜக அமித்ஷா கலாட்டா...




மரம் வளர்ப்போம்.. இயற்க்கையை காப்போம்...


மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்..

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 1400 ரூபாய்..

மூன்று சிலிண்டரின் விலை 4200 ரூபாய்..

ஒரு வருடத்திற்கு 15,20,000 ரூபாய்க்கு மேல் போகிறது..

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 10 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது..

இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது....

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்..?

மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...

இனியேனும் மரங்கள் என்னும் அட்சய பாத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்...

திராவிடமும் தமிழின அழிப்பும்...


கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் பங்கேற்று ஆட்சி நடத்திய திராவிடக் கட்சிகள் இலங்கைபற்றிய வெளியுறவுக் கொள்கையில் ஈழ விடுதலைக்குச் சாதகமான அணுகுமுறையை ஏன் முன்னெடுக்கவில்லை?

தமிழக திராவிடக் கட்சிகள் ஈழப் போராட்டத்தைக் கையில் எடுத்தது போல் எடுத்துத் தங்களின் அரசியலுக்கு அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனவே தவிர உண்மையான ஈழ விடுதலையில் எவருக்கும் அக்கறை இல்லாததே காரணம்.

இங்குள்ள திராவிடக் கட்சிகளின் போட்டி அரசியல் நாற்காலிச் சண்டைகளில் அவர்களுக்கு வெளியுறவுக் கொள்கையாவது, வெங்காயமாவது என்று ஆனது...

தெலுங்கு திமுக கட்சியும்... தமிழின அழிப்பும்...


உலகம் முழுவதும் ஆர்த்தெழுந்த தமிழர் போராட்டத்திற்கு இணையாக தமிழகத்தில் பள்ளி சிறார் முதல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வரை இனப்படுகொலைக்கு எதிராகத் திரண்டு எழுந்த சக்தியை ஆட்சியாளர் ஒடுக்கியது எதனால்?

தமிழ் ஈழம் மலர்வதை மத்திய மாநில அரசுகள் அறவே விரும்பாதது தான் முதல் காரணம்.

தமிழக முன்னால் முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மாவீரன் பிரபாகரனையும் எந்தக் காலத்திலும் ஆதரித்தது கிடையாது, ஈழம் மலர்ந்தால் தனக்கு மரியாதை குறைந்து விடும் என்னும் மனப்பான்மை கருணாநிதிக்கு உண்டு.

எனவேதான் இலங்கைத் தமிழருக்குத் தன்னைவிட யாரும் தலைமைத் தாங்கி போராடுவதை அவர் விரும்பவில்லை.

இதனால்தான் மனித சங்கிலி போராட்டம், சட்டமன்ற தீர்மானம், 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் என்று தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

இதையும் மீறி பீறிட்டுடெழுந்த மாணவர் போராட்டத்தைப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுதலை அளித்துப் பிசுபிசுக்க வைத்தார்.

உயர்நீதிமன்றத்தில் ஆர்த்தெழுந்து போராட்டம் நடத்திய இனவுணர்வுள்ள வழக்கறிஞர்களை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்குக் காவல்துறையை ஏவி அடக்குமுறை செய்து ஒடுக்க முயன்றார்.

உணர்ச்சியுடன் ஈழத்திற்கு ஆதரவாக எழுச்சியுரை ஆற்றிய சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் போன்றவர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தார்.

தமிழ் இன எழுச்சி ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கும் பதவிக்கும் ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்த காரணத்தால் ஒடுக்கினார்கள்...

சட்டசபையில் திமுக விடம் ஜனநாயகம் பட்டபாடு..


அப்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி... இங்கே கலைஞர் எம்.எல்.ஏவாக இருந்தார், அப்போ மின்சார வாரிய நிலத்தில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை ஆதாரத்தோடு சபையில் அம்பலப்படுத்தினார் பேராசிரியர். மறுநாள் ஏதோ காரணத்தினால் பேராசிரியர் சட்டசபைக்கு வரல. காங்கிரஸ் எம்.எல்.ஏவான அனந்தநாயகி எழுந்து,

நேத்து சபையில மோசடி அது இதுன்னு பேசிய பேராசிரியர் ஏன் இன்னைக்கு சபைக்கு வரல? அவருக்கு முதுகெலும்பு இருந்திருந்தா இன்னைக்கு வந்திருக்கணும்’னு கடுமையா பேசிட்டாங்க.

உடனே எழுந்த கலைஞர், ‘பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத் தானே தெரியும். அனந்த நாயகிக்கு எப்படி தெரியும்?’னு போட்டாரே ஒரு போடு. அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கிட்டத்தட்ட பத்து நிமிஷம் ஆச்சு.. என்று ஃப்ளாஷ்பேக்கை விவரிக்கும் போது தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை..

- கலைஞர் 50, ஜூனியர் விகடன் ( ஏப்ரல் 19, 2007).

அனந்த நாயகி எம்.எல்.ஏ முதுகெலும்பு என சொன்னது அன்பழகனின் தைரியத்தை பற்றி ஆனால் நம்ம ஜனநாயக காவலர் கருணாநிதி பதில் சொன்னது.. பேராசிரியருக்கு முதுகெலும்பு இருக்கா இல்லையான்னு அவரோட பொண்டாட்டிக்குத்தானே தெரியும். அனந்தநாயகிக்கு எப்படி தெரியும்? என. அதாவது இந்த இடத்தில் படுக்கையறையை இழுத்தால் அனந்த நாயகியால் மேற்கொண்டு பேச முடியாது.

இதை மூன்றாம் தர விதன்டாவாதத்தை ஜனநாயகம்னு உடன்பிறப்புகள் பானியில் சொல்லலாம்.

இந்த ஜனநாயகம் தானே திமுக சட்டசபையில் கேட்க்கும் ஜனநாயகம்?

சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள் தான் திராவிடர்கள்....


தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்...


தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ண வேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள்.

இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி...

மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்வோம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது.

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்.

3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்.

4. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்.

5. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்.

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக் குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள்.

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே. விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு.

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும்.

வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு.

இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம். விலையும் குறைவு.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்...

ஏன் இந்திய ஒன்றியம் காவேரி பிரச்னையை இன்னும் தீர்க்காமல் வைத்து உள்ளது ?


காவேரி வறண்டு போக வேண்டும்
டெல்டாவில் வாழும் விவசாயிகள் நிலங்கள விற்று பஞ்சம் பொலைக்க போக வேண்டும்..

பின்னர் எந்த ஒரு பிரச்னை இல்லாமல் நிலத்தை குடைந்து மீத்தேன் மற்றும் பிற வாயுக்கள் எடுக்கலாம்..

நாம் தான் இந்தியன் இந்தியன் என்று சொல்லி கொண்டு இருக்கிறோம்..

ஆனால் நம்மை அழிக்க அனைத்து மறைமுக தொலை நோக்க திட்டம் நடந்து கொண்டு உள்ளது..

திராவிடம் +ஆரியம் கூட்டு சதி தமிழ் இன அழிப்பு...

தமிழ்நாடு பார்ப்பான் லீகு...


தமிழ்நாடு என்கின்ற பெயரை உபயோகப்ப படுத்த இந்த உத்தமருக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?

இவர் நடத்தும் கிரிக்கெட்டு போட்டியையும் நம்மாளுங்கள் பார்த்து வெற்றி பெறச் செய்வார்கள் பாருங்கள்...

ஊரில் இருக்கின்ற அறிவாளி பயல்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டில் தான் போங்கள்...

தமிழர் அதிகமாக வாழும் ரீ யூனியன் தீவு...


தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம் தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று..

சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்..

சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே  இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு..

பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.  உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில் ஒன்று  இந்த ரீயூனியன்தீவு…

சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ள மொத்தமாக 2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்த தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு சுமார் ஒன்றரை லட்சம்….

170-180 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்ற தமிழர்களின் சந்ததியினர் இவர்கள்..

உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சாதியப் பாகுபாடுகளில்லாமல் சம உரிமை பெற்று வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…

பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது 1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ யூனியன் தீவில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இரண்டும் பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..

சிலர் இலங்கையில் (யாழ்ப்பாணம்) இருந்தும் குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர்.

ஆரம்பத்தில் ஒப்பந்தக் கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது.

இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள். பிரெஞ்சுத் தமிழர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்….

ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப் பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள்.

தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன் எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றனர்…

அத்தனையையும் இப்போதும் விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும், வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது. தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள ஒரே வேண்டுகோள் – அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தர தாய்த் தமிழகம் உதவ வேண்டும் என்பது தான்.. அற்புதமான இயற்கை வளம் நிரம்பியது ரீயூனியன்..

இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம் – ஒன்று சுமார் 2600 மீட்டர் உயரமுள்ளது. மற்றொன்று 3200 மீட்டர் உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன.

ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம்….

1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரங்களில், இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6 இஞ்ச் ) மழை பெய்தது ஒரு உலக ரெக்கார்டு, இது வரை முறியடிக்கப்படவில்லை...

அப்படி நீ எந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்க?


சேலம் - நாமக்கல் தனியார் பேருந்தில் இந்தித் திணிப்பு...


நம்ப முடியாத மழை நீர் உண்மைகள்...


நவீன வங்கி கொள்ளையர்கள்...


வங்கிக் கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்திருந்தவர்களிடமிருந்து 235 கோடி ரூபாய் அபராதம் வசூல்- SBI வங்கி தகவல்...

பாஜக வின் நவீன இட்லர் மோடி...


கன்னட ஈ.வே.ரா மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?


சில வந்தேறி திராவிடர்ஸ் அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக்கொடியைக் கொளுத்தினார் என்றும்..

இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும் இரண்டு பொய்களைக் கூறுவார்கள்..

ஈ.வே.ரா இந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.

1965ல் இந்தியெதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலைவெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில்..

திருவல்லிக்கேணி பெரிய தெரு,
வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.

(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்) என்று எழுதியுள்ளார். (விடுதலை, 13.02.1965).

இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது...

ஒவ்வொரு வேளை சாப்பாடும் எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?


காலை:

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்:

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.

காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு:

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது...

இதய ஓட்டையை இருபது நாளில் சரி செய்யும் செம்பருத்தி சாறு செய்யும் முறை...


தமிழினமே விழித்தெழு...


இந்தியா என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடம்...

எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனமும் தனக்கான விடுதலையை தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தேசிய இனங்களின் போரட்டத்தின் வளர்ச்சி நிலையும் வெவ்வேறு படி நிலைகளில் உள்ளது.


காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறிய நிலையிலும், மற்ற மாநிலங்கள் பின்தங்கிய நிலையிலும் உள்ளது.

எனவே இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் தேசமாக மாறுவதும், தேசிய அரசு அமைவதும் காலத்தின் கட்டாயம்..

மதம் மாறிய மொழி...


மனிதர்கள் தானே மதம் மாறுவார்கள், மொழி மதமாறுமா ? என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், மதம் தாங்கிப்பிடிக்கும் மொழிகள் பல உள்ளன என்பதை நினைவு கூறுங்கள்..

மொழிகளுக்கும் இனத்திற்கும் உள்ள தொடர்புகள் போலவே சிற்சில மொழிகளுக்கும் மதத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, எனவே குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு மொழியை தங்களது ஆக்கிக் கொள்ள அந்த மொழிக்கு தங்கள் மதத்து ஆடையைக் கட்டி விடுவார்கள்.

இந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட இல்லை என்றால் உங்களில் பலரலால் நம்ப முடியாது, ஆனால் உண்மை அது தான்.

துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா ? என்று உங்களால் கேட்க முடியும்.

துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை, மொகலாயர்கள் ஆண்ட அந்த காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை, மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் வடமொழியை எழுதப்பயன் படுத்தப்பட்ட எழுத்துக்களான தேவநகரியில் தான் இராமாயணத்தை எழுதினார்.

எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம் என்பது வால்மிகி இராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே.

தற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது, எனெனில் மொகலாயர்கள் ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில் கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருதாக வடிவம் பெற்றது, மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான் (அரபி எழுத்து வடிவம் தான்) எழுதினார்கள்.

உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும் பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள், அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது, ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

மொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி ?

அதற்கான அடிப்படை காரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது, உருது என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல் இருந்ததால், உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப் போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும் என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள் பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும் என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க முற்படுகின்றனர்.

ஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான்.

கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன் நுழைந்து விட்டான்.

தவிர ஆங்கிலமும் இந்தியும் மொழிக்குடும்ப அடிப்படையில் ஒரே மொழிக்குடும்ப பிரிவை சார்ந்தவையே, அதாவது இந்தோ - ஐரோப்பியன்' மொழி குடும்பத்தை சார்ந்தவையே.

உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில் மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப் பிறவிகள்.

வெறும் 300 ஆண்டுகளில் வடமாநிலங்களை மொகலாயர்கள் இந்தி / உருது பேச வைத்து விட்டனர், வெள்ளையர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வட இந்தியர் ஆங்கிலத்திற்கு மாறி இருப்பார்கள். நம்மை இந்திப் படிக்கச் சொல்லி வருந்தி இருக்க மாட்டார்கள்.

இந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.

இந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.

மொழி மீதான தனிப்பட்ட ஆர்வம் என்பது தவிர்த்து, இந்திப் படிக்காததால் வேலை வாய்ப்புகள் எதுவும் பறிபோகாது, என்றோ ஒருநாள் வட இந்தியா சுற்றுலா போனால் பயன்படலாம் அல்லது இந்திவாலாக்கள் தமிழகம் வந்தால் வழிகாட்டலாம், சாருக்கான் படம் பார்க்கலாம் மற்றபடி அதைப் பாடச் சுமையில் ஒன்றாக படித்து சுமப்பதால் ஒரு பயனும் இல்லை.

தமிழகத்தைவிட இலங்கையில் இருந்து புத்தகயா செல்லும் சிங்களவர்கள் தான் மிகுதி, அவர்களையும் வடவர்கள் இந்தி படிக்க பரிந்துரைக்கலாமே, செய்ய மாட்டார்கள், காரணம் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் குறைவு, கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு போனால் தான் உண்டு.

ஆனால் தென்மாநிலங்களுக்கு அவர்கள் சுற்றுலா வருவது மிகுதி, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரிந்தால் நாம இங்கும் வந்து ஆளுமையை காட்டலாம் என்பதற்காகவே தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கிறார்கள்.

தற்பொழுது இந்திக்காரர்கள் தான் தமிழகத்தில் பரவலாக கூலிவேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களால் முடியும் பொழுது இந்தி 'படித்தவர்களால்' தமிழகத்தில் குப்பை கொட்ட முடியாதா ?

ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர் ( அகவை 60தை தாண்டியவர்) வட இந்தியா சுற்றுலா போனபோது இந்தி தெரியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம், அவரிடம் நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

சிங்கப்பூரில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றலாம், ஆனால் மலேசியாவில் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியாது, இவர் எப்படி சென்று வந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் படிப்பதில் உள்ள நன்மைகள் எதுவும் இந்திக்கு பொருந்தாது.

வடமொழி பற்றாளர்கள் இந்தி தேவநகரி எழுத்தில் எழுதுவதால் வடமொழியை (சமஸ்கிரதம்) மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள், மற்றபடி தென்னிந்தியாவில் இந்திக்கான ஆதரவு குறைவே, பெங்களூர் அல்லது ஹைத்ராபாத் வாசிகளிடமோ, உங்கள் தலைநகரில் இந்தி ஆதிக்கம் உங்களுக்கு பெருமையான ஒன்றா என்று கேட்டுப்பாருங்கள், ஒருவரும் ஆமோதிக்க மாட்டார்கள், அந்த நிலைமை சென்னைக்கும் வர வேண்டாம்.

இந்தி என்பது உருது மொழியின் இந்து / இந்திய வடிவம் மட்டுமே, மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.

ஒருவேளை முகலாய பேரரசு தமிழகத்தையும் கைப்பற்றி இருந்தால் இந்தி ஆதிக்கத்திற்கு நாமும் அடிமை பட்டிருக்கக் கூடும்...

நான் தமிழன் டா...


மோடி பக்தாஸ் கேட்கிறான் : இந்தி தெரியாதவனை எப்படி மத்திய அரசு பணியில் சேர்ப்பார்கள் என்று..

தமிழ் தெரியாதவனை எப்படி டா மத்திய அரசு பணியில் சேர்த்து தமிழகத்தில் பணியில் அமர்த்துகிறீர்கள் என்றால் பதில் சொல்ல மாட்றான்...

பாஜக : சாதி அரசியலை கை விட வேண்டும்...

ஆனால் கட்சியிலோ முரளிதரன் ராவ்.. வெங்கய்யா நாயுடு என்று பலர் படித்து வாங்கிய பட்டம் என்று நினைத்து விட்டார் போல...

பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்..

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை.

அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும்.

நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி.

நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்திமுனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்..

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர்.

பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும்.

அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அதுஅந்த அளவு பயன் தரும்.

அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாதே ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்.

நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக் கொள்ளும் இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

சுண்டக்காயின் மருத்துவ குணம்...


கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு..

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது.

சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்..

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.

வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.

சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.

முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

மருத்துவக் குணங்கள்:

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.

சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்...

மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்...


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம்.

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.

திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி - மணமக்கள், தாய்- சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்...

சட்டசபையில் திமுக விடம் ஜனநாயகம் பட்டபாடு...


கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் கருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்?

இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..? என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப,

அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்து கொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம்.

இப்படி ஒரு பெரிய பிரச்னையைக் கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது.

அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..! - கலைஞர் 50 , ஜூனியர் விகடன் (19-4-2007)

கருணாநிதிக்கு பதில் அந்த இடத்தில் வேறொரு அமைச்சர் பெயர் இருந்திருந்தால் இதே விகடன் வேறொரு மாதிரி எழுதியிருப்பான். அமைச்சரின் கள்ள தொடர்பு, சட்ட விரோதம், ஒரு அமைச்சர் இப்படி செய்யலாமா என போட்டு கிழிகிழியென கிழித்திருப்பான் விகடன்.

அரசாங்கத்தின் விளம்பரங்களை பெற இதைப்போய் டைமிங் ஜோக், சாதுர்யம் என கலர் கலரா ரீல் விடுறான்.

ஒரு அரசு ஊழியர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம். அவர் அரசு வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்." - இது தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிமுறைகளில் உள்ள ஒரு பகுதி. இதை கருணாநிதி மீறியபோது அது சாதுர்யமாம்.

இந்த கூத்தெல்லாம் சட்டசபை குறிப்பேட்டில் பதிவாகியிருக்கு...