26/09/2017

வதந்திகள் மூலம் கருணாநிதியின் திருஷ்டி கழிந்துள்ளது - திமுக துரைமுருகன்...



தமிழ்த்தாய் வாழ்த்தை நோண்டிக் கிளறிய திராவிட வந்தேறிகள்...


எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே..

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்..

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்..

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே..

ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்..

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே..

மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்..

நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடும் நமது நாட்டுப் பண்(தேசிய கீதம்)..

அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாடவைத்து விட்டனர் இந்த திராவிட வந்தேறி பொறுக்கிகள்..

நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவிவருகிறோம்..

தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது...

சங்கம் வைத்து இந்தி வளர்த்த ஈ.வே.ரா...


ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான்
தென்னாட்டில் முதன் முதலில்
ஹிந்திக்கு வித்திட்டவர்..

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் பக்கம் 436ல்..

இராமசாமி நாயக்கர் காங்கிரசில்
தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு யானுஞ்
சென்றிருந்தேன்..

தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே என்று திரு.வி.க. அவர்கள்
எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம்
ஆண்டுவரை பிராமணர்களின் தாசனாக விளங்கி வந்தார் (ஏமாற்றுவதில்) பெரியார்...

எகிப்த்தை ஆண்ட தமிழன்...



எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).

இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman) ..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

கிளியோபட்ரா.....


வரலாற்று பேரழகிகளின்  பட்டியலில் தன் பெயரை என்றும் நிலைத்திருக்க செய்தவள்....

பாலில் குளிப்பால்... பல வண்ணங்களில் மை தீட்டி கண்களாலே பலரை வசியம் செய்யும் கொள்ளை அழகுக்காரி....

முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துபவள் என்றெல்லாம் வரலாறு அவளை வர்ணிக்கிறது....

எந்த அளவு வரலாற்றில் வர்ணிக்கபட்டாலோ  அதே அளவிற்கு தூற்றவும் பட்டால் ....

அவளது வாழ்வு மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது......

அவளின் அழகால் எகிப்து.. ரோம்... கிரேக்கம் வரலாரே மாறி போனது....

எகிப்து பேரரசியாக இருந்தாலும் கிரேக்க பேரரசர் அலெக்ஸ்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவழியை சார்ந்தவள்...

தன்னை கிரேக்கர் என்று சொல்வதையே விரும்பியவள்......

எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என பிரகனபடுத்தி கொண்டவள்.....

11 மொழிகளை சரளமாக பேசக் கூடியவள்..... அவள் பேச்சுக்கு மறு பேச்சில்லை.....

தனது 14 ஆம் வயதில் இருந்தே தந்தையுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டாள்..

தனது 18 ஆம் வயதில் தந்தை இறந்து விட எகிப்தின் அரசியானாள்...

எகிப்து நாட்டு  வழக்கப்படி அரசி மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள முடியாது.. அரச வழக்கப்படி தனது தம்பி 13 ஆம் தாலுமியை திருமணம் செய்து கொண்டாள்....

எகிப்து நாட்டில் பெரும் போர் படைகள் கிடையாது.. எகிப்தில் தன்னகத்தே கொண்ட நைல் நதியின் செழிப்பு எகிப்தில் செல்வத்துக்கு பஞ்சமில்லை...

அதனால் எதிரிகளுக்கு எப்போதுமே எகிப்து மீது ஒரு கண் உண்டு...

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க எண்ணிய கிளியோபட்டரா அப்போது பெரும் படை பலமுடன் திகழ்ந்த ரோம் பேரரசர் ஜுலியட் சீசரை காதலிப்பது என முடிவெடுத்தால்... முதல் பார்வையிலே அதில் வெற்றியும் பெற்றாள்... அப்போது கிளயோபட்ராவுக்கு வயது 21... சீசருக்கு வயது  54... இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்...

இதற்கிடைய தன் முன்னால் கணவன் 13 ஆம் தாலு மி மர்மமரணம் அடைய  சந்தேகம் கிளியோபட்ராவின் மீது விழ்ந்தது... கிளியோபட்ராவே கொலை செய்து விட்டதாகவும் வரலாறு சொல்கிறது....

அதன்பின் தன் காதலியை சீசர் எகிப்திலிருந்து ரோமிற்கு அழைத்து வந்து விட ... ரோமானியர்களுக்கு இது பிடிக்கவில்லை... அதிகார போட்டியில் சீசர் கொல்லபட (ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டியில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடைய ஆன சண்டையில் இனியும் ரோமில் இருந்தால் ஆபத்து என உணர்ந்து எகிப்திற்கு தப்பினாள்...

இந்நிலையில் ரோமில் ஆட்சியை கைப்பற்றிய ரோமானிய தளபதி மார்க்  ஆண்டனியை தனது தந்திரத்தால் காதல் வலையில் வீழ்த்தி மணந்து கொண்டால்... இந்த திருமணத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள்... இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதர்களை கொன்று எகிப்தில்  தன்னை தவிர  ஆட்சியில் வாரிசுகளே இல்லாமல் பார்த்துக் கொண்டால்...

இந்நிலையில் ஆட்சியை பறிகொடுத்த சீசரின் வாரிசுகளால் எகிப்துக்கு ஆபத்து வந்தது...

சீசரின் வாரிசான அகஸ்டஸ் எகிப்து மீது போரிட்டு கிளியோபட்ராவையும் அவளின் வாரிசுகளையும் சிறைபடுத்தினான்... போரில் தோற்ற ஆண்டனி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான்..

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோ பட்ரா பாலைவனங்களில் இருந்த பாம்பை தீண்ட செய்து மரணித்தாகவும்... சிலர் அழகே உருவான அவள் பாம்பு திண்டினால் உடனே மரணம் நிகழ்வதில்லை மாராக அது ஒரு மரண போராட்டத்தை உருவாக்கி தனது அழகு அலங்கோலமாகி விடும் என்பதால் எகிப்தில் உள்ள ஓபி யும் எனும் கடுமையா விழத்தை உண்டு மரணித்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள்.....

அப்படி மரணிக்கும் போது கிளியோபட்ராவுக்கு  வயது 39...

அழகே உருவான அவளின் கல்லரை வாசகம் இது தான்......

உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது... நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி ராஜ்ஜியமே இந்த கல்லரையில் உறங்கியிருக்கும்...

இலுமினாட்டியும் டைட்டானிக் கப்பலின் உலக அரசியலும்...


இந்த உலக அரசியல் பற்றிய விழிப்புணர்வு நம்மை இலுமினாட்டிகளின் மாய வலையிலிருந்து தப்பிக்க வைக்கும். அவர்கள் நம் வாழ்வை சீரழித்து வருகிறார்கள் எல்லா வழிகளிலும்.

இப்பொழுதைய பதிவில் அட்லண்டிக் பெருங்கடல் பேரழகாய் ஒய்யாரமாக பயணம் செய்த டைட்டனிக் பற்றி பார்ப்போம்..

இவளின் ஒய்யாரப் பயணம்
15 ஏப்ரல் 1912, அதிகாலை 2:20 ல் நிறைவு ஏய்தியது..

இந்நிகழ்விற்கு காரணமாகவும் இலுமினாட்டிகளே இருந்துள்ளனர்..

இவர்கள் எப்பொழுதுமே ஒரு கல்லில் பல மாங்காய் அடிப்பவர்கள்.

விழுந்த ஒரு மாங்காவை பற்றி மட்டும் இதில் பார்ப்போம்..

US Federal Reserve bank...

இந்த மாங்காவை பற்றி தான் பார்க்க போகிறோம்.

இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி உருவாக்கிய ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தார் அடுத்து அமேரிக்காவுக்கு குறிவைக்கின்றனர்.

வங்களில் பொய்மையை அறிய எனது பழைய பதிவை வாசியுங்கள்.

நம் இலுமினாட்டிகள் அவர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிய கூடாது என்று முடித்தவரை சட்டப்படி தான் செய்வார்கள்.

சில நேரம் சட்டங்களை உருவாக்கியும் செய்வார்கள்.

அதன்படி யூனிடட் சிடேட் பெடரல் ரிசர்வ் அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது அதற்கு எதிராக நின்றவர்கள் முக்கியமாக மூன்று பேர்.

Benjamin Guggenheim,  Isa strauss, Jecob Astor.  இவர்களால் 1912 ஏப்ரல் மாத தொடக்கத்தில்  அந்த வங்கி திட்டம் ஊத்தி மூடப்பட்டது.

TITANIC SECRET...

டைட்டானிக் பயணம்..

அதே ஏப்ரலில் இம்மூவரும் டைட்டானிகில் பயணம் செய்தனர். மூன்று பேரும் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் 15 தேதி கப்பலோடு மூழ்கினர்..

மீண்டும் ரிசர்வ் வங்கி..

டிசம்பர் 1913 ல் US Federal Reserve Bank செயல்பட ஆரம்பித்தது. இதுவே விழுந்த மாங்காய்களில் ஒன்று..

எப்போதுமே சொல்லிட்டு செய்கின்ற இலுமினாட்டிகள் இதையும் அப்படி தான் செய்தார்கள்..

Morgan Robertson, 1898ல் Futility என்று ஒரு நாவல் வெளியிடுகிறார்.

அதில் டைட்டன் என்ற மூழ்கடிக்க முடியாத கப்பல் ஏப்ரல் மாதத்தில் ஒரு பனிபாறையில மோதி மூழ்குகிறது,  உயிர் காக்கும் படகுகள் குறைவாக இருந்ததால் நிறைய பேர் இறந்து போகிறார்கள். இது கதை..

இது பதினான்கு ஆண்டுகள் கழித்து உண்மையானது டைட்டானிக்..

நான் ஜெகப் அஸ்டர் என சொல்லியத கவனித்தீர்களா..

அஸ்டர் குடும்பமும் இலுமினாட்டி குடும்பங்களில் ஒன்று.

அப்போது ஏன் இவரும் அந்த வங்கி வரவிடாமல் தடுக்க முயர்ச்சித்தார்.

அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அடுத்துவரும் பதிவுகளில் இவர்களின் அடையாளங்கள் பற்றியும் சொல்ல இருக்கிறேன்...

காது ல இந்த இடத்துல கை வைச்சு அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை...


உடல் எடை அதிகரிப்பது தற்போது பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

அதிகம் கஷ்டப்படாமல் காதில் விரல் வைத்து சிறிய பயிற்சியை செய்வதன் மூலம் கூட உடல் எடையை குறைக்க முடியும்.

காதின் கீழ் நுனி அருகில் முக்கோணம் வடிவு உள்ள இடத்தில் விரலை வைக்க வேண்டும். பின்னர் தாடையை திறந்து மூட வேண்டும்.

தாடையை திறந்து மூடும் போது நாம் விரல் வைத்திருக்கும் எந்த இடம் அதிகம் அசைகிறதோ அது தான் பயிற்சி செய்ய சரியான புள்ளியாகும்.

இது தான் காதையும், தாடையையும் இணைக்கும் புள்ளியாகும்.

அங்கு விரல் வைத்து ஒரு நிமிடம் அழுத்த வேண்டும்.

சரியான உணவு பழக்கத்துடன் இந்த எளிய பயிற்சியை தினம் செய்து வந்தால் விரைவில் உடல் எடை குறைய தொடங்கும்...

ஓம் = அ+உ+ம்...


ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே..

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

-ஆசான் திருமூலர்..

அருவுருவ ஒலியொளி (நாதசுடர்) ஓம்..

ஓம் = அ+உ+ம்

இந்தப் பிரபஞ்சமே "ஓம்" என்ற அருவுருவ ஒலி(அருவம் > நாதம்), ஒளி(உருவம் > சுடர்/ சோதி)யிலேயே உருவாகி, அந்த ஓங்காரத்திலேயே ஆதி தொடங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அளவற்ற ஓங்கார நாதத்தைத் தம்முள் தட்டி எழுப்பிக் கேட்டும், அடிமுடி காணமுடியாத ஓங்காரப் பிளம்பாகியச் சுடர்/ சோதியில் இரண்டறக் கலந்தும், பேரின்பமாகிய பேரறிவெனப்படும் பேரருள் பெற்றவரே சித்தர்கள்.

"ஓம்" அதன் ஆற்றல்கள் அளவிட முடியாதளவிற்குப் பல்வேறு பேதங்களாக இருக்கின்றது. அதன் பல்வேறு ஆற்றல்களையே சித்தர்கள் பல்வேறு இறைநிலைகளாக (பல்வேறு கடவுளராக) உருவகித்து உலக மக்களுக்கு விளக்கினர். அந்த ஓங்காரமாகிய அருவுருவ நாதசோதியுடன் இரண்டறக் கலத்தலே ஈடிணையற்ற முத்திகளும், சித்திகளும் பெற்ற சிவநிலை (இறைநிலை) யாகும்.

ஓம் அழிவற்றது, அளவற்ற ஆற்றல்கள் கொண்டது. அதையடைந்த சித்தர்களும் அழிவற்றவர்கள், அளவற்ற ஆற்றல்கள் கொண்டவர்கள். அந்த அழிவற்ற நிலையான இறைநிலையையே சாகக்கல்வியாகவும் மற்றும் மரணமில்லாப் பெருவாழ்வாகவும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

சித்தர்கள் தாம் பல்கோடி யுகங்கள் தாண்டியும் வாழ்வதாக தங்கள் பாடலில் குறிப்பிடுவதும் இதன் நிமித்தமே.

தினமும் "ஓம்" என்போம். ஆக்கமும், ஊக்கமும், ஆற்றலும் பெறுவோம்...

தமிழச்சி கேப்டன் லட்சுமி...


சென்னையில் பிறந்த லட்சுமி டாக்டருக்குப் படித்து சிங்கப்பூரில் பணியாற்றினார்.

பின் நேதாஜியுடன் சில போரட்டங்களில் ஈடுபட்டு ராணுவத்தில் சேர்ந்தார்.

அதன் பின் ஜான்ஸி ராணி ரெஜி மெண்ட் என்ற பெண்கள் ராணுவப்படையின் தலைமைப் பொறுப்பை ஏற்று கேப்டன் லட்சுமி என்று அழைக்கப்பட்டார்.

பெண்களில் சிறந்ததோர் காவியம்...

தமிழ் பெயர்களையே பயன்படுத்துவோம்...


Computer - கணினி / கணிப்பொறி
Key board - விசைப்பலகை
Software - மென்பொருள்
Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள்
Hardware - வன்பொருள்
Screen - திரை
Laptop - மடிக்கணினி
Central Processing Unit - மையச் செயலகம்
Compact Disk - இறுவட்டு/குறுவட்டு
Memory - நினைவகம்
RAM -தற்காலிக* நினைவகம்
Control Unit - கட்டுப்பாட்டகம்
registers - பதிவகம்
microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம்
Digital - எண்ணிமம்
Pointer - சுட்டி
Mouse - சொடுக்குபொறி
Binary Numbers ( 0, 1 )- இரும எண்கள் / துவித* எண்கள்
Internet - இணையம்/ இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Browser - உலாவி
Printer - அச்சுப்பொறி
Server - வழங்கி
Internet Server - இணைய வழங்கி
IC ( Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Data - தரவுகள் / Datum - தரவு
Command - கட்டளை
Button - பொத்தான்
Input - உள்ளிடு
Battery/Cell - மின்கலம்
Digital Versatile Disk(DVD) -பல் திறன் வட்டு
Port - பொருத்துவாய்
Liquid Crystal Display (LCD)- திரவப்படிக திரையகம்
Super computer - மீத்திறன் கணினி
File - கோப்பு
Output - வெளியீடு
e-mail - மின்னஞ்சல்
Download - பதிவிறக்கம்
Multi-media - பல்லூடகம்
Compiler/ interpreters - நிரல்மொழிமாற்றி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language - கீழ்நிலை நிரல்மொழி
Source Language/ Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT (information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface- இடைமுகம்/இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி
Data Base - தரவுத்தளம்
Free/Open - கட்டற்ற
Function - செயற்கூறு
modem- இணக்கி
chip - சில்லு
word processor - சொல் செயலி
spread sheet - விரி தாள்
Global positioning System (GPS)- உலக இருப்பிட முறைமை
Scroll bar - உருள் பட்டை
Interface - இடை முகம்
Synchronise - ஒத்தியக்கம்...

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு...


சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது.

இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் கால
த்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(குப்லாய் கான்)..

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான்.

தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடைலேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டு பிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்...

லெப். கேணல் திலீபன்...


1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.

தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன்

உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தினான்.

உலகின் முதன்முதல் சாத்வீகப் போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான்.

உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.

தியாக தீபம் திலீபனின் நினைவலைகள்...

திலீபனின் இறுதி உரையிலிருந்து…

என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சி.. யில் மிதக்கின்றது.

நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.

நான் திருப்தி அடைகிறேன்.

இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.

ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.

நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்று விட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.

எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது.

இதில் பிழைகள் இருக்கலாம்.

இதை நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்...

ஔவையாரின் ஆத்திசூடி...


1.அறம் செய விரும்பு / Learn to love virtue.
2. ஆறுவது சினம் / Control anger.
3. இயல்வது கரவேல் / Don’t forget Charity.
4. ஈவது விலக்கேல் / Don’t prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / Don’t betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / Don’t forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / Don’t despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / Don’t freeload.
9. ஐயம் இட்டு உண் / Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / Speak no envy.
13. அகம் சுருக்கேல் / Don’t shortchange.
14. கண்டொன்று சொல்லேல்/ Don’t flip-flop.
15. ஙப் போல் வளை / Bend to befriend.
16. சனி நீராடு / Shower regularly.
17. ஞயம்பட உரை / Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / Protect your parents.
21. நன்றி மறவேல் / Don’t forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / Don’t land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / Don’t play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / Don’t sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / Detest the disorderly.
29. இளமையில் கல் / Learn when young.
30. அரனை மறவேல் / Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / Over sleeping is obnoxious.
32. கடிவது மற / Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / Don’t forsake friends.
38. கெடுப்பது ஒழி / Abandon animosity.
39. கேள்வி முயல் / Learn from the learned.
40. கைவினை கரவேல் / Don’t hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / Don’t swindle.
42. கோதாட்டு ஒழி / Ban all illegal games.
43. கெளவை அகற்று / Don’t vilify.
44. சக்கர நெறி நில் / Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / Don’t hurt others feelings.
49. சூது விரும்பேல் / Don’t gamble.
50. செய்வன திருந்தச் செய் / Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / Seek out good friends.
52. சையெனத் திரியேல் / Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / Don’t show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / Don’t be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / Be trustworthy.
56. தானமது விரும்பு / Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / Serve the protector.
58. தீவினை அகற்று / Don’t sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / Don’t attract suffering.
60. தூக்கி வினை செய் / Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / Don’t defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / Don’t listen to the designing.
64. தொன்மை மறவேல் / Don’t forget your past glory.
65. தோற்பன தொடரேல் / Don’t compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / Don’t depart from good standing.
69. நீர் விளையாடேல் / Don’t jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / Don’t over snack.
71. நூல் பல கல் / Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / Don’t involve in destruction.
75. நொய்ய உரையேல் / Don’t dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் / Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / Don’t comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / Don’t encourage war.
88. மனம் தடுமாறேல் / Don’t vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / Don’t accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / Don’t over dramatize.
91. மீதூண் விரும்பேல் / Don’t be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / Don’t join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / Don’t agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / Speak with clarity.
98. மோகத்தை முனி / Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / Don’t self praise.
100. வாது முற்கூறேல் / Don’t gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / Long to learn.
102. வீடு பெற நில் / Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / Don’t be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/ Don’t premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / Be impartial in judgement...

விடை தெரிந்தவர் பதில் சொல்லுங்க...


கேள்வி1- அந்த காலத்தில் பிரதமர் மோடி MA படித்து விட்டு டீ விற்றதற்கு என்ன அவசியம்?

கேள்வி2- நர்மதா டேம் (அணை) கட்ட மோடி, 71வருடத்திற்கு முன்பு கனவு கண்டாராம். ஆனால் அவருக்கு வயதோ 68.

3வது கேள்வி மிக முக்கியமானது...

அதாவது, அஹ்மதாபாத் To மும்பைக்கு புல்லட் ரயில் விடப்பட்டால் அதன் டிக்கெட் விலை 4000ரூபாய் போய் சேர மூன்று மணி நேரமாகும்.

இதை அங்கிருந்து விமானத்தில் சென்றால் 40நிமிடம்... டிக்கெட் விலையும் 3000ரூபாய்.

4000ரூ கொடுத்து 3மணி நேர புல்லட் ரயிலை விரும்புவார்களா?

நாட்டு மக்களை பைத்தியம் என்று மோடி நினைக்கிறாரா?

அல்லது மோடி பைத்தியமாகி விட்டாரா?

சொல்லுங்க பதில்...?

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு...


பேச்சு வார்த்தையில் சமரசம் , போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் ஒத்திவைப்பு...


மாதந்தோறும் ரூ 1200 இடைக்கால நிவாரணமாக கூடுதலாக வழங்க அரசு ஒத்துக் கொண்டதை தொடர்ந்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் ஒத்திவைக்கப்பட்டது...

இலுமினாட்டி கமல் கலாட்டா...



எனது நிறம் காவியாக இருக்காது..
ஆனால் கருப்புக்குள் காவியும் அடங்கும்...

மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா?


பிராமணிய கொடுநெரிகளைச் சட்ட வடிவமாக்கிய 'மனு நூல்', அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து பெரியார் எனும் ஈ.வே.ரா முன்னோர்கள் (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்.

மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது..

'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த...

ஆவத்தம்பா சூத்திரம்,
போதாயன சூத்திரம்,
நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...

இதில் நகைச்சுவை என்னவென்றால் சாதியை உருவாக்கிய திராவிடனே... சாதியை ஒழிக்க போராடுவதைப் போல் நடித்து நம்மை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறான்... அதை தமிழன் நம்பி ஏமாந்துக் கொண்டிருக்கிறான்...

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்...


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்..

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள்..

3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.

11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது...

இந்தியை எதிர்த்தாரா ஈ.வே.ரா?


1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில்...

இந்தி விஷயத்தில் நீ தானே எதிர்ப்பு உண்டாக்கினாய்..

இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள்..

எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்..

தமிழ்கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை..

தமிழ்கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்து விட்டார்கள் என்றும்..

காமராஜர் ஆட்சி அவசியமா?

இந்தி ஒழியவேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர்ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன் என்றும் - 8.3.1965-ல் விடுதலை இதழின் தலையங்கத்தில்
தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை.

தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும்
இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ,வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி என்றும் அவரது கையொப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார்..

சரி 1965ல் இப்படி என்றால் அதற்கு முன்பு ஈ.வே.ரா இந்தியைக் கடுமையாக எதிர்த்தாரா?

இல்லவே இல்லை.

ஹிந்தி இருக்கட்டும், இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை..

அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோம்.

சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமானாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டாம்.

பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் - விடுதலை (07.10.1948)...

ஓம் என்ற சொல் தமிழில் பிரணவம் மந்திரமாக குறிக்கபட்டதின் காரனம் அதற்க்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை...


ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்திரம்) என்னவென்று பலருக்கு தெரியாது.

பலர் இதை ஒரு செப்பு தகுடு டின் கிருக்கல்கள் என நினைத்திருக்கலாம்.

ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது.

ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர் தான் ஒலியின் பரிமானத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர்.

இவர் கண்டுபிடித்த சாதணம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி.

இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை  காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன்.

நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமானம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்ததை உணர்ந்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை...

30 வருடங்களுக்கு முன்பு முல்லை பெரியாறு அணையை யார் பராமரிப்பது என்று கருத்தாய்வுக் கூட்டம் நடந்துள்ளது..


மொத்தம் 94 பேர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனராம்.

அதாவது கேரளா சார்பாக 47 பேரும்.
தமிழகம் சார்பாக 47 பேரும்..

கூட்டத்தில் இறுதி முடிவாக கேரளாவே அணையை பராமரிக்கட்டும்னு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஏற்று 93 பேர் கையெழுத்திட்டனர், ஒருவரை தவிர.

அந்த ஒருவர் யார் என்றால் தமிழ் இசுலாமியர், அப்போதைய தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்.

இதெப்படி சாத்தியமாயிற்றுனு உங்களுக்கு வினா எழலாம்.

கதை என்னனா, தமிழகம் சார்பாக கலந்துக்கொண்டவர்களில் 46 பேரும் மலையாளிகளாம்.

இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?

எப்படி எல்லாம் தமிழினத்திற்கு எதிராக இந்த திருட்டு திராவிடம் சதி செய்துள்ளது என்பதை சிந்தியுங்கள்...

கரும்புலிகள் மறக்க முடியாத புனிதர்கள்...


கரும்புலிகள் பலருக்கு சிம்ம சொர்ப்பனமாக இருந்தாலும் தமிழினத்தின் காவலாளர்களாகத் தான் இவர்களை தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள்.

இவர்கள் ஒன்றும் மனவருத்தமானவர்களோ அல்லது வன்முறையின் மீது நாட்டம் கொண்டவர்களோ இல்லை. தமது இனம் அழிவை நோக்கிச் செல்கின்றது என்பதையறிந்து தலைவனின் வழியே தமிழ் மக்களுக்கு பாதுகாவலர்களாக
கிளம்பியவர்கள் தான் கரும்புலிகள்.

இவர்கள் மரணிப்பவர்கள் இல்லை மாறாக மறுபிறப்பு எடுப்பவர்கள். இவர்களைப் போற்றும் நாள் தான் ஜூலை 5.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழம் இருந்த வேளையில் துணிச்சலுடன் தெருக்களில் அணிவகுப்பு வரும் மாணவ மாணவிகள் பட்டாளம் கடந்த சில வருடமாக தமது மறவர்களை நினைவு கூரமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர்களின் மனங்களில் இன்றும் இருப்பவர்கள் கரும்புலிகள்.

சாவை குறித்துக்கொண்டு எந்த சலனமும் இல்லாமல் தமது இளம் வயதில் குண்டை கட்டிக்கொண்டு எதிரியை குறிவைத்து தாக்குதல் செய்து பல நூறு எதிரியை சாதுரியமாக தாக்கி கதிகலங்க வைப்பவர்கள் தான் கரும்புலிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5-ஆம் நாள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும். இத்தாக்குதலின் பின்னர் எத்தனையோ தற்கொடைத் தாக்குதல்களை நடத்தி எதிரிகளை கதிகலங்க வைத்தார்கள்.

எந்த சலனமும் இல்லாமல் எதிரியின் குகைக்குள்ளேயே நடமாடி, தமது கொள்கையிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் இமையளவும் தடம் புரளாமல் தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்த அற்புத மனிதர்கள் தான் இந்த கரும்புலிகள்.

இவர்களையும் இவர்களின் இறுதி வார்த்தைகளான ‘தமிழீழமே தமிழரின் தாகம்’ என்ற வேத வாக்கையும் உலகத்தமிழர்கள் மறப்பார்களானால் இவர்கள் வாழ்ந்து கொண்டும் பிணமானவர்களாகவே தான் கருத வேண்டியிருக்கும்.

பலவீனமான தமிழரின் பலமே கரும்புலிகள் :

பலவீனமான தமிழ் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே தான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன் என விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் வர்ணிக்கப்பட்டவர்கள் தான் கரும்புலிகள்.

அன்று கட்டளை கொடுக்கப்பட்டிருந்தால் சிங்கள இராணுவத்திற்கு கொடுத்திருப்பார்கள் இந்த கரும்புலிகள் ஒரு தெளிவான பாடம்;. கட்டுநாயக்காவில் அமைந்திருந்த சிறிலங்கா அரசின் விமானப்படையினரின் தளத்தை அன்றொரு நாள் இரவைத் தாண்டிய வேளை, தமது தாகத்தை தீர்த்துக்கொண்டார்கள் தாக்குதலைத் தொடுத்து. அன்று சென்றார்கள் வென்றார்கள்.

உலகமே தலையில் கைவைத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். பல நாட்கள் வேவு பணிகளுக்கு பின்னர் தீபாவளிப் பண்டிகையை அனுராதபுர நகருக்கே காட்டி வெற்றிவாகை சூடினார்கள் கரும்புலிகள்.

பதினெட்டு வானுர்திகளை சாம்பலாக்கி தாம் யார் என்று உலகுக்கே நிருபித்தார்கள் இந்த கரும்புலிகள்.

இவர்களின் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எனவேதான் இன்றும் தமிழர் தரப்பின் சக்தி மிக்க ஆயுதமாகப் பார்க்கப்படுவது இந்த உயிராயுதம்.

கடந்த சில வருடங்களாக வட மற்றும் தென் தமிழீழ பகுதிகளில் இடம்பெற்ற தன்னிச்சையாக திணிக்கப்பட்ட போரில் கரும்புலிகளின் பங்கு என்பது மிக குறைவானதாகவே இருந்துள்ளது.

இவர்கள் மீதான கட்டுப்பாடுகள் சிங்கள ஆக்கிரமிப்பு படைக்கு மனத் தைரியத்தை கொடுத்து பல்லாயிரக்கணக்கான தமிழரை கொலை செய்ய உதவியது. அன்று கரும்புலிகள் கடந்த காலங்களைப் போல செயல்பட்டு இருந்திருந்தால் பல ஆயிரம் எதிரிகள் வன்னி மண்ணில் புதைக்கப்பட்டிருப்பார்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் சாணக்கியத்தை இன்றும் எவரினாலும் அறிய முடியாது. அவரின் வழி தனி வழி இதை கண்டிப்பாக ஒரு நாள் காண்பார்கள் தமிழர்கள்.

இன்று தமிழீழ தேசமெங்கும் தனது கால்களை அகலப்படுத்தியிருக்கும் சிறிலங்காவின் கொடிய கரங்களினால் தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் அனைத்தும் பல நூறு கரும்புலிகளை உருவாக்கும் என்பது தான் உண்மை.

அரசபடையினரின் அட்டூழியங்கள் அனைத்தும் தமிழீழ கொள்கைக்கு மேலும் உரம் கொள்ள வைக்கும் செயற்பாடாகும். ஒரு குறிப்பிட்ட வாரத்தில் மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த அரசபடையினருக்கு விருந்து கொடுக்கும் காலம் ஒரு நாள் வரும் என்பது மட்டும் திண்ணம்.

தமிழ் மக்கள் இன்றேனும் இவர்களின் தற்கொடையை போற்றி உலகுக்கு சொல்லவேண்டும். அன்று நிர்க்கதியான நிலையில் இருந்த தமிழீழ மக்களை கொன்றும் சித்திரைவதை செய்த சிங்கள பேரினவாத அரசைப்பற்றி உலகம் அனைத்தும் தமிழர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனமாக்கினார்கள். 2002 - ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுடன் சமாதான ஓம்பந்தத்தை செய்து, அத்துடன் தாம் கொடுத்த வாக்குறுதியை பேணி கடைசி வரை அந்த சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகாமல் ஒப்பந்த சரத்துகளின் படியே விடுதலைப்புலிகளும் கடைசி வரை பேணிவந்தார்கள்.

கரும்புலிகளை போற்றிக் கொண்டாடுவோம் :

மரணித்த கரும்புலி மறவர்கள் ஒன்றும் மடிந்தவர்கள் அல்ல. இவர்களின் சாவை போற்றி கொண்டாட வேண்டிய தினம். இந்த தினத்தில் ஒவ்வொரு தமிழனும் சபதம் எடுக்க வேண்டும். அந்த மாவீரர்கள் விட்டுச்சென்ற பணியை வாழும் தமிழன் செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் களம் காணவேண்டும்.

இப்படியான கொள்கையுடன் செயாற்றினால் தான் மரணித்த வேங்கையின் ஆத்மா அமைதியாகும். அதுவரை மரணித்த வேங்கை தமிழீழ கொள்கையுடன் பகை எடுக்கும் என்பது தான் உண்மை.

இன்று 90 வயதை தாண்டிய முதியவர் ஒருவரே தான் சாகக்கூடாது என்று கடவுளை வணங்குவதும் மற்றும் மருத்துவமனையை நாடி வைத்தியத்தை பெற்று இன்னும் பல வருடம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் காலத்தில் இந்த கரும்புலிகளோ தமது இளம் வயதில் சாவை அரவணைக்கின்றார்கள்.

இவர்களை ஒவ்வொரு தமிழனும் போற்றி வழிபடவேண்டும். ஆனால் பல தமிழர் இவர்களை நினைவுபடுத்த நிகழ்வுகளை நடத்தப் பயப்படுகின்றார்கள் காரணம் இவர்களை உலக நாடுகள் பயங்கரவாதிகளாக அங்கீகரித்து கைது செய்து போடுவார்களாம்.

உலக நாடுகள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் அதாவது கரும்புலிகள் ஒன்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் செய்வதில்லை. எதிரியின் பலத்தை அறிந்து அவர்களை அழிப்பதுவே இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி.

எப்படி ஜப்பான் நாடு தற்கொடை தாக்குதலை எதிரிக்கு எதிராக நடத்தி எதிரியை கதிகலங்க வைத்தார்களோ அதைத்தான் கரும்புலிகளும் செய்கின்றார்கள்.

அன்று ஜப்பான் நாடு அதைச் செய்தது ஆனால் இன்று ஜப்பான் உலக நாடுகளின் நேச நாடாக விளங்குகின்றது. அதென்ன ஜப்பான் நாட்டுக்கு ஒரு சட்டம் ஈழத் தமிழருக்கு ஒரு சட்டம்.

பல உலக நாடுகள் கரும்புலிகளை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெறும் தற்கொடை தாக்குதல்களை ஒப்பிடுகின்றார்கள்.

அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளிண்டன் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் கூறிய வார்த்தைகள் தமிழருக்கு சந்தோசத்தை கொடுத்தது. தெளிவாக ஹில்லரி அம்மையார் அவர்கள் கூறினார் உலகில் இயங்கும் அனைத்து போராளிகளையும் பயங்கரவாதிகளாக பார்க்கக் கூடாது என்று கூறினார்.

தமிழர்கள் மனம் தளராது தமது மரணித்த மாவீரர்களை அவர்களைக் கொண்டாடும் தினங்களில் போற்றி கொண்டாடி உலகுக்கு எடுத்துரைத்தால் உலகை தமிழர் வசம் ஈர்த்து தமிழீழ தனியரசை நிறுவ கரும்புலிகள் ஒப்புவித்த இறுதி தமிழீழ விருப்பை வெகு சீக்கிரத்திலையே நிறுவலாம் என்பது தான் அசைக்க முடியாத உண்மை.

மரணித்த கரும்புலி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதுடன் அவர்களின் இறுதி அவாவை உண்மையாக்குவதே அவர்களுக்கு உலகத் தமிழினம் செலுத்தும் கடமை...

பெண்கள் விடுதலை அடைய வேண்டுமானால் ஆண்மையை அகற்ற வேண்டும் - கன்னட ராமசாமி நாயக்கர் -1928...



உபதேசம் எல்லாம் ஊருக்குதான் தனக்கில்லை என்பது போல தானே..

72 வயதில் 26 வயது இளம் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது ?

1928ம் ஆண்டே இவருடைய ஆண்மையை அகற்றியிருந்தால் ஒரு பெண் விடுதலை அடைந்திருப்பாள் அல்லவா?

அண்ணன் திலீபன் நினைவு நாள்...


ஆயுதமேந்த துணிவில்லாமல் இல்லை அறவழியில் போராடி விடுதலையை பெற்றோம் என்று பீற்றிக்கொள்ளும்,
இந்தியத்திடம் அகிம்சை உண்ணாநிலை என பறைச்சாற்றிய இந்தியத்திடம்.

காந்திதேசம் என்று பீற்றிக்கொண்ட இந்தியத்திடம் அதே அறவழியில் போராடினால் தமக்கான தீர்வு கிடைக்குமென நம்பிய அண்ணன் திலீபனை.

நாங்க ஒரு உன்னதமான போராளியை காட்டிக்கொடுத்து அதற்கு விலையாக பல தேசிய இனங்களை அடைத்துள்ள,
சிறைக்கூடத்தை வாங்கினோம் என வஞ்சகத்தோடு முதுகில் குத்திய நாளே இந்நாள்.

தியாகி லெப்கேணல் திலீபன் அண்ணன் இம்மண்ணை விட்டு பிரிந்தநாள்..