நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம்.
இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.
நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.
அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.
இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.
சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.
பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும் (சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும் (அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும் (தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.
நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.
எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.
இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள்.
இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...