29/05/2021

மருத்துவர் பரிதாபங்கள்...

 


ஒரு ஊரில்  சில களப் பணியாளர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி என்கிற தலைப்பில் ஒரு டாக்டர் வகுப்பெடுத்தார்.

பாம்பு கடித்தால் உடனே மேலும் கீழும் கட்டுப் போட்டு விஷத்தை உறிஞ்சி துப்பி விட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு வந்தார்.

வந்தவர்கள் அனைவரும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றாலும் ஆர்வத்தோடு கற்றது போல் தெரிந்தனர். 

சற்று நேரத்தில் திடுமென கூச்சல்... 

டாக்டர்.., டாக்டர் உடனே வாங்க..

ஒரு பாம்பாட்டி வெற்றுக் கூடையை வைத்துக் கொண்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தார். அடடா, யாரையோ பாம்பு கடித்திருக்க வேண்டும்.. 

முதல்ல முதலுதவி செய்யுங்க. நான் சொன்ன மாதிரி.. அப்புறம் நோயாளியை கூட்டிட்டு வாங்க..

கொஞ்ச நேரத்தில்.. டாக்டரின் மேஜைக்கு வந்தது..

உடம்பெல்லாம் அங்கங்கே நூல் கண்டால் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் பாம்பொன்று...

என்னய்யா செஞ்சீங்க என்றால்.. நீங்க தானே சொன்னீங்க, கட்டுப் போடணும், விஷத்தை உறிஞ்சித் துப்பணுமுன்னு..  பாம்பு மயங்கிடுச்சு என்றனர்...

பக்கிப் பய புள்ளைகள் பாம்புக்கா முதலுதவி செய்திருக்கின்றனர் ?

முதலுதவி பற்றி  யாருக்குச் செய்வது என்று தெளிவாகச் சொல்லவில்லையோ? 

ஐயோ, அந்தாளு எங்கே?

பாம்பு கடிச்ச இடத்துல சுண்ணாம்பு தடவிட்டு அப்போதே கிளம்பிட்டாரே டாக்டர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.