18/04/2018

சிட்லபாக்கம் ஏரியில் உள்ள குப்பைமேடு புல்வெளியாக எப்போது மாறும் ?


நமது சிட்லபாக்கம் ஏரியில் பல வருடங்களாக குப்பை கோ ட்டப்பட்டு ஏரியில் குப்பை மலை போல் குவிந்துள்ளது .தற்போது ஏரியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது..

மக்கள் புகார் அளித்ததின் பயணாக பயோ மைனிங் (BIO MINING) முறைப்படி குப்பை  அகற்ற டெண்டர் விடப்பட்டு 21.2.2018 தகுதியான ஓப்பந்ததாரர் ஒப்பந்தமும் ஆகி விட்டது .சுமார்  1 1/2 மாதத்திற்கு மேல்  ஆகியும் பணி இன்னும் துவங்கவில்லை . ஏரியில் குப்பை அகற்றும் பணி எப்போது துவங்கும் குப்பைமேடு புல்வெளியாக எப்போது மாறும் என்று மக்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்...

மக்களை முட்டால் ஆக்கும் பாஜக மோடி அரசு...


மத்திய அரசே தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆளுநரை திரும்ப பெறு...


தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்.

நாள் - 18-04-2018, காலை 10 மணி.
இடம் - பனகல்  மாளிகை, சென்னை...

யார் இந்த சேலம் ரோகினி IAS...?


மக்களே நடிப்பை பார்த்து ஏமாந்தது போதும் இனியாவது விழிப்போடு நடந்துகொள்...

இந்த மீடியா காரன் யாரை தூக்கி புடிக்கிறானோ அப்பவேய் விழித்துக்கொள்...

உன் கவனத்தை திருப்பி உன் வளத்தை கொள்ளை அடிக்க வருகிறான்....

சேலம் பிளாட்டினம் வளங்களை  கொள்ளையடிக்க தான் இந்த நல்லவர் வேடம் போடும் சேலம் கலெக்டர் ரோகிணி

சேலம் கலக்டர் ரோகினியை பற்றி இணையத்தில் திட்டமிட்ட புகழுறை பரப்பிய முதலாளித்துவம்.

தமிழக வளங்களை கொள்ளையிட பயன்படுத்தப்படும் ரோகினி என்னும் துருப்புச்சீட்டு...

முழங்கு Ban sterlite.. இதில் வெற்றி கொண்டால் Corporateஐ எதிர்த்து வென்ற தலைமுறையாவோம்...


ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள்...


ஆரக்கிள் என்ற குறி சொல்லும் தேவ தேவதைகள் பண்டைய கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரபலம்..

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் க்ரோசியஸ் என்ற மன்னன் அரசியலில் ஒரு முக்கியமான முடிவு எடுக்க ஆரக்கிள்களிடம் குறி கேட்க எண்ணினான். அதற்கு முன் அந்த ஆரக்கிள்கள்களுக்கு உண்மையில் அந்த அற்புத சக்திகள் உள்ளனவா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடிவு செய்தான். உடனே அவன் ஏழு திசைகளில் ஏழு ஆரக்கிள்களிடம் தன் சேவகர்களை அனுப்பி "இன்றிலிருந்து சரியாக நூறு நாட்கள் கழித்து அவர்களிடம் கேளுங்கள் "இந்த நேரத்தில் எங்கள் அரசர் க்ரோசியஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் உடனடியாக வந்து சொல்லுங்கள்" என்று கட்டளையிட்டான்.

அந்த நூறாவது நாள் வந்ததும் க்ரோசியஸ் எந்த யூகத்திலும் அந்த ஆரக்கிள்கள் தன் செயலைச் சொல்லி விடக்கூடாது என்று எண்ணி வழக்கமாகச் செய்யும் எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வினோதமான ஒரு காரியம் செய்தான். ஒரு ஆமையையும் ஒரு ஆட்டையும் கொன்று இரண்டையும் ஒரு பெரிய வெண்கலப் பாத்திரத்தில் போட்டு வெண்கலத் தட்டால் மூடி வேக வைத்துக் கொண்டிருந்தானாம். டெல்·பை என்ற ஆரக்கிள் "எனக்கு ஆமை வாசனை தெரிகிறது....நெருப்பில் ஒரு ஆட்டுக்குட்டியின் சதையும் பொசுங்குகிறது தெரிகிறது. அது வெண்கலப்பாத்திரத்தில் போடப்பட்டிருக்கிறது. அதன் மூடியும் வெண்கலம்" என்று கூறினாராம்.

அரசர் அந்தப்புரத்தில் இருக்கிறார், மந்திரிகளுடன் ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறார் என்று யூகத்தில் சொல்வது சுலபம். அது பல நேரங்களில் பலிக்கவும் கூடும். ஆனால் க்ரோசியஸ் மன்னன் செய்து கொண்டு இருந்ததைச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அந்த ஆரக்கிளிடம் அந்த சக்தி இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இது போன்ற கதைகள் ஏராளம். ஒரு உண்மை சம்பவம் இருந்தால் ஆயிரம் கற்பனைச் சம்பவங்கள் புனைக்கப்படுகின்றன. கேட்பவைகளில் இருந்தும் படிப்பவைகளில் இருந்தும் உண்மையான சம்பவத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமே. எதை யார் கூறுகிறார்கள், கூறுபவர்களின் நம்பகத்தன்மை எத்தகையது, எந்த ஆதாரத்தில் சொல்கிறார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து உண்மை என்று நம்பக்கூடியதை மட்டுமே நான் இந்த உளவியல் தொடரில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நடந்ததாக வரலாற்றில் சொல்லப்பட்ட அந்த சம்பவத்தைப் பார்த்தோம். 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ·ப்ளோரிடாவில் உள்ள ஒரு சிறு நகரத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்ப்போம். அந்த நகரில் ஒரு மத்திய வயது நபர் ஒரு நாள் வீட்டை விட்டு தன்னுடைய டிரக்கில் கிளம்பிப் போனவர் பின் திரும்பி வரவேயில்லை. உடனடியாகப் போலீசில் தெரிவிக்கப்பட்டது. யாரும் கொன்றிருக்கவோ கடத்தியிருக்கவோ வாய்ப்பில்லை என்பதை போலீசார் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தனர். ஆனால் பிறகு அவரைக் கண்டு பிடிக்க முயன்ற போலீஸாரின் முயற்சி வெற்றி பெறவில்லை. தீயணைப்புப் படையினர் உதவியும் பெற்று பல இடங்களில் சுமார் 16 மாதங்கள் முயன்று தோற்ற போலீசாருக்கு ஒரு அபூர்வ சக்தி படைத்த பெண்மணியின் உதவியைப் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. காணாமல் போன மனிதர்கள், பொருட்கள் பற்றி அந்தப் பெண்மணி துப்பு தருவதில் வல்லவர் என்று சொல்லப்பட்டது.

நம்பிக்கை சுத்தமாக இல்லாவிட்டாலும் முயற்சி செய்வதில் நஷ்டமில்லை என்று அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி அந்தப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன்னிடம் ஒரு மாதத்திற்கு அப்பாயின்மென்ட் இல்லையெனவும் ஒரு மாதம் கழித்து காணாமல் போன நபரின் ஏதாவது சில உடைமைகளை எடுத்துக் கொண்டு வருமாறும் அதிகாரியிடம் சொன்னார். அந்த அதிகாரியும் அந்த நபரின் ஷ¥, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்மணியிடம் சென்றார்.

அந்த நபரின் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிய அந்தப் பெண்மணி சில நிமிடங்களில் சில துப்புகள் தந்தார். அந்த நபரின் உடல் இன்னும் அந்த டிரக்கின் உள்ளே தான் இருக்கிறது. எங்கிருந்தோ கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படுவதால் அந்த மனிதர் அந்த டிரக்கோடு கீழே ஏதாவது பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என்று தெரிவித்தார். அந்த இடத்தின் அருகே சிவப்பு செங்கல்கள், பழைய ரெயில்வே டிராக் தென்படுகின்றன என்றும் சொன்னார். அந்த மாகாண வரைபடத்தில் ஒரு சதுரத்தை வரைந்து அந்த இடத்தில் தேடச் சொன்ன அந்தப் பெண்மணி 1,2,4,5 எண்களுக்கு சம்பந்தமுள்ள இடங்களில் பார்க்கச் சொன்னார்.

அந்த அதிகாரி சில நாட்கள் அந்தப் பெண்மணி வரைபடத்தில் வரைந்த சதுரத்திற்குள் இருக்கும் இடங்களில் எல்லாம் தேடி சலித்துப் போனார். அந்த நபரின் உடல் கிடைப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்மணியை நம்பி வந்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்ட அந்த அதிகாரி திரும்பத் தயாரான போது ஓரிடத்தில் சிவப்பு செங்கல்கள் கொண்ட நிலப்பரப்பு தொலைவில் தெரிந்தது. அவருக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது. அந்த இடத்தை நோக்கி விரைந்தார். அது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அங்கே சென்று ஆராய்ந்த போது ஒரு பழைய ரெயில்வே டிராக்கைக் காண முடிந்தது. அந்த டிராக்கும் புல்களால் மூடப்பட்டிருந்தது. அந்த குவாரியின் உச்சியில் சென்று பார்த்த போது சுமார் எழுபதடிக்குக் கீழே ஒரு பெரிய நீர்நிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த நீர் நிலை முழுவதும் சகதியும், புற்களும் மண்டியிருந்தன.

அந்தப் பகுதி ஹைவே 45க்கு அருகே இருந்தது. அங்கிருந்து 2.1 மைல் தூரத்தில் அந்த உச்சி இருந்ததைக் கணக்கிட்ட அந்த அதிகாரிக்கு எல்லாம் அந்தப் பெண்மணி சொல்வதற்கு ஒத்து வருவது போலத் தோன்றியது. உடனே கடற்படையினரின் உதவியை நாடி அவர் அந்த நீர்நிலையில் ஏதாவது டிரக் விழுந்திருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல கடற்படையினர் வந்து தேட டிரக்குடன் அந்தக் காணாமல் போன நபரின் உடலை 25 அடி ஆழத்திலிருந்து மீட்க முடிந்தது.

உள்ளூர் மக்களும், போலீஸ் அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் பின்பு இந்நிகழ்ச்சியை ஆராய வந்த ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இது ஒன்றும் பிரமாதமான விஷயம் அல்ல என்றார். அந்தப் பகுதியே பல குவாரிகள் நிறைந்தது என்பதால் அந்த நபர் அதில் ஏதாவது ஒன்றில் இருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று யூகிப்பது சிரமமல்ல என்றும் சிவப்பு செங்கல்கள், பழைய ரயில்வே டிராக் போன்றவை குருட்டாம் போக்கில் சொல்லப்பட்டு உண்மையாகிப் போன ஹேஷ்யங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

ஆனாலும் இது போன்ற சிரமமில்லாத யூகங்களை வைத்து போலீசாரால் 16 மாதங்கள் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதும் அந்தப் பெண்மணியின் துப்புகள் இல்லை என்றால் அந்த நீர் நிலையை எப்போதாவது தூர் வாரும் வரை அந்த நபரின் உடல் கிடைத்திருக்காது என்பதும் உண்மையல்லவா என்று கேட்டதற்கு இந்தக் கேஸில் அது உண்மை என்று முன்பு தேடிய உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்புப் படை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர்...

தமிழின விரோதி பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது...


கல்வியில் பின்தங்கிய திருவண்ணாமலை மாவட்டத்தை தேர்ந்ததற்கு நன்றி தோழர்களே...


இம்மாவட்டத்தில் கற்கும் திறன் குறைந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 24,000 பேர். இவர்களில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் மொத்தம் 1000 ஆசிரியர்கள் 10 நாட்கள் தமிழ்ப் பயிற்சி அளித்திருக்கின்றனர்...

Gmo கொசுக்கள் இரகசியம்...


சித்தர் ஆவது எப்படி ? - 5...


சிவமான சத்திய சித்தரின் பண்புகள்...

இந்த தலைப்பில் வரும் தகவல்கள் மிகவும் சிக்கலானதும், திகைப்பினை தரக்கூடியதுமானது... ஆனாலும் இந்த உண்மையினை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுலபமாக சித்தராக முடியும்....

முதலில் சித்தர்கள் தரிசனத்தை காண விரும்புவர்கள், அவரை எப்படி காண விரும்புகிறார்கள்.. தூல தேகத்திலா அல்லது சூட்சும தேகத்திலா ?

இன்றைய கால கட்டத்தில் பலர் சித்தர்களை போல இருந்தாலும், அவர்களிடம் எதிர் பார்த்து, எதிர்பார்த்து, ஏமாந்து போனதினால், சித்தர்களை சூட்சும தேகத்திலே காண விரும்புகிறார்கள்.. அப்படி காண்பது ஒன்றே நம்ப தகுந்தாக உள்ளது...

சித்தரை கண்டவர்கள் எல்லாம் அவர்களின் ஒளி தேகத்தை மட்டுமே படம் பிடித்து பதிவு செய்வார்கள்... சித்தரை பற்றி அறியாதவர்கள், வேறு உருவங்களை படம் பிடித்து அவைகளை ஆவி என்று அநேக படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்..

இப்படி சித்தரா அல்லது ஆவியா என்ற குழப்பத்தில் பலர் இருந்து இருக்கிறார்கள்.. அவர்கள் சித்தரை பற்றி அறை குறையாக அறிந்தவர்களே..

இறைவன் தரிசனத்தை கண்டவர்கள், தங்கள் இஷ்ட தெய்வத்தையே சூட்சும தேக வடிவில் சற்று மங்கலான ஒளி வடிவில் கண்டு இருக்கிறார்கள்...

இப்படியாக கண்டு கண்டு களித்த மனிதர்கள் பரவசத்தில் ஆழ்ந்து போனார்கள்..

ஆனால் நேரடியாக எந்த உபதேசத்தையும், ஏதாவது பொருட்களையும் பெற்றதாக தெரிய வில்லை..

சிலருக்கு அப்படி நடந்து இருந்தாலும் அது மிகை படுத்திய ஒன்றாகவே முடிவில் இருந்து இருக்கிறது..

சிலருக்கு சித்தர் பழம் கொடுத்தார் என வைத்துக் கொள்ளுங்கள்.. அது எங்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தானே.. அதில் பரவசம் அடைய என்ன காரணம் ?

ஒரு விசித்திரமான பழமாக, உதாரணத்திற்கு பழத்தின் ஒரு பக்கம் ஆப்பிளாகவும் மறு பக்கம் ஆரஞ்சு ஆகாவும் விஞ்ஞானிகள் வியக்கும் வண்ணம் கொடுத்து இருந்தால், ஏதாவது அர்த்தம் இருக்கிறது... ஆனால் அது போல் எதுவும் நடந்ததில்லை... இனியும் நடக்குமா என்பதிலும் ஐயமே உள்ளது..

மற்றொன்று, சித்தரின் விசித்திரத்தை கண்டவர்கள் அனைவரும் தனி தனியாகத் தான் கண்டார்களே தவிர கூட்டாக யாரும் காணவில்லை.. ஒருவர் அனுபவித்த அனுபவத்தை வேறு ஒருவர் உடன் இருந்து சாட்சியாக இருந்ததில்லை..

இந்த நிலையில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு... அவர் இஷ்டப்பட்டு வரும் நேரத்தில் மட்டுமே பக்தன் கவனிக்க முடியுமே தவிர தான் நினைத்த நேரத்தில், ஏங்கும் நேரத்தில், ஒரு நாளும் தரிசனத்தை கண்டு களித்ததாக செய்திகள் எதுவும் இல்லை..

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் அது உலத்தை விட பெரியது என்றார் வள்ளுவர்.. காலத்தில் காட்சி தராத, உதவாத சித்தரால் என்ன பயன் என்று மனித குலம் சிந்திப்பது இல்லை...

ஏதோ நம்பிக்கையிலே மனித குலத்தின் காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது; அதை ஏன் கெடுக்க முயற்சிக்க வேண்டும் என கேட்கலாம்..

மனிதனின் தவறான மீள முடியாத சிக்கி கொண்ட நிலையிலிருந்து மீள சில உண்மைகளை வெளிப் படுத்தும் பொழுது, சிக்குண்டதில் ஒடுங்கி போன நிலையில் இருந்து மனித குலம் மீள, சரியான வழி கிடைக்கலாம்...

உண்மைக்கு புறம்பான செய்திகளில் சிக்குண்ட இந்த மனித குலம் இதுவரை இந்த சித்தர்களிடமிருந்து என்ன பெற்றது ?

ஞானத்தையா அல்லது அசாதாரமான பலத்தையா?

முடிவில் மரணத்தை தவிர, அதையும் சமாதி என்ற கௌரவமான பட்டத்தை தவிர வேறு என்ன கிடைத்தது ?

தனிப் பட்ட மனிதனுக்கு கிடைத்ததாக கேள்வி பட்டு இருக்கிறோமே தவிர ஒட்டு மொத்த மனித குலத்திற்கு என்ன செய்ய முடிந்தது ?

காரணம் சித்தர்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு உள்ள மனிதகுலம் அத்தகைய மன கட்டமைப்பில் உள்ளவர்களையே அதாவது உடல் தோரணைகளில், உலக குடும்ப பந்தங்களில் இருந்து விலகி அன்பு என்பதையே என்னவென்று தெரியாதவர்களையே நம்மில் பெரும் பாலும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்..

அத்தகைய வேசதாரிகளிடம் இருப்பது, சோம்பலும், ஒழுக்கமின்னையும், போதை பொருள்களில் சிக்குண்டவர்களாய் ஆற்றல் அற்று ஆனால் மிக பெரிய ஆற்றல் உடையவர்கள் போன்ற நடிப்பும், நடமாடும் தூல தேக நடை பிணங்களாய், தங்கள் பிழைப்பு ஓட்ட பயமுறுத்தி வாழ்வதுமே நாம் கண்டு கொண்டு வருகிறோம்.. பயமுறுத்தல் என்பது மிக பெரிய ஆயுதமாக கையாண்டு, தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.. இது இன்றைய நிலை...

பின் சித்தர்கள் என்பவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம் ?

பேரண்ட பேராற்றலை பெற்ற காரணத்தினால், ஆற்றல் மிக்கவர்களாய், எதையும் சாதிக்க கூடிய நிலையில் உள்ளவர்கள்.. பொருள் உதவிக்காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.. யாருக்காகவும் தன் இயல் நடை உடை பாவனைகளை மாற்றி கொள்ளவேண்டிய அவசியம் இல்லை...

ஆற்றல் மிக்கவர்களாதலால் அன்பு என்ற மகா சக்தி உடையவர்களாதலால் உலக குடும்ப தொடர்புகளிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும் அவநிலை அவர்களுக்கு இல்லை..

உலகம் எத்தனை வஞ்சனைகள் செய்தாலும், எத்தனை தீங்குகள் செய்தாலும், தாய் உள்ளத்தோடு பொறுத்துக் கொண்டு, வேண்டியவர்களுக்கும் வேண்டாதவர்களுக்கும், பாராபட்சமின்றி, வேண்டிய நேரத்தில் உதவக் கூடியவர்கள்.. இவர்கள் தன்னை தன் செயல்களை மறைத்துக் கொண்டு உலகிற்கு பலன் தரக்கூடியவர்கள்..

அரசாங்க பணத்தையே அள்ளி அள்ளி கொடுத்து தான் கொடுத்ததாக காட்டிக் கொள்ளும் விளம்பரதாரர்கள் அல்ல.. அன்பே உருவான இவர்களை அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு மிக மிக எளிமையானவர்கள்...

அதனால் தான் அப்படி இன்றும் வாழும் இவர்களை அடையாளம் காண முடியாமல், விளம்பர புகழ்ச்சி உலகில் சிக்கி கொண்ட மனிதன் தவிக்கிறான்...

உண்மையான சித்தர் பண்புகளை அறிந்து கொண்ட இன்றைய எந்த மனிதனும், சித்தராக விரும்பமாட்டான்..

காரணம் எங்கும் எதிலும் ஆதாயம் தேடும் நிலையிலேயே மனிதன் உள்ளதால் சத்திய சித்தராக விரும்புவதே இல்லை..

ஆனால் சத்திய சித்தர் பண்புகளே அந்த சித்தர்க்கு பிரபஞ்சம் பேரண்டம் தன் பேராற்றலை வழங்கும் என்ற இரகசியத்தை மனிதன் அறிவதில்லை..

அதனால் தான் அன்பின் ஆற்றலே எழுந்த மனிதன் மட்டுமே சித்தராக முடியும் என்ற பெரும் பதிவினை மனதில் கொண்டு, அன்பே சிவம் என்ற சத்திய வார்த்தையில் சிவமாகி நின்ற சத்திய சித்தர் வழிமுறைகளை ஆராய்ந்து சித்தராக முனைவோம்..

தூலதேகத்திலும் சித்தராக இருப்பவரே சூட்சும தேகத்திலும் இருக்கும் வல்லமையை, பேரண்ட பேரறிவின் துணையால் பெற்ற காரணத்தினால், கண்டம் விட்டு கண்டம் நகரும் ஆற்றலும் உடையவராக இருப்பார்... அவர் ஒருவரே வேண்டிய நேரத்தில் துணையாய் வந்து நிற்பார்..

முதலையிடம் சிக்கிய யானை ஆதி மூலமே என்று அலறிய அக்கணமே வந்து உதவிய இறைவனை போன்று உதவும் வல்லமை உடையவராகவும் இருப்பார்..

வெறும் காட்சிகளை மட்டும் அளித்து காணாமல் போகும் மாயா தோற்றங்கள் கொண்ட சித்தரை போல் இல்லாமல், சத்திய சித்தராய் தேகம் உருவிலும், கண்டம் விட்டு கண்டம் இயங்கக் கூடிய சூட்சும சக்தியிலும் இருப்பவரே உண்மை சித்தர் ஆவார்.. இத்தகைய சித்தர் ஆகும் உளவுகள் உலகிற்கு நன்மை தரும் என்பதை மறக்காமல் இனி வரும் பகுதிகளை உற்று கவனிப்போமாக...

முதலில் கண்ட சித்தர் பிம்பங்கள் அனைத்தும் தனி பட்ட மனிதனின் மாயா மன தோற்றங்கள்.. இவைகளை முதன்முதலில் கண்டு ஏமாந்த மனிதன் இன்று வரை ஏமாந்து கொண்டே இருக்கிறான்..

கண்டேன் கண்டேன் என பரவச புலம்பலை தவிர வேறு ஒரு பலனை பெற இயலாதவனாய் இருக்கிறான்...

இவைகள் எல்லாம் நெருப்பு என்ற பூதத்திலிருந்து பிரிந்து வந்த வெளிச்சம் என்ற கழிவால் ஆனது...

ஆனால் நெருப்பு என்ற பூதத்தை முறையாக பயன் படுத்தி கனல் என்ற உயிர் ஆற்றலை பெறும் போது மட்டுமே சத்திய சித்தர் உருவாகிறார்..

அதற்கு சிவ கலப்பே உகந்த வழி..

சிவ கலப்பு என்பது ஒரு மதத்தை சார்ந்த சொல் அல்ல... அது ஒரு பயிற்சி.. புத்தி அறிவும் இணைந்து செயலாற்றும் உன்னத பயிற்சி..

இனி வரும் பகுதிகளில் அதில் கவனம் செலுத்தி காண்போமாக....

அகத்தியர், போகர், வள்ளலார், திருமூலர் சிவ வாக்கியர் அருணகிரி நாதர் போன்ற மகான்களை நாம் சித்தர்களாக போற்றி வணங்குகிறோம்...

இப்போது நாம் அவர்களை மேலே குறிப்பிட்ட சித்தர் கருத்தோடு பொருத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு, அவர்களை பற்றி தெளிவான கருத்தினை பின்னால் பார்ப்போமாக...

மறுபடியும் முதல்ல இருந்தா...


ஏப்பா அவங்களே அந்தம்மா தான் நிர்மலா தேவினு ஒத்துக்ட்டானுக. அடுத்து ஆகவேண்டிய வேலைய பாருங்கடா....


குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்...?


உலக அளவில் இந்தியர்களுக்கு  தலைகுணிவை ஏற்படுத்தி இருக்கும்.ஒரு சம்பவம்...

இலண்டன் வரை போகும் பாஜக மோடியின் மானம்...



ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்துக் கொண்டு பெண் பத்திரிக்கையாளர் கண்ணத்தை கிள்ளுவது நாகரிகமற்ற செயல்...


நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆசிஃபா படுகொலைக்காக நாடே போராடிக் கொண்டு இருக்கிறது.

இவரிடம் பேட்டி எடுக்க வந்த பெண் நிருபரிடம் கண்ணத்தை கிள்ளுகிறார். கவர்ணரின் கலாச்சாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

பெண்களிடம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று நாகரிகம் கூட தெரியாத ஒருவர் கவர்னராக இருக்க தகுதியற்றவராக நான் கருதுகிறேன்.

இந்தியாவில் பெண்களுக்கு எங்கு பாதுகாப்பு உள்ளது மத்திய மாநில அரசுகள் மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்...

இது போல் அனைத்து ஊர்களிலிலும் பேனர் வைக்க வேண்டும்...


பிஞ்சு குழந்தையை நாசமாக்கிய பாஜக வெறி நாய்களை தூக்கிலேற்ற வேண்டும்...

எல்லா ஊர்களிலும் இந்த பேனரை வையுங்கள்...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடும் வரை விட மாட்டோம்...


வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்...


இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விசயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விசயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.

அதாவது நல்ல கிருமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்...

நம்பிக்கை என்ற பெயரில் இங்கு தகர்க்க முடியாத விஷத்தை சுவராக எழுப்பி இருக்கிறார்கள்...


அதை தகர்க்க வேண்டுமெனில் ஒருமித்த கருத்துகள் தேவை..

ஏனெனில் விஷத்தின் வீரியமும் ஒருநாள் இல்லாமல் போகும்..

அது இயற்கை...

பாஜக வும் பொய்களும்...


முதுமையை தடுக்கும் தண்ணீர்... தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது...


உலகிலேயே மிகவும் சிறப்பான ஒரு அழகு பொருள் என்று சொன்னால், அது தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.

இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். ஒரு தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவான சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும்.

ஏனெனில் தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், நச்சுக்களால் உடல் மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கிறது. சரி, இப்போது அந்த தண்ணீரினால் கிடைக்கும் சில அழகு நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!!!

நல்ல மாய்ஸ்சுரைசர்...

தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி, மென்மையாக இருக்கும்.

சரும சுருக்கத்தை...

தடுக்கும் தண்ணீர் குடித்தால், இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம்.

பொலிவான கண்கள்...

நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.

நல்ல க்ளின்சிங்...

முகத்தை தண்ணீரால் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

பருக்களைக் குறைக்கும்...

வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பிம்பிள் வருவதைத் தடுக்கும். குறிப்பாக இதனை தினமும் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

பொலிவான சருமம்...

தண்ணீர் பிணி நீக்கல் (therapy) எடுக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்துளைகளை திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த சருமத்துளைகளை மூடவும் உதிவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் சருமத் துளைகளில் தங்குவதை தவிர்த்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

முதுமையை தடுக்கும்...

இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

அழகான உதடுகள்...

உதடுகளின் அழகைக் கெடுப்பதே வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினால், போதிய நீர்ச்சத்து கிடைத்து, உதடுகள் எப்போதும் அழகாக வெடிப்புக்களின்றி இருக்கும்.

மென்மையான சருமம்...

சரும வறட்சி ஏற்பட்டால், சருமம் கடினமாகி மென்மையிழந்து காணப்படும். எனவே தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

எடை குறைய...

தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.

சரும தொற்றுகள்...

ச(ஷ)வரில் குளிக்கும் போது, சருமத்தில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றுகள் நீக்கப்படுவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு, உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.

உடல் முழுவதற்கும் நல்லது...

உடல் ஆரோக்கியத்தை சருமத்தை வைத்து சொல்லலாம். இத்தகைய சருமம் அழகாக இருக்க வேண்டுமெனில், தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்...

தண்ணீரை தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராக பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

உடல் துர்நாற்றத்தைப் போக்கும்...

குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறுவதால், அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம்...

ரஷ்யா.. சிரியாவில் ஆயுதங்களை குவித்து வருகிறது...


குலதெய்வங்கள் என்றால் என்ன ? அவர்களின் பெருமை என்ன...


குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு
தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாது..

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை..

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி
பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்...

அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய்
நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை
கட்டியிருக்கலாம்...

இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே..

நாம் அங்கே போய் நின்று... அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்..

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23
க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்..

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத்
தந்தையின் குரோமோ சோமே முடிவு
செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள்
உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது..

என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி
வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன.

அதனால் அவன் மூலம் வம்சம்
மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்.

முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன்
எனத்தொடர்ந்து...

இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்... பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று
கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்..

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...

அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை
மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம்,
யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.

வாழ்க வளமுடன்...

ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை..


டிசிடபிள்யூ ஆலையை மூடக்கோரி ஆட்சியரிடம் மனு...


காயல்பட்டினம் நகரில் இயங்கி வரும் டிசிடபிள்யூ தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள் உரிமைநிலை நாட்டல் மற்றும் வழிகாட்டும் அமைப்பு தூத்துக்குடி மாவட்டஆட்சியர்க்கு மனு அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்கள் உரிமைநிலை நாட்டல் மற்றும் வழிகாட்டும் அமைப்பு சார்பில் தூத்துக்குடி ஆட்சியர்க்கு அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் இயங்கி வரும் டிசிடபிள்யூ தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பெரியஅளவில் பாதிக்கப்பட்டது. பாெதுமக்களும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகள் இயங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி காலாவதியாகி விட்டது. இருப்பினும் அனுமதியின்றி காஸ்டிக்சோடா பிரிவு இயங்கி வருகிறது.

மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே விதித்திருந்த கட்டுபாடுகளான சென்னை ஐஐடி மூலம் சுற்று சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றும் மதிப்பிற்குரிய ஒரு மருத்துவஅமைப்பு மூலம் உடல்நல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என்ற விதி முறையும் செயல்படுத்தப்படாமலேயே பிவிசி மற்றும் சிபிவிசி பிரிவுகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. அந்த அனுமதியும் காலாவதியாகிவிட்டது. எனவே சுற்றுசூழலுக்கு பல விதங்களில் கேடு விளைவித்துள்ள டிசிடபிள்யூ தாெழிற்சாலையை உடனே மூட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது...

சீனா தனது படைகளை தயார் படுத்துக்கிறது...


தமிழா விழித்துக்கொள்... இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்...




6. தண்ணீர் பாதுகாப்பு (என்ற பெயரில் தண்ணீரை தனியார் மயமாக்கல்.).

7. அனைவரும் தொழில்நுட்பம் (என்ற பெயரில் அனைவரையும் கண்காணிப்பது).

8. வணிக வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேடை ஊக்குவித்தல், சிறு குறு தொழில்களை முடக்குவது.

9. போக்குவரத்து புரட்சி (என்ற பெயரில் சுங்க சாவடிகளை திறப்பது. இலவச சாலைகளை மூடுவது).

10. ஒற்றுமையை வளர்க்கிறேன் என்ற பெயரில் (நாடுகளுக்கிடையே யான ஒற்றுமையை சீர்குலைப்பது).

11. புதிய நகரங்களை உருவாக்குவோம் (என்ற பெயரில் கிராமங்களை அழிப்பது).

12. வணிகத்தை ஒழுங்குபடுத்துதல் (என்ற பெயரில் வணிகத்தை நம்மீது திணித்தல், நாம் என்ன வாங்கவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வது).

13. சுற்றுசூழலை பாதுகாப்போம் (என்ற பெயரில் மக்களிடமே கார்பன் வரி விதிப்பது).

14. கடல் வளத்தை பாதுகாத்தல் (என்ற பெயரில் மீனவர்களை அழிப்பது).

15. நில வளங்களை பாதுகாப்போம் என்ற பெயரில் மக்களை தற்சார்பாக வாழவிடாமல் தடுப்பது ( வளங்கள் அரசுடமை).

16. அமைதியை உருவாக்குவோம் (என்ற பெயரில் ஆயுத வணிகத்தை ஊக்குவிப்பார்கள்).

17. உலக சகோதரத்துவம் (என்ற பெயரில் உலகமயமாக்கலையும், உலகாயுதத்தையும் பரவச்செய்வது).

இந்த 17 குறிக்கோள்களை புரிந்துகொண்டால் உலக அரசியலையும் சமகால அரசியலையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்...

இவற்றில் பல நமக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன விழித்துக் கொள்ளுங்கள் தற்சார்பை நோக்கி செல்லுங்கள்....

தமிழகத்தை அழிக்க எதிரி காய்களை வேகமாக நகர்த்துகிறான்...


பெண்கள் கொலுசு அணிவது ஏன்?


கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.

பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம்.

அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக் கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது.

வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

சில விவாகரமான விஷயங்கள் இலை மறை கனியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்...

ஸ்டெர்லைட் ஆலையும்.. டிடிவி தினகரன் கூட்டும்...


ஆழ்மனம்...


ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்தது என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால், அது நன்மை தரும் சக்தியாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அது தீமையின் ஊற்றாகக் கூட இருக்கலாம். அது வரமாகலாம். சாபமுமாகலாம். அது எப்படி என்பதையும் அதை சாபமாக்கிக் கொள்ளாமல் வரமாக்குவது என்பதற்கான பயிற்சியையும் இப்போது பார்க்கலாம்.

மேல்மனம் மூலமாகத் தான் ஆழ்மனம் தகவல்களைப் பெறுகிறது. அது மேல்மனம் எப்படிச் சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு நினைவு வைத்துக் கொள்கிறது. நல்லது, கெட்டது, இனிமையானது, சகிக்க முடியாதது என்று எப்படியெல்லாம் மேல்மனம் அடைமொழிகளோடு செய்திகளை நினைக்கிறதோ அதே அடைமொழிகளோடு அந்த தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆழ்மனம் மிக மிக சக்தி வாய்ந்ததாக இருப்பினும் அது தனியாக சிந்தித்தறியும் வேலையை செய்வதில்லை.

ஆழ்மனம் தான் நம் பழக்க வழக்கங்கள் பதிந்திருக்கும் இடம். நம்மை உண்மையாக இயக்குவது அது தான். கவனத்தோடு சிந்தித்து செயல்படும் போது மட்டுமே நாம் மேல்மன ஆதிக்கத்தில் இருக்கிறோம். மற்ற சமயங்களில் நாம் ஆழ்மன தகவல்கள் படியே இயக்கப்படுகிறோம்.

உதாரணத்துக்கு ஒரு வாகனத்தை ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது மேல் மனம் கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்கிறது. அந்தத் தகவல்கள் ஆழ்மனதில் சேகரிக்கப்படுகிறது. ஆழ்மனம் அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறது. பின் நாம் மேல்மனதில் எத்தனையோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் நம்மையறியாமலேயே வாகனத்தை ஓட்ட ஆரம்பிக்கிறோம். இனி வாழ்நாள் பூராவும் வாகனம் ஓட்டும் விதம் குறித்து மேல்மனம் கவலைப்பட வேண்டியதே இல்லை.

இது போன்ற வேலைகளை அற்புதமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடுவதால் தான் நமக்கு வாழ்க்கை சுலபமாகிறது. இல்லாவிட்டால் நடப்பது, வண்டி ஓட்டுவது, சட்டைக்குப் பட்டன்கள் போட்டுக் கொள்வது போன்ற அன்றாட வேலைகளைக் கூட முதல் முதலில் செய்வது போலவே ஒவ்வொரு முறையும் நாம் சிரமத்துடன் செய்ய வேண்டி இருக்கும். எனவே இது போன்ற தேவையான பழக்கங்களும், வேறு நல்ல பழக்கங்களும் அமைய உதவும் போது ஆழ்மனம் நமக்கு வரப்பிரசாதமே.
தகவல்களை உள்ளே அனுப்பும் வேலையை மட்டுமே மேல்மனம் முக்கியமாகச் செய்கிறது.

ஆழ்மனம் அது சொல்கிற படியே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதால் அனுப்பும் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பெரும் பொறுப்பு மேல்மனத்திற்கு உண்டு.

ஆழ்மனம் வரமாவதும் சாபமாவதும் மேல்மனதின் இந்தத் திறனைப் பொறுத்தே அமையும். மேல்மனம் அந்தத் திறன் பெற்றிராமல் இருந்தால் மற்றவர்கள் சொல்வதையே அல்லது தோற்றத்தில் தெரிவதையே உண்மை என்று எடுத்துக் கொண்டுவிடும்.

ஆழ்மனமும் அதை அப்படியே பதிவு செய்து கொள்ளும். எடுத்துக் கொள்வது தவறான செய்திகளும், நம்பிக்கைகளுமாக இருந்தால் பின் ஆழ்மனம் மூலமாக தீமைகளே விளையும் என்பதில் சந்தேகமில்லை.
எத்தனையோ கொடுமையான செயல்களைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்ய சில தீவிரவாதிகளாலும், கொடியவர்களாலும் எப்படி முடிகிறது என்ற கேள்விக்கு இங்கு தான் பதில் கிடைக்கிறது.

மதம் என்ற பெயரிலும், கொள்கை என்ற பெயரிலும் இளமையிலேயே மூளைச்சலவை செய்து தவறான, வெறுப்பு விதைகளை நியாயமானவைகளாக ஆழ்மனதில் விதைத்து இப்படித் தான் சமூக விரோதிகள் தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள்.

ஆழ்மனம் என்ற அரண்மனைக்கு மேல் மனம் தான் வாட்ச்மேன். யாரை உள்ளே விடுவது, யாரை உள்ளே விடக்கூடாது என்பதை அது தான் தீர்மானிக்க வேண்டும். அது பொறுப்பற்று இருந்தால், கவனக்குறைவோடு இருந்தால் யார் யாரோ உள்ளே நுழைந்து அரண்மனைச் சொத்துகள் சூறையாடப்பட்டு தீய வழிக்குப் பயன்படுத்தப்படும். உள்ளே விட்ட எதையும் வெளியேற்றுவது மேல்மனதிற்கு அவ்வளவு சுலபமல்ல.
நம்முடைய எல்லா தீய பழக்கங்களும் இப்படி உருவானவை தான். அதில் இன்பம் கிடைக்கிறது என்ற செய்தியை உள்ளே அனுப்பி அதில் ஆரம்பத்தில் ஈடுபடுகிறோம். அதில் நமக்குக் கட்டுப்பாடும் இருப்பதாக ஒரு தோன்றல் கூட ஆரம்பத்தில் சிலருக்கு இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் அவர்கள் எண்ணுவதுண்டு.

ஆனால், ஆழ்மனதில் பதிந்து அது பழக்கமாக மாறி விட்ட பின்னர் அதைக் களைவது கிட்டத்தட்ட முடியாத காரியமே. இது போன்ற தீய பழக்கங்களை அமைத்துக் கொண்டு நாம் கஷ்டப்படும் போது ஆழ்மனம் ஒரு சாபக்கேடே.
'நாளை முதல் குடிக்க மாட்டேன்' என்று ஒரு குடிகாரன் சபதம் எடுத்துக் கொண்டு மறு நாள் மறுபடி போதையுடன் வருவதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்கிறோம். ஆனால், அந்தக் குடிகாரன் அந்த சபதம் எடுக்கையில் உண்மையான ஆர்வத்துடன் இருந்திருக்கக் கூடும். மறுநாள் அந்த சந்தர்ப்பம் வரும் போது ஆழ்மனம் அந்த செயலுடன் மகிழ்ச்சியைப் பிணைத்து வைத்து இருப்பதால் குடிக்காமல் இருப்பது அந்த குடிகாரனுக்கு முடியாமல் போகிறது.
நல்ல புத்தகங்களைப் படிக்கையிலும், பெரியோர் பேச்சுகளைக் கேட்கையிலும் அந்த கணத்தில் நல்ல முறையில் எதிர்காலத்தில் இருந்து விட நம்மில் பலருக்கும் தோன்றுவதுண்டு. 'இனி மேல் கோபப்பட மாட்டேன்', 'இனி மேல் தவறான வழிகளில் ஈடுபட மாட்டேன்' என்றெல்லாம் நாம் உறுதியுடன் நினைப்பதுண்டு. ஆனால், மறுநாளே நாம் பழைய படியே நடந்து கொள்வதற்குக் காரணமும் ஆழ்மனமே. முதலிலேயே பதித்து வைத்திருந்த தகவல்களையும், நம்பிக்கைகளையும் வேரோடு பிடுங்கி எறிகிற வரை நாம் எந்த விதத்திலும் மாறி விடப் போவதில்லை.

எனவே தவறான பழக்கங்களில் ஈடுபடும் முன்பே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மேல்மனம் விழிப்புணர்வோடு இருந்தால் அந்த தவறான விதைகளையே உள்ளே விடாமல் தடுப்பது மிக எளிதான விஷயம். விதைக்காமலேயே இருந்தால், அறுக்கவும் தேவை இல்லை. பின் வேரோடு பிடுங்கப் போராடவும் அவசியம் இல்லை.

சரி, நாம் ஒரு முறை தவறாக பழகி விட்ட எதிலிருந்தும் விடுபட முடியாதா, தீய பழக்கங்களைக் களைய முடியாதா என்றால், கஷ்டமானாலும் முடியும் என்பது தான் நல்ல செய்தி. எப்படி என்பதைப் பார்ப்போம்.

முதலில் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள். நாம் முன்பு பார்த்த மூச்சு சீராகும் பயிற்சியையும், ஏதாவது ஒரு தியானத்தையும் செய்து அமைதியான மனநிலையில் இருங்கள்.

பிறகு, முதலில் நாம் நம் ஆழ்மனதில் பதிய வைத்திருந்த தவறான செய்திகளுக்கு எதிர்மாறான நல்ல, உணர்வு பூர்வமான செய்திகளை ஆழ்மனதிற்கு அனுப்ப வேண்டும். அந்தப் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை, அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை மிகவும் விவரமாக மனதில் திரும்பத் திரும்ப எண்ணுங்கள். அந்தக் கஷ்டங்களை எல்லாம் அந்த பழக்கத்தோடு இணைத்துப் பாருங்கள். அந்தப் பழக்கத்தால் கஷ்டப்பட்ட நிகழ்ச்சிகளை உங்கள் மனதில் நிதானமாக ஓட விடுங்கள். உங்கள் பழக்கத்தால் நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் அடையும் துன்பங்களையும் படமாக மனதில் ஓட விடுங்கள். மனம் அதைச் செய்ய மறுத்து முரண்டு பிடிக்கும். ஆனாலும் உறுதியாக அதைச் செய்யுங்கள். உண்மையாக நேர்ந்தவற்றை அப்படி சினிமா பார்ப்பது போல் கசப்பாக இருப்பினும் மனதில் ஓட விடும் போது அதன் தாக்கம் மனதில் விரைவில் ஆழப்படும்.

அடுத்ததாக, அந்தப் பழக்கம் மட்டும் இல்லை என்றால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படும் மகிழ்ச்சியையும், மேன்மையையும் ஆழமாக சிந்தியுங்கள். அந்தப் பழக்கத்திலிருந்து நீங்குவதுடன் அதையெல்லாம் இணைத்து மனதில் பதியுங்கள். சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டது போல மனதை ஒருமுனைப்படுத்தி இப்படி இரண்டு விதமாகவும் ஆழமாக சிந்தித்து ஆழ்மனதில் பதிய ஆரம்பியுங்கள்.

இத்தனை நாட்கள் அந்தப் பழக்கத்துடன் சுகத்தையும், அதை விடுவதுடன் அசௌகரியத்தையும் இணைத்து பதிய வைத்திருந்த ஆழ்மனம் இந்தப் புதிய நேர்மாறான செய்தியை உள்ளே பதித்துக் கொள்ளத் துவங்கும். அப்படி புதிய செய்தி ஆழமாகப் பதியும் வரை இதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்துடன் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு முழுக் கட்டுப்பாட்டுடன் நீங்கள் இருப்பது போலவும், அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளாக நீங்களும், உங்களை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருப்பது போல் ஒரு கற்பனைக் காட்சியையும் மனதில் முடிந்த வரை தத்ரூபமாக எண்ணுங்கள்.

இந்த பயிற்சி காலம் வரை அந்தப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க உங்களுக்கு உண்மையான ஆர்வமும், மன உறுதியும் தேவை. அது மட்டும் முடிந்தால் சில நாட்களிலேயே அந்த தீய பழக்கத்திலிருந்து சுலபமாக விடுதலை பெற்று விடலாம். (மனவியல் அறிஞர்கள் இது போன்ற புதிய பழக்கங்கள் நம்மிடம் வெற்றிகரமாக நிலைத்து நிலைக்க துவக்கத்தில் 21 நாட்கள் விடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தல் அவசியம் என்கிறார்கள்.).

எத்தனை ஆண்டுகளாக உங்களிடம் இருந்தாலும் சரி தீய பழக்கங்களையும், பலவீனமான குணாதிசயங்களையும் இந்த முறையில் நீங்கள் உங்களிடமிருந்து விலக்கி விடலாம்...

பாஜக எச். ராஜா சர்மா விற்கு செருப்படி கொடுத்த பெண்...


பெண்கள் மெட்டி அணிவது ஏன்?


பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது.

கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக் கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்..

பெண்கள் கர்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும்.

கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண் ட நோய்கள் குறையும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.

காரணம், நடக்கும் போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்...

இலுமினாட்டி - 2 வணிகர்களின் சிறிய கதை...





உள்ளூர் அரசியல் என்று எதுவுமில்லை...


உலக அரசியலை மக்கள் அறிந்துவிட கூடாது என்பதற்காக வல்லாதிக்கத்தால் கட்டமைக்கப்பட்டதே இந்த கட்சிகளின் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் கூறும் உள்ளூர் அரசியல்..

பூகோள அரசியல் என்பதை தேட தொடங்குங்கள்...