21/04/2021
பிராடு பாஜக மோடியின் தொகுதி வாரணாசியில் என்ன நடக்கிறது?
பல லட்சங்கள் கொடுத்தாலும் சிகிச்சை அளிக்க முடியாத மருத்துவமனைகள்.
கங்கை கரையில் எரிந்து கொண்டிருக்கும் பிணங்கள்.
தவறான சிகிச்சைகளால் சாகடிக்கப்படும் மக்கள்.
மோடி அரசின் அவல நிலையை விளக்கும் சகோதரி...
ரத்த அழுத்தம் குறைய வேண்டுமா.? எலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்...
எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும்.
ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.
செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்துவந்தால், சரி செய்து விடலாம்.
வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும், செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.
இந்த எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால், அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து, தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.
எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பது தான்.
அதுமட்டுமின்றி, அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.
பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
இந்த எலுமிச்சை கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்,
எலுமிச்சை ரசம் செய்முறை...
ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டுபிசைந்து கொள்ளவும்.
பூண்டு, மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளிச் சாறு, அரைத்த மசாலா மற்றும் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, உப்புசேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளி மசாலா கலவையை சேர்த்து மிதமான தீயில் அடுப்பைவைக்கவும்.
ரசம் நுரைத்து கொதி வரும் சமயம் எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கி மூடி விடவும். எலுமிச்சை சாறு ஊற்றியவுடன் கொதிக்கவிடக்கூடாது.
சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.
ரசம் அதிகம் கொதித்து விட்டால் கசந்துவிடும்...
அதிமதுரம்...
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழ் பழமொழி...
உடல் பலத்தோடு பொருள் நிறைவு சேரும்போது மனம் மகிழ்ச்சி பெறும். இவ்வுலகில் அனைவரும் விரும்புவதும் வேண்டுவதும் ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வைத்தானே? நல்ல ஆரோக்கியத்துக்கும் அக மகிழ்வுக்கும் அடிப்படையாக விளங்குவது இயற்கை மருத்துவம். நாம் மறந்துவிட்ட இயற்கையையும் இயற்கை நமக்களித்த மருத்துவத்தையும் இங்கே காண்போம்.
அதிமதுரம் என்ற பெயரிலேயே அதன் தனித்துவம் விளங்குகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள்.
அதிக நேரம் இனிப்பது என்பதும் கூட பொருளாகும். அதிமதுரத்தின் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra.
இது Fabaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகை.
சித்த மருத்துவத்தில் ‘அதிமதுரம்’ என்றும், வழக்கு மொழியில் ‘அதிங்கம்’, ‘அட்டி’, ‘மதூகம்’ என்று வழங்குவர். சமஸ்கிருதத்தில் ‘யுஷ்டிமது’, ‘அதிரஸா’, ‘மதுரஸா’ என்று குறிப்பிடுவர். உருது மொழியில் முலெத்தி என்று கூறுவர். அதிமதுரத்தின் வேர்களே நமக்குப் பெரிதும் பயன்படுகின்றன. வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை... குளிர்ச்சி தன்மை உடையவை. அதிமதுரத்தை உண்ட பிறகு, அது இனிப்பாகவே மாறும் (பிரியும்) இயல்புடையது. அதிமதுரத்தில் 2 வகைகள் உள்ளன
1. சீமை அதிமதுரம்..
சீமை அதிமதுரம் பெருவிரல் கனத்திலும், சிவப்பு அல்லது சாம்பல் நிறத்திலும், ஒடித்தால் உட்புறம் மஞ்சள் நிறமாகவும் இனிப்பாகவும் இருக்கும். இந்த சீமை அதிமதுரம்தான் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைப்பது. இது வங்கதேசம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.
2. நாட்டு அதிமதுரம்..
நாட்டு அதிமதுரம் சிறியதாகவும், விரல் பருமனாகவும், ஒடித்தால் வெண்மையாகவும், சிறிது இனிப்பாகவும் வழவழப்பாகவும் இருக்கும். இதை ‘குன்றிமணி வேர்’ என்ற பெயரில் நாட்டுமருந்துக் கடைகளில் விற்கின்றனர்.
அதிமதுரத்தில் Glycyrrhizin என்ற கிளைக்கோசைடும், Glycyrrhizic acid, Silicones, Sterols, Amino acids, Amine, Isoflavonoids போன்ற தாவரச் சத்துகளும் உள்ளன.அதிமதுரத்தின் பொதுவான செய்கைகள்...
வறட்சியகற்றி (Emollient), உள்ளழலாற்றி (Demulcent), கோழையகற்றி (Expectorant), உரமாக்கு (Tonic) ஆகிய செய்கைகளாகும்.பொதுவாக அதிமதுரத்தினால் கபத்தால் ஏற்படும் கோழை, பித்த மிகுதியால் ஏற்படும் உடல் சூடு, சுவாச காசம், கோழைக்கட்டு, கண் நோய்கள், வெறிநோய்கள், காமாலை, வெப்ப நோய்கள், வெண்புள்ளி (வெண்குஷ்டம்) முதலியன தீரும்.
அதிமதுரத்தால் வறட்டு இருமல் தீரும். அதிமதுரம், மிளகு, திப்பிலி, கடுக்காய் தோல் ஆகியவற்றை இளவறுப்பாக வறுத்துப் பொடித்து 4 முதல் 6 வராகன் எடை (ஒரு வராகன் எடை: 4.2 கிராம்) அளவு தேனில் குழைத்துத் தரலாம்.
நெஞ்சில் ஏற்படும் கோழைக்கட்டுக்கு அதிமதுரத் துண்டு ஒன்று/இரண்டு வாயிலிட்டு அதன் உமிழ் நீரை விழுங்க வேண்டும். அதிமதுரம் நெஞ்சகக் கோளாறுகள், கப நோய்கள் (சீதள நோய்கள்).
நுரையீரல் தொந்தரவுகள், வறட்டு இருமல், காச நோய், சிறுநீரக நோய்கள், தொற்றுநோய்கள், வயிற்றுவலி, வாயுக் கோளாறுகள், சிறுகுடலில் அமில தேக்கத்தினால் ஏற்படும் புண்கள், வயிறு வீக்கம், வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு தனியாகவும் அல்லது பிற மூலிகைகளுடன் சேர்த்து மருந்தாக பாகம் செய்தோ வழங்கப்படும்.
அதிமதுரத்தை பொடித்து வெந்நீருடன் கலந்து அருந்த மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். தடைப்பட்ட மாதவிலக்கைத் தூண்டும். அதிமதுரமும் முட்சங்கன் வேரும் சம எடை எடுத்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து தேற்றான் கொட்டை அளவு உருட்டி பசும்பாலில் ஒரு நாளைக்கு இருவேளை என்று கொடுக்க, மஞ்சள் காமாலைக்கும் மருந்தாகும்.
கர்ப்ப காலத்தில் ஏதேனும் ரத்த ஒழுக்கு ஏற்படின், அதிமதுரமும் சீரகமும் சம எடை எடுத்து 350 மி.லி. நீர் விட்டு எட்டில் ஒன்றாக (1/8) காய்ச்சி, காலை, மாலை - 3 அல்லது 4 நாட்கள் தரலாம். அதிமதுர இலைகளை அரைத்து உடலில் அக்குள்களில் பூசி குளித்து வர - கற்றாழை நாற்றம், சொறி, சிரங்கு, தேமல், படை போன்ற சருமப் பிரச்னைகள் தீரும்.
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை, வகைக்கு 1 பங்கு எடுத்துப் பொடித்து, அதனுடன் கொடிவேலி வேர்ப் பொடி 17 கிராம் சேர்த்து கலந்து கொண்டு தேனில் குழைத்து, அதிமதுர சூரணமாகத் தர தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி குணமாகும்.
ஜப்பான் நாட்டில் ஈரலுக்கான ஊசி மருந்தில் அதிமதுரத்தின் சத்தும் சேர்க்கப்படுகிறது. அதிமதுரம் ஈரலை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது...
அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்...
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை.
இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.
தோற்றம் :
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.
அடங்கியுள்ள பொருட்கள் :
ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.
மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.
குணங்கள் :
இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
எப்படிப் பயன்படுத்தலாம்?
இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.
மருத்துவப் பயன்கள்:
பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்.
அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.
இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.
இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.
அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.
அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.
இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.
பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.
அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.
அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.
அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.
அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின் போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.
வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.
அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.
இக்கீரை பித்த நோயை நீக்கும்.
இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்...
கர்நாடகாவில் தமிழனுக்கு வேலை கிடைக்குமா?
1999ஆம் ஆண்டு, ஏ.ஜி.ஓ என்ற நடுவணரசு நிறுவனத்தின் அலுவலர்களாக தேர்வானவர்களில் 26 தமிழர்கள் இருந்தனர்..
கர்நாடகாவில் அவர்கள் பணியமர்த்தப்பட்டது தெரிந்ததும் கன்னடவர்கள் ஒன்றுதிரண்டு அங்கே தமிழர்களுக்குப் பதிலாகக் கன்னடர்களே அமர்த்தப்பட வேண்டும் என்று வன்முறையில் ஈடுபட்டனர்.
ஏ.ஜி.ஓ அலுவலகத்திற்கு அவர்கள் கூட்டமாக வருவது தெரிந்ததும் முதல்நாள் வேலைக்குச் சென்றிருந்த தமிழர்கள் ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.
கூட்டமாக நுழைந்த கன்னடர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இது ஒரு நாளல்ல இரு நாளல்ல நாற்பது நாட்கள் மேற்கொள்ளப்பட்டது.
கிடைத்த பொருட்களையெல்லாம் உடைத்தனர்.
வெளியேயும் ஆர்ப்பாட்டம் தீவிரமாக செய்தனர்.
கர்நாடக சலுவளி, கர்நாடக கிரியா கேந்திரா, ராஜ்குமார் ரசிகர்கள், பா.ஐ.க, என்று கட்சி, இயக்க பேதமில்லாமல் மாநில மத்திய கட்சியைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ எல்லாரும் ஆதரவு தெரிவித்தனர், அறிக்கைவிட்டனர், கலந்து கொண்டர்..
எந்த ஊடகமோ, நாளிதழோ, மாந்தநேய அமைப்போ இதைத் தட்டிக்கேட்கவில்லை.
ஏஜிஓ மேலாண்மையே இதைக் கண்டிக்கவில்லை.
கர்நாடக தமிழர் இயக்கம் இதை வழக்குமன்றம் கொண்டு சென்றது.
இறுதியாக அந்த தமிழர்கள் வேறு நடுவணரசு நிறுவனத்திற்கு அனுப்பட்டு கன்னடர்களே அங்கே பணியமர்த்தப்பட்டனர்.
இது அறமா என்றால் உறுதியாக இல்லை எனலாம்.
தற்போதைய கர்நாடகத்தில் 22% தமிழர் நிலமாகும்.
அங்கே வசிப்பவர் பெரும்பாலும் தமிழரே.
பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற நகரங்களும் சத்தியமங்கலம், மாதேசுவரமலை போன்ற வளமான வனப்பகுதியும் காவிரி ஆறு பாயும் பகுதியும் இதில் அடங்கும்.
திப்பு சுல்தான் காலத்தில் பறிபோன நிலமானது மைசூர் சமஸ்தானமாக ஆங்கிலேயர் ஆட்சியில் நீடித்து பிறகு 1956ல் மாநில பிரிவினையின்போது கன்னடவரிடம் பறிபோனது.
தற்போதைய கர்நாடகத்தில் 50%கூட கன்னடர்கள் கிடையாது.
ஆனால், அவர்கள் தமது தாய்நிலத்தைப் போல இருமடங்கு நிலத்தைக் கைப்பற்றி மற்றவர்களை அடக்கி ஆண்டு வருகின்றனர்.
அங்கே 30%க்கும் மேல் தமிழர் இருந்தும் இனவழி அடிமைத்தனத்துக்கு முதல் இலக்காக ஆளாகியுள்ளனர்.
(வீரப்பனார் இருந்தவரை தமிழக எல்லையோரம் கொஞ்சம் விழிப்புடன் இருந்தது, இப்போது அதுவும் இல்லை).
அங்கே எங்கும் கன்னடம் எதிலும் கன்னடவர் என்ற இனவெறி முழக்கமே கேட்கிறது.
இங்கே தமிழகத்தில் என்ன நிலை?
அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவனும் வந்தேறியாக இருக்கிறான்,
வந்தேறி ஒவ்வொருவனும் அதிகாரத்தில் இருக்கிறான்...
சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி சொல்வது என்ன தெரியுமா?
ஒவ்வொருவருக்கும் விரல்கள் வேறுபடும். அது வடிவம் மற்றும் நீளத்தில் மட்டுமின்றி, கைவிரல்களில் உள்ள மூன்று பகுதிகளிலும் வேறுபாடு இருக்கும்.
சில கோட்பாடுகளில் கைவிரல்கள் ஒருவரின் குண நலன்களைப் பற்றி சொல்வதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சில மக்கள் சுண்டு விரல் ஒருவரது குணநலன் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக நம்புகின்றனர்.
இப்போது சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குண நலன்களைப் பற்றி சொல்வது என்று பார்ப்போம்..
பகுதி 1..
சுண்டு விரலின் மேல் பகுதி நீளமாக இருந்தால்,
பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பர். மேலும் இத்தகையவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.
சுண்டு விரலின் மேல் பகுதி குட்டையாக இருந்தால் இந்த வகை மக்கள், மற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பர். மேலும் இவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.
பகுதி 2...
சுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக இருந்தால்,
அவர்களிடம் உதவும் மனப்பான்மை அதிகமாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் இந்த வகையினராக இருக்க வாய்ப்புள்ளது.
சுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக இருந்தால், பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் இருப்பர். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.
பகுதி 3...
சுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக இருந்தால்,
நேர்மையானவர்களாக, எப்போதும் உண்மையே பேசுபவர்களாக இருப்பர். மேலும் இவர்கள் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக இருப்பர். அதுமட்டுமின்றி, இத்தகையவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவர்.
சுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக இருப்பின், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பர். இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடிப்பார்கள்...
அரை வேக்காடு (Half Boil) முட்டையில் இம்புட்டு ரகசியம் இருக்குதா?
அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது.
பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும்.
அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை.
பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே.
அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும் மற்றும் 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.
அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது.
வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும்.
நாம் பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்...
புனர் ஜென்மம் என்பது உண்மையா?
இதோ உங்களிடம் வெளிப்படும் அறிகுறிகள்..
ஒருபக்கம் புனர் ஜென்மம் என்பது உண்மை, பொய் என பல விவாதங்கள் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.
ஆனால், நமது நிஜ வாழ்க்கையில், முதன் முறையாக சிலரை பார்க்கும் போது, எங்கோ, எப்போதோ, நீண்ட நாட்கள் பழகியது போன்ற உணர்வு வரும். இது போன்ற உணர்வு தோன்றுவதன் காரணம் என்ன?
அப்போது நிஜமாகவே புனர் ஜென்மம் என்பது இருக்கிறதா?
நாம் இறந்து பிறகு உடல் தானே அழுகி போகிறது உயிரும், எண்ணங்களும் என்ன ஆகிறது?
என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில்கள் ஏதும் இல்லை.
ஒரு நபரிடம் பேசும் போது, உங்களிடம் தோன்றும் இந்த நான்கு அறிகுறிகளை வைத்து அவர் புனர் ஜென்மத்தில் உங்களோடு பழகிய நபர் என்பதை அறியலாம் என கருதப்படுகிறது.
தொலையுணர்வு! முதன்முறை கண்டாலும் கூட, உங்கள் இருவரின் மனதின் எண்ணங்கள் படிக்கும் திறன் பெற்றிருப்பீர்கள். அவர்கள் கூற வருவதை, நினைப்பதை நீங்கள் கூறுவீர்கள். உங்கள் இருவரின் கணிப்பும் ஒரே மாதிரியாக இருக்கும்.
ஃப்ளாஷ்பேக்! ஒருவரை முதல் முறை காணும் போது, என்றோ எப்போதோ பழகியது போன்று ஃப்ளாஷ்பேக் நினைவுகள் வருகிறது எனில், அவர் உங்களோடு புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம்.
மேலும், இது போன்ற மாயையான ஃப்ளாஷ்பேக் நிகழ்வுகள் தோன்றும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும், உங்களது உணர்ச்சிப்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
கண்கள்! அவர்களது கண்களை பார்த்தவுடன் இருவர் மத்தியிலும் ஒரே மாதிரியான எண்ணம் தோன்றுவது, ஒரே மாதிரி பேசுவது, அனைத்தையும் தாண்டி எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் பழகுவது, அவர் உங்களுடன் புனர் ஜென்மத்தில் பழகிய நபராக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.
உணர்ச்சி, அவரை பார்த்த முதல் நொடியே உங்களுக்குள் ஓர் உணர்ச்சி பிழம்பு வெளிப்படும். அந்த உணர்ச்சி மிகவும் இறுக்கமானதாக, உறுதியானதாக இருக்கும். அது உங்கள் இருவரியில் மன ரீதியாக பிரியவிடாமல் தடுக்கும்.
அந்த வேளையில் உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால், புனர் ஜென்மத்தில் நீங்கள் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், நேர்மறை எண்ணங்கள் தோன்றினால் நண்பர், குடும்ப நபர், துணை போன்றும் எடுத்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
இதுப்போன்று, ஒருவரை முதல் முறை காணும் போது ஏற்படும் உறுதியான உணர்ச்சி வெளிப்பாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்...
எனக்கும் எழும் சாதாரண சந்தேகம்தான்...
1. தடுப்பூசிக்கு எதிராக போராடுற மேலைநாடுகள் முட்டாள்களா? இல்லை..
2. தடுப்பூசிக்கு எதிரா போராடாத நாம புத்திசாலிகளா?
சரி நம்ம நாட்டு தடுப்பூசி பாதுகாப்பானதுனு விளம்பரம் கொடுக்கிற நீங்களே தடுப்பூசியால் 300 பேர் இறந்ததாக சொல்றீங்க, அதுல 188 மாரடைப்பாம்.
ஊசி போட்ட 21 நாட்களுக்கு விபரீதம் நடக்கலாம்னா இவர்களின் தற்போதைய நிலையை புள்ளிவிவரம் விடாதது ஏன்?
அதெல்லாம் சரி 100% உயிரிழப்பு இல்லாத கபசுரகுடி உரிமம் கொண்ட சித்தர்கள் வாழ்ந்த நம்ம ஊர்லையே புரட்சி வராதது ஏன்? இல்லை கருத்து சுதந்திரம் முடக்கபட்டுவிட்டதா?
மூலிகை பிண மனிதர்கள்...
உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்) பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.
அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.
ஆப்பிரிக்காவில் ஹைடி என்னும் இடத்தில் பொகார் என்னும் மந்திரவாதிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் இறந்து போன மனிதர்களின் பிணத்தை எடுத்து சில மூலிகைகள் மூலம் அவர்களை உயிர்ப்பித்து தங்கள் விருப்பப்படி இயக்குவார்கள்.
அந்த பிண மனிதர்களை கொண்டு தங்கள் விருப்பப்படி எல்லாம் மிக கடினமான காரியங்களை எல்லாம் செய்து கொள்வார்கள்.
அவர்கள் எப்படி பிணத்திற்கு உயிர் தருகிறார்கள்? எப்படி பிணத்தை இயக்குகிறார்கள்? என்றால் இந்த முறையில் தான்..
இறந்து போன மனிதர்களின் மூலாதாரத்தில் உள்ள பாஸ்பரஸ் ஆக்சைடை அதிகரிக்கும் வண்ணமாக பாஸ்பரஸ் தனிமம் அதிகம் உள்ள மூலிகைகளை கொண்டும், பிராணன் (மின்காந்த சக்தி) அதிகம் உள்ள மூலிகைகள் கொண்டும் அரைத்து மூலாதாரத்தில் தடவுவார்கள்.
உடல் முழுக்க பிராணாசக்தி அதிகம் உள்ள மூலிகைகளை அரைத்து தடவுவர்.
ஆனால் நெற்றிப்பொட்டில் மட்டும் பிட்யூட்டரி (புத்தி) இயங்ககூடாது என்று அங்கு மட்டும் மூலிகைகளை தடவ மாட்டார்கள்.
பின் பிராணா சக்தியை கவர்ந்து இழுக்கக்கூடிய சில ஊடு மந்திரங்கள் மூலம் பிராணா சக்தியை கவர்ந்து இழுத்து பிண மனிதருக்கு செலுத்துவர்.
பிராணா சக்தியின் காரணமாகவும், பாஸ்பரஸ் மூலிகைகள் காரணமாகவும் இவரது ஆழ்மனம் விழிப்படையும்.
அதாவது ஆவிகள் உலகில் குறைந்த பிராண உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆழ்மனம் (பாஸ்பரஸ் ஆக்சைடு) ஆனது இவர்களது செயலால் உடலில் ஈர்க்கப்பட்டு அடர் பாஸ்பரஸ் ஆக்சைடாக ஸ்தூல உடலில் வெளிப்பட்டு ஸ்தூல உடலில் இயங்கும்.
பிணத்தின் உடலில் பிராணனை அதிகரித்தால் ஆழ்மன மானது உடலுடன் ஒன்றிவிடும்.
அதாவது ஆழ்மனம் ஆவி உடலுக்கும் பிணத்துக்கும் இடையே ஒரு மின்காந்த இணைப்பு சங்கிலி எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கும்.
மின்காந்த சங்கிலி இணைப்பு அறுபடுவது கிடையாது.
பிணத்தை முழுமையாக எரித்தால் தான் அந்த இணைப்பு போகும், இணைப்பு அறுபடும்.
உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்) பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.
அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.
இந்த மின்காந்த இணைப்புகள் மிக மிக மெல்லியதாக ஆகிவிட்டதால்தான் அந்த ஜீவனால் உடலை இயக்க முடியவில்லை. உடலுக்குள் புக முடியவில்லை.
அதுவே இந்த தாந்திரீக முறைகள் மூலம் அந்த பிராண இணைப்பை நல்ல வலுவாக ஆக்கிவிட்டால் அந்த ஆழ்மனம் ஜீவன் உடலில் ஈர்க்கப்பட்டு இயங்க ஆரம்பித்து விடும்.
அப்போது அவர்களது ஆழ்மனம் ஏற்கனவே பதிவாகி உள்ள எண்ணப் பதிவின் படி செயல்படுவர்.
ஆனால் மந்திரவாதிகள் அவர்களை கட்டளை மூலம் சஜக்ஷன் மூலம் தங்கள் விருப்பபடி செயல்பட வேண்டும் என்று அவர்களது மனதை ஹிப்னாடிஷம் செய்து விடுவர்.
அந்த பிண மனிதர்களும் மந்திரவாதிகளின் கட்டளைப்படி செயல்பட ஆரம்பிப்பர்.
ஆனால் அந்த மனிதர்களுக்கு உணவில் உப்பு போட்டு கொடுத்தால் அந்த பிண மனிதர்கள் செயல்பட மாட்டார்கள்.
காரணம் உப்பு தண்ணீரில் உள்ள எல்லாவிதமான தனிமங்களையும் வெளியேற்றும் அல்லது வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
அதனால் பிண மனிதர்களின் உடலில் இயங்கி கொண்டிருக்கும் பாஸ்பரஸ் தனிமத்தை அது குறைப்பதால் பிண மனிதர்கள் மந்திரவாதியின் கட்டுபாட்டை இழக்கிறார்கள். மீண்டும் பிணமாகவே ஆகிவிடுவார்கள்.
இப்படி ஒரு மனிதனில் புத்தியாகிய அடர் நைட்ரஜன் ஆக்சைடை இயக்காமல் அவர்களது ஆழ்மனமான சாயா புத்தியை (நைட்ரஜன் ஆக்சைடு NO) இயக்கி அவர்களை பயன்படுத்த முடியும்.
கோமாவில் இருப்பவரை கூட இது போன்று பிண மனிதராக நடமாட வைக்க முடியும். இது உண்மை...
ஆந்திரா இரண்டாக பிரிந்த போது வருத்தப்படாத கூட்டம்...
தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று சொல்லும் போது கதறுகிறார்கள் ஏன்றால் புரிந்துக் கொள்ளுங்கள்...
ஆந்திரா இரண்டாக பிரிந்து தெலுங்கருக்கான 2 மாநிலமாக தனித் தனியாக சலுகைகள் பெற்று பயன் பெறுகிறார்கள்...
அதே போன்று... தமிழகம் மூன்றாக பிரிந்தால்... தமிழர்களுக்கான 3 மாநிலமாக மாறும்.. சலுகைகளும் கிடைக்கும்...
மேலும் இந்தியாவில் தமிழகர்களுக்கு என்று 3 மாநிலம் இருக்கும்...
சிந்தியுங்கள்... அரசு பணிகள் முழுவதும் தமிழர்களுக்கு மட்டும் தான் என்று சட்டம் போட்டால்... 3 மாநிலத்திலும் தமிழர்களுக்கு அரசு பணி கிடைக்கும்...
இப்படி பல நன்மைகளும் உண்டு...
இல்லை என்றால் தமிழ்நாடு தனி நாடாக பிரிந்து சென்றால்.. மேலும் நன்மைகளே...