16/09/2018

பசுமைச் சான்றிதழ் பெற்ற ரயில்நிலையமானது சென்னை சென்ட்ரல்...


தமிழ்நாட்டில் முதன்முறையாக பசுமைச் சான்றிதழ் பெற்ற ரயில்நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உருவெடுத்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை, பசுமைக் கழிப்பறை, மின்சிக்கனத்துக்கு எல்.இ.டி. விளக்குகள், தூய்மையான வளாகம், மருத்துவ வசதி, குடிநீர் சுத்திகரிப்பு வசதி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளுக்காக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் பசுமை ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் பசுமைக் கட்டிடக் கவுன்சில் தலைவர் ராகவேந்திரன், பசுமை ரயில்நிலையத்துக்கான சான்றிதழை தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷேத்ராவிடம் வழங்கினார். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்பெட்டிகளை தூய்மை செய்யும் பணியும் நடைபெற்றது...

மருத்துவ வியாபாரம்...


புரட்சி தோற்றதாக வரலாறே இல்லை...


இருபதாம் நூற்றாண்டு பல இணையற்ற புரட்சிகளை பதிவு செய்தது, இவ்வுலகிற்கு பல வீர தீரம் மிக்க போராளிகளை அடையாளம் காட்டியது.

பாரெங்கும் பண்ணையர்கள் கூட்டம் திண்ணை நிலத்தையும் விடாது அபகரித்த காலம், செங்கொடி ஏந்தி செருப்படி கொடுத்து அவர்கள் செருக்கை அடக்கினார்கள்; சமவுடமை பிறந்தது.

செங்குருதிகள் ஆறாக உடலங்கள் சிதறி வேறாக உலகையே உலுக்கியது இனப்படுகொலைகள், புரட்சிகள் பூத்தன, இப்பூக்கள் காயாகின, கனியாகின, கனிகள் விதையாகின, விதைகள் பல மரங்களாகின‌, புதிதாய் பல தேசங்கள் மலர்ந்தன.

கொள்ளையிட வந்த கூட்டம் கோட்டையை நிறுவி கொடியினை ஏற்றையிலும், வெள்ளையனை வெளியேற்று அன்றேல் வீரமரணம் எய்து என்ற வெறியே; விடுதலை எனும் வெற்றிக்கனி.

அறிவுப்புரட்சிகள், தொழிலாளர்களின் புரட்சிகள், இன, மொழிப் புரட்சிகள் என ஏராளம் மக்கள் புரட்சிகள் வெற்றி கண்டன.

எகிப்திலும் லிபியாவிலும் ஏற்பட்ட மக்கள் புரட்சிகள்  இன்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

உலக புரட்சிகளை எல்லாம் புரட்டி புரட்டி படிக்கிறோம், புரட்சியாளர்களை எல்லாம் பூப்போட்டு வணங்குகிறோம்..

ஆனால் எம் இனத்தின் இழிவை தீர்க்க எந்த புரட்சியையும் நாம் செய்யத் தயாராக இல்லை என்பதுதான் வெட்கமான செய்தி.

எகிப்திலும் லிபியாவிலும் எதற்காக புரட்சிகள் நடைபெற்றன?

வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, அடக்குமுறைகள், ஊழல் அரசாங்கம், முற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட குடும்ப ஆட்சி போன்ற காரணங்களுக்காகவே மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இவை எதுமே தமிழ்நாட்டில் இல்லையா?

குடும்ப ஆட்சியும் ஊழல் நிறைந்த அரசும் தமிழ்நாட்டை அறுபது ஆண்டுக்கு மேலாக சீரழித்து வருகிறதே அதற்கெதிராக எப்பொழுதாவது மக்கள் புரட்சி வெடித்ததா?

அரசியல் கட்சிகள் தான் இவற்றுக்காக குரல் கொடுக்கின்றன‌. விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, மின்வெட்டு போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் தான் கண்டன போராட்டங்களில் ஈடுபடுகின்றன அதிலும் அரசியல் உள்நோக்கங்கள் கலந்திருப்பதால், இதை ஒரு அரசியல் பழிவாங்கல்கள் அல்லது எதிர்க்கட்சிகளின் யதார்த்த எதிர்ப்பியல் என்றே பொதுவாகப் பார்க்கப்படுகின்றது.

காவிரியில் தண்ணீர் தரவில்லை, முல்லை பெரியாரில் தண்ணீர் தரவில்லை, ஒக்கனேக்கல்லில் தண்ணீர் இல்லை என்றால் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவிப்பார்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் பேசாமல் வேடிக்கை பார்ப்பார்கள்.

வெறும் ஐந்து நாட்கள் எகிப்திலே ஏற்பட்ட மக்கள் போராட்டத்தினால், முற்பது ஆண்டுகால குடுப்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியுமானால்; அறுபது ஆண்டுகால குடும்ப, ஊழல், அடக்குமுறை அரசியலை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியாதா?

மெளனத்தின் வலியோடு வாழுகின்ற எம் மக்கள் எவ்வித புரட்சிகளும் செய்யாதது ஏன்?

மக்களை நொந்து என்ன பயன். இலவசங்களோடு எம்மை வாழப்பழக்கி விட்டார்கள் எம் அரசியல் தலைவர்கள், இலவச தொலைக்காட்சி, இலவச வீடு, இலவச சோறு, இலவச மனைவி...

உழைத்து வாழ்ந்து உயர்ந்து நின்ற ஒரு இனத்தையே உறங்கி வாழுங்கள் என சோப்பேறியாக்கி விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்.

எல்லாம் நிச்சயமாக ஒருநாள் மாறும் மாறாது என்ற சொல்லைத்தவிர மற்றெல்லாம் மாறிவிடும் என்று சொல்லுகிறான் மார்க்ஸ்.

மாற்றம் நிகழும் ஆனால் அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டுமா தமிழா?

மாற்றம் வேண்டும் அதை நாம் தானே மாற்றவும் வேண்டும்.

மக்கள் புரட்சி என்றைக்குமே தோற்றதில்லை. வன்முறை வேண்டாம் அறிவாயுதம் ஒன்றே போதும்.

புரட்சி செய்யும் மனதோடு பூத்திரு, காலம் நம் கைகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க காத்திருக்கிறது...

தீட்சைகள்...


காய சித்தி என்னும் உடல் தூய்மையடைய பத்துவிதமான தீட்சைகள் கூறப்படுகின்றன. சுத்தி முறைகளே தீட்சை என்று கூறப்படுகிறது.

1. மயிர்க்கால் வழியே துர்நீர்களைக் கழியச் செய்தல்.

2. வாத, பித்த, ஐய குற்றங்களை நீக்குதல்.

3. கெட்ட குருதியைக் கசியச் செய்தல்.

4. உடல் சட்டையைக் கழட்டுதல்.

5. மயிர் கறுத்தல். பஞ்சபூதம் வசமாதல்.

6. சுழுமுனை திறந்து தூர திருட்டி வசமாதல்.

7. உடல் சோதி வடிவமாகிப் பிரகாசித்தல்.

8. உடல் காற்றாக மிதத்தல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்.

9. எட்டு சித்திகள் அடைதல்.

10. உடல் ஒளிவடிவமாதல்.

மேற்கண்ட பத்துவிதமான சுத்திகளையும் அடையச் செய்யும் மருந்துகள் மூன்று. அந்த மருந்தே வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரிமருந்து என்னும் கற்பங்களாகும்.

அவை முறையே கற்பம், யோக கற்பம், ஞான கற்பம் என்பனவாகும்...

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் தற்சார்பு...


இலுமினாட்டி - உறுப்பு தான பதிவு அட்டை மோசடி...


உலகை ஆளும் இலுமினாட்டிகள் , நல்ல விசயங்கள் செய்வதுபோல் காட்டிக் கொண்டு , மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள் ..

அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை..

இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப் பற்றி பெரிதளவு தெரியாது.

திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது. விளைவாக நாம் அதைப்பற்றி அறிய ஆரம்பித்தோம்.

பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..

அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள் .

அது தான் உறுப்பு தான அட்டை (organ donor card).

ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக் கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை..

ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம் .

இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும்.

ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும் .... எப்படி என்கிறீர்களா ?

ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பைய்யன், அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது, அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி..

ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டுப்பிடித்து, அவரை விபத்துக்குள்ளாக்கி, மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி, அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம்..

இது இல்லுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம், ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள். பதியாதீர்கள்..

உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக் கொள்ளுங்கள்.. அறிவற்ற எந்த இனமும் வாழாது...

தமிழர்களின் யாழ் இசைக்கருவி...


மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னரும் தமிழ் நாட்டில் மட்டும் தெலுங்கர் ஆட்சியா?


மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் அமைந்த பின்னரும் திராவிட கருத்தியலால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரமும் மண்ணுரிமையும் வணிகமும் கல்வி நிறுவனங்களும் அரசாட்சியும் தெலுங்கர்களிடமும் கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழர்கள் தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

’திராவிட நாடு’ கிடைத்திருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பாருங்கள்..

முழுமையாக தெலுங்கர்கள்  ஆட்சிதான் அத்திராவிட நாட்டில் தொடர்ந்திருக்கும்.

தெலுங்கர் விசாலாந்திரா கோரிக்கையையும், கன்னடர் சம்யுக்த கர்நாடகா கோரிக்கையையும், மலையாளர் ஐக்கியக் கேரளா கோரிக்கையையும் முன்வைத்து மாநிலப் பிரிவினைக்காகவும் எல்லைகளை காத்துக் கொள்ளவும் தத்தம் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடினர்.

அப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.

சென்னை மாகாணம் என்னும் தாயகத்தைக் கொண்டிருந்த தமிழினமோ, ஈ.வெ.ரா.வின் திராவிடநாடு கோரிக்கையால் தனது தாயக நிலப்பகுதிகளை ஆந்திரத்திடமும் கருநாடகத்திடமும் கேரளத்திடமும் இழக்க நேர்ந்தது.

ஆம், ஈ.வெ.ரா. தமிழக எல்லைகள் பறிபோவதைக் குறித்துக் கடுகளவும் கவலைப்படாமல், மொழிவழி மாநிலப் போராட்டத்தையும் எல்லைப் போராட்டத்தையும் கொச்சைப்டுத்தியதுடன், அப்போராட்டத்தில தமிழர்கள் ஈடுபடாதவாறு பார்த்துக்கொண்டார்.

இவர்தான் ’தமிழர் தலைவரா?

தமிழர்களின் மானத்தையும் அறிவையும் காக்க வந்த மாவீரரா

மீனவர்களே விழித்துக் கொள்ளுங்கள்...


மதுரை சிறையில் முகிலன் - இன்றோடு ஓராண்டாகிறது...


தமிழக அரசே, முகிலன் மீதானா பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு..
முகிலனை உடனே விடுதலை செய் - சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை..

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு தலைவர்களில் ஒருவரும் சூழலியல் செயற்பாட்டாளருமான தோழர் முகிலன் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு இன்றோடு ஓராண்டாகிவிட்டது.  இரண்டு வாரங்களுக்கு முன்பு சிவ இளங்கோ,செந்தில் ஆறுமுகம், ஜெய்கணேஷ் ஆகியோர் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மதுரை மத்திய சிறையில் முகிலனைச் சந்தித்தனர்.

சுமார் 45 நிமிடங்கள் நீண்ட அந்த சந்திப்பில் நலம் விசாரிக்கச்  சென்ற இயக்க நிர்வாகிகளுக்கு அவர் பல விஷயங்களை பகிர்ந்து உத்வேகத்தை வழங்கினார். ஒரு வருடமாக சிறையிலிருக்கும் ஒரு நபருக்கு மனதளவிலும் உடலளவிலும் ஏற்படும் சோர்வேதுமின்றி அரசியல் மேடைகளில் பேசும் ஒரு இளம் பேச்சாளரின் துடிப்புடன் பேசியது வியப்பை ஏற்படுத்தியது. இனி அவருடன் நடந்த உரையாடல் பற்றி:

கேள்வி: சிறையில் சுகாதார வசதிகள் எப்படி இருக்கிறது ?

பதில்: இந்த சிறையில் அடைக்கப்பட்டபோது சுகாதார சீர்கேடுகள் மிகவும் மோசமாகவே இருந்தன. தாங்க முடியாதகொசுக்கடி நிலவியது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது கொசுக்கடியால் ஏற்பட்ட இரத்த கரை கொண்ட மேல் சட்டையை நீதிபதியிடம் காண்பித்து புகாரளித்தேன். புகாரின்மேல் நடவடிக்கை எடுக்க இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிறைக்குள் வந்து பார்வையிட்டனர்.  சுகாதார சீர்கேடுகளை ஆய்வு செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் மதுரை சிறைக்குள் வந்தது தமிழக சிறைத்துறை வரலாற்றில் இதுவே முதல் முறை. ஆய்வுக்குப்பின் நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது. ஆயுள் தண்டனை சிறைவாசிகள் வசிக்கும் பகுதிகளில், பயன்படுத்த முற்றிலும் தகுதியில்லாத நிலையில் இருந்த கழிப்பறைகள் தற்போது வெகுவாக சீரமைக்கப்பட்டுள்ளதாக, என்னிடம் நூலகத்தில் சந்தித்த சிறைவாசி ஒருவர் என்னைக் கண்டதும் நீங்கள்தான் முகிலனா என்று கேட்டு ஆம் என்றதும் உடனே என் காலில் விழுந்து நன்றி கூறினார். சீர்கேட்டின் அளவை இதிலிருந்து தெளிவாக புரிந்து கொண்டேன்,நீங்களும் புரிந்து கொள்ளலாம்.

கேள்வி: சிறையில் தரப்படும் உணவு குறித்து ?

பதில்: அனைத்து சிறைவாசிகளுக்கும் அளிக்கப்படும் உணவையே நானும் எடுத்துக்கொள்கிறேன்.
பல தடவை, பல மாதங்கள் சிறையில் இருந்து பழக்கப்பட்டுவிட்டதால் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், சிறப்பு உணவு ஏதும் எடுத்துக்கொள்வதில்லை என்ற முடிவில் தெளிவாக இருக்கிறேன். உணவு மட்டுமல்ல, வேறு எந்த சிறப்புச் சலுகை வழங்கப்பட்டாலும் மறுத்துவருகிறேன். அதே சமயம், கைதியாக இருக்கும் எனக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது உண்ணாவிரதத்தின் மூலமாகவோ, வழக்குதொடுத்தோ எதிர்க்குரல் எழுப்புகிறேன்

கேள்வி: உங்கள் மீது தொடர்ந்து வழக்கு தொடுத்து சிறையில் வைத்துள்ளதற்கான காரணம்?

பதில்: மத்திய பாஜக அரசு. என்னை விடுவித்தால் எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு போராடுவேன் என்பதால் தோன்றும் போதெல்லாம் வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில் நிறைய பொய் வழக்குகளும் உண்டு. அடிப்படை தகவல்களைக் கூட சரிபார்க்காமல் யாரையோ திருப்திபடுத்த என் மீது புதுசு,புதுசாக வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. அனைத்து வழக்குகளையும் சட்ட ரீதியில் உடைத்து விரைவில் வெளிவருவேன். பணிகளைத் தொடர்வேன்.

தன்மீதுள்ள ஒவ்வொரு வழக்கின் தரவுகளையும் தேதி மாறாமல் முகிலன் குறிப்பிட்டது ஆச்சரியமாக இருந்தது.

சுதந்திரமாயிருந்தும் பயனுள்ள செயல்பாடுகள் ஏதுமில்லாமல் இருப்பதும் சிறைக்குள் இருப்பதற்கு சமமே என்ற ஓர் வாசகமுண்டு. ஆனால், சிறைக்குள் இருந்தபோதும் அங்குள்ள சீர்கேடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து, போராட்ட குணத்தை சிறைவாசம் மழுங்கிடச்செய்யாது என்பதை முகிலன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழக அரசு தனக்கு மேலிருந்து உத்தரவிடுபவர்களை திருப்திப்படுத்தும் செயலை நிறுத்திவிட்டு சிறை சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் நலம். ஏனென்றால், தற்போதுள்ள அமைச்சர்களின் மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகி இலஞ்ச ஒழிப்பு துறை, வருமான வரித்துறை மற்றும் CBI ஆகியோர் விசாரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் தாங்களும் சிறை செல்லவுள்ள வாய்ப்பை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர தமிழக மக்கள் கடமைப்பட்டுள்ளோம்.

தோழர் முகிலன் அவர்கள் விரைவில் விடுதலையாகி மக்கள் பணியைத் தொடர சட்ட பஞ்சாயத்து இயக்கம் வாழ்த்துகிறது. தமிழக சமூகப் போராளிகளுக்கு ஒரு வாழும் உதாரணமாய் இருக்கும் முகிலனின் மீதுள்ள பொய்வழக்குகளை வாபஸ் பெற்று, உடனடியாக அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது...

முருங்கை எனும் மூலிகை - எவையெல்லாம் நாம் தவிர்த்தோமோ, இன்று அவையெல்லாம் கார்ப்பரேட் கைகளில்...


பட்ட பகலில் குழந்தை திருட்டில் ஈடுபட்ட தம்பதி.. தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்...


சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபாகரன். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக குழந்தைக்கு உடல்நலம் பாதித்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது, வயிற்றில் சதை வளர்ந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பிரபாகரன், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அறுவை சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சோனியா, குழந்தையுடன் இருந்து கவனித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை குழந்தை தூங்கி கொண்டிருந்தது. அப்போது சோனியா, கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பியபோது, படுக்கையில் இருந்த குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

உடனே, அருகில் இருந்தவர்களை கேட்டபோது எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சோனியா, கதறி அழுதபடி மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக அனைத்து வார்டுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் ஒரு தம்பதி வெளியேற முயன்றனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், பிடித்து விசாரித்தனர். அங்கு சோனியா வந்தபோது, தம்பதியிடம் இருந்தது தனது குழந்தை என உறுதி செய்தார்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குழந்தையை பத்திரமாக மீட்டு, சோனியாவிடம் ஒப்படைத்தனர். பின்னர், தம்பதியை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்...

3000 அரசு பள்ளிகளை மூட பாஜக அடிமை அதிமுக திட்டம்...


ஹீலிங்...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.

பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் .

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார்.

இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம். இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும்.

அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும்.

அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்...

நம்ப முடியாத உண்மைகள்...


தமிழினமே விழித்துக்கொள்...


ஒரு தேசிய இனம் அந்த தேசிய இனத்தைச் சேர்ந்த உன்னதமான ஒரு தலைவனால் ஆளப்பட வேண்டும்..

இல்லையென்றால் அந்த இனம் நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டு அசிங்கப்பட்டு சாகும்..

தொலைக்காட்சி எனும் மாயவலை...


மனித மூளையும் அதன் செயல்திறனும்...


1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டு செல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்...

பேருந்து நடத்துனர்களே...


திருநங்கைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்..! 25 வாலிபர்கள் அதிரடி கைது...


சென்னை, வள்ளுவர் கோட்டம், சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் இரவுநேரங்களில், திருநங்கைகள் சாலையோரம் நின்று, இளைஞர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, அப்பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாலியல் ரீதியாக பொது இடங்களில் யாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், திருநங்கைகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்ப்டடது.

போலீசாரின் அறிவுரையை ஏற்க மறுத்த திருநங்கைகள், வள்ளுவர்கோட்டம் மற்றும் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் இளைஞர்களை வழிமறித்து பிரச்சனை செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், அதிரடி நடவடிக்கையாக திருநங்கைகளிடம் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்பவர்களை கைது செய்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று போலீசார் நினைத்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் அதிரடியாக வள்ளுவர்கோட்டம் அருகே ரகசியமாக கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளிடம் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (21), கோயம்பேட்டைச் சேர்ந்த வருண்குமார் (22), பாலா (21), ஆறுமுகம் (23), ஆவடியைச் சேர்ந்த சிவக்குமார் (20), சபரிநாதன் (24), கெடுங்கையூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர்.

முன்னதாக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் திருநங்கைகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 18 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த தொடர் நடவடிக்கையால், இரவு நேரங்களில் திருநங்கைகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

அம்பானிக்கு தமிழகத்தை விற்ற பாஜக அடிமை அதிமுக...



புழல் சிறையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிவி - ரேடியோக்கள் பறிமுதல்...


தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த வசதிகளை செய்துகொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி விசாரிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி சிறைச்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. புழல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருக்கும் புகைப்பட காட்சிகளும் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், புழல் சிறையில் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தலைமையில் போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சிறை வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனையிட்டனர். அப்போது, தண்டனைப் பிரிவில் அனுமதியின்றி டிவி மற்றும் ரேடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 18 டிவிக்கள், 2 எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன...

கீழடி , பூம்புகார் மறந்து விட்டீர்களா?


ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்ட 12 சிக்னல்கள்: குழந்தைக்காக சென்னையாக மாறிய கோயம்புத்தூர்...


கோயம்புத்தூரில் 12 சிக்னல்கள் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பெரியமனலி, ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெய்பிரகாஷ். விசைத்தறி உரிமையாளராக இருக்கிறார். இவரது மனைவி தாமரை. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன் விசைத்தறி இயங்கிக் கொண்டிருந்த போது குழந்தை தெரியாமல், கையை உள்ளே விட்டுள்ளது. இதனால், குழந்தையின் 4 விரல்களும் துண்டாகின.

இதைத் தொடர்து ஜெய்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி தாமரை இருவரும் குழந்தையை தூக்கிக்கொண்டு கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு செல்ல முயன்றனர். ஆனால், போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், தான் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்க தலைவர் திபேஷ், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம், ஆம்புலன்ஸ்க்கு வழிவிட போக்குவரத்தை சரி செய்ய வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார். இதனை புரிந்து கொண்ட கமிஷனர், அவிநாசி சாலையிலுள்ள சிட்ரா முதல் சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை வரை சாலையெங்கிலும் உள்ள 12 சிக்னல்களையும், ஒரே நேரத்தில் ரெட் சிக்னல் போட்டு போக்குவரத்தை நிறுத்தி வைக்க கட்டளையிட்டுள்ளார்.

அதன்படியே, நேற்று மாலை அனைத்து சிக்னல்களிலும் கிரீன் காரிடம் முறையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, குழந்தையை காப்பாற்ற ஆம்புலன்ஸ் விரைந்து செல்ல வழிசெய்துள்ளனர். இறுதியில், குழந்தையை தூக்கிக் கொண்டு ஜெய்பிரகாஷ் மற்றும் அவரது மனைவி தாமரை ஆகியோர் ஆம்புலன்சில் கங்கா மருத்துவமனையை அடைந்தனர். துண்டிக்கப்பட்ட குழந்தையின் விரல்கள் ஐஸ் பெட்டிக்குள் வைத்து, எடுத்துச் செல்லப்பட்டதால், உடனடியாக இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் திபேஷ், அன்னை அறக்கட்டளை ஆனந்த குமார், ஜெய்பிரகாஷ் ஆகியோர் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனை பார்க்கும் போது, சென்னையில் ஒருநாள் படத்தை ஞாபகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழர்களின் விழாவும்... காவிகளின் விழாவும்...


கன்னட ஈ.வே.ரா வும் விநாயகர் சிலை உடைப்பு தந்திரமும்...


பிள்ளையார் சிலையை உடைத்து ஈவெரா தொடங்கி வச்ச பகூத்தறிவை இன்று வரை கருணாநிதி ‘விடுமுறை தினத்தில்’ பலான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறார்..

அதன் வரலாற்று பின்ணணி இதோ..

வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்த இடைக்காடர்...


இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ஒருசமயம் எதிர்காலத்தில் மழை பொய்த்து, நாட்டில் வறட்சி உண்டாகும் என்பதைக் கணித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவர், விஷயத்தை மக்களிடம் சொன்னார்.அதைக்கேட்டவர்கள் சிரித்தனர்.

என்னது மழை பெய்யாமல் போய்விடுமா? வறட்சி தலைவிரித்து ஆடுமா? இந்தக் கதையை வேறெங்காவது போய் சொல்லுங்கள்,  என அவரை ஏளனம் செய்தனர்.

ஐயோ.. மக்கள் என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்களே... இவர்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் என்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான்,'என்று நொந்து கொண்டார் இடைக்காடர்.

அவ்வேளையில் வறட்சியைச் சமாளிக்க ஒரு தந்திரம் செய்தார்.

தான் வளர்த்த ஆட்டுக்குட்டிகளுக்கு, எருக்கஞ்செடியை சாப்பிடப் பழக்கினார். மேலும், கேழ்வரகு தானியத்தை, மண்ணில் கலந்து சிறிய குடிசையையும் கட்டிக்கொண்டார். இடைக்காடரின் வித்தியாசமான இந்த செய்கையைக் கண்டு சிலர் கேலியும் செய்தனர். ஆனால், இடைக்காடர் சற்றும் சளைக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்தார்.

இடைக்காடர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. நெடுநாட்களாக மழை பெய்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. முதலில் இடைக்காடர் சொன்னதை சாதாரணமாக நினைத்த மக்கள், அவர் சொன்ன உண்மையை அப்போது புரிந்து கொண்டனர். ஊரே வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறிவிட்டது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர். இவ்வேளையில் இடைக்காடர் தன் ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை சாப்பிடக் கொடுத்தார். அதைச்சாப்பிட்ட ஆடுகள் அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டு பசியாறினார் .

இச்சமயத்தில், வானுலகில் சஞ்சாரம் செய்த கிரகங்கள், வறட்சியான இடத்தில் இடைக்காடர் கேப்பைக்கூழ் காய்ச்சுவதையும், ஆடுகள் சிரமமின்றி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டு அவரது குடிசைக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற இடைக்காடர், ""ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே!'' என நினைத்தார். அவரது மூளை வேகமாக வேலை செய்தது. உடன் அவர், கிரகங்களே.. நீங்கள் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும், என வேண்டினார்.

கிரகங்களும் ஒப்புக்கொண்டன. இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்து உபசரித்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் படுத்துவிட்டனர். அவர்கள் அயர்ந்து தூங்கிய வேளையில், தன் சக்தியால் அவர்களை மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்டோ கொட்டென கொட்ட ஆரம்பித்து விட்டது. பூமி, வறட்சி நீங்கி பசுமையாக மாறியது. சிறிது நேரம் கழித்து எழுந்த கிரகங்கள், அனல் காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும்,
பெருமழையால், தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என்றெண்ணியவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டனர். சமயோசிதமாக செயல்பட்டு பஞ்சம் போக்கிய இடைக்காடரை வணங்கிய மக்கள், தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கேட்டனர்...

மின்சாரத் துறையை விற்கப் போகும் அதிமுக அரசு...


மின்காந்த சக்தி...


இதயத்திலிருந்தும், துடிதுடிப்பு உணர்விலிருந்தும் துளிர்விட்டு, தூய்மையாகவும், வலுவாகவும் இருக்கும் ஆசைகளுக்கு அபாரமான மின்காந்த சக்தி உண்டு.

ஒவ்வொரு இரவும் மனம் உறக்க நிலையில் ஆழ்ந்து விடும்போது இந்த சக்தி வனவெளியில், கலக்கிறது.

பிரபஞ்ச இயக்கதில் வலுவடைந்த அந்த சக்தி-cosmic currents தினம், தினம் காலையில் உணர்வு நிலையில் சங்கமிக்கிறது.

இப்படி மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயமாக நிஜமாகும்.

யுக யுகமாக தொடர்ந்து வரும் இந்தக் கருத்தை சூரிய உதயமும் வசந்த காலமும் மாறாமல் நிகழ்வதை நம்புவது போல நீ நம்ப வேண்டும் இளைஞனே....

இப்படி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறுகிறார்.

நல்ல பழக்க வழக்கங்கள் வருவதற்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது சுலபமே ஆகும்.

தீய பழக்க வழக்கங்கள் சுலபமாக வருவதாக இருக்கலாம். ஆனால் அவற்றோடு வாழ்வது கடினமாகும்.

சிறு திட்டங்களை தீட்டாதீர்கள், நம் இரத்தத்தைக் கிளர்ந் தெழச் செய்யும் சக்தி அவற்றிற்கில்லை…. பெருந் திட்டங்களைத் தீட்டுங்கள்; நம்பிக்கையுடன் உயர்ந்தவற்றைக் குறி வைத்து வேலை செய்யுங்கள்...

குக்கர் சமையல் உண்மைகள்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


வெட்டவெளி ரகசியங்களை கண்டு விட்டால் வெள்ளையர்களுக்கு
எல்லாமே வேடிக்கை தான்..

உலகில் மனித உயிர்களில் பிரபஞ்ச
ரகசியமாக ஆழ்மனது இயங்கி கொண்டிருக்கிறது..

நீ பெயரில்லா, மதமில்லா, சாதியில்லா ஒரு பிரபஞ்ச குழந்தை.
பிரபஞ்சம் என்பதே உனக்குள் தான் அடங்கும்...