25/07/2020
வேற்று உலக வாசிகளும் பேரழிவும் - 2...
உலகின் பல பேரழிவுகள் இயற்கை சீற்றத்தையே பிம்பமாக நமக்கு காட்டுகிறது ஒரு வேலை இது திட்டமிடப்பட்ட வேற்று உலக வாசிகளின் செயலாக இருந்தால்....
அப்படி அடிக்கடி இயற்கை சீற்றம் அரங்கேறும் நாடு ஜப்பான் 2011ம் ஆண்டு மார்ச் 11 வெள்ளி அன்று வடகிழக்கு கடற்கரையிலே இருந்து 69கிலோமீட்டர் தொலைவுல 8.9மக்னிடுட் (magnitude) பயங்கர பூகம்பம் உருவாச்சு இதனால கடல் மட்டத்துல எழுச்சி ஏற்பட்டுச்சு..
இந்த எழுச்சி 320கிலோமீட்டர் தள்ளி இருந்த டோக்கியோல கட்டிடங்கள் பயங்கரமா குலுங்குச்சு..
பூகமபம் முடிஞ்ச அரை மணி நேரத்துல மிகவும் சக்தி வாய்த்த 30 அடி உயர ஆழி பேரலை வடக்கு ஜப்பான தாக்குச்சு..
கரைல இருந்து சுமார் 9 கிலோமீட்டர் நகருக்குள்ள புகுந்து தன பாதைல இருந்த எல்லாத்தையும் அந்த சுனாமி நாசமாக்குச்சு..
இந்த மாபெரும் சுனாமி அலையால 19,000கும் மேல உயிரிழப்பு ஏற்பட்டுச்சு..
இவ்ளோ பெரிய சுனாமிக்கு காரணம் ஆழ் கடல் ஏற்படுற பெரும் பூகம்பம் தான்.. ஆனால் அது மட்டும் காரணமா இருக்க வாய்ப்பு இல்ல..
ஜப்பானோட கியோட நியூஸ் ஏஜென்சி கருத்துப்படி இந்த அழிவு ஏற்பட்டதுக்கு அப்புறம் வந்த நாட்கள்ல ஆயிரக் கணக்கான அடையாளமில்லாத பறக்கும் பொருட்கள் (un identified flying objects ) ஜப்பான்ல காணப்பட்டதா தெரியுது ..
இது உண்மையா இருந்தா ?அதுக்கு அர்த்தம் என்ன ?
இந்த பூமி கிரகத்துல ஏற்படுற பல விதமான பேரழிவுகளால வாழ்வையே மாற்றி அமைக்க கூடிய சில நிகழ்வுகளாலயும் மனித குலம் என்னாகுதுனு ?
தெரிஞ்சுக்க வேற்று கிரஹ வாசிகள் பிரத்யோக கவனம் செலுத்துறாங்களா?
இது மாதிரி சம்பவங்கள் வேற்று உலக வாசிகள் நடத்த நிறைய வாய்ப்பு இருக்கு..
பண்டைய வேற்றுலக வாசிகள் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை படி வேற்றுலகத்த சேர்ந்த சக்திகள் மனிதன் வாழுற பூலோகத்துல இப்படிப்பட்ட பேரழிவுகளை உருவாக்க முடியும்னு நம்புறாங்க..
இது போல இன்னும் பல பேரழிவுகளோட வேற்றுலக வாசிகள் தொடர்பு இருக்கு அவற்றை பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்...
வேற்று உலக வாசிகளும் பேரழிவும் -1...
வெடித்து சிதறும் எரிமலைக் குழம்புகள் சூரியனையே மறைக்கும் அளவுக்கு அதன் புகை மண்டலங்கள் பெருசா இருக்கும்....
அழிவை உண்டாகும் பூகம்பங்கள், சுனாமிகள்..
பூமி பந்தை தாக்கும் எரிக்கர்களால் ஏற்படும் மாபெரும் பேரழிவுகள்..
உலகளவில் உருவாகும் மாபெரும் பேரழிவுகள்..
இவை அணைத்தும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படுத்த பட்டதா அல்லது அதீத சக்தி வாய்ந்த வேற்று உலக வாசிகளால் திட்டமிட்டு உருவாக்க பட்டதா...
மனித இனத்த அடிமை படுத்த அழிக்க ஏற்படுத்த பட்ட வேலையா ?
பூமியில் வாழ்கின்ற லட்சக்கணக்கான மக்கள் கடந்த காலத்தில் வேற்று உலக வாசிகளின் வருகை நிச்சயம் இருந்து இருக்கணும்னு நம்புறாங்க..
அப்படி இருந்த அதோட விளைவு என்ன ?
தொண்மைகால வேற்று உலகித்தனர் நம் வரலாற்றை வடிவமைக்க உதவினார்களா ?
வேற்று உலக வாசிகளுக்கும் உலகெங்கும் நடக்கும் பேரழிவுகளுக்கும் தொடர்பு உண்டா ?
அவர்கள் யார் ? எதற்காக வந்தனர் ? எங்கே சென்றனர் ? இதற்கான காரணங்கள் என்ன ?அவர்கள் விட்டு சென்றதென்ன ? மீண்டும் வருவார்களா?
உண்மையை பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பகுதியை வாசியுங்கள் பல தொடர்களாக இது உருவெடுக்க உள்ளது...
திராவிடலு பகுதி - 4...
பிராமணர்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இப்போது அவர்களின் ஆதிக்கம் பற்றியும் திராவிடத்தின் பிறப்பு பற்றியும் தெரிந்து கொள்வோம்.
பிராமணர்கள் அந்தக்கால மன்னர்களால் மதிப்பிற்குரிய இடத்தில் அமர்த்தப்பட்டு சமுதாயத்தின் மேல்தட்டு மக்களாக இருந்தனர். இவர்கள் செய்த தொழிலும் அப்படியானது.
ஆன்மீக ரீதியான தொழிலைச் செய்தவர்களாதலால் மக்களும் இவர்களை உயர்ந்த குலத்தவராகவே எண்ணிவந்தனர்.
தொழில்வழிச் சமூக அமைப்பு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளது.
உலகம் முழுவதும் மதவழிபாட்டைச் சேர்ந்த தொழில் செய்வோரும் மதம் வளர்ப்போரும் முதல்நிலையிலும்
நிலவுடைமையாளர், படைவீரர்கள் இரண்டாம் நிலையிலும்
விவசாயிகள், கைத்தொழில் செய்வோர் மூன்றாம் நிலையிலும்
உடலுழைப்பு மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் நான்காம் நிலையிலும் இருப்பர்.
உலகின் எந்த மூலையிலும் இந்த வேற்றுமைகள் இருந்தே வந்துள்ளது.
பிராமணர்களின் வீழ்ச்சியானது மொகலாயர்கள் தமிழகம் வரை தமது ஆளுகையை பரப்பிய பிறகு ஆரம்பமானது (தமிழகத்தில் பிராமண ஆதிக்கம் பல்லவர் ஆட்சியின்போது தொடங்கியது) மன்னர்களின் ஆதரவு இல்லாது போக மக்களை மட்டும் நம்பியிருக்கும் நிலைக்கு வந்தனர்.
(அதிலும் சில பிராமணர்கள் முகலாயர்களுடன் சேர்ந்து கொண்டனர் என்பதும் உண்மை).
அப்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் தமிழரல்லாத நாய்க்கர்
(நாயக்கர் என்பதே தவறு, நாயகர் என்ற தமிழ்ச்சாதியுடன் திரிக்கவே நாய்க்கரை நாயக்கர் ஆக்கினர்).
அவர்கள் ஏற்கனவே தமிழ்ப்பிராமணரை (பார்ப்பனரை) புறக்கணித்து சமசுக்கிருதத்தை வளர்க்கும் பிறமொழிப் பிராமணரை ஆதரித்தனர்.
இதனால் தமிழ்ப் பார்ப்பனரும் சமசுக்கிருதத்தை ஏற்க வேண்டியதாயிற்று.
நாய்க்க மன்னர்கள் ஆண்ட காலமே சமசுக்கிருதத்தின் வசந்தகாலமாகும்.
அக்காலத்தில் சமசுக்கிருதத்தில் பெருங்காப்பியங்கள் தோன்றியதையும்,
தமிழ் சிற்றிலக்கியங்கள் மூலம் உயிர்பிழைத்து வந்ததையும்
இன்றுவரை தமிழ் மீண்டெழவில்லை என்பதையும் நினைவில் கொள்க.
18 ம் நூற்றாண்டுவரை முகலாயராலும் வேற்றின மன்னர்களாலும் தமிழ்ப் பார்ப்பனர் ஆதரிக்கப்படவில்லை.
வேற்றினப் பிராமணர் இதற்கு விதிவிலக்கு.
18ம் நூற்றாண்டு இறுதியில் ஆங்கில ஆதிக்கம் தமிழகம் முழுவதும் பரவ பிராமணர்கள் நிலை கவலைக்கிடமானது. (ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பூசாரி என்ற பழமொழி நினைவு வருகிறதா)ஆங்கில ஆதிக்கம் வலுக்க வலுக்க இந்தியர் அத்தனைபேருமே பாதிக்கப்படையத் தொடங்கினர்.
19ம் நூற்றாண்டு வந்ததும் ஒரு திருப்பம்.
1909 மிண்டோ-மார்லி சீர்திருத்தம் இந்தியரின் கிளர்ச்சியால் கொண்டு வரப்பட்டது (நாம் எட்டாம் வகுப்பில் படித்ததுதான் நினைவு வருகிறதுதானே?) அதற்கு முன்புவரை அனைத்து அரசாங்க பதவிகளும் ஆங்கிலேயருக்கே உரித்ததாயிருந்தது.
ஆம்; இந்திய விடுதலை எழுச்சி என்பதன் ஆரம்பமே ஆங்கிலேயருடன் போட்டியிட்டு அரசுப்பதவிகளை பெறுவதிலேயே தொடங்கியது.
'சர்.ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்' எனும் வெள்ளையரால் தொடங்கப்பட்ட 'இந்தியக் காங்கிரஸ்' என்பது அந்தக்காலத்தில் 'மெக்காலே' பாடத்திட்டம் எனும் கட்டாய ஆங்கிலவழி மூலம் (ஆங்கிலச் சேவகத்திற்கென்றே) உருவாக்கப்பட்ட கல்வியைக் கற்றோருக்கு வேலைவாங்கித்தர பாடுபட்டதேயாகும்.
ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்த பிராமணர்கள் குலத்தொழிலாக ஓதுதல், மனனம் செய்தல் போன்றவற்றைச் செய்து வந்தவர்களாதலால் அவர்கள் கல்விகற்று அரசாங்க வேலைகளில் சேர ஆரம்பித்தனர் .
பின் 1919 'மாண்டேகு செம்சுபோர்டு' சீர்திருத்தம் நடைமுறைக்கு வர முன்பைவிட அதிகமான அளவில் இந்தியருக்கு வேலைவாய்ப்பு அதிகமானது.
பின்னர் ஆங்கிலேயரின் பிடி இறுக இறுக உள்நாட்டு வெளிநாட்டு வணிகம் என அனைத்திலும் ஆங்கிலேயர் ஆதிக்கம் வலுக்க இந்திய வணிகத்தில் இருந்த ஆதிக்க வர்க்கத்தினர் பிழைப்பிலும் மண்விழுந்திருந்தது.
அவர்களும் ஆங்கிலக்கல்வி கற்று பதவிகள் பெறும் முன் அத்தனை பதவிகளிலும் பிராமணர்கள் நிறைந்து விட்டனர்.
பிராமணர்கள் மீண்டும் ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்தனர்.
அதாவது நாம் நினைப்பதுபோல நிதிக்கு, நீதிக்கு, வேளாண்மைக்கு, கல்விக்கு என அனைத்திற்கும் தனித்தனி துறைகள் அமைக்கும் 'செக்கரட்ரியேட்' முறையின் வருங்காலத்தை முன்பே கணித்து பிராமணர்கள் அதில் புகுந்துவிடவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டத்தை முதலில் எதிர்கொண்ட சமூகம் என்ற வகையில் தானாக அவர்கள் சென்றடைந்தனர்.
இப்பாது பதவிகளைப் பெறுவதில் ஆங்கில-இந்தியப் போட்டியைவிட பிராமணர்-பிராமணரல்லாதோர் போட்டி கடுமையாக ஏற்பட்டது.
இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள ஆங்கிலேயர் தமது பிரித்தாளும் மூளையைக் கசக்கினர்.
திராவிடம் பிறந்தது...
- தொடரும்...
தமிழன் கண்டுபிடிப்பான திருகை...
நம் தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு...
திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும்.
இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.
ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.
கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும். சமாச்சாரம் இது...
இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...
இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.
மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.
இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.
சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.
தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்...
இதோ இது தான் காவிரி,... கொள்ளிடம்..., ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்... என்று விமானத்தில் தமிழில் வர்ணனை...
அசத்தும் சென்னை பைலட் பிரிய விக்னேஷ்...
லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சிங்கப்பூர் சென்னை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ் என சர்வதேச விமானங்களில் கூட தினசரி தமிழில் அறிவிப்புக்களை கேட்கலாம்... ஆனால் தமிழகத்தில் பயணிக்கும் விமானங்களில் தமிழ் நீஷ மொழி என்ற அளவிலேயே இன்னும் இருக்கிறது
இந்நிலையில் சென்னை-மதுரை இன்டிகோ விமானத்தில் பயணிப்பவர்களுக்கு திருச்சியின் முக்கிய இடங்களை "இதோ இது தான் காவிரி,... கொள்ளிடம்..., ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்..." என
விமானி (flight officer) பிரிய விக்னேஷ், தமிழில் அடையாளம் காட்டும் வீடியோ இனையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தமிழில் நம்பிக்கையுடன் பேசும் திறமைக்கு காரணம் அரசுப்பள்ளி ஆசிரியரான தனது தாய் தவமணி என்றும் அவர் தெரிவித்துள்ளது பலராலும் பாராட்டுக்கு ஆளாகியுள்ளது.
தனது உயர் அதிகாரி கேப்டன் சஞ்சீவ், விமானத்தை இயக்கும்போது முக்கிய இடங்களை அடையாளம் காட்டிக் கொண்டே வருவார் என்றும் அந்த தூண்டுதலே தமிழில் வர்ணனை தர வழிவகுத்ததாகவும் பிரிய விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்...
தூத்துக்குடி : சுங்க அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா, - ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு...
தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் சுங்க உதவி ஆணையர் உட்பட ஐந்து அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகள் செல்வதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்றும், இன்றும் சுங்க முகவர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் அலுவலகத்தில் அனுமதிக்காமல் கதவு பூட்டப்பட்டது, அலுவலகத்திற்க்கு வந்த அனைவரும் வெளியே ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
அதிகாரிகள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது...
திராவிடலு பகுதி - 3...
திராவிடம் நம்மை எப்படி தமது ஆளுமையின் கீழ்க் கொண்டு வந்தது என்பதைப் பார்க்கும் முன் திராவிடம் என்றால் என்ன என்று அறிவது அவசியமாகிறது.
திராவிடம் என்பதன் நேரடியான பொருள் 'ஆரிய எதிர்ப்பு' அதாவது 'பிராமண எதிர்ப்பு'.
இது சரிதானே பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தவறல்லவே என்று நீங்கள் வினவலாம்.
சரி இதை விளங்கிக்கொள்ள பிராமணர் என்றால் யார் என்பதை அறியுங்கள்.
திராவிட இயக்கங்களால் பரப்புரை செய்யப்படுவது போல பிராமணர்கள் வேற்றின வந்தேறுகுடிகள் கிடையாது.
இதை எளிமையாகப் புரியவைக்க' பிராமணர்கள் எல்லாரும் ஆரியர்' என்று கூறுவது எப்படி என்றால் 'இசுலாமியரெல்லாம் அராபியர்' 'கிறித்துவர் எல்லாம் ஐரோப்பியர் ' என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.
பன்னெடுங்காலம் முன் இன்றைய ஆப்கானித்தான் நிலப்பரப்பிலிருந்து கைபர் கனவாய் வழியே வந்தவர்கள் ஆரியர். இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.
திராவிடர்களின் பிரச்சாரப்படி ஆரியர்கள் வந்து சேர்ந்தபோது
இங்கே ஆட்சி செய்தவர்களைப் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் கைக்குள் போட்டுக் கொண்டு சாதியை உருவாக்கி
மனுதர்மத்தை உருவாக்கி கடவுள் வழிபாடு சமுதாய சடங்குகளைத் திருத்தி ஆதிக்கவர்க்கமாக உருவெடுத்துள்ளனர்.
ஆனால் உண்மை அதுவல்ல.
ஆரியர்களுக்கும் இன்றையப் பெரும்பான்மைப் பார்ப்பனருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
எல்லோரும் நம்புவது போல ஆரியருக்கும் சமசுக்கிருதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.இதுவே உண்மை.
பார்ப்பனர்களும் இம்மண்ணின் மைந்தர்களே. இதைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
திராவிடக் கைக்கூலிகள் இதன்மூலம் என்னை பார்ப்பன அடிமை என்றும் ஆரியக்கைக்கூலி என்றும் கேலி செய்தாலும் சரி.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எவரும் தமிழரே என்பதைக் கூற என்ன அச்சம்?
ஆனாலும் பார்ப்பன ஆதிக்கம் என்று ஒன்று இருந்தது-இருக்கிறது.
பார்பனரை வந்தேறிகள் என்று கூறுவதும் இன்றைய சாதி, மத, இன மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு பார்ப்பனரே காரணம் என்று அவர்கள் மீது மட்டும் பழிபோட்டு
மற்றவர்கள் விலகிக்கொள்வதும் அநியாயத்திலும் அநியாயம் ஆகும்.
சாதியை வளர்த்து அதில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி மேல்தட்டு சாதியினர் அவர்களின் கீழ்த்தட்டு சாதியினரை அடக்குவதும் அவர்கள் தமக்கு கீழ்த்தட்டு மக்களை அடக்குவதுமாகிய இன்றைய அத்தனை இழிநிலைக்கும் அனைவரும் காரணம்.
( சாதியை உருவாக்கியது திராவிடன் எனும் கன்னடன்) .
பிறகு ஏன் பார்ப்பனரை மட்டும் எல்லோரும் எதிர்க்க வேண்டும்?
பார்ப்பன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது இன்றியமையாதது.
அதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆனால் அதற்கு மாற்றாக திராவிடத்தை ஏற்பது முட்டாள்த்தனமானதாகும்.
காலங்காலமாக தமிழர் நம்மை நாமே திராவிடத்திடம் அடகு வைத்துக்கொண்டு வருகிறோம்.
திராவிடம் தமிழினத்தை பாதிக்கும் மேல் அரித்துவிட்டது.
இனியும் விழிக்கவில்லையென்றால் அடிமையாகி அழிந்தே போவோம்.
திராவிடம் பார்பனீயத்திற்கு மாற்றாக எப்படி ஏற்கப்பட்டது?
திராவிடத்திடமிருந்து எப்படி விடுபடுவது?
தமிழ்த்தேசியத்தில் பார்ப்பனீயத்தை எப்படித் தடுப்பது?
- தொடரும்...
மருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்...
அத்திப் பூத்தாப்போல இருக்கே? என்று ஒரு பழமொழி உண்டு. உண்மையில் அபூா்வமாக பூப்பதாக நினைக்க வேண்டாம். அது பூக்கலேன்னா எப்படி அத்திக்காயும் அத்திப்பழமும் நமக்குக் கிடைக்கும். அந்தப் பூ நம்ம கண்ணுக்கு அவ்வளவா தெரியறது இல்ல. ஏன்னா அது அடிமரத்திலயிருந்து உச்சி வரைக்கும் மரத்த ஒட்டியே காய்க்கும். அதனால் இதை “காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்” என்ற விடுகதையிலும் சொல்வர்.
மூலிகையின் பெயர்- அத்தி
தாவரப்பெயர் – FICUS GLOMERATA, FICUS AURICULATE
தாவரக்குடும்பம் – MORACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன..
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும்.
அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6 – 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது Racemosa எனவும் தாவரவியலில் குறிப்பிடபடுகிறது.
அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.
உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள் சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.
அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்துவெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம். மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் நல்லது.
2 தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.
இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.
வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
மேலும் இவை கல்லீரல் – மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.
கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.
அத்திப் பழத்தின் சத்துகள் : அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.
அத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (1 பழம் = 50gm) (% சராசரி தினப்படி சத்து)
நார்ச்சத்து: 5.8%
பொட்டாசியம்: 3.3%
மாங்கனீசு: 3%
விட்டமின் பி6: 3%
கலோரி(37): 2%
புரதம்-2 கிராம்,
கால்ஷியம்-100 மி.கி,
இரும்பு-2 மி.கி.
அத்தியின் மருத்துவப் பயன்கள் : அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
நீரழிவு குணமாகும்: அத்தி மரத்தை லேசாக கீறினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.
சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும்.நாட்டு அத்தியின் பால் மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும்.
அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை போன்றவற்றில் பாளையில் பால் சுரக்கும். அத்தி வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.
அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
முருங்கை விதை, பூனைக்காலி விதை, நலப்பனைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த 5 கிராம் பொடியில் 5 மி.லி. அத்திப்பாலைக் கலந்து காலை, மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப் போக்கு தீரும்.
அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச் செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்றுவேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.
காண அரிதாகிவிட்ட இம்மரத்தை அதிகளவில் விவசாய நிலங்களில் நட்டு வளர்த்து வருவது நலம்.
வீட்டுத்தோட்டத்தில் இடம் இருந்தால் அங்கேயும் வளர்க்கலாம்...
திராவிடலு பகுதி - 2...
தமிழர் அப்படி என்ன தவறு செய்தனர் என்று பார்ப்பதற்கு முன் இதையெல்லாம் ஏன் நான் பதிவிடுகிறேன் என்று கூறிவிடுகிறன்.
இன்றைய திராவிடக் கட்சிகளில் உள்ள சிலர் திராவிடம் என்பது சரியானக் கோட்பாடு என்றும் இன்று முன்னனியில் உள்ள திராவிடக் கட்சிகள் பெயருக்கு திராவிடத்தை வைத்திருப்பதாகவும் அவைகள் உண்மையான திராவிடக் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றும் திராவிட வழிநடக்கும் கட்சிகளே தமிழருக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.
உண்மையில் திராவிடம் எனும் கோட்பாடு தமிழரைச் சுரண்டி அடக்கியாளவே பிறந்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகும் முன் தடுக்க வேண்டிய அவசியத்தை தமிழருக்கு உணர்த்தி திராவிடத்தின் தோலுரிக்கவே இதை எழுதுகிறேன்.
இப்போது விடயத்திற்கு வருவோம்.
அன்றையத் தமிழர் செய்த தவறு என்னவென்றால் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.
ஆனால் மாநில மொழிகளில் எதை வேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.
இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர்.
இன்றும் இவ்விரு வகைத் தமிழரிடமும் மேற்கண்ட மொழிகள் வேறூன்றி உள்ளன.
ஆனால் இதனால் சில நன்மையும் ஏற்பட்டது வெளி மாநிலங்களில் குடியேறியத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வழியேற்பட்டது.
ஆம், வெளிமாநிலத்தமிழர் தமிழைக் கற்க, மாநிலத்தமிழர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக் கற்கலாயினர்.
அத்தோடு தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் அண்டை மாநிலத்தவர் வந்து குடியேறி குடியேறி தமது எண்ணிக்கை கிட்டத்தட்ட தமிழருக்கு இணையாக வர வழிசெய்திருந்தனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.
இவ்வந்தேறு குடிகளும் தம் தாய்மொழியையே கற்க தமிழரும் அவர்கள் மொழியைக் கற்கலாயினர்.
இதனால் நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப்பெயரையும் மாற்றி தெலுங்கரின் நாய்க்கர், ஸெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.
தமிழகத்தின் 35% பூர்வீக மண் இலட்சக்கணக்கானத் தமிழரோடு அண்டை மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட அடிகோலினர்.
ஆனால் தமிழகத்தின் உட்பகுதியில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் வந்தேறுகுடிகள் தமிழைக் கற்கலாயினர் என்பதையும் இங்கு கூறத்தான் வேண்டும்.
மற்ற எந்தவொரு மக்களைவிடவும் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும்பிழையைச் செய்தனர் தமிழ்மக்கள்.
இன்று ஈழப்பிரச்சனையின் ஆரம்பம் என்பது அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கற்று உயர்ந்த பதவிகள் பெற்று அதிகாரவர்க்கமாக மாறிய வடக்குப்பகுதித் தமிழர் மீது சிங்களவருக்கு ஏற்பட்ட வெறுப்பே ஆகும்.
தமிழர் ஆதிகாலத்திலிருந்தே இப்பிழையைச் செய்தே வந்துள்ளனர்.
தமிழரின் தனித்தன்மை என்பது 'இனப்பற்று இல்லாமை' ஆகும்.
அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.
அவர்கள் அனைவரும் தமது தாய்மண்ணின் ஆதரவு கிடைக்காமல் இன்றும் அதேநிலையில் உள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.
காரணம் தமிழர் அனைவரும் வேற்றினத்தாரின் இரும்புப்பிடிக்குள் சிக்கியுள்ளனர்.
தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது?
இதற்குக் காரணம் யார்?
இதில் திராவிடத்தின் பங்கு என்ன?
- தொடரும்...
பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக வாழ்ந்தான்....
சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும்...
சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.
சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.
இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே
இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்.
நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.
அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது...
இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.
அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப...
இதன் பொருளைப் பாருங்கள்..
விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.
இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.
இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டியதொன்றாகும்.
விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.
எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.
கம்ப ராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி.. இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.
மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.
விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?
தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.
இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தான்...
இதயத்தின் நண்பன் சிவப்பு முள்ளங்கி...
வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு, மஞ்சள், வெள்ளை, முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.
முள்ளங்கியை மஞ்சள் முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது.
ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.
புற்றுநோய் தடுப்பு...
சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன.
சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன.
சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.
உறுதியான எலும்பு...
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.
பார்வைக்கு பலம்...
தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும்.
லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது.
இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்...
உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது.
சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.
எடை குறைப்பு...
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம்.
குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும்.
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன.
எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.
ஆஸ்துமாவிற்கு நிவாரணம்...
நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன.
தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்.
தோலுக்கு நண்பன்...
பிற நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்த வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும்.
சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.
இரத்த அழுத்தத்திற்கு மருந்து...
நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன.
மேலும் எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது...
Subscribe to:
Posts (Atom)