01/09/2017

இப்படி எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி யை எல்லாம் ஆதரிக்கும் தமிழன் இருக்கும் வரை தமிழினம் அழியவே செய்யும்...



புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி எண் - 9994060690, 9865376113.. பாராட்டு தெரிவிக்க மட்டும்...

அனிதா தற்கொலை விவகாரத்தில் ஜி.வி.பிரகாஷ் ஆவேசம்...


இதோ வருகிறது நல்ல சேதி எனக் கூறியவர்கள் எல்லாம் இப்பொழுது காணவில்லை, ஜாதி மதத்தை கடந்து போராட வேண்டும் , இதை விட அவலம் தமிழகத்திற்கு இருக்க முடியாது - நீட் தேர்வால் அனிதா தற்கொலை குறித்து கமல் பேட்டி...


அனிதா தற்கொலைக்கு மத்திய-மாநில அரசுகளே பொறுப்பு எனக்கூறி, சென்னை சிம்சன் பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் மாணவர் கழகத்தினர் கைது...


அனிதா தற்கொலைக்கு நீதிக்கேட்டு அரியலூர் மாவட்டம் குழுமூரில் பொதுமக்கள் சாலை மறியல்...


தற்கொலை தீர்வல்ல என்று இன்றைக்கு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் இந்த தொலைக்காட்சிகள் கடந்த மூன்று மாதமாக என்ன செய்து கொண்டு இருந்தன?


அடிமைகளின் இணைப்பில் காட்டிய மாமா வேலையில் சிறு நேரத்தையாவது இந்த நீட் தேர்வு பிரச்சினையில் காட்டியிருந்தால்.. இந்த தமிழ்ச்சமூகமும் மாணவர் சமூகமும் கொஞ்சம் எழுச்சியோடு போராடியிருக்கும்...

எதிர்கால மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது...


அனிதாவின் தற்கொலையை அரசியலாக்கி தமிழகத்தின் அமைதியை கெடுப்பது மாணவர்களுக்கும், மக்கள் நலனுக்கும் எதிரானது - தமிழினத் துரோகி தமிழிசை சௌந்தரராஜன்...


மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம்...


போராட்டம் அரியலூரில் மட்டும் தானா?


பிராமண பாஜக-வின் தர்மம் வென்றதில், தமிழச்சி நம் சகோதரி அனிதா பலியானாள்...


இது தற்கொலை அல்ல. நீட்-னால் செய்யப்பட்ட பச்சைப் படுகொலை. 1176 மதிப்பெண் எடுத்தும் 196.75 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும், பார்ப்பனருக்காகவும், பணக்காரர்களுக்காகவும் மட்டுமே நீட்-ஐ நீட்டி முழங்கி உன் உயிரை எடுத்திருக்கிறார்கள்.

தரம் தரம் என்று சொல்லி, 2000 ஆண்டுகளாக பார்ப்பன நீதியே அனைவருக்குமான நீதியாக சொல்லி நீ மருத்துவம் படிக்கும் உரிமையை மறுத்திருக்கிறார்கள். நீ உனக்காக மட்டும் போராடவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காக, குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக போராடினாய்.

நீ நிமிர்ந்த நடையோடு டெல்லிக்கு பயணப்பட்ட போது, நாங்கள் மகிழ்ச்சியோடு கண்டோம் உன்னை. உன்னை முடித்துக் கொண்ட போது வெட்கப்பட்டு நிற்கிறோம். இது அடிமைகளின் தேசம்.

நீ மருத்துவம் மக்களுக்கானது என்று சொன்னாய். எச்.ராஜாக்கள் அது கார்ப்பரேட்டுக்கானது என்று சொல்லி உன்னை கொலை செய்திருக்கிறார்கள்.

சூடு சொரணையுள்ள தமிழர்களே! எழுந்து நில்லுங்கள். ஒவ்வொரு முறையும் சம்பூகன் காலத்திலிருந்து நாமே பலியாகிறோம்.

நீட்-ஐ வேரறுப்போம். கல்வியை மாநில பட்டியலுக்கு வரும் வரை உறுதியுடன் நிற்போம். எங்கள் சகோதரியே. எங்கள் குழந்தையே..

தமிழர்களே. அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராடுவோம். அனிதாவின் இறுதிப் பயணத்தில் ஒட்டு மொத்த தமிழகமும் அணிதிரளட்டும். அனிதா நடத்திய போராட்டத்தை தொடர்வோம்...

- மே17 இயக்கம்...

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை...


நல்ல கேள்வி கேப்டன்...


இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டாங்கே...


இன்றிலிருந்து லைசன்ஸ், இன்ஷூரன்ஸ், ரேசன்கார்டு எல்லாம் அவசியம்...


நகரங்களில் உள்ள மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி...


நகரங்களுக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலை ஓர கடைகளுக்கு மட்டுமே தடை தொடரும்...

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக  விளக்கம்...

பாஸ்போர்ட், ஆர். சி. புத்தகம், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் துறை இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்...


அசல் ஓட்டுனர் உரிமம் என்பதை திங்கட்கிழமை வரை அமல்படுத்தப் போவதில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்...


இதுவும் நல்லா தான் இருக்கு...


அசல் ஓட்டுநர் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து...



இலுமினாட்டி பற்றிய உண்மைகள் - 1...


மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிர்மலா சீத்தாராமன் தமிழக பாஜக தலைவராகிறாரா..?



மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நிர்மலா சீத்தாராமன் , உமா பாரதி, ராஜிவ் பிரதாப் ரூடி ஆகியோர் ராஜினாமா...

இயற்கையின் அற்புதக் கொடை.. மூங்கில் அரிசி...


நெல் போலவே இருக்கும்.பழங்குடி மக்களின் முக்கிய உணவு.

60 வயதான மரத்தில்தான் கிடைக்கும்.
உடலுக்கு ஊட்டம் கொடுக்கும்.

வாழையடி வாழையாக வாழ்க…
மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க என மணமக்களை வாழ்த்தும் பழக்கம் நம்மிடையே உண்டு.

அதற்குக் காரணம், இந்தத் தாவரங்கள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றி புதர் போல நெருங்கி வளர்பவை. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைத்து காலகாலமாக வாழ்பவை.

அதனால்தான் திருமண விழாக்களின் போது, மூங்கில் பந்தல்கால் நடுதலும், வாழை மரம் கட்டுதலும் தவறாமல் இடம் பெறுகின்றன.

அப்படி நம் வாழ்வில் ஒன்றியிருக்கும் பயிர்களில் ஒன்றான மூங்கில், மற்ற தாவரங்களைப் போல் ஒவ்வோர் ஆண்டும் பருவத்தில் பூக்காமல்… தன் வாழ்நாளை முடிக்கும் போது தன் இனத்தைப் பரப்புவதற்காக பூத்து விதைகளை உருவாக்கும். கிட்டத்தட்ட கோதுமை போல காட்சியளிக்கும் அந்த விதைகள்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கப்படுகிறது. இந்த விதைகளில் நெல் போலவே, மேலே தவிடு போன்ற தோலும் உள்ளே விதையும் இருக்கும். அதனால்தான் ‘மூங்கில் அரிசி’ என அழைக்கிறார்கள்.

காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இருக்கும், மூங்கில் அரிசியானது சிங்கவால் குரங்கு, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகளுக்கும் பிடித்தமான உணவு.

பழங்குடி மக்களிடம் இருந்து நாட்டுக்குள்ளும் பரவத் தொடங்கிய மூங்கில் அரிசி, முக்கிய இயற்கை உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மலை, மலை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களிடையே மூங்கில் அரிசி மிகப் பிரபலமாக இருக்கிறது. இயற்கை அங்காடிகள், பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களில் மூங்கில் அரிசியும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லைப் பகுதியில் தேன்கனிக் கோட்டையில் இருந்து பெட்டமுகிலாளம் செல்லும் சாலையில் உள்ள அய்யூர் வனப்பகுதியில் மூங்கில் மரங்களில் நெல் பூத்துள்ளன. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் வனத்துறை சார்பாக பரவலாக நடப்பட்ட மூங்கில் மரங்கள்தான் பூத்துள்ளன. தற்போது, அப்பகுதி மக்கள் மூங்கில் நெல்லைச் சேகரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இத்தகவல் அறிந்து அய்யூர் வனப்பகுதிக்குப் பயணமானோம். அய்யூர் வனப்பகுதியின் செல்லும் வழியில் மலை அடிவாரங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மூங்கில் காடுகள்தான்.

மூங்கில் பூத்தால் மழை பெய்யாது..

மூங்கில் நெல் குறித்து அரசஜ்ஜுர் கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை என்ற பாட்டியிடம் கேட்டபோது, “60 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணமாகி இந்த ஊருக்கு வந்தேன். அப்போ, ஃபாரஸ்ட்டுகாரங்க மூங்கில் கன்றுகளை நட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த மரங்கதான் இப்போ பூத்திருக்கு. நெல் உக்காந்திருக்கிறதைப் பாக்குறப்போ சந்தோஷமாக இருக்கு. மூங்கில்ல இப்படி நெல் உக்காந்தா, அந்த வருஷம் மழை குறைவா பெய்யும், வெள்ளாமை செழிக்காதுனு சொல்வாங்க. ஆனா, இங்க அதையும் தாண்டி மழை பெய்ஞ்சிகிட்டுதான் இருக்கு. மூங்கில் அரிசி கிடைக்கிறப்போவெல்லாம் நாங்க விரும்பி சாப்பிடுவோம். முன்னாடி அந்த அரிசி மட்டும்தான் எங்களுக்குத் தெரியும்” என்றார்.

மாடு மேய்த்துக் கொண்டே நெல் பொறுக்குவோம்...

மூங்கில் வனத்துக்குள் நாம் சென்ற போது, அங்கு மூங்கில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்தார், பழங்குடி கிராமமான  சித்தலிங்கம் கொட்டாயைச் சேர்ந்த சாமுண்டியம்மா. “எங்க மாமியார்  இருந்தப்போ ‘பிதிரு நெல்லு’ (மூங்கில் நெல்) பொறுக்கிட்டு வருவாங்க. அதை உரல்ல குத்தி அரிசியாக்கி சாப்பிட்டிருக்கோம். இப்போதான், நான் முதல்முறையா இப்பதான் பொறுக்குறேன். போன வருஷமும் இந்தப் பகுதியில நிறைய பேர் பொறுக்கிகிட்டு வந்தாங்க. ஆனா, இந்த வருஷம்தான் அதிகமாக கிடைச்சுகிட்டிருக்கு. நான், 3 மாசமா சேகரிச்சிக்கிட்டிருக்கேன். ஒரு நாளைக்கு 4 கிலோ அளவுக்குக் கிடைக்குது. வீட்டுக்கு வெச்சுக்கிட்டது போக மீதியை விற்பனை செய்வேன். ஒரு கிலோ 40 ரூபாய்னு வாங்கிக்கிறாங்க. ஆடு, மாடுகளை மேய்ச்சிக்கிட்டே பொறுக்கிறதால ஒரு வருமானம் கிடைச்சிடுது. நாங்க கூட்டமாதான் போய் பொறுக்குவோம். மூங்கில் காட்டுல இருக்கிற பொம்மஅள்ளி அம்மன்தான் எங்களுக்கு காவலு” என்றார், சாமுண்டியம்மா.

வீட்டுக்குப்போக மீதி விற்பனைக்கு…

சாமுண்டியம்மாவுடன் இணைந்து நெல் பொறுக்கும் பணியில் இருந்தனர், சிக்கமல்லா-மாதம்மா தம்பதி. அவர்களிடம் பேசியபோது, “போன வருஷத்துல இருந்துதான் இங்க மூங்கில் நெல் கிடைக்குது. மரங்களின் வயசைப் பொறுத்து நெல் கிடைக்கும். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்குக் கிடைக்கும். அடுத்து எப்போ கிடைக்கும்னெல்லாம் உறுதியா சொல்ல முடியாது. கிடைக்கிறப்போ பொறுக்கியெடுத்து வெச்சுக்குவோம். மரத்துல இருந்து உதிருற நெல்லைத்தான் பொறுக்க முடியும்...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...


3 நாட்களில் 2 ஆயிரம் ரோகிங்யா இஸ்லாமியர்கள் படுகொலை...


புத்த மதவாத அரசு ஆளும் மியான்மர் நாட்டில் உள்ள வங்காள ரோகிங்யா முஸ்லிம்கள் இரண்டாயிரம் பேர் கடந்த மூன்று நாள்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மியான்மர் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகள், வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்களின் படங்களை ஒரு கணம்கூடப் பார்க்கச் சகிக்கமுடியாதவாறு மிகமோசமான கோரம் அரங்கேறியுள்ளது.

மியான்மர் அகதிகள் விவகாரம்; சாட்டை சொடுக்கும் மனித உரிமை ஆணையம்!
மியான்மர் நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருந்தபோதும், நாட்டின் மேற்குப் பகுதியான ரகைண் மாநிலத்தில் வசிக்கும் இந்திய மற்றும் வங்காளதேச வம்சாவளியினரான ரோகிங்யா முஸ்லிம்கள் இன-மத வெறித் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மியான்மர் ராணுவமே ரோகிங்யா மக்களை இனப்படுகொலை செய்துவருவதாகப் பிரச்னை எழுந்துள்ளது. கடந்த வார இறுதி மூன்று நாள்களில் மட்டும் படுகொலை செய்யப்பட்ட ரோகிங்யா முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் முதல் மூவாயிரம்வரை இருக்கும் என்றும் இந்தக் கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் மியான்மர் ராணுவம் உள்ளது என்றும் ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தில் ராத்தெடங் நகரத்துக்கு அருகில் உள்ள சோக்பரா என்னும் ஊரில் ‘கடந்த ஞாயிறன்று மட்டும் 900 முதல் ஆயிரம் ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும்’ என்றும் அதில் ஒரே ஒரு சிறுவன் மட்டுமே உயிர்பிழைத்தான் என்றும்  இவ்வமைப்பின் பேச்சாளரான மருத்துவர் அனிதா சுக் கூறியுள்ளார்.

ரகைண் மாநிலத்தில் ரொகிங்யா முஸ்லிம்கள் மீது அண்மையில் துப்பாக்கியால் சுடும் உத்தரவை அரசு பிறப்பித்ததை அடுத்தே, அங்கு ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் விவரிக்கமுடியாத கொடூரமாக அரங்கேறிவருகிறது. மியான்மர் ராணுவமானது ரோகிங்யா முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள், மதரசாக்களை தாக்கி அழித்துள்ளது. தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து 20 ஆயிரம் அப்பாவி மக்கள் அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேறினர்; வங்காளதேச எல்லையில் உள்ள மலைப்பகுதியில் 60 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளனர். ஆனாலும் வங்காளதேச அரசு அவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காமல் இருந்துவருகிறது.

இதுவரை, ரகைண் மாநிலத்திலிருந்து ஒரு லட்சம் பேர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்; இரண்டாயிரம் ரோகிங்யா இனத்தவர் மியான்மர் - வங்காளதேச எல்லையில் மாட்டிக்கொண்டுள்ளனர். வங்காளதேசத்துடனான எல்லையை மியான்மர் அரசு மூடிவைத்துள்ளது.

ரகைண் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவும் மனித உரிமைகள் மீறல் நடக்காமல் உறுதிப்படுத்தவும் ரோகிங்யா முஸ்லிம் மக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதை நிறுத்தவும், ரோகிங்யா முஸ்லிம்கள் பாதுகாப்பாக நாடுதிரும்பவும் ஆசியான் அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம், இந்தியா, சீனா ஆகிய நாடுகள், மியான்மர் அரசின் மீது அழுத்தம் தரவேண்டும் என்றும் ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, 2012 ஆம் ஆண்டில் பெரும்பான்மை புத்த மதவாத சக்திகளுக்கும் ரகைண் மாநிலத்தில் வாழும் வங்காள ரோகிங்யா முஸ்லிம் மக்களுக்கும் மோதல் உருவானது. அப்போது முதல் ரோகிங்யா முஸ்லிம்கள் தரப்பில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் வாழ்வாதார இழப்பும் தொடர்ந்துவருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரகைண் மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத மதவாத ராணுவத் தாக்குதல்கள், வங்கமொழி பேசும் ரோகிங்யா முஸ்லிம்கள் அனைவரின் வாழ்க்கையையுமே மீண்டும் கதிகலங்கச் செய்துள்ளது. சர்வதேச சமூகமானது மானுடத்துக்கு எதிரான மியான்மர் ராணுவத்தின் குற்றங்களை உடனே தடுத்துநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ரோகிங்யா கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த அக்டோபரில் மோங்டவ் எனும் ஊரில் ராணுவச் சோதனை எனும் பெயரில் நடத்தப்பட்ட கடும் நடவடிக்கையில், குழந்தைகளையே வெறிகொண்டு படுகொலை செய்வது, கூட்டு வல்லுறவுக் கொடுமை செய்வது உட்பட மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டன என்று ஐநா குழு ஆய்வுசெய்யும் அளவுக்கு நிலைமை மிக மோசமானது.

ஐநாவின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னானின் ரகைண் மாநில அறிவுரைக் குழுவின் இறுதி அறிக்கையானது, ரோகிங்யா முஸ்லிம்களின் குடியுரிமை, சுதந்திரமான வாழ்க்கை, சுகாதாரம் மற்றும் கல்வி உரிமைகள், மனிதாபிமான உதவிகள் பெறுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை உறுதிசெய்யவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அந்த அறிக்கையானது அண்மையில் வெளியிடப்பட்டது.

நெடுங்காலமாக மியான்மரில் ஜனநாயக ஆட்சி மலரவேண்டும் என ராணுவத்துக்கு எதிராகப் போராடிவந்த ஆங் சான் சூகி, ரோகிங்யா இனத்தவர் மீதான தாக்குதலில் தொடர்ந்து மவுனம் காத்துவருகிறார் என்பது கசப்பான உண்மை...

செய்தி - விகடன்

24% கான்ட்ராக்ட் கமிஷனில் திமுக எம்எல்ஏக்களுக்கும் பங்கு செல்கின்றது, மாவட்ட எம்எல்எக்களிடம் கேட்டுப் பாருங்கள் என்னிடம் ஆதாரம் உள்ளது - திவாகரன் பரபரப்பு பேட்டி...


சத்துணவு வேலைக்கு 2 லட்சம்,
ட்ரான்ஸ்பருக்கு 5 லட்சம்,

என தகுதிக்கு ஏற்ப லஞ்சம் கொடுக்கப்படுகின்றது இவை அனைத்திற்கும் என்னிடம் ரிகார்ட் உள்ளது, எல்லா வற்றிலும் லஞ்சம் உள்ளது என திவாகரன் பேட்டி அளித்துள்ளார்...

திமுக ஸ்டாலினின் திட்டம்...


பாஜக மோடி சொன்ன கருப்புப் பணம் எங்கே? அம்பலமாகும் பணமதிப்பழிப்பு...


எனக்கு 50 நாட்கள் மட்டும் கொடுங்கள்; இந்த முடிவு தவறாகப் போனால் என்னைப் பொதுவிடத்தில் வைத்து தூக்கிலிடுங்கள்” – கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பிளிறினார் மேதகு பாரத பிரதமர் மோடி. அது நவம்பர் 13-ம் தேதி, 2016-ம் வருடம். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்த் தாள்கள் செல்லாது என அறிவித்த ஐந்தாம் நாள் மேற்படி “மேதகு” கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றச் சென்ற போது தான் நாடெங்கும் மக்கள் வங்கிகளின் வரிசையில் நிற்கும் போது தங்கள் உழைத்துச் சம்பாதித்த காசு திடீரெனச் செல்லாததாக அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொண்டால் ”டைரக்ட்டாக” சொர்க்கம் தான் என அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் வேறு ஒரு சுவாரசியமான தகவலையும் பிரதமர் அவர்கள் வெளியிட்டார். அதாவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நகைகள் வாங்குவதற்கு பான் எண்கள் கட்டாயம் என்கிற விதியைத் தளர்த்திக் கொள்ளுமாறு தனக்கு கடிதங்கள் எழுதியதாகவும், என்றாவது அதைத் தான் வெளியிட்டால் அந்த உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கே செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், நேர்மையின் உறைவிடமான திருவாளர் மோடி “அந்தக் கடிதங்களை” வெளியிடவும் இல்லை; அதற்குப் பின் அதைப் பற்றிப் பேசவும் இல்லை. பிட்டத்தில் பற்ற வைக்கப்பட்ட நெருப்பின் வெப்பம் மக்களை எட்டு திசைகளிலும் சிதறியோடச் செய்து விட்டதால் நாமும் அதை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற பாரதப் பிரதமருக்கு நினைவூட்ட மறந்து விட்டோம்.

இப்போது விசயம் அதுவல்ல.

மத்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட 15.44 லட்சம் கோடியில் 15.28 லட்சம் கோடி வங்கிகளுக்குத் திரும்ப வந்து விட்டதாக அறிவித்துள்ளது. அதாவது வெறும் 1 சதவீதம் மட்டுமே மீண்டும் வங்கிகளுக்குத் திரும்பவில்லை. பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணங்களில் முக்கியமானது – இந்நடவடிக்கை கள்ளப் பொருளாதாரத்தை ஒழித்து விடும் என்பது.

அதாவது, பணத்தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின், வங்கிகளுக்குச் செலுத்துவோர் முறையான கணக்குகளை ஒப்படைக்க வேண்டியிருக்கும் என்றும், பதுக்கல்காரர்களுக்கு அவ்வாறு செய்ய இயலாது என்பதால் தமது கருப்புப் பணத்தை வங்கிகளில் கட்டாமல் மறைத்து விடுவார்கள் என்பதும் அரசு சொன்ன வியாக்கியானம்.

ஆனால், நடந்தது என்ன? வெறும் 16 ஆயிரம் கோடி மட்டுமே வங்கிகளுக்குத் திரும்பவில்லை. இந்தப் பதினாறாயிரம் கோடி “கருப்பு” பணத்தை ஒழிப்பதற்காக புதிய பணத்தாள்கள் அச்சடித்த வகையில் மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடியைச் செலவழித்துள்ளது அரசு. இந்தச் செலவோடு, புதிய பணத்தாள்களை வங்கிகளுக்கு அனுப்புவதற்கு ஆன போக்குவரத்து செலவு, லட்சக்கணக்கான ஏ.டி.எம் இயந்திரங்களை புதிய பணத்தாள்களுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்வதற்கான செலவு, பழைய ரூபாய்த் தாள்களை எண்ணுவதற்கு செய்யப்பட்ட செலவு, வங்கி ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்வதற்கு கொடுத்த படி என மற்றவைகளையும் சேர்த்தால் மேலும் சில ஆயிரம் கோடிகள் செலவாகி இருக்கும்.

மேலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக நூற்றுக்கும் அதிகமானோர் பலியாயினர். சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்தனர். பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் காரணமாக சுமார் 1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இத்தனைக்கும் பிறகு பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தின் மதிப்பு வெறும் 1 சதவீதம் என்கிற ரிசர்வ் வங்கியின் அறிக்கை.

இந்த அறிக்கை வெளியாவதற்கு பதினைந்தே நாட்களுக்கு முன்பு – சுதந்திர தினத்தன்று – தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிப் பேசிய பிரதமர் கொஞ்சமும் கூச்சமே படாமல் “மூன்று லட்சம் கோடி” கருப்புப் பணம் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் கண்டறியப்பட்டதாக பொய்யுரைத்தார்.

சரி, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படியே பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் 16 ஆயிரம் கோடி கருப்புப் பணம் கண்டறியப்பட்டதாக சொல்வதாவது உண்மை தானா?

இல்லை. திரும்ப வராத 16 ஆயிரம் கோடி என்பது நேபாள் நாட்டின் மத்திய வங்கியிடம் உள்ள பழைய ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுக்களையும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்ட நோட்டுக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வந்தடைந்த தொகையாகும். தற்போது நேபாள் வங்கி இந்திய ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அதே போல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளிடம் இருக்கும் பழைய தாள்களும் திரும்ப வரும் போது ஒன்று செல்லாத நோட்டுக்கள் அனைத்துமே திரும்ப வந்திருக்க வேண்டும் – அல்லது அதற்குக் கூடுதலான தொகை (15.44 லட்சம் கோடிக்கும் மேல்) திரும்ப வரும்.

இதன் பொருள் என்ன?

முதலாவதாக, சுழற்சியில் இருந்த கருப்புப் பணம் அனைத்தும் சட்டப்பூர்வமான வழிகளிலேயே வெள்ளைப் பணம் ஆகியுள்ளது. இரண்டாவதாக, சுழற்சியில் இருந்த போலி ரூபாய்த் தாள்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நல்ல ரூபாய்த்தாள்களாக மாறியுள்ளது. அடுத்து, பணம் சார்ந்த பொருளாதாரத்தை ஒழித்து மின்னணுப் பொருளாதாரமாக (Digital Economy) மாறிச் செல்வதற்கு பணமதிப்பழிப்பு நடவடிக்கை உதவும் என்கிற வாதமும் பொய்யென்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும் பணமதிப்பழிப்பு நடவடிக்கை தீவிரவாத தாக்குதல்களைக் குறைக்கும் என்பதும் ஏற்கனவே பொயாகியுள்ளது – சொல்லப் போனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஆக, மத்திய பாரதிய ஜனதாவின் முட்டாள்தனமான நடவடிக்கையின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததும், லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழப்புக்கு ஆளானதும், நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்ததும், கருப்புப் பண முதலைகள் சட்டப்பூர்வமாக கருப்பை வெள்ளையாக்கியதுமே நடந்துள்ளது...

இந்தியா, நேபாள், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு ஒரு மில்லயன் டாலர் நிவாரண உதவி - கூகுள் அறிவிப்பு...


பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - மருத்துவ அறுவை சிகிச்சையில் (MEDICAL AND SURGERY OPRATION) நம் பழந்தமிழர்கள் முன்னோடிகள் என அறிவோம்...


ஒவ்வொன்றாக காயத்தை சரிசெய்யும் முறையான கிருமிநாசினி தடவுதல், புண்களை தையல் போடுதல் பின் பஞ்சுவைத்து கட்டுபோடுதல் என வரிசையாக காண்போம்.

ANTISEPTIC CLEAN...

பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்

- (திருவெங்கைக் கோவை - 99)

ஆயுதங்களால் உண்டான காயங்களிலும் அறுவை சிகிச்சை நடத்த இடத்திலும் உலோக  நஞ்சை  முறிக்கும்   (ANTISEPTIC) மருந்தாகவும்,புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப்பால்  பயன்படுத்தினர். மேலும் வேம்பு இலையையும் பயன்படுத்தினர் பதிவின் நீளம் கருதி இங்கு கூறவில்லை.

WOUNDED STITCHES...

மீன்றேர் கொட்பிற் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி
நெடுவசி பரந்த உடுவாழ் மார்பின்
அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது

- (பதிற்றுப்பத்து 42: 2முதல்5வரை)

இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல,ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்.அதாவது புண்பட்ட இடத்தில் வெள்ளுசியை கொண்டு தையல் போடும் முறை புலவர் கூறுகிறார்.

இதை செய்து முடித்த பின் இப்போது போடபடும் பஞ்சு கட்டு (band-aid) அப்போதே போட்டுள்ளனர்.

COTTON DRUG PACK...

செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்
- (புறநானூறு-353)

அதாவது, பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரியும் வீரர்கள் வீரத்தை பறை சாற்றுகிறது மேற்கண்ட பாடல்.

அடுத்து நாம் காணபோவது உடலை அறுத்து சிகிச்சை செய்த சான்றுகள்.

BABY CESERIAN...

கொங்கு மண்டல சதகம் என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் மருத்துவச்சி ஒருவர்.

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்
இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்
துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே

- கொங்குமண்டல சதகம்

இப்பாடலில் கூறப்பட்டுள்ள ‘வகிர் துறைவழி’ என்பது வயிற்றை வகிர்ந்து ( கிழித்து) குழந்தையை வெளியில் எடுக்கும் மருத்துவமுறையை குறிக்கிறது. ‘துறை’ என்ற சொல் அக்காலத்தில் அறுவை மருத்துவத்துறை பரவலாக இருந்ததைக் காட்டுகிறது.

அறுவை மருத்துவத்துறை என்ற ஒரு துறை அக்காலத்தில் தோன்றி வளர்ந்து இருந்ததையும், ‘அங்கலை தோன்றி வளர் நேர் நறையூர்’ என்பது அரிய கலையான இம்மருத்துவ முறை, கொங்கு நாட்டின் நறையூரில் வளர்ந்து இருந்தது என்பதையும் குறிக்கிறது.

DEAD BODY RESEARCH...

செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே.

- செகராசசேகரம்

அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால் (1400களில் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னன்)
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி, உறுப்புகளை எடுத்து, அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெளிவாக கூறுகிறது.

இறுதியாக பதிவின் நீளம் கருதி சில இடங்களில் கண்ட செய்திகளை கூறுகிறேன்.

அம்பு சென்று துளைத்த உடலில் அம்பை எடுக்கும்போது அம்பு முனை உள்ளே சிக்கி குச்சி உடைந்துவிடும் அதன் மேல் நெய்தடவி வேறு ஒரு கத்தியையோ, கூர்மையான ஆயுதத்தையோ வைத்து எடுப்பர் என சீவக சிந்தமணி கூறுகிறது.

மேலும் பெரிய புண்கள் ஏற்பட்ட உடலை எலியின் நுண்மையான மயிரினால் நெய்யப்பட்ட ஆடையால் ஆகிய போர்வையை கொண்டு மூடுவர். எலி மயிர்போர்வை மிகுந்த வெப்பத்தை உடையது; குளிரை நீக்கக் கூடியது; அதனுள் காற்றும் புகாது. மென்மை உடையது என்றும் குறிப்பிடப்படுகிறது.

இறந்து போன தசரதனது உடம்பை, கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது ராமாயணம்.

இதற்கு அப்புறம் தான், இதே மாதிரி இயேசுவின் உடம்பை தைல காப்பு கொண்டு வைத்தனர் என்பது நினைவு கூற வேண்டிய ஒன்று.

இங்கு பழந்தமிழர்களின் புலவர் மருத்துவ அறிவியல் மட்டுமே பகிரப்பட்டது இன்னும் சித்தர்கள் மருத்துவ முறை விளக்கினால் பதிவு பெரிதாகும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்...

மோர்ஸ் கோர்டு என்றால் என்ன..?


விவேகம் படதில் அஜித் தனது மனைவி உடன் மோர்ஸ் கோடில் பேசுவதும்,
கிளைமாக்ஸ் இல் அவர் மனைவி கண் அசைவுகள் மூலம் மோர்ஸ் கோட் செய்து வில்லனின் இருப்பிடத்தை ஹீரோவுக்கு காட்டி கொடுப்பதும் பார்த்து இருப்பீர்கள்.

அந்த மோர்ஸ் கோட் என்றால் என்ன அதெப்படி கண் அசைவில் எல்லாம் பேச முடியும் . என்பதை இப்போது பார்க்கலாம்.

(பெண்கள் கண் அசைவில் பேசுவதில் வல்லவர்கள். ஆனால் நாம் பார்க்க இருப்பது அதை பற்றி அல்ல ).

Samual f.b morse என்பவரின் பெயரால் அழைக்க படுவது தான் இந்த மோர்ஸ்.

அவர் தான் தந்தியின் தந்தை அதாவது கண்டு பிடிப்பாளர்.

தந்தியில் டக டக என தட்டுவதை பார்த்து இருப்பீர்கள். அது ஏனோ தானோ என்று தட்ட படுவது அல்ல. அதில் ஒரு ஒழுங்கு உண்டு. அது ஒரு பாஷை... தந்தி பாஷை.

கணிணிக்கென்று ஒரு பாஷை உண்டு அல்லவா 0 மற்றும் 1 என்று..

அதை போல தந்திக்கு ஒரு மொழி உண்டு அது புள்ளி அல்லது கோடு என்ற மொழி.

உதாரணமாக மோர்ஸ் கோட் படி A என்றால் ஒரு புள்ளி ஒரு கோடு...

அப்போ AA என்பதை எப்படி எழுதுவீங்க ? புள்ளி கோடு, புள்ளி கோடு.. சரி தானே..

B என்றால் அதன் பாஷையில் ஒரு கோடு அதை தொடர்ந்து மூணு புள்ளி.

(கோடு .புள்ளி .புள்ளி .புள்ளி)

இப்ப AB என்று எழுத வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்...

( ✴ ______   ______✴ ✴ ✴)இப்படி வரும் சரியா ?


இதில் டிட் டாட் டேஸ் என்பார்கள். டிட் என்றால் கோடு டாட் என்றால் புள்ளி டேஸ் என்பது இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி.

ஒரு கோடு என்பது 3 புள்ளிகள் சேர்ந்த அளவில் இருக்கும். ஒவ்வொரு வார்த்தையும் ஒரு புள்ளி அளவுள்ள டேஸ் அதாவது இடைவெளியால் பிரிக்க பட்டு இருக்கும். மற்றும் இரண்டு வார்த்தைகள் 7 புள்ளி அளவு கொண்ட இடைவெளியால் பிரிக்க பட்டு இருக்கும்.

இந்த புள்ளி கோடுகள் வெறும் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அல்ல நம்பர்களையும் குறிக்க பயன்படுகிறது.

மோர்ஸில் உள்ள மிக சிறிய எழுத்து என்பது E . (வெறும் ஒரு புள்ளி தான் மோர்ஸ் பாஷையில் E).

சரி எதற்கு இந்த புள்ளி கோடு... இதனால் என்ன வசதி ?

இப்போ ஒரு அறையில் நீங்கள் அடைக்க பட்டு இருக்கிறீர்கள் அடுத்த அறைக்கு உங்களால தொடர்பு கொள்ள முடியாது ஆனால் சுவரில் தட்டினால் அல்லது கீறினால் அடுத்த பக்கம் கேட்கும் என்றால் . சுவருக்கு இருபுறமும் உள்ளவர்கள் மோர்ஸ் கோட் தெரிந்தவர்கள் எனில் சுவரில் தட்டுவதை புள்ளி எனவும் கீறுவதை கோடு எனவும் கொண்டு தகவலை பரிமாற முடியும்.

(கோட் பற்றி தெரியாதவர்களுக்கு சுவரில் மாறி மாறி ஏதோ தட்டுவதும் கீறுவதும் போல தெரியும் ).


சரி இப்போ இதை கவனியுங்கள் .. நீங்கள் உயரமான ஒரு கட்டிடத்தில் பெரும் வெள்ளம் அல்லது புயலில் சிக்கி இருக்கிறீர்கள். தூரத்தில் மீட்பு படை கண்ணுக்கு தெரிகிறது ஆனால் கூப்பிடும் எல்லை தாண்டி இருக்கிறார்கள். சைகை செய்யலாம் என்றால் நீங்கள் சிக்கி இருப்பது கும் இருட்டில். என்ன செய்வீர்கள் ?

இப்போது உங்களிடம் டார்ச் இருந்தால் போதும் நீங்கள் தகவலை பரிமாறலாம்.

அதாவது டார்ச்சை அணைத்து அணைத்து போட்டால் அது புள்ளி...

சில வினாடி நீட்டாக எரிய விட்டால் அது
கோடு என்று கணக்கு வைத்து கொண்டு மோர்ஸ் கோடு மூலம் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கலாம் .
உலகம் எங்கும் "உயிர் ஆபத்தில் உள்ளது "என்பதை குறிக்க பயன் படுத்த படும் வார்த்தை... "S. O. S ."
இதன் முழு அர்த்தம் "SAVE OUR SOLE "..

நம்ம மோர்ஸ் கோடில் sos என்பதை எப்படி தெரிவிக்க வேண்டும் என்று முயற்சி செய்து பாரதால் "புள்ளி புள்ளி புள்ளி.. கோடு கோடு கோடு புள்ளி புள்ளி புள்ளி " என்று வரும்.
(✴✴✴ ____   ____   _____ ✴✴✴ ).

டார்ச்சை வைத்து இதை சொல்ல முயன்றால் மூன்று முறை குறுகிய இடைவெளியிலும் அதை தொடர்ந்து கொஞ்சம் அதிகம் இடைவெளியில் மூன்று முறையும் டார்ச்சை அணைத்து அணைத்து போட வேண்டும்.

உங்கள் கையில் ஏதாவது இசை இருந்தால்.. டிக் டிக் டிக்... டீக் டீக் டீக்... டிக் டிக் டிக் என்று ஒலிக்க வேண்டும்.

விமாணிகளுக்கு... ராணுவத்தில்... மீட்பு படையில்.... பல உயிர் ஆபத்தில்... அவசரத்தில் என்று பல இடங்களில் மோர்ஸ் பயன் படுகிறது.

விவேகம் படத்தில் காஜல் செய்தது என்ன என்று இப்போ புரிந்திருக்கும்.
அதாவது கண்ணை சிமிட்டினால் புள்ளி தொடர்ந்து மூடினால் கோடு.

இனி எங்காவது பெண்கள் கண்களை சிமிட்டி சிக்னல் கொடுத்தால் புரிந்து கொள்வீர்கள் தானே....

இன்று முதல் (வெள்ளி) ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் - தமிழக அரசு உத்தரவு...


இதுவரை ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டுகள் பெற்றவர்களுக்கு நாளை முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது...

மீன்கள் அதிகளவு நீரை குடிப்பதால் வைகை ஆத்துல தண்ணீர் குறைந்துள்ளது - அதிமுக விஞ்ஞானி தெர்மாகோல் செல்லூர் ராஜு...


பாஜக அமித்ஷா கலாட்டா...


பாஜக மோடியின் பண மதிப்பிழப்பு சாதனை...


காவல்துறைக்கு கொண்டாட்டம் தான்...


பாஜக மோடியால் நூறு பேர் செத்தது தான் மிச்சம்...


பிரிகேடியர் தமிழ்செல்வனின் தூபிக்கு பிரான்சில் கெளரவம்...



பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவு சின்னத்திற்கு கட்சி சார்பின்றி பிரான்சு நாட்டு La Courneuve மாநகர் ஆட்சி அதிபர், La Courneuve நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச சபை தலைவர், மாநகரசபை உறுப்பினர்கள் என்று பலர் தமிழ்செல்வன் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தியதோடு, இதுவரை காலமும் சிறிலங்கா அரசு கொடுத்த அழுத்தங்கள், பொய் பிரசாரங்களையும் மீறி  அந்த நினைவு சின்னம் தமிழ்ச்செல்வனின் நிரந்தர சிரித்த முகத்துடன் கம்பீரமாக நிற்கிறது...

தமிழக வரலாற்றில் துரோகிகள்... விசிக திருமா வும் தமிழின வியாபாரமும்...


தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்து கொண்டிருக்கிறது..

அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.

ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல். திருமாவளவன் என்பவரே.

ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவர்களையே சாரும்.

இவர் செய்ததில் மிகக்கொடுமையான காரியம் எதுவென்றால் கூட்டணிக் கட்சித் தலைவர் மு.கருணாநிதிக்கு நன்றிக் கடனாக தோழர் முத்துக்குமரன் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை அடக்கி ஒடுக்கியதே.

கடந்த சனவரி 29 வியாழன் அன்று முத்துக்குமரன் தீக்கு தன்னை இரையாக்கி தமிழக மாணவர்களிடம் எழுச்சியை உண்டாக்கிய தொடக்கத்திலிருந்து தொல். திருமாவளவனின் சகுனித்தனம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

இம்மாணவர் எழுச்சியை வளரவிட்டால் ஆளும் கட்சியான திமுக அரசு கலைக்கப்படும். இதனால் தனக்கு நட்டம் என்று தொல்.திருமாவளவனின் மூளை வேலை செய்து விட்டது. ஏனென்றால மாணவர்கள் எழுச்சி என்பது எப்படிப்பட்டது என்பது அனைத்து மக்களும் அறிந்ததே.

முத்துக்குமரனின் கோரிக்கையான “எனது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்று சொன்னதற்கிணங்க மாணவர்கள் அவரின் உடலை மருத்துவமனைக்கு அருகிலேயே பெரிய மைதானம் எதிலாவது அனைத்து மக்களும் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

ஆனால் திமுக வின் கூட்டணி கட்சியினரும் ஆளும் அரசின் காவல்படையுடன் இணைந்து முத்துக்குமரனின் வீடு உள்ள கொளத்தூருக்குதான் கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவர்களை மிரட்டி கொண்டு சென்றனர்.

சென்னையிலிருந்து முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவை நல்லூருக்கு உடலை கொண்டு சென்று தமிழகம் முழுக்க எழுச்சியை ஏற்படுத்தலாம் என்று மாணவர்கள் முடிவு செய்தனர். ஆனால் “உடல் அழுகிவிடும்” என்றுக்கூறி ஐஸ் பாக்ஸ் இருக்கும் இக்காலத்தில் திமுக அரசின் கூட்டணியிலுள்ள தலைவர் தடுத்துவிட்டார்.

சரி அடக்கத்தினையாவது தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வரும் வகையில் அடக்கத்தினை ஞாயிறு (பெப்1) அன்று வைக்கலாம் என்று மாணவர்கள் கூறினார்கள். ஆனால் திமுக அடிவருடி கட்சிகளின் முயற்சியால் சனிக்கிழமை ( சனவரி 31) அன்று வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.

சனவரி 31 அன்று கொளத்தூரிலிருந்து ஈகி முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. போகும் வழியில் பெரம்பலூரிலிருந்து புரசைவாக்கம் வழியாக சென்றால் இன்னும் அதிகமாக மக்களிடம் எழுச்சி உண்டாகும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று மாணவர்கள் வற்புறுத்தி மறியல் செய்தனர்.

அப்பொழுது வாகனம் ஒன்றில் நின்றுகொண்டு வந்த தொல். திருமாவளவனின் வழிகாட்டலில் திருமாவளவனின் உடன் இருக்கும் வன்னியரசு என்பவர் சில ஆட்களுடன் ஓடி வந்து மாணவர்களிடம் புரசைவாக்கம் வழி செல்ல இயலாது என்று கூறினார். மாணவர்களும் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்தனர்.

இதனால் வெகுண்ட திருமாவளவனின் கையாட்கள் அண்ணன் திருமாவின் பேச்சை கேட்க மாட்டீர்களா என்று முதன்முறையாக இரு மாணவர்களை அடித்து மிரட்டினர். அப்பொழுதுதான் திமுக அரசின் கையாளாக மாணவர் எழுச்சியை ஒடுக்க காக்கிச்சட்டை போடாத அரசின் கையாளாக திருமாவளவன் வந்துள்ளார் என்பது மாணவர்களுக்கு தெரியவந்தது.

அந்த மாணவர்களுக்கு அமைப்போ, தலைமையோ ஏதும் கிடையாது. இதனால் தங்களால் இவர்களை எதிர்க்க இயலாது என்று பின்வாங்கி விட்டனர்.

பின்னர் திமுக அரசின் எண்ணம் போல் திருமாவளவன் வழிநடத்திச்சென்றார்.

பின்னர் மயானத்தினை நெருங்கும் வேளையில் இரவு 9.30 மணியளவில் திமுக அரசு முத்துக்குமரனின் தியாகத்தினால் ஏற்பட்ட ஈழ ஆதரவு எழுச்சியை கண்டு பயந்து அதை ஒடுக்க அடுத்த திட்டமாக இரவோடு இரவாக கல்லூரிகளை காலவரையற்று மூட உத்தரவிட்டது.

திமுக அரசின் இவ் அறிக்கையினால் வெகுண்டெழுந்த மாணவர்கள் ஈகி முத்துக்குமரன் கூறியபடி “எமது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்பதற்கிணங்க “திமுக அரசின் உத்தரவினை திரும்பப் பெறாவிடில் முத்துக்குமரனின் சடலத்தினை எரிக்க விடமாட்டோம்” என்று சாலையின் நடுவில் வைத்து மறுபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து துணைநின்றனர்.


அப்பொழுது மறுபடியும் திமுக அரசின் கையாளான திருமாவளவனின் கையாள் வன்னியரசு மாணவர்களிடம் வந்து, இந்த உடலை துருப்பு சீட்டாக வைத்து போராடுவது முத்துக்குமாரை அவமானப் படுத்துவதாகும் என்று கூறியுள்ளார்.

அபொழுதுதான் மாணவர்களுக்கு புரிந்தது முத்துக்குமரனின் கொள்கை என்ன என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் விடுதலைச் சிறுத்தைகள் என்ற கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசுவுக்கு சுத்தமாக தெரியாது என்பது. அப்பொழுது, திருமாவளவனின் கையாட்கள் இரண்டாவது முறையாக மிகவும் மோசமாக மாணவர்களை தாக்கினர். ஊர்தியின் மேல் அமர்ந்து இருந்த செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காட்டு மிராண்டித்தனமாக அடித்து கீழே தள்ளிவிட்டு ஊர்தியை கைப்பற்றி சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்பொழுது வன்னியரசு மாணவர்களை திருமா அண்ணாவின் சொல்லை கேட்காத உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி உடலை எரித்துவிட்டு வந்து உங்களை கவனித்துக்கொள்கிறேன் என்று மிரட்டி விட்டுச்சென்றார். இவைகள் எல்லாம் தொல்.திருமாவளவனின் பார்வையில் தான் நடைபெற்றது.

உண்மையான உணர்வோடு முத்துக்குமரன் தீக்குளித்ததிலிருந்து இறுதி வரை வந்த அம்மாணவர்கள் இவர்களின் செயல்பாடுகளால் தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தங்கள் இரு சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருந்த கொளத்தூருக்கு வேக வேகமாக ஓடிவந்தோம்.

இதைப்பற்றிய செய்தியினை தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் இந்திய எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழ் மட்டும் வெளியிட்டிருந்தது. செய்தியினை முழுவதும் போடாமல் சிறிதளவு வெளியிட்டிருந்தது. அப்படி முழுவதும் போட்டிருந்தால் அப்பத்திரிக்கை அலுவலகத்தினை குண்டர்கள் எரித்திருப்பார்கள்.

அப்பத்திரிக்கை செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது மட்டும் திருமாவளவன் என்ற நபரும், விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியும் இல்லாமலிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் மாணவர் பேரெழுச்சி 1983 காலகட்டத்தில் ஏற்பட்டதைப்போல் உண்டாகியிருக்கும் திமுக அரசு கலைந்திருக்கும் அல்லது தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். ஈழமக்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறி இருக்கும்.

ஈழமக்களைப்பற்றி வாயில் மட்டும் பேசி வரும் இப்படிப்பட்ட பச்சைத் துரோகி தொல்.திருமாவளவனை தமிழக மக்களும், தமிழீழ மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்...

திருக்குறளும் எண் ஏழும்…


திருவள்ளுவர் திருக்குறளில் சிறந்தக் கருத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சிறந்தக் கருத்துக்களுடன் ஒரு சிறந்தக் கட்டமைப்பையும் திருக்குறளுக்கு விட்டுச் சென்று உள்ளார் அவர்.

அந்தக் கட்டமைப்புக்கு அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் எண் 7 ஆகும்.

அது என்ன கட்டமைப்பு? அது என்ன எண் 7 காண்போம்…

திருக்குறள் வெண்பா வகையைச் சார்ந்த ஒரு நூலாகும். அதுவும் குறிப்பாக குறள் வெண்பாக்களால் ஆன குறள்களைக் கொண்டு விளங்கும் ஒரு நூல். ‘குறள் வெண்பா’ என்பது இரு அடிகளையேக் கொண்ட ஒரு வகை வெண்பாவாகும்.

திருவள்ளுவர் அத்தகைய குறள் வெண்பாக்களைக் கொண்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழுச் சீர்கள் வந்து பொருள் தரும் வண்ணம் அமைத்தது தான் திருக்குறள் என்னும் நூலாகும்.

அதாவது ஒவ்வொருக் குரலிலும் அவர் ஏழுச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். அந்த ஏழுச் சொற்களிலேயே அவர் சொல்ல வந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியும் உள்ளார்.

சரி இப்பொழுது திருக்குறளின் அமைப்பினைப் பார்ப்போம்.

திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது. இப்பொழுது அப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம்.

முதலில் அறத்துப்பால்…

இது இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல் ஆகியப் பிரிவுகளைக் கொண்டு விளங்குகின்றது.

இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள்.

துறவறவியலில் மொத்தம் 13 அதிகாரங்கள்.

ஊழியலில் மொத்தம் ஒரு அதிகாரம்.

எனவே மொத்தமாக அறத்துப்பாலில் இருக்கும் அதிகாரங்களின் எண்ணிக்கை 34. அதன் கூட்டுத் தொகையாக வருவது 7.

20+13+1 = 34 = 3+4 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 340 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

சரி இப்பொழுது பொருட்பாலினைப் பார்ப்போம். பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையாக வருவதும் 7 தான்.

7+0 = 7

மேலும் அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 700 குறள்கள் உள்ளன. அதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

இதனைப் போன்றே தான் இன்பத்துப்பாலிலும்…மொத்தம் 25 அதிகாரங்கள். அதிகாரத்துக்கு 10 பாடல்கள் என 250 குறள்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும் 7 தான்.

2+5 = 7

எனவே…அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுப் பால்களில் உள்ள குறள்களின் எண்ணிக்கையும் சரி அவற்றின் அதிகாரங்களின் எண்ணிக்கையும் சரி கூட்டினால் 7 வருவதனைப் போன்றே வள்ளுவர் அமைத்து உள்ளார்.

சரி…இப்பொழுது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களின் அதிகாரங்களையும் கூட்டினால் 129 அதிகாரங்கள் வருகின்றன.

34+70+25 = 129

ஆனால் வள்ளுவர் இந்த அதிகாரங்களுடன் மட்டுமே நிறுத்தி விடவில்லை. பாயிரத்தில் கூடுதலாக 4 அதிகாரங்களையும் தந்துள்ளார்.

எனவே இப்பொழுது மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை,

129+4 = 133.

அதன் கூட்டுத் தொகையும் 7 தான். மேலும் அதிகாரத்திற்கு 10 குறள்கள் என 1330 குறள்கள் 133 அதிகாரங்களில் இருக்கின்றன. அவைகளின் கூட்டுத் தொகையும் 7 தான்.

இது தான் வள்ளுவர் திருக்குறளை அமைத்து இருக்கும் கட்டுமான முறையாகும்.

ஒரு குறளுக்கு 7 சீர்கள்.

மொத்தம் 133 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

மொத்தம் 1330 குறள்கள் (கூட்டுத் தொகை 7)

அறத்துப்பால் – 34 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

பொருட்பால் – 70 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இன்பத்துப்பால் – 25 அதிகாரங்கள் (கூட்டுத் தொகை 7)

இவ்வாறு 7 என்ற எண்ணினை வைத்து வள்ளுவர் தனது நூலினை பூட்டி உள்ளார். இதன் முக்கியத்துவம் என்னவென்றால் திருக்குறள் நூலில் யாராலும் எளிதில் இடைச்செருகல் செய்ய இயலாது என்பதே.

உதாரணத்திற்கு...யாராவது திருக்குறளின் இடையில் குறள்களை சேர்க்க வேண்டும் என்று முயல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

1) அவர்களால் பத்திற்கு குறைவான குறள்களை இடைச்செருகலாக சேர்க்க முடியாது. ஏனெனில் அதிகாரத்திற்கு பத்து குறள்கள் என்றே வள்ளுவர் அமைத்து உள்ளார். எனவே இடைச் செருகல் செய்ய முயல்வோர் பத்துப் பத்துக் குறள்களாக தான் சேர்க்க முடியும்.

2) அவ்வாறே அவர்கள் பத்து பத்துக் குறள்களாக சேர்க்க எண்ணினாலும் கூட்டுத் தொகையான எண் 7 ஐயும் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது 50 குறள்களை சேர்க்க முயல்கின்றனர் என்றால் மொத்த குறள்களின் எண்ணிக்கை 1380 ஆகி விடும். இதன் கூட்டுத் தொகை எண் ஏழாக வாராது. எனவே இடைச் செருகல்கள் இருக்கின்றன என்பது புலனாகி விடும்.

எனவே கூட்டுத் தொகையை மீறி திருக்குறளில் இடைச்செருகல் செய்ய வேண்டும் என்றால் அவர் குறைந்தது 90 குரல்களை தயார் செய்ய வேண்டும். அப்படி என்றால் தான் 1330+90 = 1420 குறள்கள் = 1+4+2+0 = 7 என்று கூட்டுத் தொகை 7 ஆக வரும்.

3) மேலும் அவர் அப்படியே 90 குறள்களைத் தயார் செய்தாலும், அதனை எந்த அதிகாரங்களுடன் இணைப்பது என்ற கணக்கினையும் காண வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அதிகாரமும் ஒவ்வொரு பாலின் கீழ் வகுக்கப்பட்டு உள்ளது. அப்பால்களும் கூட்டுத் தொகை 7 என்ற எண்ணினால் கட்டப்பட்டு உள்ளன.

எனவே இத் தடைகள் அனைத்தையும் கவனித்தப் பின்னரே ஒருவரால் திருக்குரளினுள் இடைச் செருகல் செய்ய இயலும். ஆனால் பொருள் வித்தியாசம் வாராது மாற்றுக் கருத்துக்களை திருக்குறளில் இடைச் செருகலாக இத்தனை தடைகளை மீறி சேர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்று. அவ்வாறு செய்து இருந்தால் எளிதில் புலப்பட்டும் விடும்.

எனவே வள்ளுவரின் சாமர்த்தியம் அவரின் கருத்துக்களில் மட்டும் அல்ல அவர் அவரது நூலினை அமைத்த முறையிலும் உள்ளது என்பதனை நாம் அறிகின்றோம்...

விடுதலை புலிகள் குழந்தைப் போராளிகளை வைத்திருப்பதாக.. ஒப்பாரி வைத்து திரிந்த மனித உரிமை அமைப்புகள்...


இப்போது ஏன் நவத்துவாரங்களையும் பொத்திக்கொண்டு இருக்கின்றன?

அவர்களுடைய கண்களுக்கு பர்மாவில் ஆயுதம் ஏந்திய பௌத்த சிறுவர்கள் ஏன் தெரியவில்லை?


அவர்களுடைய கண்களுக்கு இந்தியாவில் RSSல் பயிற்சி பெறும் சிறுவர்களை ஏன் தெரிவதில்லை?

அவர்கள் ஏன் பர்மிய அரசையும் இந்திய அரசையும் இதற்காக கண்டிக்கவில்லை?

புலிகளுக்கு ஒரு நியாயம்..

மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம்..

இதுதானா மனித உரிமை அமைப்புகளின் நியாயம்?

இனப்படுகொலையாளன் இலங்கை இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தப்பியோட்டம்...


இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில்  பிரேசிலில் வழக்குத்தாக்கல் செயப்பட்டதால்..

தற்போது பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக இருக்கும் முன்நாள் இலங்கை இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய தப்பியோட்டம்...

பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - வானூர்தி மற்றும் சமிக்ஞை கோபுரம் (AIRCRAFT AND SIGNAL TOWER) நுட்பத்தை காண்போம்...


அதற்கு முன் என் சில முடிவுரைகளை தொடக்கத்திலேயே கூறி விடுகிறேன்..

தமிழராக பிறந்த நாம் இன்று வேற்று மொழியினரால் ஆளபடுகிறோம். தமிழனுடைய தொன்மை, பண்பாடு, பூர்வ கலைகள், விஞ்ஞான பார்வை என அனைத்தையும் மறைத்து அதற்கான சான்றுகளை அழித்து அயல்நாட்டின் பண்பாடுகளை சிலர் புகுத்தி வருகின்றனர்.

இதற்கு காரணம் யாருடைய பண்பாடு பின்பற்றபடுகிறதோ அவர்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். அவர்கள் ஆட்சியின் கீழ் மக்கள் வளர ஏதுவாக இருக்கும். ஆனால் தமிழன் பண்பாடு, நாகரீகம் என்பது அழிக்க ஏதுவாக உள்ள ஓலை சுவடிகளிலோ, செப்பேடுகளிலோ, கல்வெட்டிலோ மட்டும் இருப்பது அல்ல எல்லாவற்றையும் தாண்டி அவனுடைய மரபணுவிலே காலம் காலமாக பிரதி எடுக்கப்பட்டு வருகிறது ஆக அதை யாராலும் அழிக்க முடியாது என்பதை கூறிகொள்கிறேன் அது யாருடைய சிந்தனை மூலமாக வெளிவந்து கொண்டே இருக்கும் இது உண்மை.

இதையும் புரிந்து கொண்ட அயல்நாட்டினர் அம்மரபணுகளை சிதைவை ஏற்படுத்தவே மரபணு மாற்றிய உணவுகளை மறைமுகமாக கொடுத்து வருகிறான். ஆனால் தமிழன் தன் தூக்க நிலையிலும் மரபணுவை காப்பற்றும் வழிமுறை அவனுக்கு அந்த இறைநிலை வழங்கியுள்ளது. ஆக அவன் இத்தீய சக்திக்கு எதிராக எப்போதும் இருப்பான் என முடித்து என்னுடைய கட்டுரைக்குள் உங்களை அழைத்து செல்கிறேன் வாருங்கள் தோழர்களே.

AIRCRAFT AND AUTOMATIC AIRCRAFT...

அக்காலத்திலே வானத்தில் மிதந்து செல்லும் ஊர்திகளை மிகபெரிய மன்னர்கள் பயன்படுத்தி உள்ளனர். அதற்கு நிறைய ஆதாரம் இலக்கியங்களில் உள்ளது.

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென்

- (சிலப்பதிகாரம் மதுரைகாண்டம் கட்டுரை காதையில் எண்:196 - 200 ).

சிலப்பதிகாரத்தில் கோவலனோடு கண்ணகியை மேல் உலகம் என கூறும் இடத்திற்க்கு கூட்டி செல்ல அமரர் அரசன் இந்திரன் வானில் உலவும் தேரோடு வந்து இருவரையும் கூட்டி சென்றான் என கூறுகிறது.

ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்.

- (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:233).

பண்தவழ் விரலில் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய
புண்தவழ் வேல்கண் பாவை பொறி இடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள் வீழ்ந்து கால் குவித் திருக்கும் அன்றே
                     
- (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:239).

துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்.
                       
- (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:273).

எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்
வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள்
                       
- (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:299).

மேற்கண்ட பாடலில் கதையின் சுருக்கம் கூறுகிறேன். எதிரியிடம் இருந்து தப்பி செல்ல விரைவாக வானவூர்தி செய் என ஆணையிடுகிறான் அறிவு என்னும் அமைச்சர்.

இவ்வாணை அவனுடைய மன்னர் சச்சந்தன் ஏற்று ஒரு மயிற்பொறி செய்யுமாறு அதற்கான ஆளைப் பணிக்கிறான்.

அவன் உருவாக்கிய மயிற்போன்ற வானூர்தி இயக்கம் எப்படி இருக்கும் என்றால் அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும். அந்த ஊர்தி சிறிதும் துன்பம் தராமல் விரைவாக செல்லும் திறன் படைத்தது. போரின் அவசரத்தில் இருந்து தப்பி விசயை என்கிற மன்னனின் மனைவி தவறான பொத்தானை திருகியதால் அது சில தூரம் சென்று ஒரு சுடுகாட்டில் இறங்குகிறது இங்கிருந்துது சீவக சிந்தாமணி கதை பரபரப்பாக செல்கிறது.


நாம் பதிவுக்கு வருவோம்...

கம்பராமாயனத்தில் வானூர்தி பற்றி குறிப்புகள் காணபடுகின்றன.. அதில் எட்டு பேர் செல்லும் புட்பக விமானம் திருஞானசம்பந்தர் கூறும் மதிப்புமிக்க இராவணரிடம் இருந்ததாகவும் பின் அது இராமனிடம் சென்றதையும் கூறுகிறார் கம்பர். குறிப்புக்கு கம்பராமயணம் காணவும்.தமிழை வாழ்த்தி தமிழனை முழுக்க தவறாக சித்தரித்து விட்டார்.

புறநானூரில் ஒரு பாடல் உள்ளது. வானூர்தியில் யாரும் இல்லாமல் செல்லும் வகையில் அது உருவாக்கபட்டது குறித்து ஒரு அடி உள்ளது.

…..வலவன் ஏவ வானவூர்தி
- (புறநானூறு பாடல் எண்- 27).

வலவன் என்றால் இப்போது கூறும் விமான ஓட்டி (pilot).

இதை ஒரிசா பாலு அய்யா கூறும் போது இந்த அடிக்கு சான்றாக கடல்சார் பயணத்தில் ஆமைகள் மீது மர துண்டுகளை அக்காலங்களில் கட்டி விடுவர் அது மறுகரையான ஈழநாடுவரை எடுத்து செல்கிறது. அங்கு மக்கள் அந்த மரகலங்களை எடுத்து கப்பல் செய்தனர் என கூறுகிறார்.ஆளில்லாமல் பொருளை நாடு விட்டு நாடு அனுப்பியுள்ளோம் அதே போல் ஆளில்லாமல் வானவூர்திகளை அக்காலத்தில் அனுப்பியுள்ளோம் என கூறுகிறார்.

SIGNAL TOWER...

வானவூர்திகள் பற்றி ஆராயும் போது அதற்கு அவர்கள் சிலமரவகைகளை சமிக்ஞை கொடுக்க பயன்படுத்தியுள்ளனர் என கண்டறிந்தேன். ஓர் இடத்தில் இருந்து சென்று இன்னொரு இடத்தில் சேர்ந்தவுடன் மரத்தின் மூலம் தான் வந்து சேர்ந்ததாக தகவல் அனுப்புகிறார்கள்.

மரங்களை சமிக்ஞை கோபுரமாக பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி அதிகம் நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை இருப்பினும் உயர்திரு ஓஷோ அவர்கள் தன்னுடைய HIDDEN MYSTERIES (மறைந்திருக்கும் உண்மைகள்) என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு தருகிறார்.

அதாவது ஒரு கிராமவாசி தன் கிராமத்தை விடுத்து பணி நிமித்தமாக அடுத்த கிராமத்திற்க்கு சென்றவுடன், தன் மனைவியிடம் பேச, அங்குள்ள ஒரு மரவகையை பயன்படுத்தி தன் கிராமத்தில் உள்ள அதே மரவகையின் மூலம் பேசியுள்ளான் என கூறுகிறார். இதை ஆய்வு செய்த ஆய்வாளருக்கு கூட தெரியவில்லலை. ஏன், பேசுகிற அவனுக்கே இதை விவரிக்க முடியவில்லை பின் எப்படி என்றால் பாரம்பரியமாக இதை அவன் செய்கிறான். அதனால் அது முடியும் ஆனால் நம்மால் அதை அறிய முடியாது என கூறுகிறார்.

இது சாத்தியமா என என்னிடம் கேட்டால் நூறு சதவீதம் உண்மை அதற்கு நான் பெரிய புத்தக விளக்கம் தான் கொடுக்க வேண்டும் அது இயல் தமிழ், இசை தமிழோடு தொடர்புள்ள ஒரு விடயம் அது பற்றி இன்னும் ஆழமாக நான் ஆய்வு செய்யவில்லை. செய்தவுடன் இறையருள் மூலம் வெளிவரும்.


இதனுடைய மாறுபட்ட வெளிபாடு தான் SIGNAL TOWERS இதுவும் மரமும் ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கவும்.

காலத்தின் கோலம் மரம் நடாமல் TOWER ஆக நடுகிறோம் இவை புற கருவி இல்லை என்றால் வேலை செய்யாது என்பதை நினைக்க வேண்டும்.

இறுதியாக நான் கூற வருவது தமிழில் ஏராளமான விடயங்கள் உள்ளது. ஆனால், வெளிகொணர ஆட்கள் போதவில்லை. என்னுடைய கட்டுரைகள் உங்களிடம் தூண்டுதல் ஏற்படுத்தி சிந்திக்க வைத்தால் அது தான் என் வெற்றி.

மேலும் உங்கள் மரபணுவில் இவைகள் பதிவு செய்யபட்டுள்ளது அதை நான் ஒரு கருவியாக இருந்து நியாபக படுத்தியுள்ளேன்...