22/05/2018

தூத்துக்குடியில் போராட்டம் செய்த மக்களை கலைக்க துப்பாக்கிசூடு இதுவரை நான்கு பேர் பலி கண்டு கொள்ளாத அரசு...




திருப்பூர் ஸ்லீக் காலனி கடையின் பகல் கொள்ளை...


மிகத்தெளிவான விலை   ரூ 249/- என  செருப்பில் பிரிண்ட்  செய்யப்பட்டிருக்கிறது , ஆனால் பில் போடுவதோ  ரூ 550/- , ஏனென்று கேட்டால் அது சைனா விலை , இந்திய விலை 550/- என்கிறார்கள் மிக கூலாக.

நம்மளை போன்ற முட்டாள்கள் திரும்ப திரும்ப இக்கடைகளுக்கு செல்வதே இவர்கள் நம் தலையில் மிளகாய் அரைப்பதற்கு காரணம்.

வாடிக்கையாளர் சேவையில் இந்தியாவை போல் கேவலம் உலகில் வேறெங்கும் காண முடியாது.
இதுவே அமெரிக்கா போன்ற நாடாக இருந்தால் , கடைக்கு சீல் வைத்திருப்பார்கள் , மிகப்பெரிய நஷ்ட ஈட்டு தொகையும் வழங்க வேண்டியிருக்கும்...

சாகர்மாலா வர்த்தக துறைமுகம்...


ஆவிகள் உலகம்...


ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர்.

இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள் - மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம் - கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

- தொடரும்...

அடுத்தவன் அந்தரங்கத்தை எட்டி பார்க்கிறவனுக்கு மரியாதை அவன் சிறந்த நடிகன் மற்றும் அரசியல்வாதி... இதுதான் இன்றைய சமூகம்..


அதிமுக திமுக இனைந்து மணல் கொள்ளை...


சென்னை நேப்பியர் பாலத்தில் காலை 11மணி அளவில் , ஈபிஎஸ் ஓபிஎஸ் சேர்ந்து பகுதி திமுக பிரமுகர் ஒருவர் உடன் கள்ளக்கூட்டணி அமைத்து கொண்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கூவம் ஏரியில் மணல் கொள்ளை அடிப்பதைக் கண்டித்து கூவம் ஏரி பாதுகாப்பு இயக்கம், தமிழ் நாடு விவசாய இயக்கம், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணி, இந்திய மக்கள் முன்னணி, தமிழ் நாடு நீராதாரங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் உட்பட எட்டு பேர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் அவர்களை காவல்துறை கைது செய்து சென்னை வடக்கு மெரினா காவல் நிலையத்தில் (A1)  வைத்து உள்ளனர்...

இதோ சாலை விபத்து, சாராயம், விதவைகள் எண்ணிக்கையை அடுத்து ஊழலிலும் இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு...


நிபா வைரஸ் பற்றி விழிப்புணர்வு அறிகுறிகள் அதற்கான மருத்துவம் மற்றும் வராமல் பாதுகாப்பு தடுக்கும் முறை...


நிபா வைரஸ்யின் தாயகம் சிங்கப்பூர் மற்றும் மலேஷியா இது விவசாயிகள் வளர்க்கும் பன்றிகளால் 1998.இல் பரவியது..

அடுத்து 2004 பங்களாதேஷ் நாட்டில் பரவியது அதை தொடர்ந்து இந்தியாவில்  பரவியது....

இந்தியாவில் இந்த நோய் அடிக்கடி பரவி வரும் ஆனால் இதற்கு இப்போது வரை மருந்து கண்டுபுடிக்கவில்லை....

பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரஸ், பன்றிகளுக்கும், பன்றிகளின் இருப்பிடத்தை சுத்தம் செய்தபோது மனிதர்களுக்கு பரவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. வவ்வால்களின் உடலை இருப்பிடமாக கொண்டுள்ள நிபா வைரஸ், அதன் சிறுநீர், மலம், உமிழ் நீர் மூலமாக, நாய், பூனை, ஆடு, பன்றி, குதிரை போன்றவற்றிற்கு பரவுகிறது. பின்னர் அந்த வைரஸ், வளர்ப்புப் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது

அறிகுறிகள்..

இதன்அறிகுறிகள் 3-14 நாட்கள் காய்ச்சல் மற்றும் தலைவலி, பின்னர் தொடர்ந்து தூக்கம், மன அழுத்தம் மற்றும் மன குழப்பம் ஆகியவற்றை அளிக்கிறது  24-48 மணி நேரத்திற்குள் கோமாவுக்கு முன்னேறும்..

சில நோயாளிகளுக்கு ஆரம்பகாலத்தில் சுவாச நோய்களும் ஆரம்பிக்கும், மேலும் கடுமையான நரம்பியல் நுரையீரல் பாதிக்கும் அறிகுறிகளும் காணப்படும்.

தடுக்கும் முறை...

இது பன்றிகள் மற்றும் வௌவால்கள் வளர்ப்பு மிருகங்கள் வழியாக இந்த வைரஸ் பரவுகிறது. அதனால் அந்த கறிவகைகள் சாப்பிட வேண்டாம் , மேற் சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்..

இந்த நோய் பாதிக்கபட்டவர் உபயோகித்த பொருட்களை பயன்படுத்த கூடாது அவர்களுக்கு தனி பொருட்கள் ஒதுக்க வேண்டும்.

மருத்துவம்...

சுடு தண்ணிர் குடிக்கவும் மற்றும் வேப்பிலை கசாயம் அடிக்கடி குடித்து வரவேண்டும். முடிந்த அளவு பிராய்லர் கோழி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கடையில் வாங்கும் உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்...

பாஜக மோடி மீண்டும் ஐஏஎஸ் அடிமைகளை உருவாக்க திட்டம்...


மனித மூளையை பாதுகாப்பது எப்படி....


100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா?

ஆம், பத்தாயிரம் கோடி.. இவ்வளவு கலங்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு கலங்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், கலங்களைக் கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாகச் சாப்பிடாமல், சரியாகத் தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல்.

இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் இயற்கைக்கு மாறான ஆழ்ந்த உறக்க நிலை (coma) நிலைக்குச் செல்வதற்கும் இது தான் காரணம்.

கொல்லாதீர்கள்..

ஆம், உங்கள் மூளையில் உள்ள கலங்களைக் கொல்லாதீர்கள். என்னது, நமக்கு நாமே மூளை கலங்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலைமுறையினரிடம் காணப்படுகிறது.

எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் "சமநிலையாக" ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், "பதற்றம்" என்றே சொல்லிக் கொண்டிருப்பர். சரியாகத் தூங்கமாட்டார்கள்; சாப்பிட மாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை கலங்களை "கொல்"கின்றனர். அதாவது, கலங்கள் செயலிழந்துபோகின்றன.

தூக்கம் அவசியம்..

மூளை கலங்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேரத் தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

மன அழுத்தம் இருக்ககூடாது..

தூக்கம் வராமல் இருக்கக் காரணம், பலருக்கும் உள்ள "பதற்றம்" தான். மன அழுத்தம் பல வகையில் இவர்களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக்கொண்டு, தேவையில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது."பதற்றம்" பேர்வழிகளுக்கு, கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை கலங்களை குறைக்கும் வேலையை செய்கிறது. அதனால், "பதற்றம்" என்று இனி சொல்லாதீர்கள்; மனதை சமப்படுத்துங்கள்.

மதுவா? போ, போ..

மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதைத் தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களுக்குப் பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. மது செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை கலங்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

எக்சோடாக்சின்..

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கொழுப்புச் சத்துள்ள "ஜங்க் புட்" வகை உணவுகளில் "எக்சோடாக்சின்" என்ற ரசாயன சத்து உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு "ஜங்க் புட்" தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை கலங்கள் அதிகமாக குறைவதே.

மலிவான பான உருப்படிகள்..

அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சில்லுகள் (Chips) போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதைத் தவிர்ப்பது நல்லது; ருசிக்குச் சாப்பிடும் போது, சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.

தண்ணீர் குடியுங்கள்..

தண்ணீர் தாராளமாகக் குடியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.

உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்குக் காரணம் மூளை தான்; மூளை கலங்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக்கூடாது.

தரை சுத்தமாக…

இப்போதெல்லாம், வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன. எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை “திவலைகள்’(spray) செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை கலங்கள் குறைய வாய்ப்பு அதிகம்.

இது போலத்தான் வர்ணங்கள் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

காய்கறி, பழங்கள்..

இந்த மூளை கலங்கள் பாதிப்பை தவிர்க்க, எளிமையான வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; மருத்துவரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.

பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்...

வௌவால் தோட்டம் அமைத்து பராமரித்வர்களடா நாங்கள்...


ஏதோ புதிய வகை நோயை பரப்பி பணம் பார்க்கும் எச்சை மருத்துவ கார்ப்பரேட் அரசியலை உவன்கள் ஒருபோதும் அனுமதியோம்...

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு முறை மத்திய அரசு மாற்றம் : ஏழைகளின் கனவிற்கு பேராபத்து?


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள முறைப்படி, சிவில் சர்வீஸ் பணியின் கீழ்வரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 மத்திய அரசு பணிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுதோறும் தேர்வு நடத்துகிறது.

அதன்படி தேர்வாளர்களுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கியத் தேர்வு நடத்தப்படும். இதைத்தொடர்ந்து தேர்வில் தகுதிபெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, இரு தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆனால் தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய முறைப்படி, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரிக்கு செல்ல வேண்டும். அங்கு அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.

அந்த பயிற்சியில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், இதற்கு முன்னர் அவர்கள் பெற்ற முக்கிய மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த முறையால் கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவர்கள் கடும் பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் கூறிய கருத்துக்கள்

அவர் கூறும் போது, “ஆண்டுதோறும் அடிப்படை பயிற்சியின் துவக்கத்திற்கு முன்பே, சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்ரும் பணியிட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பிரதமர் அலுவலகமானது நடப்பாண்டு முதலே, பின்வரும் ஆலோசனைகள் மற்றும் அமல்பாட்டிற்காக, அவற்றின் மீதான அத்தியாவசியமான நடவடிக்கைகளை கருத்தில் கொள்ள
விருப்பம் தெரிவித்துள்ளது.

சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயிற்சிப் பணி அதிகாரிகளுக்கு, அடிப்படை பயிற்சிக்கு பின்பே பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாமா? என்பதை ஆராய்தல்.
அடிப்படை பயிற்சியில், பயிற்சிப்பணி அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு முறையான முக்கியத்துவத்தை வழங்குவதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல்.
சிவில் சர்விஸ் தேர்வு மற்றும் அடிப்படை பயிற்சி ஆகியவற்றில் பெறும் கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், அனைத்திந்திய குடிமைப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்வதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல்.
ஏற்படும் விளைவுகள் :

கிராமப்புற மாணவர்கள் விரும்பும் குடிமைப்பணியை பெற இயலாது.
தாய்மொழி வழிக்கல்வியில் மாணவர்கள் அடிப்படை பயிற்சியின் போது, மற்ற பாவனை மட்டுமே செய்யும் மாணவர்கள் மத்தியில் திறம்பட செயல்பட்டாலும், திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறி. அப்படியே வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும், அது தாய்மொழி வழிக்கல்வி மாணவர்களுக்கு அவர்களைப்போல் ஆங்கிலப்புலமையை வெளிப்படுத்த முடியாமல் தலைகுனிவை ஏற்படுத்தும்.
ஆங்கிலத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ படித்த மாணவர்கள் பாவனை மூலம் தாங்கள் செய்யும் செயல்கள்யாவும் சிறப்பானவை என்று அனைத்து ஆசிரியர்களையும் நம்பவைக்கும் திறமை உடையவர்கள்.
அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் வாரிசுகள், உறவினர்கள் தாங்கள் விரும்பும் சேவையையும் (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்), விரும்பும் மாநிலத்தையும் தேர்வு செய்துகொள்ள முடியும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள், கல்லூரி காலங்களில் பேராசியர்களுக்கு பயந்து இருந்ததுபோல் இருக்க நேரிடும்.
எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ (LBSNAA)-வில் உள்ள பேராசிரியர்கள் இதனை பயன்படுத்தி தேர்ச்சி பெற்ற மாணவர்களை பயமுறுத்த நேரிடும்.

கையூட்டு பெரிய அளவில் நடைபெறும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்தவர்களுக்கு உயரிய பதவியான ஐ.ஏ.எஸ் கிடைப்பது கடினம்.

மேல் வகுப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஐஏஎஸ் பணி கிடைக்கும். (உதாரணம் : ஐஐடி-ல் எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்களின் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை)
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மதிப்பு குறைந்து, எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ-யின் மதிப்பு அதிகரித்து விடும்.

மத்திய தேர்வாணையத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள், எல்.பீ.எஸ்.என்.ஏ.ஏ-வில் பெறும் மதிப்பெண் மூலம் உயரிய பதவியான ஐ.ஏ.எஸ் பதிவியை பெற இயலும்.

மத்திய அரசால் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஒரு தலைபட்சமானது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்காது...

யூனியன் ஆப் சவுத் இந்தியா...


ஆற்றுவழித்தடம் மணல் கொள்ளையால் அழிந்தது...


நமது அத்தியாவசிய பொருள் தயாரிக்க தொழிற்சாலைகளால் நீர்வளம் தொலைந்தது! நிலத்தடிநீர் மாசானது..

மழை மரம் நீர் மணல் இவை அனைத்திற்கும் ஆதாரமான நமது அன்னை முன்னோர்கள் சாமியாக வணங்கிய மேற்கு தொடர்ச்சி மலை அழிய குமரி மக்கள் விட்டுகொடுத்து வருகின்றனர்..

இதற்கெல்லாம் ஆந்திர பெரு முதலாளிகளே காரணம்...

இதுதான் சாகர்மாலா திட்டத்தின் கன்னியாகுமரி துறைமுகம் அமைக்க அரசு தேர்ந்தெடுத்த பகுதி கோவளம்-முகிலன் குடியிருப்பு - கீழமணக்குடி இடைப்பட்ட பகுதி...


சாதி வெறியர், கன்னட பலிஜா வெங்காய ராமசாமியின் தமிழின விரோத செயல்களின் தொகுப்புகள்...


இவரா தந்தை பெரியார் ?

1. கள்ளுண்ணாமை என்று காந்தியார் சொன்ன போது, ஐனூரு தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்து சமூக சீர் திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தின் இயற்க்கை வளங்களை அழித்த வந்தேறி திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி)…

2. 72 அகவையில் இருபத்திரண்டு வயதுடைய பெண்ணைத் கட்டாய பால்ய விவாகம் செய்து பெண்ணீயம் பேசிய பித்தன்….

3. பெண், விடுதலை பெற வேண்டுமானால் கருப்பையை கழட்டி எறிந்துவிட்டு வந்தால் தான் முடியும் என்று, இயற்கை குறித்த எந்த சிந்தனையும் இல்லாத தற்குறி….

4. மேற்படியாரை இரவலாகத் தந்தை என்று கூறுபவர்கள் தங்களை ஈன்றெடுத்த தாய்க்கு களங்கம் விளைவிக்கும் அற்பர்கள்...

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் கிராமத்தில் அந்நிய குளிர்பானங்களுக்கு தடை செய்திருக்கிறார்கள்....


திமுக கருணாநிதி யும் தெலுங்கர்... இராஜபச்சே வும் ஒரு தெலுங்கர்...


ஆகையால் தான் தமிழர்களை இனப் படுகொலை செய்யும் போது இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் நாடகம் போட்டு போர் முடிந்து விட்டது என்று பொய் சொல்லி தமிழக தமிழர்களை திசைச் திருப்பினான்...

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்).....

தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது.

இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர்.

இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்று கொண்டவர்களைப் போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக் கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான்.

இலங்கையில் கோவிக்கம்மா, தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்.

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்)…..

சிந்தித்து செயல் படு...


நண்டிறவிய வெஞ்சோறு...


இந்த வார்த்தை தமிழ் இலக்கியத்தில் சில இடத்தில் உண்டு..

முதலில் எனக்கு இந்த வார்த்தைக்கான அரத்தம் புரியவில்லை பிற்பாடு இது ஒரு உணவு வகை என்று தெரிந்தது..

பழங்கால தமிழர்களின் உணவு வகைகளில் வெறுமனே கேப்பங்கூல்
கஞ்சி என்று வாழவில்லை..

இன்றைய வேலுர் பகுதி மக்கள் அந்தக்காலத்தில் உண்டு வந்த உணவு தான் நான் மேலே சொன்ன
நண்டிறவிய வெஞ்சோறு..

நண்டு வருவலை சோறில் போட்டு வதக்கி கிளறி ஊற வைத்து உணவாக
உட்கொண்டார்களாம்....

அதே போன்று ஒரு வார்த்தை புளிமான் கறி...

இதை பற்றிய விளக்கம் தேடும் போது
புளிசோறு தொட்டுக்க மான் கறி என்று தெரிகிறது..

சும்மா கம்பு கஞ்சி கேப்பங்கலி என்று வாழவில்லை.. அழகாக தேர்தெடுத்தும் உண்டுள்ளார்கள்...

ஆசிய கண்டத்திலேய அமேரிக்க டாலருக்கு இணையான பணமதிப்பீட்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ள ஒரே நாடு இந்தியா.. வாழ்க பாஜக மோடி...


வேற்று கிரகவாசிகள் பூமியில் இருப்பது உண்மை தான்...


ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம என்றே பதில் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகள் இந்த உலகத்தில் உள்ளனர் என்று ஆய்வாளர் ஜெய்ம் மவுசன் போட்டோ ஆதாரத்துடன் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1947ம் ஆண்டு மெக்சிகோவின், ரோஸ்வெல் பகுதியில், பறக்கும் தட்டு மோதியதில், விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், ஏலியன் உருவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மெக்சிகோவில், 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அரங்கத்தில், தொலைக்காட்சி வர்ணனையாளர் ஜெய்ம் மவுசன் ஏலியன் புகைப்படங்களை வெளியிட்டு  அதிர்ச்சிப்படுத்தியுள்ளார்.

இவர் பறக்கும் தட்டு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவரும் கூட, என்பதால், இந்த தகவல் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,

1947ம் ஆண்டு விமான விபத்து தொடர்பான புகைப்படங்களில் ஏலியன் இறந்து படுத்து கிடப்பதை போன்ற தோற்றம் உள்ளது. அதை சுமார் ஐந்தாண்டு கால ஆய்வு நடத்தி உறுதி செய்துள்ளோம் என்றார்.

ஆனால், ஏலியன்கள் நடமாட்டம் பற்றி, நாசாவோ அல்லது வேறு எந்த ஆய்வு மையமோ உறுதி செய்யவில்லை.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது.

ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம்.

அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டு பிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை.

அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்து போயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம்.

மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை. இவ்வாறு  கூறியுள்ளார்...

பாஜக வும் ஆஷிபா வழக்கு தில்லு முல்லும்...


அழிந்து கொண்டு இருக்கும் நம் முன்னோர்கள்...


மலைகளில் வேட்டையாடி  மலையடி வாரத்தில் குருத்துக்களை பயிரிட்டு  உண்டு வாழ்ந்த மக்கள் தான் குறிஞ்சி நில மக்கள்.. இவர்கள் தான் குறவர்கள் என்று நாம் இன்று அழைக்கிறோம்..

இவர்களின் பாரம்பரியத்தில் ஒன்று தான் தேன்..

இன்றும் கூட தேன் தேவையெனில் இவர்களால் மட்டுமே சுத்தமான தேனை கண்டு பிடித்து எடுத்து தர முடியும்..

மட்டுமின்றி நீண்ட கம்புகளுடன் எவ்வித ஆயுதம் இன்றி கொக்கு மடையான் கீரிப்பிள்ளை போன்ற விலங்கினங்களை இலகுவாக வேட்டையாடி விடுவார்கள் ...

ஆனால் இவர்களின் இன்றைய நிலை ஊசி மணி பாசி மணி விற்கும் நிலை பேருந்து நிலையத்தில் தமது பிள்ளைகளுடன் ஈ மொய்க்கும் இடத்தில் உறங்குவதும் வாழ்விடங்கள் இன்றி அலைந்து திரிவதுமாக இருக்கிறது இதற்க்கு  நாம் வெட்கப்பட வேண்டும்..

இன்றைய நவீனத்துவம் என்று போட்டி பொறாமை காலை  வாறிவிடுதல் போன்று இல்லாமல் கிடைக்கும் இடத்தில உறங்குவதும்..

எந்த விதமான அரசாங்கதையும் நம்பாமலும் ஒரு சமூகம் வாழ்கிறது என்றால் அது இவர்கள் மட்டுமே படிப்பு என்பது இன்று வந்தது பாரம்பர்யம் என்பது என்றோ வந்தது..

குறவன் குறத்தி ஆட்டம் என்பதும் அவர்களின் ஆடை ஆபாசமாக ஆகியதும் நவீன உலகத்தின் தாக்கம் தான்..

குறவர்கள் இனம் மிகவும் மரியாதையான இனம்..

காட்டுப்பகுதியில் வாழக்கூடிய இவர்களுக்கு காட்டு விலங்குகளின் தன்மைகள் பற்றிய அறிவு அன்றைய காலத்தில் இருந்தது..

காட்டையும் விலங்கையும் நாம் அழித்து விட்டதால், அவர்கள் காட்டைவிட்டு வெளியேறி நவீன உலகில் வரும் பொழுது அவர்களின் நடத்தை அவர்களின் மொழிகள் நம்மவர்களுக்கு ஒரு இளக்காரம் ஆகியது, தமது வயிற்று பசிக்கு வேறு வழியின்றி குறவன் குறத்தி ஆட்டத்தை ஆரம்பித்து அதிலும் ஆபாசமாக ஆட வேண்டும் என்ற கட்டளையின் படி உருவாக்கப்பட்டதே இந்த ஆட்டம்.

காமப்பசிக்கும் வயிற்று பசிக்கும் ஆளாக்கப்பட்ட இம்மக்கள் இன்று அழிந்து கொண்டு வருகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை..

இதில் கவனிக்கப்பட வேண்டிய இனம் நரிக்குறவர்கள் நரியை போன்று தந்திரம் வைத்து காட்டு விலங்குகளையும் நரிகளையும் வேட்டையாடுவதில் மிகவும் சிறந்து விளங்கினர்.

இவர்களது பூர்வீகம் மராட்டியம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இவர்களது மொழி வாக்ரிபோலி என்றோரு மொழியை பேசுகின்றனர்..

இந்த இனத்தில் சில அழகான தனமைகள் உண்டு அதாவது திருமணம் ஆன பெண் இரவு அந்தி சாய்ந்ததும் எங்கிருந்தாலும் தினமும் தனது கணவனை சந்திக்க வேண்டும், அதாவது கணவன் அல்லாமல் வெளியே எங்கேயும் ஓர் இரவு தங்க கூடாது என்று அர்த்தம்..

கணவன் மனைவி பிரசனையாயின் பெரியோர்கள் முன்னிலையில் இருவரும் விவகாரத்து முடித்த பின் சில மாதங்களில் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.

முக்கியமாக இவர்களிடம் திருட்டு விபசாரம் அறவே கிடையாது..

இன்றைய நவீனயுகத்தில் பணம் இல்லாமல் அவதிப்பட்டாலும் மானத்தை இழந்து வாழாத ஒரு இனம் இவர்கள் மட்டுமே..

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவர்கள் நாடோடிகளாக இருப்பதற்கு சீதா தேவியின் சாபம் என்று இராமாயணத்தில் கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ளது..

சீதா தேவியின் அழகை இவர்கள் கிண்டல் செய்தார்களாம் அதனால் சீதா இந்த மக்களுக்கு சாபம் விட்டால் என்று கிறுக்கி வைத்துள்ளார்கள்..

உண்மை என்னவெனில் இவர்கள் நாளையை பற்றி கவலை இல்லாதவர்கள் அதனால் எதையும் சேமித்தது வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள்..

இதற்க்கு மறைமுகமான காரணம் ஒன்றும் உள்ளது..

இவர்களை பொறுத்தவரையில் அன்றைய காலத்தில் இந்து மதத்தை நம்பாதவர்கள் ஏறக்குறைய எந்த இன்றைய இந்து மத கடவுளையும் அவர்கள் கும்பிடாதவர்கள்..

அதனால் தான் இவர்கள் கோவில் கூட கட்டுவதில்லை, என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று எந்த குருக்களிடமும் சென்று காத்திருக்க மாட்டார்கள்..

அதே போன்று இன்னும் சில..

மலையடிவாரத்தில் தங்களது தோட்டம் தங்கள் மக்கள் சகிதம் குடிசை அமைத்து இவர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள்..

இவர்கள் சம்பந்தமாக நிறைய இட்டுக்கட்டப்பட்ட வரலாற்று கதைகள் உண்டு, அதற்க்கு எல்லாவற்றுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லாதவைகள்..

அதில் ஒன்று நரிக்குறவர்கள் மராட்டிய மன்னன் சிவாஜியின் படையில் இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு இவர்களே உதவினார்கள் என்றெல்லாம் இவர்களது வரலாற்றை சிதைத்துள்ளார்கள்..

எல்லாவற்றையும் அழித்து கெடுத்தது நவீன யுக படிப்பு..

பாரம்பரியத்தை அழித்து தான் படிப்பை காக்க வேண்டுமெனில் அந்த படிப்பு தேவையில்லை என்பதே சிறப்பு ..

இனி எங்கேனும் குறிஞ்சி இனமக்களை [குறவர்கள்] கண்டால் அன்போடு பேசி அவர்கள் வைத்து இருக்கும் பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துங்கள்..

நம் முன்னோர்களில் ஒரு பிரிவினர்
என்று நினையுங்கள்...

நம்ப முடியாத உண்மைகள்...


கோலம் போடுவது ஒரு யோகா தான்...


கோலம் போடும் கலையும் மறைந்து வரும் கலைகளில் ஒன்றாகி விட்டது...

அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து, கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி, சிறந்த யோகா தான்..

இன்றைய நவீன யுத்தியில் கோலத்திற்கும் இடமுண்டு. ஃபாஸ்ட் புட் போல ஃபாஸ்ட் கலர் கோலங்களும் விற்பனை வந்துவிட்டது. சிலர் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும்கூட நிரந்தரமாக இருக்கும் வண்ணவண்ண கோல ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விட்டார்கள்.

நம் பழக்க வழக்கங்கள் சொன்னா தெரியாது. கோல யோகான்னு பயிற்சி வகுப்புல சொல்லி கொடுத்தா செய்வாங்க...

என்ன சொல்றது... சரியா..?

பாஜக மோடி - புடின் சந்திப்பு...


பண்டைய காலத்தில் மூத்தோர் தாழி என்ற ஒரு வகையான மரணம்...


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகம் உட்பட சில பகுதிகளில்..

நன்றாக வாழ்ந்து அனுபவித்து எல்லாவற்றையும் கண்ட முதியோர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து போதும் பா நான் வாழ்ந்த வாழ்க்கை இப்போ நிம்மதியாக கிளம்புகிறேன் ஏற்பாடு செய்யுங்கள் என்ற ரீதியில் சொல்வார்கள்..

ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னதன் அர்த்தம்..

மூத்தோர் தாழி என்ற முறையை தான்...

அக்கால கட்டத்தில் இப்படியொரு வழக்கம் உள்ளதாக வரலாற்றில் அறிந்து கொள்ள முடிகிறது..

அதாவது ஏறக்குறைய 100 வயதிற்கு மேல் உள்ள நம்முடைய மூதாதையர்கள் இனி நமது வாழ்வு போதும் என்று முடிவெடுத்து.. ஊர்மக்கள் உறவினர்கள் முன்னிலையில்..

ஒரு மனிதனை உட்கொள்ளும் சட்டி போன்ற அமைப்பில் உள்ள தாழியின் உள்ளே உயிருடன் இறங்கி உயிரை போக்கிக் கொள்ளும் முறைமைகள்..

இலகுவாக சொல்வதானால் ஒரு பெரிய பாத்திரத்தின் உள்ளே சென்று பாத்திரத்தை வெளியில் இருந்து அடைத்து விடுவார்கள்..

பல நாட்கள் கழித்து தான் திறப்பார்கள்..

இப்படி தன்  உயிரை போக்கி கொள்வார்கள் ...

இது தவறு என்ற ஒரு விஷயம் இருந்தாலும் அக்காலகட்டத்தில் 100 வயதிற்கு மேல் தான் இந்த முடிவுகளை எடுக்கிறார்கள்..

அப்படியென்றால் 100 வயது வரையில் வாழவைத்த உணவுகள் எது ?

இன்றைய தினத்தில் 100 வயது வரை வாழ்வதை அதிசயமாக பார்க்கும் நாம் அன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய எல்லோருமே 100 வயதுக்கும் மேல் வாழவைத்த விஷயம் எது ?

வேறென்ன உணவு தான்...

நாம் உண்ணும்  இன்றைய குப்பையை அவர்கள் உண்டு இருப்பார்களேயானால் அக்கலாம் இக்காலம் போன்றே அமைத்து இருக்கும் என்பதே நிதர்சன உண்மை...

மலை வளம்,கடல் வளம், மண்வளம் இவை அனைத்தும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம்...


உடல் எடையை குறைக்க முயற்சி பண்றீங்களா? கவலையை விடுங்க...


இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது மென்பொருளில் (In software) வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும், அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.

பச்சை மிளகாய் சாப்பிடுங்க...  உடல் எடை குறையும்...

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.

எனவே உடலை குறைக்க இனிமேல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (gym) சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.

மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்...

பாஜக வின் அராஜகம்...


பூமியின் (அ)பூர்வ கதை - 2...


பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்...

இளம் வயதில் ஆர்ப்பாட்டமும் அதிரடியாகவும் நடந்து கொண்டு வயது செல்ல செல்ல சொல்லில் செயலில் நிதானம் பிறந்து அமைதியாகி பிறகு வயதாக வயதாக சாந்த சொரூபியாக மாறும் ஒரு மனிதனை போல தான்...

வெறும் நெருப்புகோளமாக தன் சூரிய தந்தை இடம் இருந்து பிரிந்து வந்த பூமி ஆரம்பத்தில் வெறும் வாயுவாக நெருப்பாக இருந்து படிப்படியாக குளிர்ந்து..

இறுகி உறுதியாகி அமைதியாகி கடல் மலை காடு என படி படியாக பசுமையானது.

பிறந்த குழந்தை'யாக நாம் பூமியை பார்ப்பதற்கு நாம்  கற்பனை  கால இயந்தியந்திரத்தில்  பெட்ரோலை முழுதாக நிரப்பி கொண்டு (நீண்ட பயணம் பா..) இன்றையலிருந்து 460 கோடி ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.

நான் உங்களை இனி கூட்டி செல்ல இருப்பது ஒரு நீண்ட நெடிய பயணம். பூமியின் 460 கோடி வரலாற்றை பார்க்க போகும் நெடிய பயணம். அதை கால இயந்திரத்தை கொண்டு வேகமாக ஓட்டி மொத்த வரலாற்றை ஒரு சுருக்க பார்வை பார்க்க இருக்கின்றோம். எனவே  கவனமாக பின்தொடர்ந்து வாருங்கள்.

முதல் பயணமாக ஆரம்ப பூமியை அருகே சென்று பார்ப்போம்.

ஆனால் அதற்க்கும் முன்  ஒரு சின்ன அவசர வேலை உள்ளது.. அது அந்த பூமி குழந்தையின் பிளாஷ் பேக்.. அது எப்படி எப்போ எதனால் பிரசவிக்க பட்டது சுற்றுகிற ஆற்றல்... சுழலும் ஆற்றல் எல்லாம் அதற்க்கு கொடுத்தது யார் என்ற ஆரம்ப முன்னுரை கதைகளை தெரிந்து கொண்ட பின் தான் பூமியின் வரலாற்று பாதையை ஆராய முடியும்.

எனவே அதை தெரிந்து கொள்ள நாம் நமது கால இயந்திரத்தை இன்னும் இன்னும் பின்னால் பயணிக்க செய்ய வேண்டும். அதாவது கிட்ட தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்கும் முன்.

இன்றையலிருந்து கிட்ட தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சம் இருந்திருக்க வில்லை. அது ஒரு அணுவினும் சிறிய இடத்தில சுருங்கி கிடந்து திடீரென ஒரு நாள் இன்று காணும் பிரபஞ்ச அளவாக விரிவடைந்தது. அந்த பெரும் வெடிப்பின் பெயர் பிக் பாங். அது நடந்த ஆரம்ப கணங்களில் பிரபஞ்சம் முழுதும் நிரம்பி இருந்தது ஆற்றலும் அணுக்களும் மட்டும் தான்.

நாம் இன்று பாட்டு பாட ஓட்டம் ஓட வண்டி ஓட்ட ராக்கேட் ஓட்ட தொழிற்சாலைகளை இயக்க பேச.. நடக்க.. வாழ... அல்லது நிலவு அல்லது பூமி வின்வெளியில் பாய்ந்து ஓட என்று நமக்கு தெரிந்த எல்லாவிதமான ஆற்றல்களும் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த பிக் பாங் இன் ஆரம்ப இரண்டு மணி நேரங்களில் உண்டான ஆற்றல்கள் தான். இன்று வரை அந்த ஆற்றல்கள் தான் மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கி கொண்டு இருக்கிறது.

ஆரம்பங்களில் வெறும் ஆற்றலும் அணுக்களுமாக இருந்த பிரபஞ்ச துளிகள் ஆரம்ப கணங்களில் இருந்த  ஹைட்ரஜன் அணுக்களை மிகுந்த ஆற்றலுடன் அழுத்தத்துடன் ஒன்றிணைத்து ஹீலியமை உற்பத்தி செய்தன கூடவே அளப்பரிய ஆற்றலையும். இந்த செயல் முறையினால் முதல் நட்சத்திரம் பிறந்தது பிறகு பிரபஞ்ச தோட்டத்தில் திடீரென லைட் போட்டாற்போல ஆங்காங்கே நட்சத்திரங்கள் ஒளிர தொடங்கியது. அந்த நேரங்களில்  இந்த நட்சத்திரங்களில் உள்ளே என்ன நடந்து கொண்டிருந்தது என்று எட்டி பார்த்தால்  ஹைட்ரஜன் ஹீலியமாக மாறியதை போல மேலும் அணுக்கரு இணைவுகள் நடைபெற்று மேலும் கனமான தனிமங்களை உண்டு பண்ணிகொண்டிருந்தது.

உயிர்களுக்கு அடிப்படையான கார்பன் தொடங்கி நாம் கட்டிடங்கள் கட்ட தேவையான இரும்புகள் முதலிய தனிமங்கள் உண்டானது அப்போது தான்.

ஆனால் யுரேனியம் தங்கம் போன்ற மேலும் கணமுள்ள தனிமங்கள் உண்டாக இவைகளின் ஆற்றல் போதவில்லை . அதன் பிறகு தான் நட்சத்திரங்கள் பேராற்றலுடன் வெடித்து சிதற தொடங்கின. அந்த நிகழ்வுக்கு பெயர் தான் சூப்பர் நோவா.

சூப்பர் நோவாவின்  ஆற்றலில் இணையும் அணுக்கள் யரேனியம், தங்கம்  போன்ற கனமான தனிமங்களை உண்டு பண்ணின. அடுத்த 800 கோடி ஆண்டுகளுக்கு அதன் வேலை தனிமங்களை உண்டு பண்ணுவதாக தான் இருந்தது. புதிய புதிய தனிமங்களை உண்டு பண்ணும் தொழிற்சாலைகளாகவே இவைகள் செயல்பட்டு வந்தன.

பிறகு சூப்பர் நோவா அழிவு மற்றும் புதிய நட்சத்திர பிறப்பு என்று மாறி மாறி நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தான்.. இன்றையில் இருந்து கிட்ட தட்ட  460 கோடி ஆண்டுகளுக்கு முன் நமது சூரியன் தோன்றியது.

வான வெளியில் பரவி இருக்கும் ஹைட்ரஜன்கள் குறிப்பிட்ட ஈர்ப்பில் அழுத்தத்தில் இனைந்து சூரியனாக மாறுகிறது. அந்த நிகழ்வில் தன்னில் சிதறிய துணுக்குகளை தனது ஈர்ப்பு விசையால் தன்னை சுற்றி வலம் வரும் படி செய்கிறது. அந்த எரியும் வாயு துண்டுகள் கால போக்கில் குளிர்ந்து இறுகி தனக்குள் கொண்ட கனமான தனிமங்களால் கட்டியாகி பிற்காலத்தில் 'கிரகங்கள் ' என்று அழைக்க படுகின்றன.

தனது மொத்த சூரிய குடும்பத்தின் நிறையில் 99.8 சதம் நிறை சூரியனுடையது. அந்த ஆரம்ப கணத்தில் மற்ற கிரகங்களில் நடந்து கொண்டிருந்தது என்ன என்பதை பார்த்து கொண்டிருந்தால் நமது கட்டுரையின் திசை மாறி விடும் என்பதால் சூரியனில் இருந்து மூன்றாவதாக சுற்றி கொண்டிருக்கும் மிகுந்த வெப்பம் பொருந்திய உருகி ஊற்றும் பாறைகளை கொண்ட பார்க்கவே பயங்கரமாக இருக்கும் அந்த  பந்தை மட்டும் அருகில் சென்று அதில் நடக்கும் நிகழ்வுகளை.. மாற்றங்களை.. வரலாறுகளை  கவணிப்போம். காரணம் பிற்காலத்தில் அது தான் நம்முடைய சொர்க்க பூமி யாக மாற இருக்கிறது. இந்த உருவாக்கம் நடக்கும் கால கட்டத்தில் பிரபஞ்சதின் மொத்த வரலாற்று காலத்தில் 3 இல் 2 பங்கு காலம் உருண்டு ஓடி விட்டிருந்தது.

ரைட் இனி கால இயந்திரத்தை நேரே பூமிக்கு விடுப்பா.....

- பூமி இன்னும் சுழலும்...