22/05/2018

பூமியின் (அ)பூர்வ கதை - 2...


பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்...

இளம் வயதில் ஆர்ப்பாட்டமும் அதிரடியாகவும் நடந்து கொண்டு வயது செல்ல செல்ல சொல்லில் செயலில் நிதானம் பிறந்து அமைதியாகி பிறகு வயதாக வயதாக சாந்த சொரூபியாக மாறும் ஒரு மனிதனை போல தான்...

வெறும் நெருப்புகோளமாக தன் சூரிய தந்தை இடம் இருந்து பிரிந்து வந்த பூமி ஆரம்பத்தில் வெறும் வாயுவாக நெருப்பாக இருந்து படிப்படியாக குளிர்ந்து..

இறுகி உறுதியாகி அமைதியாகி கடல் மலை காடு என படி படியாக பசுமையானது.

பிறந்த குழந்தை'யாக நாம் பூமியை பார்ப்பதற்கு நாம்  கற்பனை  கால இயந்தியந்திரத்தில்  பெட்ரோலை முழுதாக நிரப்பி கொண்டு (நீண்ட பயணம் பா..) இன்றையலிருந்து 460 கோடி ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்.

நான் உங்களை இனி கூட்டி செல்ல இருப்பது ஒரு நீண்ட நெடிய பயணம். பூமியின் 460 கோடி வரலாற்றை பார்க்க போகும் நெடிய பயணம். அதை கால இயந்திரத்தை கொண்டு வேகமாக ஓட்டி மொத்த வரலாற்றை ஒரு சுருக்க பார்வை பார்க்க இருக்கின்றோம். எனவே  கவனமாக பின்தொடர்ந்து வாருங்கள்.

முதல் பயணமாக ஆரம்ப பூமியை அருகே சென்று பார்ப்போம்.

ஆனால் அதற்க்கும் முன்  ஒரு சின்ன அவசர வேலை உள்ளது.. அது அந்த பூமி குழந்தையின் பிளாஷ் பேக்.. அது எப்படி எப்போ எதனால் பிரசவிக்க பட்டது சுற்றுகிற ஆற்றல்... சுழலும் ஆற்றல் எல்லாம் அதற்க்கு கொடுத்தது யார் என்ற ஆரம்ப முன்னுரை கதைகளை தெரிந்து கொண்ட பின் தான் பூமியின் வரலாற்று பாதையை ஆராய முடியும்.

எனவே அதை தெரிந்து கொள்ள நாம் நமது கால இயந்திரத்தை இன்னும் இன்னும் பின்னால் பயணிக்க செய்ய வேண்டும். அதாவது கிட்ட தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்கும் முன்.

இன்றையலிருந்து கிட்ட தட்ட 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சம் இருந்திருக்க வில்லை. அது ஒரு அணுவினும் சிறிய இடத்தில சுருங்கி கிடந்து திடீரென ஒரு நாள் இன்று காணும் பிரபஞ்ச அளவாக விரிவடைந்தது. அந்த பெரும் வெடிப்பின் பெயர் பிக் பாங். அது நடந்த ஆரம்ப கணங்களில் பிரபஞ்சம் முழுதும் நிரம்பி இருந்தது ஆற்றலும் அணுக்களும் மட்டும் தான்.

நாம் இன்று பாட்டு பாட ஓட்டம் ஓட வண்டி ஓட்ட ராக்கேட் ஓட்ட தொழிற்சாலைகளை இயக்க பேச.. நடக்க.. வாழ... அல்லது நிலவு அல்லது பூமி வின்வெளியில் பாய்ந்து ஓட என்று நமக்கு தெரிந்த எல்லாவிதமான ஆற்றல்களும் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த பிக் பாங் இன் ஆரம்ப இரண்டு மணி நேரங்களில் உண்டான ஆற்றல்கள் தான். இன்று வரை அந்த ஆற்றல்கள் தான் மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கி கொண்டு இருக்கிறது.

ஆரம்பங்களில் வெறும் ஆற்றலும் அணுக்களுமாக இருந்த பிரபஞ்ச துளிகள் ஆரம்ப கணங்களில் இருந்த  ஹைட்ரஜன் அணுக்களை மிகுந்த ஆற்றலுடன் அழுத்தத்துடன் ஒன்றிணைத்து ஹீலியமை உற்பத்தி செய்தன கூடவே அளப்பரிய ஆற்றலையும். இந்த செயல் முறையினால் முதல் நட்சத்திரம் பிறந்தது பிறகு பிரபஞ்ச தோட்டத்தில் திடீரென லைட் போட்டாற்போல ஆங்காங்கே நட்சத்திரங்கள் ஒளிர தொடங்கியது. அந்த நேரங்களில்  இந்த நட்சத்திரங்களில் உள்ளே என்ன நடந்து கொண்டிருந்தது என்று எட்டி பார்த்தால்  ஹைட்ரஜன் ஹீலியமாக மாறியதை போல மேலும் அணுக்கரு இணைவுகள் நடைபெற்று மேலும் கனமான தனிமங்களை உண்டு பண்ணிகொண்டிருந்தது.

உயிர்களுக்கு அடிப்படையான கார்பன் தொடங்கி நாம் கட்டிடங்கள் கட்ட தேவையான இரும்புகள் முதலிய தனிமங்கள் உண்டானது அப்போது தான்.

ஆனால் யுரேனியம் தங்கம் போன்ற மேலும் கணமுள்ள தனிமங்கள் உண்டாக இவைகளின் ஆற்றல் போதவில்லை . அதன் பிறகு தான் நட்சத்திரங்கள் பேராற்றலுடன் வெடித்து சிதற தொடங்கின. அந்த நிகழ்வுக்கு பெயர் தான் சூப்பர் நோவா.

சூப்பர் நோவாவின்  ஆற்றலில் இணையும் அணுக்கள் யரேனியம், தங்கம்  போன்ற கனமான தனிமங்களை உண்டு பண்ணின. அடுத்த 800 கோடி ஆண்டுகளுக்கு அதன் வேலை தனிமங்களை உண்டு பண்ணுவதாக தான் இருந்தது. புதிய புதிய தனிமங்களை உண்டு பண்ணும் தொழிற்சாலைகளாகவே இவைகள் செயல்பட்டு வந்தன.

பிறகு சூப்பர் நோவா அழிவு மற்றும் புதிய நட்சத்திர பிறப்பு என்று மாறி மாறி நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தான்.. இன்றையில் இருந்து கிட்ட தட்ட  460 கோடி ஆண்டுகளுக்கு முன் நமது சூரியன் தோன்றியது.

வான வெளியில் பரவி இருக்கும் ஹைட்ரஜன்கள் குறிப்பிட்ட ஈர்ப்பில் அழுத்தத்தில் இனைந்து சூரியனாக மாறுகிறது. அந்த நிகழ்வில் தன்னில் சிதறிய துணுக்குகளை தனது ஈர்ப்பு விசையால் தன்னை சுற்றி வலம் வரும் படி செய்கிறது. அந்த எரியும் வாயு துண்டுகள் கால போக்கில் குளிர்ந்து இறுகி தனக்குள் கொண்ட கனமான தனிமங்களால் கட்டியாகி பிற்காலத்தில் 'கிரகங்கள் ' என்று அழைக்க படுகின்றன.

தனது மொத்த சூரிய குடும்பத்தின் நிறையில் 99.8 சதம் நிறை சூரியனுடையது. அந்த ஆரம்ப கணத்தில் மற்ற கிரகங்களில் நடந்து கொண்டிருந்தது என்ன என்பதை பார்த்து கொண்டிருந்தால் நமது கட்டுரையின் திசை மாறி விடும் என்பதால் சூரியனில் இருந்து மூன்றாவதாக சுற்றி கொண்டிருக்கும் மிகுந்த வெப்பம் பொருந்திய உருகி ஊற்றும் பாறைகளை கொண்ட பார்க்கவே பயங்கரமாக இருக்கும் அந்த  பந்தை மட்டும் அருகில் சென்று அதில் நடக்கும் நிகழ்வுகளை.. மாற்றங்களை.. வரலாறுகளை  கவணிப்போம். காரணம் பிற்காலத்தில் அது தான் நம்முடைய சொர்க்க பூமி யாக மாற இருக்கிறது. இந்த உருவாக்கம் நடக்கும் கால கட்டத்தில் பிரபஞ்சதின் மொத்த வரலாற்று காலத்தில் 3 இல் 2 பங்கு காலம் உருண்டு ஓடி விட்டிருந்தது.

ரைட் இனி கால இயந்திரத்தை நேரே பூமிக்கு விடுப்பா.....

- பூமி இன்னும் சுழலும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.