17/09/2017

பாஜக மோடியின் பிறந்தநாள் ஊழல் 60,000 கோடி...


உங்களது புல்லட் ரயில் மும்பை-அஹமதாபாத் நகரிடையே திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். இதே வழி தடத்தில் ஏற்கனவே ஏராளமான விமானங்கள் பறக்கிறது, புல்லட் ரயிலை விட குறைந்த நேரத்தில் அவை சென்றடைவதாகவும் அறிகிறேன்.

புல்லட் ரயில் திட்ட மதிப்பீடு : ரூ.1,10,000 கோடி.
மொத்த தூரம் : 500 கிமீ.

ஒரு கிலோ மீட்டருக்கு செலவு : ரூ220 கோடி.

இதே போன்ற 500கிமி புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனாவில் செய்யப்படும் செலவு ரு.50,000 கோடிகள்.

இந்த இந்திய திட்டத்தில் மட்டும் ஏன் ரூ.60,000 கோடிகள் கூடுதலாக செலவு செய்யப்படுகிறது, இப்பொழுது தான் உங்களின் புல்லட் வேக ஆர்வத்திற்கான காரணத்தை அறிகிறேன்.

இந்த திட்டத்தில் செலவு செய்யப்படும் ரூ.1,10,000 கோடிகளை எடுக்க 655 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.

உங்கள் நண்பர்கள் அதானியும் அம்பானியும் ஏன் புல்லட் ரயிலில் முதலீடு செய்ய முன்வரவில்லை என்பது உங்கள் பிறந்த நாளன்று அம்பலமானதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்...

பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்...


பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்பதற்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கும் புண்ணியவான்கள், உண்மையில் தமிழின் மீதோ, தமிழரின் மீதோ பெரியார் வைத்திருந்த கண்ணோட்டத்தை பற்றி கவலை பட்டது இல்லை.

ஒருக்காலும் பெரியார் தமிழை ஆட்சிமொழி ஆக்கவோ, பாட மொழியாக்கவோ முயன்றதே இல்லை. அதற்காக அவர் இந்தியை எதிர்த்து போராடியதும் இல்லை. அவர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தையே முன்வைத்தார். இதில் தமிழுக்கு எந்த இடத்தில் பெரியார் தொண்டாற்றி உள்ளார் என்று நீங்களே பார்த்து சொல்லுங்களேன்.

விடுதலை 1965 மார்ச் 3 அன்று எழுதிய ஆசிரிய உரையில்..

நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படி ('தமிழ்நாடு தமிழருக்கே') சொல்கிறாய்?  என்று கேட்பீர்களானால், சொல்கிறேன்.

இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டு விடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன், இந்தி எதிர்ப்பு மொழி சிக்கல் அல்ல; அரசியல் சிக்கல் தான்.

குடி அரசு ஏட்டில் இந்திப் புரட்டு என்னும் தலைப்பில் 20.1.1929 அன்று பெரியார் எழுதிய ஆசிரியர் உரையில்..

இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் -- அல்லது வணிகத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்ச்சிக்க வேண்டுமேயன்றி, வேறு மொழியைப்பற்றி எண்ணுவது முட்டாள்த் தனமோ சூழ்ச்சியோ தான் ஆகும்.

தமிழ்ப் படிப்பதனாலாவது, தமிழ்தாய்ப் பற்றினாலாவது மனிதனுக்கு தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது.

பெரியார் 14.8.1948 அன்று சென்னையில் ஆற்றிய ஓர் உரையில்..

காலையில் நான் இம் மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், 'தமிழை விட ஆங்கிலத்தைக் கட்டாயப்பாட மாக்கினால், அதற்க்கு வாக்களிப்பேன்' என்று கூறினேன்' -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி , ப.1763..

ஈ.வே.கி. சம்பத் நடத்தி வந்த தமிழ் செய்தி ஏட்டின் பொங்கல் மலரில்,
தமிழ் ஒரு 'நியூசென்ஸ்' தமிழ் புலவர்கள் யாவரும் குமுக எதிரிகள்" -- கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.414..

"சனியனான தமிழுக்கு" விடுதலை 16.3.1967, ஆசிரியவுரை, கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.477

விடுதலை ஏட்டில் 'தாய்ப்பால் பைத்தியம்' என்னும் தலைப்பில் பெரியார், 'எனக்கு தமிழ் பற்றும் இல்லை. நான் தமிழனும் இல்லை!" என்று எழுதியுள்ளார். -- புலவர் வி.போ.பழனிவேலன், ஈ.வே.இரா. பெரியாரும், இந்தியும் (கட்டுரை), தென்மொழி தி.பி.1996, பங்குனி (1964 மார்ச்), ப.59.

தாய்மொழிக் கல்வி என்னும் அடிப்படை மனித உரிமையை கடுமையாக விமரிசித்து பெரியார் கூறியதாவது,

இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ் தாயின் பாலை நேரே அருந்தி வளர்த்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், (இந்த அன்பர்கள் உட்பட) எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள வாழ்க்கை நிலையே வேறாக -- அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக -- ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரமுள்ள உழைப்பாளர்களாகி இருப்பார்கள்  என்று உறுதியோடு கூறுவேன் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93.

தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு, அஃது எதற்குப் பயன்படுகிறது? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93.

இன்றைய முற்ப்போக்குக்கு முதல் எதிரி தாய்ப்பால் குடித்த மக்கள்தானே? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியாரின் கூற்றுப்படி தாய் மொழி மீது பற்று வைத்தால் அது பிற்போக்கு! பற்று இல்லை எனில் முற்போக்கு! என்ன ஒரு சித்தாந்தம்.....? மேலும் வாசியுங்கள்.

இன்றைக்கு எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்ப்பட வேண்டுமானால், (ஆங்கில) புட்டிப் பால் தானே எண்ணங்கள், செயல்முறைகள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படை கருத்துகள் முதலியவற்றை அறிந்து வரும்படி, நம் மக்களை மேல்நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இதுபோல் எதற்காவது பயன்படுகிறதா? -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93.

பெரியார் வானளாவ புகழும் எந்த ஆங்கிலேயரும் 'முற்போக்கு' என்னும் சாக்கில் தத்தம் தாய்மொழியை என்றாவது மறந்தது உண்டா? யோசியுங்கள் தமிழர்களே....

ஸ்டாலின் மொழியியல் கொள்கையானது, தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை கட்சிகளை தமிழ் மக்களோடும் மண்ணோடும் ஓட்டம்விடாமல் செய்த கொள்கை ஆகும். அதன்படி மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தத்தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வேர்ருக்கருவியே அன்றி வேறில்லை என்பதை பெரியார் அப்படியே முன்மொழிகிறார்.

இதை தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் ஆனவற்றை எல்லாம் மொழிக்கு எதை பொருத்துவது? என்று சொல்லி சீறுகிறார் பெரியார்.-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93.

அட தமிழருக்கு இயல்பாய் தோன்றிய தாய் மொழி பற்றுக்கு கூட பிராமணர் தான் காரணம் என்பது பெரியாரின் அறிய கண்டுபிடிப்பு.

இந்தி கட்டாயம் என்பதால் தானே தமிழ் மொழிப் பைத்தியம் நமக்கு ஏற்ப்பட்டது? இது பார்ப்பனர்களின் திறமையே ஆகும், -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கனக்காக -- அகர வரிசையாக --- எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால், அதற்க்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்து கொள்ளலாம் எனும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்ப்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89.

உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்; தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள் -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் , இரண்டாம் தொகுதி , பப 988-89
என்றும் தமக்கே உரிய பாணியில் தமிழ் தொண்டாற்றி உள்ளார் பெரியார்.

தமிழர்களே..

'ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய மொழியை அழி' என்பது தான் வல்லரசு நாடுகளின் உத்தி..

தேவநேய பாவாணர் கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டும் ஒரு தமிழ் வழி பள்ளியை கூட திறக்க உதவி செய்யாத பெரியார், புற்றீசல் போல ஆங்கில வழி பள்ளிகளையே திறந்தார்/திறக்க முன் நின்றார். அந்த ஆங்கில வழி பள்ளிகளே இன்று சமச்சீர் கல்வி போன்ற குறைந்த பட்ச உரிமையை எதிர்த்து கொடி பிடிக்கின்றனர் என்பது உபரித் தகவல்..

வாழ்க பெரியாரின் தமிழ் தொண்டு... வளர்க அவரின் புகழ்....

பெரியாரை மட்டும் படித்தால் போதாது...


பெரியாரின் முன்னோர்களான வந்தேறி ஆதிக்க நாயக்கர் மன்னர்களின் வரலாற்றையும் சேர்த்துப் படித்தால் தான் சாதி, சனாதன இந்து மதம் யாரால் கொண்டு வரப்பட்டது என்றும்..

தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி திணிக்கப்பட்டது என்பது தெரியும்.

இதையெல்லாம் பெரியாரு சொல்லையே ஏன்?

இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்து காப்பதாகச் சொல்லி, அதாவது அன்று அந்த சிறுபான்மை மதத்தவர்களிடம் இருந்து பெரும்பானமை இந்து மதத்தைக் காப்பதாகத்தான் இந்த வந்தேறிகள் கதையளந்து தமிழனை ஏய்த்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரின் முன்னோர்களின் அட்டூளியத்தை மட்டும் அல்வா மாதிரி மறைப்பது ஏன்.?

தமிழா விழித்தெழு...


கம்மநாயுடு சங்கம்,
ரெட்டி மகாஜன சங்கம்,
நாயக்கர் சங்கம்,
பலிஜாநாயுடு சங்கம்,
24மனை தெலுங்குச் செட்டியார்கள் சங்கம் என்று..

தெலுங்கர்களில் இருக்கக்கூடிய அனைத்து சாதிச் சங்கங்களும் தனிதனியாக தங்களது சாதிச் சங்க மாநாடுகளை நடத்துகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாட்டு தெலுங்குமகா ஜன சங்கம் என்ற பெயரில் எல்லா தெலுங்கு சாதிகளும் கூட்டுச் செர்ந்து மாநாடு நடத்தி தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கி விடுகின்றனர்.

இந்தச் சங்கங்களின் பிரதி நிதிகள் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேசிய, திராவிடக் கட்சிகளில் தலைமை ஏற்று தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்கின்றனர்.

இவர்களைப் பற்றி எந்த

தேசியக் கட்சியாவது,
இடதுசாரிக் கட்சியாவது
திராவிடக் கட்சிகயாவது
தலித்தென்று சொல்லிக் கொள்கின்ற கட்சியாவது

அல்லது தமிழர் கட்சி என்று சொல்லி தமிழர் கட்சியை மட்டும் சாதீ கட்சி என்று சொல்லும் கட்சியாவது  இவர்களை சாதிவெறியர்கள் என்று குற்றம் சாட்டுவது இல்லையே ஏன்?

முற்போக்கு, திராவிட , தலித்திய, கம்யூனிச முகமூடிகளே...


உங்களுக்கு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வதானானால்..

நீங்கள் இந்திய அரசியல் சட்டத்தைத் தானே திருத்த வேண்டும் ...

அப்படி அரசியல் சட்டத்தை திருத்த இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை.?

உங்களால் அது முடியாது..

ஏனெனில் அது இடஒதுக்கீட்டை பாதிக்கும் என்ற சொத்தை காரணத்தை காட்டி மக்களை ஏமாற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் .

சட்டத்தை மாற்றினால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியும்...

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு...


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அவற்றைத் தெரிந்து கொள்வோம்..

அ __எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வோம் பிறர்க்கும் தெரியப்படுத்துங்கள்...

இதற்கு மேல் சிந்திக்கவில்லை என்றால் நிச்சயமாக தமிழ் இனம் விரைவில் அழிந்து விடும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.. விழித்துக்கொள் தமிழா...


ஆரியமும் திராவிடமும் ஒன்று தான் என்பதற்கு இதுவே உதாரணம்...


இவர்கள் இருவரும் தமிழிலேயே பத்திரிக்கை நடத்தி தமிழாலே வயிறு வளர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

பாஜக மோடி சொல்வது எல்லாம் பொய்...


செப்டெம்பர் 17 - திராவிட எதிர்ப்பு நாள்...


தமிழர்கள் தன்மானமும் சுயமரியாதையும் இழந்த நாள்.

எவனொருவன் தமிழையும் தமிழரையும்  இறுதி மூச்சு வரை இழிவு செய்தானோ அவனையே தந்தை என்று தமிழர்கள் வணங்கிய அவலம்.

இதை விட ஒரு உளவியல் தாக்கம் தமிழர்களுக்கு வேறு எதுவும் இல்லை.

தமிழ்ச் சாதிகளுக்குள் நிரந்தர பகை மூட்டி தமிழர்களை திராவிட அடிமைகளாக மாற்றிய ஒருவனுக்கு பிறந்த நாள் இன்று.

ஒழுக்கம், பண்பாடு என்ற அனைத்தையும் மறுத்த கயவனுக்கு பிறந்த நாள்.

பார் போற்றும் நாகரீகம் கொண்ட தமிழனுக்கு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று பிதற்றிய பித்தனுக்கு பிறந்த நாள்.

தமிழர் நாட்டிலேயே தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்தி அதை தமிழர்களையே ஏற்க வைத்த பெரும் பகைவனின் பிறந்த நாள்.

தமிழர் மதத்தையும், தமிழர் மெய்யியலையும் இழிவு செய்து தமிழர்களுக்கு அறிவே இல்லை என்று கூறிய அற்பனின் பிறந்த நாள்.

தமிழகத்திற்கு வரவேண்டிய தமிழர் நிலப்பகுதிகளை அண்டை மாநிலத்திற்கு தாரை வார்க்க காரணமாக இருந்த நயவஞ்சகனின் பிறந்த நாள்.

திராவிடம் என்ற கருத்தை விதைத்து தமிழர் அடையாளத்தை சிதைத்தவனின் பிறந்த நாள்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளை மலமென்று கூறிய அறிவுக் குருடனின் பிறந்த நாள்.

தமிழர்களுக்கு கருப்பு நாளான இன்றைய நாளை சிறப்பு நாளாக கொண்டாடும் மானமற்ற தமிழர்கள் வாழும் வரை...

தமிழர்கள் வேற்றின மக்களுக்கு நிரந்த அடிமைகளாகவே வாழ வேண்டி இருக்கும்.

தமிழா தன்மானம் கொள்..

இறுதி வரை இனவெறி கொண்ட பகைவனை போற்றுவதை நிறுத்து.

திராவிட மாயையில் இருந்து வெளியேறி தமிழனாக தலை நிமிர்ந்து நில்...

சீமான் இளைஞர்களைக் கெடுக்கிறார் என திமுக, திக உள்ளிட்ட சில திராவிட நாஜிக்கள் புலம்புகிறார்களே.. ஏன்?


இவ்வளவு வாய்கிழிய பேசும் இவர்கள் தான் இளைஞர்களை மது போதையில் ஆழ்த்த உடந்தை போனவர்கள்.

தமிழக இளைஞர்கள் சினிமா, மது உள்ளிட்ட போதையிலேயே இருக்க வேண்டும், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து தங்கள் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிர் கொண்டவர்கள் இந்த திராவிட நாஜிக்கள்..

திடீர் என்று ஒரு கூட்டம் கிளம்பி இன உணர்வு, உரிமை மீட்பு, மண் மீட்பு, தமிழர் வாழ்வாதாரம் என பேசுவது திராவிட நாஜிக்களுக்கு கடும் எரிச்சலைக் கொடுத்திருக்கு. அதனால் தான் இந்த புலம்பல்.

சீமானை மட்டுமல்ல, இன உணர்வு, மொழி உணர்வு கொண்டு எவர் பேசினாலும் இவர்கள் இப்படி தான் புலம்புவார்கள், அவதூறுகளை வாரி இறைப்பார்கள்.

ஏனெனில் இந்த திராவிட நாஜிக்கள் ஆரிய நாஜிக்களின் பங்காளிகள்...

குமரிக்கண்டம் இருக்க கவலை ஏன்?


13ம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டு கேட்பாரற்று கிடக்கிறது.

அழிக்கப்பட்ட கல்வெட்டுகள் திரும்பக் கிடைத்தன.

செய்தி: கண்மாய்க்குள் சிதறி கிடக்குது 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் : பாண்டியர் காலத்தவை என ஆய்வில் தகவல் - 10.09.2017 தினகரன்.

எத்தனை சான்றுகள் அழிக்கப்பட்டிருந்தாலும் பரவாயில்லை.
நம்மிடம் ஒரு கருவூலம் இருக்கிறது.
ஒரு கண்டமே இருக்கிறது.

தமிழர்நாடு தமிழரின் கட்டுப்பாட்டில் வந்ததும் மக்கள் நிலை ஓரளவு மேம்பட்ட பிறகு நாம் கடலில் இறங்கி குமரிக்கண்டம் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும்.

நாம் உலகின் முன்தோன்றிய மூத்தகுடி, நமது நாகரீகமே முதல் நாகரீகம் என்பதை நிறுவ வேண்டும்.

அதுவரை தமிழர் பழமைக்கான சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் இன விடுதலைக்காகப் போராட வேண்டும்...

ஸ்வஸ்திக் கிணறு...


எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்ட ஸ்வஸ்திக் வடிவ கிணறு திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.

இந்த கிணற்றில் இறப்பிலா வாழ்கையை பற்றி பாடல் வரிகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கிணற்றை "மற்பிடுகு பெருன்கிணறு" என்றும் கூறுகின்றனர்...

திருவோடு...


நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.

இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.

திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.

இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.

காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும்.

மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை
ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.
விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.

இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள்.

ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும்.

திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது...

நவோதயா பள்ளிகள் வந்தா கல்வித் தரம் உயரும்ன்னு சொல்றாங்க...


நாட்டிலேயே அதிக நவோதயா பள்ளிகளை கொண்ட உத்திர பிரதேச மாநிலம்  Educational development index-ல் 31வது இடம்.

நவோதயா பள்ளிகள் இல்லாத தமிழ்நாடு 3வது இடம்..

நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விடுத்த அறிக்கையிலும் நாட்டிலுள்ள சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் பாதிக்கு மேல் தமிழகத்திலும் உள்ளது...

பாஜக வின் சுதந்திரப் போராட்ட வரலாறு...


கசகசா மருத்துவக் குணங்கள்...


கசகசா சில தின்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.

எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்..

ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மை போல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.

10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த  இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது சிறிதளவு கசகசாவை  எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்...

ஓபிஎஸ் ஏன் இன்னும் சிபிஐ க்கு உத்தரவு விடவில்லை...


கணக்கு கேட்டு, விடையை சரியாக கூறிய ஆசிரியையிடம், விடை தவறு என கூறி, அமைச்சர் எச்சரித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...



உத்தரகண்டில், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில கல்வி அமைச்சராக இருப்பவர், அரவிந்த் பாண்டே. தலைநகர் டேராடூனில் உள்ள பெண்கள் பள்ளிக்கு, அமைச்சர் பாண்டே சென்று, கல்வியின் தரம் பற்றி ஆய்வு செய்தார். அப்போது, ஒரு வகுப்பில், மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர், அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

பின், வகுப்பறையை விட்டு வெளியேறும் முன், "நீங்கள் பெண் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செல்கிறேன்," என, எச்சரித்து சென்றார். அமைச்சரின் இந்த செயல், பதிவான வீடியோ, சமூக வலைதளங்ளில் வெளியானது.

இதையடுத்து, அமைச்சரை விமர்சித்து, பலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

வகுப்புக்குள் நுழைந்த அமைச்சர், ஆசிரியையிடம் கேள்வி கேட்க விரும்பினார். '(-) + (-) = ?' என கேட்டார். இதற்கு ஆசிரியை, '(-)' என, சரியாக பதில் அளித்தார். 'இந்த பதில் தவறு' என கூறிய அமைச்சர், '(+)'தான் சரியான விடை என, தெரிவித்தார். "நானும் அறிவியல் படித்துள்ளேன். கணித பாடத்தில், '(-) + (-)' = (+) ; ஆனால் ரசாயன பாடத்தில், '(-)' என்பதுதான் விடை," என அமைச்சர் கூறினார்.

இது பற்றி, அமைச்சர் பாண்டே கூறுகையில், "ஆசிரியர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அந்த வகுப்பில், ஆசிரியையும், மாணவிகளும், எந்த புத்தகமும் வைத்திருக்கவில்லை. பாடம் தொடர்பான கேள்விகளும், பதில்களும் இடம் பெற்றிருந்த ஒரு 'கைடு' புத்தகத்தை வைத்து, ஆசிரியை நடத்தி கொண்டிருந்தார். என் பதில் தவறு என நிருபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்," என்றார்...

கமல் அரசியலுக்கு வருவது மக்கள் விருப்பம் இல்லை.. இலுமினாட்டிகள் விருப்பம்...


நவோதயா இந்தி திணிப்பு திட்டம்...


பாஜக வின் வாரிசு அரசியலும்...


பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று தானே அனைவரையும் நம்ப வைத்தார்கள்...

இது சும்மா ஒரு சாம்பிள் பட்டியல் தான்...

தமிழா விழித்தெழு...


பைக் வைத்திருப்பவர்களால் பெட்ரோல் வாங்க முடியும் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெனாவெட்டாக பேசியிருக்கிறார்...



பாஜகவை ஆதரிப்பதில் மத்தியதர வர்க்கத்தின் ஒருபகுதி முன்னணியில் இருந்தது. அதற்குரிய பலனை அது அனுபவிக்கிறது.

உலகசந்தையில் கச்சா எண்ணையின் விலை பாதியாக குறைந்துள்ள போதிலும் பெட்ரோல் விலையை
மட்டுமல்லாது டீசல் மற்றும் எரிவாயு விலைகளையும் உயர்த்துகிறது மோடி
அரசு.

இதனால் லாரி மற்றும் ரயில் கட்டணங்கள் உயர, அதனால் அனைத்து
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர, ஏழைபாளைகளின்
வாழ்வு மேலும் தாழ்ந்து போகிறது.

இந்த எளிய உண்மைகூட தெரியாத
ஒருவர்தான் மோடி ஆட்சியில் மந்திரி.

இந்த கேடுகெட்ட ஆட்சியை வியந்தோதும் ஒரு கூட்டமும் இருக்கிறதே, அதை என்ன சொல்ல?

அனிதாவுக்காக நீதி கேட்டு, இந்திய தூதரகங்களின் முன்பு, போராடும் அமெரிக்க வாழ் தமிழர்கள் - வாஷிங்டனில், நியூயார்க்கில், சிகாகோவில், சான் பிரான்சிஸ்கோவில்...


உலகம் அறியட்டும் நம் உரிமைப் போரை...

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் புரட்சிகள்...


72 வயது பெரியார் 26 வயது மணியம்மை திருமணம்...

பெண் விடுதலைக்காக போராடிய ஈவேராவின் புரட்சி....

பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது.

ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்.

ஈரோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்.

பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார்.

இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக் கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார்.

எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தான் தத்தெடுத்து வளர்த்த மகள் மணியம்மையை  திருமணம் செய்துக் கொண்டார்...

நானே தோத்துப் போயி வேதனையில இருக்கேன். 52 ஓட்டு வாங்கிருக்கீங்களே. ட்ரீட் இல்லையான்னு கேக்கறான் சார் ஒருத்தன்...


இடஒதுக்கீடு தியாகிகள் தினம்...


இடஒதுக்கீடு கோரி ஒருநாள் சாலை மறியல் போராட்டம், ஒருநாள் இரயில் மறியல் போராட்டம், நூற்றுக்கும் மேற்பட்ட மாநாடுகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்தப்பட்டன.

அதன் நிறைவாக 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி ஒருவாரத்திற்கு தொடர் சாலை மறியல்  போராட்டம் நடத்தப்பட்டது.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 21 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு 7 நாள் சாலை மறியல் போராட்டத்தில் 21 உயிர்களை பலி கொடுத்து ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறை கொடுமைகளை அனுபவித்து 107 சமுதாயத்தினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெறப்பட்டது தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சகாப்தம்.

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத இந்த இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் நினைவு நாள் நாளை மறுநாள் செப்டம்பர் 17ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

21 தியாகிகளின் ஒரு கண்ணோட்டம்...

1. தியாகி பார்ப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள பார்ப்பனப்பட்டுக் கிராமத்தை சேர்ந்த தியாகி. சாலை மறியலுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பும் போதே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவரின் வயது 55.

2. தியாகி சித்தணி ஏழுமலை
விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 க்கும் கீழ். காலவல் துறையினர் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்ததால் அடுத்த நாள், செப்டம்பர் 18 அன்று வீரமரணம் அடைந்தார். திருமணமானவர்.

3. தியாகி ஒரத்தூர் செகநாதன்
விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணமானவர். சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

4. தியாகி முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணாமானவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 43.

5. தியாகி கயத்தூர் முனியன்
விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமானவர். பார்ப்பனப்பட்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வைக் கேள்விப்பட்டு, ஊர்வலமாக தலைமையேற்று சென்றவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 27. அவரது மனைவி வேதவல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

6. தியாகி கயத்தூர் முத்து
விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

7. தியாகி கொழப்பலூர் முனுசாமிக் கவுண்டர், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர்.சாலைமறியலில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். சென்னை மத்திய சிறையிலேயே வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 45. திருமணமானவர்.

8. தியாகி கோலியனூர் விநாயகம்.
விழுப்புரம் மாவட்டம் மிளகாய்க் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.

9. தியாகி கோலியனூர் கோவிந்தன்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் விநாயகம், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர். திருமணமானவர். அப்போது அவருக்கு வயது 35.

10. தியாகி தொடர்ந்தனூர் வேலு.
செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம் ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர். திருமணமானவர்.

11. சிறுதொண்டமாதேவி தேசிங்குராஜன்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள சிறுதொண்டமாதேவி ஊரில் 13.4.1967 இல் பிறந்தவர் தேசிங்குராஜன். அப்பா துரைசாமி படையாட்சி, அம்மா கருப்பாயி.
1987 சாலைமறியல் போராட்டத்தின் போது செப்டம்பர் 18 முதல் 21 வரை முந்திரிக்காட்டில் இருந்து சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினார். 22 ஆம் நாளன்று காவல்துறை பாதுகாப்புடன் பண்ருட்டியில் இருந்து நெய்வேலிக்கு வாகனங்கள் செல்வதாக செய்தி வந்தது. இதனால், நெய்வேலி கொள்ளுக்காரன்குட்டை கிராமத்தின் அருகே 'டாக்டர் அய்யா சொல்லும் வரை நாங்கள் உயிரே போனாலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க மாட்டோம்' எனக்கூறி காவல்துறை பாதுகாப்புடன் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார் தேசிங்குராஜன்.
முன்று மனிநேரம் போராடிப் பார்த்த காவல்துறையினர் சுட்டுவிடுவோம் என துப்பாக்கியை நீட்டி குறிபார்த்தபோது - மார்பை திறந்துகாட்டி வயிற்றில் சுடப்பட்டு உயிரிழந்தார் மாவீரன் தேசிங்குராஜன்.

12. பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், திருவெண்ணை நல்லூர் கிராமத்தின் அண்ணாமலைக் கவுண்டர் 60 வயது முதியவர். சாலைமறியல் போராட்டத்தில் பேரங்கியூர் மக்கள் தீவிரமாக ஈடுபட்டதால் - காவல்துறை ஐஜி ஸ்ரீபால் தலைமையில் காவல்துறையினர் ஊருக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் முதியவர் அண்ணாமலைக் கவுண்டர் உயிர்த்தியாகம் செய்தார்.

13. மேச்சேரி அமரத்தானூர் மயில்சாமி
சேலம் மாவட்டம் மேச்சேர் அமரத்தானூர் ஊரைச் சேர்ந்தவர் மயில்சாமி. குஞ்சாண்டியூர் டிசிஎம் மில்லில் வேலைசெய்தார். 18.9.1987 அன்று மேட்டூர் - மேச்சேரி சாலையில் நடந்த சாலைமறியலில் பங்கேற்று சாலையை மறித்தபோது காவல்துறையினரால் சுடப்பட்டார். தலையில் குண்டுக்காயம பட்ட மயில்சாமியை காவல்துறையினர் பொட்டனேரி கிராமத்தில் உள்ள கிணற்றில் தூக்கி வீசினர். மறுநாள் இவரது உடைலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவர்களாகவே அடக்கம் செய்தனர். உறவினர்கள் கூட இவரது உடைலைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

14. வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள வெளியம்பாக்கம் எனும் ஊரைச் சேர்ந்தவர் 25 வயதான இராமகிருஷ்ணன். தொழுப்பேடு எனுமிடத்தில் சாலைமறியலில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். விடுதலையான சிறிது காலத்தில் சிறைக் கொடுமை பாதிப்புகளால் இறந்துபோனார்.

15. சிவதாபுரம் குப்புசாமி, சேலம் மாவட்டம் சிவதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி, வயது 46. தொடக்க காலம் முதலே வன்னியர் சங்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்தவர். சாலை மறியலில் ஈடுபட்டதால் 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான சிறிது காலத்தில் சிறைக்கொடுமை பாதிப்புகளால் இறந்துபோனார்.

16. முரசவாக்கம் கோவிந்தசாமி
காஞ்சிபுரம் மாவட்டம்.

17. குருவிமலை முனுசாமி நாயக்கர்
காஞ்சிபுரம் மாவட்டம்.

18. காயிரம்பேடு மருதசாமி
காஞ்சிபுரம் மாவட்டம்.

19. நத்தமேடு சுப்பிரமணி
தருமபுரி மாவட்டம்

20. விளம்பூர் பன்னீர்செல்வம்
காஞ்சிபுரம் மாவட்டம்.

21. பாப்பனம்பட்டு வீரப்பன்
விழுப்புரம் மாவட்டம்...