17/02/2018

அழிவின் விளிம்பில் நீலகிரி வரையாடுகள்: கவனிக்குமா அரசு?


தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக வன உயிர் கூட்டமைப்பின் இந்திய பிரிவு (WWF-Inida) தெரிவித்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பில் தமிழக - கேரள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் இப்போது 2500 வரையாடுகள் மட்டுமே இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழக மற்றும் கேரள வனத்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அதில் 3122 வரையாடுகள் வரை இருப்பதாக தெரியவந்தது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், வேகமாக அவை தொடர்ந்து அழிவதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2017-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கேரளத்தில் மட்டும், அம்மாநில அரசு மேற்கொண்ட கணக்கெடுப்பில் சுமார் 1,420 வரையாடுகள் இருப்பதாகத் தெரியவந்தது. அவற்றில் சுமார் 664 வரையாடுகள், எரவிக்குளம் தேசியப் பூங்காவில் மட்டுமே தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி வரையாடு அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் 1996 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. இந்த நீலகிரி வரையாடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் வேறெங்கும் காணப்படுவதில்லை.

மேலும், தமிழின் சங்க இலக்கியப் பாடல்களில் வரையாடு குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. வரையாடுகள் கடல் மட்டத்திலிருந்து 1,200 முதல் 2,600 மீட்டர் உயரம் உள்ள மலையில் புற்கள் அடர்ந்த சோலைப் புல்வெளி பகுதியில் வசிப்பவை.

பாறைகளில் முளைத்துள்ள புற்களையும், தாவர இலைகளையும் இவை உணவாக்கி கொள்ளும். முதிர்ந்த ஆண் வரையாடு சராசரியாக 100 கிலோ எடையும் 110 செ.மீ. உயரமும் இருக்கும். பெண் வரையாடு சராசரியாக 50 கிலோ எடையும் 80 செ.மீ. உயரமும் இருக்கும்.

பெண் வரையாட்டின் கொம்பு ஆண் வரையாட்டின் கொம்பைவிடக் குட்டையாகவும் பின்னோக்கிச் சரிவாகவும் அமைந்திருக்கும்.
ஆண் வரையாடு அடர் பழுப்பும் மெல்லிய கறுப்பும் கலந்த வண்ணத்தில் இருக்கும். பெண், சாம்பல் நிறத்தில் காணப்படும். ஆண் வரையாடுகள் தனியாகவும், பெண் வரையாடுகள் கூட்டமாகவும் வசிக்கும். ஆண் வரையாடுகளில் யார் தலைவன் என்ற போட்டி அதற்குள் சண்டை சாகும்வரை நடைபெறும். வரையாடுகள் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையாகும். ஆறு மாத காலம் வயிற்றில் குட்டியைச் சுமக்கும் இவற்றின் ஆயுள்காலம் 5 முதல் 6 ஆண்டுகள்.

இவைகளை எங்கெல்லாம் பார்க்கலாம்?
களக்காடு அருகே முத்துக்குளி வயல், மேகமலை ஹைவேவிஸ், ஆனைமலை, நீலகிரி மலை, வால்பாறை, கேரளத்திலுள்ள அமைதி பள்ளத்தாக்கு, பரம்பிக்குளம், ரண்ணி வனப்பபகுதிகளில் வரையாடுகள் நடமாட்டத்தை பார்க்கலாம்.

அச்சுறுத்தல்கள் என்ன ?

வரையாடுகளுக்கு இயற்கையான எதிரி சிறுத்தை, புலிகள் மற்றும் மனிதனே ஆவான். வரையாடுகளுக்கு புல்வெளிகள் நிறைய வேண்டும். அதுவும் உயரமான மலைகளில் இருக்க வேண்டும்.

மேலும் காடுகளின் பரப்பளவுகள் சுருங்கிக் கொண்டு வருவதால் வரையாடுகளுக்கு தேவையான உணவு கிடைக்காததால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருகிறது.

இவை காலையும், மாலையும் மட்டுமே மேய்ச்சலுக்கு செல்லும். பகல் பொழுதில் ஓய்வெடுத்துக் கொள்ளும். இரவில் வரையாடுகளுக்கு பார்வை தெரியாது. அதிகமான மழைப்பொழிவு, செழிப்பான பிரதேசங்களில் மட்டுமே இவை வசிக்கின்றன...

தமிழா விழித்துக்கொள்...


உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?


The World’s only living civilization...

உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன.

மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்சு, ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது.

அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.

நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை “The World’s only living civilization” என்று டிசுகவரி தொலைக்காட்சியின் “The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்சு.

மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.

இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூசித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும்; இதற்கான காரணம் தெரியாது, அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?

அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு.

இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

குறிப்பு...

அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரயைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக கொண்டு செயல்பட்டது மேலும் கீழ் திசையில் நெல்லை வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது...

இது தான் பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி...


விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்...


குதிர்', 'தொம்பை', 'பத்தாயம்', 'குலுமை'...

இதெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா?

ஒரு காலத்தில் நம் விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள் தான்...

தந்திரக்கார வியாபார உலகம், நம்மிடம் இருந்து பறித்தெடுத்த எத்தனையோ நல்ல விசயங்களில் இவையும் அடக்கம்..

நம்முடைய பணத்துக்கு மட்டுமல்ல... சூழலுக்கும் வேட்டு வைக்காத இதுபோன்ற பொருட்களெல்லாம் நம்மைவிட்டு அகன்றதோடு, அவற்றின் பெயர்கள்கூட புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன..

இந்தச் சூழலில்... பாரம்பர்யத்தை மறக்காமல், இப்படிப்பட்ட சேமிப்புக் கலன்களை ஆங்காங்கே ஓரிருவர் பராமரித்துப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பது ஆறுதலான விசயம். அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நீலாவதி.

ஒரு காலத்துல வீட்டுக்கு வீடு குதிர், அடுக்குப் பானையெல்லாம் கட்டாயம் இருக்கும். அடுக்குப் பானையிலதான், உப்பு, புளி, மிளகாய் போட்டு வெச்சுருப்போம். அது விதைகளைக்கூட சேமிச்சு வைக்கலாம். உப்பைப் போட்டு முட்டைகளை வெச்சா... கெட்டுப் போகாது. அப்படியே குளுகுளுனு இருக்கும். இப்பவெல்லாம் துருப்பிடிக்காத எஃகு பொருட்கள் வந்த பின்னாடி, அடுக்குப் பானையெல்லாம் போயே போச்சு.

அறுவடை பண்ணிட்டு வரும் நெல், தானியங்களைக் கொட்டி வைக்கிறதுக்கு குதிர் இருக்கும். ஒவ்வொண்ணும் பத்து, பன்ணெண்டு அடி உயரம் வரைகூட இருக்கும். வரகு வைக்கோல்ல களிமண்ணைச் சேர்த்து, ஊறவெச்சு குதிர் செய்வாங்க. அதுமேல சாணிப்பால் போட்டு மெழுகிடுவாங்க. அதுக்குள்ள தானியங்களைக் கொட்டி வெச்சா... வருசக் கணக்கா கிடக்கும். கூடவே வேப்பிலை, நொச்சியிலை இதையெயெல்லாம் போட்டு வெச்சுட்டோம்னா... பூச்சி, பொட்டு அண்டாது. அப்படித்தான் இந்த குதிர பராமரிச்சு பயன்படுத்திக்கிட்டிருக்கேன் பல வருசமா..

வீட்டுத் தேவைக்குதான் குதிர். பெரிய அளவுல அம்பது, அறுபது மூட்டைனு சேமிக்கணும்னா... பத்தாயம் கட்டி வெச்சுருப்பாங்க. மாம்பலகை மாதிரியான பலகைங்கள வெச்சு தயார் பண்ணியிருப்பாங்க. ஒவ்வொரு விவசாயி வீட்டுலயும் ஒண்ணு, ரெண்டு பத்தாயம் கண்டிப்பா இருக்கும். அறுவடை முடிஞ்சதும் அதுல நெல்லைக் கொட்டி வெப்பாங்க. வருசக் கணக்குல கிடக்கும். தேவைப்பட்டப்ப எடுத்துப் பயன்படுத்துவாங்க. இப்ப இதெல்லாம் கண்ணுல சிக்குறதேயில்லை'' என்று ஆதங்கப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு சே(ஜெ)யராமன், இப்போதும்கூட பாரம்பர்ய முறைப்படி விதைகளைச் சேமித்து வருபவர்களில் ஒருவர்.

அறுவடை செய்யுறப்பவே விதைக்காகனு கொஞ்சம் கதிரை முத்த விடுவோம். அதை அறுத்து வெயில்ல காயவெச்சு, வைக்கோலுக்குள்ள சுத்தி, அதுக்குமேல சாணியைப் போட்டு மெழுகி பத்திரப்படுத்தி வெப்போம். இதுக்கு பேரு கோட்டை. அமாவாசை, இல்லனா... சிவராத்திரி அன்னிக்கு விதைநெல்லைக் காய வெச்சு, மறுநாள்தான் இப்படி கோட்டை கட்டுறது பழக்கம். இப்படிச் செய்யுறதால நெல்லோட முளைப்புத் திறன் அதிகமாகும். ஒரு வருசம் வரைக்கும் விதைநெல்லுக்கு வீரியம் குறையாது. இதுவே...

பெரிய அளவுல விதைநெல் சேமிக்கணும்னா... அதுக்கு சேர் கட்டி வைக்கிறதுனு இன்னொரு முறையும் இருந்துச்சு. வீரிய விதை, அது, இதுனு வந்த பிறகு, காசு கொடுத்து சிறுகட்டு சிறுகட்டாக (packet) வாங்க ஆரம்பிச்சாங்க. கோட்டையைக் கோட்டை விட்டுட்டாங்க என்று உதட்டைப் பிதுக்கினார்.

பாரம்பர்ய வேளாண்மை முறைகள், சேமிப்பு முறைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம் பல்கலைக்கழக வேளாண்மைப் புல இணைப் பேராசிரியர் சுந்தரமாரி. அவரிடம் பழங்கால சேமிப்பு முறைகள் பற்றிக் கேட்ட போது, ரொம்பவே சுவாரசியமாகி விட்டார்.

விதைக்காக சேமிக்கற தானியங்கள மணல் இல்லனா... சாம்பல் கலந்து வெக்கலாம். துவரையை செம்மண்ணோடு கலந்து வைப்பாங்க. பெரும்பாலும் அடுக்குப் பானையை அடுப்புக்கு மேலதான் தொங்க விட்டிருப்பாங்க. அடுப்புல வர்ற புகையே, பூச்சிவிரட்டியா பயன்படும். தரையில வட்டமாவோ, சதுரமாவோ குழியெடுத்து அதுல தானியங்களைக் கொட்டி, சாக்கு போட்டு, கல்லால் மூடி வெச்சு சேமிக்கிற பழக்கமும் இருந்திருக்கு.

இப்படி ஒண்ணொண்ணுக்கும், ஓரோரு யுக்தியைக் கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்காங்க நம்ம முன்னோருங்க. ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு மாதிரியான சேமிப்புக் கலன்களையும் பயன்படுத்தியிருக்காங்க. ஆனா, அதுமாதிரியான சேமிப்புக் கலன்களையெல்லாம் வடிவமைக்கிறதுக்கு கூட இன்னிக்கு ஆளேயில்ல.

பெரும்பாலான விசயங்கள் கையை விட்டுப் போயிடுச்சு. மிச்ச சொச்சமிருக்கற விசயங்களும் போயிக்கிட்டே இருக்கு. இப்ப ஓரளவு விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கறதால... பழைய முறைகளையெல்லாம் கடைபிடிங்கனு விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கோம் என்றவர்..

பார்ப்போம்... காலம் தானே எல்லாத்தையும் தீர்மானிக்கணும் என்று எதிர்பார்ப்போடு முடித்தார்...

தமிழ்நாடு விடுதலையை முன் வைத்த போது தான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார் மாவீரன் வீரப்பன்...


இந்திய ரா பயங்கரவாதிகளின் விடுதலைப் போராட்டங்களை அடக்கும் பயங்கரவாதம்...

வீரப்பன்...

யானைத்தந்தம் கடத்திய போது கொல்லப்படவில்லை.
சந்தணக்கட்டை கடத்திய போது கொல்லப்படவில்லை.

தமிழ்நாடு விடுதலையை முன்வைத்த பின்பே நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்..

இந்திய உளவுப்படையானது இந்தியாவுக்குள் மட்டுமல்ல இந்தியாவுக்கு வெளியிலும் கொலைகள் செய்கிறது.. 

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் எனவே உளவுப்படைகளும் சட்டப்படியே செயற்படும் என்றும் பலர் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அது அமெரிக்க சி.ஜ.ஏ மற்றும் ரஸ்சிய கே.ஜி.பி இஸ்ரவேலின் மொசாட் போன்று மிகவும் மோசமான பயங்கரமான உளவுப்படையாகும்..

இந்த உளவுப்படைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் எவ்வளவு? அவர்களின் செயற்பாடு என்ன? போன்ற குறித்து பாராளுமன்றத்தில் கூட கேட்க முடியாது. அந்தளவிற்கு அவர்களின் அனைத்து செயற்பாடுகளும் இரகசியமாக வைக்கப்படுகிறது. அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அவர்களும் நீதி, நியாயம், சட்டம் எது குறித்தும் அக்கறையின்றி மிகக்கொடிய கிரிமினல்களாக வலம் வருகின்றனர்..

வங்கதேச விடுதலையின் போது முக்திபாணி என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு பயிற்சி ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்தது.

பின்னர் வங்கதேசம் விடுதலையடைந்ததும் இந்திய அரசு செய்த முதல் வேலை தான் பயிற்சி கொடுத்த அத்தனை போராளிகளையும் இரகசியமாக கொன்றது தான்.

இதனையே புளட் அமைப்பினர் “வங்க தந்த பாடம்” என்று பிரசுரம் அடித்து வெளியிட்டனர்.

ஆனால் பின்னர் இது இந்திய அரசுக்கு தெரிந்து விட்டது என்றதும் அத்தனை பிரதிகளும் தீயிட்டு அழித்தார்கள். இந்த “வங்க தந்த பாடம்” பிரசுர வெளியீட்டுக்கு உழைத்த சந்தியார் பின்னர் இந்திய உளவுப்படையின் ஆசியுடன் புளட் தலைமைப் பீடத்தினால் சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டார்...

புலவர் கலியபெருமாள் தன் இறுதிக் காலங்களில் தனது தலைவராக சந்தன வீரப்பன் அவர்களைக் குறிப்பிட்டார்..

தமிழ்நாட்டு சேகுவாரா என்று அழைக்கபட்ட கலியபெருமாள் வீரப்பனை தன் தலைவர் என்று குறிப்பிட்டமைக்கு காரணம் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன் வைத்தமையே...

அதே போல் வீரப்பன் யானைத் தந்தம் கடத்திய போது கொல்லப்படவில்லை. சந்தணக் கட்டைகளை கடத்தியபோது கொல்லப்படவில்லை. மாறாக தமிழ்நாடு விடுதலையை முன் வைத்த போது தான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்...

இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியது என்னவெனில் தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் முயற்சி செய்தாலும் அவர்களை இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் கொன்று அழிப்பதற்கு தயங்காது என்பதே..

இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு நிறைய உதவி செய்ததாகவும் ராஜீவ் கொலைக்கு பின்னரே அது உதவிகளை நிறுத்தியதாகவும் இன்றும் கூட சில இந்திய விசுவாசிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது தவறு.

ஆரம்பம் முதலே இந்திய அரசும் அதன் உளவுப் படைகளும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியே வந்திருக்கின்றது. அதுதான் உண்மை வரலாறு ஆகும்..

இன்றும் அதன் தொடர்ச்சி தான் அணுஉலை, மீத்தேன், கெயில், நூட்ரீனோ, சாகார்மாலா எல்லாம்...

இப்போது சொல் தமிழா..
இன்னுமா நீ இந்தியன்...

கம்யூனிசமும் - திராவிடம் - இந்தியம் - தலித்தியம் போன்ற அனைத்துமே தமிழினத்திற்கு எதிரானதே... இந்த மாதிரி போலிகளை தமிழகத்தில் இருந்து அப்புறபடுத்துவோம்...


தமிழர்கள் அனைவரும் ஆய்வறிஞர் குணா அவர்களின் புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்...


ஆய்வறிஞர் குணாவின் புத்தகங்களான திராவிடத்தால் வீழ்ந்தோம், வள்ளுவத்தின் வீழ்ச்சி, மண்ணுரிமை, வள்ளுவப் பார்ப்பாரியம், முன்தோன்றி மூத்தகுடி, தொல்காப்பியத்தின் காலம், நாற்றாங்கால், போன்றவற்றை ஒவ்வொரு தமிழரும் படித்துத் தெளிய வேண்டும்.

பாவாணருக்குப் பின் தமிழின விடுதலைக் கருத்துக்களை தெளிவாக விளக்கியவர் குணா மட்டுமே..

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை..

மிகப்பெரும் ஆய்வாளரான ஆய்வறிஞர் குணா ஒரு சாதாரன எழுத்தாளராகக்கூட..

பலருக்கும் அறிமுகம் ஆகாதவராக இருப்பது நமக்கு அவமானம்..

பாவாணரை இழந்து வாடுவது போதும். இவரையும் நாம் இழந்து விட வேண்டாம்.

தமிழினம் விழித்தெழ வேண்டும்.

தமிழறிஞர்களை நாம் கொண்டாட வேண்டும்..

அவரின் கருத்துக்களை பின்பற்றி தமிழர் தேசியம் அமைய களம்காண வேண்டும்...

இந்த ஓட்டல் ஓனர், பாஜக மோடியின் நண்பனாக இருப்பானோ - மயிலாடுதுறை...


இளைய சமுதாயமே உங்களுக்காக...


வாயு முத்திரை...


வாயு முத்திரை என்பது ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருக்குமாறு செய்வது.

பலன்கள்...

ஆட்காட்டி விரல் வாதம் தொடர்புடையது என்று தெரியும்.

இது நம் உடலில் அதிகமாக உள்ள காற்று மூலத்தை குறைக்க உதவுகிறது.

சோறு தின்னதுக்குப் பின் உடல் மதமதன்னு இருந்தால் இம்முத்திரையை வஜ்ரானத்தில் அமர்ந்து செய்தால் சரியாகும்.

நடுக்குவாதம் (Parkinson)  உள்ளவர்களின் சிரமம் குறைக்கவும் இது உதவும்.

கீழ்வாதம் உள்ளவர்களின் சிரமமும் இதனால் குறையும்...

மோடி என்ற பெயரில் இருப்பவனிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள் அப்பு...


வள்ளுவத்தின் வீழ்ச்சி புத்தகத்தில் இருந்து...


சங்கதமாக்குதல் (Sanskritisation) என்பதே ஒருவகையான திருட்டு போல உள்ளது. 

உண்மையை மறைப்பது, வரலாற்றைத் திரிப்பது,  பொய்யுரைப்பது, அரசியல் செய்வது என்று பல உள்நோக்கத்தோடு இவை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதைப் பற்றி பக்கம் 417 -இல் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது:

"சங்கதமாக்கம் என்னும் பெயரிலேயே தமிழ்த் தெய்வங்கள் ஆரிய மயமாக்கப்பட்டன.

இவ்வாறே, தமிழரின் வரலாற்று நாயகர்களும் தலைசிறந்த முனிவர்களும் சங்கதப்படுத்தப்பட்டனர்.

அகத்தியன் என்ற தமிழ் மாமுனியும் ஆரியமயமாக்கப்பட்டார்.  தமிழரின் பெருந்தெய்வங்களும், சிறுதெய்வங்களும், பெண் தெய்வங்களும், போர் தெய்வங்களும்கூடச் சங்கதப்படுத்தப்பட்டன.

பாகத மொழியில் 'விண்ஃஉ' (Vinhu) என்றிருந்ததே விஃழ்ணு (Vishnu) என்றானது. 

விண்டு என்னும் தமிழ்ப்பெயரின் திரிபுகளே அவையாகும்.

அதேபோல், 'கண்ஃஅ' (Kanha) என்றிருந்ததே சங்கதத்தில் 'கிருஃழ்ண' (Krishna) என்று திரிந்தது. 

'கண்ஃஅ' என்பது கண்ணன் என்னும் தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே என்பதைச் சொல்லித்தானா தெரிய வேண்டும்? 

தமிழிலிருந்த மூலப்பெயர்களைச் சங்கதப்படுத்தியதனால் வரலாறே குழப்பப்பட்டுத் திசை திருப்பப்பட்டது. 

ஆந்திரன் என்ற காரணத்தாலேயே கண்ணன் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறுவர். 

இருக்கு வேதத்தில் இக் கண்ணன், இந்திரனுக்குப் பகைவனான ஓர் அரக்கன் ஆவான்...

மராட்டியன் ரஜினி மக்கள் மன்ற செயலாளராக லைக்கா தயாரிப்பு நிறுவன நிர்வாகியாக இருந்த ராஜு மகாலிங்கம் நியமனம்...


பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக...


சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும்...

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.

அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்...

விசும்பு என்றால் ஆகாயம்;
வலவன் என்றால் சாரதி;
ஏவாத என்றால் இயக்காத;
வானவூர்தி என்றால் விமானம்.

விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தான்...

இந்தியா தமிழர்கள் மீது மறைமுகப் போர் செய்துக் கொண்டிருக்கிறது.. தமிழா விழித்துக்கொள்...


இத்தனை வருடத்தில் இப்போது தான் ஒரு உண்மையை பேசி இருக்கிறார் பாஜக மோடி...


மராட்டியன் ரஜினி... உன் படம் ஏப்ரல் மாதம் தானே வருது... நீ இப்போவே நடிப்பை தொடங்கிட்டியே...


காவிரி நதிநீர் தீர்ப்பை பத்தி ஒரு விசயமும் தெரியல ஆன கருத்து சொல்ல வந்துட்டார் காலா போங்க போய் மீனா பொன்னு கூட கூத்தாட்டம் போடுங்க அதுக்கு தான் நீங்க  சரி பட்டு வருவிங்க...

தமிழகத்தில் இன்று வரை நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டங்கள்...


ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே காட்டுபாளையம், பாப்பாங்காட்டூர் பகுதியில் வடமாநில கொள்ளையர்கள் ஊடுருவல்...


விசாரித்ததில் 15-20 க்கும் மேற்பட்டோர் வந்ததாகவும் பல பேர் கோபி பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும்  கூறி உள்ளதாக தெரிகிறது மேலும் 3 பேர் மட்டுமே பொது மக்களிடம் சிக்கி உள்ளனர்.

அவர்களை ஊர் மக்கள்  அடித்து விசாரணை செய்து பின்பு போலீஸ் வசம் ஒப்படைக்க பட்டதாக தகவல்கள் வந்துள்ளது...

கன்னட பிராமணன் கமல்.. பிழைப்பது தமிழ்நாட்டில்.. விசுவாசம் கர்நாடகத்திற்கு...


ஏனெனில் இனம் இனத்தோடு தான் சேரும்...

கார்ப்பரேட்க்கு மட்டும் தண்ணீர் கிடைப்பது எப்படி.?


காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டது அநீதி... மேலாண்மை வாரியம் அமைப்புக்கு வரவேற்பு பாமக அறிக்கை...


தமிழக விவசாயிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த காவிரி நீர் பிரச்சினை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வழங்கப்பட்ட அனைத்து அம்சங்களையும் உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவில் 14.74 டி.எம்.சி.யை குறைத்து விட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் இந்த அம்சம் மட்டும் மிக ஏமாற்றமளிக்கிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

காவிரியில் தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை நடுவர் மன்றம் நிர்ணயித்திருந்த 192 டி.எம்.சி.யுடன் கூடுதலாக 72 டி.எம்.சி. சேர்த்து 264 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருந்த நிலையில், அதை ஏற்காத உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவை  177.25 டி.எம்.சி.யாக குறைத்திருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு 14.74 டி.எம்.சி. குறைந்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்திலிருந்து வழங்கப்படும் தண்ணீர், தமிழகத்திலிருந்து கிடைக்கும் தண்ணீர் ஆகிய இரண்டையும் சேர்த்து தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி.யில் இருந்து 404.25 டி.எம்.சி.யாக குறைந்து விட்டது. இதற்காக கூறப்பட்டுள்ள காரணங்களை ஏற்க முடியாது.

தமிழ்நாட்டில் 10 டி.எம்.சி. அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதாகவும், அதைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கருத்தில் கொண்டு தான் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நீர் பிரச்சினை என்பதே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீரை பகிர்ந்து கொள்வது தானே தவிர, நிலத்தடி நீரை பயன்படுத்துவது பற்றியது அல்ல. அதுமட்டுமின்றி, பெங்களூரையொட்டியுள்ள ஏரி, குளங்களில் பல டி.எம்.சி. நீரை கணக்கில் காட்டாமல் சட்டவிரோதமான முறையில் கர்நாடகம் தேக்கி வைத்துள்ளது. அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கர்நாடகத்துக்கு  சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகமும் இதில் கோட்டை விட்டு விட்டது.

கர்நாடகத்தில் பெங்களூர் நகரம் மட்டுமே காவிரி நீரை நம்பியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 7 மாநகராட்சிகள், 19 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்கள் காவியைத் தான் குடிநீருக்காக நம்பியுள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது  ஏற்றுக்கொள்ள முடியாதது.

1924-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போது காவிரியில் தமிழகத்திற்கான பங்கு 575.68 டி.எம்.சி.யாக இருந்தது. அதன்பின்னர் 1970-களில் காவிரி பிரச்சினை தீவிரமடைந்த போது 1972-ஆம் ஆண்டில் தமிழகத்தின் பங்கு 489 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் போது மேலும் குறைக்கப்பட்டது. நடுவர்மன்ற இறுதித்  தீர்ப்பின் போது 419 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்ட தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு இப்போது  404 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது அரை நூற்றாண்டில் 170 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் இழந்துள்ளது. இது தான் அரை நூற்றாண்டு கால திராவிட ஆட்சிகளின் சாதனை ஆகும்.

அதேநேரத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக குடியரசுத் தலைவர் மேற்பார்வையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். காவிரி நீரை மாதாந்திர அடிப்படையில் தமிழகத்திற்கு திறந்து விடுவதற்காக நடுவர் மன்றம் தயாரித்த அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் தமிழகத்திற்கு சாதகமான அம்சம் தான். அதேநேரத்தில் தமிழகத்திற்கு சாதகமான இந்த அம்சங்கள் அனைத்தும் இயல்பாக நடந்து விடும் என்று நினைத்து தமிழக அரசு  அலட்சியமாக இருந்தால்மொத்த தமிழகமும் ஏமாந்து விடும்; பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பு தான் இறுதியானது என்றும், இதை எதிர்த்து எந்த வகையிலும் மேல்முறையீடு செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம்  கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு அந்த மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, உச்சநீதிமன்றம் அளித்துள்ள அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் இந்த விஷயத்தில் பாகுபாடு காட்டாமல் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வை அனுக முடியுமா? என்பதற்காக சட்டப்படியான சாத்தியக் கூறுகளையும் தமிழக அரசு ஆராய வேண்டும்...

மோடியை நான் இரும்பு மனிதராக பார்கிறேன் - பாஜக எச்ச. ராஜா சர்மா...


தமிழர்கள் - பழைய இரும்பு சாமான் ஈழம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்...

உடலை வலுவாக்கும் கீரைகள்...


கோவிலின் பிரசாதமாக பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய்கலந்த எண்ணெய்யை வழங்குவார்கள்.

இந்த எண்ணெய்யைத் தேய்த்து 48 நாட்கள் தலைமுழுகி நீராடினால் கண் நோய்கள் மட்டுமல்ல. கழுத்தை நெறிக்கும் பிரச்சினைகளும் காணாமல் போகும்.

பொன்னாங் கண்ணி, இப்பூவுலகில் பூத உடலைத்தேற்றிக் கோவிலாக்க வந்த சிவாம்சம் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாருங்கள்... பொன்னாங்கண்ணி கொண்டு உடலோம்பும் கலையை அறிவோம்.

குடற்புண் குணமாக...

பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க...

பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.

அபார நினைவாற்றல் பெற...

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.

வெள்ளைப்படுதல் குணமாக...

பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.

கண் நோய்கள் விலக...

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.

மேனியழகு உண்டாக...

100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்பு இரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும் பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.

முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...

முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.

உஷ்ணம் தீர...

பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.

நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...

இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல் தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன்.

கவனமாய் குறிப்பெடுத்து, கருமையான கூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.

தேவதாருக்கட்டை- 50 கிராம்
கோஷ்டம்- 50 கிராம்
ஏலக்காய்- 50 கிராம்
வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்
ஏலரிசி- 50 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்

முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும்.

பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையை மட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும்.

அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும்.

குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும்.

வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும்.

மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

இளநரை நீங்க...

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.

நூறாண்டு வாழ..

பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது.

பொன்னாங்கண்ணியைத் தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும்.

பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில் வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும்.

பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.

பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்...

இப்போது புரிகிறதா யார் அவனுக்கு எதிராக போராடுகிறார்களோ அவர்களை எப்படி விலை கொடுத்து வாங்குகிறான் என்று...


ஜெர்மனியில் இலவசமாக பேருந்துப் பயணம்: சென்னை நகருக்கு பாமக முன்வைத்த கோரிக்கை...



போக்குவரத்து நெரிசலையும் காற்று மாசுபாட்டையும் குறைக்கும் நோக்கில் சென்னை நகரில் மாநகரப் பேருந்துகளை இலவசமாக இயக்க வெண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 2016-ல் அறிவித்த போது, பலரும் அதனை விமர்சனம் செய்தார்கள்.

ஆனால், ஜெர்மனி நாட்டில் மாசுபாட்டை தடுக்க அதுதான் தீர்வு என இப்போது ஜெர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெர்மனி நாட்டின் முக்கியமான ஐந்து நகரங்களில் (Bonn, Essen, Herrenberg, Reutlingen, Mannheim) பேருந்துகளை இலவசமாக இயக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுபாட்டு விதிகளை நிறைவேற்றும் நோக்கில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஐந்து நகரங்களிலும் 'மக்கள் எங்கேயும் ஏறி, எங்கேயும் இறங்கும் வகையில், பயணச்சீட்டுகள் ஏதுமின்றி' பேருந்துகளை இலவசமாக இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

கார்களின் தலைமையகமாக இருக்கும் ஜெர்மனி நாடு, பேருந்துகளை இலவசமாக இயக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபுள்யூ, ஃபோக்ஸ்வேகன், ஓபெல், போர்சே எனும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவைதான். இலவச பேருந்துகளை இயக்குவதற்கான செலவினை இந்த கார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என கிரீன்பீஸ் அமைப்பு கோரியுள்ளது.

பன்னாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவின் மீது ஆடம்பர கார்களை திணிக்கின்றன. ஆனால், அவர்கள் நாட்டில் இலவச பேருந்துகளை இயக்குகிறார்கள். இதிலிருந்து சென்னை பாடம் கற்க வேண்டும்.

2016 தேர்தல் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது போன்று, சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 ஆக அதிகரித்து, அவற்றை இலவசமாக இயக்க வேண்டும்...

விழித்துக்கொள் தமிழா உன்னை சுற்றி சுடுகாடுகள் உருவாக தயாரக...


திட்டமிடப்பட்டது கார்ப்பரேட்களால் பல வருடங்கள்  முன்னரே...தமிழர்களை மட்டும் பெரும்பான்மையாக பாதிப்பவை அனைத்தும்..

கடலிலிருந்து 25 கி. மி தொலைவில் இருக்கவேண்டுமென விதி ஆனால் 10 கி. மி தொலைவில் அவ்வாறெனில் சட்டம் எதற்கு அதை அனுமதித்த அரசு எதற்கு?

மக்களுக்கானவைகளா இவை?  கார்ப்பரேட்களுக்கானவையா?

இப்படி அசிங்கம் பன்ன தான் எங்கள்ட்ட 0.5% தூய்மை இந்தியா வரி வாங்குனிங்களாடா பாஜக டூபாக்கூர்களா...


பிரதமர் மோடி புதுச்சேரி வருகை , மொட்டை அடித்து போராட்டம்...


பாஜக ஆளும் மாநிலங்களுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்படுகின்றது எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தை பாஜக அரசு மொட்டை அடிக்கின்றது அதன் பாதிப்பாக மக்கள் மொட்டை அடிக்கப்படுகின்றார்கள் இதை சரி செய்யக் கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளோம்.. என போராட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்...

பிரமிளா குர்மூர்த்தி பின்னணியும் பிராமண அரசியலும்...


பிரமிளா குருமூர்த்தி கர்நாடக இசைக்கலைஞர் துணைவேந்தராக வரும் அளவுக்கு தகுதி கிடையாது என்றாலும் அரசியல் பின்புலமும் பிராமண சாதியில் செல்வாக்கும் உள்ளவர்.

இவரை துணைவேந்தராக நியமித்ததன் பின்னணியில் பிராமண லாபி இருப்பதை நாம் கண்டுணர முடியும்.

அமெரிக்காவின் க்ளிவ்லேண்ட் மாகாணத்தில் இருக்கும் ‘க்ளீவ்லேண்ட் பைரவி பைன் ஆர்ட்ஸ்’ என்ற கர்நாடக சபாவை சுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார். இதனால் இவரது பெயரே க்ளீவ்லேண்ட் சுந்தரம்.

ஆண்டு தோறும் தியாராய கீர்த்தனைகள், பஜனைகள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், கர்நாடக இசை என அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடத்தும் இந்த சுந்தரத்தின் பைன் ஆர்ட் நிறுவனத்தோடு நீண்ட கால தொடர்புடையவர்தான் பிரமிளா குருமூர்த்தி.

சுதா ரகுநாதன் போன்ற இசைக்கலைஞர்களுக்கு விருது கொடுத்தும் இந்த அமைப்பு கௌரவித்திருக்கிறது.

இதே சுதாரகுநாதன் தான் பிரமிளா குர்மூர்த்தியை துணைவேந்தராக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

பிரமிளா குர்மூர்த்தி இசைப்பல்கலைக்கழத்திற்கு துணை வேந்தர் ஆனதும் முதன் முதலாக அவர் செய்தது. க்ளீவ்லேண்ட பைரவி பைன் ஆர்ட் சபாவின் நிறுவனர் சுந்தரத்துடன் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடுகிறார்.

அது அமெரிக்க மாணவர்களுக்கு நமது பாரம்பரிய இசையைக் கற்றுக் கொடுத்து அதற்கு பட்டயச் சான்றிதழ் அளிப்பதற்கான ஒப்பந்தத்தை பிரமிளா குருமூர்த்தியும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் செய்கிறார்கள்.

பாரம்பரிய இசை என்று குறிப்பிடுகிறார்களே தவிற எது பாரம்பரிய இசை என்று குறிப்பிடவில்லை.

இந்த ஒப்பந்தத்திற்காக பல கோடி ரூபாய் க்ளீவ்லேண்ட் சுந்தரத்திற்கு நமது வரிப்பணத்தில் இருந்து செல்லும். இதற்கு எல்லாம் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை.

கர்நாடக இசை, பிரமாண நம்பிக்கைகளை இசை வடிவத்தில் பிரச்சாரம் செய்து வரும் க்ளிவ்லேண்ட் சுந்தரம் செய்வது பாரம்பரிய இசையா நமது வயலோரங்களில் பாடப்படும் இசை தன் கணீர் குரலால் பாடி நம் நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்யும் புஷபவன்ம் பாடுவது பாரம்பரிய இசையா?

இசைக்கு சாதி கிடையாது என்று சில பார்ப்பனர்கள் சொல்வார்கள்.

ஆனால் இசைக்கு சாதி உண்டு என்பது புஷபவனம் குப்புசாமியை நிராகரித்து விட்டு பிரமிளா குருமூர்த்தியை பதவிக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் உறுதியாகிறது.

மேலும் துணைவேந்தர் பதவியை பெற கோடிக்கணக்கான ரூபாய்கள் லஞ்சமாக பெறப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் உள்ள நிலையில், மாஃபா பாண்டியராஜன் இந்த நியமனம் தொடர்பாக விரிவான பதிலை அளிப்பாரா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...

தமிழகத்திற்கு சரியான ஆளுமை இருந்தால் இந்த நிலை வந்திருக்காது...


காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது - உச்சநீதிமன்றம்...


2007-ல் அமைக்கப்பட்ட நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது...