பிரமிளா குருமூர்த்தி கர்நாடக இசைக்கலைஞர் துணைவேந்தராக வரும் அளவுக்கு தகுதி கிடையாது என்றாலும் அரசியல் பின்புலமும் பிராமண சாதியில் செல்வாக்கும் உள்ளவர்.
இவரை துணைவேந்தராக நியமித்ததன் பின்னணியில் பிராமண லாபி இருப்பதை நாம் கண்டுணர முடியும்.
அமெரிக்காவின் க்ளிவ்லேண்ட் மாகாணத்தில் இருக்கும் ‘க்ளீவ்லேண்ட் பைரவி பைன் ஆர்ட்ஸ்’ என்ற கர்நாடக சபாவை சுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார். இதனால் இவரது பெயரே க்ளீவ்லேண்ட் சுந்தரம்.
ஆண்டு தோறும் தியாராய கீர்த்தனைகள், பஜனைகள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், கர்நாடக இசை என அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடத்தும் இந்த சுந்தரத்தின் பைன் ஆர்ட் நிறுவனத்தோடு நீண்ட கால தொடர்புடையவர்தான் பிரமிளா குருமூர்த்தி.
சுதா ரகுநாதன் போன்ற இசைக்கலைஞர்களுக்கு விருது கொடுத்தும் இந்த அமைப்பு கௌரவித்திருக்கிறது.
இதே சுதாரகுநாதன் தான் பிரமிளா குர்மூர்த்தியை துணைவேந்தராக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
பிரமிளா குர்மூர்த்தி இசைப்பல்கலைக்கழத்திற்கு துணை வேந்தர் ஆனதும் முதன் முதலாக அவர் செய்தது. க்ளீவ்லேண்ட பைரவி பைன் ஆர்ட் சபாவின் நிறுவனர் சுந்தரத்துடன் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடுகிறார்.
அது அமெரிக்க மாணவர்களுக்கு நமது பாரம்பரிய இசையைக் கற்றுக் கொடுத்து அதற்கு பட்டயச் சான்றிதழ் அளிப்பதற்கான ஒப்பந்தத்தை பிரமிளா குருமூர்த்தியும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் செய்கிறார்கள்.
பாரம்பரிய இசை என்று குறிப்பிடுகிறார்களே தவிற எது பாரம்பரிய இசை என்று குறிப்பிடவில்லை.
இந்த ஒப்பந்தத்திற்காக பல கோடி ரூபாய் க்ளீவ்லேண்ட் சுந்தரத்திற்கு நமது வரிப்பணத்தில் இருந்து செல்லும். இதற்கு எல்லாம் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை.
கர்நாடக இசை, பிரமாண நம்பிக்கைகளை இசை வடிவத்தில் பிரச்சாரம் செய்து வரும் க்ளிவ்லேண்ட் சுந்தரம் செய்வது பாரம்பரிய இசையா நமது வயலோரங்களில் பாடப்படும் இசை தன் கணீர் குரலால் பாடி நம் நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்யும் புஷபவன்ம் பாடுவது பாரம்பரிய இசையா?
இசைக்கு சாதி கிடையாது என்று சில பார்ப்பனர்கள் சொல்வார்கள்.
ஆனால் இசைக்கு சாதி உண்டு என்பது புஷபவனம் குப்புசாமியை நிராகரித்து விட்டு பிரமிளா குருமூர்த்தியை பதவிக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் உறுதியாகிறது.
மேலும் துணைவேந்தர் பதவியை பெற கோடிக்கணக்கான ரூபாய்கள் லஞ்சமாக பெறப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் உள்ள நிலையில், மாஃபா பாண்டியராஜன் இந்த நியமனம் தொடர்பாக விரிவான பதிலை அளிப்பாரா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.