20/07/2021

எதிர்காலத் தமிழகமும் : எனது கனவும் : சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்...


சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்...

1. புகையிலை சிகரெட் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

இருப்பினும் அதற்குப்பதில் உடலுக்கு நலம் தரும் மூலிகை சிகரெட்டுகள் (துளசி, கற்றாழை, வேம்பு, புதினா, போன்றவை) அறிமுகப்படுத்தப்பட வேண்டும்..

2. அந்நிய மதுபானம் தடை செய்யப்பட வேண்டும்.

3. தென்னை, பனை கள் பக்குவப்படுத்தப்பட்டு குடியுரிமை அட்டை உள்ளவர்க்கு (18 வயது) மட்டும் விற்கப்பட வேண்டும்.

4. அவரவர் இல்லத்தில் மட்டும குடிக்க முடியும். பொது இடங்களில் கள் அருந்துவதற்கு தடை வேண்டும்..

5. தமிழகம் முழுவதும் கொசு ஒழிக்கப்பட வேண்டும்.

விஷப்பாம்புகள் உயிருடன் பிடித்து தருவோருக்கு பரிசுகள் தரவேண்டும். அந்த பாம்புகள் அனைத்தும் காடுகளில் பாதுகாப்பாக விடப்பட வேண்டும்..

6. காடுகளில் இருந்து எந்த விதமான ஆபத்தான விலங்கும் நாட்டிற்குள் நுழையாதபடி உயரமான வேலி அமைக்கப்பட வேண்டும்..

7. அந்நிய காட்டுக்கருவேல மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும், பார்த்தீனிய செடிகளும் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்..

8. அந்நிய குளிர்பானங்கள் ஒழிக்கப்பட்டு மோரும், இளநீரும், எலுமிச்சை, பழ, கீரை பானங்கள் நாடெங்கும் அறிமுகத்தப்பட வேண்டும்..

9. ஆங்கில வழி மருத்துவ முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு சித்தா மருத்துவ முறை அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்..

10. ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் சித்தா மருந்தகங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்தா மருத்துவக்கல்லூரி, மூலிகைப் பண்ணைகள்  இருக்க வேண்டும்..

11. மருந்து பொருட்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். மாத்திரையின் பெயர் முதல் மருந்தின் உப பொருட்கள், காலாவதி தேதி வரை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்...

கடவுள் Vs நான்...

 




கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுவிட்டு...

ஒரு நல்ல ஃபிரண்ட் வேணும் 
என்று வேண்டி கேட்டேன்..

அவர் உன்னை காண்பித்தார்..

பின்பு சொன்னார்..

இந்த காசுக்கு 
இந்த லூசு 
தான் கிடைக்கும் என்று..🤣

இந்த லூச வச்சுட்டு 
நான் எப்படி தான் 
சமாளிக்கப் போறோனோ.. 😒😒

பிராடு பாஜக மோடி முகமூடி கிழிந்தது...

 


மரணமே வந்துவிடு...

 



மனமே மறந்துவிடு
வெட்ட வெட்ட துளிர்க்கும் 
உன் நினைவுகள்...

வேருடன் பிடுங்கியெடு,
உன் நினைவுகளையல்ல..

அதை சுமக்கும்
மெய்க் கூட்டின்
உயிரோட்டத்தை...

ஆம்,
மரணமே உன்னை
மறக்கும் மருந்து...

மரணமே வந்துவிடு...

பிராடு பாஜக மோடி பெகாஸஸ் சாப்ட்வேர் உளவு பார்த்தது அம்பலம்...

 


எதிர்காலத் தமிழகமும்: எனது கனவும் : தொழில்துறை...

 


தொழில்துறை:

1. பொருட்களுக்கான தர நிர்ணயகுறியீடு "த". (ISI) போல ஆனால் உலகத்தரம் வாய்ந்த தரக்குறியீடாக அது "த" உருவாக்கப்படும். (த-தமிழையும் குறிக்கும், தரத்தையும் குறிக்கும்)

2.  மக்கள் பயன்படுத்தும் நெகிழி, குடிநீர், துணி, மருந்து, மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என அனைத்து உற்பத்தி பொருட்களும் இந்தக் குறியீடு இல்லை என்றால் உற்பத்தி செய்ய முடியாது.

3. அதே போல தொழில் துறையில் பகுதி வாரியாக தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்..

சென்னை-வாகனம், கணினி

கடலூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-மீன், கடல் பொருட்கள், கப்பல் கட்டுமானம்

திருச்சி-பாத்திரங்கள், வீட்டு உபயோக மின் பொருட்கள்

கோவை- தொழில், எந்திரங்கள்,

ஈரோடு-மளிகைப்பொருட்கள்

திருப்பூர்-ஆடைகள் ,

கரூர்-வாகனங்கள், உதிரி பாகங்கள், பேருந்து, மகிழுந்து, தொடர்வண்டி, விமானம் தயாரிப்பு.

சேலம்-இரும்பு, அலுமினியம்

மதுரை-விவசாய, பண்ணைக்கருவிகள், எந்திரங்கள்,

நெல்லை-குளிர்பானங்கள், உணவு பதப்படுத்தும் கருவிகள் உற்பத்தி

சிவகாசி-காகிதம், புத்தகம், அச்சிடும் கருவிகள், (பட்டாசு, வெடி பொருட்கள் தொழில் தடை செய்யப்பட வேண்டும்)

ஒவ்வொரு பகுதியிலும் இவையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..

1. முக்கியமாக உள்நாட்டு தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..

2. அனைத்து ஆராய்ச்சிகளும் தமிழில் மட்டுமே நடக்க வேண்டும்..

3. தமிழில் கற்றோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்..

4. தாய்த்தமிழ் மொழியிலான சிந்தனை, புதுக்கண்டுபிடிப்பு, முன்னேற்றம், தரமான பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும்...

மோடியின் எளிமை பல்லிளித்த தருணம் 😂

 


பாஜக மோடியின் ஆரோக்கிய சேது மிகவும் ஆபத்தானது...

 


எதிர்காலத் தமிழகமும்: எனது கனவும் : மின்சாரம், தகவல் தொடர்பும்...

 


மின்சாரம், தகவல் தொடர்பு:

1. மின்சாரத்துக்கென தனிப்பட்ட வானியல் செய்மதி நிலையங்கள் (Space Stations) வானில் நிறுவப்பட்டு (24 மணிநேரமும் சூரிய ஒளி அங்கு கிடைப்பதால்), சூரிய மின்சாரம் பெறப்பட வேண்டும்..

2. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடி மின் தொடர்பு சாதனங்கள் (மின் ஈர்ப்புக்கருவி) வழங்கப்பட்டு சூரிய மின்சாரம் இலவசமாக்கப்பட வேண்டும்...

3. தமிழகம் மின் கம்பியற்ற மாநிலமாக்கப்பட வேண்டும்..

4. அதே போல் நிறுவுவதற்குரிய செலவு மட்டுமே உண்டு என்பதால் மின்சாரம் போன்று செல்லிட பேசியில் பேசுவதும் இலவசமாக்கப்பட வேண்டும்..

5. சமையல் அடுப்பும் அனைத்து வீடுகளிலும் இந்த சூரிய மின் மயமாக்கம் என்பதால் அதுவும் இலவசமே. எனவே காஸ் அடுப்பு, மருமகள் சாவு இருக்காது.

6. தொலைக் காட்சி கட்டணமும் இருக்கக் கூடாது..

7. ஆனால் இவையெல்லாம் தமிழ் குடியுரிமை அட்டை பெற்றவருக்கு மட்டுமே.

8. ஒரு சிறு தொகை பராமரிப்பு செலவுக்கென முதல் 5 வருடங்களுக்கு மட்டும் பெறப்பட்டு பின்பு அனைத்தும் இலவசமாக வேண்டும்..

9. பல்வேறு வரிகள் மூலம் பெறப்படும் தொகை அனைத்தும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்...

நமக்கு கொடுத்து வைக்கல...

 



கோவிலுக்கு போனேன்...

செருப்பை கழட்டி விட்டு உள்ளே போனேன்...

வெளியே வந்து பார்த்தா காணோம்...

நல்ல  செருப்புங்க 300 ரூபா இருக்கும்...

உள்ள போகும் போது இருந்தது
வெளியே வந்தா காணோம்... 😭

சரின்னு 
என் செருப்பையே 
போட்டுக்கிட்டு வந்துட்டேன்😂

திமுக Vs பாஜக கலாட்டா...


 

காதல் கதை...

 




எதிர்பாரா தருணத்தில்
எதிர்பட்டாள்
மங்கையவள்...

கண்கள் மோதிய
சிறு இடைவெளியில்
சிறகிழந்த
மனதுக்கு
காதல் சிறகு
முளைத்தது...

நீண்ட கால
தண்டனை காலம்
முடிந்தது என்று
மனம்
கொக்கரித்தது...

சில பல
சந்திப்பில்
காதல்
உறுதியானது...

காலை நேர
இளம் தென்றலாய்
காலங்கள்
கடந்தோட...

செல்ல சண்டைகள்
ஊடல் பொழுதுகள்
சின்ன பிரிவுகள்..

காதல் பறவையாய்
சுற்றி திரிந்த
சோலைகள்...

இழந்த
அனைத்தும்
கிடைத்த
மகிழ்ச்சியில்...

இன்புற்று
கிடந்தது
காதல் மனம்...

சிறு இடைவெளியில்
சூனியக்காரியான 
அவள் தாய் விளையாட...

எழுதப்பட்ட ஒன்றாய்
என் காதல் மீண்டும்
தந்த பரிசு கண்ணீர்...

பாஜக மோடி கலாட்டா...

 


எதிர்காலத் தமிழகமும்: எனது கனவும் : தமிழ்ப் பண்பாடு...

 


தமிழ்ப் பண்பாடு:

1. திரைப்பட, தொலைக்காட்சி தணிக்கை முறையில் தமிழ், தமிழ் சமூக மேம்பாட்டுக்கு எதிரானவை தடை செய்யப்படும்.

2. ஆங்கிலக்கலப்பு மிக்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்.

3. ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் உள்ள தொலைக்காட்சிகளும் செயல்படும். ஆனால் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே.

4. தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு, மக்கள் முன்னேற்றம், அறிவியல், மனித நேயம், ஆண் - பெண் சமத்துவம், மருத்துவம், விளையாட்டு போன்ற மதிப்பீடுகளை உயர்த்தும் திரைப்படங்கள், நூல்களுக்கு மட்டுமே வரிவிலக்கு, விருதுகள் வழங்கப்படும்.

5. இத்தகைய மதிப்பீடுகளுடன் தமிழ் சமூகத்துக்காக உழைக்கும் நபருக்கு ஒவ்வோர் ஆண்டும் தமிழ் ரத்னா விருது வழங்கப்படும்...

இது என் கல்லறை வாசகம்...

 




தோல்வியுற்று கடந்து வந்த காதல்...

வாழ்வில், தொலைதூரம் சென்றும்
தொலையாமல் பயணிக்கிறது..

எப்படியோ , தினமும் நினைவில்
வந்து சென்று விடுகிறது...

காலமெல்லாம் கைவிடமாட்டேன் 
என்று சொன்னது
இன்று சிரிப்புமூட்டுகிறது...

உன்னை ரசித்து கவிதை எழுதவே பிறந்தவன் போல
உனக்கு மட்டும் கவிஞனானேன்...

இப்பொது தெரிகிறது நீ அவ்வளவு அழகில்லை என்று..

நீ என்னை கைவிட்டபோது,
நெஞ்சம் வலித்தது..

இப்போது புரிகிறது கழட்டிவிடுவது
உனக்கு சாதாரணம் என்று...

நீ கட்டியணைத்த சுகம் 
இன்னும் அழியவில்லை..
அது காமம் இல்லை 
காதலில் ஓர் அங்கம் என்றாய்..

உன்னுடன் வாழ விரும்பினேன்,
கைவிட்டு விட்டாய்
மீண்டும் நீ 
என் அருகில் வந்தாலும்...

பார்க்கக்கூட முடியாது, 

ஏனென்றால்...

இது என் கல்லறை வாசகம்...

கோவை மருத்துவமனை கலாட்டா...

 


பாஜக எச். ராஜா கலாட்டா...

 


உன் நினைவுகள் என்னைவிட்டு மறையாது...

 




நீ என் உயிர் என்று
நினைத்து...

உன்னையே நான்
சுவாசிக்கிறேன்...

உரிமையோடு அன்பாக
சில வார்த்தைகள் உன்னிடம்...

என்னோடு உரிமை கொண்டாட
நீ யார் என்கிறாய்...

உன்னை
தொடரும் எனக்கு...

நீ அவ்வபோது
தரும் வெகுமானம்...

அவமானங்கள்
மட்டுமே...

போதுமடி இனியும் உன்னை
தொடர மாட்டேன்...

உயிராக நேசித்த என்னை
நீ யார் என்கிறாய்...

உன் எதிரில்
மட்டுமல்ல...

உன் வாழ்விலும் இவன்
இருக்க மாட்டான்...

என்றாவது நீ என்
அன்பை உணர்ந்து...

திரும்பி பார்க்கும் நேரம்...

நான் இருப்பேன்...

உன்
நினைவுகளோடு அல்ல..

நினைவு சின்னமாக இருக்கும்
அந்த கல்லறை வரிசையில்...

தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் பொன்னார் 😂

 


இது என்னடா புது சோதனை...

 




ரெண்டு வரியில ஸ்டேட்டஸ் போடுங்களேன் படிக்க ஈசியா இருக்கும்"னு சொன்னவரிடம்...

திருக்குறள் ரெண்டு வரிக்குள் தான் இருக்கும். எல்லாத்தையும் படிச்சீட்டிங்களா? னு கேட்டேன்..

Unfriend பண்ணிட்டு போய்ட்டான்...

யாருகிட்ட ?

20 நாட்களில் 10கிலோ எடை குறைக்கும் சீரகம்...

 


அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்..

சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அது மட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.

சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

சீரக தண்ணீர் : 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீரகப் பொடி மற்றும் தயிர் மற்றொரு வழி.. 

சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

சீரகப் பொடி மற்றும் தேன் : 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

சூப்புடன் சீரகப் பொடி:  உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும்.

அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

தொப்பையைக் குறைக்கும்...

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.

இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

சீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு...

சதிகாரியே... உனக்கு அழ கூட தெரியுமா...

 




கால் கடுக்க நின்றேன்,
கண்டுகொள்ளாமல் போனாய்....

கல்லறையாய் நிற்கிறேன்,
கண்ணீர் விடுகிறாயடி...

மலர்தூவி யாசித்தேன்.... 
மறுத்தாய்...

மலர்தூவி வந்து
புதைத்திருக்கிறார்கள்....
மண்ணுக்குள்....

சதிகாரியே...
உனக்கு அழத் தெரியும் என்பதை கூட
இப்போது தான் உணர்கிறேன ...

யார் அங்கே ...

இவளை அழைத்துச் செல்லுங்கள்.
என் கல்லறையாவாது மிச்சமிருக்கட்டும்...

ஊழல் மன்னன் அதிமுக ராஜேந்திர பாலாஜி...

 


ராகு - கேது ஒண்ணு சேர்ந்திருக்கு.. மக்களே உஷார்...