08/10/2020
கர்மா என்றால் என்ன..?
கர்மா என்றால் செயல் என்று பொருள்...
நன்மை, தீமை, நாம் செய்யும் செயல்களே கர்மா எனப்படுவது ஆகும்.
நமது வாழ்க்கை, நமது பிறப்பில் செய்யும் செயல்களின் கணக்கு, அதாவது கர்மாவின் கணக்கு.
இந்த கணக்கு சரியாகும் வரை உங்களது பிறவி தொடரும்.
நம்மை அறிந்தும், அறியாமலும் நாம் நிறைய செயல்கள் செய்கிறோம். இதில் நமக்கே தெரியாமல் நன்மை விளையவும் வாய்ப்புகள் உண்டு, தீமைகள் விளையவும் வாய்ப்புகள் உண்டு.
ஒருவரது கர்மா தான் அவரது கடந்த பிறவியில் இருந்து நிகழ் பிறவிக்கும், நிகழ் பிறவியில் இருந்து அடுத்த பிறவிக்கும் கூட்டிச் செல்கிறது.
நமது கர்மா தான் நமது பிறப்பிடம், சூழல், குடும்பத்தை முடிவெடுக்கிறது என்று கூறப்படுகிறது.
நமது வாழ்க்கை முழுவதிலும் ஏற்படும் இன்பம், துன்பம், வலி அனைத்தையும் கர்மா தான் தீர்மானம் செய்கிறது…
எதிர்பார்ப்புகள் அற்ற உதவி...
கர்மாவை பற்றி நாம் அறிந்துக் கொள்ள வேண்டியதில் முக்கியமானது தர்மம் (அ) கடமை.
யார் ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும், பின் விளைவின் எதிர் நோக்கமின்றி தங்களது கடமை (அ) தர்மம் செய்கிறார்களோ அதேவே உத்தமம் என்று கூறப்படுகிறது.
கர்மா வகைகள்...
கார்மாவை மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள் அவை...
சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா மற்றும் பிராரப்த கர்மா.
சஞ்சித கர்மா: சஞ்சித கர்மா என்பது, முற்பிறவியில் நாம் செய்த பலன்களை பொருத்து, நமக்கு வாய்க்கப்பட்ட இந்த பிறவியாகும். சஞ்சித கர்மாவின் பலன் தான் நமது இந்த பிறவி மற்றும் அடுத்த பிறவியிலும் தாக்கமாக இருக்கும்.
ஆகாம்ய கர்மா: இந்த பிறவியில் செய்யும் பாவ, புண்ணியத்தின் கணக்கு தான் ஆகாம்ய கர்மா ஆகும். இது, உங்களது அடுத்த பிறவிகளில் தாக்கம் செய்யும்.
பிராரப்த கர்மா: ஏற்கனவே கணிக்கப்பட்ட கர்மாவின் செயல்பாடு தான் பிராரப்த கர்மா. உங்கள் தற்போதைய பிறவியில் நடந்துக் கொண்டிருக்கும் செயல்கள் மற்றும் விதி அனைத்தும் பிராரப்த கர்மாவின் தாக்கமாக தான் இருக்கும்.
பாவப்பதை ஒழிப்பது: நீங்கள் பாவத்தை ஒழிப்பதால், தீமையை கைவிடுவதால், உங்களது ஆகாம்ய கர்மா இரட்சிக்கப்படும். பாவ, புண்ணியத்தின் கணக்கின் படி தான் சஞ்சித கர்மா உங்களை பின் தொடர்ந்து வருகிறது. பாவங்களை நீங்கள் முற்றிலுமாக நீக்கும் போது, உங்களது சஞ்சித கர்மாவானது முடிவு பெரும்.
கர்ம யோகா: எப்படியானாலும் உங்களது தற்போதைய பிறவியில் பிராரப்த கர்மாவின் தாக்கம் இருக்க தான் செய்யும். ஏனெனில் இது நீங்கள் சென்ற பிறவியில் செய்த செயல்களின் தாக்கம். அகங்காரம் தவிர்த்து நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், சமன்திறன் மனநிலையில் பயணம் செய்யுங்கள். யார், எவரென்று பாராமல் நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்தல் முக்கியம்.
ஆசை துறக்க வேண்டும்: கர்மா என்பது ஆசையுடன் பிரயாணம் செய்யும் ஒன்றாகும். இந்த ஆசை தான் உங்கள் கர்மாவை ஆட்டிப்படைக்கிறது. ஆசையை துறந்து நன்மை காரியங்களில் ஈடுபடும் போது அதில் பாவம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
மகிழ்ச்சி அகங்காரம் இன்றி நீங்கள் பூரணமாய் ஓர் செயலில் ஈடுபடும் போது உங்களுக்கு புண்ணியம் சேர்கிறது. இதுவே உங்களுக்கு நித்திய ஆனந்தத்தையும், செம்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது. மற்றும் இதுவே, உங்களது வாழ்க்கை சக்கரமான பிறப்பு, இறப்பிற்கு முற்று புள்ளியாய் அமைகிறது...
தண்ணீர்...
ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.
1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.
2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.
3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.
5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.
7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.
8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.
9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.
10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும்.
ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்...
தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்துபோன தமிழரின் அலங்கு நாய்...
தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்.
தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள்..
சோழர்களின் படைகளில் இவைகள் காவல், மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது….
தற்ப்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது…
நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்…
தற்ப்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ்த்தேசிய மக்கள் வளர்க்க வேண்டும்…
நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.
தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது.
உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெசுமாண்ட் மோரிசு எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப்படம் அலங்கு நாய்தான் என்பது உறுதியாகிறது.
கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.
தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு..
வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை என்று நாய்கள் குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார். தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட் மோரிசுதான்.
இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது. வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், தமிழர்களின் நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின. அவற்றில் முக்கியமானது அலங்கு. அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்.
ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் வடுக வந்தேறிகளான நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள்.
தமிழரின் வரலாறு திட்டமிட்டு தமிழனிடமிருந்து மறைக்கப்பட்டு தமிழர்களை அழித்தனர்.
இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட் மோரிசு, இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமசுதான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது.
அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும். நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து நடக்கும்.
இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும். சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.
தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை. ராசபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்தே போனது. அதே போல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்தும் டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்.
இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை. இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பதும் உண்டு. செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட் மோரிசு...
தமிழ் போற்றும் தேசமும், தமிழ் மறந்த தேசமும்...
உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தம் மொழி, தம் வரலாறு மீது எப்போதுமே ஓர் அக்கறை உண்டு.
நமக்கும் நம் வரலாறு மொழி மீது ஓர் உயர்ந்த பற்று இருந்தது அது எதுவரை என்றால் நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று ஓர் ராணுவம் என அனைத்தும் இருந்த காலத்தில்.
இப்போது நாம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, சிறுக சிறுக கட்டி எழுப்பியதையும் இந்திய துரோகிகளால் இழந்துவிட்டு தவிக்கிறோம்...
ஆமாம் சோழர்கள், பாண்டியர், சேரர் முதல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் வரைதான்.
அன்று நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று நாணயம் உலகின் வலிமையான ராணுவம் என அனைத்தும் நம்மிடம் இருந்த காலத்தில் எவனும் நம்மை கனவிலும் சீண்ட நினைத்ததில்லை, அப்படியே அவர்கள் சீன்டினாலும் அவர்களை நாம் சும்மா விட்டதில்லை.
நம்முடன் அனைத்தும் இருந்தபோது நாம் சுதந்திரமாக உலாவினோம், இந்தியப் பெருங்கடல், சேது சமுத்திரம், வங்கக் கடல் என அனைத்தும் நாம் தான் ராஜா, நம்மை ஏன் என்று கேட்க எவனும் இல்லை. அப்படியே கேட்டாலும் அவன் உயிர் அவனுக்கில்லை. அப்படி இருந்த நம் தமிழ் இனம் இன்று எப்படி எல்லாமோ ஆகி விட்டது.
நம் வரலாற்றில் நிறைய உதாரணங்களை நாம் கூறலாம், தமிழ் வணிகர்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தியதற்க்கு தென் கிழக்கு ஆசியாவையே அதிர வைத்தான் நம் ராஜ ராஜன், தமிழைப் பழிப்பின் தாய் தடுப்பினும் மிதிப்பேன் என்று வட இந்தியாவையும் வெற்றி கொண்டான் அந்த தமிழ்ப்புலி.
பருவ மழை பொய்த்த சமயத்தில் ஒரு முறை கர்நாடக மன்னன் காவிரியைத் தடுத்து விட்டான், தமிழக வயல்கள் காயும் நிலைமை சோழன் எப்படியோ கேட்டுப் பார்த்தான், பேசிப் பார்த்தான் அவன் மசியவில்லை. உடனே இவன் படையை கிளப்பிக் கொண்டு காவிரி மேல் இருந்த அணையை உடைத்துவிட்டு, அவன் தேசத்தையே நிர்மூலமாக்கிவிட்டு வந்தான் ராஜ ராஜனின் பேரன்.
தமிழிற்கும், தமிழனுக்கும் மதிப்பளிக்க வில்லை என்று இமயம் வரை சென்று வெற்றிக் கோடி நாட்டினான் தமிழ் ஆண்ட சேர மன்னன.
இவர்கள் உடலில் ஓடியதும் தமிழ் இரத்தம் தான், நம் உடலில் ஓடுவதும் அதே இரத்தம் தான். என்ன கொஞ்சம் சூடு, சொரணை எல்லாம் காலப்போக்கில் கரைத்து விட்டோம்.
தண்ணீர், உணவு, உரிமை என அனைத்திற்கும் நாம் மற்றவனையே எதிர்பார்க்கும் நிலை ஆகிவிட்டது.
நாம் வந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்த காலம் போய், நாம் இன்று பலரிடம் தஞ்சம் புகும் காலமாகி விட்டது. வருத்தம் தான்.
தற்ச்செயலாக மொரிசியஸ் நாட்டு நாணயங்களை பார்க்க நேரிட்டது, அதில் உள்ள அனைத்தும் தமிழ். தமிழிற்கு அவ்வளவு முக்கியத்துவம், எண்களும் தமிழ். எழுத்தும் தமிழ்.
எனக்கு ஒரு சந்தேகம் நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எங்களைத் தெரியும்.
௦,௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯ நம்மில் பலர் இதனை காலம் கடந்தே அறிந்துள்ளோம். இப்படி தமிழ் எழுத்தில் என்னுருக்கள் உண்டா என்று கேட்போம்.
காலத்தின் கொடுமை...
மொரிசியசின் எந்த நோட்டுகளை எடுத்தாலும் அதில் தமிழ் இன்றி இருக்காது.
அங்கு தமிழிற்கு அவ்வளவு மதிப்பு. நாம் இங்கு ஒவ்வொன்றிக்கும் ஹிந்திக்காரனிடம் கை எந்துகிறோம், புலம் பெயர் தமிழ் உறவுகளோ நம் தமிழிற்கு மிகச் சிறந்த அருமையான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாராட்டத் தக்கது.
பிறந்த ஆறு மாத குழந்தைக்கு A,B,C,D கற்றுக் கொடுக்கும் தேசமாகிவிட்டது நம் தமிழ் என்பது தான் பெரும் வருத்தமாக உள்ளது...
மனதுக்கு ஏது மருந்து ?
ஒரு துயரத்தை தாங்க முடியாமல் சமாளிக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு துயரம் இடி போல் விழும்போது என்ன செய்ய முடியும்...
மனப்பாரத்தை துலாபாரத்தில் நிறுத்தி இரண்டையும் எடை போடுவோம் பாருங்கள்...
அப்போது தெரியும் நம் இதயத்தின் பலம் என்ன என்று...
ஒரு துயரத்தில் இருக்கும் போது துடிக்கும் நாம்... இரு துயரத்தை கையாளும் போது நீதிபதி ஆகிறோம்....
அப்போது ஒரு உண்மை... புத்தனாக ஞானம் பிறக்கும்.
இதுவும் கடந்து போகும்....
உயிரும் ஒரு நாள் உடலை கடந்து போகும் என்ற உண்மை உணர்வோம்...
பிரச்சினைகளை உருவாக்குவதும் நாமே....
பிரச்சினைகளை களை எடுப்பதும் நாமே....
ஆகவே தேவையற்றதை நீக்குவோம்.
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் ,
எல்லாமே தேவையற்றது என்ற உண்மை புரியும்.
நாம் யோசிக்க மறுப்பதால்தான், எல்லாமே தேவையானதாகிறது...
மாற்றங்களை நோக்கிய நமது பயணம், தோல் சுருங்கும் வரை தொடர்கிறது....
இதயம் சுருங்கி விரியும் வரை நிகழ்கிறது....
இடையே வரும் இடியும் ,மின்னலும் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதது...
எதையும் தாங்கும் இதயம் நம்முடன் இருப்பதை உணர்வோம்...
உயரமாக வளர... உட்கொள்ள வேண்டிய உணவுகள்...
உயரப் பிரச்சனை இருப்பதற்கு உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும்.
மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது.
இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும்.
ஆனால் அந்த சத்துக்களை உடலில் செலுத்துவதற்கு ஒரே முறை உணவு தான். ஆகவே அத்தகைய புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்போம்.
இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா...
வைட்டமின் ஏ : வைட்டமின் ஏ சத்து உடலில் உள்ள எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, எலும்புகளுக்கு வலுவை தருகிறது. மேலும் வைட்டமின் ஏ உணவுகள் பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தை அழகாக்குகிறது. இதற்கு கீரைகள், பீட்ரூட், கேரட், பப்பாளி, தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக தக்காளி, கேரட், பீட்ரூட்டை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.
புரோட்டீன் : புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள பழுதடைந்த திசுக்கள் சரியாவதோடு, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. மேலும் புரோட்டீன் உணவுகளில் அமினோ ஆசிட் அதிகம் இருப்பதால், உடலில் சரியான வளர்ச்சி கிடைக்கும். ஆகவே அதற்கு புரோட்டீன் உணவுகளான பால், சீஸ், மீன், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
வைட்டமின் டி : உயரமாவதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியமானது. ஆகவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவதோடு, வலுவடையவும். எனவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளான காளான், மீன், தானியங்கள், முட்டை, சோயா பால் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
கால்சியம் : எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ஆகவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால், உடல் உயரம் அதிகரிக்கும். மேலும் இந்த உணவுகள் நன்கு சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்
கனிமச்சத்து : கனிமச்சத்துக்கள் எலும்பு திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆகவே உடல் உயரத்தை இயற்கையாக அதிகரிக்க கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளான பச்சை பட்டாணி, பிராக்கோலி, கீரைகள், முட்டைகோஸ், பூசணிக்காய், கேரட், பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்...
எகிப்த்தை ஆண்ட தமிழன்...
எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டார் .
அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.
இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள். ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது. இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..
இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..
எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார் .
உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...
பிடில் / வயலின்...
இது மேல்நாட்டு இசைக்கருவி. இது தமிழ்நாட்டு மிடற்றிசைவாணருக்கு உதவி இசைக்கருவியாகக் கொண்டுவரப் பெற்று நீண்ட காலம் ஆகவில்லை. பாடுவதைப்போல் இசைக்கருவியில் வாசிக்கக் கூடும். எனினும் அது அத்துணை எளிதான காரியமன்று.
கேள்வியின் பயனாய் மிகவும் சாமான்னியமானவர் பாடிவரும் தெருப்பாட்டுகளில் அழகு விளங்குவது போல இக்கருவியில் இசைக்க இயலாது. இது மேல்நாட்டு இசைக்கருவியாயினும் இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அனுசரிக்க கூடுமென்பதை உறுதியாகக் கூறலாம்.
இவ்வாறு செய்வதற்கு முதலில் இக்கருவியைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பிறகு தந்திகள் அதற்குத்தக எடுத்தல் வேண்டும். அதன்பிறகு பயிற்சிமுறைகள் எல்லாம் அனுகூலமாய் இருத்தலும், இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும், பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.
அப்பொழுது தான் மிடற்றிசையிலிருந்து எழும் பாட்டை அனுசரித்து வாசிக்கக்கூடும். மிடற்றிசையைப் பிடில் கருவியில் அனுசரிக்கும் அறிவை அடைந்த ஒருவன், இலக்கண சேர்க்கைப் பெற்ற மிடற்றிசை இவ்வாறானது என்பதைப் பிறருக்கு விளக்கிவரவும் எடுத்துக்கூறவும் முடியும். அக்காலத்தில் பாடுவோருக்கு யாழ்க்கருவியும், சாரந்தா என்ற கருவியுமே துணைக்கருவியாக இருந்தன.
பிடில் கருவியின் சுருதியின் தந்திகளைச் சுருதி செய்வதில் இரண்டு வகைகளுள்ளன. ஒன்று இந்திய முறையார் செய்வது, மற்றொன்று ஆங்கில முறையாற் செய்வது.
இந்திய முறையாற் சுருதி செய்வதில் இடமிருந்து வலமாக ‘4, 3, 2, 1’ ஆகிய தந்திகளின் முறையே மெலியுதானத்துக் குரல், அதாவது மந்தரஸ்தாயி ஸ, மெலியுத்தானத்து இளி, அதாவது மந்திரஸ்தாயி ப, சமன்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ஸ, சமந்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ப என்ற முறையில் சேர்க்கப் பெற்ற ‘ஸ-ப, ஸ-ப’ என்ற ஒலிக்கும், அதாவது மூன்றாவது தந்தியானது நாலாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும், இரண்டாவது தந்தி மூன்றாவது தந்தியின் நான்காவது சுரத்தை ஒலிப்பதாயும், முதலாவது தந்தியானது இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும் இருக்கும்.
ஆங்கில முறையாற் சுருதி கூட்டுவதில் நான்காவது தந்தியின் ஐந்தாவது சுரம் மூன்றாவது தந்தியிலும், மூன்றாவது தந்தியின் ஐந்தாவது சுரம் இரண்டாவது தந்தியிலும், இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரம் முதல் தந்தியிலும் ஒலிப்பதாய் சுருதியில் சேர்த்துக் கொள்வர். நான்காவது தந்தி பெரும்பாலும் (G) ஜி சுரத்திலேயே அதாவது மெலிவுத்தானத்து ப- என்ற சுர ஒலியே வரப்படுவதாய் வைத்துக் கொள்ளப் பெறுவதால், ‘4-3-2-1’ என்ற தந்திகள் முறையே ‘ப-ரீ-த-கா’ தந்திகள் என்ற பெயர்களில் வழங்கி வருகின்றன...
மிளகின் மருத்துவ பயன்கள்...
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது..
மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.
நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது. வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது.
மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
உணவு சரியான முறையில் செரிக்கப்பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது.
இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால் தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள்.
இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும் போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டு விடுவார்கள்.
வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்...
கம்யூனிசம் என்றால் என்ன.?
இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்.
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றை வரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்...தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...