21/04/2019

பாரதிதாசன் நினைவு தினம்...


உறியடி 2 - உரிமை பாடல்...


உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

சுவாசம் காக்க போராட்டம்
நீதி கேட்க்கும் போராட்டம்
தீமை அகற்றும் போராட்டம் போராட வா

சுவாசம் காக்க போராட்டம்
நீதி கேட்க்கும் போராட்டம்
தீமை அகற்றும் போராட்டம் போராட வா

உயிர் வாழ போராட்டம்
உடமை காக்க போராட்டம்
இருள் விளக்க போராட்டம் போராட வா

உயிர் வாழ போராட்டம்
உடமை காக்க போராட்டம்
இருள் விளக்க போராட்டம் போராட வா

தோழா தீயாய் வா
தோழா தீர்வாய் வாடா

வயலும் காய்ந்து போனதடா
வயிறும் காய்ந்து போனதடா
கனவும் காற்றில் கலந்ததடா
கருவும் உதிரம் ஆனதடா

நீதி என்றும் வெல்லுமடா
சூது விலகி செல்லுமடா
நாதி அற்று நின்றோமடா
நியாயம் கேட்டு வந்தோமடா

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

அகழ்வாரை தாங்கும் நிலமாய் இருந்தோம்
சிதைந்தோம் யாவும் இழந்தோம்

இகழ்வோரை எதிர்த்து
இதிகாசம் படைப்போம் நாளை நமதே

உரிமை மிரட்டி பறித்தார்கள்
பொறுமை கண்டு பழித்தார்கள்
கடமை மறந்து நடந்தார்கள்
வாக்கை வாங்கி ஏய்த்தர்கள்

வலைகள் இங்கு விரித்தார்கள்
பிழைப்பை காட்டி வளைத்தார்கள்
வழிகள் இல்லை மரித்தார்கள்
விழிகள் திறந்து பார் இங்கே

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

உரிமை காக்க இனமே எழு
நிலைமை மாற்ற மனமே எழு
உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு

விடியல் தேடும் போராட்டம்
துயரை துடைக்கும் போராட்டம்
நாளும் நீளும் போராட்டம்

விடியல் தேடும் போராட்டம்
துயரை துடைக்கும் போராட்டம்
நாளும் நீளும் போராட்டம்...

தியானம்...


தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை..

தங்கள் மனதுடனும், சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று..

உங்களை நீங்கள் உத்தமர் என்று நினைக்கிறீரா?

தியானத்திற்கு என்று நேரமும் இடமும் ஒதுக்கி அமருங்கள்.

கண்களை மூடுங்கள். பிறகு தெரியும்..

உங்கள் மனதில் காமமும், வெறியும், காழ்ப்புணர்ச்சியும், மோகமும், குரோதமும், விரோதமும்..

எவ்வளவு உங்களை பிடித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

சாதாரணமாக, அமைதியாக இருக்கும் மனம் கூட, தியானம் என்றவுடன் ஆழிப்பேரலை போல் பொங்கி எழுந்துவிடும்.

உண்மையில் தியானம் செய்யும் ஒவ்வொருவரும் தியானம் செய்யவில்லை..

தத்தம் மனதுடன் போரில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதலில் தியானம் என்றால் என்னவென்று புரிய வேண்டும்.

பிறகு தியானம் பழக வேண்டும்.

மனதில் எதோ ஒரு மந்திரத்தை பல ஆயிரம் முறை ஜபிப்பது..

ஒரு புள்ளியிலோ, விளக்கிலோ, ஜோதியிலோ, கட்டைவிரல்
ரேகையிலோ மனதை குவிப்பதுதான் தியானம் என்று மிகவும் தவறாக புரிந்துள்ளனர்.

அவ்வாறு மனதை ஓரிடத்தில் குவிப்பது மன ஒருமைப்பாடு (concentration) ஆகும்.

அது தியானம் அல்ல.

நீங்கள் எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாலும்.. உங்கள் மனதில் சிறு அசைவும் தோன்றாமல், மனம் அமைதியாக, சூனியமாக, எந்த எண்ணமும் இல்லாமல் இருக்குமேயானால், அதுவே தியானநிலை (meditation) ஆகும்.

இந்த உன்னத நிலையை அடைய ஒரே ஒரு பயிற்சி தான் உள்ளது.

அது, நீங்கள் எந்த செயல் செய்யும் போதும் அந்த செயலிலேயே முழு கவனத்தையும் வைத்து, என்னத்தை சிதறவிடாமல் பழகுவதே ஆகும்.

உதாரணமாக நீங்கள் உங்கள் மகிழூந்தை இயக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

அப்பொழுது முழுகவனத்தையும் வாகனத்தை இயக்குவதிலேயே செலுத்தி, தேவையற்ற சிந்தனையை தவிர்த்து பழக வேண்டும்.

நீங்கள் மதிய உணவை உண்ணும்போது,
தொலைகாட்சியையோ, முகப்புத்தகத்தையோ நோண்டாமல், தேவையில்லாமல் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு அளிக்கப்பட
உணவை ரசித்து, ருசித்து முழுமையாக உண்டால் நீங்கள் தியானத்தை பழகினவர் ஆவீர்.

எனக்கு மூச்சிவிடவும், பசித்தால் உணவு உண்ணவும் கற்றுக்கொடுங்கள் என்று யாரிடமாவது நீங்கள் கேட்டதுண்டா..

தியானமும் நீங்கள் முச்சு விடுவதைப் போன்றதே..

யாரும் உங்களுக்கு தியானம் கற்றுத்தர முடியாது. நீங்களாகத் தான் அதை அடைய வேண்டும்.

அதாவது உங்கள் தீவிர முயற்சியால் தியானம் என்பது "விழிப்பாக இருப்பது" அவ்வளவே.

வீண் சிந்தனைகளும், கற்பனைகளும் உங்களை அடிமைப்படுத்தாமல் விழிப்பாக இருங்கள். அந்த விழிப்பு நிலையே தியானம்.

வீண் சிந்தனையை, சிந்தனையுடன் சண்டையிடாமல் தவிற்பதே தியானம்.

வேலை செய்யும் போது அந்த வேலையிலேயே கவனமாக இருப்பதால் வீண் சிந்தனையை தவிர்கலாம்.

சும்மா இருக்கும் போது மனதையும் கற்பனை ஏதும் இன்றி சும்மா இருக்க பழகுங்கள்.

ஆனால் மனதுடன் சண்டை பிடிக்காதீர்கள்.

சிந்தனைகளை கவனியுங்கள்.

இயல்பாகவே வீண் சிந்தனைகள் நின்றுவிடும்.

தியானம் உங்கள் வாழ்வின் ஒரு அங்கம் ஆகிவிடும்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


தமிழர்களும் செவ்விந்தியர்களும்...


தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)...

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே மாயன் (Mayan) என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. மாயன்(Mayan) Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது.

2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

Omlec, Aztec, மாயன் (Mayan), Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு.

கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று கொலம்பஸ் (Columbus) நம்பினார்.

அவருடைய நம்பிக்கையின்படியே அவர் அட்லாண்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம்.

இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டு பிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

கொலம்பஸ்(Columbus)-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டு பிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள்.

அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே.

வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான்.

இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டு பிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்பு தானே..

தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது.

இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப் போகின்றன.

செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள்.

காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள்.

தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம்.

Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு.

தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டு பிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது.

Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது.

அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை.

மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள்.

தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்து வைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன.. இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன் (Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பது போல் எழுதியிருப்பார்கள்.

தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான். உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள்.

தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது...

சாகர்மாலா - காட்டுப்பள்ளி துறைமுகம்...


கிராம்பின் மருத்துவ குணங்களை அறிவோம்…


கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது...

அமமுக வில் சசிகலாவிற்கு பதில் டிடிவி. தினகரன் பொதுச்செயலாளர் ஆனார்...


https://youtu.be/UDD4mfgeB24

Subscribe The Channel for More News...

இழப்பதற்கு ஒன்றும் இல்லை. எல்லாமே பெறுவதற்கு தான் உள்ளது, மனவளக்கலை யோகாவில்...


ஒரு அழகான கடவுள் சிலையை உருவாக்க சிற்பி அந்தப் பாறாங்கல்லில் உள்ள சிலையை தவிர்த்த மற்றப்பகுதிகளை பொறுமையாக செதுக்கி நீக்கிவிடுகிறார். நல்ல சிலை உருவாகிவிடுகிறது. அதேபோல் நம்மிடமுள்ள தேவையில்லாத, இருக்கக்கூடாத வினைப்பதிவுகளை (முன்னோர்களால் வந்தது + நாம் சேர்த்துக் கொண்டது) யோகப் பயிற்சிகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிக்கொள்கிறோம்.

முக்கியமான, ஆனால் விடுபட்டுள்ள இயற்கை கல்வியான, நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை உணர்த்தும் கல்வியை யோகாவில் கற்றுக் கொள்கிறோம்.

அதன் மூலம் புதிய பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும், ஏற்கனவே உள்ள பதிவுகளை போக்கி கொண்டும்  அமைதி பெறுகிறோம்.

பொதுவாக நாம் நமது பிரச்சனைகளை நமக்கு வெளியே உள்ள மனிதர்கள் மற்றும் பொருள்களின் உதவியால் சரி செய்து கொள்ள முயலுகிறோம். அதில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும், அதைவிட இன்னொரு முறையான, தவத்தின் மூலம் நம்முள்ளே சென்று, நோய்களும், வேண்டாத குணங்களும் உற்பத்தி ஆவதற்கு மூலமான நம் உயிரின் தன்மையையே மாற்றிக் கொள்வதே சிறப்பு. இதன் மூலம் நிரந்தரமான மாற்றம் உடலில், மனதில், உயிரில் ஏற்படுகிறது.

இதுவே யோகாவிற்கும், மருந்து மாத்திரைகள் உட்கொண்டு நோய்களை சரி செய்து கொள்வதற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு..

மருந்து மாத்திரைகள் நம் உடல் செல்களில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி நோயை தீர்க்க முயலுகின்றன. ஆனால் அகத்தவமோ, விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளாத, கருவிகளுக்கு என்றும் புலப்பட முடியாத, மறைபொருளான உயிரின் தன்மையையே மாற்றி, நோயை அடியோடு நீக்குகிறது.

ஒரு மரத்தில் உருவாகும் பழத்தின் சுவையை கூட்ட, பழம் தோன்றியபிறகு அதில் சில ரசாயனங்களை செலுத்தி மாற்ற முயலுவதைவிட, அந்த மரத்தின் வேர் பகுதியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி பழத்தின் ருசியை மாற்றுவதே சிறந்த முறை.

நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தின் மூலம் தீர்வு பெறுவது தற்காலிகமானதே. தவத்தின் மூலம் உயிரை தூய்மைபடுத்தி முழுமையாக நாளடைவில் நோயிலிருந்து விடுபடுவதே நிரந்தர தீர்வு. இதற்கு கால தாமதம் ஆனாலும் நிரந்தர தீர்வாக அமையும். மேலும் நம் முன்னோர்கள் வழி வந்த நோய்களுக்கு தவமே சரியான தீர்வு.

சென்ற காலத்தைப்பற்றி நினையாமல் இப்பொழுது  இருக்கும் என் உடல், மனதை மேலும் கெட்டுப் போகாமல் எப்படி காப்பாற்றிக் கொள்வது என நினைந்து செயல்படுவோம்.

எனவே நாமும் கீழ்கண்ட சங்கல்பங்களை மேற்கொள்வோம்...

1. இறைஆற்றலால் இந்த அற்புதமான உலகத்தில் பிறப்பிக்கப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் கேட்டு இந்தப்பிறவி எனக்கு கிடைக்கவில்லை.

2. பிறந்துவிட்ட காரணத்தினால் என் உயரிய ஆறாவது அறிவை புனிதமான என் உடல் மற்றும் மனதைப்பற்றி அறிந்துகொள்ளவும், எனக்கும் பிரபஞ்த்திற்கும் உள்ள பிரிக்கமுடியாத உறவினை உணர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்துவேன்.

3. என் உடல், உயிர், மனம் கெடக்கூடிய செயல்களை செய்வதை முடிந்தவரை தவிர்ப்பேன். என் பிறப்பு, வாழ்வு, இறப்பு இவைகளை தீர்மானிப்பது இறை ஆற்றலே என்கிற நினைவில் வாழ்வேன்.

4.என் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளான இருதயம், மூளை, சிறுநீரகங்கள், இரைப்பை, நுரையீரல்கள் இவைகளை காத்துக் கொள்வேன் என்று தவ முடிவில் சங்கல்பம் மேற்கொள்வேன்.

5. எவ்வளவு நாள் வாழ்வோம் என்பதைக் கணிப்பது கடினம். ஆனால் முடிந்த வரையில் மகிழ்ச்சியாக, இன்பமாக, அமைதியாக, நோயில்லாமல் வாழ முயற்சிப்பேன்.

6. மனிதனால், விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து செயற்கை மாற்றங்களையும் வெறுக்காமல், அளவு முறையோடு அனுபவித்து அவைகளினால் என் உடல் மனம் கெடாதவாறு வாழ்வேன்.

7. இயற்க்கை விதியை உணர்ந்து அதற்க்கு முரண்படாதவாறு என் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வேன். இயற்கை விதி என்பது “நானும் மற்ற மனிதர்கள், உயிர்கள், அசேதனப்பொருட்கள், பஞ்ச பூதங்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் உடமைகள். இவைகளை கெடுக்க எனக்கு எந்த உரிமையும் கிடையாது”. எந்த அளவிற்கு இதில் நான் முரண்பட்டு வாழ்கிறேனோ அந்த அளவிற்கு இயற்க்கை விளைவாக அளிப்பது துன்பம் மற்றும் நோயாகும்.

யாரெல்லாம் யோகப்பயிற்சிகளை தன் உடல், மனம் அதிகமாக கெடாமல் இருக்கும் போதே செய்ய தொடங்கி விட்டார்களோ, அவர்கள் எல்லாம் யோகசாலிகள், கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் சிறிது அதிக முயற்சி செய்து பழக்கப்பதிவுகளை சிரமப்பட்டு மாற்றி அமைத்துக்கொண்டு நலம் பெறமுடியும்.

எந்த விதத்தில் பார்த்தாலும் யோகப்பயிற்சிகள் நன்மையையே தரும். இப்போது சிறு வயதினராக இருந்து உடல் நலம், மன ஆற்றல் இருந்தாலும், இந்த வயதில் பயிற்சிகளை கற்றுக் கொண்டு அவைகளை இப்போது அதிகமாக பயன்படுத்தாவிட்டாலும், பிற்கால வாழ்க்கையில் தேவைப்படும் போது அதிக சிரமம் இன்றி கற்ற பயிற்சிகளை செய்து உடல் நலத்தை காத்துக் கொள்ளலாம்.

வாகனத்தை ஓட்டுவதை ஒருமுறை நன்றாக கற்றுக்கொண்டால், அது வாழ்நாள் முழுவதிலும் எப்போது வேண்டுமானாலும் உபயோகமாவது போல கற்ற யோகப் பயிற்சிகளும் பயனைத்தரும்.

நாம் மனவளக்கலை பயிற்சிகள் செய்து,  உடல், நலம், மனவளம், மற்றும் மனநிறைவு பெற்று வாழ்வோம்...

நரம்பு தளர்ச்சி நீங்க அருமையான இயற்கை மருத்துவம்...


https://youtu.be/GwiYv951zVQ

Subscribe The Channel For More News...

சைனஸ் பிரச்சனையை போக்க...


பருவ காலநிலை அடிக்கடி மாறுபடுவதால், உடலில் ஜலதோஷம் திடீரென்று ஏற்படும், அவ்வாறு ஜலதோஷம் வந்தால், அது இரண்டு, மூன்று நாட்களில் போய்விடும்.

ஆனால் அது சிலருக்கு நீண்ட நாட்கள் இருந்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாத அளவு இருக்கும். இதனால் அந்த சளியானது மூக்கில் நீண்ட நாட்கள் இருப்பதால், அது சைனஸாக மாறி விடுகிறது.

அதுமட்டுமல்லாமல், தலைக்கு குளித்தப்பின்னர், தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருப்பர். இதனால் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படும். பின் மூச்சு விடும் போது ஒரு துர்நாற்றம், திடீரென்று மூக்கில் எரிச்சல் போன்றவை ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளை போக்க ஈஸியான வீட்டு மருந்து இருக்கிறது.

சைனஸ் பிரச்சனையை போக்க...

ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வர வேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும்.

தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும்.

தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க்கோர்வை போன்றவை சரியாகும்.

குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும்.

கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும் முன் நெற்றிக்குத் தடவி, காலையில் கழுவ வேண்டும். இல்லையென்றால் கிராம்பு, சுக்கு ஆகிய இரண்டையும் அரைத்து, நீரில் பேஸ்ட் போல் கலந்து, மூக்கு மற்றும் நெற்றியில் தடவ வேண்டும். இதனால் நீர்க்கோர்வை, தலைபாரம், ஜலதோஷம் போன்றவை விரைவில் குணமாகும்...

அதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டது தமிழக முதல்வர் எடப்பாடி அதிரடி...


https://youtu.be/vM7ohQxcy5Q

Subscribe The Channel For more News...

மனம்...


மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது..

உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்..

எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற..

நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்..

நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது..

தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்..

தியானத்தின் தொடக்கம் சாட்சி
பாவம்..  தியானத்தின் முடிவு மனமற்ற நிலை..

மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்..

இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்...

திமுக தெலுங்கர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கனவு ஒரு கேடு...


கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே வயிறு எரிகிறது...


வந்தவரெல்லாம் வாழ வேண்டும், தமிழன் ஓட்டை சட்டியை வைத்துக் கொண்டு அரசியல் ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்து விட்டு கையேந்தி நிற்க வேண்டும்.. என்ற நிலையில் தான் தமிழினம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது..

எதிரிகளை ஏளனம் செய்ய கோடி கோடியாக கொள்ளையடிப்பார்கள், இருப்பதை எல்லாம் சுரண்டுவார்கள், நாம் ஏன் என்று கேட்க கூடாது.

தமிழனுக்கு ஏன் எந்த அதிகாரம் கூடாது என்று மற்ற மாநிலத்தார் நினைக்கிறார்கள்...

தன்னை தமிழன் என்று நினைத்துவிட கூடாது. தான் வாழ தமிழனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தினால் “வந்தாரை வாழ வைக்கும்” தமிழகம் என்று மேலே தூக்கி வைத்து காலில் போட்டு நசுக்குகிறான்.

தமிழன் ரத்தத்தை 3-மாநில திராவிட அட்டைப்பூச்சிகள் உறிஞ்சிக்குடிப்பதற்கு வசதியாக தங்கள் கொடியில் ரத்தம் எனும் குருதியை (சிகப்பு) அடையாளமாக வைத்தார்கள்..

நம்பினவர்கள் முகத்தில் கரியைபூசும் கேலமானமானவர்கள் என்பதால் (கருப்பு) நிறத்தை தங்கள் கொடியில் பூசினார்கள்.

இந்த கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே தமிழனுக்கு வயிறு எரிகிறது.

சண்டாளர்களே சுரண்டிய தெல்லாம் போதாதா, ரத்தம் குடிக்கும் நரிகளே இனியாவது தமிழர்களை வாழ விடுங்கள்...

மீண்டும் அதிமுக வுக்கு செல்லவே முடியாத நிலைக்கு போய் விட்டதா சசிகலா குடும்பம்...


https://youtu.be/meXGRLyeXOM

Subscribe The Channel For More News...

4D யும் தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் – ஏலியன்ஸ் 1...


அன்றும் இன்றும் ஒரு மர்மமாகவும் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் ஏலியன்ஸ் எனும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றியதாகும்.

அவ் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய முழு ஆய்வாக அமைய இருக்கிறது இந்தப்பதிவு.

ஏலியன்ஸ் பற்றி பார்க்க முதல் பரிமாணம் பற்றிப் பார்த்தாக வேண்டும்.

பரிமாணம் (dimensions) எனும் போதே… ஐன்ஸ்டைன் (einstein) எனும் மாமேதையையின் தியரி ஒஃப் றிலேட்டிவிடி ( theory or relativity)  தொடர்பாக பார்க்க வேண்டியது முக்கியமானதாகும்.

எனினும்… அதற்கு முன்னர் பரிமாணம் என்பது தொடர்பாக சின்னதொரு அறிமுகத்தை பார்க்கலாம்…

தற்சமயம்…. நீளம், அகலம், உயரம் என்பனவே 3 பரிமாணங்களாக கொள்ளப்படுகிறது.

அதாவது… 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்கதாக உள்ள பரிமாணங்கள் இவையே.

(இவற்றை விட காலம் ( டைம்) எனும் நான்காவது பரிமாணம் தியரி ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.)

சினிமா துறையில் மோஷன் எனப்படும் அசைவுடன் கூடிய தொழில் நுட்பம்… 4ம் பரிமாணமாக கருதப்படுகிறது.

இவற்றை விட இன்னும் பல பரிமாணங்கள் இருக்கலாம்…. என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

ஆனால், எமது அறிவினாலோ… அல்லது எமது தோற்றத்தாளோ அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதே… உண்மை.

சரி… நாம் எம்மால் உணர முடியாத பரிமாணங்களை விடுத்து. தியரி
ரீதியிலாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் எனும் பரிமாணத்தை ( ஐன்ஸ்டைனால் வெளியிடப்பட்டது.) பற்றி முதலில் பார்ப்போம்….

காலம் தொடர்பாக விளக்குவது கடிணமானதாக உள்ளது.  இயன்றவரை விளக்குகிறேன்.

ஒரு மனிதன் ஒரே தூரத்தை நடந்து கடப்பதுக்கும்… காரில் கடப்பதுக்கும்… ரெயினில் கடப்பதுக்கும் வித்தியாசமுள்ளது.

நடப்பதை காட்டிலும் ரெயினில் பயணிக்கும் போது நேரம் மிச்ச படுத்தபடுகிறது.

நடக்க 1 மணி நேரம் எனின்… ரெயினில் 5 ஓ 10 ஓ நிமிடம்தான் எடுக்கிறது.

எனவே, இரு இடங்களுக்கிடையே தூரம் வித்தியாசபட வில்லை. காலம் வித்தியாசப்படிகிறது.

இதை ஐன்ஸ்டைன் சிம்பிலாகவும்… சுவாரஷ்யமாகவும் கூறியுள்ளார்…

அதாவது…

ஒரு காதலன் தனது காதலிக்காக வெயிட் பண்ணும் போது… 1 நிமிடம் என்பது மிகப்பெரிய காலப்பகுதியாக தோன்றுகிறது.

அதே, காதலி வந்ததும்… அந்த 1 நிமிடம் ஒரு மிக சிறிய விரைவாக கடந்துவிடும் பகுதியாக தோன்றுகிறது.

சரி… இனி தியரி ஒஃப் ரிலேட்டி விட்டியில் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதை எனக்கு விளங்கிய வகையில் சொல்ல ரைபண்ணுறன்.

தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டி...

அதாவது ஒளியின் வேகத்தில் (3*10^8 மீட்டர்/ செக்கன் அல்லது 3 ம் 8 சைபரும் ) எம்மால் பயணிக்க கூடியதாக இருந்தால்… எம்மால் இறந்த காலத்துக்கு செல்ல முடியும்.

அதாவது… தற்போது 2010 ஆம் ஆண்டு எனின்… நாம் ஒளியின் வேகத்தில் பயணிப்போமானால்… 2000… 1990… அப்படியே எமது இறந்த காலத்துக்கு செல்லலாம்.

இது நான் விளங்கி கொண்டது மட்டுமே.

ஆனால்… என்னை பொறுத்த வரையில்… ஒளியின் வேகத்தில் (சரியாக) பயணிக்கும் போது எம்மால் பின்னோக்கி செல்ல முடியாது.

ஆனால், எமக்கு காலம் ஓடும் வேகம் 0 ஆக இருக்கும்.

அதாவது… வெளியுலகத்தாருக்கு… காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது.

2010 இல் நாம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டோம் எனின். 10 வருடத்தின் பின்னரும் நாம் அதே 2010 இல் தான் இருப்போம். ஆனால்… மற்றவர்கள் 2020 இக்கு போயிருப்பார்கள்.

ஆனால்… நாம் ஒளியின் வேகத்தை தான்டி… (3*10^8 ஐ மிஞ்சி) பயணிக்கும் போது… நாம் இறந்த காலத்துக்கு போவது சாத்தியம்…

2010 இல் வெளிக்கிட்டோமானால்… 2009 இக்கோ… 1800 இக்கோ நாம் போகலாம்…

அது நாம் ஒளியின் வேகத்தை விட எவளவு அதிகமான வேகத்தில் பயணிக்கிறோமோ என்பதை பொறுத்தது.

10 வருடகாலப் பகுதியிலோ அல்லது சில மணிப்பொழுதிலோ நாம் இறந்த காலத்திற்கு போகலாம்… ஆனால் நாம் பயணிக்கும் வேகம் தான் முக்கியமானது.

நாம்… தற்சமையம் மக்ஸிமம் 70,220 மீட்டர்/ செக்கன் ஐயே அடைந்துள்ளோம் இதுவும் இறுதிவேகம் தான்…

சராசரி வேகமல்ல. ( Helios 2). இது கூட மனிதன் பயணிக்க உகந்ததல்ல…

சாதாரணமாக மனிதனுக்கு உகந்ததாக 900 கிலோமீட்டர்/ ஹவர் தான் தற்சமையம் உள்ளது என நினைக்கின்றேன். (Airbus A380.).

ஆகவே… எமது வாழ்நாளில் நாம் பின்னோக்கி பயணிப்பது சாத்தியமே இல்லை….

சரி… இன்னும் நான் சொன்ன தலைப்புகளினுள் புகவில்லை….

அதனால்… முதலாவதாக… ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் சம்பந்தமாக ஆராய்வோம் …

இந்த பிரபஞ்சத்தில் எம்மை தவிர வேறு உயிரினங்கள் இல்லை… பூமியில் மட்டும் தான் உயிரினம் வசிக்கிறது….
என நாம் நினைப்பது சின்னப்பிள்ளை தனமானது..

இந்த மிக பிரமாண்டமான பிரபஞ்சம் இக்குணூண்டு அளவுள்ள நமக்காக (பூமிக்காக) மட்டும்தான் படைக்க பட்டது என நினைப்பது எவளவு முட்டாள் தனமானது.

ஆகவே… நம்மை தவிர வேற்று கலக்ஸிகளிலும்… நட்சத்திர குடும்பங்களிலும்… உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழும்.

இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எள‌லாம்…

எமது விஞ்ஞானிகள் பிரபஞ்சத்துக்கு ஒரு சமிக்ஞை (சிக்னல்) அனுப்பினார்களே… அதுக்கு ஏன் பதில்… அல்லது ரியாக்ஷன் வரல… என்ற கேள்வி எலலாம்.

ஆனால்… அங்கு தான் ஒரு பெரிய சிக்கலே இருக்கிறது…

வேற்று கிரக வாசிகளும் நம்மை போன்றே அதே 3 பரிமாணங்களை கொண்டு இருப்பின் மட்டுமே… அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து அவர்களின் தொடர்பாடல் முறை நமது கருவிகளால் உணரப்பட வேண்டுமே..

எனவே, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பது பொய்…

ஆனால்…

நாம் கூறிக்கொண்டு இருக்கும்… ஏலியன்ஸ் யார்… வேற்று கிரக வாசிகள்தானா?

தமிழினம் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய வரலாறு...


https://youtu.be/B0Dgbxfmqqc

Subscribe The Channel For More News...

ஆவாரம் பூ பற்றி தெரிந்துக் கொள்ளலாமா?


ஆவாரம் பூ சர்க்கரை நோய்க்கு அருமருந்து...

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.. என்ற மருத்துவப் பழமொழி உண்டு..

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்...

அதிமுகவின் ஆட்சிக்கு சிக்கலா.. ஐபி ரிப்போர்ட்டால் செம டென்ஷனில் எடப்பாடி...


https://youtu.be/CPNP_G9LqE0

Subscribe The Channel For More News...

மாண்டியாவும் தமிழும் மாலியமும்...


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பவர்கள்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் "மேல்கோட்டை" எனும் ஊரில் உள்ள "செல்லப்பிள்ளை" கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்றுவரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்துகொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,
செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி,
சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்தபெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத்தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.
ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.

அதாவது வைணவ பார்ப்பனர்கள். அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப் போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

தாலியும் தமிழரும்...


ஆரியத்துக்கும் பெரியாரியத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது..

தமிழ்நாட்டில் ஆரியமும் பெரியாரியமும் போடும் பங்காளிச் சண்டையில் தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் பணயம்  வைக்கப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் எதிர்க்கவும், கண்டிக்கவும் வேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும்.

ஆரியம் ஒருபோதும்  தமிழினத்தின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டதில்லை. அதன் வாதமெல்லாம் தமிழர்களுக்கென்று தனித்துவமான பாரம்பரியமோ, பண்பாடோ எதுவும் கிடையாது. எல்லாமே இந்திய உபகண்டத்தில், இந்துக் கலாச்சாரத்திலிருந்து இரவல் வாங்கியவை தான் என்பது தான்.

தமிழ் மொழியின் தொன்மையையும், தனித்துவத்தையும் கூட அவர்களில் பலர் ஏற்றுக் கொள்வதில்லை, தமிழை விட உயர்வாக  சமக்கிருதத்தை தூக்குவது தான் ஆரியத்தின் வழக்கம்.

தமிழர்கள் தாலி அணிவதும், இந்துக் கலாச்சாரத்தின்  ஒரு அங்கம் தான், அதுவும் ஆரியத்தின் தொடர்ச்சி என்கிறார்கள். இந்துத்துவா பார்ப்பனீயவாதிகள் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் பெரியாரியவாதிகள்.

திருமணத்தில் தாலியணியும் வழக்கம் இன்று இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழ்ப்பெண்கள்  சங்க காலத்திலேயே  ‘ஈகை அரிய இழையணி’ அணிந்திருந்தனர் என்பதற்கு புறநானூற்றிலேயே ஆதாரமுண்டு.

ஆரியப் பார்ப்பனீயம் தமிழர்களிடமிருந்து தாலி அணியும் பாரம்பரியத்தை இரவல் வாங்கியிருக்கலாமே தவிர, அது தமிழர்களின் பாரம்பரியம், அது பெண்ணடிமைச் சின்னம் அல்ல என வாதாடுவதற்குப் பதிலாக..

புறநானூற்றுக் காலம் தொட்டு, தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக, ஒருவனுக்கொருத்தி என்ற தமிழர்களின் கொள்கைக்கு அடையாளமாக  இருந்த  தாலியணியும் வழக்கத்தை, ஆரியப் பார்ப்பனீயத்திடமிருந்து  தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறி தாலி அறுக்கும் போராட்டமும் நடத்தும் பெரியாரியத்துக்கும், பார்ப்பனீயத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது, என்று தான் எண்ணத் தோன்றுகிறது..

ஏனென்றால் இரண்டு குழுவினரது நோக்கமுமே தமிழர்களைத் தனித்துவமான கலை, கலாச்சாரம் அற்றவர்களாக்குவதும். அவர்களைத் தமிழர்களாக, தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றுபடாமல் தடுப்பதும் தான்.

இந்த விடயத்தில் பார்ப்பனீயத்துக்கும், பெரியாரியத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

தமிழ்நாட்டிலுள்ள தமிழ் இந்துப் பெண்கள்  மட்டும் தாலியணிவதில்லை. மாறாக சாதி, மத வேறுபாடின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் தமது வாழ்க்கைத் துணைவிக்கு தமிழ்க் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக, தமது அன்பைக் காட்டும், தமது  மணவாழ்க்கையின் அடையாளமாகத் தான்  தாலியை அணிவிக்கிறார்களே தவிர, எந்த தமிழனும் மணவறையில்  தனது எதிர்கால வாழ்க்கைத் துணைவிக்கு, தனது வருங்கால வாரிசுகளின் தாய்க்கு, தாலியைக் கட்டும்போது, இந்தப் பெண் எனது அடிமை அந்த அடிமைத்தனத்தின் சின்னமாக இந்த தாலியைக் கட்டி, இவளை இன்று முதல் நான் அடிமையாக்கிக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொண்டு தாலி கட்டுவதில்லை.

தாலியை அணிந்து கொள்ளும் எந்த தமிழ்பெண்ணும் இன்றைக்கு முதல் நான் இவனுக்கு அடிமை, இது அடிமைத்தனத்தின் சின்னம் என்று நினைத்துக் கொண்டும் தாலியை அணிவதுமில்லை.

தாலி அணிவது தமிழர்களின் மரபே தவிர இந்துக்களுக்கு மட்டும் உரிய வழக்கமல்ல.

இன்றும் ஈழத்தமிழர்களில் இந்துக்களும், கிறித்தவர்களும் தாலியணிகின்றனர்..

அது மட்டுமன்றி, தீவிரவாத இஸ்லாமிய வஹாபிசம் வேரூன்றும் வரை தமிழ் முஸ்லீம்கள் கூட திருமணத்தில் பிறை வடிவிலான பதக்கத்தை சங்கிலியில் கோர்த்து பெண்ணுக்கு தாலியாக அணிந்தனர். அவ்வாறு சாதி, மத வேறுபாடின்றி, தமிழர்கள் அனைவரினதும் பாரம்பரியங்களில் ஒன்றாகிய தாலியணியும் வழக்கத்தை, பெண்ணுரிமை என்ற போர்வையில்,  இந்துக்களின் சடங்காக, பார்ப்பனர்களிடமிருந்து தமிழர்கள் இரவல் வாங்கிய வழக்கமென எண்ணி, அது விட்டொழிக்கப்பட வேண்டுமென்று போராடும் பெரியாரியமும், பார்ப்பனீயமும்  ஒன்றிணைந்து தமிழர்களுக்கெதிராக சதி செய்கின்றனவோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக, இக்காலத்தில் சாதாரண தொழில் செய்கிற தமிழ் ஆண்கள் கூட, தமது திருமணத்துக்கு கஷ்டப்பட்டு வேலை செய்து காசைச் சேர்த்து அதிகளவு தங்கத்தில்  தனது எதிர்கால மனைவிக்குத் தனது அன்பின் அடையாளமாக அணிவிக்கும் பொற்தாலிக் கொடியை, அடிமைச் சின்னமாக்கி, அவன் தனது மனைவியை  அடிமையாக்கத் தான் ஓடியோடி உழைத்தான் என்று கருத்துப்படும் படி  கூறுவது எவ்வளவு இரக்கமற்ற செயல் என்பதை பெரியாரிஸ்டுகள் நினைத்துப் பார்ப்பதில்லை போல் தெரிகிறது..

அவர்களின் நோக்கமெல்லாம் தமிழர்களின், பாரம்பரியம், பண்பாடு கலாச்சாரம் அழித்து.. திராவிடனின் தாசி கலாச்சாரத்தை தமிழனிடம் திணிப்பது மட்டும் தான்...

மலையாளி மே17 திருமுருகன் காந்தி கலாட்டா...


பழ மருத்துவம்...



திராட்சை...

உடல் வறட்சி நீங்கி தோல் மென்மையாகும்.
மலச்சிக்கலை நீக்கும்.
நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தை சீர் செய்யும்.
குடல் கோளாறுகள், நாக்குப் புண், வாய்ப்புண், தொண்டைப் புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

ஆப்பிள்...

உடல் குளிர்ச்சியாகும்.
இதயத்திற்கு வலிவைத் தரும்.
உணவை ஜீரணிக்கச் செய்யும்.
இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை பலத்தைக் கொடுக்கும்.

கொய்யா...

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
இரத்த சோகை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
பற்களுக்கு வலுவூட்டும்.
எலும்புகளுக்கு வலுவூட்டும்.
விஷக்கிருமிகளைக் கொல்லும்.

ஆரஞ்சு...

தோல்நோய் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
மேனியை அழகாக்கும்.
பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
வாய் துர்நாற்றம், குடல் வறட்சி, அஜீரணம், மலக்கட்டு, கணைச்சூடு, பித்த மயக்கம், தலைச்சுற்றல், உடல் மெலிதல் முதலியவற்றை நீக்கும்.

சப்போட்டா...

தொண்டைப் புண்ணை ஆற்றும்.
இருமலைத் தடுக்கும்.
குடல்புண்ணை ஆற்றும்.
பெண்களின் கர்ப்பப் பை கோளாறுகளை நீக்கும்.
சர்க்கரை நோயாளிகள் உண்ணத் தகுந்தது.
சீறுநீரகக் கோளாறுகளை நீக்கும்.
மூல நோயைத் தணிக்கும்.

பேரிக்காய்...

எலும்புகளை உறுதிப்படுத்தும்.
பற்களை பலப்படுத்தும்.
இரைப்பை, குடலைப் பலப்படுத்தும்.
பசியைத் தூண்டும்.
குழந்தை பெற்றவர்கள் இதனை உட்கொண்டால் தேவையான பால் சுரக்கும்.

மாதுளை...

நினைவாற்றலை அதிகரிக்கும்.
மயக்கம், நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, சீதபேதி, ஆஸ்துமா ஆகியவற்றிற்கு அருமருந்தாகும்.
மூலம், முடக்குவாதத்திற்கு நல்ல மருந்தாகும்.

பலா...

நரம்புகள் பலப்படும்.
ரத்தத்தை விருத்தி செய்யும்.
பற்களை கெட்டிப்படுத்தும்.
பற்கள் சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும்.

அன்னாசி...

அன்னாசிப்பழச் சாறு மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தும்.
ரத்தத்தைச் சுத்தி செய்து, ரத்த விருத்தியை உண்டாக்கும்.
ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தி, மலக்குடலை சுத்தப்படுத்தும்.

விளாம்பழம்...

நோய்க்கிருமிகளை அழிக்கும்.
எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.
இளைஞர்களின் ஞாபக மறதியைப் போக்கும்.
வயோதிகர்களின் ஜீரணத்தை செம்மைப் படுத்தும்.
மூல நோய்க்குச் சிறந்த மருந்து.
இதயத்துடிப்பை சீராக வைத்திருக்கும்.

பப்பாளி...

வைட்டமின் "சி' சத்து அதிகமாக உள்ளது.
குடல் பகுதியில் புற்றுநோய் தாக்குவதைத் தடுக்கும்.
காதில் நோய்த்தொற்று, சளி, காய்ச்சல் தாக்காமல் பாதுகாக்கும்.
பப்பாளியின் விதை மற்றும் இலைகள் குடலில் புழுக்களை நீக்குவதற்கான மருந்தாகச் செயல்படுகிறது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்று...

7 நாட்களில் முகம் வெள்ளையாக மாற வேண்டுமா.. வீடியோ பாருங்க...


https://youtu.be/_2kbj04qHd0

Subscribe The Channel For More Tips...

நரம்புகளை வலுப்படுத்தும் புளியங்கொட்டை...


மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்து இருந்தால் அவற்றை குணப்படுத்தி மீண்டும் வளர உதவும் மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தமருந்து புளியங்கொட்டையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

பர்க்கின்சன் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் இந்த மருந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து பார்த்து இது சேதம் அடைந்த நரம்பு செல்களை குணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மருந்தை காயம்பட்ட இடத்தில் திரவமாக ஊசி மூலம் செலுத்த முடியும் என்றும் அந்தக் குழு தெரிவித்தது...

அரியலூர் கலவரம்.. விசிக வை சேர்ந்த 24 பேர் மீது வழக்கு பதிவு.. 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு...


தமிழின துரோகி.. திராவிட கைகூலி.. திருமாவளவன் என்ற ஒற்றை ஆளின்  பதவி வெறி இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையை அழிக்க போகிறதோ...

வானவியலில் தமிழரின் பெருமை...


பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை(?) நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல். கண்டு பிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது….?

தெலுங்கர் வைகோ நாயுடுவின் திராவிட முகமூடியும்.. தமிழின அழிப்பும்...


இதுவரை திராவிடத்தை நம்பி நாம் கெட்டோம்...

உண்மை உள்ளடக்கத்தை மறைத்து தமிழரின் வாக்கு வங்கிக்காக நாடகமாடும் நயவஞ்சக கூட்டம்தான் திராவிடம்.

இன்று கூட  ஒரு நண்பர்  என்னிடம் சொன்னார் வைகோ மட்டும் தான் விடுதலை புலிகளுக்கும் ஈழம் பிரச்சனையிலும் சரியாக இறுகிறார் என்றார்.

முன்பு வைகோ விடுத்த ஓர் அறிக்கையை பாருங்கள்.

இன்னும் மதிமுக வில் நீங்கள் தொடர்ந்தால் தமிழினத்திற்கு நீங்கள் நண்பரா அல்லது துரோகியா என்பதை உங்கள் மனசாட்சி சொல்லும் அல்லது நாளை மக்கள் சொல்வார்கள்..

திராவிடத்தை விட்டு விலகுங்கள்...

தீராத உடல் வலியை போக்க வீட்டு மருத்துவம்...


https://youtu.be/tGiRWMcjFoc

Subscribe The Channel For More News...

தாய்லாந்த் தமிழர்கள்...


1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது கிட்டதட்ட ஆயிரத்துக்கும்(1000) அதிகமான தமிழர் அங்கு வாழ்கிறார்கள்...

சிலர் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள் மற்றும் சிலர் தமக்கடுத்த சங்கதியினர்க்கு தமிழ் கல்வியை தமது முயற்சியில் புகட்டிவருகின்றனர்...

திமுக சாராய தொழிற்சாலை பிரபலங்கள்....


வைகோ நாயுடுவும் புரோக்கர் வேலையும்...


திருட்டு திராவிடம்.. தமிழனை மறைமுகமாக அழித்துக் கொண்டிருக்கிறது...

ஸ்டர்லைட் ஆலைக்கு அடிக்கல் போட்டவர் ஜெயலலிதா அம்மையார்...

ஸ்டர்லைட் ஆலை இயங்க அனுமதியளித்தவர் கருணாநிதி...

ஸ்டர்லைட் ஆலையின் பங்குகளில் பங்குதாரராக உள்ளவர் வைகோ மகன் வையாபுரி...

எல்லாப் புடுங்கிகளும் சேர்ந்து தமிழ் இனத்தையே அழிக்கப் பார்க்குறானுங்கள்...

பூஜை அறையில் இறந்தவர்கள் படத்தை வைக்கலாமா.?


https://youtu.be/nVSHVNEmmMc

Subscribe The Channel For More News...

வ.உ.சி எனும் சிதம்பரம்பிள்ளை...


வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை...

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.


வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார். பாரதியார் ஒரு பெரும் புலவர். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சி மிக்க பாடல்களால் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பினார். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானர்கள்.

வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

ஆனால் சொந்த கப்பல்கள் இல்லாமல் கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த இயலாது என்பதை அறிந்து கொண்டார். அதனால் சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். தூத்துக்குடி வணிகர்கள் உதவி செய்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லை. அதனால் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். அங்குள்ள வணிகர்கள் அவரது பேச்சாற்றலால் கவரப்பட்டு கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். வ.உ.சி. வட இந்தியாவிற்குக் கிளம்பும் போது "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்று சூளுரைத்துச் சென்றார். வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றினார். "எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1300 சாதாரண இருக்கைகள் இவற்றைக் கொண்டிருந்தது. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்ல இயலும்.

இப்படி பட்ட மா மனிதர், செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சி-கப்பல் ஒட்டிய தமிழர் அவர்களை ஒரு பொழுதும் மறந்துவிடக் கூடாது...

கூந்தல் உதிர்தலை தடுக்க...


1. கடுகு எண்ணெய் ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியத்தை பெரும்.

2. வெந்தயம் சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.

3. வெங்காயம் தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

4. முட்டை முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் முடி கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை, சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.

5. இயற்கை ஷாம்பு 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.

6. தேங்காய் எண்ணெய் ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.

7. நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.

8. பசலைக்கீரை சாறு தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.

9. கொத்தமல்லி பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள்.

10. தேங்காய் பால் தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி...

ஆழமான தொடர்பு...


எண்ணங்களுக்கும் மூச்சுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதை நம் முன்னோர்கள் நன்றாக அறிந்திருந்தனர். மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைக்கையில் மூச்சு சீராக இருக்கும். மூச்சு சீராக இருக்கையில் தானாக மனம் அமைதியடையும் என்பதை அனுபவபூர்வமாக அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால். பழக்கமில்லாதவர்களுக்கு மூச்சின் மீது தொடர்ந்து கவனம் வைப்பதற்கு மனம் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்கும். பல கவலைக்குரிய விஷயங்களையும், கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சுட்டிக் காட்டி அதையெல்லாம் யோசித்துப் பார்க்கச் சொல்லும். இது பெரிய விஷயமில்லை என்று சொல்லும்.

அரைமணி நேரம் என்று ஆரம்பித்தாலும் ஐந்து பத்து நிமிடங்களில் இப்போதைக்கு இது போதும் என்று முடித்து வைக்கச் சொல்லும். அதையெல்லாம் கேட்டு தங்கள் முயற்சியை அரைகுறையாய் விட்டவர்கள் முதல் படியிலேயே சறுக்கி விட்டார்கள் என்று அர்த்தம். அப்படியில்லாமல் தொடர்ந்து முயற்சித்தவர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் முயற்சி செய்து இருந்தது
ஆல்ஃபா அலைகளில் தானா என்ற சந்தேகம் கூட உங்களுக்கு இருக்கலாம். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் அமைதியாக அமர முயற்சி செய்ததே நல்ல ஆரம்பம் தான்.

நாம் என்ன சொன்னாலும் இந்த நபர் இந்த அரைமணி நேரம் இந்தப் பயிற்சி செய்த பிறகு தான் நாம் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்வார் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் மேல்மனம் இடைமறிப்பது தானாகக் குறையும். மனம் தானாக அமைதியடையும். எனவே இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்யாதவர்கள் கண்டிப்பாக மீண்டும் அதை ஆரம்பிப்பது நல்லது. இந்த நேரத்தில் இதைத் தான் செய்வேன் என்று எஜமானாகக் கண்டிப்புடன் சொல்லி செயல்படுத்தினால் ஒழிய மனம் எந்த நல்ல மாற்றத்தையும் விரும்பி ஏற்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

மனம் உண்மையாகவே அமைதியடையவும், ஆழ்மன சக்திகள் சிறப்பான முறையில் கைகூடவும் மிகச் சிறந்த வழி தியானம் தான். தியானம் அல்லாத முன்பு சொன்னபடி சில பயிற்சி முறைகளாலும் ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்ல முடியும்
என்றாலும் தியானப் பயிற்சிகளை முறையாகச் செய்தால் ஆல்ஃபா நிலையை சிறப்பாக நமக்கு வேண்டும்படி பயன்படுத்திக் கொள்ள முடியும். பின்னர் ஆல்ஃபாவிலிருந்து தீட்டா டெல்டா அலை வரிசைகளுக்குச் செல்வதும் எளிதாகும்.

தியானம் என்றாலே அது ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. உண்மை அதுவல்ல. பல மதத்தினரும் பலவித தியானமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்ற போதும் மதங்களைச் சாராதவர்களும், இறை நம்பிக்கை
இல்லாதவர்களும் கூட தியானப் பயிற்சியால் விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு தியானம் செய்யலாம். பலரும் செய்கிறார்கள்.

தியானப் பயிற்சியால் ஆழ்மன சக்திகள் மட்டுமல்லாமல் பல நன்மைகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களும், அனுபவஸ்தர்களும் கூறுகிறார்கள். முறையாகத் தொடர்ந்து உண்மையாக தியானம் செய்பவர்கள் தீய குணங்கள் குறைந்து நல்ல குணங்களைப் பெறுவது உறுதி. அன்பு, பொறுமை, மனக்கட்டுப்பாடு, பெருந்தன்மை, அமைதியாக ஆராயும் குணம், பக்குவம், அறிவு வளர்ச்சி, மன அமைதி ஆகியவை அதிகமாகின்றன. கவலைகள், கோபம், பொறாமை, அற்ப புத்தி, குழப்பம், பேராசை போன்றவை குறைகின்றன. தியானம் செய்தும் அப்படி ஆகாமல் இருந்தால் உண்மையில் தியானப் பயிற்சி நடக்கவில்லை என்றும் தியானம் என்ற பெயரில் ஏதோ எந்திரத்தனமான சடங்கு நடந்திருக்கிறது என்று பொருள் என்றும் அடித்துக் கூறலாம்.

1996 ஆம் ஆண்டு இரத்த அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றைக் குறைப்பதில் தியானத்தின் பங்கு பற்றி சார்லஸ் அலெக்சாண்டர் (Charles N Alexander Ph.D) என்ற ஆராய்ச்சியாளரின் தலைமையில் ஒரு குழு அமெரிக்காவில் மூன்று மாத காலம் ஆராய்ச்சி செய்தது. தன் முடிவுகளை அமெரிக்க இருதய அசோஷியேசன் வெளியிடும் பத்திரிக்கை Hypertension-ல் 1996 ஆகஸ்ட் இதழில் அலெக்சாண்டர் வெளியிட்டார். அதில் வயதான வேறு பல வியாதிகள் இருக்கும் நபர்களும் கூட தியானத்தின் மூலம் இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க முடிகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

1992 ல் USA Today பத்திரிக்கை வயதான தோற்றத்தைத் தடுக்க தியானம் உதவுகிறது என்பதை ஆய்வு செய்து வெளியிட்டது. தொடர்ந்து தியானம் செய்பவர்கள் இளமையான தோற்றமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்தது.

1989 ல் Newsweek பத்திரிக்கை முதியோர் இல்லங்களில் வாழும் முதியோர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த முதியோர்களை (சராசரி வயது 81 வயது) மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவு ஆட்களுக்குத் தியானப் பயிற்சியும், இன்னொரு பிரிவு ஆட்களுக்கு வெறும் ரிலேக்சேஷன் பயிற்சியும் அளித்தது. மூன்றாவது பிரிவினருக்கு தியானப் பயிற்சியோ, ரிலேக்சேஷன் பயிற்சியோ அளிக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் தியானப்பயிற்சி செய்த அனைத்து நபர்களுமே உயிரோடிருந்தனர். வெறும் ரிலேக்சேஷன் பயிற்சி செய்திருந்த முதியோரில் 12.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர். தியானமோ, ரிலேக்சேஷன் பயிற்சிகளோ செய்யாதவர்களில் 37.5 சதவீதம் பேர் இறந்திருந்தனர்.

மேற்கண்ட அனைத்து ஆராய்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்ட தியான முறை மகரிஷி மகேஷ் யோகியின் Transcendental Meditation. அதையும் வேறு சில தியான முறைகளையும் விளக்கமாகப் பார்ப்போம். எல்லா தியானப் பயிற்சிகளிலும் எல்லோரும் தேர்ச்சி பெறுவது கஷ்டம். எனவே இனி விளக்கப்படும் தியானப் பயிற்சிகளில் உங்களுக்கு ஒத்து வருகிற ஒன்றில் தினமும் ஈடுபடுவது போதுமானது...

விளம்பரம் மற்றும் வெளிநாட்டு பொருட்கள் மீது உள்ள மோகம் காரணமாகவே ஏமாற்றப்படுகிறோம்...


கட்டபொம்மன் தெலுங்கன் என்று ஒத்துக் கொண்ட தெலுங்கர்கள்...


திராவிடம் எப்படி எல்லாம் வரலாறுகளை மாற்றி தமிழர்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

சீசெல்சு தீவில் தமிழர்கள்....


சீசெல்சு தீவு, கிழக்காப்பிரிக்காவில் உள்ள மொம்பாசாவிற்கு 1000 மைல் கிழக்கிலும்; மடகாஸ்கருக்கு ஆறு நூறு மைல் வடகிழக்கிலும் 92 தீவுகள் அடங்கிய கூட்டமாகும். இது இந்துமாக்கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் மொத்த நிலப்பரப்பு 171 சதுர மைல்களாகும். மாகித் தீவின் பரப்பளவு மட்டும் 57 சதுர மைல். எந்த இடத்திலும் இத்தீவின் அகலம் ஐந்து மைல்களுக்கு மேல் இல்லை. மாகியில்தான் சீசெல்சின் தலைநகரம் விட்டோரியா உள்ளது.

தமிழர் குடியேறிய வரலாறு...

புதுச்சேரியிலிருந்து இத்தீவுக்குத் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். 1770 ஆம் ஆண்டு 28 பேர்கள் சென்ற முதல் குடியேற்றக் குழுவில் 15 வெள்ளையர், 7 கறுப்பரான அடிமைகள், 5 தமிழர் சென்றதாக க. சச்சிதானந்தம் கூறுகிறார். அவர்கள் வருமாறு: ஆச்சாரி, முத்தையா, குமார்மீனாட்சி, கோவிந்தன், தொமினிக்.

1783-84 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் தொடர்ச்சியாக வந்து குடியேறினர். பெரும்பாலோர் மொரீசியஸ், ரியூனியன் வழியாகவும், சிலர் நேராக புதுச்சேரித் துறைமுகத்தின் வழியாகவும் சீசெல்சுத் தீவுக்கு வந்து குடியேறினர். தஞ்சாவூர், சிதம்பரம், மாயவரம், காரைக்கால், கடலூர் போன்ற ஊர்களிலிருந்து கிளம்பி புதுச்சேரி வழியாக சீசெல்சு தீவுக்கு வந்தார்கள்.

1810-ஆம் ஆண்டு இத்தீவு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிலும் தமிழர்கள் பெருமளவில் வந்தனர்.

தமிழரின் இன்றைய நிலை...

சீசெல்சில் இன்றுள்ள மொத்த மக்களுள் இந்தியர் எனக் கணிக்கப்படுவோர் 5 விழுக்காட்டினர் மட்டுமே. இவர்களுள் 10-15 குஜராத்திக் குடும்பங்களைத் தவிர எஞ்சியவர் யாவரும் தமிழர்களே. சுமார் 7500 தமிழர்கள் இருக்கிறார்கள் எனக் கூறலாம்.

ஆனாலும் தமிழ்ப் பெயர்கள் தாங்கிய சீசெல்சு மக்களின் தொகை 30 விழுக்காடு வரை இருக்கலாம்; சுமார் 17,000 திருமணங்கள் சீசெல்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 770 திருமணங்கள் தமிழ்ப் பெயர் உடைய மண மகனையோ, மணமகளையோ கொண்டன என்கிறார் க. சச்சிதானந்தம்.

சமயம்...

தமிழர்கள் வீடுகளிலேயே வழிபாட்டை நிகழ்த்துகின்றனர். 1984-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் நாள் சீசெல்சு இந்துக் கோயில் சங்கம் அமைக்கப்பட்டது. சங்கம் இருக்கும் குவன்சி தெருவில் ஒவ்வொரு ஞாயிறும் காலை 8 மணிக்கும், மாலை 7 மணிக்கும் வழிபாட்டு முறைக் கூட்டம் கூடும். ஞாயிறு காலையிலும், விசேச நாட்களிலும் விநாயகர், நடராசர் சிலைகளுக்கு அபிசேகம் செய்யப்படும்.

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, திருவிளக்குப் பூசை, நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கந்தசஷ்டி, திருவெம்பாவை நாள், தைப்பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ்ப்புத்தாண்டு முதலியவற்றை இச்சங்கம் கொண்டாடுகிறது. 1985-ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்காக நிலம் இச்சங்கத்தினால் வாங்கப்பட்டுள்ளது.

குடும்ப உறவுகள்...

தமிழர்கள் சீசெல்சு சென்ற காலத்தில் பெண்களை அழைத்துச் செல்லாததால் ஆப்ரிக்க பெண்களையே தமிழர்கள் மணந்தனர். அதனால் மொழியை இழக்க வழி ஏற்பட்டது. இருந்தாலும் தமிழர் என்பதற்கடையாளமாக இருப்பது சாதி பெயர்தான். ஆசாரி, செட்டி, பிள்ளை, நாயக்கன், படையாட்சி என்ற சாதி வால்கள் இல்லாத தமிழர் எண்ணிக்கை குறைவு.

இவர்களில் பிள்ளை, செட்டி இரண்டும் மிகவும் புழக்கத்தில் உள்ளன. சாதிப் பெயரல்லாத தமிழரை ஆப்ரிக்கராகவோ, பிரஞ்சுக்காரராகவோ கருதுவார்கள். வெள்ளைக்கார குடும்பங்கள் கூட தம் மூதாதைத் தமிழரின் சாதிப் பெயர் பெருமையைப் பேசி மெய் சிலிப்பார்கள் என்கிறார் க. சச்சிதானந்தம்.

சீசெல்சு தமிழ் சைவ, வைணவக் குடும்பங்களில் குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு சடங்குகள் அனைத்தும் கத்தோலிக்க முறையிலேயே நடத்தப்படுகின்றன.

வீடு...

சீசெல்சு தமிழர்கள் கடற்கரையை ஒட்டியுள்ள சிற்றூர்களிலும், கிராமங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் வாழும் குடிசை மிகவும் எளிமையானவை; பனை ஓலை வேய்ந்த கூரைகளை உடையவை. உள்ளும் புறமும் தூய்மையாக வைத்திருப்பார்கள்.

உணவு...

நம் நாட்டில் உள்ள காய்கறிகள் எல்லாம் மாகியில் கிடைக்கின்றன. அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை நிறையப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு குடிசையைச் சுற்றிலும் பெரும்பாலும் தோட்டம் உண்டு. இத்தோட்டத்தில் காய்கறிகள் பயிராகின்றன. இறைச்சிக்காகப் பன்றிகளையும், கோழிகளையும் ஒவ்வொரு குடும்பத்தினரும் நிறைய வளர்க்கின்றனர்.

செய்தித் தொடர்பு...

வானொலி, தொலைக்காட்சியில் தமிழ் ஒலிபரப்புகள் உண்டு. சீசெல்சு இந்துக் கோயில் சங்கத்தின் உறுப்பினர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் சீசெல்சின் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றன. தமிழ்த் திரைப்படங்களை வீடியோவில் கண்டு வருகின்றனர்.

தமிழ்மொழியின் நிலை...

இந்துக் கோயில் சங்கத்தால் தமிழ்மொழி வகுப்புகள் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிமுதல் 11 மணி வரை நடத்தப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் இல்லை. தமிழும் பேசுவது குறைந்து கிரியோலே வீட்டு மொழியாகி உள்ளது. மு.நடேசன், பழனி, சோதி மாணிக்கம் போன்றவர்கள் தமிழினிமையுடன் கவிதை எழுதி வருகின்றனர்.

அமைப்பு...

இத்தீவிலுள்ள பெரும் அமைப்பு இந்துக்கோயில் சங்கமாகும். இது சமயம், பண்பாடு, மொழி, கலை நிகழ்ச்சிகளை இங்குள்ள தமிழர்களிடம் வளர்த்து வருகிறது. உலகத் தமிழ் பண்பாட்டு கழகத்தின் கிளை இங்குள்ளது. அதில் ஜி.எம்.ஆர். பிள்ளை, கண்ணா படையாச்சி முதலியோர் உள்ளனர்.

தமிழர் சாதனைகள்...

1789-இல் ரியூனியனிலிருந்து அரசு சார்பில் வந்தவர்-இராமலிங்கம். இவரைப் போன்றவர்கள் அரசு நிருவாகத்தில் முக்கிய பங்கு வகித்தனர். தீவு, சுதந்திரம் பெற்ற பிறகு அமைத்த ஆட்சியில் 1977 ஆம் ஆண்டு திரு. செட்டி என்பவர் அமைச்சராக இருந்துள்ளார்.

வணிகம், தொழில் புரிவோர் விபரம்...

1864-75 காலக்கட்டத்தில் திரு. நாயக்கன் என்பவர் விக்டோரியா நகரத்தின் பெரும்பகுதி நிலவுரிமையாளரானார். வணிக முன்னோடியான இவருக்குப்பின் திரு.கந்தசாமி, திரு.பிள்ளை, ஆகியோர் சிறப்பாக வணிகத்தில் விளங்குகின்றனர். சீசெல்சு தீவில் உள்ள வியாபார நிறுவனங்கள் தமிழர் பெயரிலேயே இருக்கின்றன.

குறிப்பாக தஞ்சையில் இருந்து சென்ற நாயுடு, பிள்ளை, படையாட்சி, செட்டி முதலியவர்கள் வசம் வணிக நிறுவனங்கள் உள்ளன. எல்லா கிராமத்திலும் தமிழரால் நடத்தப்படும் கடை இருக்கும். துணி ஏற்றுமதி, இறக்குமதி, வியாபாரம், உணவு, வீட்டுப் பாவனைப்பொருள்கள் வியாபாரம் தமிழரால் செய்யப்படுகின்றன. மாகித் தீவில் உள்ள மிகப் பெரிய வணிகக் கடையை வைத்து நடத்துபவர் ஒரு தமிழரே ஆவார்.

முருகன் ஸ்டோர், பாலன் ஸ்டோர்ஸ், ஸ்வாமி ஸ்டோர்ஸ், சேகர் ஸ்டோர்ஸ், மோகன் இந்து ஷாப்பிங் சென்டர், சக்தி ஸ்டூடியோ போன்ற பெயருடைய கடைகளை விக்டோரியாவிலும் பிற ஊர்களிலும் காணலாம்.

ஏர் இந்தியா விமானம் சீசெல்சு வழியாக மொரீசியசு செல்வதால், தமிழ் வியாபாரிகள் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டுள்ளனர். பல பொருள்களைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து விற்பனை செய்கின்றனர்.

1974-81 காலகட்டத்தில் சீசெல்சு வந்த தமிழர்கள் அனைவரும் தொழில் நுணுக்கப் பணியாளர்கள். இவர்கள் இங்கு தொழில்துறை, தொழில் நுட்பத்துறை, மேலாண்மை, நிர்வாகம், எழுத்தர், பொறியியல் போன்ற துறையில் பணியாற்றி வருகின்றனர்...