தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கொரானா பரவல் உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அதிகம். முழு லாக் டவுன் ஏற்படுத்தும் அளவு.
எல்லா அரசு துறைகளிலும் கடைநிலை முதல் உயர் அதிகாரிகள் வரை கொரானா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுகின்றனர்.
இதன் நடுவே,
தமிழ்நாடு அரசின் ஆணைப்படி,
ஏப்ரல் 30 அன்று திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பணியாற்றும் அலுவலர்கள், ரேசன் கடை ஊழியர்கள் என 1200 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இது ஒரு நபர் 20 நாளுக்கு பயன்படுத்தலாம்.
திருவள்ளூர் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் கொரானா பரவல் அதிகமானாலும், பல்வேறு அரசு துறை ஊழியர்கள் கொரானா பாதிப்புக்குள்ளானாலும்,
ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரை சந்திக்கும், நிவாரண தொகை, ரேசன் பொருள்களை வீட்டிலேயே போய் தரும் என கொரானாவை எதிர் கொண்டு களப்பணியாற்றும் திருவள்ளூர் மாவட்ட 1200 ஊழியர்களுக்கும் கொரானா பாதிப்பு இல்லை.
வேறு சில இடங்களில் கபசுர குடிநீர் குடித்தும் வருகிறது என வாதம் வைத்தால், கபசுர குடிநீரின் தரம், குடிக்கும் அளவு, விதமும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
கப சுர குடிநீர் கொரானாவிலிருந்து தற்காக்கிறது என்பதற்கான ஒரு வலிமையான நடைமுறை சான்று இது. ஆர்வமுள்ளோர் மேற்கொண்டு அறிவியல் கள ஆய்வுகளை நடத்தலாம்...