27/12/2017

தேங்காயின் மருத்துவக் குணங்கள்...


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.

இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.

விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.

இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது...

கார்பரேட் ( இலுமினாட்டி ) வியாபாரத்தை புரிந்துக் கொள்ளுங்கள்...


தமிழர்களின் நீர் நிலைகள் மொத்தம் 47...


ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47...

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.

(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.

(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12) கடல் (Sea) - சமுத்திரம்.

(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15) கால் (Channel) - நீரோடும் வழி.

(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.

(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.

(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.

(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.

(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.

(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.

(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.

(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்...

விசித்திர கோவில்...


மனிதனுக்கு வரும் 4 கண்டங்கள் விளக்குகிறார் திருமூலர்...


மனிதன் வாழ்நாள் காலத்தில் 4 விதமான உயிர் போகும் கண்டத்தை சந்திக்கிறான். அதை பற்றி திருமூலர் தெள்ள தெளிவாக விளக்குகிறார்...

“அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சும்
மூன்றும்,
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்பது ஆகும்
கிழிகின்ற காலஅறு பத்திரண்டு என்பது
எழுகின்றது ஈரைம்பது எண்அற்று
இருந்தே” (திம 742)

பொருள்:

முதல் கண்டம்: 25 - 28 வயது வரை (இந்த
கால கட்டத்தில் தான் மனது அலைபாயும் காலகட்டம். மனிதன் உடம்பை பேண மாட்டான். காம இச்சை மிகுந்திருக்கும். முதியோர்களை மதியா தன்மை இருக்கும்).

இரண்டாம் கண்டம்: 30 - 33 வயது வரை (இந்த கால கட்டத்தில் குடும்ப பாரம் மிகுதியால் உடலை பேண மாட்டான். மனம் எப்போதும் கணத்திருக்கும், வாழ்க்கை பற்றி பயம் கலந்த சிந்தனை மிகுதிருக்கும்).

மூன்றாம் கண்டம்:  60 - 62 வயது வரை (இந்த காலகட்டத்தில் மனிதனுக்கு தனது சந்ததியினர் குறித்த கவலைகள் மேலோங்கி இருக்கும். முதுமை குறித்த பயம் இருக்கும், ஆளுமை தன்மை மேலோங்கி இருக்கும் அதனால் ஏற்படும் அழுத்த காரணத்தால் தனது உடலை பேண மாட்டான்).

நான்காம் கண்டம்: மேல் கூறிய 3 கண்டங்களை ஒரு மனிதன் கடந்து விட்டால் தீர்க்க ஆயுள் பெறுவதற்கு சித்தி உண்டு. இதற்கு மேல் எல்லை இல்லை.

இதைத் தான் இன்றைய அறிவியல் அறிஞர்கள். Human Life Cycle Psychology என்கின்றனர்...

பாஜக கலாட்டா...


உன்னைப் புறக்கணித்து விட்டதாக ஏன் கதறுகிறாய்?


யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்.

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன். அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு.  நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.  அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் உயர்வு-தாழ்வு மனப்பான்மை என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும் போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போ து உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ் சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.

ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. 
வலிகள் மறையும்.

பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்...

உயிருக்கு போராடிய கணவன் மனைவியை தனது காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல்துறை அதிகாரி...


விழுப்புரம் சங்கராபுரம் அருகே பைக்கில் வந்த கணவன் மனைவி விபத்திற்குள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்சிற்கு காத்து கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த மாவட்ட எஸ்பி ஜெயகுமார் அவர்கள் தனது காரில் கணவன் மனையி இருவரையும் ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தற்போது இவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அக்கறையுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயகுமார் அப்பகுதி மக்கள் பாராட்டினர்...

தமிழா விழித்துக்கொள்...


சங்ககாலத்து உணவு...


உணவு : மனிதன் உயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவாகும்.

பண்டை மனிதனது முதல் தொழிலே உணவுத் தேடலாயிருந்தது.

அவன் இயற்கையாய்க் கிடைத்த காய்களையும் விதைகளையும் கிழங்குகளையும் உண்டான்.

பின்னர் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் பதப்படுத்தாமலே உண்டு வந்தான்.

அறிவும் ஆராய்ச்சியும் பெருகப் பெருகத் தீயை உண்டாக்க அறிந்தான்.

அதன் பின்னரே தான் அதுகாறும் பச்சையாய் உண்டுவந்த பொருட்களைப் பக்குவப்படுத்தி உண்ணத் தொடங்கினான்.

உணவு வாயிலாகவே சமுதாய உணர்ச்சியும் வளர்ந்தது. குடும்பத்தினர் சேர்ந்து பயிற்தொழிலைச் செய்யலாயினர்.

இம்முயற்சியால் சிற்றூர்கள் தோன்றின. உணவுப் பொருட்களை உண்டாக்கி உண்ணும் முறைகள் மாற மாற உணவுடன் சுவையும் நாகரிகமும் பிறவும் வளரத் தொடங்கின.

சமையல் தொழில் ஒரு கலையாய் மாறியதென்பதற்கு "நளபாகம்", "பீமபாகம்" எனும் தொடர்களே ஏற்ற சான்றாகும். பீமபாகம் பற்றிய சிறுகுறிப்பு சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது. இனி, பத்துப்பாட்டுள் கூறப்பட்டுள்ள உணவுப் பொருட்களைக் காண்போம்.

பொருநர், பாணர், கூத்தர் எனும் கலைவாணர் பேரரசர்களையும் சிற்றரசர்களையும் கண்டு தம் கலைகளை இனிய முகத்துடன் வரவேற்று நல்லுடைகளையும் பலவகை உண்டி வகைகளையும் வழங்கி உபசரித்தார்கள். வேண்டிய பொருளுதவி புரிந்தார்கள்.

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் நிலப் பொதுமக்களும் அக்கலைவாணரைத் தம்மால் இயன்றவரை உணவு தந்து உபசரித்தனர். இவ்விவரங்கள் வருமிடங்களில் அக்காலத் தமிழர் உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மதுரையில் ஆதுலர் சாலை இருந்தது. அங்கு வழங்கப்பட்ட உணவு வகைகள் மதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ளன.

இவற்றுடன் பல குடிவகைகளும் கூறப்பட்டுள்ளன. இனி, இவை பற்றிய விவரங்களைக் கீழே காண்போம்...

குறிஞ்சி நிலத்தவர் உணவு...

சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15).

சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304).

நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169).

நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த கள்ளையும் தேனால் செய்து மூங்கிற்குழையுள் முற்றிய கள்ளையும் பருகினர். பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த குழம்பையும் மூங்கிலரிசிச் சோற்றையும் உண்டனர். (எ-கா: மலைபடுகடாம் அடி: 171-183).

மலைநாட்டைக் காவல் புரிந்த வீரர் இறைச்சியையும் கிழங்கையும் உண்டனர். அடி:425-26. மலைமீது நடந்து சென்ற கூத்தர் திணைப்புனத்துக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் மயிரைப்போக்கி மூங்கில் பற்றியெரியும் நெருப்பில் வதக்கி அப்பன்றியின் இறைச்சியைத் தின்றனர். தின்று எஞ்சிய பகுதியை வழியுணவுக்காக எடுத்துச் சென்றனர். அடி:243-249.

பாலை நிலத்தார் உணவு...

ஓய்மானாட்டுப் பாலைநில மக்களான வேட்டுவர், இனிய புளிங்கறி எனப்பட்ட சோற்றையும் ஆமாவின் சூட்டிறைச்சியையும் உண்டனர். (சி.ஆ.படை அடி:175-177).

தொண்டைநாட்டுப் பாலைநில மக்கள் புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டார்கள். விருந்தினர்க்கு தேக்கு இலையில் உணவு படைத்தார்கள். (பெ.ஆ.படை அடி:95-100).

மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றையும் உடும்பின் பொரியலையும் உண்டார்கள். (பெ.ஆ.படை அடி:130-133).

முல்லை நிலத்தார் உணவு...

தொண்டை நாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168).

முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த "கும்மாயம்" எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது

மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். அடி:434-436. பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் திணை மாவையும் உண்டனர். அடி: 440-445.

மருத நிலத்தார் உணவு...

சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன.

மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217.

ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோற்றையும் நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையை(கூட்டை)யும் உண்டனர். (சி.ஆ.படை அடி:193-195).

தொண்டை நாட்டு மருத நிலத்துச் சிறுபிள்ளைகள் (காலையில்?) பழைய சோற்றை உண்டனர்; அவலை இடித்து உண்டனர். (பெ.ஆ.படை அடி:223-226).

தொண்டை நாட்டு மருத நிலத்தார் நெற்சோற்றை பெட்டைக்கோழிப் பொரியலோடு உண்டனர். (பெ.ஆ.படை அடி:254-56).

தொண்டைநாட்டுத் தோப்புக் குடில்கள் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு, சோறு முதலியவற்றை உண்டனர். (அடி:356-66).

நெய்தல் நிலத்தார் உணவு...

ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163).

தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த கள்ளைப் பருகினர். (பெ.ஆ.படை அடி:339-345).

காவிரிப்பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை ஆகிய இரண்டையும் பக்குவம் செய்து உண்டனர். (ப.பாலை அடி:63-64). பனங்கள்ளை உட்கொண்டனர். (அடி:89). நெல்லரிசிக் கள்ளையும் பருகினர். (அடி:93). கள்ளுக்கடைகளில் மீன் இறைச்சியும் விலங்கு இறைச்சியும் பொரிக்கப்பட்டு விற்கப்பட்டன. (அடி:176-178).

மறையவர் உணவு...

பாற்சோறு, பருப்புச்சோறு, ஆகுதி பண்ணுதற்கேற்ற இராசான்னம் என்னும் நெல்லின் சோறு, மிளகின் பொடியுடன் கலக்கப்பட்டு கருவேப்பிலையிடப்பட்டு பசு நெய்யிற்கிடந்து வெந்த கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் என்பவற்றைத் தொண்டைநாட்டு மறையவர் உண்டனர். (பெ.ஆ.படை அடி:304-310)...

வரலாறு படைத்த பாஜக...


ஆரியமும் திராவிடமும் ஒன்றே...


அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் 
-(பாரதி)...

வெளிநாட்டு ‘அறிஞர்களும், உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்த பின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

திராவிடர்கள் பிராமணர்களே. பிராமணர்கள் திராவிடர்களே.

திராவிடர்கள் யார்?

தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன..

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!

நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!

கிரிக்கெட் ஆடும் திராவிடன்...

கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராகுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது?

ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர்.

கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.

இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.

உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்..

இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்.. அது சரியல்ல.

உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.

திராவிடாசாரியா...

அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்...

பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.

(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன்”கர்நாடக” என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ...

திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.

திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.

திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்

திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் மதறாசி ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்.. இது போலத் தான் திராவிடன் என்பதும்.

தமிழ் நாடு — திராவிடநாடு அல்ல...

இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை..

இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை.

இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை.

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?

தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்..

தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.

திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை.

பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை.

திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்...

பாஜக தமிழிசையை கலாய்த்த சி.ஆர். சரஸ்வதி...


ஆரியத்தைத் தழுவியதால் தான் , அதாவது சமஸ்கிருதத்தை தமிழில் கலக்க அனுமதித்ததால் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நீங்கள் பேசுகின்ற திராவிட மொழிகள் பிறந்தன...


ஆரியத்தை ஏற்றுக்கொண்டதால் தான் அம்மொழியினர் தங்களைத் திராவிடர்களாச் சொல்லிக் கொள்வதும் இல்லை.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியத்தை எதிர்துப் போராடியது தமிழினம் ஒன்று மட்டுமே.

தமிழர்கள் எந்தக்காலதிலும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது.

அப்படியிருக்கும் போது பெரியார் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்,

தமிழர்களை என்றைக்குமே திராவிடர் என்ற மாயை உருவாக்கி ஆரியர்களிடம் அடிமையாக வைக்கவே திராவிடம் , திராவிடர் என்ற நச்சு விடத்தை தமிழர்களிடம் விதைத்தார்..

இதனை தமிழர்கள் உணரத் தொடங்கியதால் திராவிடர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை எரிகிறது.

சிலரை சில நாள் ஏமற்றலாம்,
பலரைப் பலநாள் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்றமுடியாது என்பதை திராவிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையேல் தமிழர்கள் நாங்களே புரிய வைப்போம்...

தமிழினமே விழித்துக்கொள்...


தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்...


தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ண வேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள். இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி...

மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்வோம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்

3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்

4. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்

5. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக் குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் .

வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு.

இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்...

தினகரனை யாருன்னே தெரியாதுன்னு சொல்லுவான் போல ஒபிஎஸ்.... அடேய் எங்க கிட்ட கிணறு வெட்ன ரசீது இருக்குடா...


யார் தமிழர் ?


1956க்குமுன் வந்தவர்கள் எல்லாம் தமிழ்ர்களா?

அப்படியானால் சுமார் 250 அண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய வந்து பின் இந்தியாவை ஆண்ட சிறுபான்மை இனமான வெள்ளையர்களை நாம் ஏன் விரட்ட வேண்டும்.

500 ஆண்டுகளுக்கு முன் படை எடுத்து வந்து தமிழ்நாட்டை நாசம் செய்த வடுக வந்தேறிகளை மட்டும் இன்னும் தமிழர்களை ஆள விடவேண்டும் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?

மேலும் அவர்களையும் தமிழர்களாக ஏற்கிறோம் என்று சொல்வதும் அயோக்கியத்தனம் இல்லையா?

வடுகனுக்கு ஒரு நியாயம், வெள்ளையனுக்கு ஒரு நியாயமா?

இதற்குப் பெயர் தமிழ்தேசியமா?
அல்லது பெரியாரியக்கமா?

வெள்ளையனே வெளியேறு என்றது சரியென்றால்... அந்நியனே வெளியேறு என்பதும் சரி தானே...

இப்படி இருந்த தமிழகத்தை.. இப்படி ஆக்கியது தான் திராவிடத்தின் 60 ஆண்டு சாதனை...


அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி - மறைக்கப் பட்ட உண்மைகள்...


வரலாறு என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.

அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா?

அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்?

சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.

அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான்.

இந்தியாவின் மிகச்சிறந்த, பெரிய பேரரசர். பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார், கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது.

பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார், இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது,

ஆனால் அசோகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது.

அது திட்டமிட்டே அனைத்து சரித்திர புத்தகங்களிலும், வரலாற்றிலிருந்தும் மறைக்கப் பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இந்திய அரசும் மற்றும் புத்த அமைப்புக்களும்..

அது என்னவெனில் பேரரசர் அசோகர் பார்ப்பதற்கு மிகவும் அவ லட்சனமாகவும், கரிய நிறமாகவும் அழகற்றவராகவும் இருந்தார்,

ஒருமுறை அவர் அந்தப்புரத்திற்கு சென்றபோது அவரை மற்ற பெண்கள் அனைவரும் கேலி செய்துவிட்டனர், அதனால் அவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்களை கழுவில் ஏற்றி கொடுமை செய்து கொன்று விட்டார்.

அவர் ஒரு ஆண் மகனாக இருந்திருந்தால் தனது ஆண்மையை அந்த பெண்களிடம் அவர் நிரூபித்திருக்க வேண்டும்,

அதனை விட்டு அவர் தனது அதிகாரத்தினால் அனைவரையும் கொடுமை செய்து கொலை செய்வது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?

மேலும் அவர் எப்படி அரியணை ஏறினார் என்பதை அனைத்து நூல்களும் தனது தமையனுடன் போரிட்டுவென்றார் என்றே கூறுகிறது.

ஆனால் அவர் தனது சகோதரர்கள் 99 பேரை வஞ்சகமான முறையில் கொன்றே அவர் ஆட்சி பீடத்தில் ஏறினார்.

ஏனோ தெரியவில்லை அவர் திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை.

மேலும் இவன் தனது அரண்மனையில் அந்தப்புரத்துடன் ஒரு சித்தரவதைக் கூடாரத்தைம் நிறுவி எதிர்ப்போரை சித்தரவதை செய்து கொன்றுல்லான்.

அரச பதவி ரத்த சொந்தம் அறியாது என்று கூறுவார்கள்" இதற்க்கு எடுத்துக் காட்டாக அனைவரும் ஔரங்கசீப்பை மட்டுமே கூறுகின்றனர்.

ஏனெனில் அவர் தனது நான்கு சகோதரர்களை கொன்றிப்பார்.

ஆனால் தனது 99 சகோதரர்களைக் கொன்ற இந்த அசோகனை எங்கே, எதில் சேர்ப்பது?

வரலாறு எப்போதுமே உண்மையை கூற மறுக்கிறது, அது எழுதுபவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் விருப்பம், இனம், மொழி ஆகியவற்றை வைத்தே ஒவ்வொரு அரசர்களின் வரலாறும் எழுதப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி.

அதிலும் நியாயம், தர்மமே இல்லாத அரசனின் படைப்பில் இருக்கும் சக்கரத்தை தர்ம சக்கரமாக கூறி, இந்திய தேசியக் கொடியில் போட்டிருப்பது மிகப் பெரியக் கேவலமாகவும் உள்ளது..

அதை தான் இந்தியன் என்று நெஞ்சில் குத்திக் கொண்டு திரிகிறார்கள்...

தமிழா விழித்துக்கொள்...


எண்ணெய் கொப்பளித்தல்...


நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்.. என்பது பழமொழி.

இதே போல மற்றொரு அனுபவ உண்மை என்னவெனில், வாயில் நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால் நோய்கள் பல நீங்கும். நல்லெண்ணெய் மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக எளிதாக செய்யக் கூடிய எண்ணெய் கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல் நலத்தைப் பேணிக்காக்கும்.

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை...

சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும்.

எந்தநேரத்தில் செய்யவேண்டும்?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு, உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும் வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

நன்மைகள்: வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள். தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி , பற்கள் வெள்ளையாகவும் , ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

வாய்துர்நாற்றம்: தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.

ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு: ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல் கூச்சம் நின்று பல் வலி மறையும்.

உடலின் எனர்ஜி அதிகரிக்கும்: ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஒற்றை தலைவலி: ஒற்றை தலை வலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.3D Character with head in hands, sitting on the word Stress

சைனஸ் ஆஸ்துமா: சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால் , இந்த பிரச்சனைகள் குணமாகும்.

நிம்மதியான தூக்கம்: தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பொலிவான சருமம்: ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.

தைராய்டு: தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக்க ட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பார்வைக்கோளாறு: பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.

மூட்டுபிரச்சனைகள்: மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

சிறுநீரக செயல்பாடு: தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக செயல்படும். தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள் மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும். பொடுகு தொல்லை தீரும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்...

இபிஎஸ் சசிகலாவிடம் சென்று மக்கள் முடிவை ஏற்றுக் கொள்கின்றோம் எனக் கூறி சேர்ந்து கொள்ளலாம் - சுப்ரமணியன் சுவாமி பேட்டி...


தேச பக்தியை சொல்லி பிரச்சாரம் செய்யாமல் கூத்தாடிகளுடன் சேர்ந்து கொண்டு செயல்படுவதால் தான் தமிழகத்தில் பாஜகவிற்கு ஓட்டு - கிடைக்கவில்லை சுப்ரமணியன் சுவாமி...

கலெக்டர் ஆக ஆசைப்பட்ட 11 வகுப்பு மாணவியை தனது சைரன் பொறுத்திய காரில் அமர வைத்து ஊக்கப்படுத்திய திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி...


அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மொனிஷா 10 ஆம் வகுப்பில் 491 மதிப் பெண் எடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலெக்டரிடம் நான் உங்களை போன்று கலெக்டர் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து தனது காரில் அந்த மாணவியை அமர வைத்து கலெக்டர் காரின் வெளியே நின்று கொண்டு புகைப்படம் எடுக்குமாறு கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க வேண்டும் நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான் என கலெக்டர் கூறி சென்றது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது...

கரைநாட்டு இசையா? கர்நாடக இசையா?


தமிழிசை வேறு கருநாடக இசை வேறு எனச் சிலர் கருதுகின்றனர். அது தவறு.

தமிழிசை என்பது தான் கருநாடக இசை; கருநாடக இசைத்தான் தமிழிசை. இரண்டும் வேறுபட்டவை அல்ல. ஒன்றே.

வடக்கில் உள்ள பல நாடுகளில் கடல் இல்லை. அதனால் கடற்கரையும் இல்லை. ஆனால் தமிழகமோ மூன்று பக்கங்களிலும் கடல்களையும் கடற்கரைகளையும் கொண்டது. சோல மண்டல கடற்கரை, பாண்டி மண்டலக் கடற்கரை, சேர மண்டலக் கடற்கரை என்ற பெயர்கள் இன்றுவரை மக்களிடையே காணப்படுகின்றதாம்.

இதனால் தமிழகத்தைக் கரை நாடு என்றும் தமிழிசையைக் கரை நாட்டு இசை எனவும் வடக்கேயுள்ளனர் குறிப்பிட்டு வந்தனராம். அதையே பலரும் கர்நாட்டிசை என்றனர்.

ஆங்கிலேயனும் அதை கர்நாட்டிக் இசை என்றான். ஆகவே கரை நாட்டு இசை என்பது தமிழ் இசையைக் குறிப்பது.

காலப்போக்கில் வடமொழியின் மீது பற்றும், வட நாட்டின் மீது காதலும் கொண்ட சிலர், கரை நாட்டு இசையை, வட நாட்டு இசை என்றும், தமிழிசை இதற்கு முற்றும் மாறானது என்றும் கூறத் தொடங்கினர்.

தமிழில் உள்ள இசைக்கலை நூல்கள் வடமொழியில் பெயர்த்து எழுதினர். முன்னால் பதிவில் சிலப்பதிகாரத்தில் அமைந்துள்ள தமிழிசைப் பற்றி சிரு விளக்கம் உள்ளது. இதுவே, தக்கச் சான்றாகும்...

கேனப் பய ஊர்ல கிறுக்குபய நாட்டாமையாம் - தன்னை ஒபிஎஸ் இபிஎஸ் அணி நீக்கியது குறித்து தங்க தமிழ்செல்வன் கிண்டல்...


வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது எப்படி இவர்கள் அறிவிக்க முடியும் இது நீதிமன்ற அவமதிப்பு - தங்க தமிழ்செல்வன்...

தீரன் இல்லை விக்ரம் வேதா...


கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எதிர்த்தது பார்ப்பனரையே.. பிராமணரை அல்ல..


ஈ.வே.ரா எதிர்த்தது பார்ப்பனரையே (தமிழரை)..

பிராமணரை (திராவிடரை)  அல்ல...

உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்..

மறந்தும் உங்கள் வாயில் ‘பிராமணன்’ என்று வரக் கூடாது..

‘பார்ப்பான்’ என்று கூறுங்கள்..

கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது..

- ஈ.வே.ரா (விடுதலை 30.06.1957)...

நமது முன்னோர்களின் தியாகங்களை நினைவுபடுத்துவோம்...


பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோ மாவட்டத்தின் நவாப்கஞ்சி பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் மின்சார வசதி இல்லை...


இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த 32 நோயாளிகளுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...