இந்த 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் பல குறிப்புகள் இடம் பெற உள்ளன. அதில் முதலாவது குறிப்பு என்னவெனில் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 4-ம் தீர்க்க தரிசனம் குறிப்புகளில் சில விஷயங்கள் நடக்க உள்ளன. அவைகள் நடைபெறும் காலக் கட்டமாக இக்காலம் இருக்கும் என்றும், இச்சமயத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் மரணச் செய்தியினை நமது இந்திய தேசம் அறிய உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனத்தின் முதல் குறிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
தற்போது உருவாகும் மகா புயல் ஒன்று தென் தமிழகத்தையே படாது பாடுபடுத்தும் என்றும், மக்கள் பலர் இறக்க நேரிடும் சம்பவம் நிச்சயம் நடக்க உள்ளதாக மற்றொரு தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சோழவந்தான் என்கிற பகுதியில் பல திடுக்கிடும் சம்பவங்களும் அதிசயங்களும் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெறும் மற்றொரு குறிப்பு இதனை தெரிவிக்கின்றது. அதே சமயத்தில் தேவகோட்டை என்ற ஊரில் உள்ள ஒரு மலைக் கோவிலில் மாபெரும் புதையல் ஒன்று கண்டறியப்படும் என்றும், அங்கு சித்தர் ஒருவரின் ஜீவ சமாதி கண்டறியப்படும் என்ற குறிப்பு இந்த 5-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இடம் பெறும் மற்றொரு குறிப்பாகும்.
மாயாவரம், மயிலாடுதுறை இவை இரண்டும் ஒன்றாக இருப்பினும் இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இவை இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அந்த வகையில் ஜீவ சமாதி அடைந்த சித்தர் ஒருவரின் சமாதி இம்மண்ணில் கண்டறியப்படும் என்றும், இந்த ஜீவ சமாதி கண்டறியப்படும் சமயத்தில் மாபெரும் புயல் ஒன்று தமிழகத்தை புரட்டிப் போடும் மகா சோகச் சம்பவம் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனப் பகுதி இங்கு நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க மன்னன் ஒருவரின் கல்லறை கண்டறியப்படும் என்றும், அவன் சோழ வம்சத்தை சேர்ந்த அரசன் என்றும், அந்த அரசனின் கல்லறைக்கு கீழே மிகப்பெரிய நகரமே பூமியில் ஆழத்தில் மறைந்து கிடக்கும் என்றும், இதனை அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிக்கும் சம்பவம் வரும் மாதங்களில் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனம் கூறுகிறது.
மயானக் கொள்ளை நடக்கும் திருவிழாவிற்கு பெயர் பெற்ற ஒரு ஊரில் இறையின் அம்சம் வெளிப்படும் சம்பவம் ஒன்று நடந்தேறிட உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அம்மன் வழிபாட்டில் இத்தகைய அதிசயம் ஒன்று நடந்தேறும் என்று 5-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.
காலம் சென்ற ஒரு நடிகரின் வாரிசு மரணத்தை தழுவும் சம்பவம் ஒன்று தற்போது திடீரென்று நடக்க உள்ளதாகவும், இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் புரட்சி ஒன்று திடீரென்று மக்களிடையே வெடித்து பல இன்னல்களை தமிழக மக்களிடையே ஏற்படுத்தும் சம்பவம் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனப் பகுதிகளில் இடம் பெறும் குறிப்புகள் இதனை தெரிவிக்கின்றன.
மன்னார் வளைகுடாவில் ஏற்படும் மகாப்புயல் தற்போது கரையை கடக்காது என்றும் அது 21 நாட்கள் தன் சுழற்சியை இலங்கை, இந்தியா மீது கடுமையாக வெளிப்படுத்தும் என்றும் இதனால் 80 % சேதங்கள் ஏற்படும் சம்பவம் நிச்சயம் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்பு ஒன்று இங்கு நமக்கு ஒரு எச்சரிக்கையை விடுவிக்கின்றது.
தாய்லாந்து கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கே வசிக்கும் மக்களிடையே ஒரு இனக்கலவரம் வெடிக்கும் ஆபத்தான சூழ்நிலை உருவாகிட உள்ளதாக மற்றொரு தீர்க்க தரிசனப் பகுதி இங்கு நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
மகாத்மா காந்தி வாழ்ந்த ஊரில் மிகப்பெரிய கலவரம் ஒன்று நிகழ உள்ளதாகவும் அதற்கு ஒரு கட்சியே பொறுப்பாக இருக்கும் என்று செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மத்திய சென்னை, வட சென்னை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதிகள் என்றும், இங்கு பூமி வெடிப்பு நிகழ்வு ஒன்று திடீரென்று நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
கல்கத்தா நினைவில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், புயலால் பலத்த சேதங்களை சந்திக்கும் நிகழ்வு உடனே நடந்தேறும் என்றும், அந்த மாநில அரசு பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்று 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சமயபுரம் இனி கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அப்பகுதியில் ஆன்மீகம் சார்ந்த ஒரு முக்கிய நிகழ்வு நடக்க உள்ளதாகவும், அங்கு மாரியம்மனின் அதிசய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மக்கள் கூட்டம் வேறு ஒரு திசைக்கு மாறி செல்லும் சம்பவம் ஒன்று விரைந்து நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
பஞ்சாப் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பகுதி என்றும், அங்கு மக்களிடையே ஒரு பின்தங்கிய பழக்க வழக்கம் கடைபிடிக்கும் சம்பவம் அதிகமாக நடக்கும் என்றும், இதனால் அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நடக்கும் சம்பவங்கள் அரங்கேறும் என்று 5-ம் தீர்க்க தரிசனம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.
நாடாளும் மன்னன் ஒருவனுக்கு இது போதாத காலம் என்றும், அவனின் மரணம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உண்மை என்றும் 5-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை இங்கு சுட்டிக் காட்டுகின்றது.
வேதாளம் எனும் கதையில் இடம் பெறும் ஒரு மன்னவனின் இரகசிய பாதாள அறை ஒன்று இந்தியாவில் கண்டறியப்படும் என்றும், அதன் பிறகு பல வியத்தகு அதிசய சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கும் என்றும், இச்சம்பவத்தினால் புராண காலத்து விடயங்களை மக்கள தேடும் சம்பவங்கள் அதிகமாக இந்தியாவில் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனம் தனது குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.
காலத்துக்குள் இறைவனின் பயணம் நடக்கும் என்றும், அந்த அதிசயத்தை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்கும் போது “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற கூற்றை மக்கள் நம்பும் பொற்காலம் வந்துவிட்டது என அறிஞர்கள் கூறும் பல சம்பவங்கள் நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்கதரிசனம் நமக்கு குறிப்பை தருகின்றது.
தென் தமிழகத்தில் உள்ள ஒரு ஆன்மீக குடிலில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கும் என்றும், அதன் நிர்வாகி அதனை சமாளிக்க முடியாமல் மரணத்தை சந்திப்பார் என்ற செய்தியினை 5-ம் தீர்க்க தரிசனம் இங்கு தமது கூற்றை பதிவு செய்கிறது.
வாழும் கலை யின் வாயிலாக மக்கள் பல செய்திகளை அறிந்து கொள்ளும் காலக் கட்டம் இதுவென்றும், இக்காலக் கட்டத்தில் ஆன்மீக அமைப்பு ஒன்று திடீரென்று ஆய்வு செய்யப்படும் நிகழ்வு நடக்க உள்ளதாக 5-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
உண்மைகள் உறங்காது அது தனது நிகழ்வுகளை எப்பொழுதுமே வெளிப்படுத்தும் என்று 5-ம் தீர்க்க தரிசனம் இங்கே தனது கருத்தை பதிவு செய்கிறது.
குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.
அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...