08/11/2017

சென்னை வந்த பிரதமர் மோடி அவர்கள், முதலில் திருமணத்தில் கலந்து கொண்டார், பின்பு தந்தி விழாவில், அதன் பின்பு கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்தார்...


இவ்வாறாக இருந்த பிரதமர் பயணத்தில் செய்தியாளர் சந்திப்பு இல்லாமல் போனது..

ஏன் தொடர்ந்து இவர் செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்கிறார்?

பாஜக பிரச்சார மேடைகளிலும் , ரேடியோவிலும் பேசிவிட்டு உடனே சென்று விடுகிறார்.

இதர பொது  நிகழ்ச்சிக்கு வந்தாலும் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணிக்கிறார், காரணம் என்ன ??

மேலும்  மதுவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகமான தோழர் Nandhini Anandan மற்றும் அவரது தந்தை இருவரும்,  சென்னைக்கு வந்த பிரதமர் மோடியிடம்  ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகச் சொன்ன வாக்குறுதி என்ன ஆனது என்று மோடியை நோக்கி கேள்விகேட்க இருப்பதாக முகநூளில் சொல்லி இருந்தனர்.

இதை அறிந்த அதிகார வர்க்கம்  நேற்று முன்தினம் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது பின்பு  பிரதமர் மோடி டெல்லி திரும்பியதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர்கள் விடுவித்தது.

வாக்குறுதியை குறித்து கேள்விகேட்க சக குடிமகனுக்கு உரிமை இல்லையா ? பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பவர்களைதானே  கைது செய்யவேண்டும்.

தோழர் நந்தினி மற்றும் வேளாண் அலுவலர் தோழர்  ஆனந்தன் போராட்ட அறிவிப்புக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் இருவரை கண்டு அஞ்சி ஓடி ஒழிந்து கொண்டார் நாட்டின் 56 இஞ்சு சொங்கி.

மது, ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுகின்ற உங்கள் போராட்டம் நிச்சயம் ஒரு நாள்  வெல்லும்.

- சமூக ஆர்வலர்,  யூசுப்_ரியாஸ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.