சில அடிப்படைகளை உங்களுக்கு புரிய வைக்க இந்த தொடர்...
சரி விஷயத்திற்கு வருவோம்...
முதலில் சில அறிவியல் தகவலை கொடுத்து விடுகிறேன்..
மூத்தோள்...
இன்று உலகில் வாழும் அனைத்து (மனித இன) பெண்களும் ஒரே ஒரு பெண்ணில் இருந்து தோன்றியவர்களே...
கிட்டத்தட்ட 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவள்.. எல்லோருக்கும் ஒரு தாய்...(ஒரு தந்தையல்ல)..
அவளை அறிவியல் உலகம் "MITOCHONDRIAL EVE" என்று அழைக்கிறது..
மனிதர்களுக்கு இரண்டு வகை டி.என்.ஏ (D.N.A) உண்டு .
1. NUCLEUS D.N.A - நியூக்ளியஸ் டி.என்.ஏ.
2.MITOCHONDRIAL D.N.A - மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ.
இதில் பெண்ணிலிருந்து பெண்ணிற்கு மட்டுமே (மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ) MITOCHONDRIAL D.N.A தகவலானது கடத்தப்படும்.. இந்த அணுவின் தகவல் தற்போது இருக்கும் பெண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கு..
அதுவும் பெண்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த இனம், நிறமாக இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் m-DNA காணப்படும் ஒற்றுமையானது அவர்கள் ஒரே ஒரு மூத்த தாயின் வழிவந்தவர்கள்..
இதுவரை அறிவியல் கண்டு பிடித்துள்ளது.. இதில் இன்னொரு சிக்கலும் உண்டு அதை நோக்கித்தான் எம்மோடு நீங்கள் பயணப்பட இருக்கிறீர்கள்..
இவளைப் போல ஒவ்வொரு காலகட்டத்திலும் 6 மைட்டோகாண்டிரியல் ஏவாள்கள் இருந்திருக்கின்றன ( ஆம் இதையும் தான் அறிவியல் கணித்திருக்கிறுது)..
ஆனால் அவர்களின் சந்ததிகளை இப்போதுவரை கண்டுபிடிக்கவில்லை.. ஒன்று மட்டும் எப்படி மிஞ்சியது.. இதற்கு அறிவியல் காலப்போக்கில் மீதம் இருந்தவைகள் அழிந்து விட்டதாக கூறுகிறது.. இங்கிருந்துதான் நாம் பயணப்பட இருக்கிறோம்.. ஒரு குறிப்பிட காலத்தில் மனித இனம் அழிவை நோக்கி சென்றிருக்கிறது.. ஆனால் எப்படியோ மீண்டிருக்கிறது மீண்டும் இதே படிநிலை தொடர்ந்து நடந்திருக்கிறது.. இங்குதான் அந்த திருப்புமுனை ஒரு குறிப்பிட்ட நவீன மனித இனக்குழு மட்டுமே இதிலிருந்து தொடர்ந்து மீண்டிருக்கிறது.. ( அவர்களுக்கு இந்த அறிவை யார் கொடுத்தது)...
பெண்களைப் போல தற்போதுள்ள ஆண்களுக்கு, ஒரே ஒரு துவக்கநிலை இல்லை.. Y D.N.A வின் படி பல மூலங்கள் உள்ளன...
இதுவரை நீங்கள் படித்ததெல்லாம் ஆண்கள் வேட்டையாடுவார்கள் பெண்கள் உணவு சேகரிப்பார்கள் என்று தான்... ஆனால் அது உண்மையல்ல ஆதியில் பெண்களே பிரதான வேட்டையாடுபவர்களாக இருந்தனர். ஆண்கள் உணவு சேகரிப்பவர்களாக இருந்தனர்.. (தாய்வழி சமூகம்)..
இந்த அடிப்படையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இனி நாம் இந்த வரலாற்றை தேடி பல இதிகாசங்கள் , வேதங்கள் , பல மதங்கள் என பயணம் நீண்டு போகும்...
சரி இப்போது நீங்கள் அடிப்படையை தெரிந்துகொள்ள இந்துமத வேதங்களின் யுகங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.. ஆகையால் அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் (பதிவு நீளமானது தான் நேரம் ஒதுக்கி படியுங்கள் )...
யுகங்கள்
அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் சுருங்கியும், விரிந்தும் இருந்த கோட்பாடுகளையும் அவற்றை ஊடுருவிய காலத்தையும் ஆதி கால மக்கள் அறிந்திருந்தனர். பிரபஞ்சம் முழுவதும் விரிந்த காலத்தை பல் வேறு நிலைகளில் யுகம் என்று பகுத்திருந்தனர்.
இன்று அவற்றைத் தேடும் போது, அந்த விவரங்கள் துண்டு துண்டாக நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை ஆராயும் போது, எவ்வளவு அறிவு சார்ந்ததாக அவை இருக்கின்றன என்றும் தெரிகிறது. அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால், பண்டைய சரித்திரத்தின் கால வீச்சினை ஓரளவேனும் தெரிந்து கொள்ள முடியும்.
சதுர்_மஹா_யுகம்
இது பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தை, நமது சூரிய மண்டலம் சுற்றி வருவதன் அடிப்படையில் பகுக்கக்ப் பட்டது.
இந்தப் படத்தில் நமது கலக்சியில் சூரியன் இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது. மையப் பகுதியை சூரியனும், அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம்.
இந்த சுழற்சிக்காகும் காலத்தை பகுத்துள்ள விதத்தை பார்ப்போம்.
12 மாதம் = 1 சூரிய வருடம் (சூரியன் நாம் பார்க்கும் 360 டிகிரி கொண்ட வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்..
அதாவது..
1 வருடம் = 12 மாதம்
43,20,000 வருடங்கள் =1 சதுர் யுகம் = 4 யுகங்கள் (சத்ய யுகம் + திரேதா யுகம் + த்வாபர யுகம் + கலி யுகம்)..
4 யுகங்கள்
1.சத்ய யுகம்
2.திரேதா யுகம்
3.த்வாபர யுகம்
4.கலி யுகம்
71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம்.
இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (குறிப்பு -ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள். ).
ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட காலத்தைக் கொண்டு வரும். எனவே
1 மன்வந்திரம் + 1 சந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள்.
14 சந்தி + 14 மன்வந்திரம் = 4,31,82,72,000 சூரிய வருடங்கள்.
(என்னடா இது காலக் கணிதமெல்லாம் தலை சுற்றுகிறதே என்று எண்ணாமல் பொறுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் மனிதன் இந்த பிரபஞ்சத்தின் அதிபதி)..
இதையே இப்படியும் சொல்லலாம்...
4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்.
1 கல்பம் + 1 கல்ப சந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள்.
4,32,00,00,000 சூரிய வருடங்கள் அல்லது 1 கல்பம் = பிரம்மனின் ஒரு பகல் பொழுது.
அதே கல்ப அளவு பிரம்மனின் ஒரு இரவு ஆகும்..
ஆக 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = பிரம்மத்தின் ஒரு நாள் = 8,64,00,00,000 வருடங்கள்..
இந்த நாட்கள் 360 கொண்டது பிரம்மனின் ஒரு வருடம்.
அப்படிப்பட்ட வருடங்கள் 100 கொண்டது பிரம்மனின் ஆயுள்.
அதாவத மேற்சொன்ன 8,64,00,00,000 வருடங்களை ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு ( பிரம்மம் என்றால் நீங்கள் நினைப்பது போல் கடவுள் அல்ல அது ஒட்டுமொத்த பிரபஞ்சம் )..
இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு.
இதில் இப்பொழுது நடக்கும் பிரம்மனின் பகல் பொழுது என்று சொல்லப்படும் கல்பம், வராஹ கல்பம் எனப்படும். இந்தக் கல்பம் ஆரம்பித்து ஆறு மன்வந்திரங்கள் ஆகி, ஏழாவது மன்வந்திரத்தில், 28 - ஆவது சதுர் மஹா யுகத்தில், கலி யுகம் ஆரம்பித்து இன்று 5120-ஆவது வருடத்தில் நாம் இருக்கிறோம்.
கரிகாலன் போன்ற தமிழ் அரசர்களும், மக்களும், இந்தக் காலக் கணக்கைத்தான் பின் பற்றினர். சங்க நூலான பரிபாடலில் பிரபஞ்சமும், உலகங்களும் தோன்றின விதத்தை எப்படி இன்றைக்கு அறிவியல் சொல்கிறதோ அதே போல விவரிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்தக் கல்பம் ஆரம்பமான போது பூமி நீரில் மூழ்கி இருந்தது. (பரிபாடல் - 2 & 4 )..
வராஹ_அவதாரம்
ஒரு காலத்தில் இப்புவியில் எங்கும் கடலே இருந்தது. நிலப்பகுதி வெளியில் தெரியவில்லை. பிறகு நிலப்பகுதிகள் மேலே எழும்பியதை வராஹ அவதாரம் என்கிறோம். நிலம் வெளியே எழுந்த அறிவியல் உண்மையை வராஹ அவதாரம் விவரிக்கிறது.
அதாவது 196,08,53,111 வருடங்கள் ஆகி விட்டன. இப்படி பிரபஞ்ச அளவில் நாம் வாழும் காலத்தின் கணக்கைத் தருவது தான் இந்த கல்பத்தையும், சதுர் மஹா யுகங்களையும் அடக்கிய கால அளவு.
'யுக்மா ' என்ற சொல்லிலிருந்து யுகம் என்ற சொல் வந்தது. யுக்மா என்றால், இரட்டை அல்லது இரண்டு விஷயங்கள் ஒன்றாக இருத்தல் என்று பொருள்.
வானில் சூரியனும், சந்திரனும் சேர்ந்தால் அது அமாவாசை எனப்படும். அப்படி ஒரு குறிப்பிட்ட வானப் பின்னணியில், ஒரு முறை சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் சேர்வதை ஒரு யுகம் என்றார்கள்.
சூரியனும் சந்திரனும் சேர்ந்ததற்குப் பிறகு, அவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், வானத்தைச் சுற்றுகின்றன. அந்த இடத்தில் மீண்டும் அவை இரண்டும் சந்திக்க ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு யுகம் என்றனர்.
ஆனால் அதற்குள் சந்திரனது வேகமான ஓட்டத்தால், ஒரு மாதம் அதிகம் வந்து விடுகிறது. அது இரண்டரை வருடங்களிலேயே வந்து விடுகிறது.
எனவே இரண்டு, இரண்டரை சேர்த்து ஒரு யுகம் என்றானது. இதில் முதல் இரண்டரை ஏறு முகம், (ஆரோஹணம்) அடுத்த இரண்டரை இறங்கு முகம் (அவரோஹணம்) என்று கணக்கு செய்தனர்.
இதுதான் யுகம் என்பதன் அடிப்படை. ஒரு யுகத்தில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் - என்றும் இருக்கும். இது அடிப்படை கால அளவீடு.
இதுவரை உங்களுக்கு அடிப்படைகள் தான் கூறி வந்துள்ளோம்.. இது சிறு புள்ளி கூட கிடையாது.. இன்னும் நீங்கள் எம்மோடு பயணப்பட வேண்டிய தூரம் அதிகம் உள்ளது...
- தொடரும்...