07/04/2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...
சென்னையிலிருந்து பல்வேறு இளைஞர்கள் அமைப்புகள் மற்றும் கட்சியைச் சார்ந்தவர்கள் ஏப்ரல் 7, 8 நாட்களில் பல்வேறு மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை செய்துகொண்டு தூத்துக்குடி மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு அளிக்கப் பயணம்.
ஒருங்கிணைப்பு:
*இளந்தமிழர் முன்னணி கழகம்,*
*தமிழக மக்கள் கழகம்,*
*இளைய தலைமுறை அமைப்பு,* *இளந்தமிழகம் இயக்கம்,*
*மக்கள் பாதை,* *தமிழக பண்பாடு மற்றும் கலாச்சார பாதுகாப்பு இயக்கம்*
தொடர்புக்கு: செல்வக்குமார் - 978892792.
தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவரும் ஊடகருமான ஐயா அய்யநாதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூட வலியுறுத்தி விழிப்புணர்வு பயணத்தில் உடன் வருகிறார்...
தூத்துக்குடியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் 5.4.2018 இரவு மரணமடைந்தார்...
இவரது மனைவி ஸ்டெர்லைட் வேண்டாம் என்றும் தன் கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய சிரமம் அடைந்துள்ளோம் என்று இரண்டு நாட்களுக்கு முன் அவர் பேசிய வீடியோ காட்சி அனைத்து சமூக ஊடகங்களிலும் வெளி வந்தன.
ஸ்டெர்லைட் நச்சு ஆலையை உடன்டியாக மூட வேண்டும் என்றும் நான் படும் கஷ்டங்களை வேறு யாருக்கும் வரக்கூடாது என்றார்...
ஆவிகள் அமானுஷ்ய சக்திகள் அனைவரின் கண்களுக்கும் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
இதில் பரணி, ரோஹிணி, திருவாதிரை, பூரம், உத்திரம். பூராடம், உத்திராடம், பூரட்டாதி, இந்த ஒன்பது நட்சத்திரங்களும், மனுஷ கண நட்சத்திரங்கள் ஆகும்.
அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி, இந்த ஒன்பது நட்சத்திரங்களும். தேவ கண நட்சத்திரங்களாகும்.
கிருத்திகை, ஆயில்பம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், இந்த ஒன்பது நட்சத்திரங்களும், ராட்சஷ கண நட்சத்திரங்களாகும்.
இதில் மனுஷ கணம் என்ற மானுட வர்க்கத்தோடு தொடர்புடைய நட்சத்திரத்தை உடையவர்களின் கண்களுக்கு ஆவிகள் கண்களுக்கு புலப்படாது. இவர்களை ஆவிகள் தன் கெட்ட சக்தியின் மூலம் பயமுறுத்துவது, பயமுறுத்தும் சில சேட்டைகளை செய்வது போன்ற செயல்களை, இந்த மனுஷ கணத்தில் பிறந்த நட்சத்திரக்காரர்களிடம் காட்டும்.
அடுத்ததாக தேவகணத்தில் பிறந்த நட்சத்திரகாரர்களின் கண்களுக்கு ஆவிகள் புலப்படும். ஆவிகள் இந்த தேவகணத்தில் பிறந்த நட்சத்திரக்காரர்களின் கண்களுக்கு புலப்பட்டாலும் பயமுறுத்துவதோ அல்லது சேட்டைகள் செய்வதோ போன்ற எந்த செயல்களையும் செய்யாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என்று சொல்வது போல் சென்று விடும்.
அடுத்ததாக ராட்சஷ கணத்தோடு தொடர்புடைய நட்சத்திரக்காரர்களின் கண்களுக்கு ஆவிகள் புலப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களோடு நட்பு என்ற முறையில் அமானுஷ்ய குரலில் பேசுவது, கட்டளைகளை இடுவது, போன்ற செயல்களை செய்யும்.
உதாரணத்துக்கு கிராமங்களில் பேய் பிடித்து தலையை விரித்து போட்டு கொண்டு பேயாடும் பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் ராட்சஷ கணத்தோடு தொடர்புடைய நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள்...
குறிப்பு : சிலர் ஆன்மீக ரீதியாக பயிற்சி பெற்று ஆவிகளை பார்ப்பதும். பேசுவதும் சாத்தியமே...
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம்...
பாதுகாப்புத்துறை இணையதளத்தில் சீன எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் பரபரப்பு.
DefenceMinistry பாதுகாப்புத்துறை இணையதள முடக்கம் விரைவில் சரி செய்யப்படும் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்..
இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் - நிர்மலா சீதாராமன்...
13 அடி அகலம் கொண்ட சுவற்றுக்கு நடுவில் வையுங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
ஏனெனில் மக்களின் ஆதாா் தகவல்கள் எல்லாம் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது...
ஹீலிங்...
மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.
பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்
அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம். இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.
நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.
முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள் தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.
தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.
சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.
முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் 'இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது' என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும்.
அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.
சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும்.
55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.
நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.
அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே "NO" என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப் பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.
உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள்.
ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது.
ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்...
தென் கொரியா தலைநகர் சியோல் நகரில்...
மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர்.
தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது.
ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை...
தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடக்க வேண்டிய முதல் போர்?
சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்!
தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிர்க்கோ துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது...
அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?
தமிழர் வழிபாட்டு முறைகளின் அறிவியல்...
பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம்.
கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும் போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும்.
இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்?
ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார்.
அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.
அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே.
TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி..
அதான்டா தமிழன்...
500,000 தமிழ்ச் சொற்கள்....
உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி ?
உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள்.
ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன.
ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம்.
ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.
இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.
பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது,உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
(நன்றி இரா.செல்வகுமார்) மூத்த தமிழறிஞரான மதிவாணன் என்.அசோகனுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
இந்த சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்?
ஒரு சொல்லின் வேரை ஆராய்வதற்கு பலமொழி அறிவு தேவை. எனவே சேலம் கல்லூரியில் பணிபுரிந்த எனக்கு பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் பாவாணர் அவர்களிடம் இத்திட்டத் தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.
இன்று 37 ஆண்டுகள் இப்பணியில் கழித்தும் உள்ளேன். வட இந்திய மொழிகளில் உள்ள பல வினைச்சொற்களின் மூலம் தமிழாக உள்ளது.
தமிழ்தான் வேர். இந்தியில் நாளை வா என்பதை ‘கல் ஆவோ’ என்கிறார்கள். கல் என்றால் நாளை. இந்தச் சொல் சமஸ்கிருதம், பெர்சியனில் இல்லை.
குஜராத்தியில் இதை கால் ஆவோ என்கிறார்கள். ஒரியாவில் காலி ஆவோ என்கிறார்கள். தமிழில் காலையில் வா என்கிறார்கள். ஆக, இந்த காலைதான் இப்போது கல் ஆகியிருக்கிறது.
எனவே வட இந்தியா முழுக்க ஒரு காலத்தில் தமிழ் பேசுகிறவர்கள்தான் இருந்தனர் என்றும் காலப்போக்கில் அது பிராகிருதமாகவும் பாலியாகவும் திரிந்தபோது சொற்கள் திரிந்துபோய்விட்டன என்று கூறலாம்.
அந்தச் சொற்களுக்கு வேர்மூலம் காணவேண்டுமென்றால் இந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் காணலாம். இதன் பயன் என்ன?
இன்று இருக்கும் பல மொழிகள், சொற்கள் எங்கிருந்து பிரிந்து வந்தன?
இந்தி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகள் எங்கிருந்து உருவாயின?
இந்த மொழிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தன என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். சொற்களை காலத்தால் மீட்டுக் கொண்டுபோனால் இவையெல்லாம் ஒரே மூல மொழியில் இருந்து பிரிந்தன என்பது தெரிகிறது.
அந்த மூல மொழிக்கு தமிழ்மொழி மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாறும் வெளிக் கொணரப்படுகிறது.
இதனால் ஒருவர் மற்றொரு மொழியிடம் பற்றுகொள்ளவும் அதைப் பேசுவோரிடம் உறவுகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள்? சவால்கள்?
பொதுவாக சில சொற்களைப் பற்றி ஆராயும்போது, அவை பிறமொழி அகராதிகளிலும் கிடைக்காது.
அவற்றுக்காக மலைவாழ் மக்கள் பேசும்மொழி, சிறு திராவிட மொழிகள், நாட்டுப்புற மொழி ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
கேழ்வரகைக் குறிக்கும் இச்சொல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும்?
தமிழில் ‘ரா’ மொழியின் முதலில் வராது. இது படுகர்களின் மொழியில் உள்ளது. அவர்கள் இதை எரகி என்கிறார்கள். நான்கு இறகுகளாக கதிர் உடைவதால், அதற்கு இறகி என்று பெயர் வைத்திருக்கவேண்டும்.
அதுதான் ராகி ஆனது. சகோதரன் என்ற சொல் வடமொழியில் இருந்து நமக்கு வந்தது.
ஆனால் அது வருவதற்கு முன்னால் தமிழர்களுக்கு சகோதரனைக் குறிக்கும் சொல் இல்லையா?
தஞ்சாவூர் பகுதியில் சீர்காழியை அடுத்த ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் சகோதரர்களைக் குறிக்க வேறு சொல் கையாளுகிறார்கள். எனக்கு பிறவன்மார் மூணு பேர் என்பார்கள். பிறவிமார் மூணு பேர் என்பார்கள்.
பிறவன் என்பது ஆண் சகோதரனையும் பிறவி என்பது பெண் சகோதரியையும் குறிக்கிறது. தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு.பிராகிருத மொழியில் உரா என்றால் வீடு.
பஞ்சாபியில் உரா என்றால் வீடு. எப்படி இச்சொல் அங்கே போனது?
ஸ்பெயினில் பாஸ்க் மொழியில் உரா என்றால் மனைவி.
வீட்டைக் குறிப்பது மனைவியைக் குறிக்குமல்லவா?
உறை என்று பேசுபவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் பிரிந்துபோனவர்களிடம் எஞ்சியிருக்கும் சொல்லாக அச்சொல் இருக்கலாம். இதுபோல ஏராளமான சொற்கள் உள்ளன.
இதையெல்லாம் இந்த அகரமுதலியில் தந்துள்ளோம். கல்வெட்டு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி போன்றவை எப்படி உங்களுக்கு உதவி செய்துள்ளன?
நிறைய என்று சொல்லலாம். நான் சிந்துவெளி முத்திரைகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஐராவதம் மகாதேவனும் அஸ்கா பர்போலாவும் ஒரு முத்திரையைக் கூட படிக்க இயலவில்லை.
அவர்கள் முகமதியர்கள்போல வலமிருந்து அந்த முத்திரைகளைப் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர். சிந்துவெளி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில் 75 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளன.
அப்படி இருப்பின் இந்திய மொழிகள் அனைத்தும் அரபியைப் போல வலமிருந்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும்? அப்படியா உள்ளன? இடமிருந்துதானே எழுதுகிறோம்?
சிந்துவெளி முத்திரைகள் இடமிருந்துதான் எழுதப்பட்டவை என்று நான் ஐயாயிரம் முத்திரைகளைப் படித்துக் காட்டியுள்ளேன்.
ஆனால் நீங்கள் படித்தவற்றுக்கு அங்கீகாரம் இல்லையே? ஏன்?
வலமிருந்து படிக்கவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை.
சரி. அப்படி முடிவெடுத்தவர்களை ஒரு முத்திரையையாவது அவர்களைப் படித்துக்காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்.
லைக் என்று ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லை எகில் என்று வலமிருந்து படிக்கமுடியுமா?
முடியாது. அதுபோல்தான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஸ்கோ பர்போலாவாலும் ஐராவதம் மகாதேவனாலும் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க இயலாது.
அப்புறம் இவர்கள் அதை அசை எழுத்து(syllabic) என்று சொல்லிவிட்டு படமாகப் (pictographic) படிக்கிறார்கள். ஒரு மீன் படம் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஆறு கோடுகள் இருக்கின்றன. இதை அறுமீன் என்று படிக்கிறார் கள்.
வணிகர்கள் பயன்படுத்திய முத்திரைகளில் அவர்கள் பெயர் தானே இருக்கவேண்டும்?
நான் படித்ததில் சாத்தன் என்றொரு பெயர் உள்ளது. பல பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக உள்ளன. கூத்தழகன் சாத்தன் என்றே வருகிறது. ‘ழ’கரமே நன்றாக உள்ளது.
சிந்துவெளி முத்திரைகளில் சிவனின் பெயர் கோ அவ்வன் என்று உள்ளது. யோக நிலையில் உள்ள சிவன். ஆரிய திராவிட நாகரிகங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உண்டு.
யாகம் செய்தது ஆரிய நாகரிகம். யோகம் அதாவது தவம் செய்தது திராவிட நாகரிகம். இப்போது யோகத்தை அவர்களும் யாகத்தை இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
சிந்துவெளி நாகரிகத்தில் யோக நிலையில் சிவன் இருப்பதால் அது தமிழர்கள் நாகரிகமாக இருக்கவேண்டும். சிந்துவெளியில் அந்த சிவன் மீது கோ அவ்வன் என்று உள்ளது.
கோ என்றால் மலை. மலையப்பன், கொண்டப்பன், கட்டப்பா என்கிறோம் அல்லவா?
சிந்துவெளி நாகரிகத் தமிழில் அவ்வன் என்றால் அப்பன்; அவ்வை என்றால் தாய் என்று நான் சொன்னேன். ஆனால் இலக்கியத்தில் எங்குமே இதற்குச் சான்று இல்லையே என மறுத்தார்கள்.
இலக்கியத்தைவிட 2000 மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளி. அந்த சொல் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சொல் சங்ககாலம் வரை இருந்திருக்கிறது என்பது இப்போது புலப்படுகிறது.
புதுச்சேரி பல்கலைப் பேராசிரியர் ராஜன், புலிமான் கோம்பை என்ற ஓர் இடத்தில் செய்த ஆய்வில் ஒருநடு கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களைப் படித்தார். அதில் அவ்வன் பதவன் என்று ஒரு பெயர் உள்ளது.
ஆக, சங்ககாலத்திலேயே அவ்வன் என்ற பெயர் இருந்திருக்கிறது. எனவே சிந்துவெளியில் நான் படித்ததும் சரியே என்ற முடிவுக்கு வந்தேன்.
மேலை நாட்டு மொழியியல் ஆய்வுக்கும் உங்கள் ஆய்வுக்கும் என்ன தொடர்பு?
அந்த கொள்கைகளை எப்படிப் பயன்படுத்திக்கொண்டீர்கள்?
அவர்கள் உலக மொழிகளுக்கு ஒரு பொது அளவுகோல் வைத்து ஆய்ந்தார்கள். ஆனால் வேர்மூலம் காண்பதில் தவறான பாதையில் சென்றுகொண்டுள்ளனர்.
சொற்களால் சொற்களை மீட்டமைக்கிறார்கள். ஆனால் அதற்குப் பொருள் இருக்கும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை.
காரணம் கருதித்தான் பொருட்களுக்குப் பெயர் வைத்துள்ளனர். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் தொல்காப்பியர். இந்த அடிப்படையில்தான் பாவாணர் அணுகுமுறையும் மேனாட்டவர் அணுகுமுறையும் வேறுபடுகின்றன.
சொல் மூலம் மட்டும் காட்டினால் போதும் என்கிறார்கள் அவர்கள். நாங்களோ சொல் மூலத்துடன் பொருள் மூலமும் காண்பிக்கிறோம். நிழல் என்பது பழங்காலத்தில் நீழல் என்று இருந்தது.
நீள்வதால் நீழல் என்று பெயர்வைத்தான் என்று நான் சொல்கிறேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம் நிழல் என்று பெயர்வைத்துவிட்டான் என்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.
காரணம் வேண்டாம் என்பது மேலைநாட்டு அணுகுமுறை. உங்கள் மொழியில் தெரியவில்லை. நீங்கள் சொல்ல இயலாது. ஆனால் எங்கள் மொழியில் தெரிகிறது. நாங்கள் சொல்கிறோம்.
எங்களு டைய சொற்பிறப்பியல் அகராதி, உலகில் வந்துள்ள பிற சொற் பிறப்பியல் அகராதிகளைவிட வேறு பட்ட அமைப்பு கொண்டது.
மிகவும் விஞ்ஞான ரீதியிலானது. சொல்லை ஆராயும் போது அதன் பொருளுக்கு முதலிடம் கொடுக்கிறோம்...
தெலுங்கு கன்னடம் பேசும் மக்களுக்காக திமுக தெலுங்கர் கருணாநிதி செய்த மாபெரும் சேவைகள்....
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் வேதனை அடையக்கூடிய வகையில் 2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு, உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை ரத்து செய்தது. ஆனால், தெலுங்கு கன்னட மக்களின் நலம் நாடி மீண்டும் உகாதித் திருநாள் விடுமுறையை நடைமுறைப்படுத்தியது 2006 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி..
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் குழந்தைகள் பயில உரிய பாட நூல்களைத் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் தயாரித்து வழங்கி, அவர்களின் மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்ததும் தி.மு.க. ஆட்சியே.
தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் அண்டை மாநில மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வருவது திமுக கட்சியே.
குறிப்பு : இதை வாக்குமூலமாக கொடுத்ததே தெலுங்கர் கருணாநிதி தான்...
இவ்வளவு செஞ்ச இதே கருணாநிதி தான் தமிழர்களின் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து குடுத்தார்...
நியூட்ரினோ அறிவியலும் ஆபத்தும்...
தமிழ் நாட்டில் தேனி மலை பகுதியில் ஆராய பட இருக்கும் நியூட்ரினோ பற்றி இன்று கொஞ்சம் அறிவியல் ரீதியாகவும் பிறகு அரசியல் ரீதியாகவும் பார்க்கலாம்.
முதலில் நியூட்ரினோ ஆய்வு என்றால் மலையை குடைந்து எடுக்க படும் ஏதோ ஒரு பொருள் போல என்று நினைப்பவர்கள் உண்டு. அது தவறு.
நியூட்ரினோ என்பது அனுக்குள் இருக்கும் ஒரு பொருள் என்று நினைப்பவர்கள் உண்டு சொல்ல போனால் அதுவும் தவறு. சிலர் நியூட்ரினோ வை நியூட்ரான் உடன் குழப்பி கொள்பவர்களும் உண்டு. அது மிக மிக தவறு.
உண்மையில் நியூட்ரினோ என்பது தான் என்ன ? அது நமது உடலில் பாய்ந்தால் ஏதும் ஆபத்தா ? அதில் என்ன ஆய்வு செய்வார்கள் . நியூட்ரினோ எங்கே இருக்கும் அது என்ன விதமான பொருள்? அதன் பயன் என்ன .? வாருங்கள் நியூட்ரினோவை முதலில் கொஞ்சம் அறிவியல் ரீதியாக பார்ப்போம். பிறகு ஏன் அது ஆபத்து என்பதையும் பார்ப்போம்.
முதலில் நியூட்ரினோ என்பது என்ன
கொஞ்சம் விளக்கமான அறிவியல் பார்வை...
நியூட்ரினோ என்பது அனுவின் எலெமண்ட்ரி பார்ட்டிகள் களில் ஒன்று... அதாவது மிக மிக அடிப்படை துகள்.
அது உற்பத்தி ஆகும் இடம்....
நட்சத்திரங்களின் மைய கரு. அதாவது அணுக்கரு இணைவு நடக்கும் இடங்களான நட்சத்திர அடுப்பில் நடக்கும் சமையல்களில் சமைக்க பட்டு உண்டாகும் பல பொருளில் ஒன்று இந்த நியூட்ரினோ.
சூரியனில் இருந்து நமக்கு ஒளி மட்டுமே வருவது இல்லை ஒளியின் போட்டான் துகள் போல மின்காந்த அலைகள் கதிர்வீச்சு... அல்டராவைலட் போன்றவையும் வருகிறதல்லவா அப்படி வரும் ஒரு துகள் தான் நியூட்ரினோ சூரிய அடுப்பில் கதிர்வீச்சின் போது பீட்டா கதிர் வீச்சு நிகழ்வில் உண்டாவது இந்த நியூட்ரினோ...
இந்த துகள் ஒரு மாய துகள்... இவைகளை கண்டு பிடித்து ஆராய்வது என்பது ஆவிகளை படம் பிடிக்க முயற்சிபதை விட மிக கடினம் .அதற்க்கு காரணம் நிறைய.
முதலில் நாம் கண்டு பிடித்ததிலேயே மிக சிரிய துகளாக நாம் கருதுவது எலக்ட்ரான்களை தான். காரணம் அவை கள் புரோட்டனை விட 1836 மடங்கு சிறியவை . ஆனால் ஒரு நியூட்ரினோ துகள் எலாக்ட்ரானை விட 40 லட்சம் மடங்கு சிறியது. ஒரு கிராமில் கோடி கோடி கோடி கோடி மடங்கு சிறியது இந்த நியூட்ரினோ. இது வரை மனிதன் அறிந்த துகள்களிலேயே மிக சிறிய துகள்.. மிக குறைவான எடை கொண்ட துகள் இந்த நியூட்ரினோ தான்.
பல நாட்களாக நாம் இவற்றிற்கு மாஸ் சுத்தமாக இல்லை என்று நினைத்து வந்தோம் தற்செயலாக தான் இதற்க்கு மாஸ் உண்டு என்பதை கண்டு கொண்டோம் (இன்றைக்கும் கூட இவற்றிற்கு மாஸ் இருப்பதற்கு நம்மிடம் ஆதாரம் ஏதும் இல்லை இதை நாம் உணர்வது சில விளைவுகளை வைத்துதான்.
ஐஸ்க்ரீமில் வெனிலா ,ஸ்ட்ராபெரி என்றெல்லாம் வருவதை போல இந்த நியூட்ரினோக்கள் மூன்று flaver இல் நமக்கு கிடைக்கிறது. இது அதன் எடையை அளக்க சிக்கலை இன்னும் அதிகரிக்கிறது.
அவைகளின் அந்த மூன்று வகை.... எலெக்ட்ரான் நியூட்ரினோ. மியுவான் நியுட்றினோ மற்றும் டாவ் நியூட்ரினோ..
(electron neutrino, muon neutrino, and tau neutrino )
இவை மூன்றும் ஒன்று அல்ல ... ஆனால் இவை மூன்றும் ஒன்று தான்.
குழப்பமாக இருக்கா ?
ஒரு நியூட்ரினோ என்ன நியூட்ரினோவாக இருக்க வேண்டும் என்பது நீங்கள் அதை எங்கே பிடிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.
இன்னும் புரிலையா ..ஒரு உதாரணம் பாருங்கள்.
உங்க ஆபீஸ் பாஸ் ஒரு கிரிக்கெட் பிளேயர் கூடவே நல்ல பக்திமான் என்று வைத்து கொள்ளுங்கள்..
அவரை நீங்கள் அலுவலகத்தில் பிடித்தால் வேறு உடையிலும் கிரிக்கெட் மைதானத்தில் பிடித்தால் வேறு உடையிலும் கோவிலில் பிடித்தால் வேறு உடையிலும் கிடைப்பார் அல்லவா. உடை மட்டும் அல்ல அவர் குணாதிசயமே மாறி இருக்கும் அல்லவா . ஆனால் அவர் ஒரே ஆள் தானே ?
அப்படி தான் ஒரு எலெக்ட்ரான் நியூட்ரினோ மற்ற இரு வகை நியூட்ரினோவை விட சில பல மடங்கு எடை கூடு்தலாக இருக்கும் ஆனால் அவைகள் ஒன்றே.
இதில் இன்னொரு ஆச்சர்யம் இருக்கிறது நீங்கள் ஒரு எலெக்ட்ரான் நியூரினோவை ஆராய முயன்றால் அது திடீரென டாவ் வகையாக மாறிவிடும் டாவ் பிறகு மியுவான் நியூட்ரினோவாக வும் மாறி விடும்.. இது எப்படி இருக்கு ?
கிரிக்கெட் க்ரவுண்ட் ல 'சரி நம்ம பாஸ் ஹாயா இருக்காரே'ன் நீங்க ஜோக் அடித்து ஜாலியாக பேசி கொண்டு இருக்க... அவர் திடீரென மேஜிக் செய்தது போல ஆபீஸ் உடையில் டக் கென மாறி பாஸ் ஆகி சீரியஸாக பேச தொடங்கி விட்டால் எப்படி இருக்கும் .
இன்று வரை இந்த மூன்று வகையில் உள்ள எடை குழப்பம் (neutrino mass hierarchy ) தீர்க்க முடியவில்லை.
எடையை அளப்பதிலேயே இவ்வளவு சிக்கல் ..இன்னும் அதை சென்ஸ் பண்ண பிரம்ம பிரயதன பட வேண்டும் காரணம் இந்த துகளுக்கு சுத்தமாக மின் சுமை இல்லை அதனால் இவைகள் மின்காந்த விசைகளால் சுத்தமாக பாதிக்க படுவது இல்லை.
(இவைகள் கொஞ்சமே கொஞ்சம் எடை இருபதால் ஈர்ப்பு விசைக்கு வேணா கொஞ்சமே கொஞ்சம் ஆட்படுகின்றன) ..
இவைகள் சார்ஜ் அடிப்படையில் நியுட்ரலாக இருப்பதால் தான் இந்த பெயரே முதலில் பெர்மி அவர்கள் தான் இதை இந்த பெயர் கொண்டு அழைத்தார்.(இதை நியூட்ரான் உடன் குழப்பி கொள்ள கூடாது. நியூட்ரான் ஒரு பேசிக் எலமெண்ட்ரி பார்ட்டிகள் அல்ல அது குவார்க்கினால் ஆனது. அதன் எடை இதை விட பல லட்சம் மடங்கு பெரியது மேலும் கிட்ட தட்ட அணைத்து அனுவிலும் நியூட்ரான் உண்டு ஆனால் நியுட்ரினோ அல்ல ).
இவைகளுக்கு தனியாக மணம் ,குணம்,நிறம் மாதிரி விஷயம் ஏதும் இல்லை சொல்ல போனால் இவற்றை ஆராய இவைகள் எந்த வசதியும் நமக்கு விட்டு வைக்க வில்லை. (நல்ல வேலையாக சில விளைவுகளை தவிர ).
நியூட்ரினோவை உணர நமக்கு மிக மிக பிரமாண்டமான டிடக்டர்கள் தேவை ஒரு நல்ல டிடெக்டர் ( உதாரணமா opera detecter) 1000 டன் மாஸ் ஐ கையாண்டால் ஒரே ஒரு நியூட்ரினோவை பிடித்து நிறுத்த முடியும் அதை ஆராயும் கருவி ஒரு ஒளி ஆண்டு தொலைவு அமைக்க பட்டால் அது நியூட்ரினோவை பிடிக்க வாய்ப்பு 50 சதம் தான்.
(ANTARES எனும் நியூட்ரினோ ஆய்வகம் 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஒரு துகளையும் பிடிக்க வில்லை ).
நிஜமாக வைக்கோல் போரில் ஊசி தேடுவதும் மலையை வெட்டி எலி பிடிபதும் இந்த நியூட்ரினோ கண்டு பிடிப்பதை விட மிக எளிமையானதே .
இதில் இன்னோரு முக்கியமான விஷயம் இன்று வரை நியூட்ரினோ வுக்கு எப்படி எடை உண்டாகிறது என்று ஆய்வாளர்களால் சொல்ல முடியவில்லை.
இந்த நியூட்ரினோக்கள் எங்கே உள்ளன? ஒவ்வொரு வினாடியும் பல பல ட்ரில்லியன் நியூட்ரினோகள் நமது பூமியை ஊடுருவி சென்று கொண்டே இருக்கின்றன... ஒரு அணுவை விட அவைகள் மிக சிறியவை என்பதால் அவைகளை பொறுத்த வரை ஒரு அறையில் உள்ள காலி இடத்தில ஈ எளிமையாக பறந்து கடப்பபதை போல அவைகள் அணைத்து அணுக்களிலும் எளிமையாக கடந்து செல்கின்றன.
நமது வீடு நமது வாகனம் நமது உடல் அனைத்திலும் பல கோடி கோடி நியூட்ரினோக்கள் ஒவொரு வினாடியும் ஊடுருவி கொண்டே இருக்கின்றன.
ஆனால் அவைகள் எந்த அளவு சிறியது என்றால் உங்கள் உடலில் ஒவொரு வினாடியும் பல ட்ரில்லியன் நியூட்ரினோ ஊடுருவினாலும் உங்கள் வாழ்நாள் முழுதும் ஊடுருவும் துகளின் எடை 0.00000000001 கிலோ ஆகும்.
மொத்த மனிதகுலத்தின் மொத்த ஆயுளில் அவர்களை ஊடுருவும் நியூட்ரினோ வின் எடையை அளந்தால்
அவைகள் 0.15 kg ஆக மட்டும் தான் இருக்கும்.
அதாவது நீங்கள் ஒரு ஒரு கிலோ நியூட்ரினோ பந்து ஒன்றை செய்ய முயன்றால் அதன் அளவு இந்த பூமி பந்தை விட சில பல மடங்குகள் பெரியதாக இருக்கும். அப்படி ஒரு ஆச்சர்ய துகள்கள் இவை.
2011 இல் நியூட்ரினோ ஒளியை மிஞ்சிய வேகம் கொண்டவை என அறிவிக்க பட்டது அதாவது அப்படி நடந்தால் ஐன்ஸ்டைன் சொன்ன பார்முலா பொய்யாகி போகும்.. ஆனால் நல்ல வேலை அது ரீடிங் எடுப்பதில் தவறு என நிரூபிக்க பட்டது ஒளியை நியூட்ரினோவால் மிஞ்ச முடியாது. என்பதை ஒத்து கொண்டார்கள்.
சரி இப்பொது நியூட்ரினோ பற்றி ஓரளவு அறிவியல் ரீதியாக அறிந்து தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போது தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தின் ஆபத்தை பற்றி பார்க்கலாம்.
(கவனிக்கவும் நான் நியூட்ரினோ ஆபத்தானது என்று சொல்ல வில்லை நியூட்ரினோ திட்டம் ஆபத்தானது என்று தான் சொல்கிறேன் ).
நியூட்ரினோக்கள் நேரடியாக உடலில் பாய்ந்தால் ஆபத்தா என்றால் இல்லை நிச்சயமாக இல்லை . அப்படி இருந்து இருந்தால் இன்னேரம் உலகில் எந்த உயிரினமும் இருந்து இருக்காது.
முதலில் இந்த நியூட்ரினோவை ஏன் ஆராய வேண்டும் அதில் என்ன லாபம் என்று பார்க்கலாம்.
இந்த பிரபஞ்சத்தை நாம் இது வரை புரிந்து கொண்டிருப்பது ஆராய்வது எல்லாமே ஒளியின் புண்ணியத்தில் தான். நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து 25 லட்சம் ஒளியாண்டு தாண்டி ஆன்றோமேடா எனும் காலக்சி உள்ளது என்றோ 4.3 ஒளி ஆண்டு தாண்டி நமது அருகாமை நட்சத்திரம் ஆல்பா செண்டாரி உள்ளது என்றோ சொல்ல முடிவதற்கு காரணம் பூமியை பல ஒளி ஆண்டுகள் தாண்டி வந்து அடையும் ஒளியை வைத்து தான்.
அதே போல ஒளிக்கு அடுத்த படியாக பிரபஞ்ச வீதிகளில் இருந்து பல ஒளி ஆண்டுகள் தாண்டி நம்மை வந்து சேரும் இன்னோரு பயணி தான் இந்த நியூட்ரினோ.
இதை ஆராய்வதன் மூலம் பல பிரபஞ்ச ரகசியங்களை கட்டவிழக்க முடியும். உதாரணமாக காஸ்மிஸ் கதிர்கள் இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை பற்றிய தகவலை தரலாம் . நியூட்ரினோ ஆய்வு மூலம் டார்க் மேட்டர் பற்றிய உண்மைகளை அறியலாம்.
பிரபஞ்சத்தின் ஆரம்ப கனத்தை பற்றி அறியலாம்.
String theory பரிந்துரைக்கும் extra dimantion பற்றி ஆராயலாம் பிளாக் ஹோல் பற்றி ஆராயலாம்.
இதெல்லாம் நல்ல ஆய்வுகள் தானே பிறகு ஏன் தேனி மலையில் நியூட்ரினோ ஆய்வை எதிர்க்க வேண்டும். ??
இது வரை நியூட்ரினோவை அறிவியல் ரீதியாக அலசினோம் இனி கொஞ்சம் அரசியல் ரீதியாக அலசுவோம்.
அடுத்த பாகத்திற்கு காத்திருங்கள்
தொடரும்.....
கடுகு...
கடிப்பகை யெனவரு கடுகின் நாளு
மிளகில் வணத்தோடு மூன்றுமொன்றாக்கி
யடுபுன லருந்துமு னயிலவை கறைதொறும்
வளிமுதன் மூலிகை வலியெலா மகலும்
பச்சடி முதற்கறி பண்பினா லயிலினு
நிச்சய மாயுணி கழ்பிணி யறுக்குமே
(தேரையர் குணபாடம்)..
இடிகாச நாசிக்கு ரீளைகபம் பித்தங்
கடிவாத சீதங் கடுப்போ-குடலிற்
படுகோட்டு நோயென்னும் பங்கிவைக ளைப்புண்
கடுகோட்டு மேன்மருந்த காண்.
மந்தமயக் கம்வாதம் வாய்நீர்ச் சுழற்றலறு
முந்து சுகப்பிரச வங்களுண்டா-மிந்துஙதன்
மானே கிராணிகுன்ம மாறுமுத் தோடமும்போம்
தானே கடுகிற்குத் தான்
(அகத்தியர் குணபாடம்)..
கடுகை சமஸ்க்ருதத்தில் சர்ஷபம் என்று சொல்வார்கள் .
குணம்
வாந்தியுண்டாக்கி
வெப்பமுண்டாக்கி
தடிபுண்டாக்கி,
கொப்புளம் எழுப்பி
செரிப்புண்டாகி ,
சிருநீர்பெருக்கி ,
உடலில் உள்ள நச்சுத் தன்மையை போக்கும்,
ஜீரணசக்தியை ஏற்படுத்தும்.
வாதத்தொடர்பான நோய்களை தணி க்கும்.
குடி போதையை முறிக்க பயன்படும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கடுகு, மிளகு, உப்பு மூன்றையும் ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உடல் உபாதைகள் நீங்கும்.
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும், 2 கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுத்து விஷம் வெளியேறும்.
தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.
கடுகை தூள் செய்து வெந்நீரில் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணமாக்கும்.
கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்.
கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.
கடுகு, பூண்டு, வசம்பு, கருவாப்பட்டை, கழற்சிக்காய், கடுகு, ரோகிணி ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி இருவேளை வீதம் ஒரு வாரம் குடித்து வர வாதம், வாய்வு, குத்தல் பிரச்சினை குணமாகும்.
கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்...
ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 6...
சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரினத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனப் பகுதி 6-ம் பகுதியாகும். இந்த 6-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளும், செய்திகளும் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்க்க போவதாக ஒரு செய்திக் குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கே பதிவு செய்கிறது.
உலக வரலாற்றில் இடம் பெற உள்ள முக்கிய நாடுகளில் ஒன்றில் தற்போது உருவாகும் புயல் பல ஆயிரம் மக்களை பழிவாங்கிடப் போகிறது என்றும், இது “சுனாமி“ எனும் பேரலைகளால் உருவாகும் பேராபத்து என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது. கடல் பரப்பில் உள்ள பல நகரங்கள் இதனால் அழிவிற்கு உட்படுத்தப்பட போவதாகவும் இது இறைவனின் நீயாயத்தீர்ப்பில் நடந்து முடியப் போகும் சம்பவம் என்று ஒரு செய்திக்குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே மக்களுக்கு சுட்டிக் காட்டுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் உருவாகும் இனக்கலவரம் அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், போர்மூளும் அபாய சூழ்நிலை தற்போது உருவாகிடப் போவதாகவும், அமெரிக்கா போன்ற பெரும் தேசங்கள் கூட இதில் தலையிட்டு அதனால் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் அசாதாரணமான சூழ்நிலைகள் தற்போது ஏற்பட போவதாக 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.
இந்திய தேசத்தின் வடமாநில எல்லையில் பயங்கரவாத கும்பல் ஒன்று பெரும் சோகத்தை மக்களிடையே ஏற்படுத்தப் போவதாக 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது. ஊரின் எல்லையில் உள்ள ஒரு ஆலயம் ஒன்று வெடி வைத்து தகர்க்கும் நிகழ்வும் கட்டாயம் நடந்து முடியும் என 6-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.
புத்தனின் ஏடுகள் உயிர்பெறும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிறு நகரத்தை சீனா, திபெத்தின் வட எல்லையில் கண்டறியப்படும் நிகழ்வு ஒன்று உடனே நடக்க இருப்பதாகவும், இதன் வாயிலாக இந்திய தேசத்தின் மிகப்பெரிய தொன்மை வரலாற்றை சீனாவும், உலக நாடுகளும் அறிந்து கொள்ளும்படி இந்நிகழ்வு அமைய உள்ளதாக 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு தொன்மையான வரலாற்று குறிப்பை தீர்க்கதரிசனமாக இங்கே வெளிப்படுத்துகின்றது.
ஜப்பான் நாட்டின் தென்பகுதி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு உருவாகும் சுனாமி பேரலை பல ஆயிரம் உயிர்களை பழிவாங்கிட உள்ளதாக 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.
சத்தியயுக தீர்க்கதரிசனங்கள் யாவும் மெய்படும் காலமாக இனி இக்காலம் இருக்கப் போவதாகவும், வரும் 6-ம் மாதம் முதல் துவங்கி மொத்தம் 27 மாதங்கள் வரை தீர்க்கதரிசனங்கள் நடந்து முடியும் காலகட்டமாக இருக்கப் போவதாகவும், இக்காலமே பூமியில் பல மாற்றங்களும், அதிசயங்களும் நடக்கும் காலக்கட்டமாக அமைய இருப்பதாக 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
துன்பங்கள் நிறைந்த மனித வாழ்க்கையில் இனி தெய்வங்களால் நன்மைகளும் ஏற்படப் போவதாக ஒரு செய்திக்குறிப்பை 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே பதிவு செய்கிறது. அதாவது இறைவன் வரும் அந்த இறுதி சபையில் உள்ளவர்கள் யாவரும் அனுபவித்து வந்த பல சோதனைகளும், கஷ்டங்களும், துன்பங்களும் இனி ஓடி ஒதுங்கும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், அந்த இறுதிச்சபையில் உள்ள அனைவருமே இனி ஏற்றத்தை காண்பார்கள் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.
சென்னை மீண்டும் பெரும் புயலால் தாக்கப்பட இருப்பதாகவும், இதற்கு முன் எச்சரிக்கைகள் செய்யப்பட்டு இருப்பினும் பலத்த சேதங்களை இந்த புயல் பெரும் அளவில் ஏற்படுத்தும் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று 6-ம் தீர்க்கதரிசனம் மிகுந்த ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
சத்திய யுக தீர்க்கதரிசனங்கள் யாவும் இனி உலக மக்களிடையே வேகமாக கொண்டு செல்லும் பணிகள் துவங்கிட இருப்பதாகவும், இதற்கு புனித தேவதைகளும், சித்தர்களும் காரண கருவியாக செயல்பட போவார்கள் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு இறைசார்ந்த செய்திக்குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
இறைவனின் பங்களான், இறை மகன் இயேசு என்று அழைக்கப்படுகின்ற “புனிதரின்“ ஆன்ம பிரவேசம் வரும் புனித நாள் அன்று இப்பூமியில் நடைபெறும் என்றும், அது நடந்த 3-ம் நாள் இவ்வுலகின் ஒரு மூலையில் ஒரு அதிசயத்தை மக்கள் காண உள்ளார்கள் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.
மன்னார்வளைகுடா புயலைப் பற்றி மீண்டும் மக்களுக்கு இந்த தீர்க்கதரிசனத்தின் வாயிலாக ஒரு எச்சரிக்கை பதிவு செய்யப்படுகிறது. மக்கள் விழிப்பு நிலையில் இதனை உணர்ந்து செயல்பட்டால் பல உயிர் சேதங்களை தவிர்க்க முடியும் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
தென்திசைக் கடவுளைப் பற்றி இனி செய்தித் தாள்களில் பல செய்திகள் வெளிவரும். இது “போகரின்“ வெளிப்பாடு நடந்ததற்கான அறிகுறிகளாகும். இதை நிருபிக்கும் வகையில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 5-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்ற ஒரு ஊரில் 7மணி நேரம் மழை பொழிவு இருக்கும் என்றும், அது முடிந்த பிறகு கேரளா தேசத்திலிருந்து “நம்பூதரி“ ஒருவர் முருகப்பெருமானின் மற்றொரு நவபாசனச் சிலை பற்றி ஒரு செய்திக்குறிப்பை வெளியிடுவார் என்றும், இது உலக மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும், இதுவும் “போகரின்“ செயலாக இருக்கும் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
சித்திரை திங்கள் அன்று பல குழப்பமான செய்திகள் தமிழகம் முழுவதும் வெளிவர இருப்பதாகவும், மக்கள் இதனை பெரிதும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், அரசியல் பிரவேசங்கள் பல அப்பொழுது நடக்கும் என்றும், தமிழக மக்களின் மனப்போக்கு இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கும் சம்பவம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பல விமர்சனங்களை வெளிப்படுத்த போவதாக இருக்கும் என 6-ம் தீர்க்கதரிசனம் நடக்க போகும் முக்கிய நிகழ்வுகளை பற்றி இங்கே தெரிவிக்கின்றது.
நாசா வின் பயணம் இந்தியாவை நோக்கி வர உள்ளதாகவும், அவர்கள் இடத்தில் உள்ள ஒரு குறிப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய நாட்டிற்கு வர உள்ளதாகவும், அதற்கு இந்திய அரசு முழு “ஒப்புதல்“ வழங்கும் என்றும், அவர்களின் தேடுதல் ஆய்வுகள் தமிழகத்திலும் இருக்கும் என 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.
இந்திய மலைத்தொடர்களில் உள்ள காடுகளில் இனி வினோதமான வெளிச்சங்களை மக்கள் காண உள்ளனர் என்றும், தமிழகத்திலும் இது போன்ற வினோதமான வெளிச்சங்களை மக்கள் காண்பார்கள் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.
வான் மண்டலத்திலிருந்து வரும் “எரிக்கல்“ ஒருவரின் வருகையை உறுதிப்படுத்துவதாக அமையும் என்றும், அச்சமயத்தில் கடலில் மிகப்பெரிய இராட்சச அலைகள் உயர்ந்து எழுந்து ஆர்ப்பரிக்கும் என்றும், நிலப்பரப்பில் பல வெடிப்புகள் ஏற்படும் என்றும், வருகின்ற ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.
சத்திய யுக தீர்க்கதரிசனங்களான “ஆகாயத்தில் ஒரு ஒளி“, “உண்மைகள் உறங்குவதில்லை“ தற்போது வெளிவந்து கொண்டுள்ள “சத்திய யுகம்“ இவை மூன்றும் இறைவனால் வெளிப்படுத்தப்படுகின்ற தீர்க்க தரிசனங்கள் என்றும், இவை செயல்படும் விதமும், அதன் காரணங்களையும் மக்கள் முன்கூட்டியே அறிய முடியாது என்றும், அவை நடந்து முடியும் சமயத்தில் மட்டுமே நமது தீர்க்க தரிசனங்களோடு ஒப்பிட்டு பார்த்து, அதன் உண்மைகளை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்றும், படிப்பதினால் இதன் செயல்பாடுகளை ஒருவர் அறிந்து விட்டார் என நினைத்து கொள்வது முட்டாள்தனமாக போய்விடும் என 6-ம் தீர்க்கதரிசனம் முக்கிய ஒரு செய்திக் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
நிகழ்வுகளை அடையாளமிட்டு காட்டுவதே சத்திய யுகத்தின் வருங்கால தீர்க்கதரிசனத்தின் நோக்கம் என்றும், இதனை மக்கள் புரிந்து கொண்டு வாழ்ந்தால் இனிவரும் காலங்கள் உபத்திரங்கள் இல்லாத நற்காலமாக இருக்கும் என 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது.
மதங்களுக்கு என்று தெய்வங்கள் இல்லை என்றும், தெய்வத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கே மதங்கள் என்றும், மதத்தின் வழியே பிரபஞ்சத்தின் நியதிகளையும், வாழ்வியல் கோட்பாடுகளையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், அதனை விடுத்து மதத்தை பெரியதாக எடுத்துக் கொள்ளும் மக்கள் கூட்டம் அந்த மதத்தின் பெயராலே அழிவார்கள் என 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.
இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் தற்போது மதத்தின் பெயராலே இப்பூமியின் மீது இறங்கிட இருப்பதாகவும், மக்கள் இக்காலகட்டத்தில் ஆழ்ந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என ஒரு எச்சரிக்கை செய்தியினை 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே பதிவு செய்கிறது.
கடவுளின் திருநாமங்கள் மக்களாலும், தீர்க்கதரிசிகளாலும் ஏற்படுத்தப்பட்டவை என்றும், அவைகளை மக்களுக்காகவே இறைவன் ஏற்றுக் கொள்கிறார் என்றும், அதனை புரிந்து கொள்ளாத மதவாதிகள் பெயரளவில் உள்ள இறைவனை, வேறுபடுத்தி பல கொள்ளைகளையும், கொலைகளையும், பாதகச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்றும், அவ்வாறு உள்ள அந்த மதவாத அமைப்புகளின் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்புகள் தற்போது “அக்னி“ போன்று இறங்கிடப் போவதாக 6-ம் தீர்க்கத்தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.
தோற்றங்களும், உருவங்களும், அமைப்புகளும் ஒன்றைப் போல இருக்கவே முடியாது என்றும், அவை வேறுபட்ட அமைப்பில் இருப்பதற்கு மனித மூலங்களே காரணம் என்றும், இந்த மூலங்களின் படைப்பை இறைவனே உருவாக்கினார் என்ற கூற்று தற்போது மெய்படும் அளவிற்கு இந்த பூமியில் இறை சார்ந்த பல அதிசயங்களும் ஆச்சர்ய்ஙகளும் நடக்க இருப்பதாக 6-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.
இந்த உண்மைகளை அறிந்துகொள்ள அதுவரை நாம் விழிப்புடன் காத்திருப்போம்.
குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.
மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.
வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.
அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

Subscribe to:
Posts (Atom)