07/04/2018

நியூட்ரினோ அறிவியலும் ஆபத்தும்...


தமிழ் நாட்டில் தேனி மலை பகுதியில் ஆராய பட இருக்கும் நியூட்ரினோ பற்றி இன்று கொஞ்சம் அறிவியல் ரீதியாகவும் பிறகு அரசியல் ரீதியாகவும் பார்க்கலாம்.

முதலில் நியூட்ரினோ ஆய்வு என்றால் மலையை குடைந்து எடுக்க படும் ஏதோ ஒரு பொருள் போல என்று  நினைப்பவர்கள் உண்டு. அது தவறு.
 நியூட்ரினோ என்பது அனுக்குள் இருக்கும் ஒரு பொருள் என்று நினைப்பவர்கள் உண்டு சொல்ல போனால் அதுவும் தவறு. சிலர் நியூட்ரினோ வை நியூட்ரான் உடன் குழப்பி கொள்பவர்களும் உண்டு. அது மிக மிக தவறு.

உண்மையில் நியூட்ரினோ என்பது தான் என்ன ? அது நமது உடலில் பாய்ந்தால் ஏதும் ஆபத்தா ? அதில் என்ன ஆய்வு செய்வார்கள் . நியூட்ரினோ எங்கே இருக்கும்  அது என்ன விதமான பொருள்? அதன் பயன் என்ன .? வாருங்கள் நியூட்ரினோவை முதலில் கொஞ்சம் அறிவியல் ரீதியாக பார்ப்போம். பிறகு ஏன் அது ஆபத்து என்பதையும் பார்ப்போம்.

முதலில் நியூட்ரினோ என்பது என்ன
கொஞ்சம் விளக்கமான அறிவியல் பார்வை...

நியூட்ரினோ என்பது  அனுவின் எலெமண்ட்ரி பார்ட்டிகள் களில் ஒன்று... அதாவது மிக மிக அடிப்படை துகள்.
அது உற்பத்தி ஆகும் இடம்....

நட்சத்திரங்களின் மைய கரு. அதாவது அணுக்கரு இணைவு நடக்கும் இடங்களான நட்சத்திர அடுப்பில் நடக்கும் சமையல்களில் சமைக்க பட்டு உண்டாகும் பல பொருளில் ஒன்று இந்த நியூட்ரினோ.

சூரியனில் இருந்து நமக்கு ஒளி மட்டுமே வருவது இல்லை ஒளியின் போட்டான் துகள் போல மின்காந்த அலைகள் கதிர்வீச்சு... அல்டராவைலட்  போன்றவையும் வருகிறதல்லவா அப்படி வரும் ஒரு துகள் தான் நியூட்ரினோ சூரிய அடுப்பில் கதிர்வீச்சின் போது பீட்டா கதிர் வீச்சு நிகழ்வில் உண்டாவது இந்த நியூட்ரினோ...


இந்த துகள் ஒரு மாய துகள்... இவைகளை கண்டு பிடித்து ஆராய்வது என்பது ஆவிகளை படம் பிடிக்க முயற்சிபதை விட மிக கடினம் .அதற்க்கு காரணம் நிறைய.

முதலில் நாம் கண்டு பிடித்ததிலேயே மிக சிரிய துகளாக நாம் கருதுவது எலக்ட்ரான்களை தான். காரணம் அவை கள் புரோட்டனை விட 1836 மடங்கு சிறியவை . ஆனால் ஒரு நியூட்ரினோ துகள் எலாக்ட்ரானை விட 40 லட்சம் மடங்கு சிறியது. ஒரு கிராமில் கோடி கோடி கோடி கோடி மடங்கு சிறியது இந்த நியூட்ரினோ. இது வரை மனிதன் அறிந்த துகள்களிலேயே மிக சிறிய துகள்.. மிக குறைவான எடை கொண்ட துகள் இந்த நியூட்ரினோ தான்.

பல நாட்களாக நாம் இவற்றிற்கு மாஸ் சுத்தமாக இல்லை என்று நினைத்து வந்தோம் தற்செயலாக தான் இதற்க்கு மாஸ் உண்டு என்பதை கண்டு கொண்டோம் (இன்றைக்கும் கூட இவற்றிற்கு மாஸ் இருப்பதற்கு நம்மிடம் ஆதாரம் ஏதும் இல்லை இதை நாம் உணர்வது சில விளைவுகளை வைத்துதான்.

ஐஸ்க்ரீமில் வெனிலா ,ஸ்ட்ராபெரி என்றெல்லாம் வருவதை போல இந்த நியூட்ரினோக்கள் மூன்று flaver இல் நமக்கு கிடைக்கிறது. இது அதன் எடையை அளக்க சிக்கலை இன்னும் அதிகரிக்கிறது.

அவைகளின் அந்த மூன்று வகை.... எலெக்ட்ரான் நியூட்ரினோ. மியுவான் நியுட்றினோ மற்றும் டாவ் நியூட்ரினோ..
(electron neutrino, muon neutrino, and tau neutrino )

இவை மூன்றும் ஒன்று அல்ல ... ஆனால் இவை மூன்றும் ஒன்று தான்.
குழப்பமாக இருக்கா ?

ஒரு நியூட்ரினோ என்ன நியூட்ரினோவாக இருக்க வேண்டும் என்பது நீங்கள் அதை எங்கே பிடிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.
இன்னும் புரிலையா ..ஒரு உதாரணம் பாருங்கள்.

உங்க ஆபீஸ் பாஸ் ஒரு கிரிக்கெட் பிளேயர் கூடவே நல்ல பக்திமான் என்று வைத்து கொள்ளுங்கள்..

அவரை நீங்கள் அலுவலகத்தில் பிடித்தால் வேறு உடையிலும் கிரிக்கெட் மைதானத்தில் பிடித்தால் வேறு உடையிலும் கோவிலில் பிடித்தால்  வேறு உடையிலும் கிடைப்பார் அல்லவா. உடை மட்டும் அல்ல அவர் குணாதிசயமே  மாறி இருக்கும் அல்லவா . ஆனால் அவர் ஒரே ஆள் தானே ?


அப்படி தான் ஒரு எலெக்ட்ரான் நியூட்ரினோ மற்ற இரு வகை நியூட்ரினோவை விட சில பல மடங்கு எடை கூடு்தலாக இருக்கும் ஆனால் அவைகள் ஒன்றே.

இதில் இன்னொரு ஆச்சர்யம் இருக்கிறது நீங்கள் ஒரு எலெக்ட்ரான் நியூரினோவை ஆராய முயன்றால் அது திடீரென டாவ் வகையாக மாறிவிடும் டாவ் பிறகு மியுவான் நியூட்ரினோவாக வும் மாறி விடும்.. இது எப்படி இருக்கு ?
கிரிக்கெட் க்ரவுண்ட் ல 'சரி நம்ம பாஸ் ஹாயா இருக்காரே'ன் நீங்க ஜோக் அடித்து ஜாலியாக பேசி கொண்டு இருக்க... அவர் திடீரென மேஜிக் செய்தது போல ஆபீஸ் உடையில் டக் கென மாறி பாஸ் ஆகி சீரியஸாக பேச தொடங்கி விட்டால் எப்படி இருக்கும் .
இன்று வரை இந்த மூன்று வகையில் உள்ள எடை குழப்பம் (neutrino mass hierarchy ) தீர்க்க முடியவில்லை.

எடையை அளப்பதிலேயே  இவ்வளவு சிக்கல் ..இன்னும் அதை சென்ஸ் பண்ண பிரம்ம பிரயதன பட வேண்டும் காரணம் இந்த துகளுக்கு சுத்தமாக மின் சுமை இல்லை அதனால் இவைகள் மின்காந்த விசைகளால் சுத்தமாக பாதிக்க படுவது இல்லை.

(இவைகள் கொஞ்சமே கொஞ்சம் எடை இருபதால் ஈர்ப்பு விசைக்கு வேணா கொஞ்சமே கொஞ்சம் ஆட்படுகின்றன) ..

இவைகள் சார்ஜ் அடிப்படையில் நியுட்ரலாக இருப்பதால் தான் இந்த பெயரே முதலில் பெர்மி அவர்கள் தான் இதை இந்த பெயர் கொண்டு அழைத்தார்.(இதை நியூட்ரான் உடன் குழப்பி கொள்ள கூடாது. நியூட்ரான் ஒரு பேசிக் எலமெண்ட்ரி பார்ட்டிகள் அல்ல அது குவார்க்கினால் ஆனது. அதன் எடை இதை விட பல லட்சம் மடங்கு பெரியது மேலும் கிட்ட தட்ட அணைத்து அனுவிலும் நியூட்ரான் உண்டு ஆனால் நியுட்ரினோ அல்ல ).

இவைகளுக்கு தனியாக மணம் ,குணம்,நிறம் மாதிரி விஷயம் ஏதும் இல்லை சொல்ல போனால் இவற்றை ஆராய இவைகள் எந்த வசதியும் நமக்கு விட்டு வைக்க வில்லை. (நல்ல வேலையாக சில விளைவுகளை தவிர ).

நியூட்ரினோவை உணர நமக்கு மிக மிக பிரமாண்டமான டிடக்டர்கள் தேவை ஒரு நல்ல டிடெக்டர் ( உதாரணமா opera detecter) 1000 டன் மாஸ் ஐ கையாண்டால் ஒரே ஒரு நியூட்ரினோவை பிடித்து நிறுத்த முடியும் அதை ஆராயும் கருவி ஒரு ஒளி ஆண்டு தொலைவு அமைக்க பட்டால் அது நியூட்ரினோவை பிடிக்க வாய்ப்பு 50 சதம் தான்.

(ANTARES எனும் நியூட்ரினோ ஆய்வகம்  6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஒரு துகளையும் பிடிக்க வில்லை ).

நிஜமாக வைக்கோல் போரில் ஊசி தேடுவதும் மலையை வெட்டி எலி பிடிபதும்  இந்த நியூட்ரினோ கண்டு பிடிப்பதை விட மிக எளிமையானதே .
இதில் இன்னோரு முக்கியமான விஷயம் இன்று வரை நியூட்ரினோ வுக்கு எப்படி எடை உண்டாகிறது என்று ஆய்வாளர்களால் சொல்ல முடியவில்லை.

இந்த நியூட்ரினோக்கள் எங்கே உள்ளன? ஒவ்வொரு வினாடியும் பல பல ட்ரில்லியன் நியூட்ரினோகள் நமது பூமியை ஊடுருவி சென்று கொண்டே இருக்கின்றன... ஒரு அணுவை விட அவைகள் மிக சிறியவை என்பதால் அவைகளை பொறுத்த வரை ஒரு அறையில் உள்ள காலி இடத்தில ஈ எளிமையாக பறந்து கடப்பபதை போல அவைகள் அணைத்து அணுக்களிலும் எளிமையாக கடந்து செல்கின்றன.
நமது வீடு நமது வாகனம் நமது உடல் அனைத்திலும் பல கோடி கோடி நியூட்ரினோக்கள் ஒவொரு வினாடியும் ஊடுருவி கொண்டே இருக்கின்றன.
ஆனால் அவைகள் எந்த அளவு சிறியது என்றால் உங்கள் உடலில் ஒவொரு வினாடியும் பல ட்ரில்லியன்  நியூட்ரினோ ஊடுருவினாலும் உங்கள் வாழ்நாள் முழுதும் ஊடுருவும் துகளின் எடை 0.00000000001 கிலோ ஆகும்.
மொத்த மனிதகுலத்தின் மொத்த ஆயுளில் அவர்களை ஊடுருவும் நியூட்ரினோ வின் எடையை அளந்தால்
அவைகள் 0.15 kg ஆக மட்டும் தான் இருக்கும்.

அதாவது நீங்கள் ஒரு ஒரு கிலோ நியூட்ரினோ பந்து ஒன்றை செய்ய முயன்றால் அதன் அளவு இந்த பூமி பந்தை விட சில பல மடங்குகள் பெரியதாக இருக்கும். அப்படி ஒரு ஆச்சர்ய துகள்கள் இவை.

2011 இல் நியூட்ரினோ ஒளியை மிஞ்சிய வேகம் கொண்டவை என அறிவிக்க பட்டது அதாவது அப்படி நடந்தால் ஐன்ஸ்டைன் சொன்ன பார்முலா பொய்யாகி போகும்.. ஆனால் நல்ல வேலை அது ரீடிங் எடுப்பதில் தவறு என நிரூபிக்க பட்டது ஒளியை நியூட்ரினோவால் மிஞ்ச முடியாது. என்பதை ஒத்து கொண்டார்கள்.

சரி இப்பொது நியூட்ரினோ பற்றி ஓரளவு அறிவியல் ரீதியாக அறிந்து தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தின் ஆபத்தை பற்றி பார்க்கலாம்.
(கவனிக்கவும் நான் நியூட்ரினோ ஆபத்தானது என்று சொல்ல வில்லை நியூட்ரினோ திட்டம் ஆபத்தானது என்று தான் சொல்கிறேன் ).

நியூட்ரினோக்கள் நேரடியாக உடலில் பாய்ந்தால் ஆபத்தா என்றால்  இல்லை நிச்சயமாக இல்லை . அப்படி இருந்து இருந்தால் இன்னேரம் உலகில் எந்த உயிரினமும் இருந்து இருக்காது.

முதலில் இந்த நியூட்ரினோவை ஏன் ஆராய வேண்டும் அதில் என்ன லாபம் என்று பார்க்கலாம்.

இந்த பிரபஞ்சத்தை நாம் இது வரை புரிந்து கொண்டிருப்பது ஆராய்வது எல்லாமே ஒளியின் புண்ணியத்தில் தான். நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து 25 லட்சம் ஒளியாண்டு தாண்டி ஆன்றோமேடா எனும் காலக்சி உள்ளது என்றோ 4.3 ஒளி ஆண்டு தாண்டி நமது அருகாமை நட்சத்திரம் ஆல்பா செண்டாரி உள்ளது என்றோ சொல்ல முடிவதற்கு காரணம் பூமியை பல ஒளி ஆண்டுகள் தாண்டி வந்து அடையும் ஒளியை வைத்து தான்.

அதே போல ஒளிக்கு அடுத்த படியாக பிரபஞ்ச வீதிகளில் இருந்து பல ஒளி ஆண்டுகள் தாண்டி நம்மை வந்து சேரும் இன்னோரு பயணி தான் இந்த நியூட்ரினோ.

இதை ஆராய்வதன் மூலம் பல பிரபஞ்ச ரகசியங்களை கட்டவிழக்க முடியும். உதாரணமாக காஸ்மிஸ் கதிர்கள் இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை பற்றிய தகவலை தரலாம் . நியூட்ரினோ ஆய்வு மூலம் டார்க் மேட்டர் பற்றிய உண்மைகளை அறியலாம்.

பிரபஞ்சத்தின் ஆரம்ப கனத்தை பற்றி அறியலாம்.

String theory பரிந்துரைக்கும் extra dimantion பற்றி ஆராயலாம் பிளாக் ஹோல் பற்றி ஆராயலாம்.

இதெல்லாம் நல்ல ஆய்வுகள் தானே பிறகு ஏன் தேனி மலையில் நியூட்ரினோ ஆய்வை எதிர்க்க வேண்டும். ??

இது வரை நியூட்ரினோவை அறிவியல் ரீதியாக அலசினோம் இனி கொஞ்சம் அரசியல் ரீதியாக அலசுவோம்.

அடுத்த பாகத்திற்கு காத்திருங்கள்

தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.