12/11/2017

பசி உணர்வு...

பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம்..

இருவருக்கும் பசி என்பது பிரச்சனை தரும் ஒன்று. இந்த பசி உணர்வு எப்படி தோன்றுகிறது. நமது ரத்தத்தில் சாதாரணமாக 80ல் இருந்து 120 மில்லி கிராம் குளுக்கோஸ் இருக்க வேண்டும்.

இந்த குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் அளவை எடுத்துப்பார்த்தால் எல்லோருக்கும் 140 மில்லி கிராம் வரை இருக்கும்.

அதற்கு மேலும் நமது சாப்பாட்டில் குளுக்கோஸ் இருந்தால் அதை தேவையில்லை என்று நமது உடல் சிறுநீரில் கலந்து கழிவாக வெளியேற்றிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 80-90 என்ற அளவுக்கு குறைந்தால் பசி ஏற்படும். ரத்தத்தில் குளுக்கோஸ் குறைய குறைய வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாகும். காஸ்ட்ரின் என்ற ஒரு ஹர்ர்மோன் தோன்றும்.

இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்தமாக வயிற்றில் ஏற்படுத்தும் பிரச்சனைதான் பசி. குளுக்கோஸ் குறைவான ரத்தம் மூளைக்கு போகும் போது மூளை எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மூளை உடலில் மிகச்சிறிய பகுதிதான். ஆனால் அதற்குத்தான் பெரும்பகுதி ரத்தம் தேவைப்படுகிறது.

எதைப்பற்றியும் அதற்கு கவலையில்லை. தனக்கு வேண்டிய பங்க கச்சிதமான வந்து சேர்ந்து விட வேண்டும். அதிகமான ரத்தம் மட்டுமல்லாமல் தரமான குளுக்கோஸ் நிறைந்த ரத்தமே வேண்டும். அப்படி கிடைக்காத போது மூளை தெரிவிக்கும் இந்த எதிர்ப்புதான் லேசான மயக்கம், காதை அடைக்கிறது, கண் பஞ்சடைவது போன்றவை..

8 மணி நேரம் சாப்பிடவில்லை. தண்ணீர் கூட குடிக்கவில்லை என்றால் டீஹைட்ரஜன் தொடங்கும். அதனால் காதடைப்பு, மயக்கம் இன்னமும் அதிகமாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களை இந்த குளுக்கோஸ் பிரச்சனை படாதபாடுபடுத்தும். அதனால் தான் அவர்களால் பசியை தாங்க முடிவதில்லை...

சோழர் ஆட்சியில் மருத்துவம்...




சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.

மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.

மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

கல்வியோடு மருத்துவமும் கற்றுக் கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...

பழைய சாதத்தில் இவ்வளவு விஷயமா?


திரைப்படங்களில் கிராமத்து சீன் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.  இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு.

உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும்..

ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.
அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது.

பழைய சாதத்தின் நன்மைகள் சில :

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்,  உடல் எடையும் குறையும்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9.  எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்...

விரைவில் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு மூடுவிழா.. ரூ.2,494 கோடிக்கு அடகு வைக்கப்பட்டதை அம்பலப்படுத்திய பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 3 கோட்டங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ரூ.2494 கோடிக்கு நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன.

மற்ற கோட்டங்களின் நிதிநிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது எனவும்  அன்புமணி அவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தார்...

வெந்தியத்தின் மருத்துவம்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 58...


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி...

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மேலும் பயணிப்போம்.....

பாஜக வின் வருமான வரித்துறை கலாட்டா...


தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்...


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தானே...

திமுக என்பது என்றுமே தமிழினத்தின் எதிரியே...


வேலூரில் மூடப்படும் ரேசன் கடைகள் புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம்...


ரேசன் கடைகளை மூடுவதற்கும், விவசாய மானியங்களை நிறுத்துவதற்கும் உலக வர்த்தக கழகத்தில் (WTO) இந்திய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கும் புத்தகத்தை அறிமுகப்படுத்தி, அந்த ஒப்பந்தத்தின் பின்னணிகளை முழுமையாக விளக்குகிறோம்.

அனைவரும் வாருங்கள். நவம்பர் 12, 2017 ஞாயிறு மாலை 5 மணி, சோலை அரங்கம், செளத் சர்வீஸ் ரோடு, வள்ளலார், வேலூர்.

- மே பதினேழு இயக்கம்...

உலக புகழ் பெற்ற செக்ஷ்சாலஜிச்ட்...


புகைபடத்தில் இருப்பவர் டாக்டர் ஹர்ஷ் பீல்டின்..

இவர் தான் ஐரோப்பாவின் முதல் செக்ஸ்சால்ஜிஸ்ட்..

காமம் சம்பந்த பிரச்னை செக்ஸ் சம்பந்தமான அணைத்து கவுன்சிலிங்கையும் அறிமுக படுத்தியவர் இவரே....

ஆண் ஓரின சேர்கை பற்றி உளவியல் ரீதியாக விவரித்து 3 நூற்களை எழுதியுள்ளார் அவை இன்றும் மருத்துவ உலகில் பெரிதாக பேசபடுகிறது.....

பாலியல் நோய்க்கான சிகிச்சை பாலியல் விழிப்புணர்வு குறித்து மாநாடு உலகில் உள்ள பாலியல் சம்பந்தமான 35,000 புகைப்படங்கள் அணைத்து மொழியிலும் அச்சடித்து உலகில் உள்ள நூற்கள் என்று நூலகம் ஆராய்ச்சி கழகம்.. உலக மருத்துவர்கள் மாநாடு என்று அன்றைய காலத்தில் பேசபயந்த விஷயத்தை பற்றி தயிரியமாக பேசியவர்
மற்றும் தொடங்கியவர் இவர்..

இவரது ஆய்வு கூடம் மற்றும் நூலகத்திற்கு சென்று பார்த்த உலக தலைவர்கள் ஏராளம்..

அதில் நம்ம நேருவும் ஒருவர்..

1927 ம் ஆண்டு நேரு பெர்லின் சென்ற பொழுது ஆய்வு கூடத்தை பார்த்து பரவசப்பட்டு வந்துள்ளார்..

அய்யா நேரு அவர்களுக்கும் டாக்டர் ஹர்ஷ் பீல்ட் அவர்களும் நட்பு ஏற்பட்டு உங்களின் ஆலோசனை எங்கள் இந்தியாவிற்கு தேவை என்று இந்திய சென்ற பின்பு டாக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்..

அதனடிப்படையில் ஹர்ஷ் பீல்ட் இந்தியாவிற்கும் வந்தார் 1931 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி செக்ஸ் சம்பந்தட்ட விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்..

மற்றும் பாலியல் புகைப்படங்களை காட்டி விளக்கவும் செய்துள்ளார்.

இதை கேட்க்க [பார்க்க] இந்தியாவில் இருந்து ஆயிரகணக்கான மருத்துவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்...

அலஹாபாத்தில் நேரு குடும்பத்திற்கு சொந்தமான மாளிகை ஆனந்த பவன் இதில் காந்தி அடிகள் தங்குவதற்கென்று பிரத்யேகமாக அணைத்து வசதிகளும் அடங்கிய அறை உள்ளது..

காந்தியை தவிர இங்கு யாரும் தங்கியது கிடையாது...

முதன் முதலாக வேறொரு அதுவும் வெளிநாட்டினராக தங்கியது டாக்டர் ஹர்ஷ் பீல்ட் தான்...

நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளை பதறவைக்கும் பெண்வேட கொள்ளைக் கும்பல்...


நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களில் பெண் வேடமணிந்த நபர்கள் லிப்ட் கேட்பதுபோல் மடக்கி, வழிப்பறி செய்யும் சம்பவம் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு இருந்துவந்தது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநரை பெண் வேடமணிந்த ஆண், லிப்ட் கேட்பதுபோல் மடக்கி, கட்டிப்போட்டு கத்தி முனையில் ரூபாய் 37ஆயிரம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, சென்னையிலிருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அட்டை தயாரிக்கும் ஆலைக்கு புறப்பட்டது. லாரியை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விலாம்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் ஓட்டி வந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே இருக்கும் கத்திகாரன்பட்டி பிரிவை கடந்து சித்தாநத்தம் ஆற்றுப் பாலத்துக்கு வரும்போது, சாலையின் ஓரத்தில் பெண் வேடமணிந்த ஒருவர், வண்டியை ஓட்டி வந்த சுந்தரலிங்கத்திடம் லிப்ட் கேட்டார். அதையடுத்து, லாரியை நிறுத்திய சுந்தரலிங்கத்தை, பெண் வேடம் அணிந்த நபர் நின்ற கொஞ்ச தூரத்தில் மறைந்து நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள் ஓடிவந்து கத்தி முனையில் மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு லாரியில் இருந்த ரூபாய் 37ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

இதையடுத்து, மணப்பாறை காவல்நிலையத்தில் கொடுத்த புகார் மனுவின் பேரில், திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில். பெண் வேடம் அணிந்து வழிப்பறியில் ஈடுபட்டது, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதி அம்மாபேட்டையைச் சேர்ந்த ஏகாந்தம் மகன்கள் அறிவழகன், மகேஷ் (எ) மகேந்திரன் மற்றும் கண்டியூர் காந்திநகரைச் சேர்ந்த முனியாண்டி மகன் அருணாசலம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணையில் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்து இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இதுபோன்று பலரிடம் வழிப்பறி செய்துள்ளதாகவும் மூன்றுபேரும் ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, குற்றப்பிரிவு போலீஸார், சம்மந்தப்பட்ட மூன்று பேரையும் மணப்பாறை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

சாலைகளில் வாகன ஓட்டும் நபர்களைக் குறிவைத்து பெண் வேடமணிந்து லிப்ட் கேட்கும் பாணியில் கொள்ளையடித்த வழிப்பறி கும்பல் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது...

இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும்...


தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது...

இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர்
"இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார்.

அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர்.

அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தென்னிந்திய இ.தே. ரா. (இ.தே. ரா. - இந்திய தேசிய ராணுவம்) வீரர்களை கைது செய்ய நேர்ந்தது. அப்போது நேதாஜி ஜெனரல் திலானை அழைத்து கூறினார் -- " இவர்கள் மிக சிறந்த வீரர்கள். இவர்கள் கடுமையுடன் இறுதிவரை போராடுவார்கள்..

இவர்கள் தாவறான புரட்சி செய்வதற்கு காரணம் இவர்கள் தலைவரின் தவறான போக்குத்தான். அதனால் நீ இவர்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்து" என்றாராம்..

பின் ஒருநாள் தலைவரான திலான் கூறுகிறார். " தமிழ் வீரர்களுக்கு நான் தலைவராக இருந்தது என் பெரும் பேறு இ.தே. ரா. த்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்"..

இ.தே. ரா.த்தில் தலைவராக இருந்த மற்றொரு வீரர் ஜெனரல் கியானி கூறுகிறார். " தமிழர்கள் மிக சிறந்த வீரர்கள், இறுதிவரை போரிட்டார்கள். எதிரியிடம் பிடிப்பட்டபோதும் இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்ததே இல்லை என்பது தான் குறிப்பிடத்தக்கது.

நேதாஜியின் இ.தே. ரா. கண்டு எரிச்சல் அடைந்த வின்ஸ்டன் சர்ச்சில் ரேடியோவில் கூறினார் " மலேயா ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் ரத்தம் நேதாஜி மூலையில் கட்டியாக உள்ளது" என்றார்.

அதற்க்கு பதில் அளித்த நேதாஜி "
இந்த தமிழர்கள்தான் பின்னாளில் ஆங்கில ஏகதிபத்தியத்தின் ரத்தத்தை குடிப்பார்கள் " என்று கூறினார்.

1945 இல் மார்ச் மாதம் நேதாஜி படையில் ஒற்றர்களாக இருந்த நான்கு தமிழ் வீரர்கள் தூக்கிலிடபட்டனர்..

இந்தியா விடுதலைப் பெற்ற பின்னரும் இவர்களைப் பற்றி நாம் அறியாது விந்தையிலும் விந்தை. ஒரு தமிழனாக பிறந்ததால்தான் ராமுத்தேவர், இராமசாமி ஒன்றியார் போன்றோர்கள் புகழ் அறியப்படவில்லை.

தலைசிறந்த படைத்தலைவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் நேதாஜி 46 பேர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பான் டோக்கியோவிற்கு ராணுவ பயிற்சி பெற்று திரும்ப அனுப்பினார். அதில் கூட 16 பேர்கள் தமிழர்கள். ஒரு ஈழத்தமிழர் உட்பட..

இ.தே. ரா. சேர ஆர்வம் கொண்டு ஒரே நேரத்தில் 2500 பேர் அணிதிரண்டனர். உடல் வலிமை இல்லாதவர்களும் கூட தங்களை இணைத்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். 14 வயது சிறார்களும் 16 வயது என்று பொய் கூறி கொண்டு இ.தே. ரா.வில் இணைந்தனர்..

ஒருவர் தன்னிடம் இருந்த 200 பசுக்களை நன்கொடையாக இ.தே. ரா.க்கு நேதாஜியிடம் கொடுத்துள்ளார். கிழிந்த சேலையுடன் வந்த மூதாட்டி ஒருவள் தன்னிடம் இருந்த மூன்று டாலரை கொடுத்துள்ளார். அதை கண்ணீர் மல்க நேதாஜி பெற்று கொண்டார்.

நேதாஜியை சுற்றி பலர் தமிழர்கள் இருந்தனர். அவருடைய சமையல்க்காரர் பெயர் காளி. நேதாஜியின் இறுதி கடிதத்தை எழுதியவர் திவி என்ற தமிழர். நேதாஜி சிங்கபூருக்கு வந்த போது அவரை வரவேற்றவர் சிதம்பரம் ஒரு தமிழர்..

ஜெர்மனியில் தமிழ் வானொலி நடத்தியவர் திரு நாயுடு. அவர் அக்காலத்தில் பிரான்சில் உள்ள பாரிசில் உணவு விடுதி ஒன்றை நடத்திய பெரிய வியாபாரி.

நேதாஜியின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு விடுதியை மூடிவிட்டு ஜெர்மனியை அடைந்து தமிழ் நிகழ்சிகளை நடத்தினார். குண்டு மழை பொழிந்தபோதும் கூட தொடர்ந்து தமிழ் நிகழ்சிகள் நடத்தினார். நாலரை ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்தான் நிகழ்ச்சி நடக்கவில்லையாம்..

மலேயாவிலும் நேதாஜிக்கு ஆதரவாக யுவபாரதம், சுதந்திர இந்துஸ்தான் போன்ற தமிழ் இதழ்கள் வெளிவந்தன..

ராணி ஜான்சி படையின் தலைவியாக கேப்டன் இலட்சுமி இருந்தார். இந்த படையில் கேப்டன் ஜானகி தேவர் பெரும்பங்கு ஆற்றினார். இவர் இந்தியாவில் பிறக்காதவர், இந்தியாவை பார்க்காதவர். எனினும் வீரத்தமிழ் இன உணர்வோடு போராடினார்கள்.

விவசாய குடும்பங்களில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை கத்தரித்து விட்டு ராணுவ பயிற்சிக்கு பின் பர்மா போர் முனைக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் செவிலியர்களாக பணிபுரிய மறுத்து தூப்பாக்கி ஏந்தி ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள்.

அத்தனை வீரம் மிகுந்த தாய் வழி வந்தவர்கள் நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் மார்பில் குடித்த பால் இன்னும் நம் மரபணுக்களில் கலந்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது..

அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும் - நேதாஜி...

நாகப்பட்டினம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் காலாவதியான உர மூட்டைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு...


தெலுங்கர் வைகோ வைகோ நாயுடு வின் திராவிட பகுத்தறிவை நன்றாக படியுங்கள்...


தக்காளி சாப்பிட்டால் புற்று நோயைக் குறைக்கலாம்...


உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது.

பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.

பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தாக்காளியைத் தமது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35,000 ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10,000 பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.

பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதோடு, இறைச்சியின் அளவையும், கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20,000 ஆண்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் வாரத்துக்கு குறைந்தது 1500 கிராம் தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டவர்களிடம் புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் சாத்தியம் 18 சதவீதம் வீழ்ச்சியடைந்ததை இவர்கள் கண்டறிந்தனர்.

உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்.

அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.

புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த வனசா எர், அதே சமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது.

அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப் பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

உணவில் காய்கறிகளின் அளவு அதிகரிப்பதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்

அத்துடன், சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.

புராஸ்டேட் புற்றுநோய் தடுப்பில் தக்காளி முக்கிய பங்காற்றுவதாகத் தங்களின் ஆய்வு கண்டறிந்திருப்பதாகக் கூறும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த வனசா எர், அதே சமயம், இதை உறுதி செய்யவேண்டுமானால் இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

தக்காளிக்குச் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைகோபீன் என்கிற இயற்கையான வேதிப்பொருள், மனித செல்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக அந்தச் செல்கள் வேகமாகச் சிதைவுறுவதையோ அல்லது வேகமாக வளர்வதையோ தடுக்க வல்லது.

அதன்மூலம் இந்த லைகோபீன் மனித செல்களின் வேகமான கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி புற்றுநோயாக உருவாவதைத் தடுக்கும் பணியை செய்வதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தக்காளியில் இருக்கும் லைகோபீன் மட்டுமல்லாமல், நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளான கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் இருக்கும் செலீனியம் என்கிற வேதிப்பொருளும், பாலிலும் அதிலிருந்து தயாராகும் அனைத்து வகையான உணவுப் பொருட்களிலும் இருக்கும் கால்சியமும் கூட ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கவல்லவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப் பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்...

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடும் கடல் சீற்றத்தால் 5 வீடுகள் இடிந்து விழுந்தன...


பொம்மையார்பாளையத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட 5 வீடுகள் இடிந்து விழுந்தன. கடல் சீற்றத்தால் கடந்த வாரம் 5 வீடுகள் இடிந்த நிலையில் மேலும் வீடுகள் இடிந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்...

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2.. உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 9...


உண்மைகள் உறங்குவதில்லை என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று இடம் பெறுவது 9-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். இந்த 9-ம் தீர்க்க தரிசனத்தில் இடம் பெற உள்ள குறிப்புகள் யாவும் அதிவிரைவாக நடக்ககூடிய சம்பவங்களின் தொகுப்பே இப்பகுதியாகும்.

9-ம் தீர்க்க தரிசனத்தில் நாம் முதலாவதாக காண இருப்பது வருங்காலம் என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் வருந்தத்தக்க பல அரசியல் சம்பவங்களின் பின்னணியை கொண்ட சம்பவங்களின் தொகுப்பாக அது இருக்கிறது என்றும், அதில் மூத்த அரசியல் தலைவர் ஒருவரின் மரணம் உடனே நிகழ இருப்பதாகவும், அது நிகழ்ந்த 7-ம் தினத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு அழிவுச் சம்பவம் நிகழ உள்ளதாக 9-ம் தீர்க்க தரிசனம் தனது முதல் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


கபடவேடதாரியாக வலம் வந்து கொண்டுள்ள ஒரு ஆன்மீகவாதியின் திட்டமிட்ட சதி ஒன்று தற்போது அம்பலமாகும் என்றும், இதன் பின்னணியில் ஒரு சமூக அமைப்பு இருக்கும் என்றும், இதில் மூத்த அரசியல் தலைவரின் பங்கு இருக்கும் என்றும், அதனை உளவுத்துறை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று 9-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.



செஞ்சி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பகுதி என்றும், அங்கு இயற்கை சார்ந்த ஒரு பேரழிவு ஏற்பட உள்ளதாகவும், இதனை மக்கள் வரும் முன் அறிந்தால் பெரும் இழப்பு தவிர்க்க முடியும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை பதிவு செய்கிறது. வரும் தமிழ் மாதத்தில் மகத்தான ஒரு அரிய நிகழ்வு வானில் நடக்க உள்ளதாகவும், “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 18-ம் தீர்க்க தரிசனம் நடக்கும் காலமாக இக்காலம் அமையும் என்று 9-ம் தீர்க்கதரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


சோழவந்தான், மயிலாடுதுறை, வாழவந்திநாடு, உட்கோம்பை, பட்டிப்பாடி, வேலூர், ஏற்காட்டின் தென்வலப்பகுதி, அரூர், தேவக்கோட்டை, உரியூர், உசிலம்பட்டி, ஏரியூர், அரவங்குறிச்சி, தூக்கணாம்பாளையம், சோலையூர், வந்தவாசி, அருப்புக்கோட்டை, கீழ்நிலைப்பட்டி, ஆத்தூர், நடுவூர், நல்லூர், எருமைப்பட்டி ஆகிய ஊர்களில் விசித்திர சம்பவங்கள் பல நடக்கும் என்றும், இச்செய்திகள் செய்தித்தாள்கள், மீடியாக்களில் இடம்பெறும் சமயத்தில் “கீழ்நிலை“ எனும் சொல்படி பொருள் கொண்ட ஒரு ஊரில் மகத்தான தெய்வீக சங்கல்பம் ஒன்று நடக்க போவதாக 9-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு குறிப்பை பதிவு செய்கிறது.



தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புயல் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும், இது நிகழும் காலம் தற்போது துவங்கிவிட்டது என்றும், வரலாற்றில் ஒரு மிகப்பெரிய நதி நிரம்பி ஒரு மாநிலத்தையே நிலைகுலையச் செய்யும் என்றும், இச்சமயத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்ட உண்மைகள் உறங்குவதில்லை என்ற 7-ம் தீர்க்க தரிசனத்தில்  குறிப்பிட்ட ஒரு முக்கிய சம்பவம் நடந்தேறிடும் என்று 9-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு குறிப்பை தருகின்றது.



பம்பாய், குஜராத், மல்லேஸ்வர் என்ற பகுதிகளில் பல திடுக்கிடும் தொடர் சம்பவங்கள் நடக்க உள்ளதாகவும், காவேரி துவங்கும் இடத்தில் ஒரு தெய்வீக சங்கல்பம் துவங்கும் என்றும், இதன் எதிரொலியாக வடதேசத்தில் ஒரு மகா புண்ணியத் சேத்திரத்தில் மழைநீரால் பெரும் சேதம் ஒன்று நடைபெற உள்ளதாக 9-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.



இமயத்தில் இன்றும் உயிரோடு வாழ்ந்து வரும் ஒரு மகா ஞானியின் உருவத்தை புண்ணிய யாத்திரை மேற்கொள்ளும் பல பக்தர்கள் காண்பார்கள் என்றும், அதே சமயத்தில் அவரின் திருவுருவ காட்சியை சென்னையில் உள்ள ஒரு மடத்தில் உள்ள சீடர்கள் காணும் பாக்கியத்தை பெறுவார்கள் என்ற அற்புத செய்தியை 9-ம் தீர்க்க தரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.



நாளைய நாயகன் இவரென்று மக்கள் முடிவெடுக்கும் இச்சமயத்தில் ஆன்மீகத்தில் ஒரு செய்தி பல நாடுகளில் ஒரே சமயத்தில் பரவி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும், இந்திய திருநாட்டை உலக ஆன்மீக பக்தர்கள் வியப்புடன் பார்க்கும்படி இச்சம்பவம் நடந்தேறிட உள்ளதாக 9-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு புதிய செய்தியை பதிவு செய்கிறது. இச்சம்பவத்தால் உலகம் இந்தியாவை ஒரு புண்ணிய பூமியாக பார்க்கும்படி அமைய உள்ளதாக 9-ம் தீர்க்க தரிசனம் தனது கருத்தை இங்கு ஆழமாக பதிவு செய்கிறது.


கிறிஸ்துவர்கள் எதிர்நோக்கும் அந்த புனிதரின் வருகையை குறித்து சென்னையில் உள்ள ஒரு பெண்கள் கிறிஸ்துவ சபை தனது அறிக்கையை ஒரு தனியார் தொலைக்காட்சியில் தற்போது பதிவு செய்ய உள்ளதாகவும், அச்சபை வெளியிடும் செய்திக்குறிப்பில் இதுவரை யாருமே எதிர்பாராத ஒரு “இந்து அமைப்பை“ பற்றிய செய்தியை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும், இச்செய்தி விரைந்து உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தும் என்று 9-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


நாளைய வரலாறு துவங்கி விட்டது என்றும், இது கலிகாலம் நீங்கி சத்தியயுகம் அவதரிக்கும் காலம் என்றும், நீதிமான்கள் வாழும் தேசமாக நமது இந்திய தேசம் வீற்றிருக்கும் இச்சமயத்தில் “வான்மண்டல போர்“ ஒன்று தற்போது வருகிறது என்றும், இதனால் வான்மண்டல வீதியில் பல சம்பவங்கள் நடந்தேறிடும் என்றும், இதனை விஞ்ஞானிகள் கண்டு அச்சப்படுவதோடு மட்டுமின்றி மிகுந்த ஆச்சர்யத்திற்குள் ஆழ்வார்கள் என்று 9-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை பதிவு செய்கிறது.



கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமியிலிருந்து ஒரு மகா பூமி திரட்டு கடலிருந்து கண்டெடுப்பார்கள் என்றும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அடுத்த அவதாரமான “கல்கி“ அவதாரத்தைப் பற்றிய ஒரு மகா குறிப்பு அந்த பூமி திரட்டில் இடம் பெற்றுள்ளதை இந்த உலகமே காணும் அதிசிய நிகழ்வு ஒன்று நடக்க உள்ளதாகவும், இச்சமயத்தில் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது வருங்கால தீர்க்க தரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 42-வது தீர்க்க தரிசனத்தில் குறிப்பிட்ட ஒரு முக்கிய சம்பவம் உறுதியாக நடைபெறும் என்று 9-ம் தீர்க்க தரிசனம் இங்கு தமது கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது.


உண்மைகள் உறங்குவதில்லை அது சக்கரம் போல் சுழலக்கூடியது என்றும், அதன் சுழற்சியை இந்த உலகம் விரைவில் காண உள்ளதாக இந்த 9-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது. அதுவரை நாம் காத்திருப்போம்.

குறிப்பு :  இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

பாஜக காரனுங்க கருப்பு பணத்தை கொண்டு வருவானுங்க என்று நம்புறவன் ஒரு அடி முட்டாளா தான் இருப்பான்...


நோய் எப்படி வருகிறது இப்படி உன் உணவு முறையை மாற்றி கெமிக்கல் விஷத்தை உட்செலுத்துகிறான் கார்பரேட் நாய்கள்...


இறுதி எச்சரிக்கை… உலகம் அழியப்போகிறது – அலூனா சொல்லும் செய்தி...


இது இறுதி எச்சரிக்கை… எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவி சாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல் கலந்து, நீர் நிறைந்து வரக் கூடிய பேரழிவைக் கண்களால் காணப் போகிறீர்கள்…

18,000 அடி உயர மலை உச்சியில் உட்கார்ந்து அவர் சொல்லுவதை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் மொழி பெயர்ப்பாளர்.

அவர் கண்களில் அத்தனை பயம். சொன்னவர், அமைதியாக எழுந்து அங்கு பச்சை பசுமை, காய்ந்த மஞ்சளாக மாறிக் கிடக்கும் செடிகளை தடவியபடி நடக்கிறார்.

ஸ்பெயின் நாட்டின் கடற்கரையொட்டி இருக்கும் சியரா நிவேடா (SIERRA NEVADA) பகுதியின் டே சேந்த மார்டா ( de SANTA MARTA) மலைப் பகுதி. பல ஆயிரம் வருடங்களாக இங்கு வசித்து வரும் பூர்வகுடிகளான “கோகி” (KOGI) மனித சமுதாயத்துக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறார்கள்.

எந்த ஆராய்ச்சியாளர்களும் இதுவரை ஆராய்ச்சி செய்திடாத ஓர் இனம் கோகி. அவர்களை அத்தனை எளிதாக நெருங்விட முடியாது.

அப்படியானவர்கள், 1990-ம் ஆண்டு, பிபிசி நிறுவனத்தின் ஆவணப்பட இயக்குநர், ஆலன் எரெரா ( ALAN ERERA ) என்பவரை அழைக்கிறார்கள். தங்களின் இளைய சகோதரர்களான பிற மனிதர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள். அந்த செய்தி…

இளைய சகோதரர்களுக்குப் புரியவில்லை. தாய் பூமியை அதிகளவில் காயப்படுத்தி வருகின்றனர். அவளின் இதயம் காயப்படுகிறது. மண்ணைத் தோண்டுவதை, மரங்கள் வெட்டுவதை, கடலை அசுத்தப்படுத்துவதை, இயற்கையை அழித்து நீங்கள் ஏற்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்துங்கள். இல்லையென்றால் சூரியன் கோபம் கொள்வான்… வெப்பத்தை கக்குவான். பனிமலைகள் உருகும். நிலங்கள் சரியும். தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்படும். இன்னும், இன்னும் அழிவுகளை இந்த உலகம் சந்திக்கும். ஆகவே, தயவு செய்து நிறுத்திவிடுங்கள்…

உலகின் இதயத்திலிருந்து… (FROM THE HEART OF THE WORLD) என்ற அந்த ஆவணப்படத்தில் அவர்கள் சொன்ன பல விஷயங்கள் நாம் கடந்து வந்த ஆண்டுகளில் நடந்தேறியுள்ளன. பல ஆண்டுகள் கழித்து ஆலனுக்கு அவர்களிடமிருந்து மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. அது “அலுனா” (ALUNA) என்ற ஆவணப்படத்துக்கு வித்திட்டது. அது மனித சமுதாயத்தின் இறுதி எச்சரிக்கைக்கானது.

அது மிக மிக மிக நீண்ட வருடங்களுக்கு முன்பு… அப்போது பூமியில் ஏதுமில்லை. ஏன், சூரிய, சந்திரன் கூட இல்லை. பூமி, முழுக்க முழுக்க நீரால் நிரம்பியிருந்தது. நீருக்கு சில உணர்வுகள், எண்ணங்கள் இருந்தன. எண்ணங்கள் இன்றி, வாழ்வில்லை என்று நம்புகிறார்கள் கோகிகள்.

அப்படியான எண்ணங்களோடு அவர்கள் உரையாடுகிறார்கள். தேங்கி நிற்கும் நீரின் எண்ணங்களோடு அவர்கள் உரையாடும்போது, நீர் சலசலக்கிறது. இதை “மாமோ”க்கள் எனும் குருமார்கள் செய்கிறார்கள்.

ஒரு “கோகி”, “மாமோ”வாக மாற வேண்டுமென்றால் 18 ஆண்டுகள் அவர் வெளிச்சத்தைப் பார்க்காமல் இருக்க வேண்டும். எல்லாவற்றுடனும் எண்ணங்களோடு மட்டுமே உரையாட பழக வேண்டும். இந்த எண்ணங்களைத்தான் அவர்கள் தெய்வமாக கருதுகிறார்கள். அது தான் “அலுனா”…

இவர்களின் இந்தக் கூற்றுகள் வெற்று பிதற்றல்கள் கிடையாது. இவர்கள் வசித்து வரும் சாந்தே மார்டா மலைப்பகுதியை அறிவியல் ரீதியாக “பூமியின் பிம்பம்” என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

பனிமலை, பசுமை மாறாக் காடுகள், பாலைவனம் என பலதரப்பட்ட நில அமைப்புகளும் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு ஏற்படும் மாற்றங்கள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்கள். தென் அமெரிக்க கடற்கரையை ஒட்டி இருக்கும் ஆண்டஸ் (ANDES ) மலைத் தொடரின் ஒரு பகுதி தான் சாந்தே மார்டா. ஆனால், அது மட்டும் தனியான டெக்டோனிக் அடுக்குகளைக் ( TECTONIC PLATES) கொண்டுள்ளது பெரும் ஆச்சர்யம்.

வழக்கமாக பூர்வகுடிகளிடம் காணப்படும் கோபம் இவர்களிடம் அதிகமில்லை. இன்றும் கூட பிற மனிதர்களை சகோதர்களாகத் தான் கருதுகிறார்கள். தங்களின் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் சில திட்டங்களை மிக மென்மையான முறையிலேயே இவர்கள் எதிர்த்தனர். பிபிசியின் முதல் ஆவணப்படம் வெளியானதும், ஸ்பெயின் நாட்டு மன்னர் இவர்களை நேரடியாகச் சென்று சந்தித்தார்.

அது முதல், ஸ்பெயின் நாட்டில் பதவியேற்கும் எந்த பிரதமரும் இவர்களை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கோகிக்களின் மூதாதைய இனம் “டைரோனா” ( TAYRONA ) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மலையடிவாரத்தில் ஒரு நகரத்தையே அமைத்து இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு விலையுயர்ந்த தங்கம் உட்பட பல புதையல்கள் மண்ணில் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அவர்களின் விலைமதிப்பற்ற வரலாற்று சுவடுகளும் அங்கிருக்கின்றன. அதை ஆராய முற்பட்ட ஸ்பெயின் அரசை இவர்கள் எதிர்த்தனர். இருந்தும் அரசாங்க ஆதரவோடு சில கொள்ளைக்கார கும்பல் புதையல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தங்கள் வரலாறுகளைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர் கோகிகள்.

தங்களின் வரலாற்றைக் காக்க போராடும், சில ஆயிரங்களைக் கொண்ட ஓர் இனம்… தங்கள் வரலாற்றைத் தொலைத்து நிற்கும் ஒரு தேசிய இனம்… கீழடியில் நடக்கும் “வரலாற்றுத் தொலைப்பு” நிகழ்வை இதோடு பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நாங்கள் இந்த இயற்கையின் விதைகள்… சகோதரர்களே உங்கள் பேராசையின் பொருட்டு, நீங்கள் வாழும் இந்த பூமியை, நீங்களே அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு பேரழிவுக்குத் தயாராகுங்கள்… என்று தீர்க்கமான பார்வையோடு சொல்கிறார் , 102 வயதான கோகி “மாமோ”..

மீண்டும் கண்களை மூடி தண்ணீரோடு உரையாடத் தொடங்குறார். இந்த முறை அதில் அதிகமான அதிர்வலைகள் ஏற்பட்டன… அது அலுனா...

8 ஆண்டில் இல்லாத அளவு சரிவு ஜிஎஸ்டி, சட்ட கெடுபிடியால் ஜொலிப்பை இழந்தது தங்கம் : உலக தங்க கவுன்சில் தகவல்..


ஜிஎஸ்டி மற்றும் பண மோசடி தடுப்பு சட்ட கெடுபிடி விதிகளால், இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த 8 ஆண்டில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலக அளவில் தங்கம் நுகர்வில் சீனாவை அடுத்து 2வது இடத்தில் உள்ளது இந்தியா. தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைத்துள்ளதற்கு, இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகமே காரணம். இதை குறைக்க தங்க பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இருப்பினும் மக்கள் ஆபரணம் வாங்குவது குறையவில்லை.

கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்கம் செய்த அன்று ஒரே இரவில் நகைகள் விற்று தீர்ந்தன. அதன்பிறகு படிப்படியாக தேவை குறைய தொடங்கியது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது..

கடந்த ஜூலையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இதன் காரணமாக தங்க விற்பனை பாதிக்கப்பட்டது.

அதாவது முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தை விட தேவை 24 சதவீதம் சரிந்து 145.9 டன்களாக மட்டுமே இருந்தது.

இதுபோல் பண மோசடி தடுப்பு சட்ட விதிகளின்படி வாடிக்கையாளர் பான் உள்ளிட்ட சான்றுகளை சமர்ப்பிப்பதும் கட்டாயமானது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்த்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் சராசரி தேவை இந்தியாவில் 845 டன். இது கடந்த 2016ம் ஆண்டில் 666.1 டன்களாக இருந்தது. தேவை சரிந்து வருவதால் நடப்பு ஆண்டில் இந்த தேவை இன்னும் குறைந்து 650 டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் தீபாவளி பண்டிகையுடன், திருமண சீசன் துவங்கியுள்ளதால் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என்றார்...

ரஷ்யா அதிரடி... உலகமே அழிந்து விட்டாலும், அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் நூல்களில் தமிழ் நூல்...


தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷ்ய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள்.

முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

உலகில் ஆறு மொழிகள் தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமற்கிருதம்.

இந்த ஆறு மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

அதுமட்டும் அல்லாது அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்க அறையில் வைத்து திருக்குறளை பாதுகாத்து வருகிறது...

குடல் புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்...


சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்....

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.

வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்...

நான் காந்தியின் பேரண் இல்லை தான்.. அதே நேரத்தில் நான் காந்தியை கொன்ற கோட்சேவின் வழித் தோன்றலும் கிடையாது - தினகரன் பேட்டி...


புயல் வருகிறது.. தென் மாநிலங்களில் வெள்ள அபாயம்.. பிபிசி வானிலை எச்சரிக்கை...


சென்னையில் கனமழை வெளுக்குமாம்... வானிலை மையம். வார்னிங்...

சென்னை: வெள்ளம் ஏற்படுத்தும் வகையில் தென் இந்தியாவில் மழை பெய்யும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி.

அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.

ஒரே நாளில் தாம்பரத்தில் 50 செ.மீ மழை பதிவாகி எச்சரிக்கையை ஊர்ஜிதப்படுத்தியது.

சென்னை பெருவெள்ளம் : பெரும் சேதம் பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது.

இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

அதேபோல கடந்த சில நாட்கள் முன்பாக, பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் ஒரு தகவலை வெளியிட்டது.

அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல பெரும் மழை, சென்னை உட்பட தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பெய்தது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி வெள்ளம் ஏற்படும் அளவுக்கு தென் இந்தியாவிலும், கிழக்கு இந்தியாவிலும் அதிக மழை கொட்ட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...