22/07/2018

டெஸ்லாவின் வேற்றுகிரகவாசி தொடர்பு...


19-ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதியிலும், 20-ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும்
நிகோலா டெஸ்லா நிகழ்த்திய
கண்டுபிடிப்புகளும், அவரின்
படைப்பாற்றலும், யோசனைகளும் மிகவும் அசாத்தியமானவைகளாய்
இருந்தன. மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் நிக்கோலா டெஸ்லா செய்த புரட்சிகரமான பங்களிப்பை இன்றுவரை உலகம் போற்றிக் கொண்டே தான் இருக்கிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு புதுமையான மனிதராக டெஸ்லா திகழ்ந்தாரோ அவ்வளவக்கு அவ்வளவு மர்மங்களையும் தன்னுளகொண்டு
வாழ்ந்தார் என்பதும் நிதர்சனமே..

டெஸ்லா - இந்த நாகரீகத்தின் மிக அற்புதமான கண்டுபிடிப்பாளராய்
திகழ்ந்தார் அதற்கு காரணம்
அவரின் தற்காலம்-எதிர்காலம்
ஆகியவைகளையும் தாண்டிய
சிந்தனைகளும், ஆராய்ச்சிகளும் தான். வருங்காலம் தாண்டிய நிகோலா டெஸ்லாவின் எண்ணங்கள் அவருக்கு சாத்தியம்தானா..? அல்லது அவர் செய்தவை யாவும், உண்மையில் பூமி கிரகம் இன்றி வேறு கிரகத்தில் வாழும் மிக முன்னேறிய ஜீவராசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளா என்ற குழப்பமும் சந்தேகமும் உள்ளன.

அதற்கு மிகவும் பலமான ஒரு ஆதாரம் தான் அவர் உருவாக்கிய மிகவும் மர்மமான கண்டுபிடிப்பான  (Flying Saucer) இன்னும் தெளிவாக சொன்னால் அடையாளம் காணப்படும் பறக்கும் தட்டு (IFO -‘Identified' flying object). நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு ,
இருபதாம் நூற்றாண்டின் முதல்
பத்தாண்டுகளில் டெஸ்லா ஒரு
விசித்திரமான விமான காப்புரிமையை விண்ணப்பித்தார், அது "மனிதனால் உருவாக்கப்படும் உலகத்தின் முதல் பறக்கும் தட்டு..


மிகவும் சுவாரசியமான முறையில் பறக்கும் தட்டுகளை நேரில் கண்ட சாட்சிகளின் கருத்தின்கீழ் இந்த டெஸ்லாவின் ப்ளையிங் சாசர் டிசைன் உருவானது. அந்த வடிவமைப்பில், பறக்கும்தட்டின் உந்துதல் வழங்க மற்றும் பறக்க போதுமான அளவு மின்தேக்கி,
பின்பு பறக்கும் தட்டின் திசையை கட்டுப்படுத்த சிறிய மின்தேக்கிகள், உடன் கைரோஸ்கோப்
உறுதிப்படுத்துதல் அமைப்பு
மற்றும் மின்சார இயக்கி கட்டுப்பாடு ஆகியவைகளும் அடக்கம்.

உட்புறம் மிகபெரிய பிளாட் திரைகள் மற்றும் விமானிகள் காண முடியாத திசைகளான ப்ளைண்ட் ஸ்பாட்ஸ்களுக்காக வெளிப்புற வீடியோ கேமராக்கள் என அந்த ப்ளையிங் சாசர் வடிவமைப்பு கிட்டத்தட்ட அதிநவீன வருங்கால விமானத்தின் ஒரு முன் மாதிரியாக இருந்தது என்றே கூறலாம். டெஸ்லாவின் பறக்கும் தட்டிற்கு கண்கள் உண்டு என்றே கூறலாம்.

ஏனெனில் அதில், மின் ஆப்டிகல் லென்ஸ்கள் அதன் கால்பகுதிகளில்
பொருத்தப்பட்டு இருந்தன ஆகையால் விமானிகளால் உள்ளிருந்தபடி எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

டெஸ்லாவின் இந்த அதிநவீன
வடிவமைப்பிற்கு வேற்று
கிரகவாசிகளின் உதவி கிடைக்கப் பெற்றது என்ற சதியாலோசனை கோட்பாடுகளும் உண்டு. 1899-ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவில், நிக்கோலா டெஸ்லா நிகழ்த்திய மிக மர்மமான வயர்லெஸ் ஆற்றல் ஒலிபரப்பு சோதனை  பற்றி பார்ப்போம்.

1899-ஆம் ஆண்டின் ஒரு நாள்
இரவில் என்ன நடந்தது என்பதை பற்றி 1923-ஆம் ஆண்டு ஒரு நிருபரிடம் டெஸ்லா கூற நேர்ந்தது "நான் கொலராடோவில், செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை இருப்பை உணர்த்தும் அசாதாரணமான ஆதாரங்கள் சார்ந்த ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னிடம் மிகவும் உணர்ச்சிமிக்க வயர்லெஸ் ரிசீவர் இருந்தது"1-2-3-4 என்ற பொருள் விளக்கம் கொண்ட சமிக்ஞைகள் எனக்கு கிடைத்து, அந்த சமிக்ஞையானது செவ்வாய் கிரகவாசிகளிடம் இருந்து வந்தது என்று நான் நம்புகிறேன். ஏனெனில், எண்கள் என்பது உலகளாவிய ஒன்று" என்று டெஸ்லா கூறியுள்ளார்.

இந்த தகவலை அளித்ததின் மூலம் டெஸ்லா அவரின் சகாக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார், சில வருடங்களுக்கு பின்பு டெஸ்லா, ஏலியன் தொடர்பு கொண்டார் என்பதற்கு எதிரான கோட்பாடுகளை
விஞ்ஞானிகள் வகுத்தன.


அதாவது குறிப்பிட்ட நாளில்
ஜுப்பிட்டர் கிரகத்தில் ஏற்பட்ட
புயலின் ரேடியோ அலைகளைத்தான் ஏலியன் தொடர்பு என்று டெஸ்லா தவறாக அர்த்தம் கொண்டுள்ளார் என்கிறது ஒரு கோட்பாடு.

ஆனால், பின்னர் மற்றொரு
கோட்பாடு எழுந்தது. டெஸ்லா
ஏலியன் தொடர்பு கொண்டது நிஜம் தான். அதாவது அவர் பூமி கிரகத்தை மர்மமான முறையில் சுற்றித்திரியும் ஒரு விண்கப்பலில் இருந்து தகவல் பெற்றார் என்கிறது அந்த கோட்பாடு. இந்த விண்கப்பல்  என்பது பூமியை சுற்றித்திரியும் ஒரு பண்டைய அன்னிய கட்டமைப்பு என்று நம்பப்படுகிறது. அதனை தான் டெஸ்லா தொடர்பு கொண்டுள்ளார். என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்...

தமிழீழ கருத்தியல் பாடம்...


உண்மையான தமிழீழ கருத்தியலை விதைக்கும் எங்களுக்கே இத்தனை தடங்கல்கள்..

இதை எப்படி கட்சி, ஆட்சி சார்ந்து இங்கு விதைக்க முடியும்..?


அவ்வளவு எளிதாக அதிகார வர்க்கம் வெகுசன மக்களுக்கான கருத்தியலை விதைக்க விட்டுறுமா..?

அப்படியென்றால் இங்கு தமீழீழத்தை 10 சதவிகிதம் பேசித்தான் எல்லா கட்சிகளும் சுயநல அரசியலை செய்கின்றனர்..


அதை இந்த மக்களில் பலர் நம்புகின்றனர் என்பதுதான் வேதனையாக இருக்கிறது...

காவல் நிலையத்திலேயே சோதனை? போலி பெண் இன்ஸ்பெக்டர் கைது...


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு பெண் போலீஸ் ஒருவர் வந்தார். அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர் தண்டபாணியிடம், ‘நான் சென்னையில் இன்ஸ்பெக்டராக உள்ளேன். ஒரு வழக்கு தொடர்பாக எப்ஐஆர் புத்தகத்தை பார்க்க வேண்டும். வழக்கு புத்தகத்தை கொடுங்கள்’ என கேட்டுள்ளார். ஆனால் பெண் இன்ஸ்பெக்டர் அணிந்திருந்த சீருடையில் பெயர் பேட்ஜ் இல்லை. கால்களில் ஷூ அணியவில்லை. மேலும் அவரது பேச்சில், போலீஸ்காரர் தண்டபாணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர், ‘சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் காத்திருங்கள்’ என்றார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் காவல்நிலையம் வந்து விசாரித்தார். அப்போது அந்த பெண் இன்ஸ்பெக்டர் முன்னுக்குபின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.
அதில் அந்த பெண், தண்டராம்பட்டு அருகே உள்ள சின்னியம்பேட்டை கிராமத்தை சேர்ந்த கங்கா(24) என்பதும், இன்ஸ்பெக்டர் என கூறி நடித்ததும் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீஸ் விசாரணையில் கங்கா கூறியிருப்பதாவது: எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என சிறு வயதில் இருந்தே ஆசை. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காவல்துறை பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துதேர்வில் வெற்றி பெற்று, உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால் 2 மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தேன். இதனால் காவல் துறையில் சேர முடியாமல் போனது. இது எனது உறவினர்கள் மற்றும் தோழிகளுக்கு தெரிய வந்தால் அவமானம் எனக்கருதினேன். இதனால் ஆரணியில் உள்ள காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்துவிட்டதாக அனைவரிடமும் கூறினேன். தினமும் வீட்டில் இருந்து போலீஸ் உடையணிந்து ெவளியே செல்வேன்.

பணம் தேவைப்படும்போது தனியாக ெசல்லும் ஒரு சில வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை நடத்துவதுபோல், பணம் பெற்றுக்கொள்வேன். அதேபோல் பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வேன். அதேபோல் இன்றும் (நேற்று) திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டிற்கு தனியார் பஸ்சில் டிக்கெட் எடுக்காமல் வந்தேன்.
பஸ்சில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க காவல்நிலையம் முன்பாக பஸ்சை நிறுத்தி இறங்கினேன். பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று வழக்கு பதிவு புத்தகத்தை பார்ப்பதுபோல் நடித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கங்காவை கைது செய்தனர்...

ஜெசோதாபென் என்ற ஏழை ஸ்கூல் டீச்சரின் கணவர் மட்டும் கோடீஸ்வரர் என்றால் அந்த பெண்ணின் கணவர் சரியில்லை என்று அர்த்தம்...


ஆம் மிஸ்டர் மோடி. நீங்கள் உங்களை பெற்ற தாய்க்கும், கட்டின மனைவிக்குமே உண்மையாக இல்லாதபோது இந்த நாட்டுக்கு மட்டும் எப்படி உண்மையாக இருக்கப் போகிறீர்கள்?

பாஜக நிர்மலா சீத்தாராமன்...


HAL எனும் அரசு நிறுவனத்திற்கு வரவேண்டிய  விமான காண்ட்ராக்டை அம்பானிக்கு ரஃபேல் நிறுவனம் மூலமாக தாரை வார்த்த நிர்மலா சீதாராமனைப் பற்றிய கேள்வி வந்ததும், நம்மூர் தொலைக்காட்சியில் எப்படி பாஜக கும்பல் கத்தி- கதறி பேச்சை திசை திருப்புவார்களோ அதே போல பாராளுமன்றத்திலும் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது...

இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்த்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டட் எனும் அரசு நிறுவனத்திற்கான பணியை, அதுவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பணியை தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறது பாஜக. மேலும் இந்த அம்பானி இதுவரை விமான தயாரிப்பிற்கு தேவைப்படும் ஆணியைக் கூட இதுவரை தயாரித்த அனுபவமில்லாதவருக்கு எதற்காக இந்த காண்ட்ராக்ட் வழங்கப்பட வேண்டும்?... 

அனைத்து மிகப்பெரிய காண்ட்ராக்ட்டுகளும் குஜராத்தி மார்வாடிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுவது தான் ’பாரத் மாதா கீ ஜே’ எனும் தேச பக்தியா?.. 

அரசு நிறுவனத்திற்கு செல்லவேண்டிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த, ராணுவ ரகசியம் நிறைந்த தொழிற்நுட்பத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது தான் பாஜகவின் தேசபக்தியா?

இந்திய அரசு நிறுவனங்களை மூடி, தனியாருக்கும், வெளிநாட்டு நிறுவனத்திற்கும் முதலீடுகளை அள்ளி வீசுவது தான் தேசபக்தியா?

அம்பானிக்கு எங்கள் சொத்துக்களை தாரை வார்ப்பதை எதிர்த்தால் நாங்கள் சமூகவிரோதிகளா?...

தேசத்தின் ரகசியங்களை நீங்கள் சமரசம் செய்வதை அம்பலப்படுத்தினால் நாங்கள் தேச விரோதிகளா?

வணிகத்தை அதிகரிப்பதற்காகவும், மார்வாடிகளுக்கு மூலதனத்தை அதிகரிக்கவும்  அழைக்காமலே சீனாவிற்கு  சென்று   சமரசம் செய்த மோடியா தேச பக்தர்...  இதை கேள்வி கேட்கும் நாங்களா  சீன உளவாளிகள்...

டோக்லாம் எனும் எல்லைப் பிரதேசத்தில் சீனாவின் ராணுவம் நகர்த்தப்பட்ட போது, ஏதோ சண்டைக்கு போவது போல வீரவசனம் பேசிவிட்டு சீன அதிபரிடம் சமரசம் பேசியதை உலகம் பார்த்துக்கொண்டு தானே இருந்தது  சங்கிகளே?..

இங்கே போராடுபவர்கள் சீனாவிடம் காசு வாங்கிக்கொண்டு தேசத்தை காட்டிக் கொடுப்பதாக புலம்பும் போலி தேசபக்தர்களே, சீனா
இலங்கையின் ஹம்பந்தோட்டையில் துறைமுகம் கட்டுவதற்கு அனுமதித்த யோக்கியவானகள் நீங்கள் தானே?...  அமெரிக்கா  திருகோணமலையில் படை நிறுத்த இலங்கை அனுமதி தர சொன்ன யோக்கியவான்களும் நீங்கள் தானே?... 

இந்த தேசத்தை வெளிநாட்டுக்கு காட்டிக் கொடுக்கும் கும்பல்  ’தேசபக்தி ’ என்று புலம்பிக்கொண்டு திரிகிறது...

தமிழீழ கருத்தியல் பாடம்...


சித்தர்களின் பிரபஞ்சப் பயணம்...


அகத்தியர் நட்சத்திம்...

கானோபஸ் எனப்படும் அகத்தியர் நட்சத்திரம் குருமுனி, கும்பமுனி என
அழைக்கப்படும் ஆசான் அகத்தியரின் பெருமை மிகவும் உயர்ந்தது. அளவிடமுடியாதது.

அகத்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது.

கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று.

இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது.. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது.

இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன.

ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.

எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர
முடியவில்லை.

இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.

27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் விண்வெளியில் பிடித்தவர் அகத்தியர்.

கடல் நீரைக் குடித்த கதை அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக
விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும்.

சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம்..சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது.

சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது.

இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று. மீண்டும் நம் கண்ணுக்கு முதலில்
தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.

அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம்
23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன்
ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர் சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.

அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது. ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன்
தோன்றும் அகத்தியர் மழை நீர்
சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது.

வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் - செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா
நடைபெறுகிறது.

நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது.

எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்..

விண்வெளி பயணம் மூலம் அகத்தியர் பூமியை சமன் செய்ததை பார்ப்போம்.

வானவியலோடு புராணத்தை
இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகத்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகத்தியர் என
அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது.

பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில்.விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28.நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகிவிட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது
செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது.

‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள்.

பூமி என்னும் மலையை இரு
துருவங்களிலும் அமுக்கியவரே
அகஸ்தியர் என்பதை புராணம்
விரிவாக தன் பாணியில் பாமர
மக்களும் எளிதில் புரிந்து
கொள்ளுமாறு விளக்குகிறது.

பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவர்.

வான்வெளியில் பயணம் செய்து மனித குலத்திற்க்கு நன்மை செய்தவர்.

கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான..

“தூய கடல் நீரை உண்டு அது
துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம்.

அகத்தியனை இத்தோடு மட்டும்
கம்பன் புகழவில்லை:

தமிழ் தந்த முனிவரான அவரை
“நிழல்பொலி கணிச்சி மணி
நெற்றி உமிழ் செங்கண் தழல்
புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்
தந்தான்” எனவும் புகழ்கிறான்...

சித்தர்களின் பிரபஞ்ச பயணம்...


விசுவாமித்திரர் உலக நண்பர்...

முதலில் விண்வெளி பயணத்திற்கான யோகநிலை விளக்கம்...

தற்காலிக இறப்பு நிலை அல்லது மூச்சை அடக்கி தற்காலிகமாக உடலை இறப்பு நிலைக்குக் கொண்டு செல்லுதல் என்பது நம் நாட்டில் நீண்ட காலமாக சித்தர்களும், யோகிகளும் கடைப்பிடித்து வரும் ஒரு யோக முறை.

இந்தத் தற்காலிகமாக மூச்சை
நிறுத்துதல், உடல் இயக்கத்தை
மிகவும் குறைவான நிலைக்குக்
கொண்டு செல்லுதல் பல
நூற்றாண்டுகளாக
அறியப்பட்டிருந்தாலும் நவீன
அறிவியலால் இன்னும் விளக்கப்படாத ஒரு விசயமாகவே இருக்கிறது.

இந்தக் கலையானது உலகம் முழுதும் யோகிகளால் செய்யப்படும் ஒரு செயல் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நிலையில் நாம் பார்க்கும்போது ஒருவருடைய இதயத்துடிப்பு, சுவாசித்தல் ஆகியவை தற்காலிகமாக சில நிமிடங்களிலிருந்து சிலமணி நேரங்கள்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

1987ல் Colonel Townshend கர்னல்
டவுன்ஷெண்ட் என்பவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மருத்துவர்களின் முன்னிலயில் அரைமணி நேரம்
மூச்சையும், இதயத்துடிப்பையும் நிறுத்தி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மேல் சொன்ன கதை ஒன்றும்
பிரமாதமில்லை. 1838ல் இந்திய யோகி ஒருவர் கல்கத்தாவிலுள்ள
கிராமங்களில் நீண்ட சவ நிலைக்குச் சென்று பின் உயிர் திரும்பும் அதிசயத்தைச் செய்து காண்பித்துப்
பிரபலமடைந்திருந்தார்.

இதனை அப்போதிருந்த ஐரோப்பிய அதிகாரி கேப்டன் வாட் முன்னிலையில் செய்துகாட்டச் சொன்னார்கள்.
மகாராஜா ரஞ்சித்சிங், கேப்டன். வாட் முன்னிலையில் அந்த யோகியின் உடலில் உள்ள துவாரங்கள் அனைத்தும் காற்றுப் புகாவண்ணம் மெழுகால் அடைக்கப்பட்டன! முழு நிர்வாணமாக ஒரு கோணிப்பையில் அவரை அடைத்து ராஜ முத்திரையிடப்பட்டு மரப்பெட்டியில் அந்தக் கோணிப்பையை வைத்துப்
பூட்டி சீல் வைத்தனர்.

இந்தப் பெட்டியை காவல் அறையில் வைத்து 24 மணிநேரமும் காவல்வீரர்கள் காவல் காத்தனர். இதற்கு நடுவில் அடிக்கடி பெட்டியைத் திறந்து உடல் உள்ளே இருக்கிறதா? என்று
பார்வையிட்டார் மகாராஜா.

நம்புங்கள்.. பத்து மாதங்கள் கழித்து அத்துறவியைப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்தனர். சிறிது வெண்ணீர் அவர் உடலில் ஊற்றப்பட்டது. துறவி கண் திறந்தார். எல்லோருடனும் சகஜமாகப்பேச ஆரம்பித்தார். மூவாச்சமாதி என்று இதனை நமது சமய இலக்கியங்கள் கூறுகின்றன.

நமது சித்தர்கள் மூச்சடக்கி பன்னெடுங்காலம் உயிருடன் கடவுளை தியானித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

மூச்சடக்கி மெய்ம்மறந்து
மூவாச் சமாதிருந்தும்
ஏச்சடக்கார்க் கீசனருளில்.
மூவா = அழியாத, மூச்சடக்கி
பன்னெடுங்காலம் அழியாது
உட்புதைந்து கிடத்தல் மூவாச்
சமாதியாக இங்கு
குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது செயற்கையாக
சமாதி நிலையை
ஏற்படுத்தமுடியுமா என்று
ஆராய்கிறார்கள்.

துருவத்தில் வாழும் வெண்கரடி பனிக்காலத்தைத் தூங்கியே கழிக்கும். அப்போது அது உண்ணாது; நீரருந்தாது;
அதன் இதயத்துடிப்பு குறைந்துவிடும். இதை Hibernation என்று சொல்வார்கள். இந்த நிலையில் இருக்கும் வித்தையை துருவக்கரடி மட்டுமல்லாது நிறைய
உயிரினங்கள் கற்று வைத்துள்ளன.


நாமும் மருந்துகளைச் செலுத்தி, அல்லது BioFeedback முறைகள் மூலம், அல்லது யோகசித்திப் பயிற்சிகளின் மூலம் இந்த நிலைகளைத் தோற்றுவிக்க முடியுமா என்று முயற்சிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றால்..

1.மனிதனின் ஆயுளை
நீட்டிக்கலாம்.

2.மனிதனை இந்நிலைக்குக் கொண்டு சென்று விண்கலங்களில் ஏற்றி நீண்டதூர காலக்ஸிகளில் உள்ள கிரகங்களில் இறக்கி, உயிர்ப்பித்து மீண்டும் சமாதி நிலையில் ஒரு 10 வருடம் விண்பயணம் செய்து பூமியை அடையலாம்.

இந்த வித்தையை மனிதன்
கற்றுவிட்டால் மனிதன் காலத்தை வென்றுவிடலாம்.

திரிசங்கு விண்வெளிபயணம்...

திரிசங்கு சுவர்க்கம்  பூமியினின்றும் 3,46,500 கி.மீ.

உயரத்தில் பூமியின் கவர்ச்சி ஆற்றலும் இராது; சந்திரனின் கவர்ச்சி ஆற்றலும் இராது.

இப்பகுதியைத் 'திரிசங்கு கவர்க்கம்' என்று சொல்லலாம்.

பெரும் புகழுடன் அரசு புரிந்த திரிசங்கு என்ற அரசன் மனித உடலுடன் சுவர்க்கம் போக ஆசைப்பட்டான்.

தன்குல குருவாகிய வசிட்டரிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவர்
யோசனையைக் கைவிடுமாறு
திரிசங்குக்குப் புத்திமதி கூறினார். பிறகு வசிட்டரின் குமார்களிடம் தன் விருப்பத்தைச் சொல்ல அவர்கள் குருவை அவமதித்த குற்றத்திற்காகச்
சண்டாளனுகுமாறு சபித்தனர்.

சண்டாள உருவத்துடன் திரிசங்கு விசுவாமித்திரரிடம் சென்று நடந்ததை விவரமாகச் சொல்லித் தன்னைக்
காப்பாற்றுமாறு வேண்டினான்.

விசுவாமித்திரருக்கு அவ்வரசன்மீது அநுதாபம் பொங்கி வந்தது. உடனே யாகம் ஒன்று செய்து திரிசங்குவை
சண்டாள உருவத்துடன் சுவர்க்கத்துக்கு அனுப்பினர்.

விசுவாமித்திரருடைய தவ வலிமையை அப்போது உலகம் கண்டது. இந்திரன்
சினங்கொண்டு திரிசங்குவைக் கீழே தள்ளினான்.

சுவர்க்கத்திலிருந்து திரிசங்கு கதறிக் கொண்டு தலைகீழாக விழுந்தான். விசுவாமித்திரர் நில்! நில்!” என்று சொல்லிக் கோபாவேசத்துடன் நான்முகன்போல் பிரகாசித்தார்.

உடனே திரிசங்குவும் நடுவானில் ஒரு விண்மீனாகப் பிரகாசித்துக் கொண்டு
அப்புடியே நின்றுவிட்டான்.

இந்த இடத்தையே பூமியின் கவர்ச்சி ஆற்றலும் சந்திரனின் கவர்ச்சி ஆற்றலும் இல்லாத பகுதியாக ஒப்புக் கூறினாலுமே இப்பகுதி கணிதப்படி கணக்கிடப்பெற்ற இடமாகும்.

விஸ்வாமித்திரர் ஏதோ உணர்ச்சி
வேகத்தில் தவத்தில் இறங்கி விட்டதாகத் தான் வசிஷ்டரும் எண்ணினார். ஆனால்,
விஸ்வாமித்திரர் சாதித்துக் காட்டிவிட்டார்.

நெடிய அவரது தவமும், திரிசங்கு சொர்க்கத்தை அவர் நிறுவியதும் அவரை பிரம்மரிஷியாக ஆக்கி விட்டது...

சித்தர்களின் பிரபஞ்ச பயணம்...


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்.

நபி நாயகம் அவர்களும் ஒருவகையில் சித்தர் தான்,

நமது இஸ்லாமிய சகோதரர்களுக்கு
சிவன் என்பவர் ஒரு நபியே.

ஒவ்வொரு காலத்திற்க்கும்
ஒவ்வொரு சமூகத்திற்கும்
பரம்பொருள் தான் படைத்த மக்களை வழிநடத்த ஒரு தூதரை அனுப்புவார்கள். அவர்களின் மீதான அதீத அன்பின் விளைவாய் அவர்களை கடவுளாக ஏற்றுக்கொள்ளவோம் அவ்வளவுதான்....

சரி நபி நாயகத்தின் விண்வெளி பயணத்தை பார்ப்போம்.

ஒரு இரவில், மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து, ஜெருஸலமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் ( 17:1 ) அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மேலும் விளக்கமாக பைத்துல் முகத்தஸில் இருந்து விண்ணுலகத்துக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒவ்வொரு வானத்தையும் கடந்து இறைவனின் ஏராளமான அத்தாட்சிகளைப் பார்த்ததாகவும், அல்லாஹ்வை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ்விடம் உரையாடியதாகவும், அப்போதுதான் ஐந்து வேளைத் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியதாகவும் விளக்கியுள்ளனர்.

இது குறித்து முழுமையாக அறிய புகாரீ 349, 3887 ஆகிய ஹதீஸ்களைப் பார்க்கலாம்.

ஒரு இரவில் ஏழு வானங்களையும் கடந்து சென்று விட்டு பல்வேறு அத்தாட்சிகளையும் பார்த்து விட்டு திரும்ப இயலுமா?

அப்படியானால் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்திருக்க முடியும்?

அவ்வளவு வேகத்தில் பயணம் செய்வதை மனிதனின் உடல் தாங்குமா?

என்பன போன்ற கேள்விகள் இதில் எழுப்பப்படலாம்.

இதில் எதுவுமே மனிதர்களுக்குச் சாத்தியமாகாது என்பது உண்மை தான். இப்பயணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக மேற்கொண்டார்கள் என்றால் நிச்சயமாக இது சாத்தியமில்லை தான். இப்பயணம் படைத்த இறைவனால் நிகழ்த்தப்பட்டதாகும். எதை நாடுகிறானோ அதைச் செய்ய வல்லவன் தான் இறைவன். இதுதான் இயலும். இந்த அளவுக்குத்தான் இயலும். இவை இயலாது என்ற நிலையில் இருப்பவன் இறைவனாக இருக்க முடியாது.

விண்வெளிப் பயணம் பற்றி பேசும் இவ்வசனத்தில் தனது தூதர் முஹம்மது நபியை ஒரு இரவில் அழைத்துச் சென்றவன் பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட தூயவன் என்று கூறப்படுகிறது.

தனக்கு எல்லாம் இயலும் என்பதைச் சொல்வதற்காகவே இதைப்பற்றி அல்லாஹ் பேசுகிறான் என்பதை இந்த வாக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். "இதைச் செய்தவன் இறைவனாகிய நான் தான்" என்று கூறி இந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

இறைவனிடமிருந்து ஒரு விநாடி நேரத்துக்குள் வானவர் ஜிப்ரீல் இறைவனது கட்டளையைக் கொண்டு வருகிறார். அங்கிருந்து இங்கே ஒரு விநாடிக்குள் வானவர் வருவதற்குப் பதிலாக இங்கிருப்பவர் வானுலகம் அழைத்துச் செல்லப்படுகிறார். இரண்டுக்கும் அடிப்படை ஒன்று தான். வானவர் என்பதால் அவர் ஒளிவேகத்திலும், ஒளியை மிஞ்சும் வேகத்திலும் செல்ல முடியும். ஆனால் முஹம்மது நபி வானவர் அல்லவே? அவர் மனிதர் தானே? மனிதனுக்கு இது இயலுமா என்று சந்தேகம் வந்தால் மிஃராஜ் ஹதீஸில் இதற்கான விடை அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வானவர் அழைத்துச் செல்ல வந்தபோது புராக் எனும் வாகனம் கொண்டு வரப்பட்டதாக புகாரீ 3887வது ஹதீஸிலும், இன்னும் பல ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.

அதன் அளவைப் பற்றிக் கூறும்போது குதிரையை விட சற்று சிறியதாகவும், கோவேறுக் கழுதையை விட சற்று பெரிதாகவும் இருந்தது என்றும், அது கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரு அடியை வைக்கும் எனவும் அந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரு குதிரை அளவுக்கு உள்ள வாகனத்தினால் அதிகபட்சம் அரை மீட்டர் அளவுக்குத்தான் அடியெடுத்து வைக்க முடியும். கண்ணுக்கு எட்டிய தூரம் அடி எடுத்து வைக்கும் என்றால் இது காலடியைக் கூறவில்லை. அதன் பறக்கும் சக்தியைத்தான் கூறுகிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு அடியை எடுத்து வைக்கும் என்றால் ஒளிவேகத்தில் பயணம் என்று பொருள்.

மின் ஆற்றல் மூலம் வேகமாகச் செல்லும் வாகனத்தை மனிதனே உருவாக்க முடிகிறது என்றால் அதை மிஞ்சும் சக்தி வாய்ந்த அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை உருவாக்குவது இறைவனுக்கு எளிதானது தான். இது போன்ற வாகனம் இல்லாமலே இறைவனால் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்ல இயலும் என்றாலும் நாம் எளிதாக நம்பி ஏற்றுக் கொள்ளும் ஏற்பாடுகளையும் செய்து இறைவன் அருள் புரிந்துள்ளான்.

புராக் என்ற சொல்லுக்கு மின்னல் என்பது பொருள். இப்பெயரும் ஒளிவேகத்தில் செல்லும் வாகனம் என்பதை உறுதி செய்கிறது.

ஒளி வேகத்தில் பயணம் செய்தால் ஒரு இரவில் விண்ணுலகம் சென்று வருவது சாத்தியமானது தான். அந்த வேகத்தில் செல்லும் வாகனம் மனிதனால் கண்டுபிடிக்கப்படாததால் தான் இது சாத்தியமில்லாததாகத் தெரிகின்றது.
வேகமாகச் செல்லும் வாகனம் என்றாலும் அந்த வேகத்தில் மனிதன் பயணித்தால் இதயம் வெடித்துச் சிதறிவிடுமே என்ற சந்தேகம் அடுத்து வரலாம்.

விண்வெளியில் பயணம் செய்பவனின் இதயம் இறுக்கமடைந்து விடும் என்பது உண்மை. இதைத் திருக்குர்ஆனே தெளிவாகச் சொல்லியும் இருக்கிறது.
(இது குறித்து அறிய 6:125 வது வசனத்தையும் 72வது குறிப்பையும் காண்க!)

இறைவன் நாடினால் இதயம் வெடித்துச் சிதறாத வகையில் அழைத்துச் செல்ல முடியும் என்றாலும் மனிதர்கள் நம்புவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு விண்வெளிப் பயணத்துக்கு அழைத்துச் செல்லும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தைப் பிளந்து சில மாற்றங்களை வானவர்கள் மூலம் அல்லாஹ் செய்தான்.
இது புகாரீ 349, 3207 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

வேகமாகப் பயணம் செல்லும்போது பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பு ஏற்பாடும் இதில் அடங்கி இருக்கலாம். அதாவது விரைவான பயணத்தை மேற்கொள்ளும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாதிக்காத வகையில் அவர்களின் இதயத்தில் உரிய ஏற்படுகளை இறைவன் செய்து விட்டதால் அந்த வேகத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.
அல்லாஹ்வின் வல்லமையைப் புரிந்து அவனை நம்பும் மக்களுக்கு இது சாதாரணமானது தான்.

மலரட்டும் உலக சகோதரத்துவம் , வளரட்டும் மத நல்லிணக்கம், ஒழியட்டும் மொழி வேற்றுமை காணும் மனப்பாங்கு.

இதற்காகத்தான் அணைத்து சித்தர்கள் , ஞானிகள் , ரிஷிகள் , இறைத்தூதர்கள் , முனிவர்கள் தோன்றி பல வழிகளை காட்டினார்கள். இது இடத்திற்கேற்ப
பல வடிவங்களில் உள்ளதே தவிர நோக்கம் ஒன்றுதான்...

வேதாகமம் கூறும் வேற்று கிரகவாசிகளின் இருப்பு...


வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள் - உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று - பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகின்றன..

அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளது என்பதை பெரும்பாலோனர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை. முக்கியமாக நாசா விஞ்ஞானி எல்லன் ஸ்டோஃபன்.

2025-ஆம் ஆண்டுக்குள் வேற்றுகிரக வாசிகளை சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..

உயிரினங்கள் : நாசா குழு, அண்டத்தில் வாழும் உயிரினங்கள் பற்றி மிகவும் பலமான ஆதாரங்களை திரட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.. எங்களுக்கு தெரியும் :
மேலும் எங்கே வேற்றுகிரக வாசிகளை தேட வேண்டும், எப்படி தேட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சுட்சமமாக தெரிவித்துள்ளார், எல்லன்..

பெரும்பாலான வேற்றுகிரக வாசிகள் தேடலுக்கு எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது மேலும் அதை கொண்டு நாங்கள் தீவிரமான தேடல் பணியில் இறங்க இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வு : 2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளதாம்..

வானியல் ஆராய்ச்சியாளர்கள் தொலைவில் உள்ள சூரிய மண்டலத்தில் புதிய கிரகங்களை தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றனர். அநேக கிரகங்கள் இருப்பதால் பிரபஞ்சத்தில் எங்காவது உயிரினங்கள் ஜீவிக்கலாம் என்பதற்கான ஆதாரத்தை தருகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இவைகளில் எந்த கிரகமும் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றது என்று நிறுபிக்கப்படவில்லை என்பதே உண்மை. பூமிக்கும் இந்த கிரகங்களுக்கும் இடையே உள்ள இந்த மிகப்பெரிய இடைவேளியே இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமிருக்கிறது என்பதை தீர்மானிக்கிறது.

பூமி மட்டும் தான் சூரிய மண்டலத்தின் மூலம் உயிரினங்கள் வாழ ஆதரிக்கிறது என்பதை அறிந்து, பரிணாமவாதிகள் இந்த வாழ்க்கை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை ஆதரிக்கும்வண்ணமாக மற்றோரு சூரிய மண்டலதில் கிரகத்தை தேடுகின்றனர். அநேக கிரகங்கள் அங்கு உள்ளன. ஆனால் அவைகள் உயிரினங்கள் ஜீவிக்க ஏதுவானவைகளா என்பதை ஆய்வு செய்ய அந்த கிரகங்களை பற்றி நமக்கு போதுமான அறிவு இல்லை.

எனவே வேதாகமம் என்ன சொல்கிறது? பூமியும் மனிதனும் தேவனுடைய படைப்பிலே தனித்தன்மை வாய்ந்தவர்கள். தேவன் சூரியன், சந்திரன், அல்லது நட்சத்திரங்களை படைப்பதற்கு முன்னதாகவே பூமியை படைத்தார் என்று ஆதியாகமம் 1ம் அதிகாரம் போதிக்கிறது. அப்போஸ்தலர் 17:24,26 இப்படியாக சொல்கிறது:

“உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை…மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.”
ஆதியில் மனிதன் பாவமற்றவனகவே இருந்தான் மற்றும் இந்த உலகத்தில் எல்லாம் “மிக நன்றாகவே” இருந்தது (ஆதியாகமம் 1:31).

முதல் மனிதன் பாவம் செய்தபோது அதனுடைய விளைவாகவே நோய், மரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. விலங்குகள் (அவைகள் தார்மீக மனிதர் அல்ல) தேவனுக்கு முன்பாக எந்த பாவமும் செய்யாத போதும் அவைகளும் பாடுபட்டு மரிக்கின்றன (ரோமர் 8:19-22).

நும்முடைய பாவங்களுக்காக நாம் அடையவேண்டிய தண்டனையை இயேசு மரணத்தின் மூலம் நீக்கினார். அவர் திரும்ப வரும்போது ஆதாம் முதல் இருந்துவருகிற சாபங்களை நீக்கிவிடுவார்
(வெளிப்படுத்தின விசேஷம் 21-22).

ரோமர் 8:19-22 சொல்கிறது எல்லா ஜீவராசிகளும் இந்த நேரத்திற்காக காத்திருக்கின்றன என்று. நாம் எல்லோரும் கவனிக்க வேண்டியது இயேசு மனுகுலத்திற்காக மரிப்பதற்காகவே வந்தார் அவர் ஒரேதரம் மட்டுமே மரித்தார் (எபிரெயர் 7:27; 9:26; 10:10).

சிருஷ்டிப்புகள் எல்லாம் சாபத்தினாலே பாடு அனுபவித்தால், இந்த பூமிக்கு அப்பார்பட்ட உயிரினங்களும்; பாடு அனுபவிக்கவேண்டும். விவாதத்திற்காக மற்ற கிரகனங்களிலும் உயிரினங்கள் இருக்குமே ஆனால் அவைகளும் நிச்சயம் பாடு அனுபவிக்க வேண்டும். இப்பொழுது இல்லை என்றால் வானங்கள் மடமட என்று அகன்று, பூதங்கள் வெந்து உருகிப்போகும் நாளில் (2பேதுரு 3:10) அவர்கள் பாடு அனுபவிப்பார்கள்.


அவர்கள் பாவம் செய்யவே இல்லை என்றால் அவர்களை தண்டிப்பதன் மூலம் தேவன் அநீதி செய்தவராகிறார். அவர்கள் பாவம் செய்திருந்தால், கிறிஸ்து ஒரேதரம் மட்டுமே மரிக்க முடியும் (அதை அவர் இப்பூமியில் செய்தார்), எனவே அவர்கள் பாவத்தில் இருப்பார்கள் அது தேவனுடைய குணாதிசயத்திற்கு முரண்பாடானது ஆகும் (2பேதுரு 3:9).

நிச்சயமாக பூமிக்கு அப்பால் உயிரினங்கள் இருக்குமே ஆனால் இது நமக்கு தீர்க்க முடியாத முரண்பாடாகவே இருக்கிறது.

பிற கிரகத்தில் உள்ள அறநெறியில்லாத மற்றும் உணர்வற்ற வடிவமுள்ள உயிரினங்களை குறித்து என்ன சொல்வது? பாசிகள், நாய்கள், மற்றும் பூனைகள் அறியப்படாத கிரகத்தில் இப்பொழுது இருக்குமா? தோரயமாக இது வேதாகமத்தின் வசனங்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. ஆனால் இது “எல்லா சிருஷ்டிகளும் பாடுஅனுபவிப்பதனால், தொலைவிலுள்ள பிற கிரகத்தில் உள்ள அறநெறியில்லாத மற்றும் உணர்வற்ற வடிவமுள்ள உயிரினங்கள் பாடுகளை அனுபவிக்க தேவனுடைய நோக்கம் என்ன?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது இது மிகுந்த பிரச்சனையாக இருக்கும்.

முடிவாக, பிரபஞ்சத்தில் மற்ற இடங்களில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான காரணத்தை வேதாகமம் நமக்கு தருகிறது. ஆம் அநேக விசித்திரமான மற்றும் விளக்கமுடியாத காரியங்கள் நிறைவேறியிருக்கின்றன.

இவைகள் வேற்றுகிரகவாசிகள் அல்லது யுஎஃப்ஓக்களால் தான் நடந்தன என்று அடித்து கூறமுடியும். உலகில் நடந்த நிகழ்வுகளுக்கு காணக்கூடியதான காரணங்கள் இருக்குமேயானால், அது அவிக்குரியதாக தோற்றத்தோடு இருக்கும் மேலும் குறிப்பாக இது #சாத்தான்_ஜின்னிடத்தில் இருந்து ஆரம்பித்ததாக இருக்கும்...

வேற்றுகிரக இரத்த உறவுகள்...


மனித இனத்தின் தோற்றம் பற்றி இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது. இப்படித்தான் மனித இனம் வளர்ச்சியடைந்தது என்பதை
எவரும் அடித்துக் கூறவில்லை.
அதனால் ஒரு வித சர்ச்சையான விடயமாகவே இந்த மனித இனத்தின் தோற்றம் காணப்படுகின்றது. அந்த வகையில் பூமியில் மனித இனத்தை தோற்றுவித்தவர்கள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்தவர்களே என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.

இப்போதைய மனித சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளுமா?

மதங்கள் கடவுள்கள் என்ற ஓர்
கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் மனித இனம் இதனை ஏற்றுக் கொள்ளுமா?

இவை மிகப்பெரிய கேள்விகளே.

சுமார் 5500 வருடங்களுக்கு முன்பே இந்த மனித தோற்றம் பற்றிய சுமேரியப்பதிவுகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சரியம் மிக்கதே.

மேலும் மனித தோற்றம் வளர்ச்சி போன்ற அனைத்தும் சுமேரிய குறிப்புகளில் கூறப்படுகின்றது.

வானத்தில் இருந்து வந்த கடவுள் தம்மை அவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் ஊடாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூமிக்கு தங்கம் எடுக்க வந்த வேற்றுக் கிரகவாசிகளுக்கு., அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு கீழ் வேலை செய்யவும் மனிதர்கள் தேவைப்பட்டிருக்கலாம்.

அதற்காக ஆரம்பகால பூமியில்
புத்திசாலித்தனம் மிக்க உயிரினமான ஓர் குரங்கு வகையை தேர்ந்து எடுத்து
அவற்றின்  மரபணுக்களோடு, தமது இரத்த வகை மரபணுக்களையும் இணைத்து பூமியில் மனித இனம் தோற்று விக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆய்வாலர்கள்அடித்துக் கூறுகின்றார்.

இதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.


உதாரணமாக மனிதர்கள் நான்கு சாத்தியமான பொதுவான இரத்த வகையினால் பிரிக்கப்படுகின்றனர் : ஏ, பி, ஏபி மற்றும் ஓ விஞ்ஞானிகளின் படி மனித உடலின் மேற்பரப்பில் காணப்படும் புரதங்கள் தான் மனித உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து
போராடுகின்றன..

இந்த கிரகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அம்மாதிரியான புரதங்களை கொண்டுள்ளன. அதாவது அவர்கள் ஆர்எச் பாசிடிவ் கொண்டுள்ளன,

மறுபக்கம் வெகு சிலரே ஆர்எச் நெகடிவ்
கொண்டுள்ளன அதாவது குறைந்த அளவிலான புரதம் கொண்டவர்கள்.

இந்த இரண்டு வித்தியாசமான புரதங்கள் பற்றி பல ஆண்டுகளாய் ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும்
நிலையில் மிகவும் விசித்திரமான கோணத்தில் புதிய சர்ச்சை ஒன்று
கிளம்பியுள்ளது...

புதிய சதியாலோசனை கோட்பாடு ஒன்று, பூமி கிரகத்தில் உள்ள ஆர்எச் நெகடிவ் கொண்டவர்கள் எல்லாம் வேற்றுகிரக பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது.

இதன் மூலம் ஆர்எச் பாசிடிவ் மற்றும் நெகடிவ் சார்ந்த ஒரு கவர்ச்சிகரமான விடயத்தை கண்டுபிடித்து விட்டதாக
விஞ்ஞானிகள் நம்புகின்றன.

ஆய்வின்படி, தொலைதூரம் கடந்து பூமிக்கு வந்த  வேற்றுகிரக மனிதர்கள் 'மரபணு கையாளுதல்' மூலம்
உருவாக்கப்பட்டது தான் ஆர்எச் நெகடிவ் வகை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மரபணு கையாளுதல் ஆனது அடிமைகள் இனத்தை உருவாக்கவே நிகழ்த்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலையும் ஆய்வாளர்கள் வழங்கியுள்ளன.

மேலும் இது சார்ந்த விசாரணையின் கீழ், ஆர்எச் பாசிடிவ் தாய்மார்களால் ஆர்எச் நெகடிவ் வகையால் உருவாக்கம் பெற்ற கருவை பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் - இந்த தீவிமான,
சகிப்பின்மை உருவாக ஆர்எச் நெகடிவ் ஒரு பண்டைய மரபணு மாற்றம் பெறப்பட்டதால் தான் என்று நம்பப்படுகிறது.

ஆர்எச் பாசிடிவ் மற்றும் ஆர்எச் நெகடிவ் ஆகிய இரண்டு வகையும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொள்ளாமல் ஏன்
ஒன்றை ஒன்று எதிர்கிறது என்பது புரியாத புதிராகவே தான் உள்ளது.

சம்பந்தப்பட்ட கோட்பாடானது,
அண்டத்தில் இருந்து எங்கிருந்தோ பூமியின் பண்டைய சுமேரியாவிற்கு வந்த மிகவும் மேம்பட்ட அன்னிய இனம், பண்டைய மெசோபோடோமியன் பண்பாடுகளின் தெய்வங்கள் என்று நம்பப்படும் அனுனாகி (Anunnaki) வரையிலாக ஆய்வு செய்துள்ளது.

அதன் மூலம் வேற்றுகிரக வாசிகள் திட்டமிட்டே பழமையான மனித இனங்களில், மிகவும் பலமான மற்றும் போதுமான உடன் மிக தூரம் கடந்து செல்லும் வகையிலான அடிமைகளை உருவாக்கும் மரபணு மாற்றங்களை நிகழ்த்தி உள்ளதாகவும் ஆய்வாளர்கள்
சந்தேகின்றனர்.

கிரகத்தில், ஸ்பெயின் மற்றும்
பிரான்சின் பாசுக்கு மக்கள் இந்த ஆர்எச் நெகடிவ்தனை அதிக சதவிகிதம் கொண்ட மக்கள் என்பது
குறிப்பிடத்தக்கது...

மனிதர்கள் அனைவருக்கும் செவ்வா தோசம்...


வேற்றுகிரகவாசிகள் மனிதனுக்கு இன்றைய நவீன யுகத்தில் சவாலாக காணப்படும் ஓர் சுவாரசியமான புதிர் என்று கூட சொல்லலாம்.

பூமி எவ்வாறு தோன்றியது? அதில் மனிதர்கள் எவ்வாறு கால்பதித்தனர்?

இதற்கான பதில் விஞ்ஞானம் மற்றும் ஆன்மிகரீதியாக நிறைய காணப்பட்டாலும், ஆரம்பத்தில் பூமியில் செல் உயிர் ஒன்றின் தோற்றத்தாலேயே உயிர்கள் தோற்றம் பெற்றதாக நம்பப்பட்டு வருகின்றது.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் பூமியில் காணப்படும் மனிதர்கள் வேற்றுக்கிரகவாசிகள்தான் என்ற ஓர் அறிவியல் செய்தி தற்போது கசிந்து கொண்டிருக்கின்றது.

அது எவ்வாறேனில் ஆரம்பத்தில் தோன்றியதாக கூறப்படும் அந்த செல் உயிரி இந்தப் பூமியை சேர்ந்தது அல்லவாம்.

சூரிய குடும்பத்தை பொருத்தவரை பூமியில் உயிரினம் தோற்றம் பெற முன்பு செவ்வாயில் உயிரினங்கள் செழிப்பாக வாழ்ந்திருக்கின்றன.

சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.


அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது.

இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தனவாம்.

ஆனால் இந்த விண்கற்கள் பூமியை வந்தசேர எடுத்துக்கொண்ட காலம் மிகப்பெரிதாகும்.

இச்செயற்பாட்டை "Seeds Everywhere" என்ற வார்த்தையினால் வரையறுக்கலாம். விண்வெளியில் ஒழுங்கின்றி சுற்றித்திரியும் விண்கற்களில் நுண்ணுயிரிக்கள் புதைந்திருக்கின்றன, அந்த விண்கற்கள் நுண்ணுயிரிகளை சுமந்து செல்லும் “கேப்சூல்” போல் செயற்படுகின்றது.

பறந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் வெவ்வேறு கிரகங்களுக்கு உயிரினங்களை அனுப்ப இது ஒரு சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அண்மையில் உலகமும் இவ்வாறான ஓர் பரீட்சையை நடத்தியிருக்ககூடும் என்றால் நம்பமுடிகின்றதா? நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று பத்துவருட பயணத்தின் பின் விண்கல் ஒன்றில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

மனிதகுலத்தின் பெரும் வரலாற்றுசாதனையாக பேசப்பட்ட நிகழ்வு இது. அந்த விண்கலம் அங்கு சில ஆய்வுகள் நடத்தப்போவதாக நாசா தெரிவித்திருந்தது. ஆனால் பூமியில் வாழும் சில நுண்ணுயிரிகளை அதனுள் செலுத்தும் முயற்ச்சிதான் இது என்ற கருத்தும் தற்போது நிலவிவருகின்றது.

மேலும் அமெரிக்க விஞ்ஞானிகள் 1984இல் அண்டார்டிக்காவில் Allan Hills 84001 (ALH84001) என்ற 1.95kg எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள். இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யுகித்தனர். 1996இல் நாசா விஞ்ஞானி David Mckay என்பவர் இதில் “நானோபாக்டிரியாவின்” எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.

இந்நிகழ்வின் பின் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி “பில்கிளிண்டன்” செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டத்திற்கு பெரும் தொகை ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.

இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான்.


அவ்வாறான நிறைய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் நாசா.

இதுபோன்று செவ்வாவை தோச அமைப்பை ஆய்வு செய்து தோச தன்மை குறைந்து,சுபதன்மை கூடியிருக்கிறதா? என்பதை அறிந்து முடிவு எடுப்பது சாலச் சிறந்தது ...

பாஜக மோடி கலாட்டா...


கேள்விக்கும் பதிலுக்கும் சம்மந்தமே இல்லையே பேசும் போது திரு திருனு முளிச்சத தான் எல்லோரும் பார்த்தோம்...

கட்டிட வசதி இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது...


 எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் 1980-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இதையடுத்து இந்தப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த பள்ளியில் 494 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பள்ளியில் 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் மாணவ-மாணவிகள் படிக்க போதுமான கட்டிட வசதி இல்லை. இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது.

மேலும் அந்த பள்ளியை சுற்றி ஒருபுறம் குடிநீர் ஊரணியும், மறுபுறம் குளமும் உள்ளது. மற்றொரு புறம் சுடுகாட்டில் பிணம் எரியும்போது வெளியாகும் புகையால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அந்த பகுதிகளில் செல்லும் ஆடு, மாடுகள் மாணவர்களை பயமுறுத்துவதும் தொடர் கதையாக உள்ளது.

இந்தநிலையில் சிறிது மழைபெய்தால் கூட வகுப்புகளை நடத்தமுடியாமல் விடுமுறை அளிக்க வேண்டிய நிலையுள்ளது. மேலும் பலத்த காற்று வீசும்போது மரக்கிளைகள் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மண் தரையில் அமர்ந்து படிப்பதால் ஆரோக்கியம் சீர்கெட்டு வருகிறது.

எனவே பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அதுவரை பழைய இடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளியை அதே இடத்தில் இயக்கி வகுப்புகளை நடத்த வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கையை நடைமுறை படுத்தவில்லையெனில் பெற்றோர்கள் ஒன்றிணைந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்...

பாஜக - காங்கிரஸ் உண்மைகள்...


அடேய் உயிர்மெய் 216 னுதான்டா சொல்லி குடுத்தாங்கே இங்க என்னடா 18 தான் இருக்கு...


இதான் CBSE ன் தரம்...

இங்க தரமான கல்வின அது CBSE தான்னு சொல்லிட்டு சுத்திட்டு இருந்தவிங்கள பாத்தீங்களா?

தற்சார்பை மறந்துவிட்டு ஆட்டுமந்தைக் கூட்டங்களாய் வெட்டுபடும்போது நீ உணரும் வாழ்க்கை பிரயோஜனமற்றது...


தமிழர்கள் பயன்ப்படுத்திய பலவகை பாரம்பரிய பாத்திரங்களின் மகிமை....


மண் பாண்டத்தின் மகிமை...

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.

நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும்.

தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.

பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.

இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே...

சிக்கலை சிரித்தனுப்புங்கள்...


மெளனமாக உட்காருங்கள்,
உங்கள் இருத்தலின் துணிவின்மீது ஒரு அசட்டுச்சிரிப்பை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

ஏதோ உங்கள் முழுஉடலுமே அசட்டுச்சிரிப்பில் இருப்பதைப்போல உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சிரிப்போடு அசையுங்கள். அது வயிற்றின் மேல்புறத்திலிருந்து முழுஉடலுக்கும் பரவட்டும். – கைகள் சிரிக்கட்டும், அதை ஒரு கிறுக்கத்தனமாக செய்யுங்கள்.  ஒரு இருபதுநிமிடங்கள் சிரியுங்கள்.  அது உரத்த சிரிப்பாக இருந்தாலும்கூட அதை அனுமதியுங்கள்..

அது சத்தமில்லாமல் வந்தால், சிலசமயங்களில் அமைதியாக, சிலசமயம் சத்தமாக, எப்படியும் அதை அனுமதியுங்கள். ஆனால் ஒரு இருபதுநிமிட சிரிப்பை அனுமதியுங்கள்.

பிறகு மண்ணிலோ அல்லது தரையிலோ
படுத்துக்கொள்ளுங்கள். தரையை பார்த்தபடி, தரையில் படுத்துக் கொள்ளுங்கள்.

சூழல் வெதுவெதுப்பானதாக இருந்தால், உங்கள் தோட்டத்தின் தரையில் செய்யலாம்.. அது நல்லது. 

நிர்வாணமாக செய்ய முடிந்தால், அது இன்னும் நல்லது.

பூமியோடு தொடர்பு கொள்ளுங்கள்.

அந்தபூமி உங்கள் தாய், நீங்கள்
அதன் குழந்தை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நினைப்பிலேயே கரைந்து செல்லுங்கள்.

இருபதுநிமிடம் சிரிப்பு, இருபதுநிமிடம் பூமிபடர்வு, பூமியோடு ஒரு ஆழ்ந்த தொடர்பு.  பூமியோடு சுவாசம், பூமியாகவே உணருங்கள். 

நாம் மண்ணிலிருந்து தான் வந்தோம். ஒருநாள் அங்கேதான் போகப் போகிறோம்.

இப்படி ஒரு இருபதுநிமிட போஷாக்கேற்றலுக்குப் பிறகு – காரணம் பூமி உங்களுக்கு நிறையசக்தியைக் கொடுக்கும், – நீங்கள் இப்போது ஆடும் போது அதற்கு ஒரு பெரியசுவை இருக்கும். இப்படி இருபது நிமிடங்கள் நடன மாடுங்கள்…

எந்த ஆட்டமானாலும் சரி. இசையை போட்டு நடனமாடுங்கள்.

வெட்பநிலை மோசமாக இருந்தால்,
அறையிலேயே இதைச்செய்யலாம்.

ஆனால் நல்ல வெளிச்சமாக இருந்தால், வெளியே செய்யுங்கள், அங்கே சில்லென்று இருந்தால் ஒரு போர்வையை போர்த்திக்கொள்ளுங்கள்.

இதைச் செய்ய ஏற்ற வழிகளையும், முறைகளையும் கண்டறியுங்கள், ஆனால் தொடர்ந்து செய்யுங்கள். ஆறு அல்லது எட்டுமாதத்திற்குள் நீங்கள் பெரிய மாற்றங்கள் தன்னால் ஏற்படுவதை காண்பீர்கள்...

புற்று நோயைத் தடுக்கும் வாழை இலைச் சாப்பாடு...


நம் அடையாளங்களில் ஒன்றான வாழை இலைச் சாப்பாடு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதுனா நம்புவீங்களா?. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான நம் சிலப்பதிகாரத்தில் இதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதால் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை எண்ணி நம் முன்னோர்களின் அறிவியலை நினைத்து நம்மை மீண்டும் ஒருமுறை வியக்க  வைக்கிறது.

சமீப காலமாக க்ரீன் டீ அருந்துவது ஃபேஷனாக உள்ளது, க்ரீன் டீயில் இருக்கும் Epigallocatechin gallate (EGCG)  போன்ற பாலிபினால்ஸ்கள் வாழை இலையில் அதிக அளவில் உள்ளன. இது பல நோய்களிடமிருந்து நம்மை  காத்துக் கொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்று அதிகம் பரவி வரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் (Parkinson’s disease) எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் நம்மை காக்கிறது. இன்று பலரின்  பயமாக இருக்கும் நோய்க்கு அன்றே தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். இந்த இலையை நேரடியாக உண்பது நம் ஜீரண சக்திக்கு அப்பாற்ப்பட்டது என்பதால் இதன் நன்மைகள் நம் உடலுக்கு சென்றடையும் விதமாக அதில் உணவருந்துவதைப்  பழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பல நன்மைகளில் சில:

பெரும்பாலும் ஆண்களுக்கு வரும் புரோசுட்டேட் புற்றுநோய் எனப்படும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயைத் தடுக்கும் பாலிபினால்ஸ் (Polyphenols) வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அபரிவிதமான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidant) இருப்பதால் பல தீவிர நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப்  பாதுகாப்பிற்கும் மிகவும் சிறந்தது. இதிலிருக்கும் ரூட்டின் (Rutin), குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, இரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது. ரூட்டின் ஒரு சிறந்த  ஆக்ஸிஜனேற்றியாகும்.

வாழை இலை ஒரு இயற்கை கிருமி நாசினி, இதில் உணவருந்தும் போது உணவில் உள்ள நச்சு தன்மையை போக்குவதுடன்  நம் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

நாம் நாகரீகம் என்ற பெயரில் நம் பழமையின் அரிய நன்மைகளை மறந்து இயற்கையை பாழ்படுத்தாமல், மூடநம்பிக்கையை அகற்றி அதில் பொதிந்திருக்கும் ரகசியங்களைக் கண்டு கடைப்பிடிக்கலாமே.. நல்ல விஷயங்களை ஏத்துகிறது நல்லது தானே. இயற்கையான முறையில் வளர்ந்த வாழை இலைக்குதான் இத்தனை மகிமையும், பேப்பர் வாழைக்கு இல்ல...

இதெல்லாம் நாங்க எடுத்து நடத்துவோம் - வணிகன்...


செல்பி மோகத்தால் 3000 வோல்ட் மின் கம்பியில் விழுந்த இளம்பெண்: அதிர்ச்சி...


மத்திய ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தி ரயில் மேம்பாலத்தில் ஏறி செல்பி எடுக்க முயற்சித்தபோது தவறி கீழே விழுந்ததில் உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கிக் கொண்டாள்.

ஆனால் 3000 வோல்ட் மின்சரம் பாய்ந்து கொண்டிருந்த அந்த கம்பியில் விழுந்தும், அவளது உடல் தரையைத் தொடாததால் அவள் உயிரிழக்கவில்லை. தனது தோழியுடன் குளிக்கச் சென்ற அந்த இளம்பெண் பாலத்தின் சுவர் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றிருக்கிறாள்.

அப்போது கால் தடுக்கி அவள் மின் கம்பியில் விழுந்து விட்டாள். அவளுடன் மொபைலில் பேசிக் கொண்டே வந்த தோழி என்ன ஆனாள் என்பது குறித்து தெரியவில்லை...

பாஜக நிர்மலா சீதாராமன் கமிஷன்...


மொத்தமும் போச்சே.. உச்சக்கட்ட பீதியில் ஓபிஎஸ், இபிஎஸ்; புலம்பலில் நிர்வாகிகள்...


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை சேர்ந்த 60 லட்சம் உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொள்ளவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது...

திருச்சியை அதிரவைக்கும் அபாயம் வேகமாக பரவுகிறது புதிய போதை பழக்கம் அடிமைகளாகும் மாணவர்கள், இளைஞர்கள். அதிர்ச்சி ரிப்போர்ட்...


திருச்சி:திருச்சியில் ஒரு புதிய போதை பழக்கம் வேகமாக பரவி வருகிறது. வாலிபர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலரும் இந்த பழக்கத்துக்கு ஆளாகி வருவது பெற்றோரை வேதனை அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் குட்கா, பான்பராக், புகையிலை, ஹேன்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே குட்கா குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும் கடைகளில் போதை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சி மாநகரில் ஏற்கனவே விற்கப்பட்ட கடைகளில் இப்போது வரை போதை பொருள் விற்பனை தங்குதடையின்றி நடந்து வருகிறது.

இந்தநிலையில் புதுவித போதைக்கு திருச்சியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாகி வருகின்றனர். அதாவது வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை அனுபவிக்கின்றனர். இந்த போதை பழக்கம் திருச்சியில் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது.

திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் வசித்து வரும் கோழிக்கறி கடை தொழிலாளி அஜித்குமார்(20). இவரது நண்பர்கள் தர்மா, அருண். இவர்கள் 2 பேரும் மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை அனுபவித்து வந்தனர். இதை அஜித்குமார் கண்டித்ததால், ஆத்திரமடைந்து வலுக்கட்டாயமாக அவருக்கும் போதை ஊசியை செலுத்தி விட்டனர். இதில் கையில் பாதிப்பு ஏற்பட்டு, அஜித்குமார் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

டாக்டரின் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் போதை மாத்திரை விற்பனை செய்ததாக அரசு மருத்துவமனை எதிரே உள்ள மருந்துக்கடை உரிமையாளர் வசந்தா, பணியாளர்கள் சுரேஷ்பாபு மற்றும் ஒருவர் என 3 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் என்ஜினீயர் ஒருவருக்கு போதை மாத்திரை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவரை உறையூர் போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கரூர் பைபாஸ் சாலை பிரிமியர் டவர்ஸ் பகுதியில் வசிக்கும் ராஜகோபால் மகன் திலகன்(25). சிவில் இன்ஜினீயரான  இவர், முன்னணி செல்போன் நிறுவனம் ஒன்றில் விநியோகஸ்தராக பணிபுரிகிறார். இவருக்கு உறையூர் செவந்திபிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கவுரிசங்கர்(21) பழக்கமானார். கவுரிசங்கர், போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, அதை ஊசி மூலம் இளைஞர்களுக்கு உடலில் செலுத்தி பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திலகனுக்கு உடல் அசதியால் வலி எடுத்துள்ளது. எனவே அதற்கான மாத்திரை வாங்க வேண்டும் என கவுரிசங்கரிடம் கூறி இருக்கிறார். அதற்கு கவுரிசங்கர், நான் சில மாத்திரைகள் வைத்துள்ளேன். அதை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தினாலே சொர்க்கத்துக்கு போவதுபோல இருக்கும். வலி பறந்து போய்விடும் என நைசாக பேசி இருக்கிறார். முதலில் மறுத்த திலகன், பின்னர் அதற்கு சம்மதம் தெரிவித்து, போதை ஊசி போட தொடங்கினார். இந்தநிலையில் திலகனின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் உணர்ந்தனர். ஏன் சோர்வாக இருக்கிறாய் என்று கேட்டதுடன், கையில் ஊசி குத்திய வடுக்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உண்மையை சொல், என பெற்றோர் விசாரித்த போது நண்பர் கவுரிசங்கர் போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையாக்கி விட்டதாக கூறினார்.

இந்த பழக்கத்தை ஒரு மாதத்துக்கும் மேலாக நான் செய்து வருகிறேன் என்றும் கூறி உள்ளார். இதைக்கேட்டு திலகனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, உறையூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து புத்தூரில் நேற்றுமுன்தினம் கவுரிசங்கரை கைது செய்தார்.

மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை அனுபவிக்கும் புதுப்பழக்கம் திருச்சி மாநகரில் வாலிபர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் தொற்றி வருகிறது. இதனால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். எனவே பான்பராக், குட்கா விவகாரம் போல் இல்லாமல், இந்த போதை ஊசி விவகாரத்தில் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பழக்கம் முற்றாமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கேட்ட போது, மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்தி போதை அனுபவிக்கும் பழக்கம் பெருகி வருவது பற்றி எனது கவனத்துக்கு வந்தது. இது தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைத்தேன். அந்த தனிப்படை போலீசார் தான் கவுரிசங்கரை கைது செய்தனர். இவரிடம் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாத்திரை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். வேறு யாராவது இவரை போல் மாத்திரை சப்ளை செய்கிறார்களா என கண்காணிக்கவும், பள்ளி, கல்லூரிகள் அருகில் போதை மாத்திரை விற்கப்படுகிறா என கண்காணிக்கவும் தனிப்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த போதை பழக்கம் மாநகரில் முற்றிலும் ஒழிக்கப்படும். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் மாத்திரைகள் சப்ளை செய்வது தவறு. அவ்வாறு செய்தால், மருத்துவதுறைக்கு அறிக்கை அனுப்பி மருந்துக்கடைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாள் முழுவதும் அரை மயக்கம் விலை ரூ.80; விற்பதோ ரூ.350 வரை

போதைக்கு பயன்படுத்தப்படும் 10 மாத்திரை கொண்ட ஒரு அட்டையின் விலை ரூ 80. ஆனால், போதைக்கு பயன்படுத்துவோரிடம் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.

ஒருவேளைக்கு 2 மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துகின்றனர். 1 மணி நேரம் மற்றும் 2 மணி நேரம் இடைவெளியில் மீண்டும் உடலில் ஊசி மூலம் மாத்திரை செலுத்திக் கொள்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு செய்வதால், உடலில் ஏற்பட்டுள்ள வலிகள் பறந்து போவதோடு, உடல் அரை மயக்கத்துக்கு செல்லும். இந்த ஊசியை செலுத்திக்கொண்டவர்கள் நாள் முழுவதும் அரை மயக்கத்திலேயே இருப்பார்கள். அப்படியே சொர்க்கத்தில் இருப்பது போல் உணரலாம் என இந்த பழக்கத்துக்கு அடிமையான ஒருவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மதுவை விட வித்தியாசமான, அதே சமயம் அதிக  நேரம் நீடிக்கக்கூடிய போதை தருவதால் இந்த மாத்திரை போதைக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர்.

குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சப்ளை:
அரசு மருத்துவமனை, உறையூர், தில்லைநகர் பகுதிகளில் உள்ள சில மருந்து கடைகளில் இந்த போதை மாத்திரை சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நபர்கள் மாத்திரைகளை வாங்கி, போனில் தங்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இந்த மாதிரி முகவர்கள் பலர் உலா வருவதாகவும், இவர்களிடம் ஏராளமானோர் வாடிக்கயைாளர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேறுநபர்கள் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்து கடைகளில் கேட்டால், இந்த மாத்திரை தரப்படுவதில்லை...

சிறுமிகளை கற்பழிக்க முயன்ற முதியவரின் மர்ம உறுப்பை கடித்து குதறிய நாய்.. குவியும் பாராட்டு...


அமெரிக்காவின் அர்கானஸ் மகாணானத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது சிறுமிகளை வீட்டில் ஜன்னல் வழியாக புகுந்து கற்பழிக்க முயன்றார். இதனை அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்த அவர்களது வளர்ப்பு நாய், அந்த முதியவரின் மேல் பாய்ந்து கடித்து குதறியது.

மேலும் அந்த முதியவரின் மர்ம உறுப்பையும் கடித்ததோது அல்லாமல் அதனை விழுங்கி ஏப்பம் விட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 2 சிறுமிகளை முதியவரின் பலாத்கார முயற்சியில் இருந்து அவர்களது வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

இதுதாங்க உண்மையான பசுமை வழிச்சாலை...


கேரளா... NH 47 ...பாலக்காடு to திருச்சூர்... நாளை திறக்கப்பட உள்ளது...

மலையின் உச்சியில்... தவழும் மேக கூட்டங்களை பாருங்கள்... இது மலை உள் குடைந்து... ரோடு போட்டதால் ... இயற்கைக்கு எந்த பாதிப்பும் கிடையாது....

எதற்காக சேலம் 8 வழிச்சாலை..?


அடுத்த 10 ஆண்டுகளில் கார்களின் தேய்மானத்தைக் கணக்கிடும் அரசு, மக்கட்தொகைப் பெருக்கத்தினால் நீருக்கும் சோறுக்கும் ஏற்படவிருக்கும் தேவையை ஏன் கணக்கிடுவதில்லை..?

 எந்தத் தொழிற்சாலை அரிசியையும் பருப்பையும் உற்பத்தி செய்யும்? காய்கறி, பழங்களை விளைவிக்கும்? அவை நிலங்களில் தான் விளைந்தாக வேண்டும். எங்கள் நிலம் தராத பணத்தையா நீங்கள் தந்துவிடப் போகிறீர்கள்..?

மலைகள், காடுகள், கிராமங்கள், வேளாண் நிலங்களை அழித்து, மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயற்படுத்துவது தான் வளர்ச்சித் திட்டமா?

- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://youtu.be/jGD7lVskP4E

சேலம் 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்த விடமாட்டோம் -  சேலம் மத்திய சிறையிலிருந்து பிணையில் விடுதலையான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு...

பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...


சொந்த செலவில் 14 குளங்களை வெட்டிய 82 வயது முதியவர்.. கிண்டல் கேலிகளுக்கு நடுவே சாதனை...


கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் உள்ள தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேமேகவுடா. 82 வயதான இவர் மலவள்ளி தாலுகாவில் மொத்தம் 14 குளங்களை வெட்டி உள்ளார். ஆடு மேய்ப்பாளரான இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு தனது ஆடுகளை வழக்கம் போல மலைப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடுகள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.

மலைப்பிரதேசமாக இருந்தாலும் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சுவடுகளே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அப்படியானால் இங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீருக்காக எங்கு போகும் என்று யோசித்தார். அடுத்த நாளே தனது ஆடுகளில் இரண்டை விற்று மண்வெட்டி மற்றும் கடப்பாறை வாங்கினார். இதனை கொண்டு தாசனதொட்டியில் அடுத்த 6 மாதத்தில் முதல் குளத்தை வெட்டினார்.

அன்று முதல் இன்றுவரை 40 ஆண்டு உழைப்பின் பயனாக 14 குளங்களை வெட்டி உள்ளார். இதற்காக தனது சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை இவர் குளங்கள் வெட்டுவதற்காகவே செலவழித்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் கோமேகவுடாவை பைத்தியம் பிடித்து விட்டதா என கூட திட்டி உள்ளனர்.

ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தனி ஆளாக குளங்களை இன்றும் வெட்டி வருகிறார். இதுவரை குளங்களை வெட்ட 15 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

இவரது சேவையை பாராட்டி பசவஸ்ரீ விருது கூட கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கிடைத்த பணத்தையும் குளம் வெட்டவே பயன்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது...

நம்ப முடியாத உண்மைகள்...


பாஜக மோடியும் ஹிட்லரும்...


ஒருமுறை ஹிட்லரிடம் அவரது காரியதரிசி கேட்டாராம், ஏன் நாட்டை எப்போதும் பதட்டமாகவே வைத்திருக்கிறீர்கள் என்று...

ஹிட்லர் சொன்னாராம்,

நான் ஏன் நாட்டை எப்போதும் பதட்டமாக வைத்திருக்கிறேன் தெரியுமா?

நாட்டை அமைதியாக வைத்தால் மக்கள் சிந்திக்கத் துவங்கி விடுவார்கள், சிந்திக்க ஆரம்பித்தால் நம் ஆட்சியின் தோல்விகள் வெளியே தெரிய ஆரம்பித்து விடும்.

எனவேதான் எப்போதும் எதையாவது செய்து மக்களை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாராம்.

ஹிட்லரின் கருத்தை இன்றைய நவீன ஹிட்லர்களும் பின்பற்றத் துவங்கி விட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது..