22/07/2018

சித்தர்களின் பிரபஞ்ச பயணம்...


விசுவாமித்திரர் உலக நண்பர்...

முதலில் விண்வெளி பயணத்திற்கான யோகநிலை விளக்கம்...

தற்காலிக இறப்பு நிலை அல்லது மூச்சை அடக்கி தற்காலிகமாக உடலை இறப்பு நிலைக்குக் கொண்டு செல்லுதல் என்பது நம் நாட்டில் நீண்ட காலமாக சித்தர்களும், யோகிகளும் கடைப்பிடித்து வரும் ஒரு யோக முறை.

இந்தத் தற்காலிகமாக மூச்சை
நிறுத்துதல், உடல் இயக்கத்தை
மிகவும் குறைவான நிலைக்குக்
கொண்டு செல்லுதல் பல
நூற்றாண்டுகளாக
அறியப்பட்டிருந்தாலும் நவீன
அறிவியலால் இன்னும் விளக்கப்படாத ஒரு விசயமாகவே இருக்கிறது.

இந்தக் கலையானது உலகம் முழுதும் யோகிகளால் செய்யப்படும் ஒரு செயல் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நிலையில் நாம் பார்க்கும்போது ஒருவருடைய இதயத்துடிப்பு, சுவாசித்தல் ஆகியவை தற்காலிகமாக சில நிமிடங்களிலிருந்து சிலமணி நேரங்கள்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

1987ல் Colonel Townshend கர்னல்
டவுன்ஷெண்ட் என்பவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மருத்துவர்களின் முன்னிலயில் அரைமணி நேரம்
மூச்சையும், இதயத்துடிப்பையும் நிறுத்தி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மேல் சொன்ன கதை ஒன்றும்
பிரமாதமில்லை. 1838ல் இந்திய யோகி ஒருவர் கல்கத்தாவிலுள்ள
கிராமங்களில் நீண்ட சவ நிலைக்குச் சென்று பின் உயிர் திரும்பும் அதிசயத்தைச் செய்து காண்பித்துப்
பிரபலமடைந்திருந்தார்.

இதனை அப்போதிருந்த ஐரோப்பிய அதிகாரி கேப்டன் வாட் முன்னிலையில் செய்துகாட்டச் சொன்னார்கள்.
மகாராஜா ரஞ்சித்சிங், கேப்டன். வாட் முன்னிலையில் அந்த யோகியின் உடலில் உள்ள துவாரங்கள் அனைத்தும் காற்றுப் புகாவண்ணம் மெழுகால் அடைக்கப்பட்டன! முழு நிர்வாணமாக ஒரு கோணிப்பையில் அவரை அடைத்து ராஜ முத்திரையிடப்பட்டு மரப்பெட்டியில் அந்தக் கோணிப்பையை வைத்துப்
பூட்டி சீல் வைத்தனர்.

இந்தப் பெட்டியை காவல் அறையில் வைத்து 24 மணிநேரமும் காவல்வீரர்கள் காவல் காத்தனர். இதற்கு நடுவில் அடிக்கடி பெட்டியைத் திறந்து உடல் உள்ளே இருக்கிறதா? என்று
பார்வையிட்டார் மகாராஜா.

நம்புங்கள்.. பத்து மாதங்கள் கழித்து அத்துறவியைப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்தனர். சிறிது வெண்ணீர் அவர் உடலில் ஊற்றப்பட்டது. துறவி கண் திறந்தார். எல்லோருடனும் சகஜமாகப்பேச ஆரம்பித்தார். மூவாச்சமாதி என்று இதனை நமது சமய இலக்கியங்கள் கூறுகின்றன.

நமது சித்தர்கள் மூச்சடக்கி பன்னெடுங்காலம் உயிருடன் கடவுளை தியானித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

மூச்சடக்கி மெய்ம்மறந்து
மூவாச் சமாதிருந்தும்
ஏச்சடக்கார்க் கீசனருளில்.
மூவா = அழியாத, மூச்சடக்கி
பன்னெடுங்காலம் அழியாது
உட்புதைந்து கிடத்தல் மூவாச்
சமாதியாக இங்கு
குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது செயற்கையாக
சமாதி நிலையை
ஏற்படுத்தமுடியுமா என்று
ஆராய்கிறார்கள்.

துருவத்தில் வாழும் வெண்கரடி பனிக்காலத்தைத் தூங்கியே கழிக்கும். அப்போது அது உண்ணாது; நீரருந்தாது;
அதன் இதயத்துடிப்பு குறைந்துவிடும். இதை Hibernation என்று சொல்வார்கள். இந்த நிலையில் இருக்கும் வித்தையை துருவக்கரடி மட்டுமல்லாது நிறைய
உயிரினங்கள் கற்று வைத்துள்ளன.


நாமும் மருந்துகளைச் செலுத்தி, அல்லது BioFeedback முறைகள் மூலம், அல்லது யோகசித்திப் பயிற்சிகளின் மூலம் இந்த நிலைகளைத் தோற்றுவிக்க முடியுமா என்று முயற்சிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றால்..

1.மனிதனின் ஆயுளை
நீட்டிக்கலாம்.

2.மனிதனை இந்நிலைக்குக் கொண்டு சென்று விண்கலங்களில் ஏற்றி நீண்டதூர காலக்ஸிகளில் உள்ள கிரகங்களில் இறக்கி, உயிர்ப்பித்து மீண்டும் சமாதி நிலையில் ஒரு 10 வருடம் விண்பயணம் செய்து பூமியை அடையலாம்.

இந்த வித்தையை மனிதன்
கற்றுவிட்டால் மனிதன் காலத்தை வென்றுவிடலாம்.

திரிசங்கு விண்வெளிபயணம்...

திரிசங்கு சுவர்க்கம்  பூமியினின்றும் 3,46,500 கி.மீ.

உயரத்தில் பூமியின் கவர்ச்சி ஆற்றலும் இராது; சந்திரனின் கவர்ச்சி ஆற்றலும் இராது.

இப்பகுதியைத் 'திரிசங்கு கவர்க்கம்' என்று சொல்லலாம்.

பெரும் புகழுடன் அரசு புரிந்த திரிசங்கு என்ற அரசன் மனித உடலுடன் சுவர்க்கம் போக ஆசைப்பட்டான்.

தன்குல குருவாகிய வசிட்டரிடம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவர்
யோசனையைக் கைவிடுமாறு
திரிசங்குக்குப் புத்திமதி கூறினார். பிறகு வசிட்டரின் குமார்களிடம் தன் விருப்பத்தைச் சொல்ல அவர்கள் குருவை அவமதித்த குற்றத்திற்காகச்
சண்டாளனுகுமாறு சபித்தனர்.

சண்டாள உருவத்துடன் திரிசங்கு விசுவாமித்திரரிடம் சென்று நடந்ததை விவரமாகச் சொல்லித் தன்னைக்
காப்பாற்றுமாறு வேண்டினான்.

விசுவாமித்திரருக்கு அவ்வரசன்மீது அநுதாபம் பொங்கி வந்தது. உடனே யாகம் ஒன்று செய்து திரிசங்குவை
சண்டாள உருவத்துடன் சுவர்க்கத்துக்கு அனுப்பினர்.

விசுவாமித்திரருடைய தவ வலிமையை அப்போது உலகம் கண்டது. இந்திரன்
சினங்கொண்டு திரிசங்குவைக் கீழே தள்ளினான்.

சுவர்க்கத்திலிருந்து திரிசங்கு கதறிக் கொண்டு தலைகீழாக விழுந்தான். விசுவாமித்திரர் நில்! நில்!” என்று சொல்லிக் கோபாவேசத்துடன் நான்முகன்போல் பிரகாசித்தார்.

உடனே திரிசங்குவும் நடுவானில் ஒரு விண்மீனாகப் பிரகாசித்துக் கொண்டு
அப்புடியே நின்றுவிட்டான்.

இந்த இடத்தையே பூமியின் கவர்ச்சி ஆற்றலும் சந்திரனின் கவர்ச்சி ஆற்றலும் இல்லாத பகுதியாக ஒப்புக் கூறினாலுமே இப்பகுதி கணிதப்படி கணக்கிடப்பெற்ற இடமாகும்.

விஸ்வாமித்திரர் ஏதோ உணர்ச்சி
வேகத்தில் தவத்தில் இறங்கி விட்டதாகத் தான் வசிஷ்டரும் எண்ணினார். ஆனால்,
விஸ்வாமித்திரர் சாதித்துக் காட்டிவிட்டார்.

நெடிய அவரது தவமும், திரிசங்கு சொர்க்கத்தை அவர் நிறுவியதும் அவரை பிரம்மரிஷியாக ஆக்கி விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.