18/10/2021

சித்தர் போகர் பூமிக்கு திரும்பி வரும் நாள்...

 


பதினென் சித்தர்களில் ஒருவரும், பழநியில் ஜீவ சமாதியாகி இருப்பவருமான போகநாதர் பூமிக்கு மீண்டும் வருவதாக கூறியிருப்பதாகவும். எத்தகைய சந்தர்ப்பத்தில் அவர் மீண்டும் பூமிக்கு திரும்புவார் என்ற விவரத்தினை கோரக்கர் தனது சந்திரரேகை நூலில் விவரித்திருக்கிறார்.

தடம் பெரிய தாரணியில் கலகம் மெத்த
தட்டாமல் நடந்த்தேறி நரர்களெல்லாம்
இடம்விட்டு இடம்ஏகிப் போரால் மாள்வார்
இயம்பொணாப் பெரும்பஞ்சம் இடருண்டாகும்
திடமிகுந்த தேவபிரம ஆலயங்கள்
தினபூசை குறைந்து அருளின்றிப் போமே
ஆகுமந்த நாளதனில் போக நாதர்
அகில பரதேச வெளி விட்டு நீங்கி
வாகுறவே நமதுபுவி வருவதாக
வாக்களித்துச் சென்றார் அந்தநாள் தனில்
பாகுபெற எனதுரிய சமாதிக் கூடம்
பளபளத்து சோதிலிங்கம் தானாய்த் தோன்றி
நாகுபணசல படதி நவநீதங்கள்
நாட்டமுற்று மனுக்கள் வசமே ஓங்கும்.
- சந்திர ரேகை.

பூமியில் பல இடங்களில் அதிக கலகங்கள் விளைவதுடன், இடம் பெயர்வுகளாலும், போர்களாலும் மக்கள் பெரும் அளவில் மாண்டு போவார்கள், இதனால் பெரும்பஞ்சமும், துன்பங்களும் உண்டாகும்.

கோவில்களில் தினசரி பூசைகள் குறைந்து தெய்வ அருள் குறைவடையும் கால கட்டத்தில் போகநாதர் அகில பரதேச வெளி விட்டு நமது பூமிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

தற்போது சூட்சும சரீரத்தில் வாழும் போக நாதர் ஸ்தூல தேகமான மனித உருவில் பூமிக்கு வரும் அந்த நாளில் எனது சமாதி (கோரக்கர் சமாதி) பளபளத்து சோதிலிங்கம் ஒன்று தானாகத் வெளித் தோன்றும், அதன் பின்னர் அனைத்தும் மக்கள் வசமாகும் என்றும், அதன் பின்னர் மக்கள் செல்வச் செழிப்போடு நலமாக வாழ்வர் என்கிறார்.

இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

ஆனால் கோரக்கரின் இந்த நூல் நம்மை ஆச்சர்யங்களில் விளிம்பில் நிறுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

இந்த நூல் முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் மேலும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

கோரக்கர் மட்டுமல்லாது அகத்தியர், நந்திதேவர், சிவனேந்திர மாமுனிவர், வீரப்பிரமேந்திர சுவாமிகள் போன்றோரும் இம்மாதிரியான் எதிர் கூறல்களை கூறியுள்ளதாகக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன...

தமிழர்களுக்கு மத அடையாளம் இல்லை என்பது நிரூபணம்...



சைவம் + வைணவம் இணைத்து இந்து மதம் உருவாக்கப்பட்டது...

ஆனால் இந்த திருட்டு திராவிடர்கள் ஆதரித்து மதமாற்றம் செய்து கொண்டிருக்கும் கிருஸ்துவம் மற்றும் இஸ்லாம் தமிழர்களுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவை..

சீனா-வின் நகர்வு...

 


ஆவிகள் உலகின் அமானுஷ்யம்...

 


மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ஆவிநிலை எனப்படுகிறது.

இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை.

காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும்.

தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும்.

இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன.

பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன.

ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்...

கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன.

இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான்.

இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும்.

பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர்.

பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர்.

தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது.

ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர்.

அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர்.

சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர்.

அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர்.

அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார்.

சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர்.

சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது.

இதனையே பித்ரு தோஷம் என்றும், பித்ரு சாபம் என்றும் கூறுகின்றனர்.

இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்...

இது தான் உண்மை 😏

 


வாழ்க்கையே இப்படி தான் போகுது 😏

 


எல்லை காவல் தெய்வம் வீரப்பனாருக்கு வீர வணக்கம் 🙂

 


காக்கவும் சோறும்...

 


நாங்க சாப்பிடறதுக்கு உங்க கிட்ட சோறு கேட்டமா, எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட பொருட்கள் இந்த பூமியில இருக்கு.

மனிதன்: நீங்க எங்களோட முன்னோர்கள் அதுனால் தான் உங்களுக்கு அம்மாவாசை அன்று சோறு வச்சு படைக்கிறோம்.

காக்கா: அம்மாவாசைக்கு மட்டும் சோறு வைக்கரீங்க நாங்களும் சாப்பிடறோம் அதுக்கு அடுத்த நாள் நம்ம பையன் வீடு தானே என்ற உரிமையில மொட்டை மாடியில காய வச்ச வத்தலை எடுக்க வந்தா ஏன் விரட்டறீங்க ...

ஓ நாங்க உங்க முன்னோர்களா.. சரி சரி நீங்க இப்ப நல்லா எங்க கிட்ட மாட்டிகிடீங்க, உங்க முன்னோர்கள் சொல்றோம் நல்லா கேட்டுக்குங்க...

எவன் எவன் எல்லாம் அப்பா அம்மாக்கு சாப்பாடு போடாமா விட்டீங்களோ, முதல்ல போய் அவுங்கள கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு சாப்பாடு போடுங்க, செத்ததுக்கு அப்புறம் படத்துக்கு மாலை போட்டுட்டு சாப்பாடு வைத்து என்ன புண்ணியம்.

யாரெல்லாம் பெற்றோர் இறந்துட்டாங்கன்னு காக்காவாகிய எங்களுக்கு சோறு வைக்கரீங்களோ இனிமே அனாதை இல்லத்துக்கு போய் சாப்பாடு போடுங்க அப்ப தான் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும்.

வெயில் காலம் வேற ஆரமிச்சிடுச்சு எங்களுக்கு நீங்கள் சோறு வைக்க வேண்டாம் உங்க வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் தண்ணிர் வைத்தால் அதுவே எங்களுக்கு போதும்.

எங்கள உங்க முன்னோர்கள்னு சொல்லி இருக்கீங்க, நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம் எங்க பேச்சை கேக்காதவங்க தலையில கக்கா போயிடுவோம்... ஜாக்கிரதை...

கணவர்களை மனைவிகள் எப்படி அழைத்தார்கள் ?

 




1920 ஸ்வாமி
1930 ப்ரபோ
1940 பிராண நாதா
1950 மணவாளா
1960 அத்தான்
1970 மச்சான்
1980 மாமா
2000 என்னாங்க
2010 ஏய்
2020 டேய்
2021 எரும...

ஆகையால் சிங்கிளாக இருப்போம்..
மரியாதையுடன் வாழ்வோம்...

🤣🤣🤣

சீனா வின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி...

 


Yaa.. its me 😔